முற்றத்தில் விழுந்த மழைத் துளிகள்
அத்தியாயம்---8
மஞ்சு தான் முதலில் நொறுங்கிப் போன இதயத்தை பொறுக்கி எடுத்து ஒட்ட வைத்துக் கொண்டு காரியத்தில் இறங்கினாள். ஒரு தாயால் தான் அது முடியும். தனக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் குடும்பத்தில் உள்ள எல்லோர் நன்மையையும் கருதி தன் துக்கத்தை தூர எறிந்து விட்டு மற்றவர்களுக்காக வண்டி வண்டியாக ஆறுதல் சொல்லி தேற்றுவாள் தாய்.
“அப்பா...இப்ப என்ன அண்ணி ஓடிட்டாங்க...தேடுவோம். அதுக்கு முன்னாடி குழந்தையையாவது தக்க வச்சுக்க முயற்சி செய்வோம். குழந்தை என்ன பாவம் செய்தது? நாம கவனிக்காட்டி அது...அது...” செத்துபோச்சுன்னா என்று சொல்லக் கூட பயந்து நிறுத்தினாள். சம்பத் இந்த பத்து வயதிலேயே தாயாக மாறிப் போன தன் மகளைப் பார்த்து பெருமை படுவதா.....சின்னப் பெண்ணுக்கு வந்த சோதனையைப் பார்த்து கண் கலங்குவதா என்று தெரியாமல் தடுமாறினார்.
“அந்த செல்வி ஒரு தாயாகிவிட்டாள்...பொறுப்பில்லாமல் தன்னையும் நோகடித்து விட்டு...குழந்தையும் பரிதவிக்கவிட்டு...ஓடிட்டா. நீ பச்சக் குழந்தை. குருவி தலையில் பணங்கா வைப்பது மாதிரி ஆண்டவனே உன்னை தண்டிச்சிட்டானேம்மா...”
“சரிப்பா...நான் ஆஸ்பத்திரி போறேன்....நீங்க உங்களுக்கு சமச்சுக்கோங்க. நான் கேண்டீனில் வாங்கிக்கிறேன்...காசு கொடுங்கப்பா...”
“என்னால் காசு தான் கொடுக்க முடியும்...உனக்கு வல்லமை கொடுக்க முடியலை. மன்னிச்சிடு தாயி. நான் கையாலாகாதவனா இருக்கேன்.”
“நோ மோர் டீயர்ஸ்...வரேன்பா.”
ஆஸ்பத்திரியில் குழந்தையோடு மஞ்சு இருந்தாள். தினமும் நர்சிடம்
“இப்ப எப்படி இருக்கா பாப்பா? நல்லாயிடுவாளா?” என்று கேட்பாள் மஞ்சு. சரவணன் ஆபிஸ் போகும் நேரம் தவிர ஆஸ்பத்திரியில் தான் இருந்தான். குழந்தை ஐ.சி.யூவில் இருந்தது. இரண்டு வாரம் கழித்தும் ஜெனரல் வார்டுக்கு வரவில்லை. கவலையாக இருந்தது. நர்ஸ் மாதங்கி அவனிடம் சொன்னாள்.
“சார்..குழந்தை அந்த போதை மருந்தின் பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடவில்லை. உங்க மனைவி இப்படி விட்டிட்டு ஓடிட்டாங்களே!”
“குழந்தை பிழைக்குமா இல்லையா?”
“இன்னும் பத்து நாள் போனா தான் உறுதியா சொல்ல முடியும். முறுக்கி முறுக்கி அழுதிட்டிருக்கு. பால் சரியா குடிக்க மாட்டேங்குது. அந்தக் குழந்தைக்கு தாயின் தொப்புள் கொடி வழியாக போதை மருந்து போய்விட்டது. எப்படியெல்லாம் கஷ்டப்படுது தெரியுமா.? பரிதாபத்தின் பேரில் தான் ட்ரீட்மென்ட் கொடுக்கிறோம். ரொம்ப பதடிக் நிலைமை...”
