அத்தியாயம் 10
காரை அதி விரைவாக ஓட்டிச் சென்ற ஈஸ்வர், அந்த மிகப் பெரிய அலுவலகக் கட்டிடத்தை அடையும்முன், சற்றே நிதானித்து, மெல்லச் செலுத்தினான்.
அதுவரை வாய் மூடி அவனருகில் அமர்ந்திருந்தவள், அப்போது தான் வாய் திறந்தாள்.
"ஏன் ஈசத்தான், திடீர்னு மெல்ல ஓட்டறீங்க, ஏன் பதட்டமா இருக்கா?..", என்று கேட்டே விட்டாள்.
அவளை ஒரு வித அலட்சியத்தோடு பார்த்த ஈஸ்வர், "என்னோட மனதின் வேகத்துக்கு இந்த கார் வேகம் ரொம்ப ஸ்லோ. ஏதோ யோசிச்சிகிட்டே ஓட்டினேன். இப்போ க்ளியர். அதான், நிதானமா, அடுத்த அடி என்னன்னு யோசிச்சு ஒரு முடிவுக்கும் வந்துட்டேன். சோ.அங்கே போய்ச் சேருமுன், மனதுள் எல்லாத்தையும் பட்டியல் போட நான் எடுத்துக்கிட்ட அவகாசம் தான் இந்த ஒரு சில நிமிடத்துளிகள்..", என்று சொன்னவன், பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு, தன்னுடைய முகத்தைக் கண்ணாடியில் சரிபார்த்துக் கொண்ட பின்னரே காரை விட்டு இறங்கினான்.
ஈஸ்வர், கொஞ்சம் மந்தம் என்றே தான் அனைவரும் நினைத்திருந்தனர், ஆனால் அவன் மிக புத்திசாலி. அளந்து தான் பேசுவான். தன் மாமன் முன்னிலையில் மட்டுமே ஏதோ சின்னக் குழந்தை போல் இருப்பான். அதற்கும் ஒரு காரணம் வைத்திருந்தான்.
பெற்றவர்களுக்கு மட்டும்தானே குழந்தை தன் முழுமனதைத் திறந்துக் காட்ட முடியும். எதையும் மறைக்க முடியாத இடம் அல்லவா தாயின் இருப்பிடம். அதனால் தாய் வீட்டில் மட்டுமே தன் முழு மனதையும் திறக்க முடியும் என்பது அவன் ஆணித்தரமான கருத்து.
இதனாலேயே அவனுக்கு எப்போதும் ஒரு மறைக்கபட்ட முகம் இருக்கிறதோ என்றே காவேரி நினைப்பாள்.
அன்றைக்கும் அப்படித்தான். தடாலடியாக அவளையும் அழைத்து வந்திருந்த இடம் அவர்களின் பெரிய கார்பரேட் ஆஃபீசின் அரங்கம் தான். அவர்களின் குழுமம் கூட்டு முயற்சிகளுக்கு நிதி உதவி மற்றும் முதலீடு செய்யும் ஒரு வென்சர் கேபிடலிஸ்ட் நிறுவனம்.
உள்ளே செல்லும் போதே ஒரு வித சாந்தபாவத்துடன், மென்மையான நடையுடன், அந்த அரங்கத்திற்குள் சென்றவன், தனக்கு அளிக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து அருகில் காவேரியை அமரச் சொல்லிவிட்டு, தன் உரையை ஆரம்பித்தான்.
முதலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன், தன்னுடைய குறிக்கோளான ஆசிரமத்திற்கு நிதி திரட்டும் பணியில் தான் ஈடுபட்டிருப்பதாகவும், கூடவே தன்னுடன் சேர்ந்து அந்தப் பெரிய பணியில், தோள் கொடுக்க உதவியைக் கோரி வந்திருப்பதாகவும், தெள்ளத் தெளிவான சுத்தமான ஆங்கிலத்தில் தன் உரையைத் தொடங்கி, தன்னுடைய திட்டத்தைப் பற்றித் திறம்பட அனைவருக்கும் தெரிவித்தான்.
