முற்றத்தில் விழுந்த மழைத் துள்ளிகள்.
அத்தியாயம்—15
ஜன்னல் வழியே கதிரவன் தன் சிவந்த காலை நேர ரேகைகளை அனுப்பி இருந்தான். மகள் ஆஷாவின் முகத்தில் அந்த சிவப்பு சாயல் படிந்திருந்தது. தாமரை மலர் ஒன்று தூங்குவது போல் இருந்தது. முதலில் மூன்று மாதம் தான் என்று சரவணன் குத்திக் காட்டியது வலித்தது. இன்று மூணு மாசமாவது கிடச்சுதே என்று உள்ளம் மகிழ்ச்சி கொண்டது.
“அம்மா...” ஆஷா விழித்து கொண்டு விட்டாள். செல்வி மகளருகே ஓடினாள்.
“ஆஷா பால் கொண்டு வரட்டா.?”
“அம்மா..உன் முகம் எப்படியிருக்கும்? எனக்கு பார்க்கணும் போல இருக்கு.”
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திண்டாடினாள் செல்வி. கனிகா கையில் பால் கப்புடன் வந்தாள்.
“நான் சொல்லாட்டுமா ஆஷா?”
“சொல்லுங்க கனிகாம்மா.”
“நீ சாப்பிடற பால் மாதிரி அவங்க மேனி நிறம். நீ சாப்பிடற திராட்சை மாதிரி அவங்க கண்கள். நீ போட்டுக்கற சிவப்பு நகப் பாலிஷ் மாதிரி அவங்க உதடு. நீ சாபிடற அரிசி மாதிரி அவங்க பற்கள்....”
“ஹையா...அம்மா அவ்வளவு அழகா? அப்புறம் மூக்கு எப்படி?”
“நீயே தொட்டுப் பார்...அதுக்கு எனக்கு உவமை சொல்லத் தெரியலை.”
ஆஷா அம்மாவின் மூக்கை தொட்டுப் பார்த்தாள்.
“சொல்லட்டா...ரைட் ஆங்கிள் மாதிரி இருக்கு...”
செல்வி விழுந்து விழுந்து சிரித்தாள். அடேயப்பா...அந்த சிரிப்பு ஒரு நிமிஷம் போல் தொடர்ந்தது. அம்மாவின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள் ஆஷா.
“அம்மா...நீ சிரிக்கறதை பார்க்கணும் போல இருக்கு”
“பார்க்கலாம் ஆஷா..உனக்கும் ஒரு நாள் கண் பார்வை வரும் பார். அப்ப நீ பார்க்கத்தான் போறே...” என்று கனிகா சொன்னதும்..
“எப்ப? எவ்வளவு நாள் காத்திருக்கிறது? எனக்கு இப்பவே வேணும்...அம்மாவை பார்க்கணும்”
ஆஷா முரண்டு பண்ணி அழ ஆரம்பித்துவிட்டாள். அந்த அழுகையை கடவுள் கேட்பார் என்று தோன்றுகிறது செல்விக்கு. ஒரு பயமும் சந்தோஷமும் உள்ளுக்குள் போட்டி போட்டு வந்தன.
அன்று இரவு செல்விக்கு நிறைய கனவுகள் வந்தது. ஆஷாவுக்கு கண் பார்வை கிடைத்துவிட்டது. அவள் பார்க்கிறாள்...பார்க்கிறாள்...பார்க்கிறாள்.
ஆனால் அவள் கண்ணை யாரோ குத்திவிட்டார்கள் போல் தோன்றுகிறது. வீல் என்று அலறி எழுந்தாள் செல்வி. எவ்வளவு கெட்ட கனவு! எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு படுத்தாள். ஆஷாவை உற்று உற்று பார்த்தாள். ஒரு வேளை அவளுக்கு பார்வை போய்விடுமோ? இருக்கும் போதே மகளை ஆசை தீர பார்த்துவிட வேண்டும். இரவு என்று பாராமல் எழுந்த செல்வி ஒரு கான்வாஸ பேப்பரும் பென்சிலும் எடுத்துக் கொண்டாள். ஆஷாவை வரைய ஆரம்பித்தாள். நிலவொளியில் ஆஷாவின் உருவம் பால் போல் தெரிந்தது. எவ்வளவு ஆழகான முகம். பரவசமூட்டும் முகம். பட்டு மாதிரி...வெல்வெட் துணி மாதிரி...மூன்று மணி நேரம் ஆயிற்று அவள் வரைந்து முடிக்க. அவளுக்கே அந்தப் படம் மிகவும் பிடித்தது. ஆஷாவுக்கு கண் பார்வை தெரிந்ததும் அவள் முதலில் அம்மா வரைந்த இந்தப் படத்தை தான் பார்க்கவேண்டும். ஸ்டாண்டில் அதை வைத்துவிட்டு செல்வி தூங்கப் போனாள். போன் அலறியது. விடிகிற நேரமுமில்லை...இரவுமில்லை. முன் பனி காலம். அந்த போன் அழைப்பு சில்லென்று காதை துளைத்தது.. கெட்ட செய்தி என்று அறிவிப்பது போல் இருந்தது. போனை எடுக்க பயந்தாள். ரிங் நாராசமாக போய்க்கொண்டே இருந்தது. நின்றது. அப்பாடா. அதற்குள் செல்வியின் முகம் பூராவாக வேர்த்துவிட்டது. மீண்டும் போனின் அலறல். ஆஷா எழுந்துவிட்டாள். “என்னம்மா போன் அடிக்குது. எடும்மா.”
