கதை சங்கமம் 2021
அத்தியாயம் - 12
“இன்னும் இரண்டு நாள் கழித்துக் கண்டுபிடிப்பாய் என்று எதிர்பார்த்தேன்டா... ஆனால் இத்தனை சீக்கிரம் கண்டுபிடித்து என் அண்ணன் என்று நிரூபித்து விட்டாயே” என்று நக்கலாக பாராட்டு
மழை பொழிந்தான் கார்த்திக்.
“எனக்கு வரும் ஆத்திரத்திற்கு...” என்று பல்லைக் கடித்தவன்... “வெகுநாள் நிரல்யாவை பார்க்காது உன்னால் இருக்க முடியாது என்று தெரியும். அதனால் தான் நீ இரவோடு இரவாக வந்ததைப்
பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் ரொம்ப நல்லவனாட்டம் அப்பா சொன்னவுடன் டிரிப்பை கேன்சல் பண்றேன்னு சொன்ன பார்... அப்பவே ஏதோ வில்லங்கம் இருக்கும் என்று நான் சந்தேகப்பட்டது சரியாய் போச்சு.... ஏன்டா இப்படி பண்ண??”
“எதை ஏன்டா இப்படி பண்ணேன்னு கேட்கற??”
“வேறு எதைக் கேட்பேன்... ஏன் சேதுராமனை சீன்டினன்னு கேட்கிறேன்? எப்பயும் போல் ஒதுங்கிப் போய் இருக்கலாம் இல்ல” என்றான் பத்ரி ஆதங்கமாக.
“போய் இருப்பேன் அது வெறும் பணம் விஷயமாக மட்டும் இருந்திருந்தால்... ஆனால் இது அப்படி விட முடியவில்லை” என்றான் திடமாக.
காட்டமாக “எதைடா விட முடியவில்லை?? காலேஜின் டிரஸ்ட்டில் உன் மனைவி நிரல்யா
உறுப்பினராக இருக்கலாம், ஆனால் நீ அந்த டிரஸ்டி உறுப்பினர் சேர்க்கையில் மூக்கை நுழைப்பது எந்த விதத்தில் ஏற்புடையது?? தேவை இல்லாமல் மற்ற டிரஸ்டின் உறுப்பினர்களின் மனதைக் கலைக்கும்படி தாத்தாவை ஏவி விட்டு... சேதுராமன் கொண்டு வந்த ஆளை மறுக்க சொல்லியதோடு நிறுத்தாது அவருக்கு எதிராக வேறு ஒரு ஆளையும் கலத்தில் இறக்கி டிரஸ்டிற்குள் ஒரு பெரும் போரை உருவாக்கி விட்டு... இப்ப ஓட்டுப் போட்டுத் தேர்ந்து எடுக்கும் அளவு விபரீதமாகச் செய்து விட்டு வந்திருக்கிறாய்” என்றான் மூச்சு விடாது பேசினான் பத்ரி.
“இந்த ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறைப்படி ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பது அத்தனை பெரிய குற்றமாடா அண்ணா? காலேஜ் டிரஸ்ட் மெம்பர் என்பதால் அவர் நினைத்ததை எல்லாம் செய்து விடலாம் என்று நினைக்கக் கூடாது இல்லை?” என்றான் கார்த்திக் அழுத்தமாக.
“அவர் நினைப்பதை நடக்க கூடாது என்று வீம்புக்காக டிரஸ்டிற்கு உள்ளே கொண்டு வர முனையும் ஆளைத் தடுத்து நிறுத்த போகிறாயா?”
“இது வீம்புக்காக இல்லை பத்ரி… என்னாக வரும் புது ஆளைத் நிறுத்த தான் போகிறேன்” என்று வீர முழக்கமிட்டான்.
“அடேய்… தடுத்து நிறுத்துவதில்லை ஒரு பிரச்சனை இல்லைடா.. ஆனால்... அதன் பலன் என்ன??” என்றான் பத்ரி.
“பலன்..?? பலன்..??” என்று விகாரமாகச் சிரித்த கார்த்திக் “சேதுராமனின் உண்மை நிலவரத்தைப் படம் பிடித்துக் காட்டுவதற்காக.”
