மழைக்கு ஏங்கிய மாந்தளிரே -1
“தாயே கருமாரி…
எங்கள் தாயே கருமாரி…
தேவி கருமாரி…
துணை நீயே மகமாயி…”
அருகில் இருந்த கோவிலில் இருந்து எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் காற்றில் மிதந்து வந்தது.
அன்று ஆடி வெள்ளி, வழக்கமாக ஐந்து மணிக்கு எழுந்துவிடும் சுகந்தா இன்று நான்கு மணிக்கே எழுந்து பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தாள். கைகள் தன் போக்கில் வேலை பார்த்தபடி இருக்க, வாய் வரிசையாக அம்பாள் ஸ்லோகங்களை முணுமுணுத்தபடி இருந்தது.
“அம்மா! அம்மா! மாஆஆஆஆ! கொஞ்சம் இங்கே வாங்களேன்!” என்ற சத்தத்தில் சமையலறையில் இருந்து வெளியே வந்தார்.
“நிதி! எதுக்கு இப்போ என்னை ஏலம் போட்டுட்டு இருக்க. எதுவானாலும் கீழே வந்து சொல்லு. மணி ஆறாச்சு. சீக்கிரம் குளிச்சிட்டு வா.” முதல் மாடியில் இருந்து அழைத்த மகளுக்கு கீழிருந்தே பதில் கொடுத்துவிட்டுத் தனது வேலைகளைத் தொடர்ந்தாள்.
அடுத்த சில நொடிகளில் மாடிப்படிகளில் தடதடவென்ற சத்தத்துடன் இறங்கி வந்தாள் அவரது அருமை மகள். குளித்து முடித்ததற்கு அடையாளமாகத் தலையில் இருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. நைட்டியில் இருந்தவளைத் தன் பார்வையால் சுகந்தா எரிக்க, மகளோ தாயைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் வைத்தபடி கொஞ்சினாள்.
“மா! என் செல்ல அம்மா! தங்க அம்மா! ப்ளீஸ்! ப்ளீஸ்! கொஞ்சமே கொஞ்சம் என் ரூமுக்கு வந்து எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்களாம். நான் ஃபடாபட்னு ரெடி ஆகிடுவேனாம். ப்ளீஸ்ஸ்ஸ்.”
“ச்சீ.. விடுடீ என்னை. நான் இன்னும் பூஜையே ஆரம்பிக்கலை. எனக்கு நிறைய வேலை இருக்கு நிதிமா. சொன்னா கேளு.”
“மா! ப்ளீஸ்.. இன்னைக்கு ஒரு நாள் மட்டும்.. ஒன்லி ஃபைவ் மினிட்ஸ். நாளைக்கெல்லாம் உங்களைக் கூப்பிடவே மாட்டேன். மதர் ப்ராமிஸ்”
“இன்னைக்கு ஆடி வெள்ளிக்கிழமை, என்னைத் தொந்தரவு பண்ணாமல் கிளம்பனும்னு நேத்தே சொன்னேனா இல்லையா. அப்பெல்லாம் நல்ல பிள்ளையாட்டம் சரி சரின்னு மண்டைய ஆட்டிட்டு இப்ப வந்து கொஞ்சிட்டு இருக்க. உனக்கு ஹெல்ப் பண்ண வந்தா, என் வேலையை யார் பாக்கிறது. போடி, போய் சமர்த்தா கிளம்பற வழியைப் பாரு. முதல்ல தலையைக் காய வை. போகும் போது மறக்காமல் மாப் எடுத்து தரையைத் துடைச்சிட்டுப் போ.”
தாயும் மகளும் வாதிட்ட வேளையில் தானாக வந்து தலையைக் கொடுத்தார், வாசுதேவன்.
“என்ன இங்கே சத்தம்?” என்று வந்தவரைப் பார்த்து அவரது தர்ம பத்தினி முறைத்தாள் என்றால் செல்லப் புதல்வியோ குஷியாகிப் போனாள்.