“சாவு மணி போல் இருக்கு...” அம்மா உளறுவதை கேட்டு ஆஷா பயந்து போய் “கனிகாம்மா....கனிகாம்மா...” என்று கத்தினாள். அலறிக் கொண்டு என்னவோ ஏதோ என்று ஓடி வந்த கனிகா முதலில் விளக்கை போட்டாள்.
“என்னாச்சு? ஆஷா அடி கிடி பட்டிருச்சா?”
“போன்...போன்...எடுங்க...”
அலறிக் கொண்டிருந்த போனின் சத்தம் அப்பொழுது தான் அவளின் கவனத்துக்கு வந்தது. எடுத்தாள். ஹலோ என்றாள்...
“......”
“கடவுளே...நிஜமாவா.?”
“......”
“இதோ வந்திடறோம்...பயப்படாதே...”
“என்னாச்சு கனிகா?” உலுக்கினாள் செல்வி. அவள் பயந்தது போல் கெட்ட செய்தி தான். ஒரு வேளை அம்மாவுக்கு ஏதாவது...
“சொல்லு கனிகா...”
“வந்து வந்து....அம்மாவுக்கு...அம்மா...ஆஸ்பத்திரியில்...”
“எங்கம்மாவுக்கு என்னாச்சு கனிகா? யார் போன் செய்தது?” என்று கேட்டாள் செல்வி. அவள் முகத்தில் கலவரம்.
“உங்கம்மாவுக்கு இல்லை...வந்து...சீதாம்மாவுக்கு...அஞ்சனா போன் செய்தாள். ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்காங்க. பேச்சு மூச்சு இல்லையாம்....”
சீத்தாம்மா என்று ஆஷாவும்...சீதா என்று செல்வியும் அலறினார்கள். வீடே விழித்துக் கொண்டது. காரை எடுத்துக் கொண்டு முதலில் ஆஷாவையையும் செல்வி, கனிகாவையும் அழைத்துக் கொண்டு சரவணன் கிளம்பினான். சம்பத் சுகர் பேஷன்ட். எனவே மஞ்சு அப்பாவுக்கு பாலை காச்சி காப்பி போட்டுக் கொடுத்தாள். தானும் குடித்தாள். பிறகு இருவரும் கால் டாக்ஸி வரவழைத்து கிளம்பினார்கள்.
இந்த உலகம் தீடீரென அந்நியமாகிவிட்டது போல் சீதா உணர்ந்தாள். சுற்றி எல்லோரும் நின்று கொண்டிருக்கிறார்கள். அவளைப் பற்றிப் பேசுகிறார்கள் அவளுக்குத் தான் பேச முடியவில்லை. கண்களை இருட்டிக் கொண்டு வருகிறது. யாரோ மண்டையை பிடித்து உலுக்குவது போல் பட்டது.
“அனிருசம்...மூளையில்..உடனே சர்ஜரி செய்யவேண்டும்...” என்று டாக்டர் சொல்லி விளக்குவது அறை குறையாக கேட்கிறது சீதாவுக்கு. தலை பயங்கரமாக வலிக்கிறது. மயக்கமாகிறாள். ஆப்ரேஷன் தியேட்டருக்கு அவள் அழைத்துச் செல்லப்படுகிறாள்.
