முற்றத்தில் விழுந்த மழைத் துளி.
அத்தியாயம்---10
ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டு அண்ணாந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் செல்வி. மேகங்கள் பல வடிவங்களில் மிதந்து போய்க் கொண்டிருந்தன. சில்லென்று காற்று அவள் கன்னங்களில் மோதி அவளுக்கு உயிரூட்ட முயன்றது. தெளிந்த நீல வானத்தை பார்க்க முடியாமல் மேகக் கூட்டம் வட்டமடிப்பது போல் அவள் வாழ்கையில் நடந்த சோக நிகழ்ச்சிகள் அவள் மனதை வட்டமடித்துக் கொண்டிருந்தது. ஷாந்தா ராம் அவள் அருகே வந்து கனிவுடன் சொன்னான்.
“உங்க மாமனாருக்கு போன் செய்தேன் செல்வி...அவர் திரும்ப கூப்பிடுவதா சொல்லியிருக்கார் ...நான் டியூடிக்கு போயிட்டு வரேன்...”
தலையாட்டினாள். அவன் மறைந்ததும் அவள் தன் உதட்டை பற்களால் கடித்தாள். அவளுக்கு ஆறு வருடத்துக்கு முன் நடந்ததெல்லாம் ஞாபகத்திற்கு வந்தது. அவள் கடந்து வந்த பாதையின் அலங்கோலம் அவள் ஏற்படுத்திக்
கொன்டது தான். அவளுக்கு வாழத் தெரியவில்லை. அலங்காரப் பாதையை விட்டு அவள் தான் அலங்கோலப் பாதையை தேர்ந்தெடுத்தாள். போதை மேல் போதை. பிறகு அதிலிருந்து அவள் வெளி வந்து நல்ல வாழ்க்கை வாழ முயற்சித்த போது நாகம் மாதிரி வந்த நாகு.....
தீய நண்பர்கள் உலை வைக்க, கொள்ளிக் கட்டைகளோடு தான் அலைவார்கள் போலும். ஆஸ்பத்திரியில் அவள் கிடந்த போது நாகு நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் வந்து அவள் அறையில் நுழைந்து அவளுக்கு போதை ஊசியை போட்டுவிட்டு பாவம் மஞ்சுவின் பையில் ஊசியை போட்டுவிட்டுப் போயிருக்கிறாள்.
“நான் தான் அப்படி செய்தேன். பழி அவள் மேல் விழட்டும் என்றுதான். செல்வி நீ ஷாந்தா ராமை உன் வசப்படுத்திட்டே. அவன் உன்னால் தான் என்னைக் காதலிக்க மாட்டேன் என்று சொல்லிட்டான். உன்னை சும்மா விட மாட்டேன். நீ நன்றாக வாழக் கூடாது...எனக்கு கிடைக்காத வாழ்க்கை உனக்கும் கிடைக்கக் கூடாது...நீ அழியாமல் அழியணும்....”
நாகு நினைத்ததை சாதித்துவிட்டாள்.
செல்வி தான் பெற்றெடுத்த தங்கத்தின் முகத்தை கூட பார்த்து தன் குழந்தை என்று புரிந்து கொள்ளவில்லை. தனக்கு ஊசியை போடுவதாக நினைத்துக் கொண்டு அவள் குழந்தைக்கு போட போனபோது சரவணன் பார்த்துவிட்டான். அடிப் பாவி என்று அறைந்துவிட்டான். அதன் பிறகாவது அவள் சும்மா இருந்தாளா? போதை மருந்துக்காக கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள். மேலும் துரதிர்ஷ்டம்...இந்த நாகு பெண் பேய் இவள் மயக்கத்தில் இருக்கும் போதே எப்படியோ கடத்திக் கொண்டு வந்துவிட்டது. அவள் குழந்தையின் முகம் கூட அவளுக்கு ஞாபாகம் இல்லை. ச்சே..நான் ஒரு மனுஷியா அவள் உள்ளம் ஓலமிட்டது.
