வேக வேகமாக ஓடும் உலகமிது. மனிதர்கள் ஓட்டத்தில் பூமிக்கு தலைசுற்றுமென கவிஞர் ஒருவர் சொல்லி வைத்திருக்கிறார்,எத்தனை உண்மையாக இருக்கிறது அது..! வேலைக்கு போக ஓட்டம், வேலையிருந்து ரிலாக்ஸ் ஆக கேளிக்கைக்கு வர ஓட்டம், காய் வாங்க ஓட்டம், மருந்து வாங்க ஓட்டம்…
எங்கேதான் இவர்கள் பொறுமையாக இருப்பார்கள்? சென்னை சிட்டி ட்ராபிக்தான் பொறுமையாக இருக்க விடுகிறதா என்ன?
ஸ்வரம் நட்சத்திர விடுதியின் பப்'பில் சனிக்கிழமை இரவு, கேளிக்கையும் கொண்டாட்டமுமாக சென்றுகொண்டிருந்தது.அவன், வண்ண விளக்குகளின் வெளிச்சம் மங்கிய அறை ஓரத்தில் இருந்து எழுந்து வந்து பார் கவுண்டரில் இருக்கும் ஆளிடம் “டூட் நாலு ப்ரீஸர் எடுங்க”என்றதும் அந்த ஆள் சமந்தாவிற்காக குலுக்கிக் கொண்டிருந்த ஷேக்கரை வைத்துவிட்டு கடகடவென்று நான்கு பாட்டில் எடுக்க ஓடினான். சமந்தாவிற்கு சுள்ளென கோபம் வந்துவிட்டது. ஏற்கனவே ஏகப்பட்ட கூட்டம், இதில் ஒருவனை இழுத்துப் பிடித்து அவனிடம் ஆர்டர் சொல்ல, அவனோ ஆமை வேகத்தில் எல்லாம் செய்துகொண்டிருக்கிறான். நடுவில் இவன் யார் இவன் எரிச்சலில் திரும்பிப் பார்த்தாள்.
இவனா..! இ.வ.னா..? அவள் பார்த்த அதே நேரம் அவளைப் பார்த்தவன் ‘ஹே சம்மு! எப்படி இருக்க?’ முகத்தில் குரலில் எல்லாவற்றிலும் உற்சாகம் ஆச்சரியம் பொங்கி வழிந்தது.
இவள் புருவம் சுருக்கி மட்டுமே அவனைப் பார்த்தாள். நான்கு பாட்டில் எடுத்து வைத்துவிட்டு, ‘சார்’ என்று அந்த பார் அட்டெண்டர் அழைக்க, “இவங்க ட்ரிங்க் ரெடி பண்ணுங்க” சொல்லிவிட்டு “என்னை தெரியல, நான் திலீப்” உற்சாகமாக தெரிவித்தான்.
இவனையா தெரியாது? இவனை தமிழ்நாட்டிற்கே தெரியுமே..! ஞாயிறுகளில் டீவியில் ஸ்டாண்டர்ட் காமெடி ஷோவிலும் மற்ற நாட்களில் நியூஸ் சேனல்களில் வரும் சென்ஷேனல், இவனை தெரியாதா என்ன?
சம்மூ என்று அழைத்தானே அதுதான் அவளை புருவம் சுருக்க வைத்தது. அவன் அதை கவனித்தது போலவே தெரியவில்லை.
“ப்ரெண்ட்ஸ் கூட வந்தியா எங்க இருக்க வேலை எங்க” அடுக்காய் கேள்வி கேட்டான். அங்கே கவுண்டரில் அவளைப்போல காத்திருக்கும் ஆட்களெல்லாம் அவளையே பார்க்க சங்கடம் தாளாமல் அவன் கேள்விகளுக்கு பதில் சொன்னாள்.
சமந்தா ஆர்டர் செய்த ட்ரிங்க்ஸ் எல்லாம் வர இவன் இவள் கார்ட் எடுத்து நீட்ட அவன் அட்டெண்டரிடம் “என் அக்கவுண்ட்ல ஆட் பண்ணுங்க” சொல்லிவிட்டு இவளைப் பார்த்து வா போகலாம் என்றான்.
“இல்ல நானே பண்ணிக்கிறேன் என்கிட்ட ஜோமடோ கோல்ட் கார்டு இருக்கு”
“நான் இங்க ப்ரமியம் மெம்பர். அது இல்லாம என்ஷோ 200 எபிசோடு தாண்டி போய்க்கிட்டு இருக்கு ட்ரீட் வைக்கணும்ல்ல”இயல்பாய் நட்பாய் இவன் பேச சமந்தாவால் வாழ்த்துக்கள் மட்டுமே சொல்ல முடிந்தது.
