முற்றத்தில் விழுந்த மழைத் துளிகள் .
அத்தியாயம்---11
கோவில் பொற்றாமரை குளத்துப் படியில் அமந்திருந்தாள் சீதா. மெலிந்த தேகம். களையான முகம். முப்பது தாண்டிய வயது. அருகில் அஞ்சனா என்ற சிறுமி கோவில் புளியோதரை சாப்பிடுவதை கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தாள். அஞ்சனாவுக்கு நாலு வயசிருக்கும்.
“அம்மா...நீயும் சாப்பிடும்மா....உனக்கு வாங்கிட்டு வரட்டுமா?”
“வேண்டாண்டா கண்ணு. நீ சாப்பிட்டாலே போதும் நான் சாப்பிட்ட மாதிரி.”
“அம்மா எப்ப சென்னை போகப் போறோம்?” இன்னும் மழலை மாறாத பேச்சு. அவள் அழகிய விழியில் ஆர்வம்.
“இப்ப நீ ராஜஸ்தான் போறே. நான் மட்டும் தான் சென்னை போறேன்.”
“அம்மா...ஏன்ம்மா...என்னை விட்டிட்டு போறீங்க?. நானும் வருவேன்.”
“நீ ஸ்கூல் போணுமா வேண்டாமா?”
“போணும்...”
“அப்ப நீ அங்கே சாந்தா ராம் அங்கிள் கிட்டே போறே. அம்மாவோட தோழி செல்வியோட ஆஸ்ரமத்திலே தங்கற. உன்னை ஷாந்தா ராம் அங்கிள் படிக்க வைப்பார். நீ ஹிந்தி கத்துக்கலாம். ஜாலியா விளையாடலாம். கம்ப்யூட்டர் வாங்கித் தருவாங்க. கத்துக்கலாம். பொம்மை..புத்தகங்கள் எல்லாம் கிடைக்கும். புது டிரஸ் யூனிபாரம் போட்டுக்கிட்டு கான்வென்டில் படிக்கலாம்.” பெண்ணுக்கு சமாதனம் சொன்னாள்.
“ஆனா அங்கே அம்மா இருக்க மாட்டாங்களே...”
குளத்தை விட்டு எழுந்தாள் சீதா. படியில் இறங்கி தண்ணீரை தலையில் தெளித்துக் கொண்டு படியேறி வந்து விபூதி பிள்ளையாரை சுற்றினர்.
“அஞ்சனா...கொஞ்சம் விபூதியை அள்ளி பிள்ளையார் தலையில் போடு...அப்ப தான் நீ வேண்டியது நடக்கும்..” என்றாள் சீதா.
“அப்ப சரி...நான் ராஜஸ்தான் போக வேண்டாம் பிள்ளையாரப்பா..” என்று வேண்டியபடி விபூதியை அள்ளி பிள்ளையார் தலையில் போட்டு மூன்று சுற்று சுற்றினாள். ஆனால் அது பலிக்கவில்லை. அஞ்சனா அடம் பிடிதாள்.
“அம்மா நான் போக மாட்டேன். அங்கே எனக்கு அம்மா வேணும். நீயும் வா.”
“அங்கே போய் நில்லு. ஸ்டேஷனில் அம்மா நின்னுட்டு இருப்பேன்.”
“நிஜமாவா?”
“நிஜமா....அம்மா பொய் சொல்வேனா?”
அந்த நம்பிக்கை மனதில் கொண்டு ஒரு பெரியவர் துணையுடன் ராஜஸ்தான் சென்று இறங்கினாள் அஞ்சனா. “எங்கே எங்கம்மா காணும்?” அவளிடன் கேட்டாள். சுற்றும் முற்றும் பார்த்தாள்.
ஒரு கரம் அவளை அன்புடன் தோள் தொட்டு திருப்பியது. செல்வி தான். மண்டியிட்டு அவள் உயரத்துக்கு வந்து செல்வி குழந்தையை உச்சி முகர்ந்தாள். அழத் தொடங்கினாள் அஞ்சனா.
