யாரோ யாரோடி!...
அத்தியாயம் 1
"சுக்லாம் பரதரம் விஷ்ணும்..”, பின்னணியில் ஒலித்த விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்குக் கண்விழித்தாள் காவேரி.
எப்பொழுதும் சுப்ரபாதம் ஒலிக்கும் ஓசையில் எழும் காவேரி, அன்றைக்குக் கொஞ்சம் தாமதமாய் சகஸ்ரநாமத்திற்குத் தான் விழித்தாள். சுகமான இளங்காலைக் குளிரில் ரஜாய்க்குள் சோம்பியிருந்தவள், காலை அலாரம் மீண்டும் தன்னியிருப்பை அறிவிக்க, உறக்கத்தையும், சோம்பலையும் ஒன்றாய்ச் சேர்த்து விரட்டிவிட்டு பரபரப்பாய் எழுந்தாள்.
வழக்கம் போலத் தன் உள்ளங்கையை விரித்து அதில் கண் மலர்ந்தாள்.
காலையில் விழித்தவுடன் தன் உள்ளங்கைகளை சேர்த்து, முதலில் முகம் பார்ப்பது அவளின் அன்றாட வழக்கம். அவளின் நாளின் முதல் தொடக்கம். அதோடு அன்றைய நாளை தரிசிக்க வாய்ப்பளித்த இறைவனையும் சில நொடிகள் நினைத்து நன்றி கூறி வணங்குவதும் அவளது வழக்கம்.
அதன் பிறகு, செல்ஃபோனில் இருந்த தினசரிக் குறிப்புகளைப் பார்த்தபடி சிறிது நேரம் அமர்ந்திருப்பாள். இன்று எதற்காகவும் தாமதிக்க வேண்டாம் என்று அவசராவசரமாய் அந்த அகன்ற அறையின் ஒருபுறம் இருந்த குளியலறைக்குள் சென்றவள், தன் காலைக் கடன்களை விரைந்து முடித்து குளித்துக் கிளம்பி, இருபதே நிமிடங்களில் தயாராகிக் காலை உணவிற்காக உணவு மேஜையை அடைந்தாள்.
அவளுக்கு முன்னரே அங்கு மொத்தக் குடும்பமும் ஆஜராகியிருந்தது. வேக வேகமாகச் சென்று, அனைவருக்கும், பொதுவாய் காலை வணக்கத்தைச் சொல்லிவிட்டு அமர்ந்து, காலை உணவை எடுத்துக் கொண்டவளுக்கு, எப்போதும் போல், பிடிக்காத அந்த விஷயம் மட்டும்தான் மீண்டும் அலசி ஆராயப்பட்டது ஆயாசத்தைக் கொடுத்தது.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் பொறுமை இழந்து, சட்டென்று அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு, அங்கிருந்து கிளம்பி, தன்னுடைய அலுவல் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.
எதையோ எடுப்பதும், வைப்பதும், என்று மீண்டும் மீண்டும் மனம் குழம்பியபடி இருந்தவள், ஃபோனில் ஏதோ பேசினாள். மீண்டும் ஒரு குறுஞ்செய்தியைத் தன் தோழிக்கு அனுப்பிவிட்டு, லேப்டாப்பில் எதையோ தட்டியபடி இருந்தாள்.
நேரம் மெல்ல நகர்ந்து கரைய, மதியம் பதினொன்று மணியளவில், தன்னுடைய ஹோண்டா காரில் வேகமாய் அந்த நட்சத்திர அந்தஸ்துடைய ஹோட்டலுக்கு விரைந்தாள் காவேரி.
அவள் முகத்தில் சரியான நேரத்திற்குப் போக முடியுமோ முடியாதோ என்கிற தவிப்பு அப்பட்டமாய்த் தெரிந்தது.
விஷயம் ஒன்றும் பெரிதில்லை. ஆனால் இந்த ஹோட்டல் சந்திப்பிற்குப் பின்னாலும் அவள் செய்ய வேண்டிய வேலை ஒன்றிருப்பதனால் தான் அந்த அவசரமும் பதைபதைப்பும்.
