முற்றத்தில் விழுந்த மலர்த் துளிகள்.
அத்தியாயம்—16
உலக அதிசயங்கள் என்று ஏழு இருப்பதாக சொல்வார்கள். உண்மையில் அதிசயம் என்பது மனிதர்களின் மனம் தான். தூய்மையான மனதுடையவர்கள் வியத்தகு காரியங்களை சுலபமாய் செய்துவிடுவார்கள். அவர்கள் ஆச்சர்யமான மனிதர்கள். கொடூரமானவர்களும் செய்வார்கள்....வியத்தகு காரியங்களை அல்ல. நினைச்சே பார்க்க முடியாது பயங்கரங்களை செய்வார்கள். அவர்கள் கேவலமான மனிதர்கள்.
ஒரு சிறுமி தான் சைக்கிள் வாங்க சிறிது சிறிதாக சேர்த்த பணத்தை கேரள அரசு நிதிக்கு வெள்ள நிவாரணத்துக்கு கொடுத்தாள். எவ்வவளவு பெரிய விஷயம்! ஒரு வீடில்லாத பிச்சைக்காரன் விரித்த துணியில் ஒரு பெண் அவனுக்கு காசு போடும் போது அவளின் விரலிலிருந்து நழுவி விழுந்தது அவளின் விலை உயர்ந்த மோதிரம். அதனை அவளை தேடிச் சென்று திருப்பிக் கொடுத்திருக்கிறான் அவன். இது இன்டர்நெட்டில் அவள் பகிர்த்து கொள்ள...அவனுக்கு அடித்தது அதிர்ஷ்டம. மக்கள் அவன் அரிய செயலை பாராட்டி பணம் கொடுத்தார்கள. வீடில்லாதவன் வீடு கட்டினான். அவன் மனைவி மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ்கிறார்கள். இது அமெரிக்காவில் நடந்த அதிசயம். கருணை என்னும் மொழியை கண் இல்லாதவர்களும் காது இல்லாதவர்களும் புரிந்து கொள்வார்கள். அப்டிப்பட்ட அரிய கருணை செயலை செய்தது சீதா தான். அந்த வெள்ளைத் தாளில் சீதாவின் ரத்தம் பேசிற்று. இரண்டே வார்த்தைகள்.
ஆஷா....கண்...அவ்வளவு தான்.
“நான் இப்படிப்பட்ட உயர்ந்த கருணையை இதுவரை பார்த்ததில்லை. சீதாவின் உடல் நிலையை செக் பண்ணப் போயிருந்தேன். ஆப்பரேஷனுக்கு அழைத்துப் போக ஸ்ட்ரேச்சர் கூட வந்துவிட்டது. அப்பொழுது சீதா பயங்கரமாக தலை வலிக்கிறது என்று கூக்குரல் போட்டார்கள். மறு நிமிஷம்...மண்டையிலிருந்து ரத்தம் ஒழுகியது....அந்த வலியிலும் டேபிள் அருகில் இருந்த பேனா எடுத்து தன் ரத்தத்தில் தோய்த்து இதை எழுதிவிட்டு இறந்துவிட்டார்கள்.. அந்த நோயின் தன்மை அப்படி. ரத்தக் குழாயின் பலூன் வீக்கம் வெடித்துவிட்டது...
அவர்கள் கடைசி ஆசையை நிறைவேற்ற எண்ணினோம். நாற்பத்தி ஐந்து நிமிடத்தில் கருவிழிகளை எடுக்க வேண்டும். நல்ல வேளை கண் சர்ஜன் தயாராக இருந்தார்கள். உடன் எடுத்து உங்களிடம் கையெழுத்து வாங்கி இதோ ஆஷாவுக்கு ஆப்பபேரஷன் நடக்கிறது....சிங்கப்பூர் வாழ் சாந்தினி
என்னும் பெண்ணுக்கு இப்படித்தான் பிரைன் அனிருசம் வந்து இறந்து போனார்கள். வயது இருபத்தொன்பது தான். அவர்கள் கண் எடுத்து பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு பொருத்தப்பட்டது. இது நடந்த சம்பவம். என்ன பரிதாபம் என்றால் அந்தப் பெண் பிரசவித்திருந்த இரட்டை குழந்தைகளும் இறந்துவிட்டது. ஒருவரின் முடிவு ஒருவருக்கு ஆரம்பம்.
