அத்தியாயம் - 5
அன்றைய முதல் சந்திப்பில் அவள் பேசிய பொருளின் பொருளைப் புரிந்துக்கொள்ள முடியாது இரண்டு நாள் தூக்கமின்றி திரிந்தவன் பின் மெல்ல தாத்தாவிடம் ஆரம்பித்து சங்கி, மங்கி வரை பேசி அவளைப் பற்றி தெரிந்துகொண்டது இதுதான்.
அந்த நிருவாகப்பட்டவள் அதி பயங்கர புத்திசாலி… ஒரு விஷயத்தைப் பார்த்தால் மட்டும் போதும் பார்த்த விஷயத்தைப் பார்த்த மாதிரியே சொல்லக்கூடிய திறமைக்கொண்டவள். அவளின் புத்திசாலித்தனத்திற்குப் பள்ளிக்குச் சென்று நேரத்தை வீணடிக்கப் பிடிக்காது வீட்டில் இருந்தபடி தானாக படிக்கிறாள். அதிகமாக பேசமாட்டாள். ரசகுல்லா பிரியை.. அப்பா என்றால் உயிர்.. சின்ன வயதிலிருந்தே பாட்டிதான் அவளை வளர்த்ததே.. அவரின் மறைவுக்கு பிறகு ரொம்பவே இளைத்து தெரிகிறாள்!!!
அதன் பிறகு நிருவின் அப்பாவில் ஆரம்பித்து அவளின் அக்கா வரை அவன் கேட்ட, பார்த்த, கிரஹித்தி விஷயம் எதுவும் அவனுக்கு உவப்பாக இல்லை. அடுத்த முறை அவள் வீட்டிற்கு வரும்போது தானாகவே அந்த சிறுமியின் பின் பார்வை போகத் தான் செய்தது!!!
வீட்டின் முன்னே இருக்கு பெரிய புல்வெளியில் பசங்களோடு சேர்ந்து எல்லோரும் விளையாடிக்கொண்டு இருக்க தண்ணீர் குடிக்க உள்ளே வந்தவளைக் கண்டவன் அதற்கு மேல் எதைப் பற்றியும் யோசிக்காது நேராக அவள் முன்னால் சென்று நின்றான்.
அவனைப் பார்த்தவுடன் லேசாக புன்னகை பூத்து நின்ற நிரல்யாவிடம்… “கால் எப்படி இருக்கு?”
“ஒரே வாரத்தில் சரியாகி விட்டது…”
அத்தனை நாள் மண்டையை குடைந்த கேள்வியை “நீ மட்டுமே வீட்டில் தனியாக படிக்க உனக்கு போர் அடிக்கவில்லையா?” என்று கேட்டான்.
அவனை ஆச்சரியமாக பார்த்தவள் “ம்கூம்.. ஏன் போர் அடிக்கணும்? எனக்கு படிக்கத் தான் பிடிக்குமே?!?” என்று பதிலளித்தாள்.
“புத்தகத்தை மட்டுமே படித்து எல்லாத்தையும் தெரிந்துக்கொள்ள முடியாது” என்றான் அக்கறையாக.
“ம்ம்… அதனால் தான் அப்பா எனக்கு லேப்டாப் வாங்கி தரேன் என்று சொல்லி இருக்கிறார்” என்றாள் பெருமிதமாக.
அதற்கு மேல் எதுவும் சொல்லாது தலையை ஆட்டிவிட்டு போய்விட்டான் கார்த்திக்.
அடுத்த மூன்று மாதம் சங்கி, மங்கியோடு விளையாட வரும் நிரல்யாவை கவனித்தவனுக்கு அவளைச் சுற்றி ஒரு தனிமை சூழ்ந்து இருப்பதை மிக துல்லியமாக உணர்ந்தான்!!!
அதைவிட அவன் எத்தனை தூரத்திலிருந்து அவளைப் பார்த்தாலும்…. அவனின் பார்வையை உணர்ந்த அடுத்த நொடி அவன் இருக்கும் புறம் தானாக அவளின் தலை திரும்பி அவனைக் கண்களால் பார்த்துச் சிரிக்கும் நிரல்யாவை கண்டும் காணாதது போல் சென்றுவிடுவான்.
“நிரு.. நிரு” என்று தங்கைகள் பேசும்போது காதில் விழுந்தாலே ஏனோ தான் செய்ய வேண்டிய மிக மிக முக்கியமான விஷயத்தைச் செய்ய தவறி விட்டது போல் ஒரு குற்ற உணர்வு எழுந்து அவனைப் பேய் ஆட்டம் போடும்!!!
அன்றும் அப்படிதான் அவனும் ஆரியும் வெளியே போவதற்காக நின்றுகொண்டு இருக்கும்போது... அங்கே வந்து நின்ற பென்ஸ்சில் இருந்து இறங்கிய நிரல்யா இவர்கள் இருவர் நிற்பதைப் பார்த்துவிட்டு ஒரு சின்ன புன்னகை மட்டும் சிந்திவிட்டு நகர்ந்தவளை காட்டி...
“இவள் தான் அந்த நிரு” என்றான் கார்த்திக் உள்ளே சென்றுகொண்டு இருந்தவளை பார்த்தபடி.
“அந்த நிரு இதுதானா??” என்று திரும்பி நின்று பார்த்தவன் “இந்த பெயரைக் கேட்டாலே உள்ளே குற்ற உணர்வு குறுகுறுக்கிறது. நீயும் அவளைப் பார்த்தால் ஏன் அப்படி சொல்கிறேன்னு நன்றாக புரியும் என்றாயே??” என்று தம்பியிடம் கேட்டுக்கொண்டு அவன் ஆம் என்று தலையை ஆட்டிய பிறகு மீண்டும் நிரல்யாவை திரும்பி ஆரி பார்க்கும் போதே கிரிகெட் விளையாடுவதற்கு தேவையான சாமான்களை சுமந்தபடி நடுளவன் பத்ரி வந்து சேர்ந்தான்.