“அதானே பார்த்தேன். என்னடா இன்னும் ஆளைக்காணோமேன்னு நினைச்சேன். கரெக்டா மூக்குல வேர்த்துடுமே.”
“பாருங்க டாடி! இந்த மம்மி உங்களைக் கழுதைன்னு இன்டைரக்டா சொல்றாங்க.”
“அதென்ன இன்டைரக்டா… டைரக்டாவே தான் சொல்றேன்.. உங்க பொண்ணு ஏதோ கேட்கிறா. போய் ஹெல்ப் பண்ணுங்க, எனக்கு ஆயிரம் வேலை இருக்கு” என்று சமையலறை நோக்கித் திரும்பினாள் சுகந்தா.
தேவையில்லாமல் நடுவில் வந்து விட்டது புரிந்து விழித்தார் வாசுதேவன்.
“ஹேய் சுகா! என்னம்மா இது, முதல் நாள் காலேஜ் போற பொண்ணு, உன் கிட்ட ஏதோ ஐடியா கேட்கிறா. அஃப்கோர்ஸ், நீ ஒரு ஓல்டீன்னாலும் என் பொண்ணு பெரிய மனசு வச்சு உன் கிட்ட வர்றா. ஒரு அஞ்சு நிமிஷம்… அஞ்சே நிமிஷம்.. ஹேய்…” பேசிக் கொண்டே வந்தவர் மகளின் தலையில் இருந்து சொட்டிய தண்ணீரில் கால் வைக்க, தடுமாறி கீழே விழ இருந்தவரை சுகந்தா பிடித்து நிறுத்தினாள்.
“ஹுக்கும்.. இவர் ரொம்ப யங்.. நான் தான் ஓல்டீ..” என்று தோளில் இடித்துக் கொண்டாலும் சுகந்தா கணவருக்குப் பதில் சொல்ல தயங்கவில்லை. “அதே தான் நானும் ஒரு வாரமா சொல்லிட்டே இருக்கேன். முதல் நாள் காலேஜ் போகப் போற, எல்லாம் ப்ரிபேர்டா வச்சிக்கோன்னு. அப்போ எல்லாம், பாத்துக்கலாம்னு அசால்ட்டா விட்டுட்டு இப்ப அப்பாவும் பொண்ணும் வந்து கொஞ்சிட்டு இருங்க. விட்டால், இரண்டு பேரும் பேசிக்கிட்டே தான் இருப்பீங்க. அதுக்கு, நானே பத்து நிமிஷம் போனாலும் பரவாயில்லைன்னு வேலையைப் பாத்துடலாம்” என்று நொடித்துக் கொண்டு மேலும் பேச்சை வளர்க்க விரும்பாமல் சுகந்தா மாடியேற ஆரம்பித்தாள்.
அவள் சொல்வதும் சரிதான். இந்த வாரம் முழுவதுமே, அப்பாவும் பெண்ணும் ராகிங்கை எதிர்கொள்வது எப்படி என்கிற முக்கியமான டிஸ்கஷனில் இருந்தார்களே. அப்போது, உடை பற்றிய யோசனை எல்லாம் இல்லவே இல்லை. சுகந்தா பேசிய வார்த்தைகள் எல்லாம் காதுகளைத் தாண்டி அவர்கள் மூளையைச் சென்றடையவே இல்லை.
மகளின் அறைக்குள் நுழைந்த சுகந்தாவிற்கு அறை இருந்த கோலம் பார்த்து மயக்கம் வந்தது. விழுந்து விடாமல் இருக்க சுவரைப் பிடித்துக் கொண்டாள். பின்னால் வந்த கணவரையும் மகளையும் பார்த்த பார்வையில் அவர்களது வாய் தானாகப் பூட்டிக்கொண்டது. ஷெல்ஃபில் இருந்த உடைகள் அத்தனையும் கட்டில் மேல் காட்சியளித்தன.