“உங்கம்மா என் மகளைப் பார்த்துக்கப் போயிருக்காங்க. நான் அவள் மகளான உன்னை பார்த்துக்கப் போறேன். சரியா? இப்ப நீ தான் என் மகள்.”
“வேண்டாம்...நீ என் அம்மா இல்லை. என்னை அம்மா ஏமாத்திட்டா, நான் அம்மாக்கிட்டே போணும்...”
செல்வி ஒரு போன் அடித்தாள்.
“சீதா...அஞ்சனா வந்து சேர்ந்திட்டா. அழறா..இந்தா..”
போன் கை மாறியது. அஞ்சனா அழுதுகொண்டே இருந்தாள்.
“அஞ்சான அழக்கூடாது. இங்கே ஒரு குட்டி பாப்பா இருக்கு. அஷான்னு பேர். அவளுக்கு கண் தெரியாது. பாவமில்லையா? அதான் நான் அதுக்கு அம்மாவா இங்கே இருக்கேன்....ப்ளீஸ் சரி சொல்லு...”
“அந்தப் பாப்பாவோட அம்மாவே போய் பார்த்துக்கட்டுமே..”
“அவங்க இங்கே வரமுடியாது. நீ பாப்பாவோட அம்மாவை அம்மாவா நினைச்சுக்கோ. பாப்பா உன்னோட அம்மாவை அம்மாவா நினச்சுக்கும்.”
அஞ்சனாவுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. பெரியவர்களின் திருவிளையாடல்கள் அவளுக்கு எப்படி புரியும்?
ஒரு மாசம் போவதற்குள் அஞ்சனா செல்வியிடம் ஒட்டிக் கொண்டாள். ஒரு அம்மாவின் அன்பை பெற்றாள். குழந்தைகள் எவ்வளவு சீக்கிரம் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாறிக் கொள்கிறார்கள்! அங்கே ஆஷா சீதாவை அம்மாவாக ஏற்றுக் கொண்டுவிட்டாள். இங்கே அஞ்சனா செல்வியை அம்மாவாக ஏற்றுக் கொண்டாள். ஆனால்...சீதாவுக்கு அஞ்சனாவை பிரிந்த ஏக்கம் வந்தது. செல்விக்கு ஆஷாவை பிரிந்த ஏக்கம் இருந்தது.
சீத்தாம்மா என்று அஷாவால் அழைக்கப்பட்ட சீதாவுக்கு இந்த பணியில் நிறைவு இருந்தது. தோழி செல்வியின் வரலாறு அவளுக்குத் தெரியும்.சின்ன வயதில் ஐந்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தவர்கள். அப்பொழுது இருவரும் மதுரையில் இருந்தார்கள். ஒ.சி.பி.எம் பள்ளியில் படித்தார்கள். ஆறாம் வகுப்புக்கு போகும் பொழுது செல்வியின் அப்பாவுக்கு சென்னைக்கு மாற்றல் ஆகிவிட்டது. அப்பொழுது பிரியா விடை பெற்றார்கள். கண்களில் கண்ணீரும் நெஞ்சில் பாரமுமாக அந்த நேரம் அவர்கள் பிஞ்சு மனம் திண்டாடியதை பார்த்து அவர்கள் பெற்றோர்களே கண் கலங்கினர். சென்னை வந்த பின்பும் செல்வி தன் சின்ன வயசு தோழியுடன் தொடர்பில் இருந்து கொண்டுதான் இருந்தாள்.
“சீதா...இங்கே வாழ்க்கை பரபரப்பாக இருக்கு. மின்வண்டியில் ஏறுவதே ஒரு பெரிய சாதனை தான். எப்படி கும்பல் உள்ளே போகிறது எப்படி கும்பல் வெளியே வருகிறது என்றே தெரியவில்லை. இமை மூடி திறக்கும் நேரத்தில் எல்லா பயணிகளும் மின்னல் வேகத்தில் ஓடுகிறார்கள். ரங்கநாதன் தெருவில் இருக்கும் கூட்டம் பார்த்தால் பிரமிப்பாக இருக்கு...ரொம்ப தமாஷாக இருக்கு...அங்கே உன் அப்பா, அம்மா, அண்ணன் அண்ணி நலமா?”