ஒருவாறாக சரியாக பத்து நிமிட தாமதத்திற்குப் பின்னர் ஹோட்டலின் ரெஸ்டாரெண்டை அடைந்தவள், முன்பதிவு செய்யப்பட்டிருந்த அந்த டேபிளில் அமர்ந்தபடி தன் செல்ஃபோனைக் குடைந்து கொண்டிருந்த சுரபியைக் கண்டாள்.
அடிக்கடி வரும் இடம்தான் என்பதால், தெரிந்த முகங்களைப் பார்த்து ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு, சுரபியிடம் விரைந்தாள் காவேரி.
"ஹாய்டி. சாரி. கடைசி நிமிடத் தலைவலியாக ஏதோ ஒரு வேலை வந்து சேர்ந்துவிட்டது. நீ ரொம்ப நேரமா காத்திருக்கியா?..”, என்று கேட்டபடி, இருக்கையைப் பின்னுக்குத் தள்ளி அமர்ந்து கொண்டாள்.
சாதாரண உயரத்தை விட சற்றே கூடுதல் உயரத்தில், இலவம் பஞ்சின் மென்மையான பால் வண்ணப் பளிங்கு மேனியில் நீல நிற ஜீன்சும், இளம் வெள்ளையில் நேர்த்தியான ரோஜா வண்ண சிறு பூக்களிட்ட லாங்க் குர்த்தாவும் அணிந்து, ஒரு போனிடெயிலில் தன் சுருள் கூந்தலை அடக்கமுடியாமல் பறந்தாட விட்டிருந்தாள் காவேரி. ஒரு கையில் அலைபேசியோடு, நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த நடையோடும் வந்த தோழியைப் பார்த்த சுரபிக்கு எப்போதும் போல் சற்றுப் பொறாமையாகத் தான் இருந்தது.
கலகலப்பான சுரபியும் களையான முகமும், பூசினாற் போன்ற உடலமைப்பும், மாநிறத்துக்கும் கூடுதலான நிறமும் அமைந்தவள் தான். தனக்குச் சற்று குட்டையான முடி என்று எப்பொழுதும் அலுத்துக் கொள்வாள். வழக்கம் போல் இன்றும், தன்னுடைய எலிவால் கூந்தலை எண்ணி நொந்தபடி,
"வாடியம்மா மகாராணி, இன்னிக்கும் லேட். என்னிக்காவது ஒரு நாள் கூட, சொன்னாச் சொன்ன நேரத்துக்கு வருவதில்லைன்னு நீ கங்கணம் கட்டியிருக்க போல! எல்லாரும் ஃபர்ஸ்டு போகணும்னு தான் நினைப்பாங்க ஆனால் நீயோ?..”, என்று அங்கலாய்த்துக் கொண்டாள்.
அவளின் இந்த ஒரு வித சோம்பேறித்தனம் புதிது அல்ல சுரபிக்கு. எத்தனை முறை சொன்னால் தான் என்ன, காவேரிக்கு உறைத்தால் தானே?
காவேரியுமே வேண்டும் என்றே செய்வதில்லை தான். ஆனால் ஏதோ ஒன்று வந்துவிடும் அவள் கிளம்புமுன். போதாதற்கு ஒரு வேலையை எடுத்தால் அதை முழுதும் திறம்படக் குறையில்லாமல் முடிக்க வேண்டும் அவளுக்கு. அதில் துளியும், குறைத்துக் கொள்ளவோ சமரசம் செய்துகொள்வதோ ஆகாது. பர்ஃபெக்ஷனிஸ்ட் என்று சொல்லலாம்.
ஒவ்வொன்றையும் நுணுக்கமாகப் பார்த்து செய்வதில் அவளுக்கு நிறைய தடவைகள் அதிகம் நேரம் எடுத்துத் தாமதமாகவும் ஆகிவிடும்.
அப்படிப்பட்டவளிடம், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையும் பேசிவிடவும் முடியாது.