“மனுசங்க ஏன் இப்படி நாசமாப் போறாங்களோ தெரியலை. என் பையன் கூட இந்த ஹெராயின் பயன்படுத்தியதால் இறந்தே போயிட்டான். வாழ வேண்டிய வயசில் இதுக்கு அடிமையாகி சீரழிஞ்சு போயிட்டான்” என்றார் ஒரு பெரியவர் சரவணனிடம். அவரிடம் அவன் கேட்டான்...
“எப்படி அவனுக்கு இந்தப் பழக்கம் வந்தது?”
“பள்ளியில் படிக்கும் போதே வந்திடுச்சு. சும்மா ஜாலிக்கு என்று ஆரம்பித்து சீரியஸ் ஆகிவிட்டது. வயது ஆக ஆக வெறி கொண்டு அலைஞ்சான். வீட்டில் உள்ள நகை..பணம்...விலை உயர்ந்த பொருட்கள்...கேமரா இந்த மாதிரி, எல்லாம் திருடிக்கிட்டுப் போய் விற்று அந்தக் கருமத்தை உபயோகிச்சு மயங்கிய நிலையில் வீட்டுக்கு வருவான். என்ன சொல்லியும் கேக்க மாட்டான். இவன் செத்தா தேவலை என்று கூட தோன்றும், அவன் படும் அவஸ்தையைப் பார்த்து. இப்ப செத்துப் போயிட்டான். நிம்மதியாவா இருக்கு? இந்த மாதிரி ஆனவங்களுக்கு மறுவாழ்வு மையம் இருக்காம். அது தெரியாம போச்சு. ஒரு வேளை அங்கு சேர்த்திருந்தால் குணமாகியிருப்பனோ என்னவோ...உங்க மனைவி ஒரு பொம்பளப் பிள்ள... அதுவும் ஒரு தாய்....எப்படி இந்தப் பழக்கம்?”
“அடிமையாயிட்டா ஆணென்ன பெண்ணென்ன எல்லாம் ஒன்று தான். இங்க தான் சமத்துவம் இருக்கு போலும்....யார் தான் இதெல்லாம் நாட்டுக்குள்ளே கொண்டு வராங்களோ? போலிஸ் எல்லாம் என்ன தான் பண்ணிட்டு இருக்கோ?” என்றான் சரவணன் விரக்தியுடன். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஒரு அவசர கேஸ்சை தட தடவென்று ஸ்ட்ரச்சரில் தள்ளிக் கொண்டு வந்தார்கள். விஷம் சாப்பிட்டுவிட்டு உயிருக்கு போராடுகிறானாம். காதல் தோல்வியாம்.
“இது வேற...காதலி விட்டுட்டுப் போனா என்ன? அப்பா அம்மா தங்கை தம்பின்னு இருப்பாங்களே அவங்களுக்காக வாழணும்னு இதுகளுக்கு தோணாதா? தற்கொலை பண்றவங்க எல்லாம் சுயநலம் பிடிச்சவங்க.”
என்று திட்டினார் அவர். அவர் முகத்தில் எரிச்சல் இருந்தது.
“தம்பி ஒரு காபி சாப்பிடலாமா?” என்றார். அந்த சமயம் மஞ்சு ஒரு ப்ளாஸ்கோடு வந்தாள். அண்ணனைப் பார்த்துவிட்டாள்.
“என்னண்ணா காப்பி சாப்பிடத் தானே? நானே வாங்கிட்டு வந்திட்டேன்.”
சரவணன் ப்ளாஸ்கிலிருந்து ரெண்டு கப் ஊற்றிக் கொண்டு மூடி வைத்தான்.
“சார்..இந்தாங்க...நீங்க ஒரு கப் எடுத்துக்கோங்க.”
“ரொம்ப தாங்க்ஸ் தம்பி. ஆமா யாரு இந்தப் பொண்ணு? உங்க மகளா?”
“இல்லே என் தங்கை. அவ தான் பள்ளியையும் விட்டிட்டு எனக்காக இங்கே பாடுபடறா. சின்ன தாய்....”
“சரி அண்ணா...நான் அண்ணியோட அம்மாவுக்கு காப்பி கொடுத்திட்டு வரேன்.”
