முற்றத்தில் விழுந்த மழைத் துளிகள்.
அத்தியாயம்---1
மழை நீர் தேங்கலில் பின் சக்கரம் அமுங்கி உயிரை விட்டிருந்தது. கார் நட்டநடு வீதியில் உட்கார்ந்துகொண்டது. சம்பத் மகளைப் பார்த்து சொன்னார். “பார்த்து ஓட்டவேன்டாமா மஞ்சு...இப்படி பண்ணிட்டியே.”
மஞ்சு முகத்தை சுளித்தாள். படபடவென்று மொழிந்தாள்.
“இதெல்லாம் ஒரு ரோடு.....ஹைவெய்ஸ்லேயாவது நிம்மதியா ஓட்டலாம் என்றால் அங்கங்கே பள்ளம்...நான்சென்ஸ். இந்த அரசியலவாதிகளை எல்லாம் உள்ளே தள்ளணும் அப்பா...மக்களோட வரிப் பணத்தை வாரி வாயிலே போட்டுக்கிட்டு...ரோடெல்லாம் கேவலமா வச்சிருக்காங்க..”
சம்பத் சிரித்தார். அவருக்குத் தெரியும் இப்படித் தான் அவள் பொரிவாள் என்று. செல்லமாக வளர்ந்தவளாச்சே. கரடு முரடான பாதையில் நாம் தான் சற்று மெதுவாக ஒட்டவேண்டும். அது ரோடானாலும் சரி மனிதர்கள் ஆனாலும் சரி. கரடு முரடான மனிதர்களும் இருக்கிறார்களே! அனுசரித்தல் என்ற சொல்லையே மறந்தவள் போல் இருக்கிறாள். முன்பெல்லாம் இப்படியா இருந்தாள்? வாழ்க்கையின் துன்பங்கள் அவள் குணத்தையே மாற்றிவிட்டது. அவர் இறங்கி...நாலு பேரை கூப்பிட்டு காரைத் தள்ளிக் கொண்டு சாலை ஓரம் நிப்பாட்டினார்.
அப்பாடா...அடுத்தவருக்கு இடைஞ்சல் இல்லாமல் ஓரம் கட்டியாச்சு. சுற்றும் முற்றும் பார்த்தார். நாலைந்து பேர் நின்றுகொண்டிருந்தார்கள்.
“அய்யா...நீங்க டயர் வச்சிருந்தா மாத்திடலாம்...” என்றான் ஒரு ஆள். மற்றவர்களும் உதவி செய்ய தயாராக இருந்தார்கள்.
“இருக்குப்பா...கொஞ்சம் உதவி செஞ்சா..”
“சரிங்க அய்யா.......என் பேர் கணபதி. இந்த ஊர் தான். நல்லவேளை...எங்க கிராமத்து கிட்ட வண்டி நின்னுச்சு. இல்லே உங்க பாடு கஷ்டம் தான்..”
மற்ற மூவரும் கிளம்பினர். அவர்களுக்கு நன்றி சொன்னார் சம்பத்.
“பரவாயில்லே சார்..ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யலேன்னா அப்புறம் மனுஷனாப் பொறந்து என்ன பிரயோசனம்? கணபதி...அப்ப சாருக்கு உதவி செய்திட்டு சைக்கிள் கடையாண்ட வா...” என்றபடி சென்றனர்.
அந்த கணபதியும் அவரும் சேர்ந்து டயரை மாற்ற ஆரம்பித்தனர்.
“சார்..உங்க மகளா காருக்குள்ளே இருக்கறது?”
“ஆமாப்பா....ஒரு கல்யாணத்துக்கு காரிலேயே போயிட்டு வரோம். மழை பிடிச்சுக்கிச்சு...இப்ப தான் நின்னிருக்கு. இந்த ரோடு சரியில்லை...”
“ஆமா சார்...என்ன பண்றது? நாங்களும் மனுவுக்கு மேல் மனு எழுதி போட்டாச்சு.....சரி பண்ணாமே வச்சிருக்காங்க. இவங்க ஆடி அசஞ்சு செய்யறதுக்குள்ளே இன்னும் எத்தனை ஆக்சிடென்ட் நடக்குமோ?”
