அத்தியாயம் - 11
தன் பாட்டியை முறைத்தபடி...
“வளவனுக்காக நான் வாயை மூடிக்கொண்டு வருகிறேன் பாட்டி” என்றவன் “எத்தனை மணிக்கு
கிளம்பலாம் என்று என் செக்ரட்டிரியிடம் தெரிவித்து விடு நிரல்யா…. இன்றும் மாலை நான்கு மணிவரை அப்பாவுடன் தான் இருப்பேன் அதன் பிறகு ஒரு வீடியோ கால் இருக்கு... அதனால் நான்கு மணிக்கு மேல் என்னிடம் போன் இருக்காது. அப்புறம் இன்று முதல் உன்னை ஆபிசில் விட எட்டரைக்கு மணிக்கு டிரைவர் வருவார்” என்றான் நிரல்யாவிடம் திரும்பி!!!
பதிலுக்குத் தலையை மட்டும் ஆட்டினாள்.
அதற்குள் சிவ சச்சிதேவ் சாப்பிட்டு விட்டு எழ அவரைத் தொடர்ந்து மைந்தர்கள் இருவரும் தொழில்
சம்பந்தமாக பேசியபடி சாப்பிட்ட பின் குடும்பத்தினரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினர்.
பத்ரியுடன் மிக தீவிரமாக ஏதோ விவாதித்தபடி இரண்டு அடி எடுத்து வைத்திருப்பான், அதற்குள் தன்னை அழைத்தது போல் தலை மட்டும் திருப்பி “என்ன?” என்றான் கார்த்திக்.
நாங்க யாரும் கூப்பிட வில்லையே என்று அலக்நந்தா பேச வரும் போதே... கார்த்திக்கின் பார்வை
நிரல்யாவின் மேல் இருந்ததை உணர்ந்தவள் அமைதியாக வேடிக்கை பார்க்க....
அவனின் கேள்விக்குப் பதிலாக தலையைத் தொட்டுக் காட்டினாள்!!!
அந்த செய்கை பின்பற்றி தன் தலையைத் தொட்டுப் பார்த்தவனுக்கு உச்சந்தலையிலிருந்த குடுமி
தட்டுப்பட... விஷயத்தைப் புரிந்து அதை உருவி அங்கிருந்தபடியே தூக்கி எறிந்தவன் இவள் பிடிக்கிறாளா என்பதை கூடப் பார்க்காது பத்ரியுடன் பேசியபடி நடந்து முன்னே சென்றான்!!!
ஆபிஸ்சிற்கு செல்லும் கணவன் உச்சந்தலையில் குடுமியுடன் சென்றால் நன்றாக இருக்காது என்றளவு
நன்றாக புரிந்தது!!!
ஆனால் அதை அவள் செயல்படுத்திய விதம் தான் ஆச்சரியமாக இருந்தது!!!
என்று போல் இன்றும் அப்படி வாயை விட்டு அழைக்காது கார்த்திக்கை திரும்பிப் பார்க்க வைத்தாள் என்று ஆச்சரியாக இருந்தது அலக்நந்தாவிற்கு!!!
ஒருவழியாக எல்லோரும் கிளம்பிப் போக... ஓய்வு எடுக்க சென்ற அலக்நந்தா பன்னிரண்டு மணிக்கு
வேலை ஆள் கொடுத்த பழ சாருடன் அறையை விட்டு வெளியே வந்தவள் ஹாலில் யாரிடமோ போனில் பேசிக்கொண்டு இருந்த பாட்டியைப் பார்த்து மெல்ல சென்று அவர் அருகில் அமர்ந்தாள்!!!
அடுத்த ஐந்து நிமிடம் பேசிவிட்டு போனை வைத்த பாட்டி “நாளைக்கு காலையிலேயே செக்கப் போகணும்.. பத்து மணிக்கு அப்பாயின்ட் மென்ட் இருக்கு.. உன்னுடன் அத்தை வருவாங்க” என்றார்.
“சரி பாட்டி...” என்றாள் பானத்தை பருகியபடி.
இரட்டையர்கள் என்பதாலும் எட்டாவது மாதம் என்பதாலும் அவளுக்கு வாரத்திற்கு ஒருமுறை செக் அப்
செய்வது வழக்கமாக இருந்தது.
“நாளை ஹாஸ்பிட்டலுக்கு போகிறோம் அங்கே போகும்போது அப்படியே நிரல்யாவோட அக்காவின்
குழந்தைகளைப் பார்த்துவிட்டு வரலாம் இல்லையா பின்ன ஏன் நீங்க இன்று மாலை போக...” என்று கேட்டுக்கொண்டு இருக்கும் போதே... மண்டையில் டிங்க் என்று பல்பு எரிய... “பாட்டி நீங்க கார்த்திக்கை நிரல்யாவுடன் அங்கே அனுப்ப ப்ளான் பண்ணி தானே காலையில் அப்படி சொன்னிங்க?”