அடுத்த பத்து நிமிடத்தில் தனது கை வரிசையைக் காட்டி ஒரு உடையைத் தேர்ந்தெடுத்து, மகளது தலையைக் காய வைத்த சுகந்தா, தனது வேலை முடிந்தது என்று இறங்கிச் சென்று விட்டாள்.
அடுத்த வேலைக்கு தந்தையைப் பாவமாகப் பார்த்து வைத்தாள் மகள். “நிதிமா! மீ யுவர் புவர் டாடீ.. ரொம்பப் பாவம்” என்று புலம்பியவாறு மகளது அறையைச் சுத்தம் செய்வதில் உதவி செய்தார் வாசுதேவன். முன்னே பின்னே பழக்கம் இல்லாத வேலை, ஆனாலும் மகள் என்று வரும் போது இந்த தந்தைகள் எல்லோரும் உலகமகா அனுபவசாலிகளாக மாறிவிடுகிறார்கள்.
“நானும் ரெடியாகிட்டு வரேண்டா. நீ பேக்(bag) செக் பண்ணி எடுத்துட்டு கீழே போ” என்று தனது அறைக்குள் சென்றார்.
ஆயிரம் அறிவுரைகளைச் சொல்லி மகளைக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தார் சுகந்தா. அதன் சாராம்சம் இதுதான். “நிதி! மெடிக்கல் காலேஜ்ல ராகிங் இருக்கும். எதையாவது சொன்னால் ஜாலியா எடுத்துக்கோ. உன் கைவரிசையைக் காட்ட நினைக்காதே” என்று சொன்ன சுகந்தாவுக்கு மகளை நினைத்தால் மனதுக்குள் பகீரென்றது. என்ன செய்ய, அவளது எஸ்டிடி அப்படி. அவளும் அவளது தோழி அகிலாவும் சேர்ந்தால் சேதாரம் எதிராளிக்குத் தான் அதிகமாக இருக்கும். அந்தக் கவலை பெற்றவரின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. மகளோ, எரிகிற கொள்ளியில் பெட்ரோல் ஊற்றிவிட்டுக் கிளம்பினாள்.
“அகில்ஸ் டைரக்டா காலேஜ் வந்திடுவா மா. வி வில் டேக் கேர்” அப்போதே டாக்டராகிவிட்ட உணர்வுடன் தந்தையின் காரில் ஏறினாள் நியதி.
சென்னையின் அந்த பிரபலமான மருத்துவக் கல்லூரியின் சீனியர் மாணவர்கள் அனைவரும் கொண்டாட்டமான மனநிலையில் இருந்தார்கள். அதிலும், முதல் வருடத்தை வெற்றிகரமாகக் கடந்து இரண்டாம் வருடத்தில் அடியெடுத்து இருந்தவர்களின் மனநிலையைச் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.
“ஹேப்பி!! இன்று முதல் ஹேப்பி” என்று பாடாத குறையாக ராகிங் செய்வதற்கு ஐடியாக்களை வாரி வழங்கிக் கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே கூடி நின்று ஜூனியர் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு விதம் விதமான டாஸ்குகளை வழங்கி அவர்களது ரியாக்ஷனைக் கமெண்ட் செய்து என்று உற்சாக வெள்ளம் அங்கே கரைபுரண்டு ஓடியது.
யாம் பெற்ற இன்பம் பெறுக நீங்களும் என்பதே அவர்களின் தாரக மந்திரமாக இருந்தது. கல்லூரியைப் பொறுத்தவரை ராகிங் தடைசெய்யப்பட்ட இருந்தாலும் மறைவில் நடந்து கொண்டு தான் இருந்தது. பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லாததால் நிர்வாகம் அதனைக் கண்டுகொள்வதில்லை.
கல்லூரி வாசலில் காத்திருந்த அகிலாவுடன் வீறுகொண்ட நடையுடன் ராகிங்கை எதிர்கொள்ளச் சென்றாள் நியதி.