அவன் பேசப் பேச, காவேரி நிச்சயம் அதிசயித்தாள் என்றே சொல்லலாம். இவ்வளவு தெளிவையும் திறமையையும் அவனிடம் நிச்சயமாக அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. அதற்கு முன்னர் கூட ஒரு சில சொற்பொழிவுகளை அவள் கேட்டிருக்கிறாள் தான். அப்போதும் அவளுக்குத் தோன்றியதுண்டு அவன் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளன் என்று. ஆனால் வீட்டில் அவன் இருக்கும் இடம் தெரியாமல், ஏதோ, ஒரு மந்தமான சிறுவன் போல் இருப்பதும் அவளால் ஏற்க முடியவில்லை தான்.
அங்கே இருந்த குழுமத்தினர், ‘எதற்காகப் புதிதாக ஒரு ஆசிரமம், அதுவும் பலதரப்பட்ட பெரிய நிறுவனங்கள் எல்லாம் வாழ்வியல் கலையையும், முறையையும் சொல்லிக் கொண்டிருக்கும்போது நீங்கள் என்ன புதிதாக சாதித்து விடப் போகிறீர்கள்’, எனக் கேட்கவும்,
‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் எப்படி வளைய முடியும், தன்னுடைய முதல் முயற்சியே சிறார் பள்ளிக்கூடங்களில் தான், அங்கிருந்தே முறையாக, ஆன்மீகம், யோகப் பயிற்சி, மற்றும் கலாச்சாரம் அனைத்தையும் போதிக்க ஆரம்பித்து, அதன் மூலம், சிறு வயதிலிருந்தே வாழ்க்கைப் பிரச்சனைகளையும் அவற்றைத் தீர்க்கும் வழிகளையும் முறைமைகளையும், கட்டுப்பாடுகளையும் போதிப்பது தான் தன்னுடைய முதல் நோக்கம் என்றும், அதன் பின்னர், நசிந்தோருக்கு வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கித் தர எண்ணியிருப்பதாகவும்’, திறம்பட முன்வைத்தான்.
அவன் பேச்சை நிஜமாகவே அனைவரும் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தனர் என்றே சொல்லலாம்.. காவேரியும் கூட அவனின் மற்றொரு பரிமாணத்தைக் கண்டு பிரமிப்பில் ஆழ்ந்தாள்.
அந்தத் துறையில் அவனுக்கிருந்த அந்தத் துல்லியமான தெளிவு அவளுள் பிரமிப்பை ஏற்படுத்தியது.
அதிலும் ஒருவர் விடாமல் அவனைக் கேள்விக்கணைகளால் துளைத்தார்.
"எந்த விதத்தில நீங்க சரின்னு சொல்லறீங்க? ஏற்கனவே பணக்காரப் பின்னணியிலிருந்து வருகிறீர்கள், உங்களுக்கு மத்தவங்களுடைய கஷ்டத்தைப் பத்தி என்ன தெரியும்?”
ஒரு கணம் லேசான முறுவலை வீசிய ஈஸ்வர், "துக்கத்தை அனுபவிச்சுத் தான் தெரிஞ்சுக்கணும் என்று அவசியமில்லை. பார்த்தும் தெரிஞ்சிக்கலாம். அதான் நான். போதி மரத்தடி ஞானம் பெற்ற புத்தர் முதல்ல சித்தார்த் என்ற இளவரசனாகத் தான் இருந்தான். அவன் காணாத சுகதுக்கங்களா? அந்த துன்பங்களை அவன் அனுபவிக்கவில்லை. எல்லாம் கண்டது தானே? அவருக்குக் கிடைத்த ஞானம் என்னாலும் காண முடியும்..” என்று சொல்லவும் ஒரு கணம் அனைவரும் ஆமோதித்தனர்.
அடுத்த ஒருவர், "ஏன் உங்களை நம்பணும்? இங்க வந்து உங்க கிட்டத் தான் மத்தவங்க வாழ்வியலக் கத்துக்கணும்னு என்ன அவசியம்?..", என்று கேட்க, அதற்கும் அயராமல்..
