Selvipandiyan
Active member
நாட் நாட் செவன் !ஹா ஹா !சான்ஸே இல்ல!
கதை சங்கமம் 2021
Super episodeஅத்தியாயம் - 8
அப்பாவிடம் பேச வேண்டியதை முடித்துவிட்டு மேலே படியேறி பேன்ட் ஹவுஸ் வந்தவனுக்கு பனி விழும் இரவில் அவர்கள் ரூம்மிற்கு முன்னால் ஒற்றை அடி பாதையைத் தவிர அந்த இடம் மொத்தம் அடைத்தபடி இருந்த செடிகளிலிருந்து வந்த சுகந்தம் அவன் மனதை நிறைத்தது.
விழித்திருக்கும் பெரும்பான்மையான நேரத்தைக் கூட மனிதர்களுக்கு மத்தியில் இருப்பதை விட செடி கொடிகளின் மத்தியிலேயே புழுலுவதலோ என்னவோ நிரல்யாவின் மேல் கூட அதே நறுமணம்தான் வீசும்!!!
ஒரு குறிப்பிட்ட பூவின் பெயரையோ இல்லை இலையின் பெயரையோ சொல்ல முடியாது பூந்தோட்டத்திற்குள் நுழைந்தவுடன் அங்கே இருக்கும் ஈர மண்ணிலிருந்து, செடி, கொடி , இலை, பூ வரை எல்லாம் கலந்து வரும் மணம் எத்தனை டென்ஷனாக இருந்தாலும் ஒரே நொடியில் எல்லா பிரச்சனைகளையும் மறக்கடித்து நம்மைச் சாந்தப்படுத்தும், மனதை மயிலுருத்துகின்ற வாசனை தான் அவள்மீது அடிக்கும்.
திருமணமான கடந்த ஐந்து வருடங்களில் படிப்பிற்காக நிரல்யா சென்னையில் தனியாக ஒரு ப்ளாட்டில் தங்க.. அவர்களின் வீட்டு விசேஷங்களுக்கு வருவதைத் தவிர்த்து நிரல்யாவை தனியாக சந்தித்ததைக் கணக்கிட்டால் விரல் விட்டு எண்ணக் கூடியதாகத் தான் இருக்கும்.
நேரில் பார்க்க முடியாத சூழ்நிலையில் பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆர்ப்பரிக்கும் ஆவல் மூச்சை முட்டும்போது.... அவன் சென்று கண்களை மூடி நிற்பது மலர்கள் தோட்டம் தான்!!!
அவன் செய்துக்கொண்டு இருக்கு விஷயமும்… செய்ய போகும் விஷயமும் என்ன மாதிரியான விபரிதப்பலனை தரப்போகிறது என்ற எண்ணத்தில் முழுகி இருக்க.. ஐந்து நிமிடம் கண்களை மூடி ஆழ்ந்து சுவாசித்த பின்னும் கூட ஏனோ அந்த வாசனையும் கூட அவன் மனதில் எரியும் தீயை அணைக்க மறுக்க ஒரு பெருமூச்சை விட்டபடி தலையை உயர்த்தியவனுக்கு மேலே சுகமாய் காயும் நிலவை நோக்கினான்.
மழை மேகங்கள் சூழ இருந்த நிலவை கண்ணுற்றவனுக்கு வர போகும் நாட்கள் எத்தனை போராட்ட மிக்கவையாக இருக்க போகிறதோ என்று எண்ணும் போதே…. அதை உறுதிப்படுத்துவது போல் மேகத்தின் மத்தியில் சத்தம் இல்லாத மின்னல் ஒன்று கண்களை கூச செய்ய அதை தொடர்ந்து வானம் கர்ஜிக்க தொடங்கியது!!!
காதை கிழித்த இடி முழுக்கத்தால் தன் நினைவில் இருந்த அவசரமாக மீட்டுக்கொண்டவன் மெல்ல நடந்து அவர்கள் அறைக் கதவைத் திறந்தான். முனுக்கு என்று சத்தம் வந்தாலும் விழித்துக்கொள்ளும் பழக்கம் உள்ளவள் இல்லை
என்றாலும் கூட வலியால் அவதிப்படும் இந்த நேரத்தில் தூங்குபவளை தொந்தரவு செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் நுழைந்தவனுக்கு மின் விளக்குகள் எரிய, வாட் ரோப்பில் அவனுக்கு முதுக்காட்டியப்படி எதையோ குடைந்துக்கொண்டு இருந்தவளைக் கண்டான்.
அவன் எதிர்பார்த்தபடி மெத்தையில் படுத்திருக்காது எல்லா ஸ்பாட் லைட்டும் எரிய அவன் ஊருக்குச் செல்வதற்காகத் துணிமணிகளை அடுக்கி வைத்துக்கொண்டு இருந்தவளைக் காண, சற்றே மட்டுப்பட்டிருந்த கோபம் மீண்டும் ஆர்ப்பரித்து கிளம்ப.. வெகுவாக அடக்கிக்கொண்டு...
“என்ன நிரல்யா பண்ற??” என்றான் அதிகாரமாக... மூடிய கதவின் மேல் சாய்ந்தபடி.
அவன் குரலைக் கேட்டு தலையைத் திருப்பிய நிரல்யாவின் முகத்தில் அப்பட்டமான சோர்வு தெரிந்த போதும்...
“நாளை ஜெர்மனி கிளம்பறேன்னு சொன்னிங்கதானே??” என்று அவள் துணிகளை எடுத்து வைப்பதற்கான காரணத்தைச் சொன்னாள்.
கோபமாக மூச்சை இழுத்து விட்டவன், “இந்த மாதிரி துணிமணிகளை எடுத்து வைப்பது, ஷூக்கு பாலிஷ் போடுவது, நாக்கிற்குச் சுவையாக
சமைப்பது, அப்புறம் சமைத்ததைப் பரிமாறுவது, ஆபிஸ் போகும்போது டாட்டா சொல்லி வழி அனுப்புவது போன்ற கட்டிய மனைவியின் கடமையாக காலம் காலமாக சொல்லப்பட்ட எந்த விஷயத்தையும் உன்னிடம் நான் எதிர்பார்க்கவில்லை” என்றான் தன் எரிச்சலைக் கொஞ்சமும் மறைக்காத குரலில்.
