முற்றத்தில் விழுந்த மழை துளிகள் ---5
அத்தியாயம்...5
ரயில் பயணங்களின் போது ஸ்டேஷனில் வெயிட்டிங் ரூம் என்று ஒன்று இருக்கும்...வாழ்க்கை பயணத்தில் மனம் தான் மிகப் பெரிய வெயிட்டிங் ரூம். எதற்காகவாவது மனம் காத்துக் கொண்டே இருக்கிறது. அவசரப்பட்டு மஞ்சுவை செல்வி அடித்ததற்குக் காரணம் அவள் குற்ற உணர்வு தான். அவளுக்குத் தெரியும் நாகம்மை ஒரு நச்சு என்று. ஆம் அவள் தான் செல்விக்கு போதை மருந்து கெட்டப் பழக்கத்தை கற்றுத் தந்தவள்.
நாகுவும் அவளும் உற்ற தோழிகளாக இருந்த நாட்கள் செல்வியைப் பொறுத்தவரை ஒரு வசந்த காலம். செல்விக்கு தன் அழகின் மேல் எப்பவும் ஒரு கர்வம் உண்டு. அவள் எங்கே போனாலும் அவளை முதலில் கவனித்து அவளுடன் பேச ஆசைப்படுவார்கள். கடைக்குப் போனாலும் சரி. சினிமாவுக்குப் போனாலும் சரி...பிறந்த நாள் விழாக்களுக்கு போனாலும் சரி..ஏன் ஆஸ்பத்திரியில் யாரையாவது அவள் பார்க்கப் போனாலும் சரி...அவள் பெரிதாக நோயாளிக்கு சம்பந்தப்படாவிட்டாலும் அவளைப் பார்த்து தான் பேசுவார் டாக்டர். நாகு ஒல்லியாக பல் எடுப்பாக இருப்பாள். செல்வி கூட அவள் வரும்போது திருஷ்டிப் பரிகாரம் மாதிரி இருப்பாள். பலரும் அவளை கேலி செய்து அவள் முதுகுக்குப் பின்னால் ஈர்க்குச்சி என்பார்கள்.
“நாகு அதுக்கெல்லாம் நீ அப்செட் ஆகக் கூடாது. எல்லாப் பெண்களும் அழகு தான். உனக்கு எவ்வளவு அழகான கண்கள் தெரியுமா?”
“நிஜமாவா?”
“சத்தியமா....டென்டிஸ்ட் கிட்ட போய் உன் முன்பல்லை சரி பண்ணிக்கோ அப்புறம் பாரு நீ தான் ஐஸ்வர்யா ராய்...”
நாகு அதன் பிறகு கண்ணாடியில் தன் உருவத்தை மணிக்கணக்கில் ஆராய்ந்து பார்த்தாள். அவளுக்கே பல அழகுகள் தெரிந்தது. செல்வி சொன்னதை நம்ப ஆரம்பித்தாள். உன் அடர்த்தியான கூந்தல் ஒன்றே போதுமே என்று சொல்லியிருந்தாள் செல்வி. தன் பல்லை கிளிப் போட்டு அமுக்கி....பிறகு கொஞ்சம் ராவி விட்ட பின் நாகு உண்மையில் ஒரு புது நாகுவாக ஆகிவிட்டாள். இது நடக்க மூணு வருஷம் ஆகிவிட்டது. அந்த மூணு வருஷம் இருவரும் உற்ற தோழிகள் ஆனார்கள்.
கல்லூரியில் முதலாம் வருடம் எம்.ஏ படித்துக் கொண்டிருந்தார்கள். ஆண்களும் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வகுப்பில் ஷாந்தா ராம் என்று ஒரு வட நாட்டு பையன் படித்துக் கொண்டிருந்தான். அவன் நல்ல உயரம். செக்கச் செவந்த நிறம். பணக்காரன். படு சுட்டி. படிப்பில் கெட்டி.
அவனிடம் சில பாட சந்தேகங்கள் கேட்கச் சென்றாள் நாகு. வகுப்புகள் முடிந்த மாலை வேளையில் கூடுதல் ஒரு மணிநேரம் அவன் நாகுவுக்காக ஒதுக்கி சொல்லித் தர ஒப்புக் கொண்டான். கல்லூரி வளாகத்தின் மரநிழலில் ஒரு சிமென்ட் மேடையில் அமர்ந்து படித்தனர். நாகு செல்வியையும் உடன் இருக்கச் சொன்னாள். செல்வியின் மேஜர் வேறு. நாகுவின் மேஜர் வேறு.
