முற்றத்தில் விழுந்த மழைத் துளிகள்.
அத்தியாயம்---12
மழலை இன்பம் என்பது எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை. கிடைத்தாலும் செல்வியை போல் அதை தொலைத்து விட்டு நிற்பவர்கள் அபூர்வம். பிறந்த குழந்தை கடவுளுக்குச் சமம். செல்வி அந்தக் குழந்தையை பார்த்துக் கொண்டே இருந்தாள். ரோஸ் நிறத்தில் தலை கொள்ளா முடியுடன் அந்த குட்டிக் குழந்தை அதன் தேன் இதழ்கள் விரித்து சிரித்தது. பிறகு முகம் சுணங்கி அழுதது. அவள் குழந்தையும் இப்படித்தான் இருந்திருக்குமோ? ஷாந்தா ராமுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அக்குழந்தையைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் செல்வி. அவன் நல்ல செய்தி சொன்னான்.
“எனக்கு முதலில் பிறந்தது பையன். இரண்டாவது பெண்ணாக இருக்கவேண்டுமே என்று ஆசைப்பட்டேன்....கடவுள் அருள்...”
ஷாந்தா ராமின் மனைவி காயத்ரி சொன்னாள். தாய்மையின் பூரிப்பு, பெருமிதம் அவள் முகத்தில் ஒளிர்ந்தது.
“ரொம்ப சந்தோஷம் காயத்ரி. கங்கிராட்ஸ்....” என்றாள் செல்வி.
குழந்தையை தூக்கிப் பார்த்தாள். பூ பொட்டலம் மாதிரி பாப்பா வாசனையுடன் சொர்கத்தின் சிதறல் போல் இருந்தது. என்ன ஒரு அழகு!
அவள் நெஞ்சில் துன்ப நீர் வழிந்தது. தன் குழந்தையை கொஞ்சக் கூட முடியாமல் ஆக்கிவிட்டாளே நாகு!
“என்ன பெயர் வைக்கலாம் சொல்லு செல்வி.” என்றான் ஷாந்தா ராம். ஆர்வமுடன் அவன் செல்வி முகத்தைப் பார்த்தான்.
“குழந்தைக்கு அழகா தலை நிறைய முடி இருக்கிறது அல்கா என்ற பெயர் பொருத்தமா இருக்கும். அல்கா என்றால் முடி அழகி என்று அர்த்தம். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்திருக்கா. கிருத்திகான்னு கூட பெயர் வைக்கலாம்..” என்று சொன்னாள்
செல்வி.
இருவருக்கும் கிருத்திகா பெயர் பிடித்தது. குழந்தையின் காதில் கிருத்திகா என்று மூன்று முறை சொன்னாள் செல்வி. குழந்தைக்கு போட்டுக் கொள்ள சட்டைகளும். ஸ்வெட்டர், குல்லா, வாங்கி வந்திருந்தாள் செல்வி.
“நான் செல்வியை வழியனுப்பிவிட்டு வரேன்.” என்று சொல்லி செல்வியுடன் நடந்தான் ஷாந்தா ராம்.
செல்வி மெளனமாக வந்தாள். ஆஸ்பத்திரி வளாகத்தை கடந்து தெருவுக்கு வந்தனர். ஒரு டாக்சி பிடித்தான் ஷாந்தா ராம்.
“செல்வி..உனக்கு உன் குழந்தை ஞாபகம் வந்திருக்கும். ஏன் உன்னை இப்படி வருத்திக்கிறே செல்வி? என்னதான் உன் தோழி சீதா மிக நன்றாகப் பார்த்துக் கொண்டாலும் நீ பார்ப்பது போல் ஆகுமா?” என்றான் .
“காய்ந்து போன இலைகள் காலடியில் மிதிபடத்தான் லாயக்கு. பிறகு எரிக்கப்படும், அல்லது குப்பைக்குப் போகும். மீண்டும் மரத்தில் பசேலென்று போய் ஒட்டிக் கொள்ள முடியுமா? நான் போதை மருந்தின் பிடியில் இருந்தேன் என்பது என் சொந்தங்களுக்குத் தெரியும். குழந்தையை விட்டு விட்டு ஓடிவிட்டேன் என்று தெரியும். நான் இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தேன்? எங்கே இருந்தேன்? என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும்படியாவா இருக்கு? ஷாந்தா ராம்...கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம் எனக்கு சீதா கிடைத்தாள். அவள் தான் சொன்னாள் சரவணன் இன்னும் என்னை திட்டிக் கொண்டும் வெறுத்துக் கொண்டும் தான் இருக்கார் என்று. அவள் மகளை நான் பார்த்துக் கொள்வதும் என் மகளை அவள் பார்த்துக் கொள்வதும் தான் ஒரே வழி என்பது இறைவனின் தீர்ப்பு...விடுங்க. டாக்சி வந்தாச்சு நான் கிளம்பறேன்.”