குறிபார்த்து எய்த அம்பு போல் அவன் கேட்ட கேள்வியை எதிர் கொண்டவர்கள் வேறு யாராக இருந்தாலும் மனதில் வலி, வேதனை, வருத்தம்
குறைந்த பட்சம் சுணக்கம் என்றாவது ஏற்பட்டு இருக்கும் ஆனால் அவளோ..
“ஒரு தடவை சொன்னாலேயே மறக்கமாட்டேன் கார்த்திக்... பார்க்கும்போது எல்லாம் இதையே சொல்லத் தேவையில்லை” என்று அமைதியாக
பதில் அளித்தாள்.
மற்றவர் யாரும் பார்த்திராத அவன் அறிந்த நிரல்யா!!! எத்தனை கோபமாக அவன் பேசினாலும் அதை நேருக்கு நேராக எதிர் நின்று பேசுபவள்!!!
“பின்ன ஏன்டீ?” என்று அங்கே திறந்து வைக்கப்பட்டிருந்த பெட்டியைக் கையைக் காட்டி கேட்டான்.
“துணியைப் பெட்டியில் எடுத்து வைக்க மனைவியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை... கடந்த ஒரு வாரமாக வளவனை நினைத்து நான்
சரியாக தூங்காததால் நீங்களும் தூங்கி இருக்க மாட்டிங்கன்னு தெரியும்... இன்றே மாமாவைப் பார்த்து விட்டதால் ஒருவேளை காலையிலேயே கிளம்ப வேண்டி இருக்குமோ என்று தான் உங்க துணிகளை எடுத்து வைத்தேன்” என்றாள் நிதானமாக.
“வாட் எவர்..” என்று அலட்சியமாக மறுமொழி கொடுத்தவன்.. நேராக நிரல்யாவின் முன்னே சென்று கையிலிருந்த டிரஸை பிடுங்கி வீசிவிட்டு
பட்டென்று குனிந்து அவளைக் கையில் ஏந்தியவன் நேராக அங்கே இருந்த ரீக்கைனரில் கிடத்திவிட்டு... பெரிதாக இருந்த அதன் கைப்பிடியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தவன் மார்பின் குறுக்கே தன் கையைக் கட்டிக்கொண்டு தலையை அவள் புறம் திருப்பி உற்று நோக்கினான்.
கார்த்திக்கின் இறுகிய உடலும், அமர்ந்த விதமும், பார்த்த பார்வையும் அவன் கேட்க வந்த கேள்வியை மிக நன்றாக அவளுக்குத் தெரியப்படுத்த …
“ஏன் முன்பே மருந்தைச் சாப்பிடவில்லை என்றால் இத்தனை சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை” என்றாள் தயங்கி.
அவள் சொன்ன பதிலை ஏற்றுக்கொண்டு போல் “ம்ம்...” என்று தலையை ஆட்டியவன், “முழுவதுமாக சொல்லி முடி.. எனக்கும் பொறுமைக்கும்
ரொம்பவே தூரம் என்பது உனக்கே தெரியும் தானே?” என்றபோது அவன் குரல் பொறுமை அற்றே இருந்தது.
“கார்த்திக்” என்று அவள் பதில் சொல்லாது இழுக்க...
“நான் உனக்கு யார்??” என்றான் விடாது.
ஏதும் சொல்லாது மௌனம் சாதிக்க,
“பதில்” என்றான் விடாப்பிடியாக.
“என்னுடைய சீக்ரெட் சேம்பர்”
“அப்புறம்?!?”
“என்னுடைய பெஸ்ட் ப்ரெண்டு” என்றாள் திருத்தமாக
“ம்ம்...” என்று ஆமோதிப்பாய் தலையை ஆட்டியவன், “என் தாத்தா பாட்டிக்கு நல்ல பேரனா நான் இருக்கிறேனா என்று தெரியாது... ஒரு மகனாகப் பெற்றவர்களுக்கு என் கடமையைச் சரிவர செய்கிறேனா என்று தெரியாது... அண்ணனாக என் தங்கைகளுக்கு இருந்திருக்கிறேனா என்று
தெரியாது, என் அண்ணன்களுக்கு ஒரு நல்ல தம்பியாக உறுதுணையாக இருக்கிறேனா என்று தெரியாது... ஏன் உனக்கு ஒரு நல்ல கணவனாக இருக்கிறேனா என்று கூட தெரியாது. ஆனால் என்னை உன் சீக்ரெட் சேம்பராக நினைத்துக்கொள் என்று சொன்ன நொடியிலிருந்து உன்னுடைய பெஸ்ட் பிரண்டாக மட்டுமாகத் தான் இருந்திருக்கிறேன் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும்!!!” என்று அழுத்தமாக பேசியபடியே அவள் புறம் குனிந்தவனின் கண்கள் நிருவின் முகத்தில் நிலை குத்தி நின்றது.
சரியாக ஒரு அடி இடைவேளையில் கார்த்திக்கின் முகம் இருக்க.. அவன் உதிர்த்த வார்த்தைகளின் பொருளை விட புது புனல் போல் குபுகுபுவென்று கரைபுரண்டு வெளிவரும் அவனின் உணர்வு வெள்ளத்தில் மூழ்கி மூச்சு முட்ட தத்தளித்தாள் நிரல்யா!!!
“என் குறைகள் முதல் என் விரக்தி, துக்கம், இயலாமை வரை எல்லாம் ஏன் எதற்காக என்று நான் சொல்லாமலே தெரிந்து வைத்திருப்பவள் நீ...
அதேபோல் உன்னைவிட உன் உடம்பைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். நான் கேட்பது எல்லாம் ஏன் வலி ஆரம்பித்தவுடன் மருந்து
போட வில்லை?? இத்தனை நேரம் கழித்து இனி நிற்கவே முடியாதளவு வலி வரும் வரை எதற்கு விட்டாய்?? நூல் இழையில் என் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கிறேன்... சீக்கிரம் சொல்லி முடி” என்றான் இடியாய்.