“என்னடா உண்மை நிலவரம்??”
“டிரஸ்டிற்குள் தான் வைத்தது எல்லாம் சட்டம் என நினைக்கும் அவரின் அதிகார எல்லையைக் காட்ட ஆசைப்பட்டேன் அவ்வளவு தான்”
“அவர்களுக்குள் இயற்கையாக கருத்து வேறுபாடு வந்து இந்த ஏற்பாட்டை செய்து இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை, ஆனால் இதற்கு பின்னால் நீ இருக்கிறாய் என்று தெரிய வந்தால்....”
“தெரிந்தாலும் கூட அந்த சேது ராமன் என்னை என்ன செய்ய முடியும் என்று பயப்படுகிறாய்??”
“அடேய் மடையா... நான் இத்தனை நேரம் பேசியது சேதுராமனைப் பற்றிய பயம் இல்லைடா...
நிரல்யாவைப் பற்றி... அவளுக்கு இந்த உண்மை தெரிந்தால்?? கொஞ்சம் யோசித்துப் பார்த்தாயா?? நிரல்யாவை டிரஸ்டின் ஆக்டிவ் உறுப்பினராக இருப்பதற்கு தடைச்சொல்லும் நீ, இந்த மாதிரி செய்திருக்கிறாய் என்று தெரிய வந்தால் நிரல்யாவை எப்படி சமாளிப்பாய்?” என்றான் கொந்தளிப்புடன்.
“காதலும் நம்பிக்கையும் நாணயத்தின் இருபக்கங்கள் போல். இதில் ஒன்று சிதைந்தாலும்
மற்றொன்றிருக்கும் மதிப்பு இருக்காது. இதற்கு நான் வேறு யாரையும் உதாரணம் காட்டப் போவதில்லை... என்னையே தான் சொல்கிறேன்... அலக்நந்தாவை நான் திருமணம் புரிந்தபோது அவள் நடிகை என்றே தெரியாது. அதை மறைத்து விட்டாள் என்று அறிந்தபோது எங்கள் உறவில் எத்தனை பெரிய விரிசல் விழுந்ததையும் அந்த மனக்கசப்பிலிருந்து விடுபட எத்தனை காலம் நாங்கள் போராட வேண்டி இருந்தது என்பதும் உனக்கு நன்றாகவே தெரியும் தானே??”
“நீ சொல்வது எல்லாம் உண்மை தான்டா... ஆனா... எல்லா பொது விதிக்கும் விதிவிலக்கு என்று
உண்டு... அந்த விதிவிலக்கு தான் நாங்கள்!!! எனக்கும் நிரல்யாவிற்கும் இடையில்... அந்த மாதிரி... ம்ம்ச்ச்...” என்று பாதியில் நிறுத்தியவன் “உனக்கு எப்படி சொல்வது என்று புரியவில்லை” என்று வார்த்தைகள் கிடைக்காது தடுமாறியவன் “எங்கள் பிரச்சனையே வேறடா... நான் வாய் விட்டுச் சொல்லித்தான் அவளுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று எங்களுக்குள் இல்லை... ஒரு வார்த்தை பேசாமலே... நான் ஏதோ பண்ணி இருக்கேன் என்று அவளால் உணர முடியும்... அதே போல் தான் நானும். என்ன வித்தியாசம் நான் வாயை விட்டுக் கேட்டு விடுவேன், அவளின் குணத்திற்கு வாயைத் திறந்து கேட்கமாட்டாள்... நானாக சொல்லும் வரை காத்திருப்பாளடா எத்தனை வருடம் ஆனாலும்” என்று முடித்தபோது அவனின் குரலில் ஆதங்கம்.. வருத்தம்
அதைத் தாண்டி ஒரு வலி இழையோடியதை பத்ரியினால் மிக துல்லியமாக உணர முடிந்தது.
அவனின் பதிலை ஒரு நிமிடம் உள் வாங்கிய பத்ரி... தம்பியின் வலியைப் பொறுக்க மாட்டாது
“எதற்காக அவளைக் காக்க வைக்க வேண்டும்... நீயே வாயைத் திறந்து சொல்லித்தொலையேன்டா” என்றான் அண்ணனாக.