இதைப் புரிய இத்தனை நேரம் ஆயிற்றா என்றபடி அவளைப் பார்த்த பாட்டி “ம்ம்...” என்று தலை ஆட்டினார்.
“ஆனால் ஏன்?” என்றாள் புரியாது.
“எல்லா விஷயமும் கார்த்திக் ப்ளான் படி போகக் கூடாது இல்லையா?” என்றார் தன் பேரனுக்கு எதிராக.
பாட்டியின் திட்டமிடலால் தான் கார்த்திக்கின் திருமணமே திடீரென்று நடந்தது என்பதை அலக்நந்தா நன்கு அறிவாள். விஷயம் அப்படி இருக்க... இன்று வில்லத்தனமாகப் பேசிய பாட்டியைப் பார்த்துத் திகைத்த அலக்நந்தா வின் நெஞ்சு பதறியது.
பின்னே நாட் நாட் செவன் நல்லதனமாக செய்யும்போதே அது வில்லத்தனமாக இருக்கும்... இப்ப
நிஜமாகவே வில்லத்தனமாக செய்ய ஏதோ ப்ளான் பண்ணி விட்டார்கள் போலவே... இது எதில் போய் முடிய போகுதோ என்று உதற... அவர்களின் குலதெய்வமான காளியிடம் வேண்டிக்கொள்ள வாயைத் திறந்தவள், யாரை யாரிடமிருந்து காப்பாற்ற வேண்டுவது என்று புரியாது குழம்பி போய் பின் எதற்கும் இருக்கட்டும் என்று எல்லோரையும் காப்பாற்று என்று பொதுவாக வேண்டிக் கொண்டவள் நெஞ்சில் திகில் பரவ பாட்டியைப் பார்த்தாள்.
மாலை நான்கு மணிக்கு ஆரம்பிக்க விருக்கும் வீடியோ கான்பிரன்ஸ்சிற்கு ஐந்து நிமிஷம் முன்னாடியே வந்த கார்த்திக்.. அங்கே காத்திருந்த தன் செயலாளரைக் கண்டவன் அவளிடம் தன் போனை கொடுத்து
விட்டு...
“உங்க பெயர் என்ன??” என்று மூன்று மாசதமாக வேலை செய்யும் செயலாளரை பார்த்து கேட்டான் கார்த்திக்.
குறைந்த பட்சம் இருபது தரமேனும் இந்த கேள்வியை தன்னிடம் கேட்டிருப்பான் என்று மனதில் புகைந்தப்படி “கலைசெல்வி சார்” என்றாள் நிஜமாகே கலையான முகத்தை கொண்ட அந்த பெண்.
“இங்க பாருங்க கலைசெல்வி குடும்பத்தினரிடமிருந்து எனக்கு போன் வந்தால்... எந்த சமயத்தில் யாருடன் எத்தனை முக்கியமான கான்பிரன்சில் இருந்தாலும் உடனே வந்து போனை கொடுக்கணும் என்று முன்பே சொல்லி இருக்கேன் இல்லையா?” என்று மிக கடுமையாகக் கேட்டது கார்த்திக்கின் குரல்.
“சாரி சார்... நேற்று புது நம்பரிலிருந்து போன் வந்ததால்...” என்று அந்தப் பெண் பதில் சொல்லும் போதே...
அவளின் பேச்சை இடையில் நிறுத்தியவன், “உங்க காரண காரியத்தை பற்றி கேட்க எனக்கு நேரம் இல்லை... இன்னும் ஒரு தரம் இப்படி நடந்தது என்றால்... அன்று தான் நீங்க இந்த வேலையில் இருக்கும் கடைசி நாள் தமிழ் செல்வி” என்று கனல் கக்கும் வார்த்தையை உமிழ்ந்தவன் அவள் மீண்டும் சாரி என்று சொல்வதைக் கேட்க அங்கே நிற்கவில்லை.
அவன் திட்டிய வார்த்தைகளை விட… தமிழ் செல்வி என்று தன் பெயரை மீண்டும் தப்பாக சொல்லிவிட்டு போனது தான் அவளை ரணப்படுத்த கண்களில் குரோத தீ எழ அவன் வேக நடையுடன் செல்வதை பார்த்தாள்.