காரின் உள்ளிருந்து மஞ்சு தலையை நீட்டி எட்டிப் பார்த்து படபடத்தாள். அவள் குரலில் எரிச்சல்.
“என்னப்பா? ரொம்ப நேரம் ஆகுமா? எனக்கு இங்கே மூச்சுமுட்டுது.”
“சார்...உங்க மகளை...அதோ அந்த வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுக்கச் சொல்லுங்க. கனிகா நல்லா பார்த்துப்பா.”
அவன் சுட்டிக் காட்டிய திசையில் கண்களை ஓட்டினார் சம்பத். ஒரு ஒட்டு வீடு தெரிந்தது. அங்கு ஒரு பெண் அமர்ந்திருப்பது தெரிந்தது. இளம் பெண். சுமார் இருபது வயதிருக்கலாம். மஞ்சுவை விட நாலு வயது பெரியவளாக இருக்கவேண்டும். மஞ்சு கார் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
முகத்தில் கடுகடுப்பு குறையவில்லை. அவள் அழகிய முகத்தில் கடுகு போட்டால் பொரிந்து விடும் போல் இருந்தது.
“கொஞ்ச நேரமாகும் மஞ்சு...நீ அதோ அந்த வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுக்றியா? “ அவர் சொல்லி முடிக்கவில்லை மஞ்சு முறைத்தாள். யார் வீட்டிலோ போய் உக்காரணுமா?
“கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோம்மா. கனிகா கூட பேசிட்டிருந்தேன்னா, பொழுது போறதே தெரியாது...” என்றான் கணபதி. இவனெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ணற நிலைமையில் இருக்கேன் என்று முணுமுணுத்துக் கொண்டே அந்த ஒட்டு வீட்டை நோக்கிப் போனாள் மஞ்சு.
சிறிது நேரத்தில் வேலை முடிந்தது.
“அய்யா..அப்ப நான் கிளம்பறேன். சந்தைக்குப் போய் காய்கறி வாங்கியாரனும் பக்கத்து டவுனுக்குப் போவணும்...அய்யா இருங்க உங்க கையெல்லாம் சேராயிடுச்சு...கை கழுவ தண்ணி கொண்டாறேன்..”
“இருக்கட்டும் கணபதி...நீயம் கை கழுவணுமே. வா போலாம்.”
“நான் கை கழுவிட்டு தண்ணீ எடுத்து வாரேன். இருங்க...”
அவன் போனதும் சம்பத் நிதானமாக வானத்தை அண்ணாந்து பார்த்தார். மழை மேகங்கள் காணாமல் போயிருந்தது. சூரியன் திருட்டு முழி முழித்துக் கொண்டு மலை முகட்டிலிருந்து தங்க ரேகைகளை தங்கக் கம்பிகள் போல் பரப்பத் தொடங்கியிருந்தான். இளம் சூரியனில் சிகப்பு மிச்சமிருந்தது.