வெறுப்பாக அவனின் தாடியைத் தடவியவன்... “பண்ணலாம் தான்.. ஆனால் உனக்குத் தான் அவளைப் பற்றி தெரியுமே... அவளுக்குப் பொய் சொல்ல வராது... இந்த விஷயத்தைத் தப்பி தவறி அவள் அக்காவிடம் சொல்லித் தொலைத்தாள்
என்று வை... அப்புறம் இத்தனை சிரமப்பட்டு செய்த காரியத்திற்கு எந்தப் பலனும் இல்லாது போய் விடும்”.
“இப்படி தலை சுற்றி மூக்கை தொடுவதற்குப் பதில் நிரல்யா அந்த டிரஸ்டின் ஆக்டிவ் மெம்பராக இருந்திருந்தால் அவளின் ஒரு ஓட்டு இந்தப் பிரச்சனைக்கு எல்லாம் முற்று புள்ளி வைத்திருக்கும்” என்று பெருமூச்சை விட்டான் பத்ரி.
“ஆக்டிவ் மெம்பராக இருப்பதற்காக அவள் கொடுக்க வேண்டிய விலை அவளின் நிம்மதி
என்றால் இந்த உலகமே எதிர்த்து நின்றாலும் அதை நான் தடுத்தே தீருவேன்”
“சரி... அவளே இல்லாத டிரஸ்டிற்கு எவன் வந்தால் உனக்கு என்ன வந்தது?”
“அவளை மறுப்பது என்னுடைய சுயநலத்திற்காக இருக்கலாம், அதுக்காக பசங்க படிக்க வழி செய்யும் அந்த டிரஸ்ட் எக்கேடு கெட்டுப் போகட்டும் என்று அந்த கௌரி சங்கரை
டிரஸ்டிற்குள் அழைத்து வருவதை நான் எப்படி கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியும் சொல்லு?” என்றான் ஆத்திரமாக.
“கௌரி சங்கர்...??? யார் என் கிளாஸ் மேட் கௌரி சங்கரா??” என்றான் இழுவையாக...
“நான் செய்தித்தாளின் தலையங்க செய்தியைச் சொன்னால் நீ மூன்றாம் பக்கத்தில் வரும்
பெட்டிச் செய்தியாக அதைச் சொல்கிறாய்” என்றான் குதர்க்கமாக கார்த்திக்.
“என்னது?”
“அவன் உன்னுடைய பள்ளித் தோழன் என்று மூன்றாம் பக்கத்தில் வரும் பெட்டிச் செய்தி அதைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை, ஆனால் அவன் சேதுராமனின் மூத்த அண்ணன் மகன்
என்பதும் நிரல்யாவின் மூத்த தாய்மாமாவின் மகன் என்பதும் தான் தலைப்பு செய்தியே”
“சேது ராமனுக்கு என்ன கிறுக்கா பிடித்திருக்கு?? அவரைப் பேராசைக்காரர் எல்லாத்திற்கும்
அலைந்தவர் என்று மட்டும் தான் இத்தனை நாள் நினைத்தேன்.. டீம்டூ யூனிவர்சிட்டி என்று பெயர் வரப்போகும் இந்த நிலையில் ஏன் டிரஸ்டுக்கு சம்பந்தமே இல்லாது மைனிங் தொழிலில் இருக்கும் அவனை அழைத்து வரத் துடிக்கணும்??” என்று முடிக்காமல் இழுத்த பத்ரி... “என்னுடன் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே அந்த கௌரி சங்கர் பண திமிரில் புலட்டின் பின்னாடி மாசம் ஒரு பெண்ணை ஏற்றிக்கொண்டு சுத்தும் சரியான பொம்பளை பொறுக்கி என்று தெரியும். இந்த லட்சணத்தில் நம்பிக்கையுடன் பெண்கள் அதிகமாக வந்து தங்கிப் படிக்கும் இடத்தில் அந்த கௌரி சங்கரை சேர்ப்பதற்கு என்ன அர்த்தம்??” என்று குழம்பிப் போய் கேட்டான்.