“நீயும் கார்த்திக்கும் முதலில் போய் ஆடுகளத்தைத் தயார் செய்யுங்க... இதோ ஒரு பத்து நிமிஷத்தில் வந்து விடுகிறேன்” என்று அவனை அனுப்பி விட்டு வீட்டுக்குள் அவசரமாக நுழைந்தான் ஆரி.
“அடேய்… தூங்கி எழுந்ததிலிருந்து கிளம்பு கிளம்புன்னு என்னைச் சரியாக டிபன் கூட சாப்பிட விடாது டார்சர் கொடுத்து விட்டு இப்ப எங்கடா உள்ளே போற?? அப்படி என்னடா அவசரம்?” என்று பத்ரி கத்தியதைக் காதிலேயே வாங்காது உள்ளே போன ஆரியை வினோதமாக பார்த்தவனின் சட்டை காலரைப் பிடித்து இழுக்காத குறையாக கிரவுண்டிற்கு அழைத்துப் போனான் சின்னவன்.
உள்ளே அத்தனை அவசரமாக வந்தவன் மங்கிக்கு லேசான ஜுரம் இருப்பதால் வெளியே விளையாட செல்லாது வீட்டிலேயே விளையாடிய சிறுமியர்களை மெல்ல கவனித்தான்.
இருபது நிமிடம் ஆரி வைத்த கண் வாங்காது பார்த்ததில்... ஹாலில் ஏதோ வரைகிறேன் என்று கிறுக்கி தள்ளிக்கொண்டு இருந்த நிருவை பார்த்த ஆரிக்கு அவளின் புத்திசாலித்தனமும், அமைதியைத் தவிர இயல்பிற்கு மாறாக எதுவும் கண்ணிற்கு விளக்கு எண்ணெய் விட்டுக்கொண்டு தேடியபோதும் புலப்படவில்லை!!!
கார்த்திக் சொன்னதை எல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும் போதும் அவன் சொன்ன நிருவும் இவன் பார்க்கும் இந்த சிறுமியும் ஒன்று தானா என்று எண்ணும் அளவு சந்தேகமே வந்தது என்று தான் சொல்ல வேண்டும்!!!
கார்த்திக் இட்டுக்கட்டி தன்னிடம் பேசவில்லை என்று ஆரிக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் அவன் சொன்ன விஷயத்திற்கும் இவன் கண்ணால் பார்க்கும் விஷயத்திற்கும் ஓப்பாது போகவே மிகுந்த குழப்பத்துடன் ஆடுகளம் வந்தான் ஆரி.
அடுத்த இரண்டு மணி நேரம் நண்பர்கள் குழாம் வேர்க்க விறுவிறுக்க விளையாடி விட்டு வீடு திரும்பும் வழியில் சகோதரர்கள் இருவருக்கும் சிறு தனிமை கிடைக்க..
கார்த்திக் கேட்கும் முன்பே ஆரி இந்த விஷயத்தைப் பற்றி தொடங்கினான்.
“நான் பார்த்தது அந்த நிரு தானா? இல்லை அவளுக்கு டிவின்ஸ் இருக்கிறார்களா?” என்பது தான் அவன் கேட்ட முதல் கேள்வியாக இருந்தது.
“அண்ணா??” என்று ஆச்சரியமாக பார்த்தான் கார்த்திக்.
“இல்லைடா… நீ சொன்னது எதுவுமே எனக்கு அவளிடம் தெரியலைடா” என்று பெருமூச்சு விட்டான் அண்ணன்.
“அது இல்லண்ணா….” என்று பேச ஆரம்பித்தவனை மீண்டும் நண்பர்கள் குழாம் சூழ அதற்கு மேல் வீடு வந்து சேரும் வரை ஒன்றும் பேசவில்லை முடியவில்லை.
வீட்டிற்கு வந்ததும் அழுக்கும் தூசியும் போக அவரவர் அறைக்குச் சென்று குளித்து உடை மாற்றிக்கொண்டு மூவரும் கீழே மதிய சாப்பாடு சாப்பிட வந்தார்கள்.
முன்பே மத்திய உணவை முடித்திருந்த சிறுமியர்கள்… பதிமூன்று வயதிற்கு மேற்பட்டோர் விளையாட கூடிய கார்த்திக்கின் லேகோ கலேக்ஷனில் இருந்த ஒரு ஹாரி போட்டர் டவரை எடுத்து வந்து சங்கி கொடுத்திருக்க… அதில் ஒரு டவரை முடித்து அடுத்த டவரில் பாதி கட்டி முடித்திருந்தாள் நிரல்யா!!!
ஆள் உயர டெடி பேரில் ஆரம்பித்து டைனோசர் வரை அனைத்து வகையான விலங்குகள் அணையாகச் சுற்றி இருக்க அதன் மேல் சயனித்து இருந்த மேகி… லேகோவின் வரைபடத்தைப் பார்த்து தப்பும் தவறுமாக சேர்க்க பொறுமையாக நிரல்யா அதைப் பிரித்து மீண்டும் ஒன்றோடு ஒன்றைச் சேர்த்துக் கொடுக்க, சங்கி அதை மாளிகை கட்டுகிறேன் என்று பொருத்தமே இல்லாத இடத்தில் சேர்த்துவிட்டு பின் அதன் கோமாளித்தனத்தைப் பார்த்து சங்கி மங்கி இருவருமே வயிறு வலிக்க சிரித்துவிட்டு அடுத்த லேகோவை எடுக்க போக... அவர்களுடன் சேர்ந்து சிரித்த போதும் தன் தோழி தவறாக பொருத்தியதைப் பிரித்து படத்தைப் பார்க்காமலே மிகச் சரியாக வேறு இடத்தில் பொருத்திக்கொண்டு இருந்தாள் நிரல்யா!!!