ஷாந்தா ராம் அமைதியாக கையசைத்தான். அவள் போனதும் அவன் கண்களில் ஒரு சொட்டு நீர் உருண்டோடியது. நாகு என்ற நாகப் பாம்பை அவன் தேடிக்கொண்டுதான் இருக்கிறான். அவளை சுற்றி ஒரு நெட்வொர்க்கே இருக்கு. கூடிய சீக்கிரம் அவள் போலீஸ் பிடியில் அகப்படாமலா போகப் போகிறாள்? இன்று தான் செல்வி மனம் திறந்து பேசியிருக்கிறாள். விரைவில் தன் கூட்டிலிருந்து வெளி வருவாள். லேசான காயமா அவளுடையது?.....பலமான இடி. வேறு பெண்ணாக இருந்தால் இந்நேரம் உயிரை மாய்த்திருப்பாள். விலாசம் சொல்ல மறுக்கிறாளே!
அன்று இரவு செல்வி தூங்கவே இல்லை. விடுதி தலைவி பகவதி அவளிடம் வந்து ஆறுதலாகப் பேசினாள். அவளின் சித்திரங்கள் நல்ல விலைக்கு போனது என்று சொல்லி பத்தாயிரம் ரூபாய் கொண்டு வந்து கொடுத்தாள்.
“எனக்கு எதுக்கு அம்மா இவ்வளவு பணம்? விடுதிப் பெண்களுக்கே செலவு செய்யுங்கள்.” என்று வாங்க மறுத்தாள் செல்வி.
“வைச்சுக்கோ செல்வி...இந்த ராஜஸ்தானில் தனியா இருக்கே. உனக்கு தேவைப்படும். சேர்த்து வை. என்றாவது உன் குழந்தையை பார்க்கவேண்டும் என்றால் வெறும் கையோடவா போகப் போறே? இங்கு நிறைய பேர் நன்கொடை கொடுக்கிறார்கள். நாங்க சமாளிச்சுப்போம்....வச்சுக்கோ. அப்புறம் நாளை ஜெய்பூர் சுற்றிப் பார்க்க பெண்களை அழைத்துக் கொண்டு போகப் போகிறோம். நீயும் வருகிறாயா?” செல்வி மறுக்க வாயெடுத்தாள் .
“பரவாயில்லை வா. அஞ்சனாவையும் கூட்டிப் போகலாம் நாளைக்கு அவளுக்கு பள்ளி விடுமுறை தானே?. பாவம் அவள் எங்கும் போகவில்லை.”
உடனே ஒப்புக் கொண்டாள் செல்வி. வந்த இந்த ஆறு மாதத்தில் அவள் அஞ்சனாவை எங்கும் அழைத்துக் கொண்டு போகவில்லை. சீதா என் கண் தெரியாத குழந்தையை கண்ணும் கருத்துமாக கவனிக்கும் போது அவள் குழந்தையை நான் கவணிக்க வேண்டாமா.?”
மறுநாள் அஞ்சனா வந்தாள். அவள் முகத்தில் செல்வியைப் பார்த்ததும் உற்சாகம். “அம்மா நீங்களும் வறீங்க..ஜாலி..” என்று குதித்தாள். ஆறு வயதை எட்டிவிட்டாள். இன்னும் கொஞ்சம் உயரமாகிவிட்டாள். ஆரோக்கியமாக அழகாக இருந்தாள். நல்ல மகிழ்ச்சியான பெண். பக்குவம் கொன்ட பெண்.
படிப்பிலும் கெட்டி. சீதா எனக்காக எவ்வளவு பெரிய தியாகம் செய்திருக்கிறாள்! ஒரு கெட்ட மனமுடைய தோழியை பெற்ற பாவம் ஒரு நல்ல தோழியை பெற்ற புண்ணியத்தில் கரைந்து போயிற்று.