“அக்கா... ஐந்து மணிக்கு போன் செய்து டெங்குவால் ப்ளேட்லேட்ஸ் வளவனுக்கு மிகவும் குறைந்த நிலையில் ஐ.சி.யூவிற்கு அழைத்துச் சென்று
விட்டார்கள் என்று சொன்னதும் எதைப் பற்றியும் யோசிக்க தோன்றாமல் நேராக போய்விட்டேன்... அக்கா ஒப்பாரி வைத்து அழ.. அம்மா அழுவதைப் பார்த்துவிட்டு வளவனின் தம்பியும் கதறி அழ... அவனைத் தூக்கிக்கொண்டு வெளியே போய் வேடிக்கை காட்ட... ஹேன் பேக்கில் இருந்த போன் சுட்ச் ஆப் ஆனதைக் கூட கவனிக்கவில்லை” என்றாள் சற்றே இறங்கிய குரலில்.
எதுவும் சொல்லாது அமைதியாக அவளை வெறித்துப் பார்க்க...
“ஹாஸ்பிட்டலுக்கு போனபிறகு அவசரமாக உனக்கு கால் பண்ணினேன், நீ மீட்டிங்கில் இருந்தாலும் உன் செக்ரட்டரி எடுத்து போன் பேசுவாங்லே என்ற நம்பிக்கையில் தான்.. அதேமாதிரி அவங்க தான் எடுத்தாங்க. அவர்களிடம் நான் எல்லா விபரத்தையும் சொல்லியதோடு மட்டுமில்லாமல் உங்களை வீட்டிற்கும் சொல்லச் சொல்லி இருந்தேன்...” என்று விளக்கமாக மொழிந்தவள், “எப்படி.. உங்களுக்கு அந்த தகவல் வராது போனது என்று தெரியவில்லை” என்றாள் மிகுந்த வருத்தத்துடன்.
புருவங்கள் நெரிய தன் பாக்கெட்டிலிருந்த போனை எடுத்தபடி, “முன்பே பார்த்தேன்.. உன் கால் எதுவும்...” என்று அவன் சொல்லிக்கொண்டு
இருக்கும் போதே...
“என் ஹேன் பேக் ஹாஸ்பிட்டல் உள்ளே இருந்ததால்... கேப்ட்டிரியாவில் இருந்த லேன் போனில் உங்களுக்கு போன் செய்தேன்” என்று அவன்
போனை வாங்கி அதிலிருந்த புது நம்பரை எடுத்துக் காட்டினாள்!!!
ஒரு நிமிடம் தன் போனிலிருந்த புது நம்பரை வெறித்துப் பார்த்தவன், “என் வீடியோ கால்கள் மற்றும் மீட்டிங் எல்லாத்தையும் முடித்துவிட்டு
வெளியே வரும்போது மணி ஒன்பதரை... அதற்குள் என் செக்ரட்டரி இன்று பெண் பார்க்க வருகிறார்கள் என்று ஆறு மணிக்கே கிளம்பி விட்டாள். நானும் வீட்டிற்குக் கிளம்பும் அவசரத்தில் அவள் எழுதிச் சென்ற குறிப்பைப் பார்க்கவும் இல்லை” என்றான் யோசனையுடன்.
அமைதியாக தலையை ஆட்டியவள் “வீட்டில் ரொம்ப பயந்துவிட்டார்களா? என்றாள் கவலையுடன்.
அவளின் தலையில் கையை வைத்து லேசாக தட்டியவன், “நீ என்னுடன் இருப்பதாய் முதலில் நினைத்துக்கொண்டதால் உன்னை
எதிர்பார்க்கவில்லை... நான் வந்தவுடன் உன்னைக் காணாது கொஞ்சம் டென்ஷன் ஆனார்கள்” என்று சமாதானப்படுத்தியவன் “ஆமாம் உனக்கு வலி ஆரம்பித்தவுடன் ஏன் மருந்து சாப்பிடவில்லை?” என்றான் அந்த விஷயத்திலிருந்து அடுத்த விஷயத்திற்கு தாவி.
‘இவனிடம் எதை மறைக்க முடியும்??’ என்று மனதில் நினைத்தவள் என்ன சொல்லுவாள்?? “மதியமே லேசாக வலி ஆரம்பித்து விட்டது, வீட்டிற்கு வந்து மருந்து சாப்பிடலாம் என்று நினைத்தேன்... ஆனால் அதற்குள் அக்காவிடம் போன் வர, பின் எதைப் பற்றியும் யோசிக்கும் மனநிலையில் இல்லை கார்த்திக்” என்றாள் வருத்தமாக.
“அது சரி தேவை இல்லாத எல்லா விஷயத்திலும் நாட்டாமை பண்ணி முதலில் இருக்கும் உன் அன்பு மாமா இந்த சமயத்தில் எங்கே போய்
தொலைந்தார்?” என்றான் ஆத்திரமாக.
“சென்னை வரை போய் இருக்கிறாராம்.”
“இன்னுமா அங்கிருந்து திரும்பவில்லை??” என்று ஆச்சரியப்பட்டான்.
அவர் சென்னை சென்று இருப்பது உங்களுக்கு எப்படி தெரியும் என்பது போல் நிரு அவனைப் பார்க்க...
அவள் கண்களால் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாது ஒரு நிமிடம் மௌனம் காத்தவன், “அவரவர் குழந்தைகளை அவரவர்தான்
பார்த்துக்கொள்ள வேண்டும்.. அதுதான் வீடு முழுக்க வேலை ஆட்கள் இருக்காங்க இல்லை?? ஏன் நீ காய்ச்சல் அதிகமாகி ஹாஸ்பிட்டலில் பத்துநாட்கள் இருந்தபோது உன் அக்கா வந்து பார்த்தாங்களா இல்லை உன் அம்மாதான் வந்து உன் உடன் தங்கி இருந்தாங்களா??” என்றான் கண்கள் ரௌத்திரத்தை வெளிக்காட்ட, “ஒரு அரை மணி நேரம் உனக்காக ஹாஸ்பிட்டல் வரை வர நேரம் இல்லாத உன் அக்காவிற்காக நீ ஐந்து மணி நேரம் இந்த வலியைத் தாங்கிக்கொண்டு இருக்கனுமா??” என்றான் அழுத்தமாக.
