முற்றத்தில் விழுந்த மழைத்துளிகள்
அத்தியாயம்—14
ஆப்ரேஷன் நல்ல படியாக முடிந்தது. சீதா குணமாகிக் கொண்டிருந்தாள். செல்வியும் சாந்தா ராமும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் இருந்துவிட்டு வீட்டுக்கு கூட்டிப் போகலாம் என்று டாக்டர் சொல்லிவட்டார். தோழிகள் இருவரும் அன்றிரவு முதல் முதலாக சிரித்துப் பேசினார்கள். செல்வி ஆரஞ் ஜூஸ் பிழித்து கொடுத்தாள். செல்வியின் அன்பில் திளைத்தால் சீதா. பருகி முடித்தவள்,
“செல்வி...இனி என்ன பிளான்.? நாம் இருவரும் சென்னை போயிடலாம். உன் மகளைப் பார்க்க நீ உன் வீட்டுக்குப் போய்விடு. நான் அஞ்சனாவுடன் வீடு பார்த்து இருக்கப் போகிறேன். ரொம்ப வருஷமா நான் அவளை பிரிந்து இருந்துவிட்டேன். என்ன சொல்றே செல்வி.?”
“என்னால் தான் உனக்கு இந்த கஷ்டம். மன்னிச்சுடு சீதா. நாம் சென்னை போயிடலாம். நானும் உன் கூடவே தான் இருக்கப் போகிறேன். ஆஷாவை பார்த்துக்க கனிகா இருக்கா. அவ என்னை விட நல்ல பார்த்துப்பா. ஆஷாவுக்கு கண் தானம் யாராவது செய்தால் தான் பார்வை கிடைக்கும் என்று டாக்டர் அருணகிரியும் சொல்லிவிட்டார். அவ்வளவுதான். நாம் காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. இந்த நாட்டில் கண்தானம் செய்கிறவர்கள் ரொம்ப குறைவு. பலர் வீட்டில் கண்ணை தோன்டி எடுத்துவிடுவார்கள் பார்க்க விகாரமா இருக்கும்னு தானம் செய்ய முன் வர மாட்டேங்கறாங்க. அப்படியெல்லாம் இல்லை. கண்ணின் கருவிழிகளை மட்டும் தான் எடுப்பார்கள். அப்படியே தூங்குவது போல் தான் இருக்கும். இதை நம்ப மறுக்கிறார்கள்.”
“உண்மை தான்...சில பேரின் பிடிவாதத்தை மாற்ற முடியலை. நான் கண் தானம் செய்வது பற்றி பிரசாரம் செய்யப் போனேன். ரொம்ப தயங்கறாங்க.”
“சரி...எப்படியும் ஆஷாவுக்கு கண்தானம் முறையில் கண் பார்வை கிடைத்துவிடும். மேட்டர் ஆப் டைம் தான். காத்திருப்போம். ஷாந்தா ராம் எவ்வளவு நல்ல மனிதர் இல்லையா.? நீ அவரை கல்யாணம் பண்ணியிருந்தால் எவ்வளவு அதிர்ஷடசாலியா இருந்திருப்பே. எல்லாம் அந்த நாகு கெடுத்துவிட்டாள்.” என்று ஆதாங்கத்துடன் சொன்னாள் சீதா.
“என் கணவருக்கு என்ன குறை.? பத்தரை மாற்று தங்கம். நான்தான் அவருக்கு பொருத்தமில்லாதவ. நான் சாந்தா ராமை காதலிக்கவே இல்லை. அது பற்றி எனக்கு எந்த வருத்தமுமில்லை.”
“செல்வி..நீ கண்டிப்பா உன் கனவரை பார்த்து பேசி நீங்க இருவரும் ஒன்று சேரணும். அது தான் என் ஆசை. நீ சரவணனை போய் பார்ப்பேன்னு எனக்கு சத்தியம் செய்து கொடு.” என்று பிடிவாதம் பிடித்தாள் சீதா. தோழியின் ஆசைக்காக சொன்னாள் செல்வி “சத்தியம்...போய் பார்ப்பேன்..”
வீட்டுக்கு வந்துவிட்டாள் சீதா. அவள் முகத்தில் பழைய ஆரோக்கியம் வந்திருந்தது. இருவரும் ஜெய்பூர் வீதிகளில் சென்று ஷாப்பிங் பண்ணினார்கள். அங்கு சிறப்பான ஷாப்பிங் இடமாக பாப்பு பஸார் சொல்லப்படுகிறது. அங்கு போனார்கள். அஷாவுக்கும் அஞ்சனாவுக்கும் செட் செட்டாக வளையல்கள், ஆரங்கள் வாங்கினார்கள். இருவருக்கும் வேலைபாடு நிறைந்த கண்ணாடி பதித்த எம்பிராய்டரி செய்யப்பட்ட பைகள் வாங்கினார்கள். விதவிதமான காதணிகள் கொட்டிக் கிடந்தது.