“ஹேய்! ஊதா கலரு டிரஸ்! நீ ஃபர்ஸ்ட் இயர் தானே, இங்கே வா” என்று ஒரு குரல் ஆணையிட குரல் வந்த திசையை நோக்கித் தோழியுடன் நடந்தாள். அருகில் நெருங்கியவுடன்,
“குட் மார்னிங் சீனியர்ஸ்” என்று கோரஸாக ஆரம்பித்தவர்கள் அடுத்து கேட்ட கேள்விகளில் சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வது யார் என்று குழம்பிப் போனார்கள். இந்த இரண்டு குட்டிச்சாத்தான்களிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது ஆபத்பாந்தவனாக அங்கே ஒருவன் வந்தான்.
“கைஸ்! வாட் இஸ் ஹேப்பனிங் ஹியர்? ஜூனியர்ஸ இப்படி தான் வெல்கம் பண்ணுவீங்களா? மேனேஜ்மென்டுக்குத் தெரிஞ்சா என்ன நடக்கும்னு தெரியும் தானே?” என்று கேட்டபடி வந்தவனைப் பார்த்த சீனியர் மாணவர்கள் தலைகுனிந்து நின்றார்கள்.
“ஐயோ.. இந்த விசுவாமித்திரனா?? இவரு எப்போ வந்தாருடா?”
“எவ்வளவு அலர்ட்டா இருந்தாலும், எத்தனை இடத்தை மாத்தினாலும் ஈஸியா கண்டு பிடிச்சு பாடா படுத்தி வைக்கிறாரு.”
“இதெல்லாம் ரொம்ப ஓவரு டா.. காலேஜ் லைஃப்ல ஒரு என்ஜாய்மென்ட்டும் இல்லேன்னா எப்படி?”
ஆளாளுக்கு முனகிக் கொண்டே “ஸாரி சீனியர்!” என்ற வார்த்தைகளோடு
இடத்தைக் காலி செய்தனர்.
‘விசுவாமித்திரன்னு ஒரு பேரா’ என்று யோசித்த நியதியின் கண்களோ அவனை விழுங்கி விடுவது போலப் பார்த்தது. கலைந்து சென்ற மாணவர்களைக் கண்டு ஒரு புன்னகையுடன் திரும்பிய விக்ரமனின் கண்களும் அவனது இயல்புக்கு மாறாக நியதியின் மேல் சில நொடிகள் நிலைத்தது.
அப்போ லைட் எரிஞ்சு மணியடிச்சதான்னு இரண்டு பேருக்கு மட்டுமே தெரிஞ்சதோ என்னவோ.. அப்படித்தான் என்றது இன்றைய நிகழ்வு…
“பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ!” என்ற புரோகிதரின் உத்தரவில் மேடையருகே வந்து நின்ற நியதியைக் கண்ட விக்ரமனின் கண்கள் நியதியின் கண்களைச் சந்தித்த வேளையில் இருவரின் நினைவுகளும் முதல் சந்திப்புக்குச் சென்று விட அவர்களைத் தரையிறக்கும் வேலையை புரோகிதரும் மாதவனும் செய்தார்கள்.
“என்ன மாப்பிள்ளை சார் பொண்ணு இங்கே வந்து தான் உட்காருவா. இப்போ மந்திரத்தில் கொஞ்சம் கவனம் வைங்கோ” என்ற குரலில் விருப்பமே இல்லாமல் மெதுவாகப் பார்வையைத் திருப்பினான் விக்ரமன்.
“ஆனாலும் இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லையா நியதி. வருஷக்கணக்குல சுத்த விட்டு இப்போ காதல் மன்னன் ரேஞ்சுக்கு என்னமா ஆக்ட் கொடுக்கறான் அவன். நீயும் அவனுக்காக ஐஸா உருகி நிக்குற. அதே வருஷக்கணக்குல இல்லேன்னாலும் அவனையும் கொஞ்சம் சுத்தல்ல விட்டிருக்கலாம் நீ. ஈஸியா ஓகே சொல்லிட்ட. அதான் பையன் பல மார்க்கமா பார்க்கிறான்” நியதியின் அருகில் நின்ற மாதவன் ஏகத்துக்கும் புலம்ப அவளோ புன்னகை முகமாகவே நின்றாள்.