சீதா ஒரு சிறந்த ஆத்மா...அந்த வலியிலும் அவர்கள் அப்படி எழுதியது என் கண் முன்னே நடந்தது. எனக்கு மெய் சிலிர்க்கிறது. நான் மறக்கவே மாட்டேன்...” நர்ஸ் வசந்தா விம்மிவிட்டாள். எல்லோரும் கண் கலங்கினர். அனைவர் உள்ளமும் கதறியது. சீதா தன் ஒவ்வொரு நிமிட வாழ்க்கையையும் அவ்வளவு அர்த்தமுள்ளதாக வாழ்ந்திருக்கிறாள்! நெஞ்சில் ஒரு ஆலயம் படம் பார்த்த போது பேஷண்டை காப்பாற்றி தன் உயிரை விட்ட டாக்டருக்காக எவ்வளவு அழுதோம்..அது படம்..இது வாழ்க்கை. சீதா குறுஞ்சிப் பூ....பன்னிரண்டு வருஷம் கழித்து பூக்கும் பூவல்ல அவள். கண் முன்னே தினமும் பூத்த குருஞ்சிப் பூ! மனித மனங்களின் அதிசயம் எல்லா அதிசயத்தை விடவும் அதிசயமானது!
கண் பார்வை பெற்ற ஆஷா முதலில் பார்க்க விரும்பியது சீதாவை தான்.
“நான் கண் திறந்ததும் சீத்தாம்மாவை தான் பார்ப்பேன்...” என்று அடம் பிடித்தாள். அவளை மெல்ல அழைத்துக் கொண்டு சீதா கிடந்த பெட்டுக்கு கூட்டி வந்து கண் திறந்தார்கள். “சீதாம்மா...” என்று முதல் முதலாக அவள் முகத்தைப் பார்த்த பரவசத்துடன் முகம் மலர்ந்தாள் அந்தச் சிறுமி. அவளை குழந்தையிலிருந்து சீராட்டி பாலுட்டி...பாராட்டி வளர்த்த சீதாவின் இமைகள் மூடியிருந்தன. ஆஷா புரிந்து கொண்டாள்.
“அவங்க கண்கள் தான் உனக்கு பொருத்தியிருக்கு...” என்றாள் நர்ஸ் வசந்தா. ஆஷா துடித்தாள்.
“அப்புறம் இன்னொரு விஷயம். இப்ப தான் உனக்கு அப்பரேஷன் ஆகியிருக்கு. நீ அழகூடாது ஆஷா...போய் ரெஸ்ட் எடு...”
“சீதாம்மா...எனக்கு கண்கள் கொடுத்தது நான் காலமெல்லாம் அழுவதற்குத் தானா? என் கண்ணீரால் படிக்கட்டு அமைத்து உங்களை அந்த யமனிடம் வாதாடி கொண்டு வர முடிந்தால் எவ்வவளவு நல்லா இருக்கும்?..கண்ணீர் கூட வடிக்க முடியாதே.”
“ஆஷா...ஆஷா நீ முதலில் போய் ரெஸ்ட் எடு...” என்று ஆளாளுக்கு அவளை சமாதானப்படுத்தினார்கள். அது முடியவேயில்லை. அவளை கட்டிலுக்கு அழைத்து சென்று படுக்க வைத்தாள் நர்ஸ். செல்வியும் அஞ்சனாவும் உடைந்து போயிருந்தார்கள். சம்பத் அழக் கூட முடியாத துக்கத்தில் இருந்தார். மஞ்சு கண்ணில் ஆறாக நீர் பெருகி ஓடியது. ஆஷாவுக்கு கண் பார்வை கிடைத்தது சந்தோசம் தான். ஆனால் அதுக்கு அவர்கள் கொடுத்த விலை!....சீதாவின் உயிர்! சரவணன் உறைந்து போயிருந்தான். செல்வி அழுத வண்ணம் இருந்தாள்.
“அவங்க அழட்டும்...அது தான் அவங்களுக்கு மருந்து.” என்று டாக்டர் சொன்னார். மனப் புண் ஆற வேண்டுமே!