"உஃப்..”, என்று அமர்ந்தவளுக்குக் குளிர்ச்சியாய், ஒரு சாத்துக்குடி ஜூசைக் கொடுத்த சுரபி, "நீ வர நேரம் பிடிக்கும் போல என்று முதலிலேயே சொல்லிவிட்டேன்..”, என்று தானும் தன்னுடைய ஜூசை மெல்ல உறிஞ்சினாள்.
"சொல்லுடி, அப்படியென்ன தலை போகிற விஷயம்? இன்றைக்கே சந்திக்க வேண்டும் என்று எதற்காகச் சொன்னாய்?..”, என்றவளிடம்,
"ச்.. கொஞ்சம் இரு. தொண்டைக்கு இதமாய் இருக்கு இந்த ஸ்வீட் லைம் ஜூஸ்..”, என்று தானும் ஒரு மிடறு குடித்தாள்.
"அதில்லைடி சுபி, எனக்கு நாலாபக்கமும் ப்ரெஷர் போடுகிறார்கள் வீட்டில். படிப்பும் முடிந்தாகி விட்டது. தெரிந்த, கூடவே வளர்ந்த அத்தை மகன். உடனே கல்யாணம் என்று ப்ரெஷர்..”, என்றாள் கடுப்பாய்.
வியப்புடன் தோழியை நோக்கியவள், "இதென்ன கதை? ஏற்கனவே உன் படிப்பு முடிஞ்சதும் இதெல்லாம் செய்யலாம்னு தானே சொல்லியிருந்தாங்க? என்னவோ புதுசாச் சொல்லறே. ஊருக்கே தெரிஞ்ச விஷயமாச்சே? தி கிரேட் கமல்நாத்தோட மகளுக்கும் அவள் அத்தை மகன் ஈஸ்வருக்கும் தான் கல்யாணம்கிறது, முடிவான ஒண்ணாச்சே? இப்போ ஏதோ அஞ்சலிப் பாப்பா மாதிரி, கண்ணைக் கசக்கறே! ஜாலியா இருக்க வேண்டியது தானே?.. கல்யாணத்தைக் கட்டிக்கிட்டு ஓடிப்போயிடு..”, என்று சிரித்தாள் சுரபி.
சுரபியும் ஒரு நல்ல பணக்கார இடம் தான். இப்பொழுது அவளுக்குமே நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகி இருந்தது. இருவரும் எல்.கே.ஜி. முதல் காலேஜ் வரை ஒன்றாகவே படித்தவர்கள். ஒன்றாகவே சுற்றித் திரிபவர்கள்.
அவள் அறியா விஷயம் எதுவுமில்லை காவேரியிடம் எனலாம்.
"ஹேய் சுபி. என்னடி நீயும் சேம் சைட் கோல் போடறே? நான் தான் எப்பவுமே சொல்லியிருக்கேனே? ஈஸ்வரைக் கட்டிக்கிறதா? எனக்கு ஏதோ கொஞ்சம் நெருடலாத் தான் இருக்கு இந்த விஷயம். சொந்தம்னு வரும்போது கொஞ்சம் தயக்கமா இருக்குப்பா. அதிலும் ஈஸ்வர் அத்தானுடைய எண்ணங்களும் என்னோட எண்ண அலைகளும் ஒத்துப் போவது கொஞ்சம் கஷ்டம்னுதான் தோணுது. என் தம்பி ஹரீஷ் வேற, இவங்க எல்லாம் சேர்ந்து என்னை ஏதோ பாழுங்கிணத்தில் தள்ளறாப்போல பேசறான். எனக்கு கொஞ்சம் கன்பியூஷனா இருந்ததாலே தான் உன்னைக் கூப்பிட்டேன்.. இதுல நீயும் என்னை வம்புக்கிழுத்தா? போப்பா..”
தோழியைக் கொஞ்சம் நிதானமாகப் பார்த்தபடி இருந்த சுரபிக்கும் உண்மை நன்கு புரியத் தான் செய்தது. அவளுமே கூட ஈஸ்வரை அரசல் புரசலாக காவேரியின் வீட்டில் பார்த்திருக்கிறாள், அவனைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறாள்.