அன்று நடந்தது நியாபகம் இருக்கு. குழந்தைக்காக செல்வி கெட்ட பழக்கத்தை விட்டுவிட்டு தேறிவிட்ட போது மகிழ்ச்சி அடைந்தாள். இனிமேல் கவலையில்லை. குழந்தையை அது பாதிக்கவில்லை என்று டாக்டர் சொன்ன அன்று அவள் ஆனந்த கண்ணீர் வடித்தாள். இனி அந்த பழக்கத்துக்கு முழுக்கு போட்டு விடவேண்டும்.. அன்பான கணவன்...அருமையான குடும்பம் தங்க சிப்பி போல் குழந்தை.......வேறென்ன வேண்டும் ஒரு பெண்ணுக்கு?
அவள் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அவள் அயர்ந்து அன்று நிம்மதியாக தூங்கினாள். வயிற்றில் குழந்தை உதைத்ததை ரசித்தபடி தூங்கினாள். அது தான் அவள் நிம்மதியாக இருந்த கடைசி நாள். நாகு தினம் இரவு வந்திருக்கிறாள். அவளுக்கு போதை ஊசி ஏற்றிவிட்டுப் போயிருக்கிறாள். அவளுக்கு குழந்தை பிறந்தது கூட சரியாக நினைவில் இல்லை. சகதியில் நடந்தவள் அந்தப் புதைகுழியில் சிக்காமல் தன்னை காப்பாற்றிக் கொண்டதாக நினைத்த நேரம்...நாகு பழிவாங்கி விட்டாள். ஏதோ ஒரு அறையில் அடைத்து வைத்து விட்டாள்.
“நாகு...நீயா? நான் எப்படி இங்க வந்தேன்? ஆஸ்பத்திரியில் அல்லவா இருந்தேன்...நீ..நீ...என்னை என் குடும்பத்தோடு சேர்த்துவிடு நாகு..”
“உனக்கு இனி குடும்பம் கிடையாது செல்வி. போதை ஊசியின் மயக்கத்தில் நீ இருந்தபோது நான் உன்னை காரில் போட்டு கொண்டு வந்துவிட்டேன்..”
“நாகு..நீ என் பிரென்ட் என்று நினச்சேன்....எதுக்கு இப்படி செஞ்சே?”
“சாந்தா ராம் என்னை காதலிக்கலைன்னு சொல்லிட்டான்.”
“அதுக்கு நான் என்ன செய்வேன் நாகு?’
“அதுக்கு காரணம் நீ தான். உன்னை அவன் காதலிக்கிறான். என்னிடம் உனக்கு கொடுக்க சொல்லி ஒரு காதல் கடிதம் கொடுத்தான். நான் அதை கிழித்துப் போட்டுவிட்டேன். நீ சிவப்பு ரோஜா அணிந்து வந்த பின் அவன் நீ அவனைக் காதலிக்கவில்லை என்று மனம் ஒடிந்து விட்டான். நீ இல்லை என்ற பிறகாவது என்னை காதலிப்பான் என்று நினச்சேன். அவன் உன்னை மறக்கலை. எனக்கு அப்பவும் நோ சொல்லிட்டான். நீ என் வாழ்க்கையை..”
“புரியாம பேசாதே நாகு...ஷாந்தா ராமை ஒரு நல்ல ப்ரெண்டா தான் நினைச்சேன். என் கிட்ட சொல்லியிருந்தா உனக்காக அவன் கிட்டே போய் பேசி இருப்பேனே...” செல்வி அப்பாவியாக சொன்னாள்.
“நீ அந்த பிச்சை போட்டாலும் அவன் எனக்கு கிடைக்க மாட்டான். அவன் உள்ளத்திலே நீ புகுந்திட்டே. வேற யாரையும் அவன் உள்ளே விடலை...நீ ஒரு நாசகாரி...என் காதலை கொன்னிட்டே...நீ நல்லா இருக்கக் கூடாது.”