இலைகளில் ஒட்டியிருந்த நீர்த் துளிகள் மரத்துக்கு நகை அனுவித்த மாதிரி சூரிய ஒளியில் மினுமினுத்தது. இயற்கைக்கு ஒரு சலாம் போடலாம் போல் இருந்தது. மெளனமாக மனிதனோடு பேசும் வித்தை இந்த இயற்கைக்குத் தான் கைகூடும். தூரத்தே ரயில் ஒன்று சக்கர சத்தத்துடன் சங்கீதம் பாடிக் கொண்டே போயிற்று. வயல்வெளி அருகே ஒரு சின்னக் கோவில் தெரிந்தது. கோபுரம் இல்லை. பெரிய கட்டடம் எல்லாம் இல்லை. ஒற்றை மண்டபம், அதற்குள் பிள்ளயார் ‘எல்லோரும் நல்லாயிருங்க’ என்று சொல்வது போல் வீற்றிருந்தது. காலை எட்டு தான் ஆகியிருந்தது என்று அவர் கைகடிகாரம் சொல்லிற்று. கணபதி கையில் ஒரு வாளி தண்ணீருடன் வருவது தெரிந்தது. மிகவும் எளிய மனிதர்கள். எழுதப் படிக்க மட்டும் தெரிந்த சாதாரண மனிதர்கள் தான். ஆனால் உடனே ஓடி வந்து உதவி செய்தது எவ்வளவு பெரிய விஷயம்! அவர்கள் இல்லாவிட்டால் அந்தப் பள்ளத்திலிருந்து அவர் காரை எடுத்திருக்க முடியாது. அவன் அருகே வந்துவிட்டான். “இந்தாங்க அய்யா..” ஒரு பிளாஸ்டிக் வாளி நிறைய தண்ணீர் தளும்பியது, அவன் மனதைப் போல. நீருக்கும் அவர் மனசுக்கும் உள்ள ஒற்றுமை, இந்த தளும்புதல் தான். உணர்வுகள் அவரிடம் தளும்பி நிற்கும்.
“ரொம்ப தாங்க்ஸ் கணபதி.” அவர் தன் பர்ஸ் எடுத்து அவனுக்கு இரண்டு நூறு ருபாய் நோட்டுக்களை எடுத்துக் கொடுத்தார்.
“வச்சுக்க சாமி...பொரவு பார்க்கலாம். வரட்டுமா?...” ஒரு சினேக புன்னகை காட்டி அவன் விடை பெற்றான். பணம் வாங்க கூச்சப்படும் சிலரை இன்னமும் இந்த மண் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த செயற்கை உலகில் சில நிஜங்கள் அமைதியாக உலவிக் கொண்டிருப்பது ஆறதலாக இருந்தது. ஆனாலும் அவன் வாங்க மறுத்த நோட்டுக்கள் கையில் கனத்தது. சம்பத் எப்பொழுதும் மனுஷத் தனத்தை எங்கு பார்த்தாலும் உள்ளம் நெகிழ்ந்திடுவார். அப்பொழுது மனசின் அழுக்கெல்லாம் காணாமல் போகும்.
ஒட்டு வீட்டை அடைந்த போது அவருக்கு இன்னொரு ஆச்சர்யம் காத்திருந்தது. அவர் உள்ளே நுழைந்தது தான் தாமதம் கனிகா என்று சொல்லப்பட்ட அந்தப் பெண் வாயில் ஆழகான வார்த்தைகள் தளும்பிற்று.
“வாங்க வாங்க...அய்யா. இந்தாங்க சூடா டீ குடிங்க..” என்று நீட்டினாள். ஒரு சம்பிரதாயத்துக்கு கூட மறுக்க முடியவில்லை. ஏனென்றால் அவர் நாக்கு அதற்காக ஏங்கிக் கொண்டிருந்தது. அங்கு உள்ள சிறிய பெஞ்சில் உட்கார்ந்தார். மஞ்சு அங்கு தான் முகம் சுளித்தபடி உட்கார்ந்திருந்தாள். டீயை உறுஞ்சி உறுஞ்சிக் குடித்தார். ஆகா என்ன இதம்!
கனிகா இட்டிலி அவித்துக் கொண்டிருந்தாள். வாசலில் கடை வைத்திருப்பதற்கான அடையாளங்கள் தெரிந்தது. நறுக்கிய வாழை இலைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. கொதிக்கும் சாம்பார் ஒரு அகலமான அலுமினிய பாத்திரத்தில் மூடி வைக்கப்பட்டிருந்தது.
“அய்யா...கோசுக்கிடாதீங்க...இட்டிலி கடை வச்சிருக்கேன்...அதான்...”
“ஒ..பேஷ் பேஷ்...சாம்பார் வாசனை மூக்கத் துளைக்குது.” சூடான டீயை அவர் ரசித்துக் குடித்தார். இட்லிகளை ஆவலோடு பார்த்தார். பசித்தது. மகளிடம் கேட்டார்.