சிறுமியர் மூவரும் வெகுமும்முரமாக பேச்சிலும் சிரிப்பிலும் இருக்க இவர்கள் வீட்டிற்குள் வந்ததை யாருமே கவனிக்கவில்லை என்று ஆரி முதலில் நினைத்துக்கொண்டு இருக்கும்போது தான் கையிலிருந்த லேகோவை ஒன்றோடு ஒன்று வெகு உன்னிப்பாக கோர்த்துக்கொண்டு இருந்தவள் மெல்ல தலையைத் திருப்பிச் சரியாக கார்த்திக் வருவதை ஒரு நொடி பார்த்தவள் பின் தலை குனிந்து கை வேலையில் ஈடுபட்டாள்!!!
இது எதேச்சையாக நடந்தது என்று தான் முதலில் நினைத்தான் ஆரி. ஆனால் அதுவே சாப்பிட வரும் போதும் பின் எதையோ எடுக்க ஹாலிற்கு வரும்போது என்று கார்த்திக் வரும்போது எல்லாம் எத்தனை வேலையில் மும்முரமாக இருந்தாலும் நிரல்யாவின் கண்கள் அவனைப் பார்த்துவிட்டு மீளுவதைக் கண்டு…. தன் கண் முன்னால் நடக்கும் விசித்திரத்தை நம்ப முடியாது பிரம்மித்து நின்றான் ஆர்யா!!!
ஒரு அண்ணனாக இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. தன் தம்பிக்கு மறுகும் உணர்விலிருந்து என்ன சொல்லி விடுவிப்பது என்று புரியாது அவன் தத்தளித்துக்கொண்டு இருக்கும் வேளையில் தான் கார்த்திக்கே ஒரு திட்டத்தோடு வர.. அது நிரல்யாவின் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போட போகிறது என்று அறியாத ஆரியும் அதற்கு சம்மதம் தெரிவித்தான்!!!
அன்று மாலை நிரல்யா வீட்டிற்கு கிளம்பும்போது அழைத்துச் செல்ல தந்தை பாண்டியனே வர.. மாலை சிற்றுண்டி அளித்து உபசரித்த பாட்டியும் தாத்தாவும் ஏதோ ஊர் கதை அளந்துகொண்டு இருக்க… பாண்டியனைக் கண்ட கார்த்திக் நேராக அவரிடம் சென்று முகமன் கூறிவிட்டு பாட்டியின் பக்கத்தில் அமர்ந்தான்.
என்றும் இல்லா திருநாளாக பெரியவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது இவன் ஏன் இங்கே வந்து உட்காருகிறான் என்று புரியாத குழப்பத்தில் எதிரில் நின்ற ஆரியை பார்க்க அவனும் தீவிரமான முகபாவத்துடன் அமைதியாக அமர்ந்தான்.
பாண்டியனும் சிறுவனைப் பார்த்துச் சிரித்தபடி “கார்த்திக் என்ன படிக்கற? எப்படி படிக்கிறிங்க? மேலே என்ன படிக்க போற?” என்று குசலம் விசாரித்தார்.
மிகவும் சமர்த்து பிள்ளையாக சிரித்த முகமாக பதில் அளித்த கார்த்திக்… அவரின் குசல விசாரிப்பு முடிந்தவுடன் அதிரடியாக...
“இதே கேள்வியை நான் நிருவிடம் கேட்டால் அவள் என்ன பதில் சொல்வாள் என்று நினைக்கறிங்க மாமா??” என்றான்.
இதை சற்றும் எதிர்பார்க்காத பாட்டி “என்னடா??” என்று கேட்கும் போதே…
என்ன பதில் சொல்வது என்று புரியாது திகைத்த பாண்டியன் பின் “அது இல்லை கண்ணு அவளுக்கு…” என்று பாண்டியன் தர்மசங்கடத்துடன் ஆரம்பிக்கும் போதே..
“தெரியும் மாமா… உலகில் பத்து சதவிகிதம் பேருக்கு மட்டுமே இருக்கும் ஐ.கியூ இருப்பதாக சொல்ல போறிங்க அதுதானே??” என்று அவரைக் குறுக்கிட்டுப் பேசியவன்… “அவள் என்னிடம் ஒரு கேள்வி கேட்டாள்… உங்க பள்ளியில் முதல் முறையாக அறிமுகப்படுத்திக்கொள்ளும் போது வெறும் பெயரை மட்டும் சொல்லுவிங்களா இல்லை நான் ஆணா பெண்ணா என்று கூட சேர்த்து சொல்லுவிங்களா என்றாள். அவள் யார் என்று தெரிந்த பின்னர் தான் ஏன் அப்படி கேட்டாள்ன்னு புரிந்தது… அவள் தனித்து அறிவு ஜீவியாக இருப்பது உயர்வா இல்லை… உடன் இருக்கும் பத்து பேருடன் பேசக்கூடிய சராசரியாக இருப்பது உயர்வா என்று அவளின் அப்பாவான நீங்கள் தான் முடிவு பண்ணனும் மாமா” என்று மொழிந்தவன் அவரின் பதில் எதற்கும் எதிர்பார்க்காது அடுத்த நிமிஷமே விடைப்பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.