தொடர்ந்து சீதாவிடமிருந்து ஒவ்வொரு வருடமும் ஆஷாவின் பிறந்த நாளன்று எடுக்கப்பட்ட புகைப்படம் வரும். கூடவே ஆஷாவுக்கு தான் சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் பற்றியும் அவள் அதை ஆர்வமாகப் படிப்பது பற்றியும் சொல்வாள் சீதா. கண் தெரியாதவர்கள் ப்ரையிலி முறையில் படிக்கலாம் என்பதால் அந்த முறையை கற்றுக் கொடுத்து அவளுக்கு படிக்க சொல்லிக் கொடுத்ததை எழுதியிருந்தாள் சீதா. அதை படித்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் செல்வி. ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு தன் அம்மா தனக்காக பிராயச்சித்தம் செய்கிறாள் என்று ஆஷாவுக்குத் தெரியுமா என்ன? அவளுக்கு சீத்தாம்மா தான் உலகம். பெற்ற அம்மா அவளைப் பொறுத்தவரை ஒரு ராட்சசி. அப்படித்தான் சரவணன் அவளுக்கு அறிமுகப்படுத்தியிருந்தான்.
வருடங்கள் உருண்டோடியது. சீதாவுக்கு நோய். அவள் அதனுடன் போராடுகிறாள். செல்வி பல வருடங்களுக்குப் பின் சென்னை வருகிறாள். சீதாவை ராஜஸ்தான் அழைத்துக் கொண்டு போய் பார்த்துக் கொள்ள முடிவு பண்ணினாள். சாந்தா ராமும் அவ்வாறே செய்யுமாறு கூறியிருந்தான்.
“செல்வி....நான் இல்லாமல் ஆஷா மிகவும் நொறுங்கிப் போவாள். நீ இப்பவாவது உன் வீட்டோடு போய் விடு. உன் கணவர் காலில் விழுந்து மன்னிப்பு கோரி மகளுடன் இரு. எவ்வளவு நாள் இப்படி இருப்பாய்?” என்று சொன்னாள் சீதா. செல்விக்கு கோபம் வந்தது.
“என்ன பேசறே நீ? உனக்கு உடம்பு முடியாம் இருக்கும்போது நான் உன்னை விட்டுவிட்டு ஓடிப் போக முடியுமா? இங்கே இருந்தால் அவர்கள் உன்னை தேடிக் கொண்டு வந்துவிடுவார்கள். நாம் ராஜஸ்தான் போய்விடுவோம். உன்னை நான் கவனித்துக் கொள்கிறேன். நீ நல்லான பிறகு, நான் என் கணவரிடம் பாவ மன்னிப்பு கோரி செல்கிறேன். ஆஷாவை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீ ஆஷாவை இவ்வளவு நாள் பார்த்துக் கொன்ட தியாகத்துக்கு நான் இப்ப பிராயச்சித்தம் தேடனும். என் பொருட்டு நீ எவ்வளவு பெரிய தியாகம் பண்ணியிருக்கே சீதா. நான் உன்னை தனியே விட மாட்டேன்... கிளம்பு..”
அஞ்சனா யாரும் எதிர்பாராத வண்ணம் சொன்னாள்.
“அம்மா..நீ செல்வி அம்மாவோடு போ. நான் ஆஷாவுக்கு துணையா நீ வரும் வரை இருக்கேன். எனக்கு இரண்டு மாதம் கோடை விடுமுறை இருக்கே...”
“அதெல்லாம் வேண்டாம் அஞ்சனா. அவளை பார்த்துக் கொள்வது அத்தனை சுலபமில்லை. நீ சின்னப் பெண். உனக்கே துணை வேணும். இதில் நீ வேறு அவளை பார்க்கிறேன்னு சொல்றது சரியில்லை. வேண்டாம்.”
“செல்வி...அஞ்சனா போய் இருக்கட்டும். அவளுக்கு பதிமூன்று வயதாகி விட்டதே. குறைந்த பட்சம் அவள் ஆஷாவுக்கு மனதால் ஒரு ஆறுதல் தருவாள். தடுக்காதே செல்வி. நான் உன் கூட வருகிறேன். என்னை பார்த்துக் கொண்டு, வைத்தியம் செய்ய இங்கு யாருமில்லை. என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அண்ணன்தான் உசத்தி. அஞ்சனாவை அவர்கள் விரட்டிவிடுவார்கள். அல்லது துன்புறுத்துவார்கள். உன் மாமனார் எப்படியும் நான் ஏன் வரவில்லை என்று பார்க்க வருவார். அவரிடம் அஞ்சனா எப்படியாவது ஒட்டிக் கொண்டு போய்விடட்டும். அது தான் நல்ல முடிவு.”