“இந்த நீலக் கலர் தொங்கட்டான் நல்லாயிருகில்லே.?”
“ஆமா செல்வி...பிள்ளைகளுக்கு வாங்கலாம்.”
இப்படியாக நிறைய சேர்ந்துவிட்டது. துணி வேட்டை ஆரம்பமானது. லேஹெங்கா. சல்வார், தாவணி என்றெல்லாம் வாங்கிக் கொண்டார்கள். பிறகு செல்வியும் சீதாவும் ஆளுக்கொரு புடவை வாங்கிக் கொண்டார்கள். அவர்களின் பர்சேஸ் முடிந்தவுடன் சாந்த ராம் வந்து பிக்—அப் பண்ணிக்
கொண்டான்.
“பிள்ளைகளுக்கு வாங்கி குவிச்சிட்டீங்க போலிருக்கு.?” என்று சிரித்தான்.
அவனும் ஆஷாவுக்கு ஒரு வெள்ளி குத்துவிளக்கும் அஞ்சனாவுக்கு வெள்ளித் தட்டும் வாங்கிக் கொடுத்தான். அவர்கள் எவ்வளவோ மறுத்தும் கேளாமல் வாங்கிக் கொடுத்தான். பிறகு அவர்களை ‘சுவர்ண மஹால்’ ரெஸ்டாரன்டுக்கு கூட்டிப் போனான். சைவம் தான் என்று நிச்சயித்துக் கொன்ட பின்பே இருவரும் வர சம்மதித்தார்கள். டால் பக்கோடி, தக்காளி சூப் சாப்பிட்ட பின் மெயின் மெனுவுக்கு ஆடர் கொடுத்தான் ஷாந்தா ராம். ஜெய்பூரின் ருசியான டால் பட்டி சுர்மா வந்தது. ‘கம்மா காணி’ என்று அந்த வெய்டர் சொன்ன போது திரு திரு என்று விழித்தார்கள் செல்வியும் சீதாவும். அப்படின்னா வெல்கம் அப்படின்னு ராஜ்ஸ்தானியில் அர்த்தம் என்று விளக்கினான் ஷாந்தா ராம். இங்குள்ள மக்கள் மராட்டியும் ஹிந்தியும் கூட பேசுவார்கள் என்றான். அடுத்து வந்த ஐட்டம் கஜக். இது எள்ளினால் செய்த இனிப்பு. பார்க்க பிஸ்கட் மாதிரியே இருந்தது. ஆனால் வேறு ருசி. இது தான் இங்கு பிரசித்திப் பெற்ற ஒரு பலகாரம். கொஞ்சம் சாதமும் கட்டி கி சப்ஜியும் வந்ததும் அதை நன்கு ரசித்து சாப்பிட்டனர்.
“பியாஸ் கி கச்சோரி இங்கு நல்லாயிருக்கும் ஆர்டர் பண்ணவா.?” என்றான் ஷாந்தா ராம். அய்யோ வேண்டாம் வயிறு நிரம்பிடுச்சு என்று மறுத்தனர். திரும்ப அவர்களை ஆஸ்ரமத்தில் கொண்டு வந்து விட்டான். அவகளிடம் ஞாபகப்படுதினான்.
“நாளை எங்க வீட்டில் விருந்து. அதை முடித்துக் கொண்டு நீங்க இரவு ட்ரைன் பிடித்து சென்னை போகலாம்.” என்றான்.
மறுநாள் விருந்து பிரமாதமாக இருந்தது. ஷாந்தா ராமின் தங்கையும் அண்ணியும் வந்திருந்தார்கள். எல்லாம் அவர்கள் தயாரித்தது தான். குழந்தையை கொஞ்சிவிட்டு...நல்ல விருந்து உண்டுவிட்டு அனைவரிடமும் பிரியா விடை பெற்று சென்றனர் சீதாவும் செல்வியும். சாயங்காலம் ஸ்டேஷனுக்கு வந்து வழியனுப்பினான் ஷாந்தா ராம்.
“சாந்தா...ரொம்ப நன்றி. உங்களுக்கு எப்படி கைம்மாறு செய்யப் போகிறேன்னு தெரியலை. இந்த உலகத்தின் தீமையிலிருந்து காபாத்தினீங்க. என்னையே எனக்கு புரிய வச்சீங்க. தாங்கயூ...” என்றாள் செல்வி. கண்ணீர் மல்க விடை பெற்றனர்.
“உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. எங்களோட எளிய பரிசாக இதை நீங்க ஏத்துக்கணும்..” என்று சீதா கொடுத்தாள். அவளுக்கு சாந்தா ராம் மேல் மிகுந்த மரியாதை.
“வீட்டுக்குப் போய் பிரிச்சுப் பாருங்க..” என்றாள். ஷாந்தா ராம் ஆசையுடன் வாங்கிக் கொண்டான். அவனுக்கு அப்பொழுது தெரியாது அந்த பரிசு எவ்வளவு விலை மதிப்புள்ளதாக மாறப் போகிறது என்று.