“செல்வி நீ போன பிறகு நான் பட்ட கஷ்டம் உனக்குத் தெரியாது. எனக்கு தோழி யாரும் இன்னும் செட்டாகவில்லை. இங்கே சித்திரை திருவிழா ஆரம்பமாகிவிட்டது. மீனாட்சி—சுந்தரேஸ்வரர் கல்யாணம் சிறப்பாக நடந்தது. பூம்பல்லக்கில் அவர்கள் வீதி உலா வந்தது வழக்கம் போல் கண்கொள்ள காட்சி.....நீயம் நானும் சின்ன வயதில் வீதியில் நின்றுகொண்டு பல்லக்கு வருவதற்காக காத்துக் கொண்டிருந்த நாட்கள் என் ஞாபாகத்தில் வருகிறது.
அந்த நாள் இனி வருமா?
சீதா நானும் மதுரை சித்திரை திருவிழாவை மிஸ் பண்றேன். இங்கே காபலீஸ்வரர் கோவில் பேர் பெற்றது. பிறகு சென்னை கடற்கரை தான் எனக்கு பிடித்த இடம். கடல் அலைகளின் சத்தமும் குளிர் காற்றும் இதம்.
இப்படியாக அவர்கள் பரிமாறிக் கொன்ட தோழமை கடைசியில் பிரிக்க முடியாத பந்தமாக மாறியது. செல்வி பட்டப் படிப்பு முடித்த பிறகு பல மாதங்கள் தொடர்பு கொள்ளாமல் இருந்தாள். பிறகு அவளிடமிருந்து வந்த கடிதம் சீதாவுக்கு கண்ணீரை வரவழைத்தது.
சீதா நான் திசை மாறிப் போயிட்டேன். நாகம்மை என்ற பெண்ணின் அன்பு, நிஜம் என்று எண்ணி அவளிடம் உன்னைக் காண முயற்சித்தேன். அவள்..அவள் மெல்ல என்னை....என்னை போதை மருந்துக்கு அடிமை ஆக்கிவிட்டாள். எனக்கு கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. எப்படியாவது இந்த வலையிலிருந்து நான் வெளி வந்து ஒரு நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். சீதா நான் என்னையே வெறுக்கிறேன்..
சீதா அந்த கடிதம் கண்டு வெதும்பினாள். இன்டர்நெட் வந்துவிட்டது. மெயில் அனுப்பும் வசதி வந்துவிட்டது. சந்தோஷப்பட்டாள். ஆனால் முதல் மெயில் இப்படி இடி சேதியை தாங்கி தானா வரவேண்டும்? சீதா செல்விக்கு நிறைய அறிவுரை கூறி மெயில் அடித்தாள். செல்வியும் இப்பொழுது அந்த பழக்கத்தை விட்டு விட்டதாக பதில் போட்டாள்.
என் கணவர் ரொம்ப நல்லவர் சீதா. நீ தான் கல்யாணத்துக்கு வராமல் டிமிக்கி கொடுத்திட்டே. உனக்கும் கல்யாணம் ஆகிவிட்டதுன்னு நீ சொன்னதும் மகிழ்ச்சியாக இருந்தது. உன் கணவரும் நீயும் உள்ள புகைப்படம் அனுப்பு.
இருவரும் அவர் அவர்கள் திருமண வைபோவப் படங்களை அனுப்பி மகிழ்ந்தார்கள். “உன் ஹப்பி சூப்பர்.” என்று எழுதினாள் செல்வி. சீதாவுக்கு திருமண வாழ்க்கை ஒரு வருஷம் தான் நீடித்தது. அவளுக்கு குழந்தை பெறுவதில் மருத்துவ ரீதியாக பிரச்சனை இருக்கிறது என்று கண்டறிந்ததும் அவளை டிவோர்ஸ் பண்ணிவிட்டான் அவள் கணவன்.