“ஏன், எதற்கு என்று எதுவும் தெரியவில்லை... ஆனால் அவனைச் சேர விடக்கூடாது என்பதில் நான் முழு தீவிரமாக இருக்கிறேன்” என்றான் கார்த்திக் உறுதியாக.
தீவிரமாக யோசித்தபடி “சேதுராமன் தனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால் தான் வாய்
திறந்தே பேசுவார் என்றாலும் தன்னை மகா யோக்கியவான், அப்பழுக்கு அற்றவன் என்று வெளியே காண்பிப்பதில் ரொம்பவே கவனமாக இருப்பவர் ஆச்சே... அதனால் தானே விடிய விடிய தங்கையின் கல்யாணத்தை வைத்துக்கொண்டு சொந்தங்கள் கூடி இருந்த சபையில் நள்ளிரவில் அவரிடம் உனக்கு நிரல்யாவைக் கட்டி வைக்க பேசினேன்... ஊரார் மத்தியில் தந்தையும், தாயும் இல்லாது அக்கா மாமாவின் ஆதரவில் இருக்கும் பெண்ணிற்கு இத்தனை நல்ல இடம் தானாக வந்து வாய்க்கும் போது மறுப்பு சொன்னால் ஊர் தன்னை தப்பாகப் பேசுமே என்ற ஒரே காரணத்திற்காகத் அவருக்குப் பிடிக்காவிட்டாலும் கூட சம்மதம் என்று ஒப்புக்கொண்டார்... அப்படிப்பட்டவர் கௌரி சங்கரை அழைத்து வந்தால் தன் இமேஜ் கெட்டுவிடும் என்று தெரிந்தபிறகும் ஏன் கொண்டு வர வேண்டும்... இதன் உள் நோக்கம் என்னவாக இருக்கும்? யோசித்தாயா??”
“எனக்கு என்னவோ அதிரடியாக எங்கள் கல்யாணத்தை ஊர் அறிய பண்ணியதன் விளைவாகத்தான் அந்த ஆள் டிரஸ்டில் தன் செல்வாக்கு குறைந்து விடுமோ என்ற பயத்தில் துணை தேடுகிறாரோ என்று தோன்றியது. ஆனால் என் ஊகம் தப்பாகவும் இருக்கலாம். அதைப் பற்றி நிறுத்தி நிதானமாக யோசிக்க நேரம் எனக்கு எங்கே இருந்தது?? கௌரி சங்கரைக் கொண்டு வரப் போகிறாராம் என்று விஷயம் கேள்விப்பட்டதில் ஆரம்பித்து இன்று மாலை அடுத்த ஆளை நிறுத்துவது வரை நிற்காமல் ஓடிக்கொண்டே தான் இருக்கிறேன்.”
“இத்தனை தூரம் செய்கிறார் என்றால் ஏதோ பெரிய திட்டம் இல்லாது அவர் காரியத்தில்
இறங்க மாட்டார். சேது ராமனை நம்ப முடியாது, கடைசி நிமிஷம் தன் பேச்சு திறமையால் டிரஸ்ட் ஆட்களை தன் பக்கம் வளைக்க கூடியவர்... கௌரி சங்கருக்குப் போட்டியாக யாரை களம் இறக்கி இருக்கிறாய்??”
“அண்ணாவின் பள்ளித் தோழன் நெடுஞ்செழியன்”
அந்த பெயரைக் கேட்டவுடன் தெரிந்த விட்டது அந்தப் போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என்று...
காரணம் நெடுஞ்செழியனின் குடும்பம்... அவர்கள் ஊரில் சுதந்திரப் போராட்ட தியாகியின் வழி வந்த குடும்பம் என்று எல்லோரும் அறிவர்... அவர்களைப் போல் ஏற்றுமதி தொழில் செய்தாலும் அவனின் தயாள குணத்தையும் தர்ம சிந்தனையும் பற்றி ஊர் உலகம் நன்றாகவே அறியும். பல தொண்டு நிறுவனம் வைத்து ஏழை எளிய மக்களுக்கு உதவி புரியும் நல்லவன், சென்ற ஆண்டு அரசாங்கம் கூட விருது அறிவித்து இருந்தது!!