ஆடாமல் அசையாமல் ஆர்டர் செய்த ஸ்னேக்ஸ், நான்கு கண்ணாடி கோப்பைகளை வைத்த ட்ரேயை எடுத்து நடந்து செல்பவளுடன் நடந்தவன் “இது யாரு இது பால் குடிக்கிற பாப்பா” ட்ரேயில் இருந்த மாக்டைல் பார்த்து கிண்டலாக கேட்க சமந்தா அவனை முறைத்தாள்.
“ஐயோ பாப்பாவை கிண்டல் செய்துட்டேனா”
“பப்புக்கு வந்தா லிக்கர் தான் குடிக்கணும்னு இல்ல”
திலீப் “ஆமாமா ஜூஸ் குடிக்க கூட இங்க வரலாம் தப்பில்ல”
அவன் குரலில் எப்போதும் ஒலிக்கும் கிண்டல் தொனி.
“என்ன பண்றது பப்க்கு வந்தா தான் உங்களை பார்க்க முடியுது”
“ஓ… நான் உன்னை பார்க்க நெனச்சது போல நீயும் என்னை பார்க்க நெனச்சிட்டு இருந்தியா”
நல்ல வேளை இவர்கள் சமந்தா நட்பினர் அமர்ந்திருக்கும் டேபிள் நெருங்கிவிட்டிருந்தனர். அவள் பதில் சொல்லாமல் மௌனமாகி உறைந்து நிற்கும் கணம் அவள் தோழி ஒருத்தி “ஹலோ திலீப், சமந்தா சொல்லுவாங்க திலீப் எங்க ஊர்தான்ன்னு,நான் நம்புனதே இல்லை. ஹேப்பி டு மீட் யு” இன்னொருத்தி “ ஹே ! ஹல்லோ திலீப், நான் கூட சுசீந்திரம் தான் நைஸ் டு மீட் யு”
அதற்குள் இன்னொருத்தன் “எங்க ஊரு பையன் நக்கல் நையாண்டி எல்லாம் பார்த்துமா நீ நம்பல” என்றவன் திலிப் நோக்கி “சார் உங்க பிரசன்ஸ் ஆப் டைமிங் எல்லாம் சூப்பர்” என்றான்.
“திலிப் காமெடி, கிரிக்கெட் எதனாலும் உங்க ஷாட் அதிரிபுதிரி” ஒருவர் ஒருவராக விதவிதமாக புகழ ‘தேங்க்ஸ்’ என்றவன் சமந்தாவை பார்த்து “டேக் கேர்” சொல்லி நகர்ந்துவிட்டான்.
சமந்தா அவள் நட்புக்கூட்டத்தில் கலந்துவிட்டாள். வெளிச்சம் மங்கிய இடத்தில் கும்பலாக அமர்ந்து இருந்தவர்கள் மத்தியில் இவனும் போய் கலந்துவிட்டான். குமார் அண்ணா “ஏலே அது சமந்தா பாப்பா தான”
“ஆமா” சலிப்பாக பதில் சொன்னான்.
“பாப்பா வளர்ந்திருச்சு பார்’க்கு எல்லாம் வருது” மித போதையில் இருந்தவர் நக்கலாக சொல்ல
“வந்த வேலைய மட்டு பாருண்ணே” எரிச்சல் கூடிய குரலில் இவன் சொல்ல
குமார் “விட்றா மாப்பிள்ள, அது என்னிக்கு நின்னு நிதானமா பேசிருக்கு”அவன் தோளில் தட்டி சமாதானம் சொல்லிவிட்டு மற்றவர்கள் கிண்டல் கேலியில் கலந்துவிட்டார்.
அடிமனம் அதிர இசை, சுற்றி கூச்சல் கும்மாளம் அனைத்தும் மறந்து அவள் பக்கம் அவன் கவனம் முழுக்க. மனமோ காற்றுக்கு பறக்கும் பட்டம் போல அவளை சுற்றியே பறக்க தொடங்கியது.
பெண்கள், ஆண்கள் சேர்ந்து கும்பலாக அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டிருக்க, அதில் சமந்தா முகம் மட்டுமே அவன் அறிந்தது. மற்றவரெல்லாம் தங்க நிறத்தில் காக்டெய்ல் குடிக்க இவள் கிவியும் விப்ட் க்ரீமும் கலந்த மாக்டெயில் குடித்துக்கொண்டிருந்தாள்.