அவள் அறிந்த வரையில் கார்த்திக்கை போல் குடும்பத்தை காக்க யாராலும் முடியாது என்பதால் இன்று அவனின் கோபத்தை எதிர் பார்த்தே காத்திருந்தாள். நிரல்யா சொன்ன தகவல் இவனுக்கு கிடைக்க கூடாது என்பதற்காகவே வந்த போன் காலை மறைகவே தன்னை பெண் பார்க்க வருகிறார்கள் என்று ஆபிஸ்சை விட்டு ஓடி ஓளிந்தவள் அவள். பின்னே அவன் மனைவி யார் என்பது கூட தெரிந்திருக்காத அப்பாவி அல்ல அவள்!!!
அவனின் பேச்சை எல்லாம் கேட்டுக்கொண்டு இங்கே இருக்க வேண்டிய அவசியம் இல்லை தான் ஆனால் இப்படி தேவையற்ற காகித குப்பை போல் தூக்கி எரியவா இத்தனை பிரம்ப பிரயத்தனம் பட்டு கடந்த மூன்று மாதமாய் இவனிடம் வேலை செய்கிறாள்??
அவள் அப்படி உயிரை கொடுத்து வேலை செய்வதற்கான முழு முதற் காரணம் கார்த்திக்!!!
இங்கே வேலைக்கு சேர்ந்தால் அடிக்கடி கார்த்திக்கை பார்க்கலாம் என்ற எண்ணத்திலேயே வேலைக்கு சேர்ந்தவளுக்கு அவன் டிபாட்மென்டிற்குள் வந்து சேரவே பல மாதங்கள் பிடித்தது. எப்படியோ முட்டி மோதி சென்ற வருடம் அவன் பணி புரியும் தளத்திற்கு வந்தவளுக்கு அதிர்ஷ்ட காற்று வீச.. மூன்று மாதம் முன்பு கார்த்திக்கின் செயளாலராகப்பட்டாள்.
நல்ல படியாக வேலை செய்தால் ஒரு முறையேனும் தன் பார்வை உயர்த்தி அவளை செயலாளராக அல்லாது ஒரு பெண்ணாக பார்த்து விட மாட்டானா என்று அவள் தவம் இருந்த நாட்கள் உண்டு.. ஆனால் அந்த தவத்தின் பலன் எல்லாம் நிரல்யாவிற்கு கிடைத்து விட்டது போல் தங்கையில் திருமண விழாவில் அண்ணன்காரன் அந்த தங்கையின் நெருங்கி தோழியை மணம் புரிந்துக்கொண்டான் என்ற செய்தி இடியாக காதில் விழ அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை!!!
அந்த செய்தி அறிந்த பிறகு ஒரு நிமிடம் கூட இங்கே இருக்க பிடிக்கவில்லை தான்… ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளால் அவனுக்காக அவள் என்னென்ன செய்தி இருப்பாள்?? அது எல்லாம் வீனாக போவதா?? நிச்சயம் இங்கிருந்து போக தான் போகிறாள் ஆனால் போவதற்கு முன்பு இப்படி சின்ன சின்னதாக பிரச்சனை மூட்டுவதற்கு பதில் ஏதோ ஓன்று செய்து விட்டு அவன் நினைவில் இருந்து மறந்து போகும் தன் பெயரை இனி வாழ்நாள் முழுமைக்கும் மறக்க முடியாதப்படி செய்து விட்டு தான் போக வேண்டும் என்ற தனக்குள்ளே சூளூரைத்தவள் அதற்கான சந்தர்ப்பத்தை தேடிக்கொண்டு இருந்தாள் அந்த கலை செல்வி!!!
ஆனால் கலை செல்வி அறியாத ஒரு உண்மை என்ன வென்றால் ஊர் அறிய அரங்கேறிய அந்த திடீர் திருமணத்திற்கு சூத்திரதாரியே இவள் தான்!!! டைவர்ஸ் வாங்க இருந்தவர்களை தடுத்தி நிறுத்தி இரவோடு இரவாக மண மேடைய ஏற செய்த காரணக் கர்த்தாவே இவள் தான் என்பதை யாருமே அறிய மாட்டார்கள்!!! வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது இதுதான் போலும்!!!
இரவு ஏழு மணி அளவில் சின்ன பிரேக் கிடைக்க... தன் போனை செக்ரட்ரியிடமிருந்து வாங்கியவனிடம்
“உங்க பேமிலி என்ற குருப்பில் இருந்து போன் எதுவும் வரவில்லை சார்” என்றாள் ரொம்ப நல்லவள் போல.
ஏன் இன்னும் போன் பண்ணவில்லை என்ற யோசனையுடன் போனை வாங்கியவனுக்கு அவளிடமிருந்து மெசேஜ் வந்திருப்பதாக மின்ன...
அவரசமாக அதைத் திறந்து பார்த்தான்.