“நாகு ப்ளீஸ் என்னை விட்டுவிடு...எனக்கு குழந்தை பிறந்திருக்கு...அதை கூட என் வயிறு காலியா இருக்கறதை வச்சு தான் புரிஞ்சுக்கிட்டேன். எனக்கு என்ன குழந்தை பிறந்திச்சு? என் குழந்தையை நான் பார்க்கணும்....”
“உனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு...”
“அப்படியா? அவளை நான் பார்க்கணும். என்னை விட்டுவிடு நாகு நான் போணும். நான் மயக்கத்தில் இருந்தேன். குழந்தை முகம் ஞாபகமில்லை.”
“அதுக்கெல்லாம் உனக்கு பாஸ்போர்ட் கொடுக்க மாட்டேன். உன்னை மயங்க வச்சதே நான் தானேடி. இந்த எடத்திலிருந்து வேறு எடத்துக்கு உன்னை கொண்டு போய் விடப் போறேன். உனக்கு அந்த நரகத்திலிருந்து விடுதலேயே கிடைக்காது.....வாழ ஆசைபட்டே இல்லே? வாழு கால் கேர்ளா...”
நாகுவை செல்வி கடைசியாக பார்த்தது அப்போது தான். அதன் பிறகு நடந்தது எல்லாம் மின்னலும் இடியுமான நிகழ்ச்சிகள். அவளை மீண்டும் மீண்டும் போதை மயக்கத்தில் வைத்து ஒரு பாலியல் வியாபாரிக்கு விற்று விட்டாள் நாகு. அந்த கேவலமான இடத்தில் மயக்கம் தெளிந்து செல்வி பார்த்து புரிந்து கொன்டபோது கதறி அழுதாள். சினிமாக்களில் அவள் பார்த்தது போல் ஒரு குண்டு பெண்மணி அவள் அருகில் வந்து சொன்னாள்.
“உன்னை அஞ்சு லட்சம் கொடுத்து வாங்கி இருக்கோம். நாளையிலிருந்து நீ கஸ்டமர்களுக்கு விருந்து வைக்கணும்.”
“சீ..நாயே. நீ யாருடி என்னை கழுகுகளுக்கு விருந்து வைக்க? அஞ்சு லட்சம் கொடுத்து எத வாங்கியிருக்கே தெரியுமாடி? அஞ்சு கோடிக்கு பாவத்தை சம்பாதிச்சிருக்கே. இப்படி ஒரு பொழப்பா? வெட்கமா இல்லை? நீயும் ஒரு பொம்பளை தானே? கேடு கெட்ட நாயே.....ஒரு நாளும் உன் நரிகளுக்கு விருந்தாக மாட்டேன்.”
இப்படி ஒரு ஆவேசமான எதிர்ப்பை அந்த குண்டுத் தலைவி பாரிஜாதம் எதிர் கொண்டதில்லை. ஒரு கணம் நடுங்கிப் போனாள். எவ்வளவு திமிர் இவளுக்கு? பிறகு அவள் பழைய உத்திகளை கையாண்டாள். பட்டினி...அடி..உதை என்று வதைத்தாள் செல்வி அடங்கவில்லை.
“போலிசுக்குப் போவேன். உங்களை கூண்டோடு பிடிச்சுக் கொடுப்பேன்.”
இப்படி சொன்னதுக்கு மேலும் அடிகளை வள்ளலைப் போல் வழங்கினர்.
“இத பார்...நீ தப்பிக்க முடியாது. எனக்கு நீ சம்பாதிச்சு கொடுக்கணும். அடுத்த வாரம் ஒரு பெரிய பார்ட்டி வருது. உன்னை தேத்தனும். சாப்பிடு. உன் காயம் ஆறினதும் தயாரா இரு. கட்டிலுக்குன்னே பிறந்தவடி நீ. செமையா இருக்கே.”
ஆடை அலங்காரங்கள் பண்ணி விட வந்த பெண்களைப் பார்த்து கத்தினாள் செல்வி.