சிறுவயதிலிருந்து அறிந்த முகம். எப்போதும் பளிச் சிரிப்பு சிரிக்கும் முகம். பாவனைகளில் கூட அடுத்தவரை கஷ்டப்படுத்தாத குணம் அவன் அறிந்த சமந்தா அப்படியேதான் இருந்தாள். வயதிற்கேற்ற முதிர்ச்சி தெரிந்தாலும் அவன் நினைவில் இருக்கும் குழந்தைதனம் நிறைந்த சமந்தா சிரிப்பு இப்போது காணும் முகத்தில் தேடினான். சிலநேரம் அவள் முன்னே அமர்ந்திருக்கும் ஒருவன் பேச இவள் சிரிக்கும்போது அது தெரிந்தது. கண்களில் சோர்வு தெரிந்தது.
அவன் இரண்டு அண்ணன்கள் இரண்டு அக்காக்கள் நான்குபேரும் படிப்பில் சுட்டி, எப்போதும் ஸ்கூல் ஃபர்ஸ்ட். கடைக்குட்டி திலிப் மட்டும் சேட்டையில் முதல் ரேங்க். படிக்கவே பிடிக்காது, விளையாட்டில் ஆர்வம் நிறைந்தவன், வீட்டில் எப்போதும் திட்டு வாங்கும் அம்மாவின் செல்லப்பிள்ளை.
கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டிற்குள் அப்பா இருக்கும் நேரம் செல்ல நேர்ந்தால் வெளியே கொஞ்ச நேரம் வீட்டை சுற்றி அங்கே இங்கே உட்கார்ந்து நிலைமை எப்படி இருக்கிறது என்று கவனித்து உள்ளே செல்வான்.இப்படி வெளியே உட்கார்ந்து இருக்கும் நேரம் பக்கத்து வீட்டில் சமந்தா அவர்கள் வீட்டு போர்டிகோவில் அமர்ந்துகொண்டு ஹோம்வொர்க் செய்துக்கொண்டிருப்பாள்.
சில நேரம் அவன் அப்பா ‘உன்னை சுத்தி இருக்கிற எல்லோரும் படிக்கிறாங்க தானே நீ மட்டும் ஏன்டா இப்படி இருக்க” கேட்டு திட்டுவார். சுத்தி இருக்கிற ஆட்களென அவர் குறிப்பிடுவதில் சம்முவும் அடக்கம்.
‘சம்மு பாப்பா’அவளை அப்படித்தான் அவள் அம்மா அழைப்பார்கள். சதுர நிலத்தின் ஓரத்தில் இரண்டடுக்கு வீடு, மற்ற இடமெல்லாம் தென்னை மரமும் பூச்செடிகளும் இருக்கும் வீட்டின் முதல் தளத்தின் முற்றத்தில் நின்று அவள் அம்மா சம்மு பாப்பா என்று உரக்க அழைப்பார். அவர்கள் ஊர் பக்கம் சமந்தா என்ற பெயர் வித்தியாசமான பெயர்,அதிலும் அவள் அம்மா அப்படி அழைக்க சமந்தாவை தெரிந்தவருக்கு எல்லோருக்கும் அவள் ‘சம்மு பாப்பா’ தான்.
அவள் அம்மா அப்பா இருவரும் பேங்கில் வேலை செய்பவர்கள்.இருவரிடமும் படித்தவர்கள், டீசன்டானவர்கள் என்ற தோற்றம் இருக்கும். சமந்தா அப்பாவின் நேர்மையும் உதவும் குணமும் ஊர் அறிந்தது.