“போயிட்டு வாங்க. எப்ப வேணா எங்க வீட்டுக்கு வரலாம். என் வீட்டின் கதவுகள் உங்களுக்காக எப்பொழுதும் திறந்தே இருக்கும்.”
ட்ரைன் புறப்பட தயாராகியது. இருவரும் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். கையசைத்து விடை கொடுத்த ஷாந்தா ராம் கண்ணில் நீர். மூன்று ஜோடி விழிகளில் அன்பு நீர் கசிந்தது. துடைக்கத் தோன்றாமல் விம்மினர்.
.செல்வி சௌகரியமாக சாய்ந்து உட்கார்ந்தாள். அப்பாடா...வாழ்வின் பயமுறுத்தும் தருணங்கள் முடிவடைந்துவிட்டன. இனி எல்லாம் வசந்தமே. சீதா பிழைத்தது குறித்து அவளுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. சீதாவுக்கும் மனம் நிம்மதி அடைந்திருந்தது. மகள் அஞ்சனாவுடன் வாழப்போகும் வாழ்க்கை நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். ஆஷாவை நன்கு பார்த்துக் கொண்டாள் என்றாலும் அவளுக்கு கடைசியில் களைப்பாகிவிட்டது. அப்பொழுதே உடம்பு முடியாமல் தான் இருந்திருக்கிறாள். ஆனால் அவள் அதை வயது முப்பத்தைந்து ஆகிவிட்டது அதனால் தான் என்று நினைத்தாள். வண்டி செல்ல செல்ல இரு தோழிகளும் பலவித இளமை நினைவுகளைப் பேசிக்கொண்டே வந்தனர். சென்னையில் காலடி வைத்தபோது ஏதோ சொந்த வீட்டுக்கு வந்தது போல் உணர்ந்தனர். ஒரு தோழி மூலம் வீடு பார்த்து வைத்திருந்தனர். நேராக அங்கு சென்றனர். அலுப்பு தீர இரண்டு நாள் தூங்கியே கழித்தனர். பிறகு தான் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்தனர். செல்வி தோழி அருகே உட்கார்ந்து கொண்டாள்.
“சீதா...நீ போய் அஞ்சனாவை என் மாமனார் வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு வந்துவிடு....அவளை இங்கு பள்ளியில் சேர்த்துவிடவேண்டும். கோடை விடுமுறை முடிந்துவிட்டது.”
“அது சரி அழைத்து வந்துவிடுகிறேன். ஆஷாவை இனி யார் பார்த்துக் கொள்வார்கள்.? நீ அங்கு போக வேண்டாமா.? உன் பெண் கூட நீ வாழ வேண்டாமா.? உன் கணவரை பார்த்து நான் பேசவா.? இல்லை உன் மாமனாரைப் பார்த்து பேசவா.? சொல்லு செல்வி.?”
“அதெல்லாம் வேண்டாம் சீதா. என் மகளை என்னை விட நல்ல பார்த்துக்க கனிகா இருக்கா. அஞ்சனாவுக்கு இரண்டு அம்மா. ஒண்ணு நீ. இன்னொன்னு நான்.”
செல்வி மார்கெட் போயிருக்கும் போது சீதா சம்பத் வீட்டுக்குப் போனாள். காலை பத்து மணி இருக்கும். வீட்டில் சரவணன் இல்லை. சம்பத்தும் இல்லை. கனிகா மட்டும் தான் ஆஷாவோடு இருந்தாள். மஞ்சு கல்லூரிக்குப் போயிருந்தாள். கனிகா அன்புடன் வரவேற்றாள். அது சீதா தான் என்று தெரிந்துகொண்டாள். புன்னைகயுடன் அமரச் சொன்னாள்.
“நீங்க சீதா தானே.? உங்களை சந்திச்சதிலே ரொம்ப சந்தோஷம். என்ன கொண்டுவரட்டும்.? ஜூஸ்...காபி...”
“எதுவும் வேண்டாம். அஞ்சனா எங்கே.? அவளை அழைத்துப் போக வந்தேன்.”
“அவள் தன் தோழி மாதுரி வீட்டுக்கு போயிருக்கா. போன் பண்ணி வரச் சொல்றேன். கனிகா போன் செய்ய, சிறிது நேரத்தில் அஞ்சான துள்ளிக் கொண்டு வந்தாள். “அம்மா...” என்று கட்டிக் கொண்டாள். முகத்தில் வியப்பு.
“உன் கூட வந்திடறேன்மா. செல்வி அம்மாவும் வந்திட்டாங்க தானே?.” உற்சாகத்துடன் பேசினாள் அஞ்சனா.
“ஆமா. உன்னை அழைச்சிட்டுப் போகத்தான் வந்தேன். உன் டிரஸ் எல்லாம் எடுத்து வை. கிளம்பலாம்...”