“ஆரி பள்ளி தோழர்களுடன் தொடர்பில் இருப்பான் என்று எதிர்பார்க்கவில்லை” என்றான் பத்ரி
நம்ப முடியாது.
“கிழிச்சான்.. சௌவியுடைய கல்லூரி தோழி தான் நெடுஞ்செழியனின் தங்கையாம்... அதனால் வந்த பழக்கம்”
“ஒ!!” என்று பொருள் புரிந்து இழுத்தவன் “இத்தோடு நிறுத்து கார்த்திக்... ஏன் கௌரி சங்கரை
அழைத்து வர அவர் துடிக்கிறார் என்ற முழு தகவலையும் திரட்டுகிறேன்... அதன் காரணத்தைத் தெரிந்த பிறகு நாம் அடுத்த காயை எப்படி நகர்த்துவது என்பதைப் பற்றி ஆலோசிக்கலாம்.. அதுவரை பொறு” என்று தம்பி கேட்காமலே களத்தில் குதித்தான் பத்ரி.
சம்மதிப்பாய் தலை அசைக்க கார்த்திக் எதுவும் பேசாது மிகுந்த யோசனையில் இருக்க... அதைக் கலைக்க விரும்பாத பத்ரியும் தூரத்தில் தெரியும் இருட்டை வெறித்தவன்...
“கார்த்திக்... நிரல்யா வேண்டுமானால் நீயாக வாயைத் திறக்கும் வரை காத்துக்கொண்டு
இருக்கலாம், ஆனால் சேது ராமன் அப்படி இல்லை.. அவர் கொண்டு வந்த ஆளைக் களைத்து விட்டது நீ தான் என்று தெரியும்போது அவர் எப்படி ரியாக்ட் பண்ணுவார் என்று சொல்ல முடியாது” என்று எச்சரித்தான்.
தன் யோசனையிலிருந்து மீண்டு பத்ரியை நோக்கியவன்... “எப்படி தெரியாது போகும்?? இன்று இல்லாவிட்டாலும் நிச்சயமாக தெரியத்தான் போகிறது...”
“கார்த்திக் கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு. டிரஸ்டின் விஷயத்தில் நுழைந்ததன் மூலம்... நீ
புலியின் வாலை பிடித்த இருக்கிறாய்.. அது எப்படி ரியாக்ட் பண்ணும் என்று தெரியாது..”
“அட போடா... எப்ப நான் நிரல்யாவின் கழுத்தில் தாலியை கட்டினேனோ அப்பவே புலியின்
வாளைப் பிடித்துவிட்டேன். கடந்த ஐந்து ஆண்டாக அதன் பின்னால் தான் ஓடிக்கொண்டு இருக்கிறேன். இன்னும் எத்தனை நாள் ஓடிக்கொண்டு இருக்க முடியும் என்று தெரியவில்லை.. இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி ஒன்று புலி என்னைத் திங்கும் முன் நான் புலியைக் கொல்ல வேண்டும்..” என்றான் மிக மிக உறுதியாக.
கார்த்திக்கின் பார்வையில் தெரிந்த உரமும்.. இறுகிய உடலும்... முறுக்கிய கைகளும் பத்ரியின்
வயிற்றில் புளியைக் கரைக்க.... ஆரியுடன் இன்று இரவே இதைப் பற்றி பேச வேண்டும் என்று முடிவும் எடுத்தவன் இதற்கு மேல் இதைக் குறித்துப் பேச விரும்பாது...
“நேரம் ஆச்சு.. வா வீட்டிற்குப் போகலாம்” என்று கூறியபடி வீட்டிற்குச் செல்லும் பாதையில்
திரும்பியவன் அவனின் கவனத்தைக் கலைக்கும் விதமாக தொழில் விஷயமாக தாத்தா மற்றும் அப்பா எடுத்த முடிவைப் பற்றி விளக்கமாகப் பேசியபடி நடக்கத் தொடங்கினான்.