பிடிவாதமாக சீதா அஞ்சனாவை விட்டு விட்டு செல்ல வேண்டும் என்று சொல்ல வேறுவழி இல்லாமல் செல்வியும் சீதாவும் கிளம்பினர். இருவருக்கும் மனசேயில்லை. வேறு வழி இல்லை.
“அஞ்சனா...ஒரு வேளை ஆஷாவின் தாத்தா வரவில்லை என்றால் அல்லது உன்னை அழைத்துக் கொண்டு போகவில்லை என்றால் நீ போன் பண்ணு ஷாந்தா ராம் அங்கிள் வந்து உன்னைக் கூட்டிக் கொண்டு வந்துவிடுவார். சரியா.?”
அஞ்சனா உடனே ஒப்புக் கொண்டாள். அவளுக்கு சென்னையில் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. தமிழ் பேசுகிறாள், ஆனால் தமிழ் படிக்கத் தெரியாது. அதெல்லாம் கற்றுக் கொள்ளலாம். மேலும் ஆஷாவை பார்க்கவேண்டும் என்று அவளுக்கு கொள்ளை ஆசையாக இருந்தது.
சம்பத் அஞ்சனாவை அழைத்துக் கொண்டு போய்விட்டார் என்று விவரம் தெரிந்த பின் தான் செல்வியும் சீதாவும் நிம்மதி அடைந்தார்கள்.
சீதாவை மிகப் பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்து எல்லா டெஸ்டும் பண்ணிப் பார்த்தார்கள். அவளுக்கு இதயம் விரிவடைந்திருப்பதாக டாக்டர்கள் அறிவித்தார்கள். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்கு அஞ்சு லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் டாக்டர் கூறினார். அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது? எவ்வளவு தான் ஷாந்தா ராமுக்கு பாரமாக இருப்பது? செல்வி ஒரு முடிவுக்கு வந்தாள்.
செல்வியின் நகைகள் அவள் அம்மா வீட்டில் இருந்தது. அவள் தன் அம்மாவின் வீட்டுக்குப் போனாள். அவளைப் பார்த்ததும் அவள் அம்மா ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்.
“எங்கேடி போனே இத்தனை வருஷமா? உன்னாலே பேத்திக்கு கண் பார்வை போச்சு. செய்றதையும் செஞ்சிட்டு தலை மறைவா போயிட்டியா? இப்ப எதுக்கு வந்தே? எங்களை குருடாக்கவா?”
செல்வி மெளனமாக இருந்தாள்.
அம்மாவின் கேள்விகள் எதற்கும் அவள் பதில் சொல்லவில்லை.
“அடிப் பாவி நீயெல்லாம் ஒரு மகளா? பதில் சொல்லக் கூட உன்னாலே முடியலை இல்லே? உன் அப்பாவும் அண்ணனும் அண்ணியும் ஒரு கல்யாணத்துக்குப் போயிருக்காங்க. உனக்கு சௌகர்யமா போச்சு இல்லே? உன்னாலே நான் பட்ட அவமானம் போதும். தொலஞ்சு போனவ எதுக்கு வந்தே? இங்கிருந்து போனியே...உருப்படியா இருந்தியா?
பேப்பரிலே உன் படம் வந்தது. ஏதோ ஒரு விபச்சார விடுதியிலே சேர்ந்தியாமே? போயிடு...மானம் கெட்டவளே...”
“விபச்சார விடுதியிலே சேர்றதுக்கு அது என்ன பள்ளிக்கூடமா.? என்னை அந்த நாகு கடத்திக்கிட்டு போய் அங்கே வித்திட்டா.”
“கேவலப்பட்டுப் போன நீ இப்ப இங்கே வந்து ஒட்டிக்கலாம்னு வந்தியா.?”
“தள்ளு...உன் கூட பேச எனக்கு நேரமில்லை. என் நகைகளை எடுத்திட்டுப் போக வந்தேன்....”