ஒரு பதிமூன்று வயது சிறுவன் தன்னிடம் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது அமைதியாக அமர்ந்திருந்தவரை பார்த்த நாட் நாட் செவன்…
“என்ன நடந்ததுன்னு எனக்கும் தெரியாது பாண்டி… கார்த்திக் இதுவரை நிரல்யாவிடம் நின்று பேசியதைக் கூட நான் பார்த்தது இல்லை” என்று பேரனின் பேச்சில் அதிர்ச்சியிலிருந்து விலகாது மொழிந்தவர் “உன் அம்மா என்னிடம் போன் செய்து இங்க ரொம்ப தனியாக இருக்கிறாள் இங்கே பசங்களோட விளையாட அனுப்பி வைக்கட்டுமா என்று கேட்டதற்குக் கூட இது மாதிரி எதாவது காரணம் இருக்குமோ என்று இப்ப யோசிக்கும்போது தோன்றுகிறது” என்றார் நாட் நாட் செவன் தீவிரமான யோசனையுடன்.
பாண்டியன் அம்மாவும் நாட் நாட் செவன்னும் மிக நெருங்கிய தோழிகள் என்று சொல்ல முடியா விட்டாலும் இருவருக்கும் பரஸ்பரம் மரியாதையும், அன்பும் ஒருவர் மேல் ஒருவருக்கு உண்டு என்பது வரை நன்றாகவே தெரியும்.
எதுவும் பேசாது பாண்டியன் தலையாட்டி விட்டு மகளை அழைத்துக்கொண்டு சென்று விட… இத்தனை தூரம் நடந்த பின் நாட் நாட் செவன் சும்மா இருப்பாங்களா???
கார்த்திக்கை அழைத்து “ஏன்டா நிரல்யாவை பற்றி உனக்கு என்ன தெரியும்?” என்றார் பாட்டி.
“நிரல்யாவா அது யாரு பாட்டி?.. அவளைப் பற்றி நான் ஏன் தெரிந்து வைத்திருக்க வேண்டும்?” என்று கேட்டு அவரையே அதிர வைத்தான் கார்த்திக்.
“என்னடா விளையாடுகிறாயா?? இப்ப பக்கம் பக்கமாக பேசினாயே.. அவரோட பொண்ணு தான்டா.. நிரல்யா”
“அவரோட பொண்ணு பெயர் நிரு இல்ல??” என்றான் குழப்பமாக.
“டேய்…. இப்ப அதுவாடா முக்கியம்??”
“ம்ம்.. நீங்க நிரு நிரு என்று அழைக்கவே நான் நிருபமாவாக இருக்கும் என்று நினைத்தேன்”
“முழுசா பெயர் கூட தெரியில்லை ஆனால் உனக்கு எல்லாம் தெரிந்த மாதிரி பாண்டியிடம் பேசி வைத்திருக்கியே” என்றார் பாட்டி முதல் முறையாக கோபம் தலை தூக்க மொழிந்தவர் “இந்த வீட்டில் குழந்தைகள் பேச முழு சுதந்திரம் உண்டு என்பதற்காக வீட்டிற்கு வந்த பெரியவர்களை அவமானப்படுத்தும் விதமாக அந்தப் பேச்சு இருக்க கூடாது” என்றார் பாட்டி கறாராக.
“பாட்டி நான் சொல்ல நினைத்த விஷயத்தை ரொம்பவே மரியாதையாகத் தான் சொன்னேன். அவரை அவமானப் படுத்தும் விதமாக பேச வேண்டும் என்றால் “உங்க பெண்ணிடம் பொய் பேசக் கூடாது என்று நீங்க சொன்னதை நம்பி அவளும் பொய் சொல்வதில்லை… உங்களைப் பொய் பேசாத அரிச்சந்திரனாக நம்பிக்கொண்டு இருக்கிறாள் அது உண்மையா?” என்று நான் கேட்டிருந்தால் அது அவரை அவமானப்படுத்தும் செயல்…” என்று அவன் சொல்லி முடிக்கும்போது ஏனோ பாட்டியின் முகம் இருண்டது.
வளைத்து வளைத்து கேள்வி கேட்டு சல்லடையாகத் துளைத்து எடுப்பார் என்று எதிர்பார்த்த ஆரிக்கு பாட்டியின் முகமும் அவரின் யோசனையுடன் அதற்கு மேல் பேசாது சென்ற விதமும் எதிலோ ஆழம் தெரியாது காலை வைத்து விட்டது போல் தோன்ற… மனதில் நிலையில்லாது அலை அடிக்க, முதல் முறையாக இந்த பிரச்சனை இத்துடன் நிற்க போவதில்லை.. என்று அவனது உள் மனது எச்சரிக்கை செய்ய… அவசரமாக கார்த்திக்கை அழைத்துக்கொண்டு வெளியே சென்றான்!!!
கார்த்திக் வீட்டிற்கு வந்த விருந்தினரிடம் இப்படி பேசினான் என்பதை உள்ளே இருந்த அம்மா அறிந்த பின் கார்த்திக்கை தனியாக அழைத்து… “அடுத்தவர் குடும்ப விஷயத்தில் நாம் மூக்கை நுழைப்பது ரொம்ப தப்புடா கண்ணா… உன் அப்பாவிடம் யாராவது அப்படி பேசினால் நீ சும்மா விடுவாயா??” அவனுக்குப் புரியும் விதமாக அம்மா பேச ஆரம்பிக்கும் போதே…….