எல்லாம் முடிந்து போனது. யாரும் பேசவில்லை. துக்கத்தில் பேசாமல் இருப்பதே துக்கத்தின் மிகப் பெரிய அறிகுறி.
“காலம் தான் இந்த துக்கத்தை ஆற்றும் வலிமை கொண்டது.” என்று சம்பத் எண்ணினார். துக்கத்தை பகிர்ந்து கொள்ள முடியாது. அவரவர் துக்கம் அவரவர் நெஞ்சை துளைக்கிறது. பேச ஏது வார்த்தைகள்! கொஞ்சம்...கொஞ்சமாக பனி விலகுவது போல் துக்கம் குறைந்தது. அழுகை நின்றது. லேசாக பேச ஆரம்பித்தார்கள். சகஜ நிலைக்கு வந்தார்கள். ஆனாலும் துக்கம் எல்லோர் இதயத்தின் மூலையிலும் ஒரு சிலை போல் வடித்து வைக்கப்பட்டது. இந்த வலி அழியாதது.
“சீத்தாம்மாவுடன் நான் பேசவில்லை...நன்றி சொல்லவில்லை. என் அன்பை சொல்லவில்லை...போயிட்டு வாங்கன்னு கையசைக்கவில்லை...இப்படி திடுதிப்பென்று போயிட்டாங்களே...” என்று அரற்றினாள் ஆஷா. செல்விக்கு அது தான் தோன்றியது. அஞ்சனா சொன்னது அனைவர் உள்ளத்தையும் தொட்டது. “அம்மா சொல்லியிருக்காங்க என் பிறப்பு பத்தி. என்னை ஆசையா தத்து எடுத்த அப்பா அம்மா நான் நாலு வயசாகும் போது இறந்திட்டாங்களாம். அவங்க சீதாம்மாவிடம் என்னை கவனிச்சுக்கச் சொல்லி கேட்டுக் கிட்டாங்களாம். இப்ப அம்மாவே இறந்திட்டாங்க. எனக்கு அம்மா ராசியே இல்ல போலிருக்கு...” குலுங்கி அழுதாள் அந்த சிறுமி.
கனிகா இதை எல்லாம் பார்த்து பரிதவித்துக் கொண்டிருந்தாள். எதற்கு இவ்வளவு துக்கம் இந்தக் குடும்பத்துக்கு மட்டும்? கடவுளே உனக்கு கண் இல்லயா? நீயும் குருடாகிவிட்டாயா? முதலில் உனக்கு தான் கண் ஆப்பரேஷன் செய்து கண் பார்வை வரவழைக்கணும்! பாரு பாரு....நீ பண்ணிட்டிருக்கிற அநியாயத்தை. அவளுக்கு பதில் சொல்வது போல் சம்பத் சொன்னார். “வாழ்க்கையில் அன்பு இருந்தால் முட்களும் இருக்கும். அன்பு வேண்டாம் என்றால் ரோஜாக்களும் இருக்காது. சீதா செய்த நன்மைகளை நினைச்சுப் பாருங்க. அவள் அளித்த ரோஜாக்கள் நம் மனதில் மணத்துக் கொண்டே இருக்கும். அது தான் அவளுக்கு நாம் தரும் காணிக்கை.”
ஆறு மாதங்கள் ஓடிவிட்டது. மீண்டும் கல்யாணப் பேச்சை ஆரம்பித்தான் சரவணன். கனிகாவிடம் அவன் தனிமையில் பேசினான்.
“கனிகா...உன் கிட்டே முன்னே பேசினது தான். எப்ப நம்ம கல்யாணம்.?”
“உங்களுக்கு அறிவு இருக்கா? பக்கத்திலே செல்வி அக்கா இருக்கும் போது, இது என்ன பேச்சு? அவங்க இப்ப நல்லாத் தானே இருக்காங்க. எதுக்கு அவங்களை ஒதுக்கி வச்சு கஷ்டப்படுத்றேங்க?”
“கனிகா...அவளை நம்ப முடியாது. அவள் போதை பழக்கத்துக்கு அடிமை ஆனவள். எந்த நிமிஷமும் அவள் அந்த பழக்கத்தை ஆரம்பிக்கலாம். ருசி கண்ட பூனை லேசில் விடுமா? அவ கூட என்னால் வாழ முடியாது கனிகா.”