“உங்களுக்கெல்லாம் அசிங்கமா இல்லை? ஏதோ புருஷன் கிட்டே முதலிரவுக்கு கூட்டிட்டுப் போற தோழிகள் மாதிரி வறீங்க? வாராய் என் தோழி வாராயோன்னு பாடாத குறை தான். இத்தனை தடிச்சிகள் இருக்கீங்க அந்த குண்டு பொம்பளையை தூக்கி போட்டு மிதிக்க முடியலை? இந்த நாறப் பொழப்பு பொழைக்கத் தான் உங்க வல்லமையை எல்லாம் தொலச்சிட்டு அந்த குண்டு பூசணிக்காயிக்கு அடங்கி கிடக்றீங்களா? த்து...” முகத்திலேயே காறித் துப்பினாள்.
அவர்கள் வெலவெலத்து ஓடினார்கள் குண்டு பூசணிக்காயிடம் போய் சொன்னார்கள்.
“முட்டாள்களா..இத்தனை தடிச்சிகள் இருக்கீங்க ஒரு நரம்பு மாதிரி இருக்கிற பொண்ணை வழிக்கு கொண்டு வரத்
தெரியலை..மூதேவிகளா...”
அவர்கள் அஞ்சி ஓடினார்கள். கோழைகள் சாவதற்கு முன் ஆயிரம் முறை சாவார்கள் என்று நிருபித்துக் கொண்டிருந்தார்கள்.
“நாகு...நீ கொண்டு வந்து விட்டப் பெண் பயங்கரமா முரண்டு பண்றா. என்ன செய்தால் அவளை வழிக்கு கொண்டு வர முடியும் சொல்லு?” என்று நாகுவிடம் யோசனை கேட்டாள்.
“அவள் குழந்தையை கொன்று விடுவேன்னு சொல்லு. பெட்டிப் பாம்பா அடங்கிடுவா. நல்ல விதமா சொல்லி புரிய வைக்க முடியாத திமிர் பிடிச்சவங்களுக்கு இது ஒண்ணு தான் வழி”
“அப்படியா? அவளுக்கு குழந்தை இருக்கா? பேஷ். நல்ல ஐடியா.”
“அதுவும் குருட்டுக் குழந்தை. அது அவளுக்குத் தெரியாது. நான் தான் அவளை குழந்தை பிறந்த உடனேயே கடத்தி வந்திட்டேனே. மூணு மாசம் போதையிலே வச்சிருந்தேன். அப்புறம் உன் கிட்டே பேரம் பேசின பிறகு போதை மருந்த குறைச்சிட்டு தெளிஞ்ச பிறகு கூட்டி வந்தேன். போ போயி நான் சொன்னபடி செய். பட்சி உன் கையில்..”
ஒரு பிடி கிடைத்தது என்று உற்சாகமானாள் அந்த நாசகாரி.
அந்தக் குண்டு கத்திரிக்காய் உருண்டு உருண்டு வருவதைப் பார்த்து மற்ற பெண்கள் அஞ்சி ஒதுங்கினர். அவள் புதிய தெம்பு பெற்றவள் போல் செல்வியிடம் வந்தாள். எகத்தாளமாக பார்த்தாள்.
“குட்டி போட்ட குரங்கு தான் நீ. உனக்கு இவ்வளவு திமிரா? உன் அழகை பார்த்து ஏமாந்திட்டேன். ஏய்...இன்னிக்கு வரும் கஸ்டமரை நீ ஏத்துக்கலை உன் குழந்தையை கொன்னுடுவேன்.?”
செல்வி சிரித்தாள். அது கண்டு அந்த கழிசடை அதிர்ந்தது.
“என்னடி? நான் சொன்னது புரியலையா? சிரிக்கிறே? பிள்ள மேல அவ்வளவு தான் பாசமா உனக்கு? உனக்கெல்லாம் குழந்தை பிறந்திருக்கு பார்...”