“சங்கியை விட வயது சின்னவள் அம்மா… என்னிடம் வந்து பெயர் சொல்லும் போது நான் கேர்ள்ளா பாய்யான்னு கூட சொல்லணுமான்னு என்று கேட்டால் நான் என்னம்மா பதில் சொல்லுவது? அதைவிட “செல்லம்” என்ற வார்த்தையின் பொருள் என்ன என்று கேட்கிறாள்மா” என்று கார்த்திக் கூற மல்லிகா வாய் அடைத்துப் போய் நிற்கும் போதே… அம்மாவின் முதுகுக்கு பின்னால் எட்டிப் பார்த்தவன் “இதுக்கு எதுக்கு பாட்டி இவ்வளவு கஷ்டப்பட்டு மறைந்து நின்று ஒட்டு கேட்கணும்? நன்றாக முன்னால் வந்து நின்று கேட்கலாமே” என்று அங்கே இருந்த ஜன்னல் வழியாக ஒட்டுக்கேட்ட பாட்டியைப் பற்றி அவன் குறிப்பிட.. அசடு வழிந்தபடி உள்ளே வந்த பாட்டி மல்லிகாவை அதற்கு மேல் எதுவும் பேச விடாது அழைத்துச் சென்று விட்டார்.
அத்தோடு விட்டு இருந்தால் அவர் எப்படி நாட் நாட் செவன் ஆவார்?
மறுநாள் இரவு ஆர்யாவின் அறைக்குச் சென்ற பாட்டியும் அம்மாவையும் கண்டபோது ஆரியின் முகத்தில் எந்த விதமான அதிர்ச்சியும் இல்லை. இன்னும் கேட்கப்போனால் இதை அவன் எதிர்பார்த்தான் என்று நன்றாகவே புரிய… அவர்கள் ஜோடி சேர்ந்து வந்தவுடன்
“உங்களுக்கு இப்ப என்ன தெரியும்??” என்று அவனே கேட்டான்.
“என்ன நடந்தது என்று முழுசா சொல்”
“அவன் வாயாலே என்ன நடந்ததுன்னு கேட்டிங்களே பாட்டி” என்றான் ஆரி அவனுக்கே உரிய ஒருவரி பதிலாக.
“மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நாம் தலையிடுவது தப்புன்னு ஏன்டா சொல்லவில்லை??” என்றார் அம்மா கோபமாக.
“பாட்டியின் பேரனாக இருக்கிறான்... இதில் நான் என்ன சொல்ல இருக்கு?”
“டேய்.. என் எல்லை நம் வீடு தான்டா.. அதை தாண்டுவது இல்லை” என்றார் நாட் நாட் செவன் வீராப்பாக.
“அவனின் எல்லையை நிரல்யா வீடுவரை கொஞ்சம் விரிவு படுத்தி இருக்கிறான்.”
“ஐய்யோ எப்படி சொல்லிப் புரிய வைக்க… ஆரி... நம் குடும்ப விஷயம் வேற.. பாண்டியன் குடும்ப விஷயமே வேற… என்ன இருந்தாலும் அவங்க வீட்டு விஷயத்தில் தலையிட நமக்கு என்ன உரிமை இருக்கு? அவன் தான் புரியாது பேசுகிறான் என்றால் நீயும் பேசட்டும் என்று விட்டுடுவியாடா?” என்றார் அம்மா சற்றே கோபமாக.
“உரிமையைப் பற்றி எல்லாம் எனக்குத் தெரியாதும்மா. அந்தப் பொண்ணு அப்படி கேட்டதிலிருந்து என் காது புளிக்கும் அளவு இரண்டு நாள் ஒரே புலம்பித் தள்ளியவன்… மூன்றாவது நாள் என் ரூம்மில் வந்து தூங்கினான் என்றால் ரொம்ப சின்ன விஷயமாக நமக்கு தோன்றுவது எத்தனை தூரம் அவனைத் தொந்தரவு பண்ணி இருக்கு என்று பாருங்கள். அதனால் தான் பாண்டியன் மாமாவைப் பார்த்தவுடன் உன் மனதில் படுவதைப் பேசிவிடு என்று அனுப்பி வைத்தேன்” என்று தம்பிக்கு அண்ணாவாக.
“நீ பேசாமல் விட்டு இருந்தால் ஒருவாரத்தில் அந்த விஷயத்தை மறந்தே போய் இருப்பான்” என்றார் அவனின் அம்மா.
“இது நடந்து மூன்று மாதம் ஆகிறது அம்மா…” என்று தெளிவாக மொழிந்தான் ஆர்யா.
“என்னது?? என்னது??” என்று மாமியாரும் மருமகளும் ஆளாளாக்கு வாயைப் பிளக்க.
“கடந்த மூன்று மாதமாக ஏன் அவனை வீட்டிலேயே இருக்க விடாது கிரவுண்ட் அழைத்துச் சென்றேன் என்று நினைக்கிறிங்க??” என்று கடந்த மூன்று மாதமாக அதிகமாக வெளியே சென்று விளையாடப்போவதற்கான காரணம் அப்போ புரிய.. இருவருக்கும் தலை சுற்றியது.
“என்னடா சொல்ற?”
“மூன்று மாதத்திற்கு பிறகும் இந்த விஷயத்திற்காக புலம்பிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் என் தம்பிக்கு என்ன வந்தது?”
ஆர்யா எப்போ “என் தம்பி” என்ற வார்த்தையைப் பயன் படுத்திவிட்டானோ அதற்கு மேல் அவனிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை என்று முடிவிற்கு வரவேண்டியது தான்!!!