அவள் போனதும் பெரியவர் கண்கலங்கினார்.
“இப்படி நல்ல பிள்ளைகளும் இருக்காங்க. நமக்கு கொடுத்து வைக்கலை. போதை மருந்து மண்ணாங்கட்டின்னு நாசமா போறாங்க..”
“எப்படித்தான் இந்த கர்மம் அவங்களுக்கு கிடைக்குதோ?” என்று வியந்தான்.
“அது ஒரு பெரிய நெட்வொர்க் தம்பி. பெரும்பாலும் பஞ்சாபிலிருந்து சப்ளை ஆகுதுன்னு சொல்றாங்க. ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தான் வருதாம். அங்கிருந்து பஞ்சாப் வருதாம். பிறகு நாடெங்கும் சப்ளை ஆகுது.
எப்படி அது இந்திய எல்லைக்கு வருது தெரியுமா? நீ நம்பமாட்டே.”
“எப்படி சார்?
“விவசாயிகள் மூலம்...”
“என்னது விவசாயிகள் மூலமா? நாட்டுக்கே சோறு போடறவங்களா விஷத்தையும் கொடுக்றாங்க? “ திடுக்கிட்டான் சரவணன். இது நிஜமா? நம்பவே முடியலையே!
“பாகிஸ்தான் இந்திய எல்லைப் பகுதியில் யாருக்கும் சொந்தமில்லாத நிலப் பகுதி இருக்கு. அங்கு விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கும் விவசாயிகள் சிலர் இந்த தீமையை காசுக்காக செய்றாங்களாம். சிலர் அந்த வீபரீதம் தெரியாமல் அப்பாவிகளாக அறியாமல் செய்கிறார்கள். வெள்ளை பாகெட்டுகளில் இந்த பௌடரை பாக் பண்ணி....இவங்க கிட்டே பாகிஸ்தான் மூலம் கொடுக்கப்படுது. ரகசிய சுரங்கம் கூட அமைசிருக்காங்களாம். கண்டுபிடிக்கப் பட்டிருக்கு. இந்த பாக்கெட்டுகளை வீட்டுக்கு எடுத்து போக வேண்டியது தான் இவர்கள் வேலை. அங்கிருந்து கொரியர் மூலம் நாடெங்கும் போகுது. இது ஒரு வழி. டில்லியிலும் இந்த தொழில் ரகசியமா நடக்குதாம். என்னவோ போங்க யாரை சொல்லி என்ன பயன் நம்ம வழக்கு தீருமா?”
“பயன்படுத்தறவங்க மனசு வச்சால் ஒழிய இந்த பயங்கரம் நிக்காது.”
செல்வியை தேடும் படலத்தில் சம்பத் இறங்கினார். போலீசில் புகார் கொடுத்தார். பத்திரிகை விளம்பரம் காணவில்லை என்று செல்வியின் போடோவோடு கொடுத்தார். அவள் தோழிகள் யாருக்காவது இது பற்றி தெரியுமா என்று விசாரித்தார். இது ஒரு பக்கம் நடக்க, குழந்தை ஒருவழியாக ஜெனரல் வார்டுக்கு வந்தது. இப்பொழுது அந்த பயங்கர கீச்சு அழுகை இல்லை. கையை காலை ஆட்டி சிரித்தது. பாட்டிலில் பால் குடித்தது.
“ஐய்...பாப்பா சிரிக்குது...” என்று குதித்தாள் மஞ்சு. அப்பாடா..குழந்தை பிழைத்துவிட்டது. குடும்பமே ஆனந்த கண்ணீர் வடித்தது. காவேரி அம்மா குழந்தையை ஏதோ தொத்து வியாதி வந்த குழந்தை போல் இருக்கு என்று முகம் சுளித்தாள். இவள் எல்லாம் ஒரு பாட்டியா என்று மஞ்சு கத்தினாள். சரவணன் பழயபடி குழந்தையை எடுத்துக் கொண்டு அப்பா வீட்டுக்கே வந்துவிட்டான். குழந்தையை பார்க்க ஒரு பெண்ணை நியமித்தார்கள். காவேரி அம்மாள் தன் மூத்த மகள் வைஜயந்தியின் பிள்ளைக்கு உடம்பு சரியில்லை என்று சாக்கு சொல்லிக் கொண்டு போவிட்டாள். கை கழுவி விட்டாள். மகள் செல்வி காணாமல் போனது பற்றி அவளுக்கு கவலையில்லை. நல்லவேளை என்று கூட நினைத்தாள்.