அவன் வீட்டில் அம்மா பள்ளிக்கூட படிப்பு முடித்தவர், அப்பா கல்லூரி படிப்பு முடித்திருந்தாலும் தொழில் விவசாயம்தான். வாழை, தென்னை, ரப்பர் தோட்டம் என நிறைய உண்டு. அடுத்த தலைமுறைக்கு படிப்பு ரொம்பவும் முக்கியம் என்ற அதிதீவிர நம்பிக்கை கொண்டவருக்கு திலீபின் ‘ஜஸ்ட் பாஸ்’ சுத்தமாக பிடிக்காத ஒன்று.ஓவியம் வரைதல், நாடகம், மிமிக்ரி செய்தல் என்று அவன் செய்யும் எல்லாமே அவரைப் பொறுத்தவரை ‘சேட்டை’ மட்டுமே.மற்றதை கூட பொறுத்துக் கொள்வார் சிலநாட்களில் அவன் கிரிக்கெட் விளையாடிவிட்டு வியர்வை வழிய வீட்டுக்கு வருவதைப் பார்த்தார் என்றால் கோபத்தில் கொந்தளித்து விடுவார்.முதுகில் பெல்ட் தடம் பட்டை பட்டையாக விழும்; விளாசி விடுவார்.அந்த அடி அவனை மூன்று நாட்கள் வரைதான் கட்டிப்போடும். அதன்பின் திரும்பவும் விளையாட்டு மைதானம் சென்று விளையாட தொடங்கி விடுவான்.கிரிக்கெட் பிடிக்கும் என்றாலும் வாலிபால், பாஸ்கெட்பால், டென்னிஸ், செஸ் கேரம், எதிலும் திலீப் கில்லிதான்.
வயது கூடி வளரவளர அப்பாவை கோபப்படுத்தாமல் எப்படி விளையாட செல்வது என்பதை அவன் கற்றுக்கொண்டான் என்றால் சமந்தா சைக்கிளில் ஊர் சுற்றுவதை கற்றுக்கொண்டாள்.சமந்தா, அவள் ப்ரெண்ட்ஸ் கும்பலாக அவன் கிரிக்கெட் விளையாடும் மைதானத்தில்தான் சைக்கிள் ரேஸ் போவார்கள். கூச்சல் போட்டுக்கொண்டும் சத்தமாக சிரித்துக்கொண்டும் சைக்கிள் ஓட்டும் சமந்தாவை பார்க்க மனதில் மகிழ்ச்சி பொங்கும். அவன் அப்பாவுக்கு எப்படி அவன் கிரிக்கெட் விளையாடுவது பிடிக்கவில்லையோ அவள் அப்பாவுக்கு அவள் சைக்கிளில் சுற்றுவது பிடிக்கவில்லை,அவரை எங்கேனும் தெருவில் கண்டால் லாவகமாக அவள் ஒளிந்துகொள்வதை பார்த்திருக்கிறான்.
ஸ்கூல் முடித்தவன் பொறியியல் கல்லூரியில் சேர வெளியூர் போக சமந்தா என்ற பட்டாம்பூச்சியை காண முடியாமல் போனது. இரண்டாம் வருட படிப்பில் மொத்தமும் அரியர்ஸாக அவன் வைத்திருக்க, அவனை விட இரண்டு வயது இளையவள் சமந்தா பன்னிரெண்டாம் வகுப்பில் டிஸ்ட்ரிக்ட் பஸ்ட் என்று அவன் அம்மா அவனிடம் பெருமையாக அலைபேசியில் தெரிவித்தார்.பட்டப்படிப்புக்கு டெல்லி போகிறாளாம். பெரிய காலேஜ் ஒன்றில் ஆர்கிடெக்ட் படிக்கப் போகிறாள்.
அவர்கள் வீட்டுக்கு வந்து ‘நான் போயிட்டு வரேன் ஆன்ட்டி’ என்று அவள் விடைபெறும்போது அவன் அங்கே இருந்தான். லீவ் போட்டு ஏன் வீட்டுக்கு வந்திருக்க என்று யாரும் அவனை கேட்கவுமில்லை, அவனும் அப்படி ஏன் சென்றான், அவனுக்குள் என்ன இருக்கு என்பதை அவனும் ஆராயவில்லை.
காலம் செல்ல ஊருக்கு போவதை நிறுத்திக் கொண்டான். ஊருக்கு போய் வீட்டில் தனியாக இருப்பதை காட்டிலும் ப்ராக்டீஸில் பங்கு பெறுவது நல்லது என்ற எண்ணத்தில் இருந்துவிட்டான். பொறியியல் முடித்து சென்னையில் ஒரு கம்பெனியில் வேலையும் வாங்கிக்கொண்டு சென்னை வந்துவிட்டான்.
ஒரு நாள் அம்மாவுக்கு பேசலாம் என்ற எண்ணத்தில் அலைபேசியில் அழைக்க ‘பக்கத்து வீட்டில் சாவுடா கண்ணா, அம்மா அப்புறம் பேசுறேன்” அழுதுகொண்டே சொன்னாள்.ஒருவாரம் கழித்துதான் தகவல் தெரிந்தது சமந்தாவின் பெற்றோர்கள் விபத்தில் இறந்துவிட்டார்களாம்.