இங்கு செல்வி நாகுவின் தூண்டுதலால் மீண்டும் போதை பழக்கத்தில் ஈடுபட அவளுக்கும் சீதாவுக்கும் தொடர்பு விட்டுப் போனது. இருவரும் அவரவர் சோகத்தில் முழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
சீதாவுக்கு அஞ்சனா கிடைத்தது ஒரு அதிசயம். சென்னையில் கல்லூரி பேராசிரியை வசந்தி ஒரு குழந்தையை வாடகை தாய் மூலம் பெற்றுக் கொண்டாள். அஞ்சனா என்று பேர் வைத்தாள். குழந்தையை வீட்டில் மாமியாரிடம் விட்டு விட்டு அவளும் அவள் கணவரும் பைக்கில் செல்ல அது விபத்துக்குள்ளாகி இருவரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். ஒரு நேர்காணலுக்காக சென்னை வந்திருந்தாள் சீதா. அந்த விபத்தை அவள் பேருந்துக்காக காத்திருந்தபோது கண்டாள். ஆஸ்பத்திரிக்கு அம்புலன்சில் கொண்டு போகும் போது அவளும் சென்றாள். அவள் தான் அம்புலன்சை வரவழைத்தது. சாகும் தருவாயில் இருந்த வசந்தி இவள் கையை பிடித்துக் கொண்டு சொன்னாள்.
“நீங்க யாரோ தெரியலை. நான் வாடகை தாய் மூலம் பெற்ற குழந்தை பேர் அஞ்சனா. அவளை என் கணவரின் வீட்டவருக்குப் பிடிக்காது. அவளுக்கு இப்ப நாலு வயசாகுது. அவளை விரட்டி விட்டிடுவாங்க...நீங்க அவளை பார்த்துக்கணும். தாயாக இருக்கணும்...எனக்கு வேறு யாருமில்லை...நான் சாகப் போறேன்...என் கணவரும் ஆபத்தான நிலைமையில் இருக்கார்...”
அதற்கு மேல் அவளால் பேசமுடியவில்லை. இதுவே அவள் திக்கித் திணறி வாய் குழறி தான் பேசினாள். சீதாவின் பதிலை கேட்கக் கூட அவள் உயிரோடு இல்லை. அவள் கணவரும் அதே நேரத்தில் இறந்து போனது அதிர்ச்சியாக இருந்தது சீதாவுக்கு.
அவள் அஞ்சனாவை கூட்டிப் போக யாரும் எந்த தடையும் சொல்லவில்லை. இப்படித்தான் அஞ்சனா அவளுக்கு கிடைத்தாள். குழந்தை அஞ்சனா கிடைத்தது பற்றி ஒரு சுருக்கமான இமெயில் அனுப்பினாள் சீதா. அதை பார்க்கக் கூடிய நிலையில் செல்வி
இல்லை. சீதா அனுப்பிய பத்து மெயிலுக்கும் செல்வியிடமிருந்து பதில் இல்லை. சென்னையில் நடந்த நேர்காணலில் சீதாவுக்கு வேலை கிடைத்தது. அவள் அஞ்சனாவுடன் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தாள். அவளின் அம்மா அப்பாவும் அவளுடன் சென்னைக்கு வந்தார்கள். அவர்களுக்கு அஞ்சனாவை பிடிக்கவில்லை. இந்த நிலையில் தான் செல்வியிடமிருந்து விரிவான மெயில் வந்தது. செல்வியின் கண் தெரியாத குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றாள் சீதா. அஞ்சனா ராஜஸ்தான் போனாள்.
வாழ்க்கை எப்படியெல்லாம் மாறிப் போகிறது! கணவன் குழந்தை என்று சந்தோஷமாக வாழவேண்டிய வாழ்க்கையை தொலைத்து விட்டு செல்வி மொழி தெரியாத ஊரில் தன்னுடன் படித்த மாணவனின் தயவில் விடுதியில் வாழ்கிறாள். ஷாந்தா ராம் அவளிடம் நிறைய முறை கேட்டுவிட்டான்.