ஈஸ்வர் என்னதான் மிகுந்த பண்பாளியாக இருந்தாலும் கூட அவ்வப்போது அவன் நடத்தை கொஞ்சம் சந்தேகிக்கும்படியாகத் தான் அவளுக்குத் தோன்றும். எப்போதும், ஒரு வித கற்பனை உலகத்திலேயே சஞ்சரித்துக் கொண்டிருப்பான் அவன். போதாதற்கு எதாவது பேச நேர்ந்தாலும், ஃபிலாசபி, தத்துவம், அது, இது என்று தத்துவார்த்தமாய்ப் பேசி எதிராளியின் மண்டையைக் குழப்பி விடுவான்.
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய முகத்தைக் காட்டுவான். இப்போது ஏதோ ஆசிரமம் கட்டப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறான்.
‘வாழ்வியல் கலையை போதிக்க. ஏற்கனவே நிறைய குருமார்கள் அக்கலையை போதித்துக் கொண்டிருக்கையில் நீ எதற்கு’ என்று ஒரு இண்டர்வியூவில் மீடியா நிருபர் கேட்க, ஏன் தான் அந்த கேள்வி கேட்டோம் என்று அவரை துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று தத்துவமழை பொழிந்து கதற விட்டு வந்தவன் அவன்.
முதல் முறை பார்ப்பவர்களுக்கு என்ன ஒரு, மகத்துவம் வாய்ந்தவன், விஷயம் தெரிந்த ஒரு தத்துவஞானி என்று எண்ணி அனைவரும் வியப்பர். இவ்வளவு சின்ன வயதில் இவ்வளவு ஞானமா? என்று அதிசயித்தவர்களும் உண்டு.
ஆனால் ஆரம்பம் தொட்டு சுரபிக்கு ஏதோ ஒரு இடறல் இருந்தது. காவேரிக்கு அவ்வப்போது சொல்லிக் கொண்டே இருப்பாள். காவேரிக்கும் அப்படியே. நேரடியாக அதெல்லாம் நடிப்பு என்று சொல்லாவிட்டாலும் கூட, ஏதோ ஒரு விஷயம் அவளுக்கு சரியாகப் படவில்லை அவனிடம்.
"இல்லடி. அவன் உன் அத்தை மகன், படிப்பாளி, ஒரு தத்துவஞானி. விஷயம் தெரிஞ்சவன், பணம் பண்ணும் விதம் தெரிஞ்சவன், போதாதற்கு நீயும் தான் அவனுடைய அந்த லைஃப் ஸ்கில்ஸ் வாழ்வியல் தத்துவங்கள் பயிற்சிக் கூடங்களில் ஈடுபாடு காட்டுகிறவள், அவனுடைய என்.ஜி.ஓ க்கு உதவி செய்ய அவன் கூட வேலை வேறு செய்யறே. பின்னே, நீ ஏன் அவனை கன்சிடர் செய்யக் கூடாது?.."
ஈஸ்வரைப் பற்றித் தன் மன அபிப்பிராயத்தை வெளியிடாமல் தோழியின் மனநிலை அறிந்து கொள்ள ஆறுதலாய் அவளுக்கேற்ப ஒத்துப் பேசினாள் சுரபி.