“டாக்டர் என்ன சொல்றாங்க சின்ன சாமி?” என்று கவலையுடன் கேட்டாள் கனிகா. அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவது அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
“அனிருசம்...அப்படின்னா ரத்த நாள நெளிவு. மூளைக்கு போகும் ரத்த நாளத்தில் ஒரு புடைப்பு இருக்காம். அது வெடுச்சுதுன்னா ரொம்ப கஷ்டம். அது மரக்கிளையில் இருந்து தொங்கும் கொய்யாப்பழம் மாதிரின்னு சொல்லலாம்.” என்று டாக்டர் சொன்னதை சொன்னான் சரவணன்.
“அய்யோ...அது இருக்கிறது இப்ப தான் தெருஞ்சுதா?”
அஞ்சனா பதில் சொன்னாள். அவள் குரல் அழுகையிலும் விசும்பலிலும் சிக்கி வெளி வந்தது. “அம்மா அடுப்படியில் பால் காச்சப் போனாங்க. நேத்தே பாலை பிரிஜ்ஜிலிருந்து எடுத்தாங்க. அது வரை நல்லாத் தான் இருந்தாங்க. தீடீரென தலை ரொம்ப வலிக்கிறது அஞ்சனான்னு கூப்பிட்டாங்க. அப்ப தான் நான் எழுந்து வந்தேன். மணி மூணு இருக்கும். தலையை பிடிச்சிட்டு உக்காந்தாங்க. நான் பாலை அடிப்பில் சுட வச்சு காப்பி போட்டு அம்மாவுக்கு கொடுத்தேன். அம்மா வாங்கி ரண்டு மடக்கு குடிச்சாங்க...அவ்வளவு தான் கொளக்குன்னு தலை சாஞ்சிடுத்து...வாய் பிளந்து மூச்சு பேசில்லாம கிடந்தாங்க. உடனே அம்புலன்சுக்கு போன் செய்தேன்..அப்ப தான் உங்களுக்கும் போன் செய்தேன்...இப்படி ஆயிடுச்சு...அம்மா...அம்மா...” என்று ஏங்கி அழதாள் அஞ்சனா.
என்ன நடக்க வேண்டுமோ அது நடந்து கொண்டுதான் இருக்கிறது. யார் சிரித்தால் என்ன? யார் அழுதால் என்ன? பரபரப்புடன் நர்ஸ் வசந்தா வந்தாள் .”இங்கே யார் செல்வி?....நீங்களா? சீக்கிரம் உங்க பெண் ஆஷாவை ஆழைத்துக் கொண்டு வாங்க...சீக்கிரம்.”
செல்விக்கு ஒன்றும் புரியவில்லை. சரவணன் ஆஷாவை அழைத்துக் கொண்டு நர்ஸ் கூட சென்றான். ஆஷாவுக்கு பல டெஸ்ட் எல்லாம் எடுத்து முடித்த பின்.....எல்லாமே துரிதமாக நடந்தது. நீங்க போலாம். என்று சரவணனை அனுப்பிவிட்டு ஆஷாவை ஆப்பரேஷன் தியேட்டருக்குள் தள்ளிக் கொண்டு போனாள் நர்ஸ் வசந்தா. அவள் கண்களில் ஏதோ மருந்து போடப்பட்டிருந்தது.
“என்னாச்சு...ஒன்னும் புரியலையே? டாக்டர்...ஏன் என் பெண்ணை ஸ்டேச்சரில் ஆப்பரேஷன் தியேட்டருக்கு அழைச்சிட்டுப் போறாங்க.?”
“அம்மா உங்க கூட பேச நேரமில்லை. நீங்க உங்க டாக்டர் முரளிதரன் கிட்டே கேளுங்க. அவர் ஆப்பரேஷன் தியேட்டருக்குள் மறைந்து போனார். சீதாவுக்குத் தானே உடம்பு சரியில்லை..எதுக்கு ஆஷாவுக்கு டெஸ்டுகள்? குழப்பமாக இருந்தது எல்லோருக்கும்.
“என்ன இது ஒரே மர்மமா இருக்கு. ஆஷாவுக்கு என்ன?” என்று புலம்ப ஆரம்பித்தாள் செல்வி. வேறு ஒரு நர்ஸ் வந்து “சரவணன் யாரு? டாக்டர் முரளிதரன் கூபிடறார்.” சரவணன் ஒரு வித கிலேசத்துடன் டாக்டர் ரூமில் நுழைந்தான். “உக்காருங்க மிஸ்டர் சரவணன்.” அவர் முகம் உணர்வற்று இருந்தது.
“டாக்டர்...என்னாச்சு? என் பெண்ணுக்கு ஏதாவது பிரச்சனையா?”