“ஆறு மணிக்கு வேலை முடிந்து விடும்.. நான் நேராக ஹாஸ்பிட்டல் போய்விடுவேன் மீட்டிங் முடிந்த பின்
அங்கே வந்து விடவும்” என்று தகவல் வந்திருந்தது.
“எப்ப போகப் போகிறாய் என்று போன் தானே பண்ண சொன்னேன்??” என்று முணுமுணுத்தபடியே
அவளுக்கு டயல் செய்தவன் வெளியேறினான்.
மூன்றாவது ரிங்கில் எடுத்தவளை ஹெலோ சொல்லுவதற்கு முன்பு “ஏன்டீ போன் தானே பண்ண
சொன்னேன்?” என்றான் கடுப்பாக.
“மீட்டிங்கில் இருப்பாய் தொந்தரவு பண்ண வேண்டாம் என்று தான் தகவல் அனுப்பினேன்” என்றாள்.
“ம்ச்..” என்று எரிச்சலாக ச்சுக்கொட்டியவன், “சரி நான் என் அடுத்த மீட்டிங்கை முடித்துவிட்டு இங்கிருந்து
எட்டு மணிக்கு கிளம்புகிறேன்” என்று கடுப்பாக மொழிந்துவிட்டு மீண்டும் மீட்டிங் அறைக்குள் சென்றான்.
எட்டு மணிக்கு தன் மீட்டிங்கை பாதியில் முடித்து விட்டுக் கிளம்பியவனின் மனம் குழம்பிய குட்டையாக
கிடக்க... தன் எண்ணங்களை எல்லாம் காரின் வேகத்தில் காட்டியபடி ஆக்ஸ்லேட்டரை ஒரு மிதி மிதக்க அடுத்த இருபத்தினைந்து நிமிஷத்தில் சச்சிதேவ் பெயரில் மின்னிய மருத்துவமனையின் முன் சென்று நின்றது.
ரிசப்ஷனில் வளவனின் பெயரைச் சொல்லி எங்கே என்று விசாரித்து விட்டு லிப்டிற்காக காத்து இருக்காது நான்காவது தளத்திற்குப் படி ஏறிச் சென்றவனின் கண்ணில் முதலில் பட்டது நிரல்யா இல்லை.. அவளின் அக்கா பாக்கிய லட்சுமி.
குடும்பத்தில் எல்லோரும் நினைப்பது போல் அவன் மிகவும் வெறுப்பது நிரல்யாவின் மாமாவை அல்ல...
அவளின் அக்காவான பாக்கிய லட்சுமியைத் தான்.
நிரல்யாவின் அமைதிக்கும் அடக்கத்திற்கும் நேர் எதிரான குணம். அவர் சிறு வயது முதல் நிரல்யாவை
திட்டியோ, அடித்தோ ஏன் அதட்டிப் பேசியது கூட இல்லை.. ஆனால் இன்னது என்று காரணம் குறிப்பிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும் ஏனோ அவரின் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் இன்று வரை இல்லை.
இவனின் வரவைக் கவனிக்காத பாக்கிய லட்சுமி...
“நான் ஒருத்தியே சின்னவனையும் பார்த்துக்கொண்டு பெரியவனையும் பார்த்துக்கொள்ள வேண்டும்
என்றால் முடியவில்லை... மாமாவிடம் சின்ன பாண்டியை அழைத்துக்கொண்டு வீட்டிற்குப் போங்க என்று சொல்லலாம் தான்.. ஆனால் வளவன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறான் என்று தெரிந்தவுடன் இரவோடு இரவு கண் மூடாமல் காரில் இங்கே வந்து சேர்ந்தாரா அதனால் வீட்டில் ஓய்வு எடுக்கட்டும் என்று பார்க்கிறேன்... ஒருநாள் என் வீட்டில் தங்கு என்றால் பாட்டியிடம் கேட்க வேண்டும் என்று காரணம் சொல்லுவாய்... அதனால் நேற்று மாதிரி கொஞ்சம் இருந்து பாண்டியைக் கொஞ்சம் தூங்க வைத்து விட்டு...” என்று கூறிக்கொண்டு இருக்கும்போதே நிரல்யா அவளின் பேச்சைக் கேட்காது யாரையோ பார்த்தாள்.
யாரை இப்படிப் பார்க்கிறாள் என்று பாக்கிய லட்சுமியும் தலை திருப்பிப் பார்க்க... அப்பொழுதுதான்
கார்த்திக் நின்று இருப்பதைக் கவனித்தவள் பேயைக் கண்டது போல் அரண்டு போய் பார்த்தாள்!!!
அவன் ஊருக்கு திரும்பி வந்து விட்டான் என்பது கூட பாக்கிய லட்சுமிக்குத் தெரியாது!!!