“மஞ்சு...நீ டீ குடிச்சியா?”
“அவங்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க அய்யா...இந்தக் கடையிலே எல்லாம் டீ குடிச்சு அவங்களுக்கு பழக்கம் இல்லை போலிருக்கு..” கன்னம் குழிய சிரித்தாள் அந்த கனிகா.
“அதெல்லாம் இல்லை....வரும்போது ஒரு கடையின் முன் நிப்பாட்டி வாங்கிக் குடிச்சோம். இது எனக்கு ரெண்டாவது டீ..”
அவர் பொய் சொல்வதை கனிகா புரிந்துகொண்ட மாதிரி சிரித்தாள். மகளை விட்டுக் கொடுக்க மறுக்கும் அன்பான தந்தை.
“அப்பா...டயர் மாத்தியாச்சில்லே...கிளம்பலாம்..” என்றாள் மஞ்சு.
“அதெல்லாம் கூடாது. இருந்து மதியம் சாப்பிட்டிட்டு தான் போவோணும். நான் விடமாட்டேன்...”
சம்பத்துக்கு ஏனோ அந்தப் பெண்ணுடன் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் போல் இருந்தது. இவள் எனக்கு மகளாகப் பிறந்திருக்கக் கூடாதா என்று அவர் ஏக்கத்துடன் நினைத்தார். அதற்கு கரணம் இருந்தது. சம்பத் எப்பொழுதும் சிரித்து வாழவேண்டும் என்று நினைப்பவர். யாருக்குத் தான் துன்பம் இல்லை? யாருக்குத்தான் கஷ்டமில்லை? அதற்காக இடிந்து போய் சோகமே உருவாக வாழ்வே மாயம் என்று ஒப்பாரி வைப்பது அவருக்குப் பிடிக்காது. சோகத்தில் அவர் விடும் இரண்டு சொட்டு கண்ணீர் மிகுந்த வீரியமுடயவை. சிலர் விடும் கடலளவு கண்ணீருக்கு அது சமம். மொசைக் தரையில் வழுக்கி கொண்டு ஓடும் தண்ணீர் மாதிரி அவர் துன்பத்தை மனதிலிருந்து வழுக்கி ஓட செய்துவிடுவார். மஞ்சு அவருக்கு நேர் எதிர்.
கருமமே கண்ணாக இருப்பது போல் கவலையே கண்ணாக இருப்பாள். கவலையை விட்டுக் கொடுக்கவே மாட்டாள். அது தான் அவள் சொத்து மாதிரி மனசில் டெபாசிட் பண்ணி வைத்திருப்பாள். அதற்கு வட்டியாக வரும் கூடுதல் கொசுறு துன்பங்களை மேலும் சேகரித்து வைப்பாள். விளைவு எப்பொழுதும் சிடுமூஞ்சித் தனம். பிறரை குறை சொல்லும் தன்மை. இதெல்லாம் அவளிடம் புதுசாக ஒட்டிக் கொன்ட அவலங்கள். இவையெலாம் சமீபத்தில் வந்த குணங்கள் தான். பத்து வயது மஞ்சு எப்படியிருந்தாள்! அவர் மனைவி அகிலா மாதிரி இருந்தாள். அகிலா சென்ற பின் அவருக்கு மஞ்சுவோடு இப்போ ஒரே வீட்டில் இருப்பது கடினமாக இருந்தது. மஞ்சு நாலு வருஷமாக ஒரு நாள் கூட சிரித்து அவர் பார்த்ததில்லை. அவருக்கு வீடு என்றால் அது ரோஜாத் தோட்டம் போல் குலுங்கி புஷ்பிக்க வேண்டும். கலகலவென்று மனிதர்கள் பேசவேண்டும். சோழியை சுழற்றி விட்ட மாதிரி சல் சல் என்று புன்னகைப் பூக்கள் பூக்கவேண்டும். இந்தப் பெண் கனகா அப்படிப்பட்டவளாக இருக்க வேண்டும். அவசரமாக ஓடும் நதி மாதிரி ததும்பி ஓடுகிறாள். அவள் முகத்தைப் பார்த்தால் பசி ஆறிடும் போலிருந்தது. இவள் விடிகாலை பனித் துளி. நம் வீட்டில் பெய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.! அப்படி நினைக்க அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? அதற்காக தன்னை கடிந்தும் கொண்டார்.