“செல்வி ப்ளீஸ் சொல்லு....உன் கணவரிடம் உன்னை சேர்த்துவிடுகிறேன்.”
அவன் அப்படி கேட்ட போதெல்லாம், அவள் பார்வையை எங்கோ செலுத்தினாள். பதில் சொல்ல விருப்பமில்லை என்று உணர்த்தினாள்.
வாரம் ஒரு முறை அவளை வந்து பார்த்துவிட்டுப் போவான். அவளுக்குப் பிடித்த ஆங்கிலப் புத்தகங்கள் எடுத்து வருவான். வீட்டில் அவன் மனைவி செய்து கொடுக்கும் ராஜஸ்தான் ஸ்பெஷல் ஐட்டங்கள் கொண்டு வந்து கொடுப்பான். அவன் மனதுள் அவள் மேல் விரிவாக ஒரு அன்பு சுரந்தது.
எப்படிப்பட்டப் பெண் இப்படி உருக்குலைந்து போய் நிற்கிறாளே? வானத்து நிலா கலங்கிய குட்டை நீரில் பிரதிபலிப்பது போல் பரிதாபமாக காட்சி அளிக்கிறாள். செயலற்று தூசி படிந்த கவிதை புத்தகம் மாதிரி!
“செல்வி...நீ இப்படி தேங்கிய தண்ணீர் மாதிரி இருக்கக் கூடாது. உனக்கு வரைவதற்கும் வண்ணம் தீட்டவும் பிடிக்குமே...கொண்டு வந்திருக்கேன். நீ கேட்ட கான்வாஸ்.....பெயிண்டிங்...பிருஷ்....”
அதை பார்த்ததும் அவளின் முகம் புதிய ஆர்வத்தை காட்டியது. குபுக்கென்று ஒரு மலர்ச்சி தோன்றி அவளை மனுஷியாக்கியது. வாங்கிக் கொண்டாள்.
இப்பொழுதெல்லாம் செல்வி அதிக நேரம் வரைவதிலேயே செலவிடுகிறாள். அதிகம் பேசாத அவள், ஓவியத்தின் மூலம் பேசினாள். முதலில் அவள் வரைந்தது ஒரு வயது நிரம்பிய குழந்தையின் உருவம். அது அவளின் குழந்தை ஆஷாவின் உருவம் தான். சீதா அவளுக்கு ஆஷாவின் முதல் பிறந்த நாளின் போது எடுத்த புகைப்படத்தை அனுப்பியிருந்தாள்.
குழந்தை இல்லாமல் தொட்டிலை ஆட்டுவது போல் செல்வி தன் குழந்தையின் உருவத்தை மனதில் தாலாட்டி மகிழ்ந்தாள். பார்வை இல்லாத குழந்தைக்கு பார்வை கொடுத்து பூரித்தாள். அவள் செய்த பாவத்தால் நிஜக் குழந்தை பார்வை இழந்தது. அவள் வரையும் ஆற்றல் செய்த புண்ணியத்தால் அவள் ஓவியக் குழந்தை பார்வை பெற்றது. அழுதுகொண்டே சிரித்தாள்.
சீதா ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ஆஷாவின் புகைப்படத்தை அனுப்புவாள். உடனே அதை ஓவியமாக வரைந்துவிடுவாள் செல்வி.
“யார் இந்தக் குழந்தை செல்வி? இவ்வளவு அழகா இருக்கே?” ஷாந்தா ராம் ஒரு முறை கேட்ட போது செல்வி உடைந்து போய் அடிபட்ட பறவையாகப் பார்த்தாள். அன்று அவள் வாய் திறந்து அவனிடம் சொன்னாள்.