“வாங்க... எப்ப ஊரிலிருந்து வந்திங்க?? நிரல்யா ஊரில் இருந்து வந்ததைச் சொல்லவே இல்லை” என்றாள் தன் அதிர்ச்சியைக் குரலில் வெளிப்படையாக காட்டி.
நிரல்யாவின் அருகில் வந்து அமைதியாக நின்றவன்...
“இரண்டு நாள் ஆகிறது... என் வீட்டிற்கு நான் வருவது போவதை பற்றி உங்களிடம் சொல்ல என்ன
இருக்கிறது என்று நிரல்யா நினைத்து இருக்கலாம்” என்று அவளின் கேள்விக்குப் பதில் அளித்ததோடு நிறுத்தாமல் “நிரல்யா இங்கு இருந்து பாண்டியை பார்த்துக்கொள்வது எனக்கு கஷ்டமாக இருக்கும், அதனால் அவனை நான் என் வீட்டிற்கு அழைத்துப் போகிறேன்” என்றான் அழுத்தமாக.
புரியாது விழித்த பாக்கியலட்சுமி “பாண்டியை நீங்க அழைத்துக்கொண்டு போறிங்களா??” என்று கேட்கும் போதே கார்த்திக்கின் கைகளைப் பற்றி இதற்கு மேல் வேண்டாமே என்பது போல் அழுத்தினாள் நிரல்யா.
மனைவி அழுத்திய காரணத்தை தெளிவாக உணர்ந்த போதும் அதைப் பற்றி அக்கறையின்றி...
“உங்க இருவராலும் பார்க்க முடியாத நிலை... என்றால் ஒரு பிரச்சனையும் இல்லை... நிரல்யாவிடம் எல்லா பொறுப்பையும் ஓப்படைத்துவிடுங்கள் உங்களை விட மிகவும் நன்றாகவே பார்த்துக்கொள்வாள்” என்றான் கார்த்திக் வினையமாக.
இந்தப் பதிலைக் கேட்ட பாக்கிய லட்சுமிக்கு முகம் இருண்டது என்றால் அதைக் கேட்டபடி அங்கே வந்து
சேர்ந்த சேதுராமனின் முகம் பிரதிபலித்த கோபத்தைக் கண்டவர்கள் அப்படியே இரண்டு அடி பின் நகர்ந்திருப்பார்கள், ஆனால் சேது ராமனின் குணம் மனதில் தோன்றுவதை அப்படியே பேசும் ரகம் இல்லை என்பதால் தன்னுள் எழுந்த கோபத்தை அப்படியே சிரிப்பு என்னும் போர்வையால் மறைத்து...
“அவள் புரியாது பேசுகிறாள் என்றால் நீங்களுமா? புது மாப்பிள்ளை இப்ப தான் ஊரிலிருந்து
வந்திருக்கிங்க... இந்த நேரத்தில் போய் அவரிடம் போய் பொறுப்பு பருப்புன்னு பேச்சு பேசிக்கொண்டு?? அது எல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்ல... நாங்களே பார்த்துக்கொள்வோம்” என்று பல் இளித்தவர்... “இந்த ஒரு மாதத்தில் நிற்காமல் ஊர் சுற்றியதில் ஏகப்பட்ட புது ப்ராஜெக்ட்டோடு வந்திருக்கிங்கன்னு கேள்விப்பட்டேன்..” என்று மருத்துவமனைக்கு மகனின் உடல் நலனை பற்றி விசாரிக்க வந்தவனிடம் பிசினஸ் பேசினார் சேது ராமன்.
பார்த்தாலே மரியாதை தர கூடிய வெள்ளை சட்டை, வெள்ளை பேன்ட் அணிந்து, நடுத்தர உயரத்துடன் தங்க பிரேமிட்ட கண்ணாடியுடன் ஒரு வித மிடுக்குடன் நின்றார் சேதுராமன்.
என் விஷயத்தில் நீ தலையிடாதே, உன் விஷயத்தில் நான் தலையிட மாட்டேன் என்னும் விதமாக
சேது ராமனின் தொனியை புரிந்துக்கொண்ட கார்த்திக்...
“நான் ஊர் திரும்பியது உங்க மனைவிக்குத் தெரியக் கூட இல்லை. ஆனால் ஊரிலேயே இல்லாத
உங்களுக்கு என் புது ப்ராஜெக்ட் வரைக்கும் தெரியுதே...” என்று இளக்காரமாகக் கேட்டவன் “உடம்பு முடியாது இருக்கும் ரகுபதியின் இடத்திற்கு வேறொரு புது டிரஸ்டியை தேடிக்கொண்டு வருவதாகவும் மூன்று பெயரை முடிவு செய்து இருப்பதாகவும் அதில் உங்க மூத்த அண்ணனின் மகன் கௌரி சங்கர் இருப்பதைப் பார்த்து மற்ற டிரஸ்டிகளுக்கு அதிருப்தி எனவும் கேள்விப்பட்டேன்” என்றான் கார்த்திக் அக்கு வேறு ஆணி வேறாக.