அஞ்சனா குதித்துக் கொண்டு உள்ளே ஓடினாள்.
“சீத்தாக்கா...நீங்க ஆஷாவை ரொம்ப நல்ல பார்த்துக்கிட்டீங்க. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை...”
“நீ எதுக்கு நன்றி சொல்லணும்.? நீ என்ன அவங்க உறவா என்ன.? கனிகா நீ இனிமே ஊருக்குப் போய்விடு. செல்வி வந்துவிடுவாள். அப்புறம் உனக்கு இங்கு என்ன வேலை.? புரியுதா நான் சொல்றது.?”
அங்கு ஆஷா வந்தாள். கண் தெரியவில்லை என்றே சொல்லமுடியாதபடி கம்பீரமாக வந்து சோபாவில் உட்கார்ந்து கொண்டாள்.
“சீதாம்மா...நீங்க போனதும் நான் துடிச்சுப் போயிட்டேன். அப்ப தான் கண் தெரியாத மாதிரி தோனுச்சு. என்னை கண்ணுக்கு கண்ணா பார்த்தீங்க. இனிமே நீங்க அஞ்சனாவை பார்த்துக்கணும். எனக்காக நீங்கள் அஞ்சனாவை பிரிஞ்சு பல வருஷம் இருந்திட்டீங்க. இப்ப எனக்கு கனிகா அம்மா தான் வேணும். வேணும்னா செல்வி அம்மாவும் வந்து இருக்கட்டும்.....கனிகா அம்மா இங்கு தான் இருப்பாங்க...” என்று சொல்லிவிட்டு ஆஷா எழுந்து சீதாவை முத்தமிட்டு தன் அன்பை தெரிவித்துக் கொண்டாள். பின் அவள் அஞ்சனாவுடன் பேசணும் என்று சொல்லி உள்ளே போனாள். சீதா ஆச்சர்யப்பட்டுப் போனாள். எப்படி ஆஷா இவ்வளவு தெளிவாகவும் திடமாகவும் பேசக் கற்றுக் கொண்டாள்.? அவள் இருந்தவரை பயந்தாங்கொள்ளியாக இருந்தாள். ஒரு துரும்பை கூட அசைக்க மாட்டாள். கைப்பிள்ளை மாதிரி நடந்து கொள்வாள். இவ்வளவு கம்பீரமாக எப்படி மாறினாள்? எல்லாம் இந்த கனிகாவின் வளர்ப்பு தானோ? இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய மாற்றம் வந்தது ஆச்சர்யமாக இருந்தது. செல்வியின் இடத்தைப் பிடிக்க அவள் இந்த மாதிரி தன்னை வருத்திக் கொண்டு ஆஷாவை கவனிக்கிறாளோ.? சீதா மனதில் ஓடியதை கணிகாவால் உணரமுடிந்தது.
“அக்கா...ஒன்னும் கவலைப்படாதீங்க. உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகுமா.? செல்வி அக்காவை வரச் சொல்லுங்க. அவங்களையும் சின்ன சாமியையும் ஒண்ணாப் பார்க்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு. நாணல் நதி ஓரம் தான்....ஆஷாவோட அம்மா இங்கு விளக்கேத்தணும்.” கனிகா குரலில் தெரிந்த உண்மை சீதாவுக்கு இதமாக இருந்தது.
“கனிகா..நீ சமயத்திலே வந்து இந்தக் குடும்பத்துக்கு உதவி பண்ணியிருக்கே. ரொம்ப சந்தோசம். விரைவில் செல்வி இங்கு வருவா.”
மதிய சாப்பாடு சாப்பிடாமல் விடமாட்டேன் என்று சொல்லிவிட்டாள் கனிகா.
உண்மையில் கனிகாவின் சமையல் மிக ருசியாக இருந்தது. திருப்தியாக சாப்பிட்டாள். அவள் முகத்தில் ஒரு பூரண பொலிவு இருந்தது. கனிகாவின் கையை பிடித்துக் கொண்டு
“நீ ரொம்ப நல்ல பெண். செல்வியின் இடத்தை நீ பிடிக்க இங்கே வரலைன்னு நம்பறேன். செல்வியை மன்னித்து அவள் கணவன் அவளை ஏத்துக் கொள்ளச் சொல்லவேண்டியது உன் பொறுப்பு.”
“கண்டிப்பா சீதாக்கா. நீங்க என்னை நம்பலாம். நாளையே வாங்க செல்வி அக்காவோடு. நான் சின்ன சாமியிடம் பேசி சமரசம் பண்ணிடறேன்.”
“சத்தியமா?”
