கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

முதுமையில் தனிமை - ஸ்ரீவித்யா பசுபதி,

முதுமையில் தனிமை

கோவிலுக்குப் போய்விட்டு, வீட்டிற்குள் நுழைந்த என்னிடம்,

“என்னங்க... இன்னைக்கு கொஞ்சம் லேட்டாயிருச்சா? எப்பவும் சீக்கிரம் வந்துருவீங்களே? லேட்டானா எனக்கு பயமா இருக்குங்க.”

“இப்ப என்ன பரமு... ஒரு பத்து நிமிஷம் லேட்டாயிருச்சு. அவ்வளவுதான். இதுக்கு ஏன் பயப்படறே?”

“இல்லைங்க.... நீங்க காது வேற ஒழுங்கா கேக்க மாட்டேங்குன்னு சொல்றீங்களா... அதான் தனியா நீங்க வெளில போனா, எனக்குக் கொஞ்சம் கவலையா இருக்கு. வேற ஒண்ணுமில்ல. சரி... சாப்பிட வாங்க.”

நான் ராஜகோபால். வயது 75. ஓய்வு பெற்ற கணித ஆசிரியர். என் மனைவி பரமேஸ்வரி... வயது 69. குடும்பத்தை நிர்வகிக்கும் சிறந்த நிர்வாகி. எங்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். எல்லாம் அவரவர் வாழ்க்கை, வேலை என்று இருக்கிறார்கள்.

இப்போது இங்கே வந்து எங்களைப் பார்க்க, எங்களுடன் இருக்க, யாருக்கும் நேரமில்லை. இந்தத் தள்ளாத வயதில், எனக்கு அவளும், அவளுக்கு நானும்தான் ஆறுதல்.

முதுமையில் தனிமை, எங்களுக்குச் சமீப நாட்களாக வெறுமையைத் தருகிறது. ஏதோ வாரிசுகள் வர, போக என்று இருந்தால், வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இருக்கும்.

நாளும், பொழுதும் நகர்வதே கடினமாக இருந்தது. இப்போதெல்லாம் நானும், அவளும் சேர்ந்துதான் எல்லா வேலைகளையும் செய்கிறோம். இருந்தாலும் ஒரு நேரம், யாராவது நம்மை உட்கார வைத்து ஆசையாக சாப்பாடு செய்து கொடுத்து, ஆறுதலாக நம்மிடம் பேச மாட்டார்களா என மனது ஏங்கித்தான் போகிறது.

தினமும் வீட்டு வேலைகள், அவற்றை முடித்தால் கொஞ்ச நேரம் புத்தகம் படிப்போம், கொஞ்சம் டிவி பார்ப்போம், யாராவது ஃபோன் செய்தால் உண்டு. முடிந்த போது கோவிலுக்கோ, கடைக்கோ சேர்ந்து போய் வருவோம். இதேதான் தினமும் என்றால் வெறுமையாக இருப்பது போல உள்ளது.

சாப்பிட உட்கார்ந்தேன் நான்.

“என்னங்க.... கோவிலுக்குப் போய் வந்ததுல இருந்து, ஏதோ யோசனையாவே இருக்கீங்க. என்ன விஷயம்? என்னாச்சு?”

“ம்ம்ம்.... ஒண்ணுமில்ல பரமு.”

“இல்லையே... ஏதோ யோசிக்கறீங்க. என்ன... வழக்கம் போல, இப்படித் தனியா இருக்கோமேன்னு கவலைப்பட ஆரம்பிச்சுட்டீங்களா? அதை யோசிச்சு என்னாகப் போகுது சொல்லுங்க. உள்ளூர்ல இருக்கற பசங்களே கூட, எவ்வளவு பேர் வயசானவங்களை கூடவே வச்சு பார்த்துக்கறாங்க சொல்லுங்க.”

“ஆமாம் பரமு. அதுவும் வாஸ்தவம் தான். என்னவோ போ... நாமெல்லாம் நம்ம பெத்தவங்களை, அவங்க கடைசி காலம் வரைக்கும் கூடவே வச்சு பார்த்துகிட்டோம். இப்ப எல்லாமே தலைகீழான மாதிரி இருக்கு.”