அவன் சொன்ன செய்தியைக் கேட்டு நிரல்யா மட்டும் அதிர்ச்சி அடையவில்லை உலக நடப்பை தன் கை
அளவில் வைத்து இருக்கும் சேதுராமனைக் கூட திடுக்கிடச் செய்தது... ஆனால் திடுக்கிட வைத்த காரணம் தான் வேறு!!!
சென்ற மாதம் அவர் அண்ணன் மகனின் பெயரை டிரஸ்டி ரகுபதிக்கு பதிலாக சேர்த்தால்... அவர் சற்றும்
எதிர்பாராது கடைசி நிமிஷத்தில் மற்ற டிரஸ்டிகளுக்கு அந்த சேர்க்கையில் உடன்பாடு இல்லாது போக... பலதரப்பட்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு மேலும் வேறு இரண்டு பேரை அதில் சேர்த்து... நாளை வாக்கு எடுப்பு நடத்தி தேர்வு செய்யும் அளவு போய் நின்றிருக்கிறது!!!
நிரல்யாவின் தந்தை பாண்டியன் உயிரோடு இருந்தவரை மொத்த நிர்வாகத்தையும் அவரே தலைமை
தாங்கி நடத்த... அவரின் மறைவிற்குப் பிறகு அந்த தலைமை பொறுப்பைச் சேது ராமனிடம் ஒப்படைப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். வெறும் மாப்பிள்ளை என்பதோடு மட்டும் இல்லை சேது ராமன் திறமையும், உழைப்பும் மிக்கவர். காலேஜில் அடிமட்டத்தில் இருந்து ஆரம்பித்து மேலே உயர்ந்தவர். ஆனால் எல்லோர் எதிர்பார்ப்பையும், சேது ராமனின் கனவை பொடிப் பொடியாகக்கும் வகையில் பாண்டியனோ ஏழு பேர் கொண்ட ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து பள்ளி மற்றும் கல்லூரியின் மொத்த நிர்வாகத்தையும் அதில் ஒப்படைத்து விட்டார்!!!
ஏழு பேர்கொண்ட டிரஸ்ட்டில் ஐவர் நிரந்தர உறுப்பினராக இருக்க மற்ற இருவர் பணி நியமன அடிப்படையில் நியமிக்கப் பட்டனர். டிரஸ்ட்டின் நிரந்திர உறுப்பினர்களில் மகள்கள் பாக்கிய லட்சுமி, நிரல்யா இருவரும் சேர்க்கப்பட்டிருக்க, மற்ற மூவரும் அந்த ஊரின் சீறும் செல்வாக்கும் கொண்ட தொண்டு நிறுவனம் நடத்திக்கொண்டு இருக்கும் பாண்டியனின் நம்பிக்கையும் நன்மதிப்பும் பெற்ற நண்பர்கள் ஆவர். சேது ராமன் அந்த டிரஸ்டின் பணி நியமனாக சேர்க்கப்பட்டிருக்கும் டிரஸ்ட்டி மட்டுமே!!!.
பணி நியமன அடிப்படையில் சேதுராமன் டிரஸ்டியாக இருத்தாலும் கூட தற்பொது எல்லா பொறுப்பையும் அவர் தலைமையில் தான் நடக்கிறது.
நிரந்திர உறுப்பினருக்கும் நிரந்தரமல்லாதவர்களுக்கும் சம்பளத்தில் ஆரம்பித்து எந்த விதத்திலும் பெரிய வித்தியாசம் இல்லை... அதிகாரத்தைத் தவிர!!!
எந்த முடிவு எடுத்தாலும் நிரந்திர உறுப்பினர் ஐவரில் மூன்று பேரின் ஒப்புதல் நிச்சயம் தேவை அதிலும் மிக பெரிய முடிவுகள், உறுப்பினர் சேர்க்கை போன்ற மிகவும் முக்கியமான முடிவுகள் எடுக்கும் நேரத்தில் ஐவரின் ஒப்புதலுமே கட்டாயம் தேவைப்படும். ஆக அவர்களின் ஒப்புதல் இல்லாது இவர்களால் தனித்து செயல் பட முடியாது அது மட்டும் தான் வித்தியாசம்.!!!
தன் மூத்த தாய்மாமனின் மகன் தான் இந்த கௌரி சங்கர் என்ற போதிலும் பாக்கிய லட்சுமியிடம் இருக்கும் நெருக்கம் எந்த தாய் மாமாவிடமும் நிரல்யாவிற்கு இருந்ததில்லை!!!