மஞ்சு பள்ளிக்குச் சென்றாள். குழந்தையின் சிரிப்பு சத்தம்...அழுகை சத்தம்...ங்கா என்னும் தித்திக்கும் மழலை மொழி எல்லாம் கேட்டு அணைவரும் ரசித்தனர். செல்வி இந்த அருமை காட்சியை பார்க்காமல் ஒடிவிட்டாளே. குழந்தை பிழைத்து விட்டதால் போலிஸ் பிரச்சனை வராது. அதை இருந்து பார்க்க தைரியம் இல்லமால் ஓடிய அவளும் ஒரு தாயா? என்று சரவணன் வெறுக்க ஆரம்பித்தான். மஞ்சு சொன்னது நிஜம் தான். யாரோ செல்விக்கு ஊசியப் போட்டுவிட்டு மஞ்சுவின் பையில் அதை போட்டு அவளை குற்றவாளி ஆக்கிவிட்டார்கள். இப்பொழுது புரிந்தது சரவணனுக்கு.
“நீ சொன்னது சரிதான் மஞ்சு...அந்த நாகு தான் இத செய்திருக்க வேண்டும்.”
“அண்ணா...அண்ணி எங்கே இருக்காங்களோ? குழந்தை அம்மா இல்லாமல் வளரணுமா? நாம் தான் அம்மா இல்லாமல் வளர்ந்தோம்...”
“விடு மஞ்சு. அவள் போனதே நல்லது. இருந்துகிட்டு பிள்ளைக்கும் அந்த ஊசியை போட்டு பழக்கினாலும் பழக்குவாள்....திருந்தாத ஜென்மம். அவளை நான் தலை மூழ்கிட்டேன். அவள் பேச்சை எடுக்காதே.”
எல்லாம் ஓரளவு சகஜ நிலைக்கு வந்து கொண்டிருக்கும்போது ஒரு நாள் தண்டமே என்று குழந்தையை பார்க்க வந்த காவேரி அம்மாள் சொன்னாள். “பேத்தி ஏன் பார்க்க மாட்டேங்கறா?”
“என்ன அத்தை உளறீங்க?”
“உளறலைப்பா...பாரு இந்த பொம்மையை அப்படி இப்படி அது கண் முன் காட்டறேன் அது கண் அசைத்து பார்க்க மாட்டேங்குது..”
சரவணன் முயற்சித்தான். சம்பத் முயற்சித்தார். மஞ்சு முயற்சித்தாள். குழந்தை பார்க்கவே இல்லை. சொரேர் என்றது அனைவருக்கும். டாக்டரிடம் ஓடினார்கள். அவர் பரிசோதித்து பார்த்துவிட்டு—
“ஸாரி மிஸ்டர் சரவணன். குழந்தைக்கு கண்பார்வை இல்லை.”
இடிந்து போனார்கள். போதை மருந்தின் காரணமாக குறை உள்ள பிள்ளை பிறக்க வாய்ப்புண்டு என்று சொன்னார்களே...சரியாகிவிட்டது. குழந்தை ஆஷா
அம்மாவை பார்க்கவில்லை அப்பாவை பார்க்கவில்லை...உலகத்தையே பார்க்கவில்லை.
சரவணன் செல்வியை வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்தான்.
“போதும் நான் பட்ட கஷ்டம். இதை அனாதை இல்லத்தில் சேர்த்திடுங்க.”