“பிரச்சனை ஏதும் இல்லை மிஸ்டர் சரவணன். இந்த பார்மில் கையெழுத்து போடுங்க. லீகலா அது தேவை.”
“எதுக்கு நான் கையெழுத்து போடணும்? சொல்லுங்க டாக்டர். காரணம் தெரியாமல் நான் கையெழுத்து போட முடியாது.”
“உங்க பெண்ணுக்கு இப்ப கண் ஆப்பரேஷன் நடக்கணுமா வேண்டாமா.?”
“என்ன சொல்றீங்க டாக்டர்...டோனர் கிடைச்சாச்சா?”
“ஆமா...உடனே ஆப்பரேஷன் செய்யணும் அதுக்கு தான் கண் டாக்டர் ராஜகோபால் வந்திருக்கார்.”
மகிழ்ச்சியில் சரவணனுக்கு பேச்சே வரவில்லை. கையெழுத்து போட்டுக் கொடுத்தான்.
“நீங்க வெயிட் பண்ணுங்க. ஆபரேஷன் முடிந்ததும் உங்களுக்கு தகவல் சொல்றோம். கட்டு அவிழ்த்த பின் தான் எந்த அளவு ஆப்பரேஷன் சக்செஸ் என்று தெரியும். நீங்க போலாம்” பரபரப்பான மகிழ்ச்சி அவனை தொற்றிக் கொண்டது. யார் கண் தானம் செய்திருப்பார்கள்?
“சரிங்க டாக்டர்...” அறையை விட்டு பறந்து வந்தான். செல்வியை பார்த்ததும் அவளை கட்டி பிடித்துக் கொண்டான். சந்தோஷ கண்ணீர் வந்தது. செல்வி அவசரமாகக் கேட்டாள்.
“என்னங்க...என்னாச்சு? ஒன்னும் சொல்லாம இருந்தா எப்படி? ஆஷாவுக்கு என்ன.?” செல்வி கேட்க, மற்றவர்களும் அவனை ஆவலோடு பார்த்தார்கள்.
“ஆஷாவுக்கு டோனர் கிடைச்சாச்சு. அவளுக்கு கண் பார்வை வரப் போகுது.”
சம்பத்துக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அவர் உடனே ஆஸ்பத்திரியில் உள்ள பிள்ளயார் கோவிலுக்குப் போய் கடவுளுக்கு நன்றி சொல்லப் போய்விட்டார்.
கனிகாவும் உடன் சென்றாள். மஞ்சுவும் அஞ்சனாவும் நம்ப முடியாமல் நின்றார்கள். தீடீரென ஏற்பட்ட இந்த சந்தோஷத்தில் ஏதோ சோகம் இருப்பது போல் அவர்கள் கிலேசம் அடைந்தார்கள். செல்விக்கும் ஒரு உறுத்தல். அதெப்படி டோனர் அவ்வளவு சீக்கிரம் கிடைக்கும்? லிஸ்ட் பிரகாரம் பார்த்தால் இன்னும் இரண்டு வருஷம் ஆகுமே...அவள் தான் விசாரித்துக் கொண்டே இருக்கிறாளே...அப்படியானால்? அவளுக்கு மின்னல் வெட்டு போல் புரிந்தது...சீதா இறந்துவிட்டாளா? அவள் கண்களைத் தான் ஆஷாவுக்கு பொருத்தப் போகிறார்களா? செல்வி குபுக்கென்று வந்த கண்ணீரை பெரும் சத்தத்துடன் சிந்தினாள். சரவணன் பயந்துவிட்டான். இவள் எதற்கு அழுகிறாள்?
“என்னாச்சு செல்வி? ஏன் இப்படி வெடித்து அழறே? நல்ல செய்தி தானே?”
அவள் பேசும் நிலையில் இல்லை. நர்ஸ் வசந்தாவிடம் ஓடினான்.
“நர்ஸ்...எனக்கு கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா? யார் என் பெண்ணுக்கு கண் தானம் செய்ய முன் வந்தது?”
நர்ஸ் ஒரு சோகப் புன்னகை புரிந்தாள். பிறகு அவனை தன் பின்னால் வரும்படி அழைத்தாள். பயத்துடன் போனான் சரவணன்.
“இத பாருங்க...”
அவள் காட்டிய பேப்பரை பார்த்தான் சரவணன். அவனையும் அறியாமல் அவன் கண்கள் நீரை சொரிந்தன.
மழை விழும்.