அவள் அறிந்த வரையில் கௌரி சங்கரை ஐந்து முறை பார்த்திருக்கிறாள் அவ்வளவே... வரும்போது
எல்லாம் ஏதோ ஒரு சாக்கு சொல்லி அவளைச் சீண்டி விட்டுப் போகும் வழக்கம் உடையவன் என்பதாலே வீட்டிற்கு வருகிறான் என்று தெரிந்தால் படிப்பைக் காரணம் காட்டி வெளியே சென்று விடுவாள்!!!
இப்படி நிரல்யாவையும், சேது ராமனையும் தன் பேச்சால் ஆட்டிப் படைத்துக்கொண்டு இருந்தவனைப்
பார்த்து “பார்வையாளர் நேரம் முடிந்து விடும்” என்று கார்த்திக் வந்ததிலிருந்து உருப்படியாக ஒரு வார்த்தை பேசினாள் பாக்கிய லட்சுமி.
அடுத்த பத்தாவது நிமிஷத்தில் ஐ.சி.யூவில் இருந்த வளவனை பார்த்து விட்டு நிரல்யாவோடு
வெளியேறினான் கார்த்திக்.
மிகுந்த யோசனையோடு காரில் அமர்ந்தவளிடம் எதையும் பற்றி பேசவும் முடியாது ஒரு முக்கியமான
ஆபிஸ் அழைப்பு வர... வீடு வந்து சேரும் வரை அந்த கால் நீண்டது.
வீட்டிற்கு உள்ளே நுழைந்தவுடன் ஆண்கள் யாரும் இல்லாது அம்மாவும் பாட்டியும் மட்டும் தனியாக
உட்கார்ந்து ஏதோ ஊர்க்கதை அளந்துக்கொண்டு இருந்ததைப் பார்த்து கார்த்திக்கின் முகம் சுருங்க அதைப் பற்றி கேட்கும் முன் மல்லிகா...
நிரல்யாவிடம் மருத்துவமனையில் இருக்கும் குழந்தையின் நலனைப் பற்றி விலாவரியாக குசலம் விசாரிக்க ஆரம்பிக்க... பத்து நிமிடம் கடந்த பின்னும் அவர்கள் பேச்சை முடிப்பதற்கான அறிகுறியே தென்படாது போக... கடுப்பான கார்த்திக்.. "அவள் வீட்டுக்கதையை விசாரிப்பது இருக்கட்டும் முதலில் பெற்ற மகன் வயிற்றைப் பாருங்கள் அம்மா. நீங்க எல்லோரும் சாப்பிட்டாச்சா?” என்று அவர்கள் பேச்சில் மூக்கை நுழைத்தான்.
“உனக்கு வயிற்றுக்கு என்னடா?? நீதான் “டயட்” என்ற பெயரில் இரவு எட்டு மணிக்கு மேல் திட உணவை
சாப்பிடும் பழக்கத்தை விட்டு விட்டாய்... நிறுவும் வளவனோடு மருத்துவமனையிலேயே சேர்ந்து சாப்பிட்டு விட்டேன் என்று போன் பண்ணி சொல்லிவிட்டதால் அலக்நந்தாவோடு நாங்களும் எட்டு மணிக்கே சாப்பிட்டாச்சு” என்று கூறிய அம்மா தொடர்ந்து...
“ஏன்டா கம்பெனியில் ஏதாவது பிரச்சனையா?” என்று கார்த்திக்கிடம் கேட்க நிரல்யாவிற்கு தூக்கி
வாரிப் போட்டது.
பாட்டி மாதிரி வீட்டில் மட்டுமல்லாது கம்பெனியில் நடக்கும் விஷயத்தைக் கூட விரல் நுனியில்
வைத்திருக்கும் பழக்கம் மல்லிகாவிற்கு இல்லை. தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று இருக்கும் அவரே அப்படிக் கேட்கிறார் என்றால் ஏதோ நடக்கப் போய்த் தான கேட்க வேண்டும் என்று மனதில் கேள்வி எழ... மல்லிகாவையும் கார்த்திக்கையும் மாறி மாறி பார்த்தாள் நிரல்யா!!!
“ஏன் கேட்கறிங்க?” என்றான் கார்த்திக்.
“இல்லடா பத்ரியும் உன் அப்பாவும் மாலை வீட்டிற்குச் சீக்கிரம் வந்ததோடு தாத்தாவையும்
அழைத்துக்கொண்டு அந்த ஆபிஸ் ரூம் போனவர்கள் மாலை சிற்றுண்டி இரவு உணவுவரை எல்லாம் உள்ளே தான்... இன்னும் வெளியே வரவேயில்லையா அதனால் தான்” என்றார் அம்மா அந்த அறையின் புறம் ஒரு பார்வையைச் செலுத்தியபடி.