“கார்த்திக்... ஆறு வயது குழந்தை பயத்தில் அழுது கரையும்போது என்னைப் பற்றியோ இல்லை பழைய கதையைப் பற்றியோ யோசிக்க தோன்றவில்லை” என்றாள் நிதானமாக.
“அன்று ஜூரம் அதிகமாகி உன்னை ஹாஸ்பிட்டலில் சேர்த்தபோது உனக்கும் எட்டு வயது தான்.. இதே மாதிரி தான் பயந்து அழுதாய். ஆனால்
துணைக்கு இருக்க, உன் அக்காவோ இல்லை அம்மாவோ... ஏன் உன் அப்பாவோ வர முடியாது... வீட்டு வேலை ஆளைத் தானே போட்டு இருந்தார்கள்?!?”
“என் அக்கா செய்ததற்கு அவங்க பசங்க என்ன பண்ணுவாங்க??” என்றாள் ஆற்றாமையுடன்.
“அப்ப நீ என்ன தப்பு பண்ணடீ?? அங்க தங்கையாக பதினைந்து வயது வித்தியாசத்தில் பிறந்தாய் என்பதை தவிர??” என்றான் கடுமையாக.
“கார்த்திக்... வேண்டாமே” என்றாள் அவசரமாக அவனின் கையை இறுக்கிப் பிடித்து.
அவளின் அந்த சின்ன ஸ்பரிசம் போதுமானதாக இருந்தது அவனின் கோபத்தை கட்டுப்படுத்த.. “சரி இதைப் பற்றி பேசவில்லை நான் விட்டு விடுகிறேன்” என்று அவளுக்காக விட்டுக்கொடுத்தவன், “என் பொறுமையின் எல்லை எதுவரை என்பதும் உனக்கு நன்றாகவே தெரியும்... அதைச் சோதிக்காதே நிரு...” என்று தெளிவாக மொழிந்தவன், இறுகப் பற்றியிருந்த தன் கையை அவள் கையிலிருந்து விடுவித்தவன், “இனியும் இதைப் பற்றி பேசி, இருக்கும் மனநிலையை மோசமாக்க விரும்பவில்லை... நான் குளிக்கப் போகிறேன்” என்று மொழிந்தபடி எழுந்தவன், தன் கோபத்தை அங்கே இருந்த துண்டை எடுத்து உதறி தோளில் போட்ட விதத்திலேயே அவனின் எல்லையைத் தொட்டு விட்டான் என்று அப்பட்டமாக புரிய, பெருமூச்சை விட்டபடி எழுந்தாள்.
கார்த்திக் குளித்துவிட்டு வருவதற்குள் வழியில் இருக்கும் சாமான்களை அவசரமாக சீர் செய்தவள் வேகமாக விளக்கை நிறுத்தி விட்டு தன் படுக்கையில் விழுந்தாள்.
இருபது நிமிடம் கழித்து வெளியே வந்தவனுக்கு அறையில் விளக்கை அணைத்து நிரல்யா படுக்கையிலிருந்தாலும் அவள் தூங்கவில்லை என்று
உணர... வெளியே இருந்து கண்ணாடியின் வழியே வரும் நிலவின் ஒளியைக்கொண்டு தன் வாட்ரோப்பை திறந்து இரவில் அணியும் ஷாட்சையும் டி.சர்ட்டையும் எடுத்து உடுத்தியவன், ஈரமாக இருந்த தலையைத் துவட்டிய பின் அதனை அழுக்கில் போட்டுவிட்டு அமைதியாக வந்து படுத்தான்.
மெத்தையில் இருவருக்கும் மத்தியிலிருந்த இரண்டு திண்டுவை உணர்ந்தவனுக்கு விரக்தியில் சிரிப்பு வர...
“இது எதுக்கு?” என்றான் அதைத் தட்டி காட்டி.
“கார்த்திக்...” என்று நிரல்யா ராகமாக இழுக்க...
“சரி... சரி… இப்ப வலி எப்படி இருக்கு??” என்றான் வசதியாகப் படுத்தபடி.
“குறைய ஆரம்பித்துவிட்டது” என்றாள் முணுமுணுப்பாக.
“பின்ன ஏன் இன்னும் தூங்காமல் இருக்க?” என்றபடி அவள்புறம் ஒருக்களித்துப் படுத்து அவளின் கூந்தலில் லேசாக கோதியபடி கேட்டான்.
அவன் தலையில் கை வைத்த அடுத்த நிமிடம் தலையணையில் அழுந்தப் புதைந்தவள் ஆழ்ந்த மூச்சுடன் “தூக்கம் வருகிறது” என்றாள் குரல்
குழைய.
சொன்னது போல் அடுத்த ஐந்தாவது நிமிஷம் நிம்மதியாக தூக்கத்தில் ஆழ்ந்தவளைக் கண்டவனுக்கு கடந்த இரண்டு மணி நேரமாக இருந்த
இறுக்கம் எல்லாம் இருந்த இடம் தெரியாது மாயமாக... மெல்ல புன்னகைத்தவன்...
ஐந்து... நான்கு... மூன்று... இரண்டு... ஒன்று என்று அவன் வாய்விட்டு எண்ணி முடிக்கும் முன் அவன் புறம் ஒருகளித்து படுத்தவள் கையைத் தூக்கி தலையணையின் மேல் போட்டு எதையோ தூக்கத்திலேயே துழாவினாள்!!!
கண்ணில் சிரிப்பு பொங்க பார்த்துக்கொண்டு இருக்கும் போதே... அவர்களுக்கு மத்தியிலிருந்த தலையணையை நகர்த்திவிட்டு அவன் மார்பின் மேல் கையைப் போட்டாள்!!!
கும்பகர்ணனை போல் தூங்கும் ரகம் இல்லை என்றாலும் மனம் சஞ்சலமாக இருந்தால் கண்களைக் கூட அவளால் மூட முடியாது!!!