“ஆமாங்க. என்னவோ... வாழ்க்கை ஓடுது. பசங்க கூடவே இல்லேன்னாலும் வர, போக இருந்தாலாவது அவங்க வர சமயத்துக்காகக் காத்திருக்கலாம். இப்போ எதுக்காக இருக்கோம்னு தான் நினைக்கத் தோணுது. நம்ம தனிமையோட வலி அவங்களுக்குத் தெரியாதுங்க. எல்லாத்துக்கும் பணத்தை அனுப்பிட்டா, கடமை முடிஞ்சுதுன்னு நினைச்சுக்கறாங்க. ஹோம்ல போய் இருக்கச் சொல்றாங்க. அடுத்து, அதைத்தான் செய்யணும் போல.”

“நானும் அதுதான் யோசிக்கறேன் பரமு. நாளைக்கு ஒரு இடத்துக்குப் போறோம். போய்ப் பார்த்துட்டு சொல்லு. அப்புறம் முடிவெடுக்கலாம்.”

“எங்கே போறோம்ங்க? யார் என்ன சொன்னா?”

“பரமு... இன்னைக்கு கோவில்ல என்கிட்ட படிச்ச மாணவனைப் பார்த்தேன்.”

“யாருங்க அது? இவ்வளவு வருஷங்களுக்கு அப்புறமா?”

கோவிலில் நடந்த நிகழ்வு என் கண் முன்னே ஓடியது.

“சார்... நீங்க... ம்ம்ம்... ராஜகோபால் சார் தானே?” என்று என் பின்னால் ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். 55லிருந்து 60 வயதுக்குள் இருக்கும் ஒருவர் நின்றிருந்தார். குழப்பத்தோடு நான் பார்க்க,

“சார்... நீங்க ராஜகோபால் சார் தானே? என்னைத் தெரியுதா?”

“ம்ம்... தெரியலையேப்பா. என்கூட வேலை பார்த்தீங்களா? இல்ல... யாரு..?”

“சார், நான் உங்ககிட்ட படிச்ச மாணவன் குமார் சார். நான் ஒன்பதாவது படிக்கும் போது, கணக்கு ஒழுங்கா வரலேன்னு உங்ககிட்ட ட்யூஷனுக்குக் கூட வந்தேன். அப்புறம் பத்தாவதுல 98 மார்க் வாங்கினேன். நீங்க தான் அதுக்கெல்லாம் காரணம் சார். மேடம் நல்லா இருக்காங்களா?”

“ம்.. குமாரா..? யாரு... நம்ம தபால்காரர் தங்கவேலு மகன் குமாரா?”

“கரெக்ட் சார். அப்பா பேரை நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்களே. எப்படி இருக்கீங்க சார்?”

“நல்லாயிருக்கேன் பா. மனைவியும் நல்லா இருக்கா. நீ என்ன பண்ணறே? எப்படி இருக்கே?”

“நல்லாயிருக்கேன் சார். ரிடையர்ட் லைஃப். பையன், பொண்ணு எல்லாம் கல்யாணம் பண்ணி வச்சாச்சு. அவங்க வாழ்க்கையைப் பார்த்துட்டுப் போயிட்டாங்க. நாம நம்ம வாழ்க்கையைப் பார்த்துட்டு சந்தோஷமா இருக்க வேண்டியது தான். என்ன சொல்றீங்க?”

எல்லாம் சொல்லி முடிக்கவும், சாப்பிட்டும் முடித்தோம். நான் சொன்னதும் பரமுவிற்கும் ஞாபகம் வந்தது.

“அடேங்கப்பா... அந்த குமாரா? எப்படி உங்களைக் கண்டு பிடிச்சான்? அவன் பத்தாவதுல 98 மார்க் வாங்கினதும், அவங்கப்பா வீட்டுக்கு வந்து, உங்க கையைப் பிடிச்சுட்டு அழுதாரே…?”

“ஆமாம் பரமு. அவன் என்னை நல்லா ஞாபகம் வச்சிருக்கான். என்ன சார், டல்லாயிட்டீங்க , உடம்பு முடியலையான்னு கேட்டான். உடம்புக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல, மனசுக்குத்தான்னு சொன்னேன். உடனே நாளைக்குக் காலைல, கார் எடுத்துட்டு வரேன். உங்களை ஒரு இடத்துக்குக் கூட்டிட்டு போறேன்னு சொன்னான்.”