“உன்னையெல்லாம் ஒருத்தி பெத்து போட்டிருக்கா பார்! உன்னைத் தான்டி முதல்ல கொல்லணும். மனுஷங்களுக்கு நல்லது செயாட்டி பரவாயில்லை. கெட்டது செய்யனும்னு அலையறே பாரு...உனக்கு நல்ல சாவே வராது. என் குழந்தையை உன்னால் கொல்லவே முடியாது. யமன் கூட கிட்டே வர அஞ்சுவான். அது நாகு மாதிரி பொறுக்கியை கூட ஏமாத்திட்டு பிறந்த குழந்தை. உனக்கு அகப்பட மாட்டா. சும்மா மிரட்டாதே.”
“ஒ...குருட்டு குழந்தையை கொல்றது அவ்வளவு கஷ்டமா? சொல்லுடி சவுடால்காரி.”
இடுப்பில் கை வச்சு அவள் பூதம் மாதிரி நின்றாள்.
ஒரு கணம் தடுமாறினாள் செல்வி. என் குழந்தை குருடா? அவளுள் பொங்கி வந்த ஆத்திரம் அவளுக்கு ஒரு காளியின் தைரியத்தை கொடுத்தது. யாருமே எதிர்பார்க்கவில்லை. பளீர் பளீர் என்று ஒரு நொடியில் படபடவென்று சரமாரியாக அடித்தாள். அப்படியும் அவள் ஆத்திரம் அடங்கவில்லை.
நீதி கேட்டு பாண்டியன் அரசவையில் ஆவேசமாக நுழைந்த கண்ணகி மாதிரி, நெற்றிக் கண் திறந்து நின்றாள் செல்வி. அஞ்சி நின்ற கூட்டத்தை பார்த்து பாரிஜாதம் கத்தினாள்.
“என்னடி வேடிக்கை பார்த்திட்டு நிக்றீங்க? நாலு சாத்து சாத்துங்க.” கன்னத்தை பிடித்துக் கொண்டாள். யாரும் அசையவில்லை.
ரௌத்திரம் பழகு என்று பாரதியார் சொன்னது இதற்குத்தானா? சாது மிரண்டது. அந்த முள் காடு எரிந்தது. விஸ்வரூபம் கண்டு பயம் கொள்ளாதவர்கள் யார்? அரக்கியே அரண்டு நிற்கும்போது பலி ஆடுகள் எவ்வாறு வீறு கொள்ளும்?
\“மேடம்..இந்தப் புலியை விட்டு விடுங்கள். இது நம்மை அழிச்சிடும்.” அனைவரும் திகைத்து நிற்க செல்வி யாரிடமிருந்தோ செல்போனை பிடுங்கி போலிசுக்குப் போன் பண்ணிவிட்டாள். முதலில் இடத்தை சொல்லிவிட்டுத் தான் விஷயத்தை சொன்னாள். அவ்வளவு தான் துண்டைக் காணும் துணியைக் காணும் என்று அடுத்த நிமிடமே தன் கூட்டத்திடம்
‘வாங்க வேனில் தப்பிச்சிடலாம்’...என்றபடி ஓடினாள். மற்ற பெண்கள் பின்தொடரவில்லை. போலிஸ் வருகிறது. நமக்கு
விடுதலை என்று நின்றுவிட்டனர். போலிஸ் வந்தது செல்வி உள்பட அங்கு அந்த நரகத்தில் உழன்று கொண்டிருந்த முதுகெலும்பில்லா பெண்களையும் அள்ளிக் கொண்டு போய் போலிஸ் ஸ்டேஷனில் கொண்டுவிட்டது. யாரோ ஒரு நாளிதளின் புகைப்படக்காரர் அவர்களை போட்டோ எடுத்துவிட்டான். மறுநாள் அது செய்தியுடன் வெளியிடப்பட்டுவிட்டது. இந்தியாவின் எல்லா மாநில நாளிதள்களிலும் அது வெளியாயிற்று. இது பாவம் செல்விக்குத் தெரியாது. அதை பார்த்து சரவணன் கொதித்தது தெரியாது. ஒ...இவள் ஒரு வேசிக் கூட்டத்தில் போய் சேர்ந்து விட்டாளா? எவ்வளவு அவமானம்? தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் அவனிடம் கேட்ட கேள்விகளால் அவன் குன்றிப் போனான். செல்வி மேல் வெறுப்பு வளர்ந்தது. மனம் குமைந்தான்.