“சத்தியமா.? ஒரு போதும் நான் செல்வி அக்காவோட இடத்துக்கு ஆசை பட மாட்டேன்.” கனிகாவின் கண்களில் ஏதோ ஒரு ஆகர்ஷ சக்தி இருந்தது. இங்கே நிஜமும் வெளுச்சமும் தான் தெரியும். எந்த கள்ளத்தனமும் இல்லை. என்று அவள் கண்கள் சொல்லிற்று. ஏதோ ஒரு சக்தி கனிகாவின் கண்களில் அபூர்வமாக மின்னின. சீதா அஞ்சானாவுடன் கிளம்பினாள். ஒரு தூக்கில் பாயாசம் ஊற்றி மூடிக் கொண்டு வந்து சீதாவிடம் கொடுத்தாள் கனிகா.
“செல்வி அக்காவுக்குப் பருப்பு பாயாசம் பிடிக்குமாமே...பெரிய சாமி சொல்வாங்க...இனிமே அவங்க வாழ்க்கை இந்த பாயசம் மாதிரி இனிக்கணும்.”
அஞ்சனாவும் ஆஷாவும் கட்டிப் பிடித்து விடை பெற்றனர்.
“சீதாம்மா...அடிக்கடி அஞ்சனாவை அழைச்சிட்டு வரணும்...” என்றாள் ஆஷா. வானம் கருமையிடத் தொடங்கிய நேரத்தில் தான் சீதா அஞ்சனாவுடன் வீடு வந்து சேர்ந்தாள். “செல்வி அம்மா...” என்று உற்சாகமாகக் கூறிக் கொண்டே கதவை தட்டினாள் அஞ்சனா. செல்வி வந்து கதவை திறந்தாள்.
அவள் முகம் வேர்த்திருந்தது. கன்றிப் போய் சிவந்திருந்தது. கண்கள் அழுதிருப்பதை காட்டிக் கொடுத்தது. பதறிவிட்டாள் சீதா.
“என்னாச்சு செல்வி? ஏன் அழுதிட்டு இருக்கே.?”
“செல்வி அம்மா...ப்ளீஸ் அழாதீங்க..” என்று ஆறுதலாகச் சொன்னாள் அஞ்சனா. செல்வி ஒன்றுமே பேசவில்லை. மொழி மறந்தது மாதிரி உட்கார்ந்திருந்தாள். நீர் முட்டிய கண்களை தாழ்த்திக் கொண்டாள்.
“செல்வி எதுவானாலும் சொல்லு. இப்படி அழுதிட்டே இருந்தா மனசு பதறுது.”
செல்வி தன்னை மெல்ல சுதாரித்துக் கொண்டு சொன்னாள்.
“அம்மா வந்திருந்தாங்க....கண்டபடி பேசினாங்க. திரும்ப ராஜஸ்தானுக்கே போ. எங்கோ நீ நல்லா இருந்தா சரி. வெளியே தலை காட்ட முடியலை...அப்படி இப்படின்னு சொன்னாங்க. கஷ்டமாயிடுச்சு சீதா. பேசாம செத்திடலாம் போல இருக்கு. என்னை விட அவங்களுக்கு மத்தவங்க என்ன சொல்வாங்களோன்னு தான் கவலை.” சொல்லிவிட்டு கதறி அழுதுவிட்டாள் செல்வி. சீதா தேற்றினாள்.
“விடு...அவங்களைப் பத்தி தெருஞ்சது தானே? பெத்த பொண்ணாச்சே என்ற ஈவு இரக்கம் கூட இல்லை. நானிருக்கேன் உனக்கு செல்வி. தைரியமா இரு. உன் கிட்டே ஒண்ணு சொல்வேன் நீ கேப்பியா.?”
“என்னது.?”
“நீ உன் மகள் கூடவும் கணவன் கூடவும் போய் சேர்ந்திடு. அப்புறம் யார் நாக்கு மேலே பல்லைப் போட்டு பேசுவாங்கன்னு பார்க்கிறேன்.” என்றாள் சீதா.
கொடியிலிருந்து எடுத்த காய்ந்த துணிகளை மடித்துக் கொண்டே சொன்னாள் செல்வி. “நடக்கிற காரியமா சொல்லு சீதா. அம்மாவே என்னை ஏத்துக்கலைங்கறபோது அவர் ஏத்துப்பாரா.? நான் தான் எல்லாத்தையும் சொதப்பி வச்சிட்டேனே. அதெல்லாம் இனி கனவு தான். ஒரு பெண் தவறு செய்தா அவளை இந்த சமுதாயம் ஏத்துக்கவே ஏத்துக்காது. விடு.”
சீதா செல்வி அருகில் உட்கார்ந்தாள். ஒரு குழந்தைக்கு சொல்வது போல் சொன்னாள். “செல்வி..நான் சொல்றதை கேளு. உன் மனசிலே உள்ள ஆசைகளை எல்லாம் நீ அடக்கி வச்சிருக்கே. உன் மகளுடன் கூடவே இருக்கணும்னு உனக்கு ஆசை இருக்காதா? அதற்காகவாவது நீ அங்கு போய் பாவ மன்னிப்பு கேட்டு சேர்ந்து கொள்.”