“என்னடா பேச்சு இது? பாவம்..பச்சக் குழந்தை என்ன செய்யும்? கண்டிப்பா நாம தான் நல்லபடியா பார்த்துக்கணும். கண் பார்வை இல்லாட்டி என்ன? உயிரோடு இருக்கே அது போதும்.” என்று சம்பத் துக்கத்தையும் மீறி சொன்னார். இந்த நேரம் சரவணனின் மாமனார் பத்ரிநாத்துக்கு ஹார்ட் அட்டாக் வர அந்தம்மாள் அலறி அடித்துக் கொண்டு அங்கு ஓடிவிட்டாள்.
“இப்ப யார் பிள்ளையை.....அதுவும் கண் தெரியாத பிள்ளையை பார்த்துக்கறது.? பேசாம நான் சொன்னபடி..”
“போதும்...அப்படியெல்லாம் சொல்லாதே அண்ணா. ஆஷாவை நான் அனாதை இல்லத்தில் சேர்க்க விட மாட்டேன். அண்ணா நாம ஒரு நல்ல நர்சாப் பார்ப்போம்....அது வரை நான் பார்த்துக்கிறேன்...”
மஞ்சு குழந்தையை தாலாட்டினாள். பசியாற்றினாள். குளுப்பாட்டினாள். உடை மாற்றினாள். கண்ணும் கருத்துமாகப் பார்த்தாள். குழந்தை தவழ ஆரம்பித்தபோது தான் சீதாம்மா வந்து சேர்ந்தாள். அதன் பிறகு தான் அந்த வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக அமைதி நிலவ ஆரம்பித்தது. செல்வியை எல்லோரும் மறந்து போயினர். எங்கிருந்தும் எந்த தகவலும் வரவில்லை. தேடுவதையே நிறுத்தி விட்டார்கள்.
ஆஷா பேச ஆரம்பித்தாள் முத்து முத்தான பேச்சு. துறுதுறு குழந்தை. அப்பாவை பேச்சாலேயே மகிழ்வித்தாள். பார்வை இல்லை என்ற கவலையே இல்லாமல்
“எனக்கு கண் தெரியாட்டி பரவாயில்லை. சீத்தாம்மா எனக்கு கண்ணா இருக்காங்களே.” என்று சொல்லும் குழந்தையை யார் தான் வாரி எடுத்து கொஞ்ச ஆசைபடமாட்டார்கள்? ஆனால் படிப்படியாக ஒரு சுணக்கம் வந்தது. சரவணனுக்கு தோல்வி மனப்பான்மை வந்தது. நம்ம பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தக் குறை? எல்லாம் அந்த செல்வியால் வந்தது. கேட்பவர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. அவன் மனைவி போதை மாத்திரைக்கு அடிமையாகி கண் தெரியாத குழந்தையை பெற்றுவிட்டு ஓடிவிட்டாள் என்று இளக்காரமாக பேசத் தலைப்பட்டனர்.
“குடும்பப் பெண்ணா லட்சணமா இல்லாம...எப்படி இந்த பழக்கமெல்லாம் வந்ததோ? சரவணனுக்கு பொண்டாட்டியை கண்டிக்க துப்பில்லை.”
“பிள்ளை பிழைதத்தே மறு பிழைப்பு. என்ன குடும்பமோ?”
“இந்த குழந்தையும் செத்துப்போயிருந்தா பிரச்சனை இல்லை. உசுரோட இருந்து அதுக்கும் பாரம்...பார்க்கிறவங்களுக்கும் பாரம்..”
இப்படி பேச்சு இன்னமும் ஓயவேயில்லை. சிலரோட விஷ நாக்குகள் எவ்வளவு பேரோட குடும்ப வாழ்கையை பாதிக்கிறது என்று யாரும் சிந்திப்பதில்லை. சரவணன் அப்பாவிடம் இது பற்றி கொதித்துப் பேசுவான்.
“இவங்களுக்கெல்லாம் இப்படி பேச வெட்கமா இல்லை? பேசாம அவங்க நாக்கை அறுத்திடனும்னு தோணுதப்பா.”