“நான் மனசாட்சிக்கு உண்மையா இருக்க நினைக்கிறேன். கஷ்டத்தை உணர்ந்தவன் அதிலிருந்து மீள வழி தெரியாதான்னு நினைப்பான். தேடுவான். ஆத்துல நீச்சல் அடிக்கத் தெரியாதவன், எதாவது ஒரு துடுப்போ பிடிப்போ கிடைக்காதா என்று தேடுவான். அந்தத் தேடும் துடுப்பா நான் ஏன் இருக்கக் கூடாது..”
உடனடியாக அவனைத் தடுத்து நிறுத்திய அந்த முதலீட்டாளர், "அது தான் நீங்க மட்டும் ஏன் இருக்கணும்னு கேக்கறேன்?..”
அப்போது நன்றாகவே சிரித்த ஈஸ்வர், இலகுவாக, "அதான் நானும் கேட்கறேன் அது ஏன் நானாக இருக்கக்கூடாது? இதை ஒரு தொடக்கமா நினைக்கலாமே.. பள்ளிக் கூடத்தில போய் நாம் கத்துக்கலையா? அது மாதிரி இதுவும் ஸ்கூல் தான். பிரச்சனையை சரியா அணுக நினைக்கிற என்கிட்ட நீங்க கத்துக்கலாம்.. அவசியமா அவசியமில்லையா என்று ஆராய முதலில் நான் அவர்களுக்காக முன்வருகிறேன். நல்ல வாழ்வியல் முறையை ஃபாலோ செய்வதற்கு ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுக்க நினைக்கிறேன். ஏன் நான் செய்யக்கூடாது? யாராவது தொடங்கத் தானே வேணும்? அந்த ஆரம்பப்புள்ளி நான் என்கிறேன்..”, என்று சொல்லிவிட்டு வேறு ஏதாவது இருக்கிறதா என்பது போல் பார்த்தான்.
தொடக்கத்திலிருந்து அமைதியாக, அதேசமயம் ஒரு இணக்கமான அணுகுமுறையைக் கடைபிடித்தான் ஈஸ்வர்.
கேள்வி கேட்டவர், ஒரு விரிந்த முறுவலுடன், கடைசியாக ஒரு கேள்வி, "ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தா எப்படி சமாளிப்பீங்க? இதுல நஷ்டம் வந்தா யார் பொறுப்பு? போட்ட காசுக்கு யார் பாதுகாப்பு தருவாங்க?..", என்று கேள்வியை காவேரியையும் பார்த்து வைத்தார்.
“ஒரு வேளை மேடமின் தந்தை பொறுப்பேற்பாரோ?..”, என்று கேட்டவரை நிதானமாகப் பார்த்தவன்,
"இதுக்கு பதில் நல்லதா சிந்திப்போமேன்னு சொல்லிவிட முடியும். ஆனால் நேர்மறைக் கருத்துக்களைப் பற்றிய ஒரு சின்ன விளக்கம் சொல்ல நினைக்கிறேன். இது ஒரு குட்டிக் கதைதான். நிறையப் பேர் கேட்டிருப்பீர்கள். இருந்தாலும் சொல்லறேன்..”
“ஒரு அடர்ந்த காட்டில் ஒரு கர்ப்பிணி மானைப் பசித்திருக்கும் புலி ஒன்று வேட்டையாட எண்ணித் துரத்துகிறது, காட்டிலிருந்து தப்பி ஓட நினைத்த மான் ஒரு பரந்த புல்வெளிக்கு ஓடித் தப்பித்து வருகிறது. திடீரென்று காட்டின் மறுபக்கம் நெருப்பு பற்றிக் கொண்டு கொழுந்து விட்டு எரிகிறது. இது போதாதென்று வேடன் ஒருவன் மானைக்கண்டு வேட்டையாட வருகிறான். ஒரு பக்கம் புலி, மற்றொரு பக்கம் நெருப்பு, இன்னொருபக்கம் அம்புடன் வேடன்.. புல்வெளிக்கு அப்பால் நின்ற வேடன், மானை வேட்டையாட எண்ணி அம்பையும் எடுத்து விட்டான். அந்த கணம் அந்த மானுக்கு என்ன செய்வதென்றுபுரியவில்லை, எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆபத்து..அப்படியிருக்கையில் மானுக்கு பிரசவவலி வேறு கண்டு விடுகிறது. மான் ஒரு கணம் யோசித்தது, ‘இனி எந்தப் பக்கம் போனாலும், ஆபத்துதான், சரி இந்த கணம், பூமிக்கு ஒரு புதிய உயிரைத் தரும் கடமை தனக்கிருக்கிறது. அதை செய்வோம். மற்றதை விதி என்ன நினைக்கிறதோ அது நடத்தட்டும்’ என்று எண்ணி, கன்றை ஈனத் தொடங்குகிறது.