“அதிகம் போனால் பத்து நிமிஷம்… அது எதுக்குடீ இந்த சைனா சுவர் கட்டணும் பின் நீயே அதைத் தகர்க்கணும்??” என்று கேட்டபடி அவர்களுக்கு மத்தியிலிருந்த மற்றொரு தலையணையையும் நகர்த்தியவன் மெல்ல அவள் புறம் நகர்ந்து கூந்தலில் வழிந்த நெற்றியின் மேல் இதழ் பதித்தவன், “குட் நைட்” என்று ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளுக்கு மொழிந்துவிட்டு பின் மீண்டும் தன் இடத்திற்கு நகர்ந்து படுத்தவன் அவளைப் போலவே ஒருவாரம் கழித்து சரியாக அடித்துப் போட்ட மாதிரி அசந்து தூங்கினான்!!!
எத்தனை நேரம் அப்படி ஆழ்ந்து உறங்கி இருப்பானோ தெரியாது ஆனால் திடீரென்று மூச்சு விட முடியாது யாரோ சென்னியை அழுத்த... கை
கால்களை அசைய முடியாத படி ஏதோ பாரம் கனக்க... மூச்சு திணறலோடு என்ன நடக்கிறது என்று கண்களைத் திறந்து பார்க்க முடியாதபடி ஏதோ சிலந்தி வலையாக முகம் முழுவதும் படர்ந்து இமைகளைத் திறக்க முடியாதபடி சிறைப் பிடிக்க... இது கனவா இல்லை நினைவா என்று மூச்சு திணற யோசித்துக்கொண்டு இருந்தவனின் ஐம்புலன்களும் விழித்து இது கனவு இல்லை என்று உணர்த்தும் போதே, மெல்ல அசைத்து வலது கையை வெளியே எடுத்தவன் தன் முகத்தில் படர்ந்து சிறை பிடித்திருந்ததைத் தொட்டவுடன் அது என்ன வலை என்று புரிந்து விட… அவசரமாக தன் கைகளை சுடக்கி விடி வெள்ளியை போட்டவன்… லேசாக கசிந்த வெளிச்சத்தை கொண்டு அவசரமாக முகத்தில் சிலந்தி வலையாக சுற்றி இருந்த அவளின் கூந்தல் கற்றையை விலக்கியவன் விடி வெள்ளியை பின் மெல்ல கண்களைத் திறந்து தன் மொத்த பாரத்தையும் அவன்மேல் போட்டு நிம்மதியாக ஆழ்ந்த நித்திரையில் துயின்ற நிரல்யாவைப் பார்த்தான்!!!
எத்தனை நேரமாக அவன்மேல் படுத்திருந்தாளோ என்னவோ ரத்த ஓட்டம் அற்று கை கால்கள் மறுத்துப் போய் இருப்பது போதாது என்று சரியாக மூச்சு விடும் இடத்தில் தன் தலையை வேறு அழுத்திப் படுத்திருந்தவளை அவசரமாக விலக்கி விட்டு எழுந்து அமர்ந்து சற்று ஆழ்ந்த மூச்சு எடுத்து விட்டான்!!!
“பிசாசே... தனியாக இருந்தால் தான் தூங்க விடாது இம்சை செய்கிறாய் என்றால் பக்கத்தில் இருந்தாலும் தூங்க விடாது படுத்திறியேடீ” என்று
மனமார அவளைச் சபித்தவனின் கண்களுக்கு வெளியே கண்ணாடியில் மழை சரசரவென்று இறங்கிக்கொண்டு இருப்பது தெரிந்தது.
அவனின் அறை சவுண்ட் புரூப் என்பதால் வெளி சத்தம் உள்ளே வராது... அடித்து பொழியும் மழையில் சத்தம் துளியும் கேட்காது அது வரியாக வரியாக விட்டுசெல்லும் தடம் மட்டும் கண்ணாடியில் தெரிய… நிரல்யாவை எழுப்பாது மெல்ல எழுந்து கண்ணாடியின் அருகே சென்றான்.
பார்க்கும் தூரம் வரை அந்தகாரம் சூழ்ந்திருக்க.. கண்களை பறிக்கும் மின்னலும்… காதை கிழிக்கும் இடியும்… வானை கிழித்துக்கொண்டு கொட்டும் மழையின் சத்தமும் என்று எதுவுமே காதில் விழாது… இந்த அறையை தாண்டி வெளியே ஒரு உலகம் சுழன்று கொண்டு இருக்கிறது என்று இந்த நான்கு சுவர் மறைத்திருக்க…. இதே போல் ஒரு மழை நாளில் தான் தனக்கு என்று ஒரு தனி உலகம் இருக்கிறது அதை பிறர் புரிந்துக்கொள்வது கூட கடினம் என்பதை அவனுக்கு காட்டினாள் நிரல்யா!!!
வாரத்திற்கு இரண்டு நாள் அண்ணன்களுக்கு ஸ்பெஷல் கிலாஸ் இருக்கும் சமயத்தில் கார்த்திக்கிற்கு மேட்ச் எதுவும் இல்லை என்றால் சிறார்கள் மூவரும் வரும் காரில் இவனும் சேர்ந்து வருவான்!!!
பள்ளிக்கு இரட்டையர்களுடன் நிரல்யாவும் சேர்ந்து செல்ல ஆரம்பித்த பிறகு ஒரு நல்ல மாற்றம், வீட்டினர் பயந்து நடுங்கின மாதிரி காலையில் எழுந்து கிளம்பும் போது வீடே அல்லோல கல்லோலப்படாது... ஓரளவு பிரச்சனையின்றி கிளம்பினர்... என்று வீட்டின் அவல நிலையை வைத்தே சொல்ல முடிந்தது!!!
இந்த மாற்றத்தைச் சற்றும் எதிர்பார்க்காத பாட்டியிலிருந்து வேலை ஆட்கள் வரை யாரும் நம்ப முடியாது அசந்துப் போய் பார்த்தனர். பின்னே
நேரத்திற்கு ஸ்கூல் கிளம்பவே போராட வேண்டிய நிலையில், இப்போ எல்லாம் இரட்டையர்கள் இரத்த ஆறு ஓடாது, தினமும் கிளம்பிப் போவதைக் காண யாராலும் நம்ப முடியவில்லை!!!