அடுத்த பதினைந்து நிமிடத்தில் வீட்டிற்குள் வந்தவர்கள் குட் நைட்டுடன் விடைப்பெற.. கார்த்திக் மாடிப் படி ஏறியதும் ஆர்யாவின் நம்பரை அழுத்தினான் பத்ரி.
“ஹெல்லோ” என்று சொல்வதற்கு முன் தன் அண்ணனைத் சொல்லிக்கொடுத்த நல்ல பல ப்ரெண்ச் வார்த்தைகளை கொண்டே அவனுக்கே அர்ச்சனை செய்ய தொடங்கியவன் கிட்டத்தட்ட பத்து நிமிஷம் மூச்சு விடாது திட்டிவிட்டு நிறுத்தினான் பத்ரி.
ஆர்யா பாரிஸ் சென்று கலையைப் பயின்றானோ இல்லையோ பிரண்ச்சில் இருக்கும் பல “நல்ல” வார்த்தைகளைப் பயின்றான். சங்கி மங்கி வளர்ந்து வந்த சூழலில் அண்ணன்மார்கள் மனதில் நினைத்ததைத் திட்டிக்கொள்ள முடியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக பழக ஆரம்பித்த அந்தப் பழக்கம் தற்போதும் சகோதரர்கள் மத்தியில் திட்டிக்கொள்வது என்றால் ப்ரெண்ச்சில் தான்.
இரவு பன்னிரெண்டு மணிக்கு போன் பண்ணி தம்பிக்காரன் திட்டுவதை மிகவும்
பொறுமையாகக் கேட்ட ஆரி தம்பிக்காரன் முடித்தவுடன்...
“எல்லா வார்த்தையும் ரொம்ப சரியாக உச்சரிச்சிட்டியே” என்றான் அவனுக்கே உரிய
தெனாவட்டுடன்.
“அடேய்...” என்று பத்ரி சூளுரைக்கும் போதே..
“கார்த்திக் பேசினானா?” என்றான் அவனின் ஒற்றை கேள்வி பாணியில்.
“பேசலைடா... அணுக்குண்டை வீசி இருக்கான். அதன் அதிர்ச்சியிலிருந்து நான் இன்னும்
மீளவில்லை”
இளக்காரமாய் “தெரியுது” என்றான் ஆரி.
அவனின் கேளியைப் புறம் தள்ளிய பத்ரி... “அவன் என்ன சொன்னாலும் உடனே ஆமாம்
சாமின்னு சொல்லுவியா?? ஏன் எதுக்குன்னு கேட்க மாட்டியா? அவன் என்ன காரியம் பண்ணி வைத்திருக்கிறான் என்று தெரிந்தும் நீ ஏன்டா அதில் தலையிட்டு நிறுத்தவில்லை?” என்று புகை வண்டியில் வரும் புகை கணக்காகப் புகைந்து தள்ளினான் பத்ரி.
“தப்பு எது சரி எதுன்னு சொல்லிக்கொடுக்கும் வயதில் கார்த்திக் இல்லை. நம் உதவி தேவை
என்றால் அவனே நம்மிடம் வருவான்... அப்போ பார்த்துக்கொள்ளலாம் அவன் வழியில் குறுக்கே நிற்காதே” என்றான் மிகவும் திடமாக.
“என்னது தனியாக பார்த்துக்கொள்ளட்டுமா?? இந்த சோதனை எல்லாம் அவனுக்குத்
தேவைதானா டா?”
“இந்த உலகத்தில் சோதனைக்கு உட்படுத்தப் படாத பொருளுக்கு மதிப்பு இல்லை... அது காசு
கொடுத்து வாங்கும் சொக்கத் தங்கமாக இருந்தாலும் சரி விலை மதிப்பில்லாத காதலாக இருந்தாலும் சரி” என்றான் அமைதியாக.
அதே நேரத்தில் மேலே சென்ற கார்த்திக்கும் இதை எப்படி அவளிடம் பேசுவது என்று தீவிரமாக யோசித்தப்படிதான் படி ஏறினான்..
தொடரும்....
DEAR READERS………..