“நம்ம பத்தி யார் வேணா என்ன வேணா பேசட்டும். நமக்கு நம்மைப் பத்தி தெரியும். நீர் வற்றிப் போன ஆற்றில் வரி வரியா மணல் கோலம் போடும். அது மாதிரி தான் தவறு நடந்த குடும்பத்தில் நாக்குகள் வரி வரியாக பேசி
உள்ளத்தில் சுடுகோலம் போடும்.. நாம் தான் இதெல்லாத்தையும் புறக்கணிக்க கத்துக்கணும்டா. நமக்கு என்ன குறைச்சல்? குழந்தையே இல்லாம எத்தனை வீட்டில் தவம் இருக்காங்க? நமக்கு எவ்வவளவு பெரிய பாக்கியம் சொல்லு?
புத்திசாலியான குழந்தை. அருவி மாதிரி பேச்சு. அம்மன் மாதிரி அழகு. கண் தானம் கிடச்சா கண் தெரியும்னு டாக்டர் சொல்றார். பதிவு பண்ணியிருக்கோம். கண்டிப்பா ஒரு நாள் ஆஷாவுக்கு கண் பார்வை வரும்.”
சம்பத் தன்னம்பிக்கையோடு பேசுவார். சரவணனுக்கு அந்த நேரம் ஆறுதலாக இருக்கும். பிறகு அது காற்று போன பலூன் மாதிரி போய்விடும். மஞ்சு ஆஷாவிடம் அன்பாக பேசி பழகுவாள்...ஆனால் ஆஷாவுக்கு சீத்தாம்மா வந்த பிறகு யாரும் தேவையாக இருக்கவில்லை.
“நான் பல் தேய்த்து விடுகிறேன் ஆஷா..”
“வேண்டாம் அத்தை...சீத்தாம்மா தான் நல்ல தேய்ப்பாங்க..”
இப்படி அவள் சொல்லி சொல்லி மஞ்சுவுக்கு ஆஷாவை கவனிக்கும் பொறுப்பு இல்லாமல் போனது. இருவருக்குள்ளும் ஒரு இடைவெளி வந்துவிட்டது. நாளடைவில் மஞ்சு தன் தோழிகள், தன் படிப்பு என்று திசையை மாற்றிக் கொண்டாள். சரவணன் ஆபிஸ் நண்பர்கள், சினிமா...கிளப்பில் டென்னிஸ் விளையாடுதல் என்று வேறு நோக்கங்களில் தன் ஏமாற்றத்தை மறைக்கப் பார்த்தான். ஒரு சமயம் ஒரு நண்பன் அவனிடம் சொன்னான்.
“எதுக்கு நீ மத்தவங்க அத சொல்றாங்க இத சொல்றாங்கன்னு வொர்ரி பண்ணிக்கிறே? சில பேர் வார்த்தைகள் மருந்து மாதிரி மனக் காயத்தை ஆத்தும். சில பேர் வார்த்தை மனசை கொல்லும் விஷமாக இருக்கும்.. இவர்கள் வார்த்தைகளை மிஸ்யூஸ் பண்றாங்க. அவர்கள் வாயால் சொல்வதை நீ மனதினால் சிந்தித்தால் உன் அமைதி கெடும். தவறான வார்த்தைகளை குப்பை தொட்டியில் போடு...மனதில் போடாதே...” என்றான் நண்பன்.
மாதங்கள் உருண்டன. இந்த பயிற்சியை அவன் முயற்சித்துக் கொண்டே இருக்கிறான். சீத்தாம்மா போய்விட்டாள். இன்னொரு இடி. இப்போது மனசு ஸ்தமித்துவிட்டது. இன்னொரு சீத்தாம்மாவுக்கு எங்கே போவது? வாசலில்
“அய்யா...நான் வரலாமா?” என்ற குரல் கேட்டது. பெண் குரல். யாரது? சம்பத் எட்டிப் பார்த்து மகிழ்ந்தார். சரவணன் கேள்விக் குறியோடு பார்த்தான். மஞ்சு எரிச்சலோடு பார்த்தாள். இவளா? இவள் எங்கு இங்கு வந்தாள்? துரதிர்ஷ்டம் நம்மை விட்டுப் போகவே போகாதா? என்று மஞ்சு நினைத்தாள்.
ழழை விழும்