“அதான் யோசிச்சுட்டிருந்தீங்களா? எந்த இடத்துக்குப் போறோம்?”

“தெரியல பரமு. நாளைக்கு ஒரு மாறுதலுக்குப் போயிட்டு வருவோமே. நமக்கும் கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருக்கும்.”

இருவருக்கும், அன்றைய நாள் முழுவதும், மறுநாளுக்கான எதிர்பார்ப்புடன் கழிந்தது. மறுநாள் காலை 9 மணிக்கு, குமார் காரில் வந்தான். உடன் மனைவியையும் அழைத்து வந்தான். வீட்டிற்குள் வந்ததும், சம்பிரதாய விசாரிப்புகளுக்குப் பின், இருவரும் எங்களை நமஸ்கரித்து, ஆசீர்வாதம் செய்யச் சொன்னார்கள். பரமு கண் கலங்கி விட்டு, யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டாள். ஆனால் நான் கவனித்து விட்டேன்.

“அம்மா... என்னை ஞாபகம் இருக்கா? ட்யூஷனுக்கு உங்க வீட்டுக்கு வருவேன்... குமார் என் பேரு. இவ என் மனைவி மல்லிகா. அம்மா... நீங்க எனக்கு சாப்பிடக் கொடுத்த பலகாரத்தோட சுவையெல்லாம் இன்னமும் நாக்குல இருக்கு மா.”

“ஆமாம் மா... இவரு அடிக்கடி சொல்லிட்டே இருப்பாரு. ராஜகோபால் சாரும், சாரோட வீட்டம்மாவும் அவ்வளவு ப்ரியமா, பொறுமையா நடந்துப்பாங்க. அவங்களாலத்தான் நான் இன்னைக்கு இப்படி ஒரு நல்ல நிலைல இருக்கேன்னு பசங்ககிட்ட சொல்லிட்டே இருப்பார். நீங்க அவல் புட்டு செஞ்சு தருவீங்களாமே... என்னை அடிக்கடி அதே மாதிரி செய்யச் சொல்வார்.”

“அதெல்லாம் இன்னும் ஞாபகம் வச்சிருக்கியாப்பா..?” என்று கண்களில் முட்டும் கண்ணீருடன் கேட்டாள் பரமு.

“அம்மா... ஏன் கண் கலங்கறீங்க? இனிமே நீங்க கவலையேபடக் கூடாது. சரி, வாங்க... கிளம்பலாம்.”

வீட்டைப் பூட்டிக் கொண்டு நானும், பரமுவும் அவர்களுடன் காரில் கிளம்பினோம். போகும் போது, ஊரைப் பற்றி, பள்ளி நாட்கள் என பழங்கதைகள் எல்லாம் அசை போட்டுக் கொண்டே பயணித்தோம். நேரம் போனதே தெரியவில்லை. பிரயாணக் களைப்பும் இல்லை. பரமுவும், நானும் வயது குறைந்தாற்போல உணர்ந்தோம்.

வரிசையாக வீடுகள் இருந்த ஒரு இடத்தில் கார் நின்றது. கீழே இறங்கியதும், குமார், மல்லிகா வயதிலேயே ஆண்களும், பெண்களுமாக நிறைய பேர் வந்து எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள்.

“சார்...சார்... எப்படியிருக்கீங்க?”

“சார்... உங்களுக்கு வயசான மாதிரியே தெரியலையே... அப்படியே இருக்கீங்க சார். அம்மாவும் அப்படியேதான் இருக்காங்க. சூப்பர் சார்.”

“சார்... என்னை ஞாபகம் இருக்கா சார்?”

கலவையான குரல்கள் எங்கள் இருவரையும் மொய்த்துக் கொண்டன. அனைவரும் அங்கிருந்த ஒரு பெரிய ஹாலுக்குள் போய் உட்கார்ந்து கொண்டோம். எல்லாரும் சுற்றி உட்கார்ந்து கொண்டார்கள். எனக்கும், பரமுவுக்கும் கொஞ்ச நேரம் பேச்சே வரவில்லை. குமார் பேச ஆரம்பித்தான்.