சென்ற வாரம் பதிவுகளை கொடுக்க முடியாததற்கும் மன்னிக்கவும்…
சப்ப மூக்கனுங்க அனுப்பிய சுனாமி(கொரோனா தாங்க!!) பேரலையாக எல்லோர் வாழ்க்கை பாதையிலும் புகுந்து விளையாட.. அதன் விளைவாக நான் தூங்கி எரியப்பட்ட இடம் ஒரு மலை பிரதேசம். லாக் டவுனின் நான் சிக்கிய இடம். என் வீட்டை சுற்றி கண்ணுக்கு எட்டிய தூரம் மலைகளும் குன்றுகளும் மட்டும் தான். தினமும் மலையில் இறங்கும் மேகத்தையும்.. போகிற போக்கில் பொழியும் சாரல் மழை, சலசலவென்று ஓடிக்கொண்டு இருக்கும் ஓடை, மலை இடுக்கில் இருந்து உதிக்கும் சூரியன், கடுமையான லாக் டவுனில் கூட நான் சுகந்திரமாக மலையில் (தாவி)திரிந்துக்கொண்டு தான் இருந்தேன்… உன் அலப்பற தாங்கலையேன்னு நினைக்காதிங்க… இருங்க முழுசாக சொல்லி முடித்து விடுகிறேன்…
அது எல்லாத்தை பார்த்துக்கொண்டே இருந்தால் வயிறு நிறையுமா?? நமக்கு சொறு.. சொறு தானே முக்கியம்?!?
அதை கண்ணால் பார்த்து நான்கு மாதம் ஆச்சு… இந்த ஊரில் அரிசி என்றாலே பாஸ்மதி அரிசியை தவிர வேறு ஒன்றும் இல்லை…
அப்ப சாம்பார் சாதம் எப்படிடா சாப்பிடுவிங்கன்னு கேட்டா...
பாஸ்மதி அரிசை ஒரு கப்பில்... மறுகப்பில் வெறும் பருப்பை தாளித்து கொட்டி வைத்து விட்டு(சாம்பாராமாம்!!!) இதில் ஒரு வாய் அதில் ஒரு வாய் வாயில்போட்டுக்கொண்டு சாப்பிட வேண்டுமா?
கேட்ட உங்களுக்கே குமட்டிக்கொண்டு வருது இல்ல…
அதை வாயில் வைத்த எனக்கு எப்படி இருக்குன்னு சொல்லுங்க...
அடேய்… நாங்க எல்லாம் சாதத்தை பரப்பி , நெய் விட்டு பின் குழி பறித்து அதில் சாப்பாரை உற்றி பாத்தி கட்டி சாப்பிடும் பரம்பரைய சேரத்தவங்களுக்கு இது ஒரு பொழைப்பா.. என்று ரோஷம் பொத்துக்கொண்டு வர..
சாதத்தை விட்டு சப்பாத்தியை தவிற வேறு ஒன்றும் அறியேன் பராபரமே என்று வாழ்ந்த காலங்கள் நான்கு மாதம்..
லாக் டவுன் ஓப்பன் ஆகியும் நான் வசிக்கும் இடத்தில் எந்த சர்விஸ்சும் இல்லாததால் பின் AUG மாதத்தில் தான் அரிசி கிடைத்தது.
இது ஒரு சாப்பில் தாங்க.. அப்பப்ப எடுத்து விடுகிறேன்…
இப்படி தான் போன வாரம் அடித்த மழையில் ரிப்பெரான செல் டவரை சரி செய்ய ஒரு வாரம்… ஒரு வாரம் பிடித்தது…!!!
சென்ற ஒரு வாரமும் உலகத்தில் இருந்து முற்றிலும் தூண்டிக்கப்பட்டு இருந்தேன்… நேற்று தான் தொடர்ப்பு மீண்டும் வந்தது.
அதனால் தான் உங்களுக்கு பதிவு பண்ண முடியவில்லை.. மன்னிக்கவும்..
விரைவில் விட்ட இரண்டு பதிவுகளையும் சேர்த்து போட்டு விடுகிறேன்.. தாமதத்திற்கு மன்னிக்கவும்.
Take care sisஅத்தியாயம் - 12