சிரித்தாள் கனிகா அதில் ஏளனம் இருந்தது.
“எதுக்கு சிரிக்கிறே? என் லவ் உனக்கு கிண்டலா இருக்கா?”
“பயித்தியக்காரத்தனமா இருக்கு. குடிகார கணவன்...ரௌடிக் கணவன்...ரெண்டு பொண்டாட்டிக் கணவன்..ஸ்திரி லோல கணவன்...இவங்களை எல்லாம் பெண்கள் மீண்டும் மீண்டும் மன்னிச்சு அவங்களோட வாழணும். ஆனா ஒரு மனைவி சந்தர்ப்ப வசத்தால் ஒரு தப்பு செய்தா, அதை காலமெல்லாம் குத்திக் காட்டி அவங்களை நிராகரிக்கணும்? என்ன நியாயம் இது.?”
“கனிகா ப்ளீஸ் மறுத்து பேசாதே. என்னால் நீ இல்லாமல் வாழ முடியாது. நீ தான் என் கலங்கரை விளக்கு.”
:மீண்டும் சிரித்தாள் கனிகா. அவன் முறைத்தான்.
“முறைக்காதீங்க..உங்க மனசு எனக்கு புரியுது. சூடு பட்ட பூனை. அதான் செல்வி அக்கா மீண்டும் அப்படி போதை பழக்கத்துக்கு அடிமை ஆயிடுவாங்களோன்னு பயப்படறீங்க. கடல்லே போகும் கப்பல் புயல் அடிச்சி திசை மாறி போச்சுன்னா...துரத்திலே ஒரு கலங்கரை விளக்கு தெரிந்ததும் ஆகா என்று அதை நோக்கி ஓடும். அது மாதிரி கலங்கரை விளக்கு நோக்கிப் போறது தற்காலிக தீர்வு. நிரந்தர தீர்வு, அவர்கள் அந்த திசை நோக்கி பொறுமையாக போவது தான். நீங்க தற்காலிக தீர்வா என்னோட உங்க கல்யாணம்னு நினைக்றீங்க. உங்களால் செல்வி அக்காவை விட்டு வரமுடியாது. அவங்களை நீங்க இன்னும் நேசிக்கிறீங்க. அதை நான் புரிந்து கொண்டேன். வீணா பயப்படவேண்டாம். இப்படியே சொல்லிட்டிருந்தால் நான் என் கிராமத்துக்குப் போயிடுவேன்..” கனிகா சொல்லிவிட்டு அவனை போகச் சொல்லி கை அசைத்தாள். அவன் போனதும் அவள் உள்ளம் அழுதது.
“சரவணன்..உங்க வீட்டுக்கு வந்து நான் நிறைய கத்துக்கிட்டேன். நாகரிகம், படிப்பு...புத்திசாலித்தனம்...அன்பு.....அதுவரை சரி. ஆனால் காதல் அதுவும் கத்துக்கிட்டேனா? அது தப்பு. கல்யாணம் ஆன ஒருவனின் மேல் ஒரு கிரஷ் வருவது காதலா? புரியவில்லை. ஆனா உங்களை பார்த்திட்டே இருக்கணும் போல இருக்கு. உங்க குரலை கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு. நான் ரகசியமா உங்களை நேசிக்கிறேன். அதுபகல் கனவுன்னு தெரிந்தும் கூட. இதை நிறுத்தனும்னு பார்க்கிறேன். ஆனா நிறுத்துவது கஷ்டமா இருக்கு. எங்காவது முட்டிக் கொள்ளலாம் போல் இருக்கு..அதே சமயம் இந்த நினைப்பு சுகமா இருக்கு. உங்களை நினைக்கும் போது என் உதடுக்கு புன்னகை செய்யத் தெரிகிறது. ஆன நீங்க பார்க்கும் போது என் உதடு அலட்சியமா பிதுங்குகிறது. என் உதடு கூட நடிக்க கத்திட்டிருக்கு. இதிலிருந்து வெளியே வருவேனா? வரணும். அந்த நிலாவுக்குள் போய் ஒளிஞ்சிக்கலாம் போலிருக்கு.”
ஏதேதோ எண்ணி அவள் தூங்கி விட்டாள்.