அந்த சம்பவத்திற்குப் பிறகு நிரல்யாவும் அங்கே வரவில்லை… மேகி உடம்பு முழுதும் தேறி வருவதற்குள் தேர்வு வந்து விட இவர்களுக்கும் நிரல்யாவை பார்க்க சந்தர்ப்பம் வாய்க்காமல் போனது. இப்படியே அடுத்த இரண்டு மாதமும் கழிய… ஒருவழியாக எல்லா தேர்வு முடிந்துவிட்டு நிம்மதியாக அவள் தான் வரவில்லை நாமே நிரல்யாவை பார்க்க போகலாம் என்று சிறுமியர்கள் இருவரும் தொணதொணக்கும் வேளையில் தான் நிரல்யாவிற்கு அம்மை வார்த்து இருப்பதாக தகவல் கிடைக்க… கிட்டதட்ட நான்கு மாதம் கழிந்து அவளைப் பார்த்து விட்டுப் போவதற்காக பாட்டியுடன் சங்கி, மங்கி சென்றனர்.
நிரல்யாவை பற்றி அவளின் தந்தையுடனே பேசிய கார்த்திக்கோ உடம்பிற்கு முடியாததைப் பற்றி கேள்விப்பட்டது போல் கூட காட்டிக்கொள்ளாது சுதந்திரமாக திரிந்துகொண்டு இருக்க பாட்டிதான் பெருமூச்சு விட்டார்.
நிரல்யாவின் வீட்டிற்கு முன் மாலைப் பொழுதில் சென்று பார்த்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியவர்களை மல்லிகா பார்த்து எப்படி இருக்கிறாள் என்று கேட்டது தான் தாமதம்..
பறந்து வந்து அம்மாவின் இடையை கட்டிப்பிடித்துக்கொண்டு சங்கி, மங்கி இருவரும் “அடுத்த ஆண்டிலிருந்து நாங்கள் இனி ஸ்கூலுக்கு ஏழரைக்கு எல்லாம் கிளம்பி விடனுமா” என்று ஒரே கோரஸ்சாக சொல்ல, விதிர்விதிர்த்து போய் மல்லிகா மேலே இருக்கும் விட்டத்தை கடவுளே என்னைக் காப்பாற்று என்று பார்த்தார்!!!
ப்ராஜெக்ட் விஷயமாக ஊரைச் சுற்றி விட்டுத் தாமதமாக வந்து தலை வலிக்காக காபி அருந்திக்கொண்டு இருந்த கார்த்திக்கில் ஆரம்பித்து அங்கே வேலை செய்துகொண்டு இருந்த வேலை ஆட்கள்வரை அனைவரும் பதறி எழுந்தனர் என்றால் அது மிகை ஆகா!!!
பின்ன?? ஒன்பது மணிக்கு தொடங்கும் பள்ளிக்கு இருவரும் எழுவதே எட்டு மணிக்குத் தான். மங்கியாவது எழுந்துவிடுவாள் ஆனால் சங்கியை எழுப்புவது கும்பகர்னை எழுப்புவது போல் பலகாரம் வைத்து அந்த வாசனை பிடித்து அவளாகவே எழுந்தால் தான் உண்டே தவிர வேறு எப்படியும் சாத்தியம் இல்லை!!!
அவர்கள் இருவரையும் எழுப்பி குளிக்க வைத்து, காலை உணவை வாயில் திணித்து, புத்தக பையோடு வீட்டை விட்டு வெளியே கிளப்புவதற்காகவே ஏழு பேர் கொண்டு குழுவே தனியாக இயங்கும்... இதில் என் ரிப்பனை மங்கி திருடிக் கொண்டாள் என்பதில் ஆரம்பித்து எதற்காகவாவது அடித்துப் பிடித்து தரையில் கட்டி புரண்டு உடுத்தியிருந்த யூனிபார்மை அழுக்கு பண்ணி மறுபடியும் புதிதாக ஒன்றை மாட்டி எட்டரை மணிக்குள் அவர்களைக் காரில் ஏற்றி முடிப்பதற்குள் வீட்டில் ஒரு மகா பிரளயமே வந்திருக்கும்!!
இந்த லட்சணத்தில் ஏழுரை மணிக்கு இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்றால்… அதை நினைத்தாலே அனைவரின் முகத்திலும் பீதி கிளம்ப...
“ஸ்கூல் நேரத்தை மாற்றி விட்டார்களா??” என்றார் அம்மா பதட்டமாக.
“ம்ம்கூம்…. இனி நிரல்யாவும் எங்களுடன் ஸ்கூலுக்கு வருவாள் இல்ல அதனால்” என்று சங்கி பொக்கை வாய் சிரிப்பில் கூற..
சங்கி உதிர்த்த அடுத்த நிமிஷம் அங்கே இருந்த பெரியவர்கள் ஆரம்பித்து பத்ரி ஆரி வரை அனைவரின் பார்வையும் ஆவி பறந்த காபியை குடித்துக்கொண்டு இருந்த கார்த்திக்கின் மேல் பாய அவனோ தனக்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போல் இருந்தான்!!!
“என்னடா இப்ப சந்தோஷம் தானே?” என்றார் பாட்டி.
“என்ன சந்தோஷம்?? இதுவே ஐந்து வருடம் தாமதம் பாட்டி… இனிமே எப்ப படித்து எப்படி உருப்பட போகுதோ” என்று அவன் கூறியதைக் கேட்டு அங்கே இருந்தவர்கள் குழம்பி போனார்கள்.
உருப்படாமல் போவதற்கு அவள் என்ன மக்கு மடசாம்பிராணியா என்ன?? என்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள அதற்கு மேலும் பேசி அங்கு இருப்பவர்களைப் பித்துப் பிடிக்க வைக்கும் முன் அவசரமாக கார்த்திக்கை அழைத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் ஆரி.
ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென்று அவளை அழைத்த தந்தை அடுத்த ஆண்டிலிருந்து பள்ளிக்குச் சென்று முறையாகப் படிப்பைத் தொடருமாறு பணித்தவர் அவளின் ஐ.கியூவின் காரணமாக நேராக ஏழாம் வகுப்பில் சேர்க்க கல்வித் துறையில் அனுமதி வாங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கும்போது நிரல்யாவிற்கு எந்த பரபரப்பும் தோன்றவில்லை.
இன்று மாலை சங்கி, மங்கி வரும் வரை எங்கே சென்றாலும் படிப்பது தானே என்று தான் தோன்றியது ஆனால் எட்டாவது அதிசயமாக அவர்களுடனே தினமும் பள்ளிக்கு காரில் செல்வதற்கு அம்மா தேவகி அனுமதித்த பின் தினமும் இவர்களைச் சந்திப்போம் என்று உணர்ந்த பின் அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அன்று இரவு மகிழ்ச்சியின் மிகுதியில் நிரல்யாவிற்கு தூக்கம் வரவில்லை என்றால்… மற்றொரு ஜீவன் எனது சாம்ராஜ்ஜியத்திற்குள் நுழையப் போகிறாளா என்று நித்திரை வராது குறுக்கும் நெடுக்குமாக உலாத்திக்கொண்டு இருந்தாள் நிரல்யாவின் அக்கா பாக்கியலட்சுமி!!!
பாக்கியலட்சுமி பிறந்து பதினைந்து ஆண்டுகள் அந்த வீட்டின் இளவரசியாக அந்த வீட்டில் கோலோச்சியவளுக்கு… தங்கையின் வரவு சுத்தமாக பிடிக்கவில்லை என்றாலும் கூட பார்க்க அழகாக குண்டு கண்களுடன் அக்கா அக்கா என்று மழலையாக பின் வந்தவளை கண்டு பாக்கியலட்சுமிக்கு ஒரு கட்டத்தில் பிடிக்கவே செய்தது. அவளின் நான்கு வயதில் ஐ.க்யூவின் டெஸ்ட் வெளி வரும் வரை!!!
ஊருக்கே எழுத்தறிவித்ததின் பலனாகத் தான் அந்த சரஸ்வதியே அவர்கள் வீட்டில் மகளாக வந்து பிறந்திருக்கிறாள் என்று எஸ்.வி.எஸ் வளாகம் முழுவதும் நிரல்யாவின் அறிவை கண்டு தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்!!! அவள் பள்ளிக்கு வராத முன்பே!!!
அதுவும் பாண்டியன் கலந்துகொள்ளும் எல்லா மேடை நிகழ்ச்சியின்போது அவரைப் பாராட்டுவதாக நினைத்துக்கொண்டு அங்கே இல்லவே இல்லாத அவரின் இரண்டாவது மகளின் அறிவுத் திறனைப் பாராட்டுகிறேன் என்று பெயர் பண்ணிக்கொண்டு கீழே மேடையின் முதல் வரிசையில் அமர்ந்திருந்த முதல் மகளின் வயிற்றில் செந்தணலை மூட்டினர்.
என்னவோ அவள் மட்டும் தான் மகள் என்பது போலவும் இவள் இப்பூவுலகில் இல்லவே இல்லை என்பது போலவும் பேசி விட்டுப் போனவர்களைக் கண்டு சினந்து சிவந்தாள் பாக்கியலட்சுமி.
தந்தை, தங்கையைப் போல் தன்னைப் பற்றியும் மேடையில் புகழ்ந்து பேச வேண்டும் என்று நினைப்பதில் எந்த தவறும் இல்லை தான்.. ஆனால் அப்படி பேசுவதற்கான தகுதி தன்னிடம் என்ன இருக்கிறது என்று தன்னை தானே கேள்வி கேட்டுக்கொள்ளத் தவறி விட்டாள் பாக்கிய லட்சுமி.
காரணம் பாக்கியலட்சுமி படிப்பில் கொஞ்சம் சுமார் ரகம் தான். அது நாள்வரை அது அவளுக்குப் பிரச்சனையாக தெரிந்ததில்லை, சொல்லபோனால் தெரிந்திருக்கவும் தெரிந்திருக்காது. தன் தங்கையின் அறிவை ஊரார் போற்றும் அளவு இல்லாது இருந்தால்!!!
அழகு இல்லை என்றால் அழகு பண்ணிக்கொள்ள முடியும் ஆனால் அறிவு இல்லை என்றால் அறிவு இருப்பது போல் நடிக்கக் கூட முடியாதே.. அதனால் தான் எப்பொழுதுமே அழகை விட அறிவாளியை உலகம் தலை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது.
எல்லோரும் நிரல்யா மாதிரி அறிவோடு பிறந்து விட முடியாது தான்.. ஆனால் அதை வளர்த்துக்கொள்ளலாமே!!! அவர்களின் தந்தையை பாண்டியன் போல்!!!
நிரல்யா பிறப்பில் அறிவாளியாகப் பிறந்தது அவள் அதிர்ஷ்டமாக இருக்கலாம் என்றால் அவளின் தந்தை பாண்டியன் தன் சொந்த முயற்சியால் பிறர் புகழும் அளவு உயர்ந்தார் என்றால் அதைவிட சிறந்த எடுத்துக்காட்டு வேறு என்ன இருக்க முடியும்?!?
இது எல்லாம் புரிந்துகொள்ள சக்தி இல்லாத பாக்கியலட்சுமிக்கு எத்தனை தூரம் நிரல்யா வீட்டில் இருந்த இடம் தெரியாமல் இருந்தாளோ அத்தனை வெளியே பாக்கியலட்சுமி செல்லும் இடத்தில் எல்லாம் நிரல்யாவின் பெயர் பரவி இருந்தது!!!