“சார்... இவங்க எல்லாம் என்கூட படிச்சவங்கதான். உங்க மாணவர்கள்தான். எல்லாருக்கும் அநேகமா பசங்க வெளிநாட்டுல படிக்கறவங்க, இல்லேன்னா கல்யாணம் பண்ணி முடிச்சவங்க தான். வயசான காலத்துல தனியா இருந்து சிரமப்படாம, ஒரே இடத்துல, பக்கத்து பக்கத்துல வீடு வாங்கிட்டு இந்த இடத்துல இருக்கோம் சார். ஆத்திர, அவசரத்துக்கு உதவியா இருக்கோம். யாருக்கும் பசங்க நம்மகூட இல்லையேன்னு கவலை வராம பார்த்துக்கறோம். எல்லாரும் தெரிஞ்சவங்க, சின்ன வயசுலிருந்து பழக்கம் அப்படிங்கறதால, எதுவும் கஷ்டமா தெரியல. இப்போ எல்லாரும் உறவுகள் மாதிரி இருக்கோம்.”

“இன்னொரு விஷயம் சார். நாங்க மட்டும் இல்ல... உங்க கூட வேலை பார்த்தாங்களே, மணிவேல் சார், பழனி சாரும் இங்கே எங்க கூடத்தான் இருக்காங்க. இப்போ சொந்தக்காரங்க வீட்டு விசேஷத்துக்காக ஊருக்குப் போயிருக்காங்க. நீங்களும், உங்க பசங்ககிட்ட பேசிட்டு, இங்கேயே வந்துருங்க. இங்கே வாடகைக்கும் வீடு இருக்கு, சொந்தமாவும் வாங்கிக்கலாம். உங்க வசதி எப்படியோ அப்படி பண்ணிக்கலாம் சார்.”

“ஆமாம் சார். யோசிக்காதீங்க. இப்போ அங்கே வீட்டுல நீங்க எப்படி இருக்கீங்களோ, அதே மாதிரி தான் இங்கேயும் இருப்பீங்க. இங்கே துணைக்கு நாங்க எல்லாரும் இருப்போம். நீங்க தனியா, வெறுமையா உணர மாட்டீங்க.”

அதன்பின் நி;றைய நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அங்கேயே சாப்பிடச் சொன்னார்கள். சாப்பிட்டு முடித்ததும், குமார் எங்களை வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டு, ஃபோன் நம்பர் குடுத்துவிட்டுப் போனான். அன்று முழுவதும் எனக்கும், பரமுவுக்கும் அதே நினைவுதான். மனம் முழுவதும் சந்தோஷம் நிறைந்திருந்த உணர்வு.

“என்னங்க... எல்லாரும் எவ்வளவு பாசமா இருக்காங்க இல்ல. அவங்களைப் பார்த்ததுல கவலையெல்லாம் மறந்தே போச்சு. நீங்க என்ன நினைக்கறீங்க?”

“எனக்கும் மனசு நிறைவா இருக்கு பரமு. அங்கேயே மாத்திப் போயிடலாமா ? நீ என்ன நினைக்கறே? பசங்ககிட்ட பேசலாமா? சொந்த வீட்டை விட்டுட்டுப் போறதுக்கு பசங்க ஒத்துப்பாங்களான்னு தெரியல?”

“பசங்க என்ன சொல்றது? நாம எடுக்கற முடிவுதான். இனியும் அவங்களுக்காக நாம யோசிச்சு ஒண்ணும் ஆகப் போறதில்ல. அவங்க தான் ஏற்கனவே நம்மளை ஹோம்ல போய் இருக்க, சொல்லிட்டு தானே இருக்காங்க. பேசி முடிவெடுத்துடலாம்.”

“ஆமாம் பரமு. எனக்கும் சரின்னுதான் படுது. என்னடா வாழ்க்கைன்னு கவலைப்பட்டுட்டு இருந்த நேரத்துல, கடவுள் நமக்குன்னு ஒரு வழி காட்டின மாதிரி இருக்கு.”

நானும், பரமுவும் அன்று இரவு நிம்மதியாகத் தூங்கினோம்.

ஸ்ரீவித்யா பசுபதி,
செசெசென

சென்னை.
அருமையான கதை நகர்வு
 
Artpearl

Active member
சூப்பர் முதுமையில் தனிமை ரொம்ப கஷ்டம்
 
Top