பாட்டி இதை வாய்விட்டே தன் இரவு உணவின் போது பேத்திகளிடம் கேட்டே விட...
தட்டிலிருந்த உணவை வாயில் திணித்த சங்கி “நிரு…” என்று ஆரம்பித்து ஏதோ மின்னல் வேகத்தில் சொல்ல... அவள் மொழிந்ததை எதுவும் புரியாது விழித்தபடி மங்கியின் புறம் தலையைத் திருப்பினர்.
பல சமயங்களில் சங்கியின் சொல்லும் செயலும் சாதாரண மனிதர்களின் புரிதலுக்கு எட்டாத தூரத்தில் இருக்கும் என்பதால் மங்கியிடமிருந்து
விளக்கம் தருமாறு பார்த்தனர்.
“அதுவா பாட்டி... நாங்கள் லேட்டாக போனால் நிரு எங்களுடன் இருக்கும் நேரம் ரொம்ப கம்மி ஆகிறதா பாட்டி... அதனால் தான்” என்றாள்.
“ஓ!!! அப்ப நிரல்யா சொல்லித் தான் பெரிய பிரச்சனை இல்லாது கிளம்பறிங்களா?”
“ம்கூம்... பாட்டி அவள் அப்படி எல்லாம் கேட்டதே இல்லை... ஆனால்..?!?” என்று நிறுத்திவிட்டு தலையைச் சாய்த்து யோசித்த மங்கியைப் பார்த்து
சங்கி தன் வாயிலிருந்த உணவை விழுங்கி விட்டு...
“அவள் எதையுமே இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்கமாட்டாள் பாட்டி ஆனால் எங்களுக்கே தெரியும்” என்று முடித்து விட அதற்கு மேல் யாரும் எதுவும் கேட்கவில்லை.
ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது... இந்த மாற்றம் நிரல்யா என்ற போதி மரத்திலிருந்து வந்த ஞானம்... இரட்டையர்களுக்கு நிரல்யா வெறும்
விளையாட்டுத் தோழிகள் மட்டும் இல்லை.. அவர்கள் மூவருக்கும் மிக நெருங்கிய உறவு இருக்கிறது என்று கண் கூடாக தெரிந்தது.
இரட்டையர்களுக்குப் பள்ளி சற்று தாமதமாக ஆரம்பிப்பதால் ஆண்கள் மூவரும் சீக்கிரமாக கிளம்பி வேறு காரில் பள்ளிக்குச் சென்று
விடுவார்கள். அதே போல் மாலையும் ஸ்பெஷல் கிலாஸ், குரூப் ப்ராஜெக்ட் என்று அமையும் வேலையைப் பொருத்து சகோதரர்கள் தனியாகவோ இல்லை சேர்த்தோ வீட்டிற்கு வருவார்கள்.
அதிலும் பெரிய வகுப்புகளில் படிக்கும் பத்ரிக்கும், ஆரிக்கும் அடிக்கடி மாலை கிலாஸ் இருக்க... விளையாடவும் ஆள் இல்லாது போர் அடித்துப் போய் அண்ணன்களுக்காக தனியாக காத்திருந்த கார்த்திக்கைப் பார்த்துவிட்டு சங்கியும் மங்கியும் கை பிடியாக அவர்கள் காரிலேயே அழைத்துச் செல்ல... அதன் பிறகு எந்த வேலையும் இல்லாத சமயங்களில் கார்த்திக்கே அவர்களுடன் வரத் தொடங்கினான்.
கார்த்திக் காரில் வந்தாலே நிரல்யா அதிகமாக சிரிப்பதைக் கண்ட மங்கி அண்ணனுக்கு மேட்ச் இருந்தாலும் அவனிற்காக காத்திருந்து அழைத்து வரத் தொடங்கினாள்!!!
பள்ளி முடிந்தவுடன் ஆடி அசைந்து முப்பெரும் தேவியராக கார் பார்க்கிங் இடத்திற்குச் செல்லும் வழியில் கார்த்திக் இருக்கிறானா என்று பார்த்துவிட்டு இல்லை என்றால் சிறுமியர்கள் காரில் சென்று விடும் வழக்கமாக இருக்க... அன்று அவர்களின் வரவிற்காக காத்திருந்ததைக் கண்டு ஆச்சரியமாகப் பார்த்த இரட்டையர்களிடம்,
“ஏய்.. அவள் எங்க டீ??” என்றான் அதட்டலாக.
“நிருவையா கேட்கற??” என்றாள் மேகி.
“பின்ன உங்களுடன் அவள் தானே தினம் வருவாள்?”
“அவளைப் பற்றி ஏன் கேட்கற?” என்றாள் அவன் கேள்விக்குப் பதில் சொல்லாது எதிர்க்கேள்வி கேட்டாள் சங்கி.
“அப்புறம் சொல்கிறேன் இப்ப எங்க அவள்?” என்றான் கார்த்திக்.
“மதியத்திற்கு மேல் வாந்தி எடுத்ததால் வீட்டிற்குப் போய் விட்டாள்டா.”
“ஓ!!” என்று சொன்னவன் “சரி சரி நீங்க வீட்டிற்குப் போங்க, நான் மேட்ச் முடித்துவிட்டு அண்ணாவுடன் வருகிறேன்.”
“மத்தியானத்திலிருந்து தூறிக்கொண்டே இருக்கு... எந்த மேட்ச்...” என்று மங்கி கேட்டுக்கொண்டு இருக்கும் போதே போய் விட்டான்.
அடுத்த வந்த மூன்று நாளும் மழை விடாது பொழிந்துக்கொண்டே இருக்க... படிப்பது ஒரே பள்ளிக்கூடம் என்றாலும் கூட வெவ்வேறு கட்டிடத்தில் இருப்பதால் பள்ளி முடிந்தவுடன் மாலை தினமும் கார் பார்க்கிங் இடத்திற்கு வந்து “நிரல்யா வந்துவிட்டாளா??” என்று கேட்டு விட்டுப் போனான்.
இரவு தன் அறையில் எதையோ தீவிரமாக வரைந்துக்கொண்டு இருந்த ஆரியின் அறைக்கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே வந்த கார்த்திக்கை தலையை உயர்த்தி பார்த்ததும்...