“பெத்த குழந்தையின் முகத்தை கூட பார்க்காத பாவி நான். போதையிலே கிடந்தேன். பின் விபச்சார விடுதியிலே கிடந்தேன். தப்பித்தேன்னு வச்சுக்கோ. இப்படி அவப் பேருடன் நான் அங்கு இருக்க முடியாதுன்னு தான் நீ அங்கு போய் என் மகளை பார்த்துக்கிட்டே. உனக்கு பெரிய மனசு...இப்ப நீ உன் மகளுடன் இருக்கறது தான் முறை. நான் அங்கு எப்படி போக முடியும் சீதா?. சரவணன் என்னை அடித்து துரத்திடுவார்...நான் எங்கும் போக விரும்பலை. மேலும் என் மகளை நன்கு கவனிக்க கனிகா இருக்கா. அது போதும்.”
“நீயா எந்த முடிவுக்கும் வராதே செல்வி. சரவணனுடன் பேசிப் பார். அவர் செல் நம்பரை வாங்கி வந்திருக்கேன். நீ அவருடன் பேசிப் பார்...இந்தா...”
அன்று இரவு செல்வி இரவு பத்து மணிக்கு மேல் சரவணனுக்கு போன் செய்தாள். சரவணன் எடுத்தான். அவனுக்கு யார் என்று தெரியவில்லை.
“ஹலோ...யார் பேசறது.? “
“நான் தான் செல்வி பேசறேன்...”
“ஒ..நீயா? இப்ப எதுக்கு போன் பண்றே? நான் தான் உன்னை பார்க்கவோ பேசவோ விரும்பலைன்னு சொன்னேனே.”
“நான் உங்க மனவியா பேசலை. ஆஷாவோட அம்மாவை பேசறேன். எனக்கு அவ கூட இருக்கணும்னு ஆசை. ப்ளீஸ் ஒரு வேலைக்காரியாகவாவது அங்கே இருக்கேனே...உங்களை கெஞ்சிக் கேக்றேன்.”
“ஏன்? மகளுக்கு அந்த போதை பழக்கத்தை கத்துக் கொடுதிடலாம்னு பாக்றியா? இந்த பழக்கம் எங்காவது போகுமா? அதுக்கு அடிமை ஆகிட்டா மீளவே முடியாது. எங்க நிம்மதியை கெடுக்காதே. உன்னை யார் வரச் சொன்னது? நான் கனிகாவை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன். நீ வந்து குட்டையை குழப்பாதே...வை போனை.”
“நீங்க கனிகாவை கல்யாணம் பண்ணிக்கோங்க நான் வேண்டாம்னு சொல்லலை. நான் கேக்றதெல்லாம் ஒண்ணே ஒண்ணு தான். என் மகளோடு நான் இருக்கணும். அவள் தேவைகளை பார்த்துக்கிட்டு இருக்கேன். அது ஒண்ணு போதும் ப்ளீஸ் சரவணன். உங்க கால்லே வேணா விழறேன்.”
“என் மனசு எப்பவோ கல்லாப் போச்சு செல்வி. உன்னை எத்தனை முறை மன்னித்தேன்? எத்தனை முறை நம்பினேன். நீ காலை வாரி விட்டிட்டே. ஆஷா பெண் குழந்தை. அதுவும் கண் தெரியாதவள்...அது உன்னால் தானே? அவள் எதிர்காலத்தையே சூனியம் ஆக்கிட்டே. அந்த துரோகம் தான் எனக்கு முன்னே நிக்குது. என் வாழ்விலோ என் மகள் வாழ்விலோ இனி நீ இல்லை. நான் தெளிவா இருக்கேன். புரிஞ்சுக்கோ.”
சரவணன் போனை வைத்துவிட்டான். செல்வி கதறி கதறி அழுதாள். அவளுக்கு மன்னிப்பே கிடையாதா?
கனிகா சரவணனுக்கு காப்பி கலந்து எடுத்துக் கொண்டு வந்தாள்.
“சின்ன சாமி எதுக்கு உங்க கண்கள் சிவந்திருக்கு? ராத்திரி சரியா தூங்கலையா? இப்படி செஞ்சா உடம்பு என்னத்துக்கு ஆவறது.?”
“கனிகா...அந்த கேடு கெட்ட செல்வி போன் செய்தாள். அவளுக்கு இங்கே வந்து இருக்கனுமாம். மகளை பார்த்துக்கிட்டு இருந்தா கூட போதுமாம். வேற எதுவும் வேண்டாமாம். கூச்சமில்லாம கேக்றா....துரோகி..”
அங்கு சம்பத் வந்தார். அவருக்கும் கனிகா காப்பி கலந்து கொடுத்தாள். மஞ்சு காப்பி குடிக்க மாட்டாள். அவளுக்கு வெறும் பால் தான். மஞ்சுவே ஒரு கப் பால் எடுத்துக் கொண்டு வந்து சோபாவில் உட்கார்ந்தாள்.