சரவணன் தூங்காமல் உட்கார்ந்திருந்தான். செல்வி வீட்டுக்கு வந்து அவள் வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொன்ட போது அவன் தடுக்கவில்லை. ஆஷாவுக்கு அம்மா வேண்டும். அதை அவன் மறுக்க முடியாது. ஆனால் அவன் அவளை இன்னும் மனைவியாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவன் அறைக்குள் அவளை அவன் நுழைய விடவில்லை. அவளும் நுழைய ஆசைப்படவில்லை. மஞ்சுவும் சம்பத்தும் இது அவர்கள் பேசி தீர்க்க வேண்டிய விஷயம் என்று தலையிடவில்லை. அஞ்சனாவும் ஆஷாவும் நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டார்கள். சரவணன் நினைத்தான்...கனிகா சொல்வது போல் அவன் செல்வியை இன்னும் மறக்கவில்லையா? அவனுக்கே அவனை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஒன்று, செல்வி பழைய குருடி கதவைத் திறடி என்பது போல் மீண்டும் போதை பழக்கத்துக்கு அடிமையானால் அவனால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவள் முழுவதுமாக இதிலிருந்து விடுபட்டுவிட்டாள் என்று எப்படி நம்புவது? அவன் தூங்காமல் விழித்திருந்தான். இரவு மணி ஒன்று அடித்தது கூட அவனுக்கு கேட்டது. அதே சமயம் யாரோ வீட்டுக்குள் தோட்டத்தில் குதிப்பது போல் சப்தம் கேட்டது. அய்யோ திருடனோ? அவன் மெல்ல எழுந்து ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். தெரு விளக்கின் வெளிச்சத்தில் அவன் கண்ட காட்சி அவனுக்கு அதிர்ச்சியை அளித்தது. நாகு என்ற நாகப்பாம்பு அங்கு நின்று கொண்டிருந்தது. வாசல் கதவை செல்வி திறக்க அவள் நைசாக உள்ளே நுழைந்தாள். அடப் பாவி...ச்சே இவ்வளவுதானா செல்வியின் லட்சணம்? ஓடிச் சென்று அந்த நாகுவை பற்றி இழுத்து அறைய வேண்டும் என்ற ஆவேசத்தில் அவளை நோக்கி செல்ல முற்பட்டான். அவனை ஒரு கரம் தடுத்தது. கனிகா...இவள் எதுக்கு இங்கு வந்து தடை செய்கிறாள்? கனிகா தன் உதட்டின் மேல் ஒரு கரம் வைத்து அவனை அமைதியாக இருக்கச் சொன்னாள். எப்படி இருப்பது? நான் சொன்னேனல்லவா செல்வி திருந்த மாட்டாள் என்று...புரிந்ததா? என்று மெல்லிய குரலில் சொன்னான் சரவணன்.
“வெயிட்...என்ன நடக்கிறது பார்ப்போம். செல்வி என்ன செய்கிறாள் கவனிப்போம்...” நேரம் ஓடிக் கொண்டிருந்தது. செல்வியும் நாகுவும் சிரித்து சிரித்து மெல்லிய குரலில் பேசியது காதில் விழுந்தது.
“நாகு ரொம்ப தாங்க்ஸ். உனக்கு எப்படி தெரிந்தது நான் இங்கு இருக்கிறேன் என்று? நீ போன் பண்ணியதும் எனக்கு ஒரே சந்தோசம்.”
“நான் தான் ஒரு நெட்வொர்க் வச்சிருக்கேனே. நீ எங்கே இருக்கே எப்படி இருக்கேன்னு கண்கானிச்சிட்டே தான் இருக்கேன். ராஜஸ்தானில் நீ ஆஸ்ரமத்தில் இருந்ததால் என்னால் உள்ளே நுழைய முடியலை. உணக்கு போன் செய்தும் நீ எங்கே என் போனை அட்டென்ட் பண்ண மாட்டியோன்னு நினைச்சேன். பரவாயில்லை...நீ மாறலை. நான் உனக்காக போதை மருந்து கொண்டு வந்திருக்கேன்...”
“கொடு கொடு...எவ்வளவு பணம் கொடுக்கணும்.?”
“உனக்காக குறைச்சு சொல்றேன். இருபதாயிரம் ரூபா...”