“நேற்றே வருவாய் என்று எதிர்பார்த்தேன்” என்றான் முணுமுணுப்பாக ஆரி.
“என்ன அண்ணா?” என்று அவனின் பேச்சு காதில் விழாது கார்த்திக் கேட்டான்.
“ஒன்றும் இல்லைடா... வா வந்து உட்கார், ஐந்து நிமிடம் இதை முடித்து விட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டுச் சொன்னது போலவே வரைந்து
முடித்ததும் “என்ன விஷயம்… மூன்று நாளா ஏன் இப்படி எதையோ தொலைத்து விட்டுத் தேடும் பாவனையோடு திரிந்துக்கொண்டு இருக்கிறாய்?” என்றான் தம்பியிடம் தெரிந்த மாற்றத்தை உணர்ந்த அண்ணன்காரன்.
“அவளுக்கு உடம்பிற்கு முடியவில்லை அண்ணா” என்றான் கார்த்திக் மொட்டையாக.
எவளுக்கு?? என்று ஆரி கேட்பதற்கு அவசியம் இருக்கவில்லை... அந்த அவள் எவள் என்று கார்த்திக் சொன்ன விதத்திலேயே புரிந்துவிட்டது.
“என்னாச்சு?”
“நான்கு நாள் முன்னாடி மதியம் பள்ளியில் வாந்தி எடுத்தாள் என்று வீட்டிற்குப் போனவள் தான் இன்று வரை பள்ளி வரவில்லை” என்றான்
தம்பிக்காரன்.
“இதுல என்னடா இருக்கு....?? மழை விடாது கொட்டுது. அதனால் காய்ச்சல் இருக்கும், வீட்டில் இருப்பாள்” என்றான் ஆரி.
“அவளுக்கு ரொம்ப உடம்பிற்கு முடியவில்லை அண்ணா” என்றான் மீண்டும் கார்த்திக்.
“உனக்கு எப்படி தெரியும்??”
“எப்படி தெரியும்னு கேட்டால் எனக்கு சொல்லத் தெரியவில்லை... ஆனால் அவளுக்கு உடம்பிற்கு ரொம்ப முடியாது இருக்கிறாள் என்று மட்டும்
நன்றாக தெரியுது.”
தம்பி சொன்ன வார்த்தையைப் புரிந்துக்கொள்ள முயன்றபடி... “சரி இப்ப உனக்கு என்ன பண்ணணும்??”
மலங்க விழித்தபடி “தெரியவில்லை அண்ணா” என்றான்.
“ம்ம்... ரொம்ப யோசிக்காதே... இன்று இங்கேயே தூங்கு, நாளை பார்க்கலாம்” என்று கூறிவிட்டு சொன்னது போலவே மறுநாள் பள்ளிக்குத்
தயாராகி காலை டிபன் சாப்பிட்டுக் கொண்டே...
“அம்மா... சங்கி... மங்கியோட காரில் போகும் அந்தப் பொண்ணுக்கு உடம்பு முடியவில்லையாமே...” என்றான் ஆரி பொதுவாக.
“ஆமான்டா... அவங்க வீட்டிலிருந்து போன் செய்து காய்ச்சல் இருக்கு. அதனால் ஸ்கூல்லிற்கு வரமாட்டாள்... சரியானதற்கு பிறகு போன் செய்து சொல்வதாக சொன்னாங்க..” என்றார் உப்புமாவைப் பரிமாறிக்கொண்டே மல்லிகா.
“அது பழசுமா... இப்ப ரொம்ப முடியவில்லையாம்” என்றான் ஆரி விடாது.
காபியை அருந்தியபடி பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்த பாட்டி ஆரியையும் கார்த்திக்கையும் மாறி மாறி பார்த்தவர் “எங்களுக்கே தெரியாத விஷயம் உனக்கு எப்படிடா தெரியும்?” என்றார்.
“நாட் நாட் செவன்னு பட்டப்பெயர் வைத்து இருக்கிங்க... இது கூடத் தெரியாது என்றால் எப்படி??” என்று நக்கல் அடித்த ஆரி “ஸ்கூலில்
பேசிக்கொண்டாங்க பாட்டி” என்றதோடு முடித்து விட்டான்.
“அது எப்படி...?” என்று பாட்டி ஆரம்பிக்கும் போதே...
“ஆங்... கார்த்திக் என் ஸ்போர்ட்ஸ் யூனிஃபார்மை ரூம்மிலேயே மறந்து விட்டேன், போய் எடுத்து வாயேன்” என்று அவனை அங்கிருந்து அனுப்ப,
பாட்டியின் கண்கள் மேலும் கூர்மை பெற்றது.
அதற்கு மேல் பேச முடியாதபடி சங்கி, மங்கி தலை வாரிக்கொள்ள அம்மாவிடம் வர... அடுத்த பத்தாவது நிமிஷத்தில் பசங்க மூவரும் தனி காரில் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றனர்.
காலை பதினொரு மணி அளவில் ஏதோ தீவிர யோசனையுடன் நடந்துக்கொண்டு இருந்த மனைவியைப் பார்த்த தாத்தா...
“எதுக்குடீ இத்தனை டென்ஷனா ஹாலை குறுக்கும் நெடுக்குமாக நடந்துக்கொண்டு இருக்கிறாய்...??” என்றார் அன்று இருமல் மற்றும் லேசான
காய்ச்சல் காரணமாக ஆபிஸ் செல்லாது ஓய்வு எடுத்துக்கொண்ட பாட்டியின் மணாளன்.
“காய்ச்சலைப் பற்றித் தான் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்” என்றார் பாட்டி .
அவர் தன்னை பற்றித் தான் சொல்கிறார் என்று நினைத்த தாத்தாவோ “சாதாரண பருவ மாற்றத்தினால் வரும் சளி.. இருமல்.. காய்ச்சல் தான்
அதுக்கு இப்படி அலட்டிக்கொள்ள வேண்டுமா??” என்றார் அக்கறையாக.
“எனக்கு என்னமோ இது சாதாரணமாக தெரியவில்லை” என்று முணுமுணுத்தவரின் கண்கள் மட்டும் வாசலைப் பார்த்தவண்ணம் இருக்க...