“செல்வி...ஷாந்தா ராம் எனக்கு பாடத்தில் உள்ள சந்தேகங்களை விளக்குவதா சொல்லியிருக்கான். நீயும் கூட இருடி. பயமாயிருக்கு.” என்றாள். இருவரும் ஒரே பஸ்ஸில் போவார்கள். எனவே லைப்ரரியில் எடுத்த ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டு செல்வி சற்று தள்ளி அமர்ந்து அவளுக்காக காத்திருப்பது வழக்கமாயிற்று. பாடம் முடிந்து கிளம்பும் போது மெதுவாக ஷாந்தா ராம் செல்வியிடம் பேச்சுக் கொடுப்பான். ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள். ஷாந்தா ராமுக்கு தமிழ் தெரியாது. செல்வியை அவன் ஆர்வமுடன் பார்த்து கேட்டான்
“உங்களுக்கு புத்தகங்கள் என்றால் ரொம்பப் பிடிக்குமா?”
“ஆமா...ஆங்கில கிளாஸிக் நாவல்கள், கவிதைகள் பிடிக்கும்.”
முதலில் சாதாரணமாகப் பேசியவன் மெல்ல ஈர்ப்புடன் பேசினான்.
“என்ன மாதிரி கவிதைகள் பிடிக்கும்?”
“வோர்ட்ஸ் வொர்த் கவிதைகள் ரொம்பப் பிடிக்கும்..”
“இப்ப உங்க கையில் இருப்பது “சாலிட்டரி ரீப்பர்” தானே? எனக்கும் அது பிடிக்கும். ஆரம்பமே அழகாயிருக்கும். தனியாக ஒரு கிராமத்துப் பெண் வயலில் கதிர் அறுத்துக் கொண்டிருக்கிறாள். அவள் பாடிக் கொண்டே
வேலை பார்க்கிறாள். அந்தப் பாட்டுக்கு அவருக்கு அர்த்தம் புரியவில்லை. ஏனென்றால் அவள் பாடும் பாஷை அவருக்குத் தெரியாது. எது பற்றி பாடுகிறாள் என்று புரியாவிட்டாலும்...அவள் பாட்டு அவர் நெஞ்சில் வெகு காலம்...பாட்டு முடிந்தபோதும் நிறைந்திருக்கிறது...”
“ஆமாம்...அவளைக் கடக்கும் போது நிசப்தமாக செல்...அல்லது அப்படியே நின்றுவிடு... என்கிற வரி எனக்கு ரொம்பப். பிடிக்கும்.
“stop here or gently pass.” ரொம்ப ஆழமான வரி...”
அவனுக்கு தமிழ் தெரியாது. ஆங்கிலத்தில் தான் அவனுடன் பேசவேண்டும். அவளுக்கு ஹிந்தி தெரியாது. அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
“நான் ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ படிக்கிறேன். எனக்கு ஆர்வம் இருக்கு. நீங்க சைக்காலாஜி மெயின். உங்களுக்கு எப்படி ஆங்கில இலக்கியத்தில் ஈடுபாடு?...” வியப்புடன் கேட்டாள் அவள். இவர்களின் இலக்கிய பேச்சு நாகுவுக்கு ரசிக்கவுமில்லை பிடிக்கவுமில்லை. என்ன உளறுகிறார்கள் என்று எண்ணுவாள்.
“நேரமாகிறது...போகலாம் செல்வி. பஸ் மிஸ் பண்ணிவிட்டால் பிறகு அடுத்த பஸ் அரை மணி கழித்து தான் வரும்.” செல்விக்கு அவனுடன் பேசுவதில் அர்வமிருந்தது. ஒரு புதிய உலகத்துக்குள் போவது போல் இருந்தது.
ஒரு நாள் நாகுவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து முடிந்ததும் ஆர்வத்துடன் ஷாந்தா ராம் செல்வியிடம் பேச வந்தான். நாகு எரிச்சல் அடைந்தாள்.
“செல்வி....சரோஜினி நாயுடு கவிதைகள் படிச்சிருக்கீங்களா?”
“ஒ..” என்று துள்ளிவிட்டாள் செல்வி. அற்புதமான வைர வரிகள் கொன்ட கவிதையான ‘ஆட்டம் சாங்’ {இலையுதிர் கால பாட்டு} ...செல்விக்கு ரொம்பப் பிடிக்கும். அவனுக்கும் பிடிக்கும் என்று சொன்னான். இலையுதிர் காலத்தில் ஒரு பாட்டு என்ற தலைப்பில் ஒரு காவியமாகவே திகழ்ந்தது அந்த வரிகள்.
“முதல் வரியே மனசை அள்ளிக் கொண்டு போகும்.
சோகமான சந்தோஷம் மனதில் முகிழ்வது போல்
சூரிய அஸ்தமனம் மேகத்தில் தொங்குகிறது...