“அண்ணா...நீ சொல்றது சரியில்லை. அண்ணி ஒரு காலத்தில் தவறு செய்திருக்கலாம். அதனால் ஆஷாவுக்கு கண் பார்வை இல்லாமல் போயிருக்கலாம். அதுக்காக அவங்க ஆஷாவோட அம்மா இல்லேன்னு ஆயிடுமா? கனிகா ஒன்னும் உங்களோடு வாழ வரேன்னு சொல்லலையே. நீங்களாத் தான் சொல்லிட்டிருக்கீங்க. ப்ளீஸ் அண்ணா. செல்வி அண்ணியை ஏத்துக்கோங்க. அட்லீஸ்ட் இங்கே வந்து இருக்கட்டும்.”
“காலங் கார்த்தாலே அட்வைஸ் பண்ண வந்திட்டியா?”
சம்பத்து கூறினார். “மஞ்சு சொல்றது சரித்தான் சரவணா. செல்வி இப்ப நல்லபடியாத் தான் இருக்கறா. அவளை ஏத்துக்கோ. பெண் பாவம் பொல்லாதது. இப்படி கைவிடுவது நல்லதில்லை.”
“உங்களுக்கெல்லாம் நான் என்னவோ அரக்கன் மாதிரி தோணுது இல்லே? என் மகள் குருடா இருக்கா. அதுக்கு காரணம் அவ தானே? எப்படி அதை நான் மன்னிப்பேன்? ஒரு நாளும் மன்னிக்க மாட்டேன். கனிகா என்னை கல்யாணம் செய்ய சம்மதிக்காவிட்டாலும் சரி, ஒரு நாளும் நான் செல்வியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. வீணா என் கூட மல்லுக்கு நிக்காதேங்க. “ என்று வெறுப்புடன் சொன்னான். ஏதோ சொல்ல வாயை திறந்தாள் கனிகா. அதற்குள் ஆஷா அங்கு வந்தாள்.
“அப்பா...செல்வி அம்மா இங்கு வரட்டும் பாவம். அவங்க என் அம்மாதானே? வேணுமென்றே அவங்க இந்த தவறை செஞ்சிருக்க மாட்டாங்க. ஒரு மூணு மாசமாவது என் கூட இருக்கட்டும் அப்பா. பிறகு முடிவு எடுக்கலாம். நாம ஒருத்தருக்கு சான்ஸ் கொடுக்கணும் அப்பா. அது தான் மனிதாபிமானம்.”
தெளிவாக ஆஷா சொன்னதும் ஒரு கணம் யாரும் பேசவில்லை. சம்பத்துக்கு உச்சி குளிர்ந்தது. பேத்தி எவ்வளவு நல்ல மனசுடயவள்! தெளிவாகப் பேசுகிறாள்.
“அப்படி சொல்லு ஆஷா...குட் கர்ல்..” என்று பாராட்டினாள் மஞ்சு.
கனிகா உடனே செல்விக்கு போன் செய்தாள்.
“செல்வி நீங்க இங்கே வந்து ஆஷாவை பார்த்துக்கலாம்னு சின்ன சாமி சம்மதம் கொடுத்திட்டார்.” என்றாள். போனை வாங்கி ஆஷா பேசினாள்.
“அம்மா நீங்க வாங்க. உங்களுக்காக நான் காத்திட்டிருக்கேன்.”
“.......”
“அப்பா தான் சொல்லச் சொன்னாங்க.”
“.......”
“ஆமா...பயப்படாதீங்க நான் பார்த்துக்கறேன். இப்பவே கிளம்பி வாங்க.”
சரவணன் முகம் சிவந்தது. அவனைக் கேட்காமல் ஆஷாவே முடிவு பண்ணிவிட்டாளே! “ஆஷா...என்ன காரியம் செஞ்சிருக்கே? அறிவிருக்கா உனக்கு? அவள் உன்னை கெடுத்திடுவா.?”
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது கனிகா சொல்லியிருக்காங்க. செல்வி அம்மா மனசை புண்படுத்தினா கடவுளே நம்மை மன்னிக்க மாட்டாராம்.”
சரவணன் கனிகாவிடம் திரும்பினான்.
“ஒ...எல்லாம் உன் வேலை தானா? நினச்சேன்...ஆஷா இதுவரை அம்மாவை வெறுத்திட்டு இருந்தா. இப்ப வரச் சொல்லி கூப்பிடறா? கனிகா நீயும் நம்பிக்கை துரோகம் பண்ண ஆரம்பிச்சுட்டே இல்லே.”