“நம் வீட்டிற்கு யார் வராங்க?” என்றார் மனைவியின் பார்வை நொடிக்கு ஒரு தரம் வாசல் புறம் சென்று திரும்பிக்கொண்டு இருப்பதை கண்டு.
“செங்கமலத்தோட சகோதரனின் சம்பந்தியோட சின்னம்மா...” என்று பாட்டி இன்னும் முடிக்காது உறவு முறையை நீட்டிக்கொண்டே போக...
குழும்பிப் போன தாத்தா, “இரு... இரு... முதலில் இந்த செந்தாமரைக்கும் நமக்கும் என்ன உறவுன்னு சொல்லு?” என்றார் தெளிவுப்படுத்திக்கொள்ள.
இதே கேள்வி தான் மாமனாரின் இருமலுக்காக கசாயம் தயாரித்து வந்த மல்லிகாவின் மனதில் ஓடியது.
“செந்தாமரையா??” என்று பாட்டி தாத்தாவையே திரும்பிப் பார்த்துக் கேட்டார்.
“என்ன டீ... முதலில் நீதானே செந்தாமரையில் ஆரம்பித்த... இப்ப நீயே பெயரை மறந்துவிட்ட??”
“கருமம்... கருமம்” என்று தலையில் அடித்துக்கொண்ட பாட்டி... “அது செந்தாமரை இல்லை செங்கமலம்” என்றார் திருத்தமாக.
“ஓ!!” என்று இழுத்தவர்... “கமலம் என்றாலும் தாமரை என்றாலும் ஒரே பொருள் தானே” என்று தன் தவறை மறைக்க அசடு வழிந்து வைத்தார்.
“தப்பா சொன்னதோடு மட்டும் இல்லாது எனக்கு தமிழ்ல பாடம் எடுக்கறிங்களா?? ஏன் உங்க பெயர் கூடத் தான் சங்கரன் என்று சிவனுடைய
திருநாமத்தில் இருக்கு... அதுக்காக உங்களைச் சடையாண்டி என்று அழைக்கலாமா?” என்றார் பாட்டி வியாக்கனமாக.
தன் மனைவியுடன் பேசி வெற்றி பெற முடியாது என்று உணர்ந்து எப்படி வெள்ளைக் கொடியைப் பறக்க விட்டு சரணாகதி அடைவது என்று
தீவிரமாக யோசிக்கும் போது தான்...
“மாமா... சூடாக இருக்கும் போதே இந்த கசாயத்தைக் குடிச்சுடுங்களேன்” என்றார் மாமனாரின் நிலையை உணர்ந்த மருமகள்.
கண்ணில் நன்றி மிதக்க... ஓட்டமும் நடையுமாக டைனிங் டேபிள் சென்று அமர்ந்தார், இதுநாள் வரை கசாயம் என்ற பெயரைக் கேட்டாலே பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடி மறையும் சங்கரன்!!!
பிடிக்காத போதும் வந்து விட்ட காரணத்தால் ஒருமிடறு விழுங்குவதற்குள் முகம் அஷ்டகோணலாகி போக... பரிதாபமாக மனைவியைப்
பார்த்தார் சங்கரன்.
“என்னை எப்படி பார்த்தாலும் சரி... நீங்க சங்கரன் என்பதால் நான் சங்கரியாக மாறி உங்க கண்டத்தில் இருக்கும் கசாயத்தை அப்படியே பிடித்து நிறுத்தும் சக்தி எல்லாம் என்னிடம் இல்லை” என்று கூறியவர்.. "சடையாண்டின்னு உங்களுக்குப் பெயர் வைப்பதற்குப் பதில் கண்டத்தில் கசாயத்தை வைத்திருப்பதால் கசாய கண்டன் என்று பெயர் வேண்டுமானாலும் வைக்கலாம்"
இத்தனை ஆண்டு குடும்பம் நடத்தியதில் ஒன்றை மட்டும் நன்றாகவே அறிந்து வைத்து இருந்தார். நாட் நாட் செவன் வெறு வாய் பேச்சு வல்லமை படைத்தவள் அல்ல... விட்டால் அதைச் செய்து காட்டும் திறமை படைத்தவர், விட்டால் தன் பெயர் மாற்றத்தை இன்றே முனைந்துவிடுவாளோ
என்ற பயத்தில் மறுத்துப் பேசாது தொண்டைக் குழிக்குச் செல்லும் மருந்தை விழுங்கி உள்ளே இறங்கினார்.
அப்படி அவர் விழி பிதுங்க உள்ளே இறக்கிக்கொண்டு இருக்கும் வேளையில் தான் முப்பது வயது மதிக்கத்தக்க ஆடவன் பெரிய கும்பிடு போட்டுக்கொண்டே நுழைந்தான்.
தொடரும்……
அடுத்த பதிவு - வெள்ளி
DEAR READERS...
விநாயகர் சதுர்த்தி எப்படி போச்சு??
பத்து நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படும் சதுர்த்தி இந்த வருடம் ஒரு நாள் கூட இல்லை...
இப்படியும் ஒரு காலம் வரும்.. என்று கனவிலும் நினைத்துப்பார்த்திருக்க வில்லை நான்...
இதுவும் கடந்து போகும் என்ற பெரு மூச்சுடன்... அதுவரை கொஞ்சம் பத்திரமாக இருங்கள்..
கதை எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யலாம்...
பின்ன அத்தனை நீளமாக முடி வளர்த்து அது கூட செய்யவில்லை என்றால் எப்படி??Haha....
'முடி' யாலயே கார்த்திக் அ முடிச்சு கட்டியிருப்பா போலயே.... நல்ல வேளை மூச்சு முட்டி முழிச்சிட்டான்....
இந்த நிரு குடும்பம் தான் கார்த்திக் - நிரல் பிரிவுக்கு காரணமா இருக்குமோ!!! அதுலயும் முக்கியமா அவ அக்கா & மாமா தான் காரணமோ!!!!......
Nice epi sis ....![]()
உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்ச்சி செய்கிறேன்... நன்றி SUGANYAExpectation peeps. Waiting for nxt update