“அதில்லேம்மா வீட்டிலே மகன், பேத்தி காத்திட்டிருப்பாங்க...”
“போன் போட்டு சொல்லிடுங்க அய்யா. எனக்கு விருந்தாள்ன்னு யாருமே வந்ததில்லை. அபூர்வமா நீங்க வந்திருக்கீங்க. எனக்காக மதியம் வரை இருந்து தங்கி சாப்பிட்டுப் போகக்கூடாதா?”
“சரிம்மா...பாவம் உனக்குத் தான் கஷ்டம்..”
“கஷ்டமா? சந்தோஷம்மைய்யா....இருங்க காய்கறி வாங்கிட்டு வந்திடறேன். மஞ்சு கொஞ்சம் அடுப்ப பார்த்துக்கோ..”
திடுக்கிட்டு நிமிர்ந்தாள் மஞ்சு. அவள் வீட்டிலேயே கூட அவள் அடுப்படி பக்கம் போனதில்லை. இவள் ஜாலியாக ஆர்டர் போட்டுட்டுப் போறாளே..
“அப்பா என்னப்பா இதெல்லாம்? இந்த கிராமத்து பேர் கூட தெரியாது...இப்படி ஊர் பேர் தெரியாத யாரோ ஒரு பெண்ணின் வீட்டில் விருந்து சாப்பிட உக்காந்திட்டீங்களே...போங்கப்பா.”
“தெரியலை மஞ்சு...இவளைப் பார்த்தா ஒரு பாசம் வருது. அதான்...”
“யாராவது சாப்பிட கூப்பிட்டாப் போதுமே..உடனே மண்டைய மண்டையே ஆட்டுவீங்களே..”
“யாதும் ஊரே...யாவரும் கேளிர்...அதானேம்மா நம்ம பண்பாடு...”
“உங்களுக்கு புத்தி கெட்டுப் போச்சு. இந்த அழுக்கு இடத்தில்...ஏதோ சிம்மாசனத்தில் இருப்பது போல் ராஜ கம்பீரத்துடன்....”
“அய்யா...ராஜா மாதிரி தானே இருக்கார். காய்கறி வாங்கிட்டு வந்திட்டேன்..”
கனிகா ஒரு கட்டை பை நிரம்ப காய்கறிகளுடன் வந்தாள்.
“அம்மாடி...இட்டிலியை எடுத்திட்டு திரும்ப ஊத்தி வச்சிட்டேன்...” என்றார் சம்பத். கனிகா முகத்தில் ஆச்சர்யம். கையை முகவாயில் வைத்து நூற்றுக் கிழவி போல் சொன்னாள்.
“அடி ஆத்தி...அடுப்படி வேலையெல்லாம் கூட செய்றீங்களே...உங்களுக்கு சுத்திப் போடணும்..” அவ்வளவு சிரிப்பு சிரித்தாள். சூரியகாந்தி காடே பூத்து விட்டது போல் இருந்தது. அவள் கரிசனத்துடன் அவரைப் பார்த்து சொன்னாள். “எங்கய்யா மாதிரி இருக்கீக. உங்களுக்கு பிடிச்ச பதார்த்தம் சொல்லுங்க நொடியில் சமச்சிடுறேன்.”