“அய்யா.....நீங்க எல்லாம் மெத்தப் படிச்சவங்க. நான் கிராமத்திலே வெள்ளந்தியா வளர்ந்தவள். எனக்கு தெரிஞ்ச நியாயம் கூட உங்களுக்கு தெரியலையே? பெரிய பெரிய மகான்கள் கூட தப்பு செய்து திருந்தினவங்க தான்னு நான் கேள்விப்பட்டிருக்கேன். வால்மீகி திருடரா இருந்தார். பட்டினத்தார் வழி தவறி நடந்தவர். திருநீலகண்டர் தவறு செய்யலையா? அதெல்லாம் ஒத்துக்குவீங்க. ஒரு பொம்பளை தவறு செய்து திருந்தினா ஒத்துக்க மாட்டீங்க. அப்படித்தானே? இதை தான் உங்க படிப்பு கத்துக் கொடுத்திருக்கா?” சரவணன் தடுமாறினான். சம்பத் கை தட்டினார். அவர் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
“பேத்திக்கு இருட்டான எண்ணங்களை நீ சொல்லிக் கொடுத்தேடா. கனிகா வந்து அவள் மனசை வெளிச்சமாக்கிட்டா. செல்வி வரட்டும். உனக்கு பிடிக்கலைன்னா நீ அவ கிட்டே பேசாதே....கனிகா இன்னிக்கு செல்விக்கு பிடிச்ச சமையல் செய்..”
“சரிங்க பெரிய சாமி...” என்று உள்ளே ஓடினாள் கனிகா.
பூமியே ஒரு பெரிய தாமரை மாதிரி மலர்ந்துவிட்டது போல் உணர்ந்தாள் செல்வி. இதுவரை அவளிடம் இல்லாத சிறகு இப்பொழுது முளைத்து இருப்பது போல் தோன்றியது. சிறகுகள் கொடுத்த மகளே நீ வாழ்க. செல்வி தனக்குப் பிடித்த புடவைகளை எல்லாம் எடுத்து பெட்டியில் அடிக்கினாள். கருப்பும் வெள்ளையும் தான் அவள் இதுவரை அணிந்த புடவையின் கலராக இருந்தது. இன்று வானவில்லின் அத்தனை நிறங்களையும் உடைய உடைகளை பார்க்கும் போது பட்டாம் பூச்சி போல் உள்ளம் சுற்றியது. கோடை காலத்தின் மழை போல் இருக்கிறாய் மகளே! நான் சுவாசிக்கும் மூச்சே நீதான்.
“என்ன செல்வி கலர் கலர் புடவைகளை எடுத்து அடுக்கி வச்சிருக்கே. உன் சந்தோசம் புரியுது ஆனா ஆஷாவுக்கு நீ என்ன கலர் கட்டினாலும் ஒண்ணு தானே. அவளுக்குத் தான் பார்க்க முடியாதே...” என்று அவளின் உட்குரல் சொல்லியது. மடிந்து கண்ணீர் சிந்தாமல் துக்கித்தாள் செல்வி. சரவணனின் கோபம் நியாமானது தான். அவள் மெதுவே எழுந்தாள். வற்றிப் போன பலூன் மாதிரி மனசு சப்பிப் போனது. வாசலில் கார் வந்து நின்றது. சரவணன் அவளை அழைத்துச் செல்ல வந்திருந்தான். அவன் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. ஆஷா சொன்னதால் வந்திருக்கிறான் என்று புரிந்து கொண்டாள். செல்வி காரின் பின் சீட்டில் அமர்ந்தாள். அவனும் ஒன்றும் சொல்லவில்லை.
இங்கே என் அருகே உக்கார் என்று அவன் சொல்லவில்லை. ஆஷாவை பார்க்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டது தவறோ? சீதா சொல்லியிருந்தாள்.
“செல்வி..நீ உன் மகளுடன் இருக்கப் போகும் ஒவ்வொரு வினாடியையும் ரசித்து வாழ். ஏதாவது மனசை போட்டு குழப்பிக் கொள்ளாதே. “
காரை விட்டு இறங்கிய போது செல்வியை பயம் பிடித்துக் கொண்டது. அவளுக்கு வரவேற்பு எப்படி இருக்குமோ? அவள் உள்ளே நுழைந்ததுமே ஆஷா ஓடிவந்தாள். ‘அம்மாடி மெல்ல இடிச்சுக்கப் போறே...” என்றாள்.
“அம்மா இங்கே வா வா.
ஆசை முத்தம் தா தா...” பாடியபடியே ஆஷா அம்மாவை கட்டிக் கொண்டாள்.
மகளின் அன்பு ஸ்பரிசம்...எத்தகைய பேரு பெற்றிருக்கிறாள்! அவ்வளவுக்கும் காரணம் கனிகா. குளத்தில் நட்சத்திரங்கள் போல் இரவில் அல்லிப் பூக்கள் நிலவின் ஒளியில் மின்னுமே அப்படி அவள் மனது மின்னியது.
இந்த பாச பிணைப்பை பார்த்த சரவணன் சொன்னான்.
“மறந்திடாதே மூணு மாசம் தான்.” பொங்கிய பாலில் நீர் தெளித்தது போல் செல்வியின் உள்ளம் அடங்கியது.
மழை விழும்.