“ஒ.கே...நீ கொஞ்சம் வெய்ட் பண்ணு. நான் பீரோவில் இருந்து எடுத்து வரேன். இங்கேயே இரு...நான் வந்திடறேன்..”
செல்வி மறைந்தாள். நாகு காத்துக் கொண்டிருந்தாள்.
“நான் போலீசுக்கு போன் பண்ணப் போறேன் அவங்க செல்வியையும் அரெஸ்ட் பண்ணிட்டு போகட்டும்.”
“வேண்டாம்...அவசரப்படாதீங்க. செல்வி ஏதோ திட்டத்தோட தான் அவளை வரவழைச்சிருக்கா. நாகுவை பாலோ பண்ணி போய் அவள் இருப்பிடத்தை கண்டுபிடித்து அவளை சிக்க வைப்போம்...” கனிகா கூறினாள். இவர்கள் இப்படி வாக்கு வாதம் செய்து கொண்டிருக்கும் போதே போலீஸ் வண்டி அவர்கள் வாசல் முன் வந்து நின்றது. செல்வி கதவு திறந்தாள். லைட்டை போட்டாள்.
“வாங்க இன்ஸ்பெக்டர்...சரியான நேரத்துக்கு வந்தீங்க.”
“மேடம் அந்த கிரிமினல் நாகு இங்கு வந்திருப்பதா போன் செய்தீங்களே.... எங்கே அந்த லேடி?...இத்தனை வருஷமா ஆட்டம் காட்டிட்டு இருக்கா..”
திகைத்து நின்றான் சரவணன். கனிகா சிரித்தாள்.
“எனக்கு செல்வி அக்கா மேல் இருந்த நம்பிக்கை உங்களுக்கு இல்லை பார்த்தீங்களா.?”
நாகு போலிஸ் வண்டியின் சத்தம் கேட்டதும் தப்பிக்க முயன்று கதவை திறக்கப் போனாள். கதவு வெளிப்பக்கம் தாழ் போட்டிருந்தது. அப்பொழுது தான் புரிந்தது செல்வியின் திட்டம். போதை மருந்து கொண்டு வரச் சொல்லிவிட்டு, போலீசுக்கும் போன் செய்துவிட்டாள். படபடவென கதவு தட்டினாள்.
இன்ஸ்பெக்டர் ராஜ் கதவு திறந்தார். அவள் வசம் இருந்த போதை மருந்து பாக்கெட்டுகளை கைப்பற்றினார்.
“குடும்பங்களை சீரழிக்கவே பிறந்த பிசாசு நீ. இனி உன் கொட்டத்தை அடக்கும் சட்டம். மரியாதையாக உன் கூட்டாளிகள் எல்லாம் எங்கே இருக்காங்கன்னு சொல்லிடு. மரியாதையா நட ஸ்டேஷனுக்கு...”
“பாவி..துரோகம் பண்ணிட்டியே....காட்டிக் கொடுத்திட்டியே...” என்று வாய்க்கு வந்தபடி பேசிய அவளை பெண் கான்ஸ்டபிள் நித்யா நாலு போடு போட்டு போலிஸ் ஜீப்பில் ஏற்றினாள். அப்பாடா..ஒரு வழியாக நாகுவின் ஆட்டம் ஒரு முடிவுக்கு வந்தது.
மறு நாள் செய்தித் தாள் முழுக்க நாகுவின் பிரதாபம் தான். இந்த கேங்கை வளைத்துப் பிடித்து விடுவோம் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. இனி கவலையில்லை.
மஞ்சு...சம்பத் அஞ்சனா...ஆஷா எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள்.
“அம்மா..நீ தைரியமா அந்த கிரிமினலை பிடிச்சுக் கொடுத்திட்டே...உனக்கு அவார்ட் கிடைக்கும்...அப்படியே எங்களுக்கு ஒரு ட்ரீட். தரனும்.” என்றாள் ஆஷா. ஹே...என்று அனைவரும் ஆரவராம் செய்தனர்.
கனிகா பெட்டியை தூக்கிக் கொண்டு கிளம்பினாள்.
“எங்கே போறே கனிகா?” என்று கேட்டாள் செல்வி.