“மாது அண்ணா! வெயிட் பண்ணு. இப்பவே புலம்பி எனர்ஜிய வேஸ்ட் பண்ணாத. அவர் டைம் வில் ஸ்டார்ட் சூன். இரண்டு பேரையும் வச்சு செய்யலாம். யூ டோன்ட் வொர்ரி” என்று மாதவனுடன் கூட்டணி வைத்தாள் வைஜயந்தி. அதற்கும் அதே புன்னகை தான் நியதியின் முகத்தில்.
“நீங்க விதம் விதமா ப்ளான் போடுங்க. நாங்க எல்லாத்தையும் சிரிச்சே சமாளிப்போம்னு சிம்பாளிக்கா சொல்றாங்க. அண்ணனும் தங்கையும் போய் வேற வேலை இருந்தா பாருங்க.” நியதியின் மறுபுறம் நின்றிருந்த ஸ்வேதா கணவனைப் பார்த்துச் சிரித்தாள்.
“விசுவாமித்திரன்னு பேரை வாங்கிட்டு சைலன்டா லவ் பண்ணி அத்தனை பேரையும் சுத்தல்ல விட்டு அவன் காரியத்தை ஈஸியா சாதிச்சிட்டான். நாங்க புலம்பறதுக்குக் கூட ரைட்ஸ் இல்லையா? எங்க வாய், எங்க புலம்பல், எங்க உரிமை. இதை நாங்க விடறதா இல்லை” என்று மாதவனும் வைஜயந்தியும் ஹைஃபை கொடுத்துக் கொண்டே அவரவர் வேலையைப் பார்க்கப் போனார்கள்.
ராஜா முத்தையா கல்யாண மண்டபம், விருந்தினர்களால் நிரம்பி வழிந்தது. குறித்த முகூர்த்தத்தில் அனைவரது ஆசியுடன் திருமாங்கல்யம் விக்ரமன் கைகளில் வந்து சேர்ந்தது.
நியதியின் கண்களைப் பார்த்தவன் புன்னகையுடன் அவளது கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்தான். வைஜயந்தி மூன்றாவது முடிச்சைப் போட நியதி திருமதியானாள்.
சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து விருந்தினர் கிளம்பிய பிறகு மணமக்கள் மாதவன் குழுவினரிடம் மாட்டிக் கொண்டனர்.
மிக நெருங்கிய சொந்தங்களும் நண்பர்களும் மட்டுமே அங்கே இருக்க, அனைவருக்கும் விக்ரமனின் காதலைப் பற்றி ஓரளவு தெரியும்.
மணமக்களை நடுவில் அமர்த்தி அனைவரையும் அவர்களைச் சுற்றி அமர வைத்தான் மாதவன். “சக்கர வியூகம் அமைக்கிறாராம்” என்று நியதியின் காதுகளில் முணுமுணுத்தான் விக்ரமன்.
மைக்குடன் வந்த மாதவன், “ஹாய்.. ஹாய்.. ஹாய்… எல்லாரும் ஆவலாக எதிர்பார்த்த கேள்வி பதில் செஷன் ஆரம்பம் ஆகிறது. நம்ம ஹீரோ விசுவாமித்திரனுடைய லவ் ஸ்டோரி தெரிஞ்சுக்க எல்லாரும் ஆவலாக இருப்பீங்க. அதை இப்போ அவர்கள் வாயாலயே தெரிஞ்சுக்கலாம். கம் ஆன் விக்கி! ஸ்டார்ட் மியூசிக்!”
என்றான்
ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட மணமக்கள் மறுபடியும் ஒரு டைம் ட்ராவலுக்குள் போனார்கள்..