ஏற்கனவே காலையில் தான் டைனிங்க் டேபிளில் அந்த விஷயம் விவாதிக்கப்பட்டு, அப்போதைக்கு ஒன்றும் சொல்லாமல் தப்பித்து வந்திருந்தாள் காவேரி, இப்போது தோழியும் அதையே மீண்டும் சொல்லவும் ஒரு கணம் கண்மூடித் திறந்து தன்னை ஒருநிலைப்படுத்திக் கொண்டவள்,
"வேண்டாம். ஓடிரு. என்னாலே முடியலை. ஏன்பா இவ்வளவு காலமா என்னோடு பழகுற உனக்குமா என்னைப் புரியல? எவ்வளவு முறை உனக்கும் எங்க அப்பா அம்மாவுக்கும் திரும்பத் திரும்பச் சொல்லறது? எனக்குன்னு சில கோட்பாடுகள் மற்றும் குறிக்கோள்கள் வச்சிருக்கேன். அதை நான் சாதிக்கிற வரைக்கும் இந்த கல்யாணம், காட்சியெல்லாம் வேண்டாம்னு இருக்கேன். போதாததுக்கு, அப்பா அம்மா எனக்காக செலக்ட் செஞ்சு, அவனை எனக்குப் பிடிச்சி, எங்க எல்லாருக்கும் ஒத்து வர மாதிரி ஒரு பர்சனாலிடியா எனக்கு வருகிறவன் இருக்கணும். ஈஸ்வர் ஏதோ கல்யாணத்துக்கு ஈசியா ஒரு வழின்னு எல்லோருக்கும் தோணுது. அவன் இன்னமும் தனியா என்ன சாதிச்சான்னு யோசிச்சா? ப்ச்.. ஒரு கூட்டத்தைச் சேர்த்ததைத் தவிர வேற ஒண்ணும் புலப்படலை”.., என்றாள்.
"அதைத்தானேடி அவங்களும் சொல்லறாங்க? ஈஸ்வர், உங்க அப்பா அம்மாவுக்கு பிடிக்கும் வரன், எல்லாருக்கும் ஒத்து போகுது. மெயினா உனக்கும் தான். அவன் ஏதோ பெரிய கடவுள் ரேஞ்சுக்கு போடற சீனுக்கு நீயும் தானே ஜால்ரா மாதிரி இருக்க? அப்போ கட்டிக்க வேண்டியது தானே?..”, என்று விடாமல் மல்லுக்கு நின்றாள் சுரபியோ.
இன்று இதற்கு ஒரு முடிவு கட்டிவிட நினைத்த சுரபி, காவேரியை விட்டாளில்லை..
"சீ சீ. நான். எனக்கு..”, என்று திணறிய காவேரியோ..
"ஏய் முதல்ல புஃபே போயி எல்லாம் எடுத்துட்டு வந்துடலாம். எனக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு மூணு மணிக்கு. போஸ்ட் லன்ச் சொல்லியிருக்காரு அந்த கம்பெனியின் சி.ஈ.ஓ..”, என்று மேடையில் விதவிதமாய் அடுக்கிவைக்கப்பட்டிருந்த பதார்த்தங்களின் பக்கம் செல்ல எழுந்தாள்.
சுரபியும் உடன் வரவும், இருவரும் தேவையான உணவுவகைகளை எடுத்துக் கொண்டு தங்கள் இடத்தில் வந்தமர்ந்து உண்ணும் வழியைப் பார்த்தனர்.
"அதுசரி, நீ எங்கே போகப் போகிறாய் லஞ்சுக்கு அப்புறம்?..”
"அது ஒரு பெரிய ஃபேக்டரி கம் ஆஃபீஸ். நிறைய பிசினசில இருக்காங்க அந்த க்ரூப். மெயினா, ஐ.டி, மற்றும் ரியல் எஸ்டேட், அப்புறம் எஞ்சினியரிங்க் கூட என்று ஈஸ்வர் சொன்னார். போய்ப் பார்த்துக் கொஞ்சம் ப்ளான்ஸ் எக்ஸ்ப்ளெயின் செஞ்சி, நிதி உதவி கேட்கணுமாம்..”, என்றாள் சாலடை மென்றபடி.
"எந்த க்ரூப் சொன்னே?..”, என்று அசுவாரசியமாய் விசாரித்தவளின் கண்கள் அந்தப் பெயரைக் கேட்டதும் வியப்பில் விரிந்தன.
"நிஜமாவே சூப்பர்டி. அங்கே ஸ்பான்சர் கிடைச்சால் உங்க ப்ளான் சக்ஸஸ் ஆகிடும். ஆனால் ஒண்ணு புரியலை. உங்க அப்பா ஒரு வார்த்தை சொன்னா அவங்களா வரப்போறாங்க பேக்கப்பில். உங்கப்பா வேற, சில இடங்களில் நல்ல ஒரு அழுத்தம் தரத் தகுந்தவர், சோ, அப்பா பேரைச் சொன்னால் போதுமே?..”, என்று மேலே ஏதோ பேசத் துவங்கியவளை நிறுத்திய காவேரி.