“வந்த வேலை முடிஞ்சது. இப்ப சரவணனுக்கு உங்க மேலே நம்பிக்கை வந்திருக்கும். உங்க கூட வாழ தடை சொல்ல மாட்டார்....நான் கிளம்பறேன் செல்வி. எனக்கு ஒரு நல்ல வேலை தேடிக்குவேன். என் ஒரே வேண்டுகோள்.....அஞ்சனாவை என் கூட அனுப்ப முடியுமா? அவளுக்கு அம்மாவா இருந்து என் கடைசி காலத்தை கழிச்சிடுவேன்...”
செல்வி அவள் பெட்டியை பிடுங்கி வைத்தாள். அன்புடன் அவள் தோளை அணைத்தாள். “உள்ளே வா கனிகா...உன் கூட பேசணும்....”
“பேச என்ன இருக்கு செல்வி அக்கா? என்னை போக விடுங்க.”
“போக விடறேன்....உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிக் கொடுத்து போக விடறேன். இந்த வீடு நாசமா போக இருந்த சமயம், தெய்வம் போல் வந்து காப்பாத்தியிருக்கே. உன்னை இப்படியே அனுப்பினால் என்னை போல் நன்றி கெட்டவள் இந்த உலகில் வேறு யாரும் இருக்க முடியாது...”
“எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம் அக்கா. அதுக்கு எனக்கு தகுதி இல்லை. என்னை விட்டு விடுங்கள்.”
“கனிகா...நான் எவ்வளவு பெரிய தவறு செஞ்சேன்.? என் மகளையே குருடாக்கினேன். என்னை சுத்தி எத்தனை அன்பு உள்ளங்கள்! சீதா எனக்காக என் மகளை பார்த்துக் கொன்ட செயல் எவ்வளவு உன்னதமானது! மஞ்சு சின்னப் பெண். அவள் எத்தனை விவேகமாக அன்பாக ஆஷாவை சிறு குழந்தையாக ஆஸ்பத்திரியில் இருந்தபோத பார்த்துக் கொண்டாள்.! அடுத்து ஷாந்தா ராம்...அவர் மட்டும் இல்லை என்றால் நான் அந்த ப்ராத்தல் இடத்தில் இன்னமும் இருந்து சீரழிந்திருப்பேன். சின்னப் பெண் அஞ்சனா...அவள் எப்படி என் மகளுக்கு ஆறுதலா இருந்தாள்! என் மாமனார் சம்பத்...என்னை எவ்வளவு நம்பினார். நான் திரும்பி வந்த போது என் கணவரே என்னை ஒதுக்கிய போது அவர் எனக்காக என் பக்கம் உறுதியா நின்னார். என் கணவரும் கூட என் மகளை நான் மீண்டும் தொல்லைக்கு ஆளாக்கி விடுவேனோன்னு பயந்து தான் என்னை விட்டு விலகினார். தேரை இழுத்து விடுவது போல் இத்தனை பேர் நான் வாழ, அழகான அபூர்வ பூமழை பொழிந்தனர். எனக்கு அன்பை அள்ளித் தந்தார்களே. வாய்ப்பை கொடுத்தார்களே...எவ்வளவு பெரிய கொடுப்பினை!...”
“அக்கா...உங்க வாழ்க்கை நல்லா இருக்கணும்னா நான் இங்கிருந்து போறது தான் நல்லது...” கனிகாவின் கண்களில் நீர் துளிகள்.
“பயித்தியக்காரி....விடிய விடிய உனக்கு இருபது வயது தான் ஆகுது. காதல் எப்படி வருதோ அப்படி மறையவும் இந்த வயதில் நடக்கூடிய விஷயம் தான். ஒருத்தனையே மனசில் நினைத்து...அந்த ஒருத்தன் கிடைக்காவிட்டால் அவனின் நினைவாலே வாழ்த்திட வேண்டும் என்கிற வைராக்கியம் அர்த்தமற்றது. மணல் வீடு கட்டிய சிறுமி அதில் குடித்தனம் நடத்த வேண்டும் என்று நினைப்பது மாதிரியான குழந்தைத்தனம் அது. உன் மனசு வளரணும். உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு. ஒருவன் வருவான். அதுவரை காத்திரு. இப்ப தான் உனக்கு படிக்க முடிகிறதே! லைப்ரரியன் கோர்ஸ் படி. நூலகத்தில் வேலை பார்....உன் வாழ்க்கை சந்தோஷமாக அமையும்..அதை விட்டிட்டு முகாரி ராகம் வாசிக்காதே.”