விக்ரமாதித்தன் முதுகில் வேதாளம் உட்கார்ந்துகொண்டது போல் இவள் அப்பாவின் எண்ணத்தில் உட்கார்ந்துவிட்டாளே! கிளம்பின மாதிரி தான்.என்று நினைத்தாள் மஞ்சு. சனியன் பிடித்த கார் இப்படியா காலை வாரிவிடும்? இவள் என்னத்தை சமைத்துப் போடப் போறாளோ! எப்படி சாப்பிட்டு தொலையப் போறோமோ...என்று சலித்துக் கொண்டு, தப்பி ஓட ஆசைப்படும் எலி மாதிரி குறுக்கும் நெடுக்கும் நடக்க ஆரம்பித்தாள் மஞ்சு. அப்பாவும் அந்த ஸ்டுபிட் கனிகாவும் நெடு நாள் பழகியவர்கள் போல் பேசிக்கொண்டிருந்ததை கேட்டகவே அவளுக்குப் பிடிக்கவில்லை. மடமடவென்று கனிகா இட்டிலிகளை அவித்தாள். ஒவ்வொருவராக அந்த கிராமத்து ஜனங்கள் இட்லி வாங்க வந்தனர். கனிகா பம்பரமாக சுழன்றாள். நாட்டியம் ஆடினபடி இருந்தன அவளின் கைகளும் கால்களும். கண்கள் அபிநயம் பிடித்தன. வாயோ அம்பாள் சுலோகங்கள் சொல்லிக் கொன்டே, இடையிடையே வாடிக்கையாளர்களோடு பேச்சுக் கொடுத்தன. கவிதை ஒன்று உயிர் பெற்றுவிட்டது போல் இருந்தது. தினம் தினம் முகாரி ராகம் கேட்டுக் கேட்டு சலித்தவருக்கு இந்த பூபாளம் உள்மனதுள் புகுந்து மனதை தாளம் போட வைத்தது. பேஷ் பேஷ் வாழ்க்கை ரொம்ப நன்னாயிருக்கு!
“மஞ்சு...பார்த்தியா? கனிகா எவ்வளவு சுறுசுறுப்பு? நீ இந்த அதிகாலை நேரத்தில் பெட் காபிக்கு கத்திக்கிட்டிருப்பே. மஞ்சு, ரொம்ப நிறைவா இருக்கும்மா இந்தப் பெண்ணைப் பாக்கறதுக்கு. உங்க அம்மா நியாபகம் வருது.” அவர் கண்கள் பனித்தன. அகிலா அவர் கண்முன்னே சிரித்தாள்.
சிறு புன்னகையுடன் பெரிய வெரான்டாவை வேக்யும் பண்ணும் அகிலா அவர் நினைவில் வந்து போகிறாள். வீட்டை படு சுத்தமாக வைத்திருப்பாள். ஒரு தூசோ தும்போ அவளுக்கு போக்கு காட்டிவிட்டு வந்துவிட முடியாது. தோட்டத்துக்கு நீர் வார்ப்பது அவளுக்கு பிடித்தமான விஷயம். மலர்களை மலர்விக்கிற தோட்டத்து பூமியை அவள் நேசித்தாள்.
“நேசிக்கிற குணம் இருந்தால் மனம் புடம் போட்ட தங்கம் போல் ஆகி விடுகிறது. எனக்கு பூக்களும் அதை தாங்குகிற செடிகளின் கருணையும், இங்கே வியாபாரம் செல்லுபடியாகாது என்று சொல்லும் தருணமும் பொக்கிஷம் போல் படுகிறது...” அகிலாவின் சொல்லில் கூட மலர்கள் பூக்கும்.
“இயற்கையை நேசிப்பதில் நிறைய சௌகர்யங்கள் இருக்கு...”
“சௌகர்யமா? அதெப்படி நான் கேட்டதே இல்லையே.”
“அவை நம்மிடம் பேசும்..கொஞ்சும்...விளையாடும் ஆனால்...”
“ஆனால்”
“ஆனால் கோபிக்காது...அம்மா மாதிரி..”
அப்படி இயற்கையை கொண்டாடியவள் தான் அகிலா. எனக்கும் கோபம் வரும். நானும் தண்டிப்பேன் என்று தண்ணீர் செய்த அழிச்சாட்டியம் அவள் உயிரைக் குடித்துவிட்டது. பூனை, தான் இட்டக் குட்டியில் ஒன்றை தானே தின்றுவிடுவது போல். கடல் முழுங்கிக் கொண்டது சுனாமி என்ற பெயரில்.
