கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மென் மலர்

Rajasree Murali

Moderator
Staff member
ஹரிணி குட்டி பார்ப்போரை தன் வசம் இழுக்கும் அழகு சிரிப்பு குறும்பு. எல்லோரிடமும் அன்பாக பழகும் சுபாவம். அம்மா அப்பாவிற்கு அவள் ஒரே பெண் குழந்தை. மூன்றாம் வகுப்பு படிக்கும் அவளுக்கு அந்த அபார்ட்மெண்டில் வசிக்கும் அவள் வயதுடைய அத்தனை பேரும் பிரெண்ட்ஸ். எல்லா பாட்டி தாத்தாக்களுக்கும் அவள் செல்லம். அவளை பாட வைத்தும் ஆட வைத்தும் கொண்டாடுவார்கள். அந்த அபார்ட்மெண்டில் 25 குடும்பங்கள் இருந்தன. சுற்றி பிளாட்டுகள். நடுவில் சின்ன பார்க். குழந்தைகள் விளையாட ஊஞ்சல், சாருக்கு மரம், சீசா போன்றவற்றில் மாலை நேரத்தில் குழந்தைகள் ஜாலியாக விளையாடுவார்கள்.

சனி ஞாயிறு என்றால் அமர்களத்திற்கு கேட்கவே வேண்டாம். அன்று மாலை ஹரிணி தன் அம்மாவுடன் பக்கத்திலிருக்கும் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் போக ரெடியானாள். அவர்களுடன் அக்கம் பக்கத்தில் உள்ள அவளின் பிரெண்ட்ஸ் கூட்டமும் அவர்களின் அம்மாக்களும் சேர்ந்து போங்க திட்டமிட்டு எல்லோரும் ஒன்றாக கிளம்பினார்கள். வாசலுக்கு வரும் போது கேட்டில் இருந்த செக்யூரிட்டி எல்லோரையும் பார்த்து வணக்கம்மா என்றான். பதிலுக்கு எல்லோரும் தலையசைத்து சிரித்துவிட்டு கிளம்புகையில் அவன் ஹரிணியின் அம்மாவை பார்த்து கொஞ்சம் கோபமாக பாப்பாவுக்கு ரொம்ப வாய் ஜாஸ்தி. நேத்து என்னை ரொம்ப திட்டிருச்சும்மா. கொஞ்சம் கண்டிச்சு வைங்க என்றான். அப்படியா, ஏன் திட்டினே ஹரிணி என்றவுடன் அவன் ஒண்ணுமில்லேம்மா விளையாடும் போது மத்த குழந்தைகளை தள்ளியும் அடிக்கவும் செஞ்சது. அதனால நான் அப்படி பண்ண கூடாது தப்புன்னு கண்டிச்சதுக்கு பாப்பாவுக்கு கோவம் வந்துடிச்சி. சரிங்க நான் அவ கிட்ட சொல்றேன் என்று பதில் சொல்லிவிட்டு சென்றாள்.

ஷாப்பிங் முடித்து விட்டு வீட்டுக்கு வந்து டயர்டா இருந்த ஹரிணியை சாப்பிட வைத்து தூங்க வைக்க அழைத்து போனாள். அப்போது குட்டிம்மா ஏன் பெரியவங்க கிட்ட மரியாதை இல்லாம நடந்துக்கறே. செக்யூரிட்டி அங்கிள் சொல்லும்போது கேட்டல்ல. அவரை அப்படியெல்லாம் பேச கூடாது செல்லம். நீ குட் கேர்ள் தானே ஓகேவா என்று அவள் முடிக்கும் மம் ஹரிணி, அம்மா நான் அவரை திட்டலே. அந்த அங்கிள் பொய் சொல்றார். நீ எனக்கு குட் டச் பேட் டச்ன்னு சொல்லி கொடுத்திருக்க இல்லை. யார் அப்பை பேட் டச் பண்ணாலும் பயப்படாதே சுத்தி யாராவது இருந்தா ஹெல்ப்புக்கு கூப்பிடுன்னு சொன்னே. இந்த செக்யூரிட்டி அங்கிள் ரொம்ப மோசம். என்கிட்டே அன்னிக்கு உனக்கு சாக்லேட் வாங்கி தரேன்னு சொல்லி கூட்டிட்டு போய் என்னை பேட் டச் பண்ணிணார்மா. என் பிரெண்ட்ஸ் கிட்டயும் அப்படி பண்ணிணார்மா. அதனால எனக்கு கோவம் வந்து அவரை போடா பேட் பாய்ன்னு சொல்லிட்டு தள்ளிட்டு வந்தேன் தப்பாம்மா என்று குழந்தை சொல்லி முடித்தவுடன் அவளுக்கு ரொம்ப கஷ்டமாகி போய் விட்டது. தப்பே இல்லடா கண்ணு. யார் இப்படி உன்கிட்டே இப்படி நடந்தாலும் அமைதியா இருக்காதே. என்கிட்ட சொல்லு. ஸ்கூலா இருந்தா உன் மிஸ் கிட்ட சொல்லு. எதுக்கும் பயப்பட கூடாது என்று அவளை அணைத்து கொண்டாள்.
 

Attachments

  • flower-with-raindrops-1455418.jpg
    flower-with-raindrops-1455418.jpg
    160.2 KB · Views: 1
Last edited by a moderator:

Latha S

Administrator
Staff member
Welcome to Sangamam Novels.

ஹரிணி குட்டி ஸ்மார்ட். குட்டீஸ் க்கு இப்படி சொல்லி கொடுப்பது நல்லது.
 
Last edited:
Top