திடீர்த் திருப்பமாய் வேடன் அக்காட்சியில் மனம் நெகிழ்ந்து, சட்டென்று தன் இலக்கை மாற்றிப் புலியின் மீது அம்பு தொடுத்து அதைக் கொல்கிறான். அதேசமயம் திடீரென மேகங்கள் ஒன்றுதிரண்டு மழையைப் பெய்து தீயை அணைக்க, வேடன் மானைத் தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து விலகிச் செல்கிறான்..”
“இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், கடமையைச் செய், பலன் அதுவாக வரும் என்று தெளிவாகிறது. அதைத் தான் நான் செய்ய நினைக்கிறேன். நம்பிக்கை வைத்து நேர்மறைச் சிந்தனையுடன் ஒன்றை அணுகினால், அந்த நற்செயல் மற்றதைப் பார்த்துக் கொள்ளும்..”, என்று கூறி முடிக்கவும், அங்கே குண்டூசி விழும் அளவு நிசப்தம் தவழ, அடுத்த கணம், அனைவரும் எழுந்து நின்று கரகோஷத்தை தொடங்கிவிட்டனர்.
குழுமத் தலைவர் சந்தோஷமாய்,
"அப்போ, குருஜி, நீங்க எப்போ இந்த ப்ராஜெக்ட் ஸ்டார்ட் செய்யலாம்னு இருக்கீங்க. உங்க ப்ராஜெக்ட் எஸ்டிமேட் , மற்றும், ரிப்போர்ட் எல்லாம் பார்த்தோம். இன்னிக்கு ப்ரெசெண்டேஷன் மட்டும்தான். எங்களோட ஆடிட் குழுமம், எல்லாவற்றையும் அலசிப் பார்த்து விட்டு, உங்களுக்கு ஒரு நல்ல பதிலைக் கொடுக்கும். அதோடு உங்கள் ஆசிரமத்தையும் வந்து பார்ப்போம். எங்களுக்கு இதில் கூட்டு முயற்சி முதலீட்டுக்கு சம்மதம் தான். ஆனால் சின்ன சந்தேகம், மிஸ்டர் கமல்நாத் ஏன் இதில் முதலீடு செய்யலை..", என்று மீண்டும் ஒரு கேள்வியுடன் முடித்தார் அந்தக் குழுமத்தின் தலைவர்.
தன்னை குருஜி அந்தஸ்திற்கு சட்டென்று உயர்த்திய அந்த மனிதரை ஈஸ்வருக்கும் மிகவும் பிடித்துவிட்டது.
"நன்றி. மிக்க நன்றி. தாராளமாய் வந்து பார்க்கலாம். நிச்சயம், உங்களுக்கு இதில் பெரிய ஒரு பங்கு உண்டு. என் மாமாவே ஒரு பெரிய தொழிலதிபர் தான். ஆனால் குடும்பத் தொழிலாக இது வேண்டாம் என்று நினைத்தேன்..", என்றுத் தெளிவாகக் கூறினான்.
அதில் ஒருவர், "இங்கே பாருங்கள், நாங்கள் முதலீடு செய்தால் அதற்கான பலனை நிச்சயம் சரியாக எதிர்பார்ப்போம். அதில் எந்தவிதமான முறைகேடும் இருத்தல் கூடாது. மேலும், எங்களுடன் இன்னொரு குழுமமும் இதில் உண்டு, ஆனால் அவர்கள் இன்று வரவில்லை.. மற்றபடி வேலன் குழுமத்தினருக்கும் எங்களுடைய இந்த புராஜெக்டுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. ஏனோ தெரியவில்லை, ஜீவானந்திற்கு இந்த மாதிரியான வென்ச்சர்கள் பிடித்தமில்லை.. எதற்கும் சொல்லிப் பார்ப்போம்..”