சூரியன் என்ற தேர் இருப்பதையே கவனிக்காதவர்கள். நிலா என்று ஒரு கவிதை வானத்தை அழகாக்குகிறது என்று உணராதவர்கள்...பெட்டிப் பணத்தையும்...வங்கி பணத்தையும் மண்டைக்குள் பத்திரப்படுத்தி வைப்பார்கள். நிறம் இழந்த...இவர்களை ஒன்றும் செய்யாத தண்ணீர்...கடலை ஆராதித்த அவளை வாரிக் கொண்டு போய்விட்டது. மனசு கரித்தது. கடல் நீர் கரிப்பில் கரைந்து மறைந்து போன அகிலா என்ற மழைத்துளியை இன்னமும் சம்பத் கடலைகளில் தேடிக் கொண்டுதான் இருக்கிறார். இயற்கைக்கும் பாவம் செய்யத் தெரியும் என்று அன்று புரிந்து கொண்டார். சுனாமி என்ற பெயரை சூட்டிக் கொண்டு யார் யாரையோ அள்ளிக் கொண்டு போய் நெருப்பை விட சூடானவன் நான் என்று இரண்டாயிரத்தி நாலாம் ஆண்டு டிசம்பர் இருபத்தியாறாம் நாளில் கடல் நிருபித்துவிட்டது. எங்கோ புரண்டு படுத்த பூமி கடலை ஆக்ரோஷமாக்கிவிட்டது. பிஞ்சென்றும் மூப்பென்றும் பாராமல் ஜலசமாதி தயாரித்துவிட்டது. அகிலாவின் அழகிய உடலை அழுகிய நிலையில் நீங்கள் காண வேண்டாம் என்று மறைத்துவிட்டது. நீர் வடிந்த பின் ஒரு புதர் மேல் சிக்கியிருந்த அவள் புடவை தான் அவளின் மரணத்தை உறுதிப்படுத்திற்று. சாகிற வயசா அவளுக்கு? அவள் இன்னமும் அவர் நெஞ்சில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாள். மஞ்சு ரெண்டு வயது குழந்தை. சரவணன் ஒன்பது வயது சிறுவன். இந்த பொக்கிஷங்களை விட்டு அவள் போய்விட்டாள். வலி என்கிற முட்கள் அவர் நெஞ்சை குத்தியது தான். ஆனால் நம்பிக்கை என்ற கோடரி கொண்டு அதை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டார். அது மரமாக வளர அவர் இடம் கொடுத்ததே இல்லை. அவர் வளர் பிறை. தேய மறுத்த சந்திரன்.
வரவேற்பரையில் குங்கும பொட்டும் மலர் சிரிப்புமாக அகிலா இப்ப புகைப்படமாக இருக்கிறாள். அது தான் மஞ்சுவுக்கு தெரிந்த அம்மா. ஒரு பொம்மையை பார்ப்பதும் அந்தப் படத்தை பார்ப்பதும் ஒன்று தான் அவளைப் பொறுத்தவரை. “அம்மா படத்தை கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கிக்கோ.” என்று சம்பத் மகளிடம் சொல்வார். சின்ன வயதில் இயந்திரம் போல் அவர் சொன்னதை செய்தாள். விவரம் தெரிந்த இந்த மூணு வருஷமாக அவள் கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள்.
“அம்மா எனக்கு ஆசிகளை சொல்வாளா என்ன? இப்படி கற்பனை செய்து கொண்டு என்னால் கும்பிட முடியாதப்பா...சாமி படமும் எனக்கு இதே எண்ணத்தை தான் கொடுக்கிறது....எல்லாத்துக்கும் அதிர்ஷ்டம் வேண்டும்.”
“அது அப்படியில்லேம்மா...உன்னை அவள் எவ்வளவு தூரம் நேசிச்சா தெரியுமா? அவள் மறைந்தாலும் அவள் மேலே இருந்து பார்த்திட்டு தான்..”