"நிறுத்து நிறுத்து, இதுக்குத்தான் நான் வேணாம்னு சொன்னேன். எனக்குன்னு ஒரு பெயர், மற்றும் ஒரு அங்கீகாரம் வேணும்கிறதுனாலே தானே, நான் யார் எவர்னு சொல்லாமல் போகப் போகிறேன். எந்தக் கொம்பனா இருந்தாலும் பரவாயில்லை, நானே பார்த்துப் பேசிச் சரி கட்டறேன். எதுவாயிருந்தாலும் என் சொந்த முயற்சியால் நடந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்..”, என்றவள், ஒன்றும் பேசாமல் உண்ணத் தொடங்கினாள்.
"சரிடி, சரி, இப்போதைக்கு இந்தக் கல்யாண விஷயத்தைக் கொஞ்சம் தள்ளிப் போடு. அப்பா கிட்ட சொல்லிடு. மனசுல அந்த மாதிரி ஒரு ஃபீல் வரலைன்னு சொல்லு. ஒரே ஒரு வருஷம் தள்ளிப் போடு. அப்புறம் பார்த்துக்கோ. யாருக்குத் தெரியும் உனக்கே அதுக்குள்ள ஈஸ்வரை பிடித்தும் போகலாம், உங்க அப்பாவுக்கு பிடிக்காமயும் போகலாம். அப்போ பார்த்துக்கலாம்.. இப்போதைக்கு கொஞ்சம் எல்லாத்தையும் ஆறப் போடு..”, என்றாள் சுலபமாக
தோழியின் பதிலை யோசித்தபடியே அமர்ந்திருந்தவளுக்கும் அது தான் சரி என்று தோன்றியது. ஒரு முடிவுக்கு வந்தவள்,
"ஆமாம். அப்படித் தான் செய்யணும். கல்யாணம்னா முதல்ல மகிழ்ச்சியா ஒரு ஃபீல் வரணும். கல்யாணம்கிறது ஒரு இவெண்ட்டா மட்டும் இல்லை, ஒரு அழகான பியூட்டிபுல் மோமெண்ட்டாவும் கூட இருக்கணும்.. இப்படி யோசனையா இருக்கறதே எனக்கு சரியாப் படலை. இல்லைன்னா பாரேன், எப்பவும் எனக்குப் பிடிக்கும் இந்த ரஷ்யன் சலாட் கூட சாப்பிடப் பிடிக்கலை. இதுவே ஒரு குறிப்புன்னு தோணுது. பார்க்கறேன். யாரைப் பார்த்தா என் மனசுக்குள் ஒரு படபடப்பும் எதிர்பார்ப்பும் வந்து உக்காருதோ அவன் தான் என் கணவனாகத் தகுதியானவன்னு தோணுது..”, என்றவளைப் பார்த்து சுரபி நன்றாகவே சிரிக்கத் தொடங்கினாள்.
"ஏன் அப்படியே குண்டு பல்ப் எரியும், கூடவே மணியோசை கேட்கும், குட்டிப்பசங்க ஓடுவாங்க, நாலு தேவதை போல் பெண்கள் சிரிப்பாங்கன்னு, தோணனுமா? போடி, போய் வேலையைப் பாரு. எப்பவும், கனவே வாழ்க்கையாக மாறமுடியுமா என்ன? போய் மீட்டிங்கை முதல்ல ஒழுங்கா முடி. அப்புறம் பார்க்கலாம்..”, என்று சொல்லி எழுந்து கொண்டாள்.
காவேரியோ மனதுள், 'ஏன் கனவு மெய்யாகக் கூடாதுன்னு எதாவது சட்டமா என்ன, கனவு காணுங்கள்னு உலகமே இப்போ கூவுது. இவ என்னடான்னா..”, என்று நினைத்தவள் பிடிவாதமாய்த் தன் கனவைத் துரத்திக் கொண்டு ஓடத் தொடங்கினாள்.