கனிகா திக்கென்று உணர்ந்தாள். அவளுக்கு சரவணன் மேல் உள்ள ஈர்ப்பு பற்றி செல்வி அக்கா புரிந்து கொண்டுவிட்டாளா? அவளுக்கு அவமானமாக இருந்தது. தலை குனிந்தாள். கைதி கூண்டில் நிற்பது போல் இருந்தது. அப்பொழுது மழை பெய்தது. இருவரும் மழையை வேடிக்கை பார்த்தார்கள்.
“கனிகா...இந்த மழையால் செம்மண் பூமி நீரோடு கலந்துவிடும். அது தான் எனக்கும் சரவணனுக்கும் உள்ள உறவு. ஆனால் தார் சாலையில் மழை விழுந்தால் அந்த சாலையை நீர் நனைக்கும் ஆனால் அது இரண்டறக் கலக்காது. இரண்டுங்கெட்டான் வயதில் வரும் காதலும் அப்படித்தான். சூரியன் வந்ததும் ஈரம் காய்ந்து விடுவது போல் மறைந்துவிடும். உன்னோட சூரியனை தேடி உனக்கு கட்டி வைப்பது என் பொறுப்பு. நீ இங்கு என் மகள் போல் இருக்கலாம். புள்ளி மான் போல் துள்ளலாம். நீயும் மஞ்சுவும் எனக்கு ஒன்று தான். சரியா? நீ எங்கும் போக வேண்டாம்....”
கனிகாவின் மனம் இந்த செல்வி என்னும் ஈர மழை துளியால் நிஜம் புரிந்து கொண்டது. செல்வியின் கை பற்றி என்னை மன்னித்துவிடுங்கள் என்றாள் கனிகா. செல்வி சிரித்தாள்.
“உன்னை நான் ஏன் மன்னிக்க வேண்டும் கனிகா நீ எந்த தவறும் செய்யவில்லை....சந்தோஷமா இரு.” கனிகா உள்ளே போனாள் புது மனுஷியாக. சரவணன் அங்கு வந்தான்.
“நான் கேட்டுக் கொண்டு தான் இருந்தேன். நீ மன்னிக்க வேண்டியது என்னைத் தான். அந்த பிஞ்சு மனதுடன் நான் தான் எல்லை மீறி...”
“விடுங்கள். அன்பு எல்லாவற்றையும் சரி செய்துவிடும். எனக்கு ஒரு காலத்தில் கை தூக்கி விட அன்பான மனிதர்கள் தேவையாக இருந்தார்கள். எனக்கு அந்த சலுகை கிடைத்தபோது நான் அந்த சலுகையை பிறருக்கு கொடுக்க வேண்டாமா.? எல்லோருக்கும் ஏதாவது ஒரு சமயம் சாய்ந்து கொள்ள தோள் வேண்டும். அது தான் வாழ்க்கை. வாங்க சாப்பிடலாம். நமக்கு இப்பொழுது மூன்று குழந்தைகள்..”
“மூன்றா?”
“ஆமாம்....ஆஷா, அஞ்சனா...கனிகா...”
சம்பத் இதை கேட்டார். சந்தோஷமாக இருந்தது. உங்களுக்கு அன்பு காட்டப்பட்டால் அதை நீங்கள் அடுத்தவருக்கு காட்டி உங்கள் வாக்கை அன்பென்னும் உண்டியலில் போடுங்கள்...என்று அவர் ஒரு புதிய மொழி கண்டுபிடித்தார். தன் டைரியில் எழுதி வைத்தார்.
முற்றத்தில் மழை துளிகள் விழுந்தது. சம்பத் பார்த்துக் கொண்டே இருந்தார். ஈரம் மெல்ல மெல்ல பரவியது. பார்க்க அழகாக இருந்தது. வாழ்க்கையிலும் ஈரம் பரவி அன்புச் சாரலில் அவர்கள் நனைந்து கொண்டிருந்தார்கள்.
மழை நிறைந்தது.