“இந்த கட்டுக் கதையெல்லாம் நான் நம்பத் தயாரில்லை. நீங்க தான் எனக்கு அம்மா அப்பா எல்லாம். உங்களை வணங்குகிறேன்...போதும்.”
அம்மாவின் அன்பை அனுபவிக்காதவள் அப்படி சொன்னது தப்பில்லையோ? என்று அவருக்குத் தோன்டிறியது.
“அய்யா...இன்னும் கொஞ்சம் சட்னி வைக்கவா?..” கனிகா கேட்ட பின் அவர் பழைய நினைவுகளில் இருந்து மீண்டார்.
மதிய சாப்பாடு தாயாராகிக் கொண்டிருந்தது. மெல்லிசாக பாட்டு கேட்டுக் கொண்டிருந்தது. பழைய சினிமா பாடல்கள் தான். கூடவே கனிகாவும் பாடிக்கொண்டே சமைத்தாள். இவ்வளவு சந்தோஷமாக யாராவது சமைப்பார்களா? அகிலா சமைப்பாள். இதோ அவளின் வாரிசு. கூடம் பூராவாக சமையல் வாசனை. “சமையல் ரெடி” என்றாள். வாழை இல்லை போட்டு,
இஞ்சிப் பச்சடி. தக்காளி கூட்டு, அவியல் என்று தொடுகறிகள் வைத்தாள். மணக்கும் மல்லிகைப் பூ சாதம். புத்துருக்கு நெய். தாளித்த பருப்பு. மாங்காய் சாம்பார்....ஒரு பிடி பிடித்தார் சம்பத். பிறகு மைசூர் ரசம். கடைசியில் தயிரும் ஆவக்காய் மாங்காய், கிடாரங்காய் ஊறுகாய்...எல்லாம் நான் செய்தேன் கடையில் வாங்கினதில்லை என்ற குழந்தைத்தனமான பீற்றலுடன் பரிமாறினாள் கனிகா. நெடு நாளுக்குப் பிறகு திவ்வியமாக சாப்பிட்டார். அவளின் செல் நம்பர் வாங்கிக் கொண்டார். தன் நம்பர் கொடுத்தார். அவசியம் வரவேண்டும் என்று அழைத்தார்.
“கனிகா நீ ரொம்ப சாமி பக்தை போலிருக்கு?” அந்த எளிய சுவரில் சிவன் பார்வதி, பிள்ளையார். முருகன். கிருஷ்ணன், பெருமாள் என்று அனைவரும் படமாக பிரசன்னமாகி இருந்தனர்.
“அய்யா...இவங்களை சும்மா சுவர் சாமிகள்ன்னு சாதாரணமா நினைக்காதீங்க. என்ன வேண்டுறோமோ அதை தருவார்கள்...” என்றாள் பெருமை பொங்க.
“அப்படியா..இந்த நிமிஷம் நாங்க கிளம்பனும்ன்னு வேண்டறேன். நடக்குமா?” மஞ்சு சவால் விட்டாள். சம்பத்துக்கு போன் வந்தது. எடுத்தார். அவர் முகம் பதற்றமாக பரிதவித்தது.
“தாத்தா சீக்கிரம் வாங்க...சீதாம்மா இனி வரமாட்டாங்களாம் எனக்கு பயமாயிருக்கு. அப்பா அவங்களை பார்க்க போயிருக்கா...”
சொல்லிவிட்டு அவர் பேத்தி ஆஷா விக்கி விக்கி அழ ஆரம்பித்துவிட்டாள். அவர் உடனே கிளம்பிவிட்டார். “நீங்க வேண்டியது நடந்திடுச்சு இல்லையா? கடவுள் இருக்காருங்க.” என்று சொல்லி சிரித்தாள் கனிகா. ஆனால் கடவுள் இல்லை என்று அங்கு போன பிறகு தான் தெரிந்தது. அது கனிகாவுக்குத் தெரியாதே!
மழை விழும்