வேலன் குழுமம் என்றதும் காவேரிக்கும் சரி, ஈஸ்வருக்கும் சுருக்கென்று தான் இருந்தது.
ஈஸ்வர் எதையும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. எப்படியும் ஜீவா இதற்கெல்லாம் மசியமாட்டான் என்பது தான் அவனுக்கு முதலிலேயே தெரியுமே.
ஆனால் காவேரிக்குத் தான், ஜீவாவும் இன்று வந்திருந்தால் அவனுக்குமே இந்த திட்டம் பற்றிய அனைத்து விவரங்களையும் ஈஸ்வர் வாயிலாகக் கேட்டிருக்கலாம். ஈஸ்வரின் மேல் அவனுக்குப் பெரிய அபிப்பிராயம் கிடையாது என்பதும் அவள் அறிந்தது தானே. அந்தப் பார்வையும் எண்ணமும் இன்று வந்திருந்தால் கொஞ்சம் மாறியிருக்கக் கூடுமோ என்றே நினைத்தாள்.
அறியா மற்றொரு விஷயமும் உண்டு. இவை அனைத்தையுமே ஜீவாவும் தன்னுடைய அறையில் இருந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.
*********
காலையில் ஜீவானந்தனுக்கு ஈஸ்வர் வரப் போகும் விஷயம் தெரிந்ததுமே அவன் அந்த கூட்டத்திலிருந்து விலகிக் கொண்டான். நேரடியாகச் சொல்லியும் விட்டான் மற்றவர்களிடம்..
என்ன சொன்னாலும் ஏனோ அவனுக்கு ஈஸ்வர் மேல் ஒரு நம்பிக்கை ஏற்படவில்லை என்பது தான் நிஜம்.. அவனைப் பொருத்தவரையில், கருப்பு அல்லது வெள்ளை அவ்வளவுதான். நடுவே பல்வேறு நிறச்சேர்க்கைகள் என்பது எதுவும் உண்மையானதாகக் கருத மாட்டான்.
‘ஒருவன் நல்லவனாகவோ கெட்டவனாகவோ தான் இருக்க முடியும் மாறாக, கொஞ்சம் நல்லவன், கொஞ்சம் கெட்டவன் என்பதெல்லாம் சரிவராது வாழ்க்கைக்கு’, என்று பிடிவாதமாக இருப்பான்.
அதனால் தான் என்னவோ காவேரியைக் கண்டதுமே அவனுக்கு முதல் பார்வையிலேயே பிடித்துப் போனது. அவன் பார்வையில், தன்னுடைய முக்கால்வாசி எதிர்பார்ப்பும் அவளிடம் நிறைந்திருக்கக் கண்டான். எதையும் ஒளிவு மறைவில்லாமல் பேசும் அவள் குணம் அவனுக்கு மிகவும் பிடித்துப் போனதால் தான் திருமணம் புரிய சட்டெனக் கேட்டுவிட்டான்.
‘ஆனால் ஈஸ்வர் அப்படியில்லை. அவன் ஒரு பசுத்தோல் போர்த்திய புலி’ என்றே நினைத்தான்.
அந்த சாந்தமான புன்னகையின் பின்னர் ஏனோ ஒரு குரூரம் மறைந்திருக்குமோ என்று யோசித்ததும் அப்போது தான். ஈஸ்வரை அதற்குமுன் சில பேச்சு அரங்கங்களில் ஜீவானந்தன் பார்த்திருக்கிறான். ஈஸ்வர் நல்ல ஒரு பேச்சாளான். ஆனால் அதை அவன் வாழ்க்கையில் பின்பற்றுகிறானா என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. அப்போதைக்கு அவன் ஈஸ்வரைப் பெரிதாக எதுவும் எண்ணவில்லை.