இங்கு செல்வி வந்தடைந்த போலிஸ் ஸ்டேஷனில் தான் ஷாந்தா ராம் போலிஸ் சூப்பரென்டென்டாக இருந்தான். அவன் செல்வியை அங்கு பார்த்து அதிர்ந்தான். பூ போன்ற செல்வி இங்கு வந்து சிக்கிக் கொண்டாளா? அவன் பரிதவித்தான்.
“செல்வி நீங்களா? இங்கே எப்படி?”
செல்வி தலைகுனிந்தாள். அவமானமாக இருந்தது. கூட இருந்த பெண் விளக்கினாள். அவன் எல்லோரையும் ஒரு மறுவாழ்வு மையத்தில் சேர்த்தான். செல்வி ஷாந்தா ராமின் சந்திப்பை விரும்பவில்லை. கேவலம் ஒரு பாலியல் கூட்டத்திலிருந்து வந்திருக்கிறாள் என்றபோது அவளை மதிப்பானா? கம்பீரமாக பார்த்த பெண்மையை சாக்கடை கூட்டத்தில் பார்த்தால் வேறு என்ன நினைப்பான்?
அந்த மையம் பெரிய தோட்டதுடன் விஸ்தாரமாக இருந்தது. செல்வி தனியாக இருக்கவே ஆசைப்பட்டாள். மற்ற பெண்கள் சீக்கிரம் தங்களை தேற்றிக் கொண்டனர். அவளால் முடியவில்லை. ஒரு சின்னக் குளம் அங்கு இருந்தது. அதன் படித்துறையில் போய் அவள் அமர்ந்து கொள்வாள். அதில் மிதந்த தாமரை பூக்களை கண்கொட்டாமல் பார்ப்பாள்.
இந்த தாமரை நிறத்தில் தானே அவள் குழந்தை பிறந்திருக்கும்? அதன் மதிவதனத்தைக் கூட அவளுக்கு பார்த்து புரிந்து கொள்ள கொடுத்து வைக்கவில்லை. இப்பொழுது குழந்தை குருடு என்கிறார்கள்...இந்த சூழ்நிலையில் அவள் எப்படி திரும்ப வீட்டுக்குப் போவாள்? அவளை சரவணன் உள்ளே தான் விடுவானா? அடித்து துரத்திவிட மாட்டானா? நாகுவை அன்று வளைகாப்பின் போது உள்ளே விட்டது அவளது வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டது. மஞ்சு எவ்வளவு போராடினாள்? சிந்திய பாலை அள்ள முடியுமா? இப்பொழுது என்ன செய்வது? ஒரு வாரம் போன பிறகு சாந்தா ராம் அவளைப் பார்க்கவந்தான்.அவன் முகத்தில் கருணை தெரிந்தது.
“எப்படி இருக்கீங்க செல்வி?”
“ஏதோ இருக்கேன்...இருக்கவே பிடிக்கலை.”
“கம் ஆன் செல்வி...இப்படி விரக்தியா பேசக்கூடாது. உங்க வீட்டு விலாசம் சொல்லுங்க நான் கொண்டுபோய் விட்டுடறேன்.”
அவள் மெளனமாக நின்றாள். அவன் கனிவுடன் சொன்னான்.
“உங்களை நான் தப்பா நினைக்கலை. அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். செல்வி உங்க கிட்டே ஒரு கேள்வி கேக்கலாமா?”
வானம் சிவந்து கொண்டிருந்தது. அந்தி நேர சிவப்பு. குளத்தின் தாமாரைகள் கூம்பிக் கொண்டிருந்தது. என் வாழ்கையைப் போல என்று நினைத்துக் கொண்டாள் செல்வி. அவனுக்கு அந்த நேரம் ரம்மியமாகத் தெரிந்தது. அவன் நேசித்த பெண்ணுக்கு அவனால் உதவ முடிந்ததே என்ற மகிழ்ச்சி அவனுக்கு இருந்தது. இவள் ஏன் வாயை திறக்க மாட்டேன் என்கிறாள்?