வாழ்க்கை சந்தோஷமும் துக்கமும் கலந்த ஒன்று என்று எவ்வளவு அழகாக இயற்கையின் ஒப்பிடலுடன் எடுத்துக் காட்டுகிறது இந்தக் கவிதை..” என்றாள்.
நாகம்மாவுள் பொறாமை தீ மூண்டது. தன்னிடம் பேசாமல் இவன் எப்பொழுதும் அவளுடன் பேசுவதையே பொழப்பா வச்சிருக்கானே என்று ஆங்காரம் வந்தது. அவளுக்கு செல்வி எதிரியானாள். அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை நாகு. செல்வி மிகவும் நல்ல மாதிரி ஆகையால் நாகுவின் பொறாமை தீயை அவள் உணரவில்லை. ஒரு குழந்தையின் சந்தோசம் பொங்க பேசினாள்.
நாகு ஷாந்தா ராமை காதலிக்க ஆரம்பித்தாள். அவனின் உயரத்துக்கு அவள் உயரம் தான் சரியான பொருத்தம் என்று எண்ணினாள். ஷாந்தா ராம்
“இனி உங்களுக்கு சந்தேகங்கள் இருக்காது என்று எண்ணுகிறேன்..”
என்று பாடத்தை முடித்துக் கொள்ள முயற்சித்தான்.
“இந்த டெர்ம் முடியும் வரை சொல்லித் தாங்க...” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். தான் செய்த மிகப் பெரிய தவறு அது தான் என்று பின்னாளில் அவள் வருந்தாத நாளில்லை. சாந்த ராம் ஒரு நாள் ஒரு கடித உறைய அவளிடம் கொடுத்து செல்வியிடம் கொடுக்கச் சொன்னான்.
“என்ன? கடிதம்? நீங்களே கொடுங்களேன். அல்லது ஈமெயில் பண்ணுங்கள். நான் வேணா செல்வியின் மெயில் ஐ.டி தரவா?”
“வேண்டாம்...நானே கேட்டு வாங்கிக்கிறேன். முதலில் அவங்களுக்கு நான் எழுதினால் பிடிக்குமா என்று தெரிந்து கொள்ளவேண்டுமல்லவா? அதான் இந்த கடிதம். ப்ளீஸ் கொடுத்து விடுங்கள்...”
“சரி...” என்று வாங்கிக் கொண்டு போன நாகு, அதை செல்வியிடம் கொடுக்கவில்லை. பிரித்துப் படித்தாள். ஷாந்தா ராம் செல்விக்கு எழுதிய காதல் கடிதம். நாகுவின் நெஞ்சு எரிந்தது.
அன்பு செல்வி
உங்களை நினைக்கும்போது எனக்கு வீணையின் ஞாபகம் வருகிறது. சரஸ்வதி போல் வீற்றிருக்கும் நீங்க, இசைக்காத வீணையாக தெரியறீங்க. பேசும்போது மீட்டப்பட்ட வீணை மாதிரி இசை வெள்ளத்தில் மூழ்கடிக்றீங்க..
உங்க அறிவார்ந்த பேச்சு, ஷேக்ஸ்பியர் ரோஜாவாக உருவெடுத்து வந்தது போல் தோன்றுகிறது. காலமெல்லாம் உங்களோடு வாழ்க்கைப் படகில் பயணிக்க ஆசைப்படுகிறேன்....உங்களுக்கு சம்மதம் என்றால் அடுத்த முறை நாம் சந்திக்கும் போது, மல்லிகைப் பூவை சரமாக உங்க விரிந்த கூந்தலில் தொங்க விட்டு வாங்க. சம்மதம் இல்லையென்றால் சிவப்பு ரோஜாவை வலது காதருகே வைத்துக் கொண்டு வாங்க. உங்க வரவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். மணம் வீசும் தாழை மடல் போல் என் மனமெல்லாம் உங்க நினைவு மணக்கிறது.
அன்புடன் உங்க ஷாந்தா ராம்.
நாகு இந்தக் கடிதத்தின் நாதத்தை வீணையின் தந்தியை அறுப்பது போல் அறுத்து எறிந்தாள்.
வீணையாமே....ரோஜாவாமே...ஷேக்ஸ்பியராமே....ராஸ்கல் எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டு அவளிடம் காதல் பாடம் நடத்துகிறானா? எவ்வளவு திமிர்! அடுத்த முறை கிளம்பும் போது நாகு ஒரு சிகப்பு ரோஜாவை எடுத்துக் கொண்டு வந்து செல்வியிடம் கொடுத்தாள்.