‘என் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை நான் தான் நிர்ணயம் செய்ய வேண்டும். மற்றவர்கள், என்ன போதித்தாலும், ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பது மட்டும் தான் அவன் கொள்கை.
மேலும், வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் அனுபவங்களே நம்மைப் புடம் போட்டு, பொன்னாக மாற்றி தகதகக்க வைக்கும் என்பது அவனின் ஆணித்தரமான கருத்து.
அப்படியிருக்க, ‘நீ இப்படி இரு, அப்படிச் செய் என்று சொல்லுவதால் மட்டும் ஒருவர் மாற முடியுமா? என்னதான் ஈஸ்வர் அப்படியெல்லாம் சொல்லாமல், இதை இப்படியும் செய்யலாம், என்கிற போக்கில் தான் பேசினாலும் கூட, அனுபவம் தான் முதல் ஆசான் என்பதில் அவன் உறுதியாயிருந்தான். மேலும், நன்மை தீமைகளை முதலில் உரைக்கக் கூடியவர்கள், பெற்றவர்களும், ஆசிரியர்களும் என்று’ ஆணித்தரமாக நம்பினான்.
‘பெற்றவர்களால் குழந்தைகள் மனதில் விதைக்க முடியாதது ஒன்றுமில்லை என்றே நம்பினான். ஆனால் எத்தனை பேருக்கு அத்தகைய பெற்றவர்கள் அமையக் கூடும் என்பதையும் யோசிக்க வேண்டுமே?’
ஒரு சின்ன சந்தேகமும் அவனுள் இருந்தது. ‘எப்போதும் சந்தேகத்தின் பலன் எனப்படும் பெனிஃபிட் ஆஃப் டவுட். அனைவருக்கும் வழங்கப்பட வேண்டுமே. ஒருவேளை ஈஸ்வர் நிஜமாகவே அவ்வளவு சத்குணங்கள் பொருந்தியவனாக இருந்தால், தான் ஏன் காவேரிக்கும் அவனுக்கும் நடுவில் குழப்பத்தை உண்டு செய்ய வேண்டும்’ என்பதையும் யோசிக்கத் தான் செய்தான்.
அதனாலேயே திடீரென்று காவேரியின் வாழக்கையில் நுழைந்த தான், சற்றே ஒதுங்கி நின்று அவளுக்கும் தனக்குமிடையிலான உறவைப் பற்றியும் உள்ளுக்குள் அலசி ஆராய்ந்தபடி தான் இருந்தான்.
அவனைப் பொருத்தவரையில் காவேரியும் ஒரு நல்ல புத்திசாலியான, உறுதியான கோட்பாடுடைய பெண் தான். அதனாலேயே விரைவில் அவளுமே எது நிஜம் என்பதை முடிவு செய்து விடுவாள் என்று நம்பினான். ஒரு மாத அவகாசம் கேட்டான். இன்றோ நாளையோ என்று பதிலுக்காக மனம் அடித்துக் கொண்டிருக்கக் காத்திருந்தான்.
ஈஸ்வரின் அந்த தெளிவான திட்ட விரிவாக்கப் பட்டியலையும், கோட்பாடுகளையும் எதிர்பார்ப்புகளையும் அவன் வாய்வழியே கேட்டு அவனும் தான் பிரமித்தான். எப்போதும் போல் அவன் நல்ல பேச்சாளி, கூடவே ஆன்மீகத்தை அதிகம் கலக்காமல் தத்துவார்த்தமாக அனைத்தையும் அறிவுப்பூர்வமாக அணுகும் அவன் திட்டம் நிச்சயம் பாரட்டத்தக்கது என்றும் நினைத்தான். ஆனாலும் ஏதோ ஒன்று பாகை துரும்பாய் மனதுள் நெருடியது.
*******
கூட்டம் முடிவடைந்தவுடன், நான்கைந்து பேர் ஈஸ்வரைச் சுற்றிகொண்டனர். குருஜி குருஜி என்று அவனை ஏதோ ஒரு பெரிய பீடத்தில் தூக்கி வைக்காத குறையாய் உருகினர். புகழ்ந்து தள்ளினர்.