“என் கிட்ட நான் கேக்ற கேள்விகளுக்கே எனக்கு பதில் தெரியலை. உங்க கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும்?”
“ஒரு சின்ன கேள்வி தான். நீங்க ஏன் என்னை நிராகரிச்சீங்க?”
அவள் வியப்புடன் அவனைப் பார்த்தாள்.
“நான் உங்களுக்கு எழுதிய காதல் கடிதத்தில்...உங்களுக்கு சம்மதம் இல்லை என்றால் காதோரம் சிவப்பு ரோஜா வச்சிட்டு வாங்கன்னு எழுதியிருந்தேன். சம்மதம் என்றால் மல்லிகை பூ..நீங்க சிவப்பு ரோஜா வச்சிட்டு வந்தீங்க. நான் மனம் உடைந்து போயிட்டேன்.”
“ஷாந்தா ராம்...நீங்க சொல்றது எதுவும் எனக்குப் புரியலை. நீங்க காதல் கடிதல் எழுதினீங்களா? நான் பார்க்கவே இல்லையே.”
ஷாந்தா ராம் அதிர்ந்தான். அப்ப நாகு கடிதத்தை அவளிடம் கொடுக்கவே இல்லை. அவன் மனதின் ஓரத்தில் டொமென்று ஒரு சத்தம் அவனுக்கு மட்டும் கேட்டது. புறாக்களை தூது விட்டால் அவளுக்கு கடித்தம் கிடைத்திருக்கும். கழுகினை தூது விட்டால்...அது குதறிவிட்டது.
“நாகு அதை மறச்சிட்டான்னு நினைக்கிறேன். செல்வி..நீ எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்திட்டு இருந்தேன். ஆனா உன்னை இந்தக் கோலத்தில் பார்க்க கஷ்டமா இருக்கு. சொல்லு உன்னை உன் இருப்பிடத்தில் சேர்த்திடறேன்.”
அவர்கள் இருந்த மாநிலம் ராஜஸ்தான். ராஜபுத்திர பெண்கள் வீரத்துக்கு பேர் போனவர்கள். ஆனால் அவள் அந்த மண்ணில் அடிமையாக திக்கற்றவளாக....மயிரிழையில் வேசி பட்டத்திலிருந்து தப்பி வந்திருக்கிறாள்.
“ஷாந்தா ராம்...என் கிட்டே எதுவும் கேக்காதீங்க. எனக்கு பெயிண்டிங் பண்ணனும். கொஞ்சம் அதுக்குரிய பிருஷ்..பெயின்ட்...கான்வாஸ் துணி வாங்கித் தர முடியுமா? ஸாரி..உங்களுக்கு தொந்தரவு கொடுக்கிறேன்.”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை. கண்டிப்பா வாங்கி வரேன்..கூடிய சீக்கிரம் உங்க வாழ்க்கையும் வண்ண மயமாகனும்னு
வேண்டிக்கிறேன்.”
அவன் விடை பெற்றுக் கொன்ட போது அவள் மெல்லிதாக அவனைப் பார்த்து சிரித்தாள். அது போதும் என்பது போல் அவன் சென்றான். அவளுக்கு அவன் செல் ஒன்று வாங்கிக் கொடுத்திருந்தான். செல்வி மதுரையில் ஒரு நம்பருக்கு போன் செய்தாள். அந்த கால் தான் அவளுக்கு உயிரூட்டிய ஆக்ஸிஜன். அந்த கால் பண்ணிய பிறகு அவள் ஓரளவு சகஜமானாள். அடுத்த முறை ஷாந்தா ராம் வந்த போது அவள்
“வாங்க...எப்படியிருக்கீங்க?” என்று வரவேற்றாள்.
மழை விழும் .