“உனக்கு எதுக்குடி நகையும் நட்டும்? சீவி சிங்காரிச்சிட்டு எவனை மயக்கப் போறே? அதெல்லாம் தர முடியாது. போயிடு.”
“மைசூர் மகாராஜாவை மயக்கப் போறேன். நீ என்ன கொடுக்கறது? நான் எடுத்திட்டுத் தான் போகப் போறேன். சாவியை கொடு.”
“முடியாது...” காவேரி மகளை பிடித்து தள்ளினாள்.
“இப்ப நீ தரலை...அம்மான்னு கூட பார்க்கமாட்டேன். உன்னை அடிக்கவும் தயங்க மாட்டேன்.” என்று சீறினாள் செல்வி.
“அடிப் பாவி...ச்சே. உன்னை பெத்ததுக்காக நான் வருத்தப்படறேன்.”
பீரோ சாவியை எடுத்து அவள் முன் வீசினாள். தாமதிக்க நேரமில்லை. அண்ணனோ அண்ணியோ வந்து விட்டால் ஆபத்து. அப்பாவையாவது சமாளித்துவிடலாம். அண்ணனை சமாளிப்பது கஷ்டம். காவேரி மூக்கை உறுஞ்சி உறுஞ்சி அழது கொண்டிருந்தாள், தன் விதி இப்படியாகிவிட்டதே என்று...இதெல்லாம் பார்க்கணும்னு என் தலையிலே எழுதி வச்சிருக்கு...ரௌடி மகளை பெத்ததுக்கு நான் என்ன பாவம் செய்தேன்?......என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருந்தாள்.
பீரோவை திறந்து நகைகளை, எடுத்து கொண்டு ஒரு மரப் பெட்டியில் வைத்துக் கொண்டாள். பீரோவை பூட்டிவிட்டு சாவியை அம்மாவிடம் கொடுத்து சொன்னாள்.
“தேங்க்ஸ் அம்மா. இது என் சினேகிதி உயிரை காப்பாத்தப் போகுது. உன் மகள் ரௌடி இல்லை. நான் கெட்டுப் போகவும் இல்லை. வழி தவறிய ஆடு.....சரி இனிமே வரமாட்டேன். நீ உன் சமுதாயத்தின் முன் கௌரவத்தோடு இரு.”
விருட்டென்று காத்திருந்த ஆட்டோவில் ஏறிப் போவிட்டாள் செல்வி. காவேரி திகைத்து நின்றாள்.
நகையை விற்று பணமாக்கிக் கொண்டாள். ராஜஸ்தான் கிளம்பினாள். அஞ்சனா சம்பத் கூட சென்றுவிட்டாள். கையில் ஆறு லட்சம் இருந்தது. எப்படியும் சீதாவை காப்பாத்திவிடலாம் என்ற நம்பிக்கை செல்விக்கு இருந்தது. ஷாந்தா ராம் அவர்களை வரவேற்றான்.
ஆஸ்பத்திரியில் இருந்த சீதாவுக்கு பணம் புரட்டிவிட்டதை சொன்னாள். ஷாந்தா ராமை போன்ற ஒரு நண்பனை பெற, என்ன தவம் செய்திருக்கேனோ என்று நினைத்துக் கொண்டாள் செல்வி. ‘கார்திகைக்கு பின் மழையில்லை. கர்ணனுக்குப் பின் கொடையில்லை.’ என்று சொல்வார்கள். இந்த யுகத்திலும் ஷாந்தா ராம் போன்ற வள்ளல்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களால் தான் இந்த பூமி இன்னும் மழை பெய்யும் பாக்கியத்தை பெற்றிருக்கிறது. உலகம் வாழ நல்ல உள்ளங்கள் தானே தேவை!
“செல்வி...டாக்டர்கள் நம்பிக்கையாகச் சொல்கிறார்கள். சீதாவுக்கு அறுவை சிகிச்சைக்குப் பின் குனமாகிவிடும்னு சொல்றாங்க.”
மனம் ஓரளவு நிம்மதி அடைந்தது. அன்று இரவு சீதா தலைவலி தாங்க முடியவில்லை என்றாள். வலியில் துடித்தாள். அவசர பிரிவு சிக்கிச்சைக்கு எடுத்துச் சென்றார்கள். செல்வி கவலையுடன் நின்றாள். நல்ல படியாக சீதா பிழைத்து வரவேண்டுமே!
மழை விழும் .