"குருஜீ, சீக்கிரம், எங்க எஞ்சினீயரிங்க் க்ரூப்பை அனுப்புகிறோம், நல்ல ப்ளானிங்க் எல்லாம் செய்து, வேகமாக இந்தத் திட்டத்தை அமலாக்குவோம்.. நீங்க எங்கேயாவது இடம் யோசித்து வைத்துக் கொண்டிருந்தால் சொல்லுங்க, பேசி முடிச்சிடுவோம்..”, என்று ஒருவர் கூற,
"என்னுடைய சிஷ்யகோடிகள், வழி நடப்பவர்கள், ஏற்கனவே கொடைக்கானல் பக்கம் பாத்திருக்காங்க. கிளைமேட்டும் நல்லா இருக்கும். பக்கத்திலே ஏர்போர்ட்னு பார்த்தா மதுரை விமான நிலையமும் இருக்கு. ஏன்னா நிறைய வெளிநாட்டவர்கள் இதற்காக, வருவாங்க, அவங்களுக்கு ஏற்றதாக ஈஸியாகப் பிரயாணம் இருக்கணும். ரெண்டொரு இடம் இன்னும் இருக்கு சொல்லறேன்..சென்னையிலும் யோசித்துக் கொண்டு இருக்கோம்.. எதுவும் முடிவாத் தீர்மானம் செய்யவில்லை..", என்று சொல்லிவிட்டு அழகாய்க் கைகுவித்து விட்டு,
"காவேரி மாதா போகலாமா..", என்று கேட்க,
அனைவரின் கவனமும் காவேரியின் புறம் திரும்பியது.
"மேடம் அப்போ உங்க கூட இனி இந்தத் திட்டங்களில் இருப்பாங்களா?. அதுவே பெரிய ஸ்யூரிடியாச்சே..”, என்று வாய் விட்டே கேட்டுவிட்டார் ஒருவர்.
அதற்கு ஒன்றும் பதில் சொல்லாமல், "காலம் அனைத்தையும் அனைவருக்கும் உணர்த்தும் வல்லமை கொண்டது..", என்று சொல்லிவிட்டு காவேரி பின்தொடரக் கிளம்பினான்.
தான் சொன்னது அந்த ஒருவருக்கா, அல்லது தனக்கா என்று அவனுள் கேள்வி எழுந்தது. ஏனோ இன்று அவன் பிறருக்காக சொன்ன அந்த கர்ப்பிணி மானின் கதை அவனையே உலுக்கத் தொடங்கியது.
‘தான் ஏன் பணத்தின் பின் ஓட வேண்டும். இன்றைய சொற்பொழிவுக்குப் பின்னர், இனி அந்த பணம் தன்னைத் தேடி பல வழிகளில் ஓடி வரும். என்னைத் தூற்றியவர்கள் போற்றப் போகிறார்கள். என் புகழ் பாடி என் பின்னால் நடக்கப் போகிறார்கள். அது திண்ணம்.’
‘அப்படியிருக்க, தானும் ஏன் அந்த உபதேசத்தை பின்பற்றக்கூடாது?’
‘அப்படியென்றால் புகழ் போதைக்கு தான் அடிமையாகிறோமா?’
‘ஏன் கூடாது? புகழே போதைதான். இருக்கட்டும்.. நல்லது செய்வோம். அதன் பலனையும் அனுபவிப்போம்’
முடிவெடுத்து விட்டான். ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டான். இனி தான் முன் நடக்க வேண்டும். தன்னை பின் தொடருவோருக்கு முன்னோடியாக, தான் முன் செல்ல வேண்டும்’
தெளிவு பிறந்தது ஈஸ்வருக்கு..
காலம் அவனை மாற்ற தொடங்கி விட்டதா? அந்த காலம் தான் இனி சொல்ல வேண்டும்.
காவேரி தான், 'இவன் என்ன சொல்ல வரான். நான் இவனின் கொள்கை பரப்புச் செயலாளரா? இல்லை அவன் சிஷ்யையா?', என்று யோசித்தவள், 'எதுவாக இருந்தாலும் முடிவு என் கையில்’, என்று யோசித்தபடி குழப்பத்துடன் அவனைப் பின் தொடர்ந்தாள்.