“ஓ!!!” என்று அதனால் தான் யாரும் கண்ணிலேயே படாமல் போனதற்கான காரணம் புரிய தலையை
ஆட்டியவன் “வீட்டிற்கு வராது காலில் சக்கரம் கட்டியது போல் சுற்றியதன் காரணமாக மூன்று பெரிய பிசினஸ் வந்திருக்கிறது... இப்ப இருக்கும் வசதியை வைத்துக்கொண்டு அதைச் செய்துக்கொடுக்க முடியாது. கொஞ்சம் பிசினஸை விரிவுபடுத்த வேண்டும். ஆனால் விரிவுபடுத்தும் பட்ஜெட் அடுத்த வருடத்திற்கான திட்டத்தில் தான் இருக்கு. அதை நடப்பு ஆண்டிலேயே செய்ய வேண்டும் என்றால் எதை எப்படி செய்வது, எங்கிருந்து அத்தனை பணம் திரட்டுவது என்று பல விஷயம் கூடி ஆலோசனை தாத்தாவுடன் பேசுகிறார்களாக இருக்கும்” என்றான் கார்த்திக் விரிவாக.
“ம்ம்..” என்று அமைதியாக மல்லிகா தலை ஆட்டும் போதே நிரல்யா அசதியாக கையின் இடையில் கொட்டாவியை விட...
“நிரும்மா… ஆபிஸ்… மருத்துவமனை என்று அலைந்ததில் ரொம்பவே களைப்பாக தெரிகிறாய். போய்
தூங்கு நாளை ஆபிஸ் போகணும் இப்பவே மணி பதினொன்று ஆக போகிறது” என்று அவளை எழுப்பி அனுப்பியதோடு பின்னாலே ஒரு கிலாசில் பாலையும் வேலைக்காரியிடம் கொடுத்து அனுப்பினார்.
“ஏன்டா நீ போகவில்லை?” என்று பாட்டி கார்த்திக்கை பார்த்துக் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே
ஆபிஸ்சின் அறைக் கதவு திறந்தது!!!
தாத்தா அப்பா பத்ரி என்று மூவரும் ஒருவர் பின் ஒருவராக வெளியே வர... அவனை முதலில் கண்ட தாத்தா “டேய் எப்படா நீ வந்த??” என்று கேட்டுக்கொண்டு அவன் அருகில் வந்தார்.
“அரை மணி நேரம் ஆகிறது தாத்தா”
“அந்த ஜெர்மன்...” என்று தாத்தா ஆரம்பிக்கும் போதே இடையிட்ட பத்ரி..
“நான் அதைப் பற்றி விரிவாக அவனிடம் சொல்லி விடுகிறேன் தாத்தா, நீங்க மாலையிலிருந்து ஒரு
இடத்தில் அமர்ந்திருந்து உங்களுக்கு அலுப்பாக இருக்கும், நீங்க போய் படுங்க... அப்பா நீங்களும் தான்” என்றதோடு நிற்காமல் மூத்தவர்கள் ஒய்வெடுக்க அறைக்குள் செல்லும் வரை அமைதியாக நின்றவன் அவர்கள் சென்ற அடுத்த நிமிடம், “என்னுடன் வா” என்று தம்பியிடம் அழுத்தமாக கூறிவிட்டு ஹாலில் இருந்த ப்ரண்ச் வின்டோவை திறந்துக்கொண்டு வெளியே சற்றே இருட்டாக இருந்த புல்வெளியில் வேகமாக நடந்து முன்னே சென்றான்.
பௌர்ணமி கழித்து மூன்றாம் நாள் என்பதால் நிலா வெளிச்சம் மிக நன்றாகத் தெரிய.... அண்ணனைப்
பின்பற்றி அமைதியாக புல்வெளியில் நடந்தான் சின்னவன்!!!
வீட்டிற்கு வெகுதூரம் சென்றபின் அங்கிருந்த ஒரு செண்பக மரத்தடியில் நின்று தம்பியைப் பார்த்தவன்...
“நீ திடீரென்று இரவோடு இரவாக குதித்ததற்கும் பின் ஜெர்மன் டிரிப்பை கேன்சல் செய்ததற்கும் காரணம் நிரல்யாவோ, அப்பா இல்லை அந்த சேதுராமன் தானே??” என்றான் அதிரடியாக.
தொடரும்....
அடுத்த பதிவு - புதன்
DEAR READERS...
கதையின் போக்கு எப்படி இருக்கு என்பதை அறிய ஆவலாக மீ வெட்டிங்க..
நீங்களும் உங்கள் கருத்தை கீழே சொல்ல விட்டு போவிங்களாம்....