sudarshangopalan
New member
போன காணொளியில் ஜனக்பூர் பார்த்தோம் . இந்தக் காணொளியில் ஜனக்பூரில் இருந்து புறப்பட்டு 18கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனுஷ் தாம் என்னும் இடத்திற்கு முதலில் செல்கிறோம் . ராமர் வில்லை முறித்ததும் மூன்று பாகங்களாக உடைந்ததாம் . அதில் ஒரு பாகம் விழுந்த இடம் இது என்கிறார்கள் . அந்த இடத்தை தரிசித்து விட்டு அங்கிருந்து நம்முடைய பயணம் தொடர்கிறது . வழியில் இயற்கை அழகை ரசித்துக்கொண்டு செல்கிறோம் .
காட்மாண்டுவிற்கு 15 கிலோமீட்டர் முன் உள்ளது பக்தபூர் தர்பார் ஸ்குயர் . காட்மாண்டுவில் மொத்தம் மூன்று தர்பார் ஸ்குயர் உள்ளது . அவை பக்தபூர் , பாட்டன் எனும் லலித்பூர் மற்றும் காட்மாண்டு . இதில் மிகவும் புராதனமானது பக்தபூர் தர்பார் ஸ்குயர் . இந்த இடம் கல் , உலோக கலை , மாற வேலைப்பாடுகள் , டெரகோட்டா மற்றும் கட்டிடக்கலைக்காக மிகவும் புகழ் பெற்றது . இது 12 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 15 ஆம் நூற்றாண்டு வரை முழு நேபாள இராச்சியத்தின் தலைநகராக இருந்தது .
இங்கு நிறைய கோவில்கள் உள்ளன . அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது நியாதபோலா கோவில் . இந்தக் கோவிலை சித்தி லக்ஷ்மி கோவில் என்றும் சொல்லுவார்கள் . ஐந்து அடுக்குகளைக் கொண்ட நேபாளின் மிக உயரமான கோவில் இதுதான் . உயரமான படிக்கட்டுகளில் ஏறி கோவிலுக்கு செல்லவேண்டும் . படிக்கட்டின் இரு பக்கமும் உள்ள சிற்பங்கள் பார்க்கவே அழகாக பிரம்மாண்டமாக இருக்கும் . மேலும் வத்சலா தேவி கோவில் இப்படி நிறைய கோவில்கள் உள்ளன . இங்கு ஜ்வாலா நரசிம்மர் பார்த்தோம் . அவ்வளவு தத்ரூபமாக வடித்து இருக்கிறார்கள் .
நீங்கள் நேபாளம் சென்றால் அவசியம் இந்த மூன்று தர்பார் சென்று வாருங்கள் .
உங்களுக்கு இந்த தகவல்கள் மற்றும் காணொளிகள் பிடித்து இருந்தால் தங்களின் ஆதரவை தாருங்கள் . நன்றி .