“செல்வி இந்த ரோஜாவை உன் வலது காதருகே வச்சுக்கோ. உனக்கு ரொம்ப அழகா இருக்கும்.” என்று கொடுத்தாள். செல்வி தோழி கொடுத்தாளே என்பதற்காக வைத்துக் கொண்டாள். அதை பார்த்த ஷாந்தா ராமின் மனம் உதிர்ந்த மலர் போல் ஆகிவிட்டது. ஷாந்தா ராம் ஒரு மரியாதை தெரிந்த வாலிபன். ஜென்டில்மேன்....அதற்கு மேல் அவன் வற்புறுத்த விரும்பவில்லை. ஒதுங்கிக் கொண்டான். ஆனால் செல்வியின் ஞாபகங்களை அவனால் ஒதுக்க முடியவில்லை. இரவில் படுக்கும் போது தெரியும் நட்சத்திரங்களைப் பார்த்து அவள் கண்களை நினைவுபடுத்திக் கொண்டான். மென்மையான காதலன் அவன். செல்விக்கு மட்டும் தெரிந்திருந்தால் அவளும் காதலித்திருக்கலாம். ரோஜாச் செடியல் வெந்நீர் ஊற்றுவது போல் நாகு இருவரையும் பிரித்துவிட்டாள். தொடங்கும் முன்னபே ஒரு காதல் செத்துவிட்டது.
“பாடத்தை முடிச்சுக்கிறேன் ஷாந்தா ராம். இவ்வளவு நாள் நீங்க சொல்லிக் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ். இது உங்களுக்கு என் காணிக்கை..” என்று
நாகு ஒரு அழகிய பளிங்கு தாஜ்மஹாலை கொடுத்தாள். அதை அவன் வாங்க மறுத்துவிட்டான். “உங்களை நேசிக்கிறவருக்கு இதை கொடுங்க...”
“நீங்க தான் நான் நேசிக்கிறவர்.” என்றாள் நாகு.
“ஸாரி...என் மனசில் ஏற்கனவே ஒரு மும்தாஜ் இருக்கிறாள்.”
“அப்படியா? யாரது/”
“அது என் பர்சனல்.”
“ஒ...அவளும் உங்களை காதலிக்கிறாளா?”
“இல்லை...ஒரு வேளை காதலிக்கலாம். காத்திருப்பேன்.”
“நீங்க செல்வியை சொல்றீங்களா?”
“உங்களுக்கு எப்படி தெரியும்?”
“ஒரு ஊகம் தான். ஆனால் அவள் உங்களுக்கு கிடைக்க மாட்டாள். அவளுக்கு கல்யாணம் நிச்சயமாகிவிட்டது..” இன்னும் கொஞ்சம் வெந்நீர்....
ஷாந்தா ராம் மனம் சுக்கு நூறாக உடைந்தது. அவன் மனம் சோக கீதம் இசைக்கத் தொடங்கியது. நாகு எவ்வளவு முயன்றும் அவளால் அவன் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை. இதற்கு காரணம் செல்வி தான் என்று அவளை பழி வாங்க நினைத்தாள்.
நாகுவுக்கு பல தரப்பட்ட நட்பு வட்டாரம் இருந்தது. அதில் ஒன்று போதை மருந்து பயன்படுத்தும் கூட்டம் ஒன்றும் இருந்தது.. இந்த பழக்கத்தை செல்விக்கு கற்றுக் கொடுத்து அவள் வாழ்க்கையை நாசம் பண்ண முடிவு பண்ணிவிட்டாள். செல்வியை அதுக்கு மெல்ல மெல்ல அடிமை ஆக்கினாள்.
கல்வி அறிவும் தெளிந்த மனமும் அன்பான மனசும் உள்ள செல்வி நாகுவின் கைபொம்மை ஆனாள். ஒரு கோபுரம் குப்பை மேடாக சரிந்தது. போதையில் விழுந்தால் அப்படித்ததான் ஆகும் வாழ்க்கை. தெரிந்தே தவிர்க்கமுடியாத பள்ளத்தில் விழுவார்கள்.
செல்விக்கு அறிவுரை சொல்லி அவளை நல்லவிதமாக வாழவைக்க பெற்றோர் தீர்மானித்து சரவணனுக்கு கட்டி வைத்தார்கள். செல்வி மனம் மாறி வாழத் தொடங்கியது நாகுவுக்குத் தெரிந்தது. எப்படியோ அவள் வளைகாப்பு பற்றி தெரிந்து கொண்டு அங்கு வந்துவிட்டாள். சிறு பெண்ணான மஞ்சுவின் எதிர்ப்பு வீண் பிடிவாதம் என்று முத்திரை குத்தப்பட்டு அலட்சியப்படுத்தப்பட்டது. மஞ்சு மனம் விரக்தி அடைந்தது.
மலை விழும்