“சேற்றில் செந்தாமரை முளைத்தது போல் இது எனக்குப் பிறந்த குழந்தை ஆஷா...என்னை அம்மாவாக்கிவிட்டாள். நான் அவளை குருடியாக்கிவிட்டேன். இது தான் நான் அவளுக்கு கொடுத்திருக்கும் பரிசு. ஓவியத்திலாவது என் குழந்தை பார்க்கட்டுமே....ஷாந்தா ராம். எனக்கு மன்னிப்பே கிடையாது. என்னைப் போல் பொறுப்பற்ற பெண்ணுக்கு ஏன் இப்படிப் பட்ட உயர்த்த பரிசை கடவுள் கொடுத்திருக்கார்? எனக்கு என்ன தகுதி இருக்கு?...”
“செல்வி உங்க ஆதாங்கம் புரியுது. என்ன செய்வது?.....சில சமயம் அமாவாசை இருட்டு, பாதையை மறைக்குது. பெற்ற பிள்ளையை பிரிந்து அதன் குழந்தை பருவத்தை குருடாக்காதீங்க. உங்க மகள் உங்களுக்காக ஏங்கும் படி பண்ணிடாதீங்க. சொல்லுங் உங்க விலாசத்தை...”
அவள் உடனே தன் கூட்டுக்குள் போய்விட்டாள். அது பற்றி பேச அவளுக்கு விருப்பமில்லை என்று புரிந்து ஷாந்தா ராம் வருத்தமுடன் சென்றான். அன்று இரவு செல்வி தூங்காமல் கொட்ட கொட்ட முழித்துக் கொண்டிருந்தாள்.
இந்த மனிதனுக்கு என்ன வந்து? இப்படி பராமரிக்கக் வேண்டும் என்று என்ன விதி? எல்லோரையும் கஷ்டப்படுத்றோமே என்று அவளுக்கு சங்கடமாக இருந்தது. எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவள் சரவணனிடம் போவது? குழந்தை எந்த குறையும் இல்லாமல் இருந்திருந்தால் ஒரு வேளை அவளுக்கு தைரியம் வந்திருக்கும். அவளால் கண் பார்வை இழந்த குழந்தை... சரவணன் அவளை மன்னிக்கவே மாட்டான். அவளை உள்ளே அனுமதிக்கவும் மாட்டான். வண்ண ஓவியங்கள் தீட்டுவதில் தன் நிறமிழந்த வாழ்க்கையையில் அவள் வண்ணங்கள் தேடுகிறாள். ஒரு நாள் அவள் வரைந்த ஓவியம் கண்டு ஷாந்தா ராம் பிரமித்துப் போனான். அந்த ஓவியம் பேசிற்று. செல்வி பேசாததை எல்லாம் அந்த ஓவியம் பேசியது.
ஒரு அழகான வனம். மரங்கள் அடர்ந்த பசுமை. இடையே ஒரு நீண்ட செம்மண் பாதை. ஒரு பெண் போய்க்கொண்டிருந்தாள். அவள் முதுகுப் புறம் தான் தெரிகிறது. நீண்ட ஜடை...பின்னும் ஒயில் நடை...கொலுசோடிய பாத அழகினை விஞ்சும் மோதிரம் அணிந்த நீள்விரல்களின் அழகு. அந்த அழகிய
ஓவியத்தின் கீழ் அவள் எழுதியிருந்தாள்----
“நம்பிக்கை என்னும் பாதை தேடி போறவளே..
சூரிய கதிர்கள் உன்னை அழைகிறது போய்கொண்டே இரு...”
ஷாந்தா ராம் புரிந்து கொள்ளும் வகையில் அது ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அவன் முதல் முதலாக. சிறு வெளிச்சம் அவள் உள் மனதில் ஊடாடுவதை அவள் வதனத்தில் கண்டான்.
மறு நாள் அவளுக்கு நல்ல செய்தி சொல்லும் பாக்கியம் அவனுக்கு கிடைக்கிறது. அது அவளுக்கு ஆனந்தம் தரும் என்று நம்பினான்.
மழை விழும்.
டி