அவள் முகத்தில் தெரியும் சோர்வுக்கு பின்னால் இருக்கும் கதை தெரிந்தவன் என்பதால் அவனால் அதை புரிந்து கொள்ள முடிந்தது.
பதினோரு மணி ஆக மேஜைகளில் அமர்ந்திருந்த கும்பல் மெல்ல மெல்ல களையை தொடங்கியது. சமந்தாவுடன் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சிரித்துக்கொண்டே வெளியே நடக்க தொடங்கினார்கள்.சமந்தா அவர்கள் இருவரில் அந்தப் பெண்ணை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றாள். கூட நடந்த ஆண் நான் நேராகத் தான் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ளும் பேர்வழியாக மெதுவாக நடந்து கொண்டிருந்தார்.
இருவரையும் காரில் அமர்த்தி கதவை சாற்றி ஹப்பாவென நிமிர்ந்தவளிடம் ‘ஹெல்ப் பண்ணட்டுமா’ கேட்டு எதிரில் நின்றான் திலீப்.
“இல்லைங்க நாங்களே பாத்துக்குறோம்” இவள் சொல்லி முடிக்கவும் அவள் ப்ரெண்ட் சட்டென்று கார் கதவை உள்ளிருந்து திறக்க, கதவு இடித்து தடுமாறி நின்றவளை பிடித்து சரியாக நிறுத்தினான்.
“பச்., என்ன பண்றீங்க” அவன் பிடித்திருந்த கையை உதறிக்கொண்டேசமந்தா கேட்க
“இல்லைங்க விழப்போனீங்க அதான் பிடிச்சேன்” இவன் காரணம் தெரிவித்தான்.
“ஓகே தேங்க்ஸ் நான் பார்த்துக்கறேன்” சமந்தா சொல்லவும்
“இல்லைங்க டைம் ஆகிடுச்சு வாங்க நான் ட்ரைவ் பண்றேன்”
“அதுலாம் ஒரு பிரச்சனையும் இல்ல, டென் மினிட்ஸ் ட்ரைவ் தான்”
“பாருங்க பின்னாடி இருக்கிற அந்த அக்காவுக்கு ஹெல்ப் தேவைப்படும்.நீங்க அவங்களோட இருங்க.அவங்க வீட்டுக்கு போய் விட்டுட்டு திரும்ப இங்கேயே வந்துரலாம்” திலீப் பொறுமையாக பேச சமந்தாவிற்கு சரியென்றே தோன்றியது.
இந்த லச்சு அக்கா எப்பவும் அவளுக்கு கம்பெனி கொடுக்கும் ஆள், குடிக்கமாட்டார். லச்சு அக்கா கணவர் வெங்கி அண்ணாவை வெறுப்பேத்த அவர் கையிலிருந்து பிடுங்கி அதை குடித்துவிட்டு “நல்லா இல்ல” என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். டாம் அண்ட் ஜெர்ரி கப்பில் என்றாலும் வெங்கி அண்ணா கிண்டல் பேச்சுக்கு சிரிக்காதோர் முகத்தில் வாயே இல்லாதவராகத்தான் இருக்க முடியும்.
திலீப்புடன் சென்று இருவரையும் வீட்டில் விட்டு திரும்ப ஸ்வரம் பார்க்கிங் வந்து சேர்ந்தார்கள். ட்ரைவர் சீட் விட்டு இறங்குபவன் மனதில் ‘ஐயோ போய்விடுவாளே..!’ படபடப்பு இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல் “தேங்க்ஸ்ங்க, பார்ப்போம்” சொல்லி விடைபெற்றான். தலையசைப்புடன் கார்குள் உட்கார்ந்து கதவை சாற்றிக்கொண்டாள்.
சமந்தா”நீங்க கிளம்புங்க”
திலீப் “நீங்க கிளம்புங்க, அப்பறம் நான் கிளம்புறேன்”
“ஓகே பை பை குட் நைட்”
“போலாம் போலாம் ரைட்”
சமந்தா கார் ஸ்டார்ட் செய்யபோக காரை விட்டு நகர்ந்து நின்று அவன் பார்க்க, கிளம்பிய கார் வேகமெடுத்து எதிரில் இருந்த சுவரில் டமாரென இடித்து நிற்க…
திலீப் இதயமும் ஒரு க்ஷணம் துடிப்பதை நிறுத்தி வேகமெடுத்தது.