வீட்டிற்கு வரும் விருந்தினர் ஆரம்பித்து ஆசிரியர்கள், தோழிகள் ஏன் அங்கே வேலை செய்யும் ஆள்வரை தன் தங்கையைப் பற்றி பேசுவதைக் காது புளிக்க கேட்டவளுக்கு… கல்லூரி வந்தபிறகு புது நண்பர்கள் கூட்டத்தோடு இருக்க அவளின் பெயர் காதில் விழுவது குறைந்து இருந்தது. ஆனால் அதற்கும் முற்று புள்ளி வைக்கும் விதமாக அவளும் எஸ்.வி.எஸ் வளாகத்திற்குள் அடி எடுத்து வைக்கப் போகிறாள் என்ற சேதியை அப்பா கூறியவுடன் இத்தனை நாள் தங்கையின் மேல் இருந்த கோபமும் ஆத்திரமும் வெறுப்பாக மனதில் வேர் விடத் தொடங்கியது.
அந்த வேரை முளையிலேயே கிள்ள விடாது அதற்கும் தண்ணீர் விட்டு விருட்சமாக வளர்த்து விட்டான் அவர்கள் கல்லூரியில் வேலை செய்துகொண்டு இருந்த தாய்மாமன்!!!
அக்காவின் உடல்நிலை காரணமாக வீட்டிற்கு வந்து போய்க்கொண்டு இருந்தவன் கடைசி தம்பி பாட்டியின் மறைவிற்கு பிறகு சுகந்திரமாக அடிக்கடி வரத்தொடங்கினான். அந்த சமயத்தில் தான் புதியதாக கல்லூரியை விரிவாக்கும் பணியில் அல்லும் பகலுமாக ஊர் சுற்றிக்கொண்டு இருந்த பாண்டியனுக்கு வீட்டைப் பார்த்துக்கொள்ள ஒரு நம்பிக்கையான ஆள் தேவைப்பட அவனின் வரவை ஆதரித்தார்.
அவர் அறிந்த வரையில் தேவகியின் மற்ற தம்பிகளை விட இவன் தன் அக்காவின் மீது உண்மையாக அன்பு கொண்டு இருந்தான் என்பதை உணர்ந்திருந்தமையால் அவனை விருந்தினராக நடத்தாது வீட்டு மனிதராக சகல உரிமையும் வழங்கினார்.
அவனும் தன் மாமனின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகும் வகையில் அவர்களின் கல்லூரியிலேயே அட்மின்னில் வேலையில் சேர்ந்தவன் ஐந்தே வருடங்களில் தன் திறமையால் நற்பெயருடன் முன்னேறி அக்காவின் துணைக்கொண்டு முறையாக மாமனிடம் பாக்கியலட்சுமியைப் பெண் கேட்டான்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத பாண்டியன் பலத்த யோசனைக்கு பின் பாக்கியலட்சுமியை அழைத்து கல்லூரி படிப்பு முடித்த பிறகு நல்ல பையனைப் பார்க்கிறேன் என்று எடுத்துக் கூற..
தனக்கு வேறு யாரையும் மணக்க வேண்டாம் என்றதோடு அதற்கு மேல் படிப்பில் ஆர்வம் இல்லை என்றும் கூறி விட கடைசியில் மகளின் மனதை மாற்ற வழி அறியாது அவள் விரும்பிய தன் தாய் மாமனான சேதுராமனுக்கே மணமுடித்தார்!!!
வேறுவழி இல்லாது திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தபோதும் ஊரே அதிரும்படி சீரும் சிறப்புமாக அவர்களின் திருமணம் நடைபெற்றது.
மணம் முடித்த பின்னர் தேவகியின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு சேதுராமனும் பாக்கியலட்சுமியும் அந்த வீட்டிலேயே தங்க வேண்டும் என்று மனைவி கேட்க... தன் மனைவியின் பேச்சை மறுத்து பழக்கமில்லாதவர் அதற்கும் சம்மதிக்க, அந்த வீட்டில் நிரந்தரமாக குடியேறினான்!!!
பெரும் புயல் அடிக்கும் முன் சூழும் கருமேகம் தன்னை சூழ்கிறது என்பதை உணராத வயதில் இருந்த நிரல்யா இதை பற்றியும் கவலையின்றி பள்ளிக்கு மிகுந்த குதூகலத்துடன் சென்று வந்தாள்!!!
தொடரும்....
அடுத்த பதிவு - செவ்வாய் கிழமை.
DEAR READERS…
கார்த்திக் மற்றும் நிரல்யாவின் முதல் சந்திப்பு இனிதே முடிவடைந்தது… ஆரியை போல் என்னதான்யா இவர்களுக்குள் நடக்கிறது?? என்று புரியாது மண்டை காய்பவர்களுக்கு கதை போக போக... புரியும்…. அடுத்த பகுதியில் கதை நடப்புக்கு திரும்பி இருக்கும்… இந்த இக்கட்டான சூழ்நிலையில் மன அமைதிக்காக கதை படித்து விட்டு செல்பவர்கள்.... அப்படியே என் மன அமைதிக்காவும் கதை எப்படி இருக்கிறது??? (அது எதுவாக இருந்தாலும் ) உங்களின் கருத்துக்களை இங்கே உள்ள திரியில் பதிவிடம்..
யாதுமாகி என்னுள் நினைந்தவனே கருத்து திரியில் உங்களின் மேலான கருத்துக்களை பதிவிடவும்...

Last edited: