அத்தியாயம் 16
ஈஸ்வரிடம் பேசிவிட்டுக் குழப்பத்தோடு நடந்து வந்தவள் மீது மோதி நின்றான் ஜீவா.
தடுமாறி நின்றவளைப் பிடித்து நிறுத்தியிருந்தான்.
வழக்கமாக ஜீன்ஸ், லாங்க் குர்த்தி, புடவை இப்படி மாற்றி மாற்றி சமயத்திற்கு ஏற்ப உடுத்துபவள், அன்று லாங்க் ஸ்கர்ட் மற்றும் அதற்குப் பொருத்தமான நீளமான மேல் டாப்பில், துப்பட்டா சகிதம் தன் மொத்த அழகும் மிளிர இருந்தாள்.
ஜீவாவின் பார்வை அவள் மேல் வலம் வர, அவன் பார்வையை உணர்ந்தவளுக்கோ எரிச்சல் வந்தது.
“திரும்பவும் வந்தாச்சா? உங்களுக்கு வேற வேலையே இல்லையா?..”
முகம் கடுகடுக்க அவனைத் திட்டத் தொடங்க, எங்கிருந்தோ ஓடி வந்தார் அங்கே கணக்கு வழக்குகளை பார்க்கும் பார்வதி அம்மாள்.
“மாதாஜி, நீங்க இங்க இருக்கீங்களா? சார் உங்களைத் தேடித் தான் வந்திருக்கார். எதோ டொனேஷன் பத்திப் பேசணும்னு வந்து இருக்காங்க..”
‘இதென்ன புது விஷயம்? ஜீவாவாவது அவர்கள் ஆஸ்ரமத்திற்கு டொனேஷன் கொடுப்பதாவது?’
தன்னை நம்பமுடியாமல் பார்ப்பவளைக் கண்டவனுக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தது. தன் புருவங்களை ஏற்றி இறக்கினான். ‘நம்பு, உண்மை தான்’ என்பது போல.
“மாதாஜி, சாருக்கு இங்கே வந்தா நிம்மதி கிடைக்குதாம். அவரால் ஆன உதவியை செய்யப் போகிறாராம். நம்ம காப்பகத்துக்கு உதவி செய்ய வாய்ப்பு கிடைச்சிருக்காம். எல்லாம் கடவுள் அருளாம்..”
“மேடம் கடவுள் அருள்னு சொன்னது நூத்துக்கு நூறு உண்மை தான். இல்லைன்னா, உங்க மாதாஜி மாதிரி நல்ல உள்ளங்களை என் கண்ணுக்குக் காட்டி இருப்பாரா அந்தக் கடவுள்? நானெல்லாம் சின்ன ஒரு கருவி தான் மேடம். மாதாஜி மாதிரி பெரிய மனிதர்களோடு எனக்குத் தொடர்பு ஏற்படுத்தி வாய்ப்பை தந்த அந்தக் கடவுளுக்கு நன்றி சொல்லணும். ஆனா, பாருங்க, நானெல்லாம் சாதாரண மனுஷன். ஏதோ என்னாலான சின்னத் தொகையைக் கொடுக்கலாம்னு முடிவெடுத்திருக்கேன். மத்தபடி என்னால வேறு என்ன செய்ய முடியும்? மாதாஜி மாதிரி தன்னலம் பார்க்காமல் சேவை செய்ய மனசு வரணுமே? ஏதோ சில லட்சங்களை உங்கள் சேவைக்காக கொடுக்கலாம் என்று நானும் தீர்மானம் செய்திருக்கேன்..”
மிகுந்த பணிவுடன் பேசுபவனைக் கண்ட அந்த நிர்வாகி மேனேஜர் அம்மாள் வாயெல்லாம் பல்லாக, காவேரியோ அவன் பேச்சில் அப்படியே மயங்காக் குறை தான்.
“சார் நீங்க ரொம்பத் தன்னடக்கத்துடன் பேசறீங்க. இந்த காலத்துல கடுகளவு உதவி செய்யறவங்க கூட ரொம்பப் பெருமை பீத்தலாக் கடலளவு விளம்பரப்படுத்திப்பாங்க. சில லட்சங்களை கொடுக்கப் போறேன்னு சொல்லற நீங்க, அமைதியா எவ்வளவு பண்பாப் பேசறீங்க! உங்களை மாதிரி நல்லவங்க இருக்கிறதாலே தான் நாட்டுல இன்னும் மழை பெய்யுது சார்..”
“மேடம், நீங்க விட்டா என்னை வருண பகவான் ரேஞ்சுக்குப் புகழ்ந்து தள்ளுவீங்க போல. உங்க மாதாஜியைப் புகழ்ந்தாலும் அதுல அர்த்தமிருக்கு. விட்டா என்னையும் இங்கே ஒரு குருஜி ஆக்கிடுவீங்க போல..”, என ஒரு மாதிரியாகச் சிரித்தவன்,
“மேடம், நீங்க இவ்வளவு புகழ்ந்து பேசறீங்க, ஆனா உங்க மாதாஜி கோவில்ல வீற்றிருக்கிற சிலை மாதிரி என்னவோ அப்படியே அமைதியா நிக்கிறாங்களே? மாதாஜி, மாதாஜி, உங்களுக்கு இதுல இஷ்டமில்லையா?..”, என காவேரியை வம்பிக்கிழுத்தான்.
"டொனேஷன் கொடுக்க முடியாது, எனக்கு நம்பிக்கையில்லை..”, என்று பேசிக்கொண்டிருந்தவன் திடீரென்று நன்கொடை கொடுக்க வந்திருக்கிறான் என்று கேட்டதில் திகைத்து நின்ற காவேரி, இப்பொழுது அவன் சீண்டலில் கோபத்தில் சிலிர்த்தவள்,
“அம்மா, நீங்க போய் ஃபார்மெல்லாம் எடுத்து ரெடி பண்ணி வையுங்க. நான் சாரு கிட்ட கொஞ்சம் டீடெய்ல்ஸ் பேசிட்டு வரேன்..”, என அவரை அனுப்பி வைத்தவள், அவன் பக்கமாய் திரும்பினாள்.
“என்ன திடீர்னு, எங்க ஆஸ்ரமத்து மேல நம்பிக்கை இல்லைன்னு சொன்னவரு, லட்சங்களில் டொனேட் செய்யறதா இப்ப வந்து நிக்கறீங்க?..”
“ம்..”, அவளை ஏற இறங்கப் பார்த்தான். அவன் பார்வையில் சிவந்த முகத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவேரியோ தன் முகத்தை திருப்பினாள்.
உள்ளுக்குள் அதை ரசித்தபடி, ஜீவாவோ அவளை வம்பிழுக்கத் தொடங்கினான்.
“மாதாஜி..”
“பச். மாதாஜியாம் மாதாஜி. போதும் நிறுத்துங்க, உங்க கேலியை ரசிக்க நான் இப்ப ரெடியாயில்ல. வந்த விஷயத்தை முதல்ல சொல்லுங்க. நிஜம்மாப் பணம் கொடுக்க வந்தீங்களா? இல்ல, எப்பவும் போல இது அடுத்த டிராமாவா?..”
“ஓகே மாதாஜி வேண்டாம். காவேரி, காவேரி இனி காவேரி தான். இது போதுமா?..”, என்று உல்லாசமாக அவள் பெயரைச் சொல்லிச் சிரித்தான்.
காவேரிக்குப் பொறுமை போகத் தொடங்கி இருந்தது. ‘ஏற்கனவே ஈஸ்வரோடு அன்றைக்கு வேண்டிய அளவு மல்லுக்கட்டியாயிற்று! அடுத்து இவனா?’ என எரிச்சல் மிக, அங்கிருந்து நகரத் தொடங்க,
“ஹேய், இரு இரு, போகாதே..”, என்று அவள் கையைப் பிடித்து நிறுத்தினான்.
அவன் கையை உதறித் தள்ளி நின்றவளைக் கண்டு அழகாய்ப் புன்னகைத்தான்.
“நிஜம் தான் காவேரி, இந்த இரண்டு மாதமா நானும் தினமும் இங்கே வந்து போயிட்டுத்தான் இருக்கேன். நிச்சயம் ஓரளவுக்கு இங்கே நீ நல்லது செய்வது போலத் தான் தெரிகிறது..”
அவனே பேசட்டும் என்று அவள் அமைதியாக நின்றாள். பேசி முடி என்பது போல தன் கைகடிகாரத்தைப் பார்த்தாள்.
“சரி சரி, உனக்கு நேரமாயிடுச்சுன்னு சிம்பாலிக்கா எல்லாம் சொல்ல வேண்டாம். நான் நேரடியாவே சொல்லிடறேன். உங்க ஆஸ்ரமத்தைப் பத்திக் குற்றம், குறை சொன்னா உனக்குப் பிடிக்காது தான். ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியாது. ஏன்னா நானும் பணம் கொடுக்கப் போறவன் பாரு..”, என்று ஆரம்பித்தவனை இடையிட்டாள் காவேரியோ.
“அவ்வளவு குற்றம், குறையெல்லாம் பாக்கறவங்க பணம் கொடுக்கணும்னு நாங்க இங்கே எதிர்பார்த்து நின்னிட்டு இல்ல. இன்ஃபாக்ட் நாங்க யாரையும் பணம் கொடுங்கன்னு கூடப் போய் இப்பல்லாம் நிக்கறதுல்ல. பணம் எங்களுக்கு தாராளமா, தானாவே வந்து கொட்டுது. எல்லாம் எங்க குருஜி ஈஸ்வரோடு மகிமை. இப்போ கூட அதுக்காகத்தான் புதுசாச் சில திட்டமெல்லாம் ஈஸ்வர்ஜி சொல்லிட்டு இருந்தாங்க..”
பெருமையாகச் சொன்னவள் தன் இல்லாத காலரை தூக்கிவிடாக் குறைதான்.
“குருஜி பெருமை. ம்..”, என்றவனோ.
“வாழ்க ஈஸ்வர்ஜி. இருக்கட்டும், இப்ப அதைப் பற்றித் தான் நானும் பேச வந்தேன். உங்க 'யாத்திரா உலா போகலாம்' திட்டம் பற்றி எங்களுக்கு ஏற்கனவே உங்க குருஜி நாலு நாளைக்கு முன்னாடியே மெயில் அனுப்பி இருக்காரு..”
காவேரியின் முகம் மாறியது. அப்படியென்றால், ஏற்கனவே இந்த திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கி விட்டு, இன்று தகவல் போல எல்லோரிடமும் சொல்லி இருக்கிறானா ஈஸ்வர். கார்பரேட் கம்பனிகள் தான், தன் நோக்கம் போலப் பேசினானே!
அவள் முக மாற்றத்தைக் கண்டாலும், அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் தன் பேச்சைத் தொடர்ந்தான் ஜீவா.
“எங்க கம்பெனி சார்பா அதுக்குத் தான் நானும் சிலபல லட்சங்களைக் தொலைக்கலாம்னு இன்னிக்கு இங்க வந்தேன். இந்தத் திட்டம் எனக்கும் பிடிச்சிருக்கு. ஸ்ட்ரெஸ்ஃபுல் லைஃப் இப்ப வேலை செய்யறவங்களுக்கு, சோ, மனசை ரிலாக்ஸ் செய்ய என் அலுவலக ஊழியர்களுக்கும் இதை ஒரு வாய்ப்பாப் பயன்படுத்த நானும் தீர்மானிச்சி இருக்கேன். இதுல எந்தத் தில்லுமுல்லும் இருக்காதுன்னு நம்பறேன். இந்த திட்டம் நல்ல ஸ்டெரஸ் ரீலீஃப் தான்.. உடலுக்கும், மனதிற்குமான ஓய்வு..”
“நல்லது ஜீவா, உங்க விருப்பம். உங்க கம்பெனி எம்ப்ளாயீசும் பார்டிசிபேட் செய்யலாம். பேகேஜ் டீடெய்ல்ஸ் எல்லாம் நான் உங்க மெயிலுக்கு அனுப்பச் சொல்லறேன். மத்தபடி இது தில்லுமுல்லா, அதெல்லாம் என்னால எந்த கேரண்டியும் கொடுக்க முடியாது. பட் ஒரு கேரண்டி வேணா என்னால கொடுக்க முடியும், நிச்சயம், உங்க எம்ப்ளாயீஸ் இங்கே தங்கி இருக்கிற நாட்கள் நிம்மதியா, அமைதியா இருக்க முடியும். ஸ்ட்ரெஸ் ஃப்ரீ லைஃப், அதுக்கு வேண்டிய எல்லாமே இங்கே செய்து தருவாங்க. அதே சமயத்துல, கடைசியில் அந்த யாத்ராவும் அவங்க விருப்பப்பட்டா அழைச்சிட்டுப் போவாங்க. ஆனா, எல்லாத்துக்கும் சில கண்டிஷன்களும் இருக்கு. ஃபார் எக்ஸாம்பில், அவங்க உடல்நிலை, மனநிலை, மெடிக்கல் கண்டிஷன்ஸ் எல்லாம் பார்த்துத் தான் கடைசியில் டிசைட் செய்வோம்..”
“எல்லாம் சரிதான் மாதாஜி. ஆனா, கொஞ்சம் நேரம் முன்னாடி உன்னைத் தேடிட்டு இங்க வந்தேன். அப்போ இங்க சில தேவையில்லாக் காட்சிகள் எல்லாம் கண்ணுல பட்டுச்சு. அதான் உன்னைச் சந்திச்சுப் பேசலாம்னு தேடினேன்..”
“மனநலம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சில கலைகளைச் சொல்லித் தருவதாகத் தானே இங்கே பலர் தங்கள் குழந்தைகளை அழைச்சிட்டு வந்துட்டு போறாங்க? ஒரு சிலர் இங்கேயே அவங்க பசங்களை விட்டும் வச்சிருக்காங்க. ஆனா, பார்த்தா, அவ்வளவா பாதுகாப்பு இருக்கான்னு தெரியலையே?”
“வாட்? பாதுகாப்பு இல்லையா? எதை வச்சி சொல்லிறீங்க ஜீவா? இங்க இருக்கிற செக்கியூரிட்டி பார்த்திருக்கீங்க இல்ல? சட்டுன்னு யாரும் வெளியே இருந்து கண்டபடி உள்ளே நுழைஞ்சிட முடியாது?..”
“செகியூரிட்டி எல்லாம் பக்காவாத் தான் இருக்கு..”
“பின்ன என்ன தான் சொல்ல வரீங்க? எதாவது குறை சொல்லணும்னு சும்மா சொல்லாதீங்க..”, அவனின் குற்றச்சாட்டில் எரிச்சலாக மொழிந்தாள் காவேரி,
“எதுக்கு இந்த எரிச்சல் மாதாஜி? நான் உள்ளதைத்தான் இப்ப சொல்லறேன். வெளியே இருந்து அயோக்கியர்கள் வர வேண்டாம். உள்ளேயே இருக்காங்களே? இதோ நம்ம கண்ணு முன்னாடி நடந்து போயிட்டே இருக்காங்க. என்னவோ பக்தி மயமா எதையோ முணுமுணுத்திட்டே இருக்காங்க. பக்திமயமாய் சாமி பெயர் அவர்கள் வாயில்.. ஆனா, அவங்க பார்வையும் பக்தியும் வேற மாதிரி எனக்குப் படுது. ஆடி பாடி மகிழ்ந்திரிப்பது இந்த ஆஸ்ரமத்தைப் பொறுத்தவரை வாழ்வியல் கலை, எல்லாம் சரிதான், பட் இதில் எல்லோரும் நல்லவங்கன்னு எப்படி சொல்ல முடியும்?..”
அவனைப் புரியாமல் குழப்பமாகப் பார்த்தவளுக்குத் தெளிவாய் எடுத்துரைத்தான்.
“இங்க பாரு காவேரி, இவங்க சாமிங்கிற பேருல என்ன வேணாச் சொல்லிட்டுத் திரியட்டும். செய்யட்டும். கேட்டா, எல்லா மதமும் இங்கே ஒண்ணுதான். அன்புதான் முக்கியம்னு உங்க குருஜி சிம்பிளா சொல்லிடுவாரு. என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்.
என் கேள்வி இதுதான், உங்க மெடிடேஷன் செண்டர் இந்தப் பிள்ளைங்களோடு க்ளாஸ் ரூமுக்கு அந்தப் பக்கமா இருக்கு. இங்க மெடிடேஷன் பண்ண வர்ரவங்க எல்லோரும் நல்லவங்களா இருப்பாங்களான்னு எப்படிச் சொல்ல முடியும்? இது தான் கேள்வி. நீயே யோசிச்சுப் பாரு, இந்தப் பிள்ளைகள் தங்களோடு துணி விலகினாக் கூட எடுத்து சரியா போட்டுக்கத் தெரியாத வெகுளிகள். எதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டவங்க. தாங்க என்ன செய்கிறோம்னு கூடத் தெரியாமல் இருக்காங்க. அப்படியிருக்க, இஷ்டத்துக்கு இப்படி ஆஸ்ரமத்துக்கு வரவங்க இப்படிக் கண்டபடி சுத்திட்டு இருக்க நீங்க அனுமதி கொடுத்தா, இந்தப் பிள்ளைகளுக்கு என்ன கேரண்டி தருவீங்க சொல்லுங்க? யார் மனசுல என்ன இருக்குமோ? கார்பரேட் ஆபீஸ் தங்கள் எம்ப்ளாயீஸுக்கு கொடுக்கப் போற செர்வீசுக்கு நீங்க காரெண்ட்டி தரீங்க, ஓ.கே. பட், இந்த மாதிரி இருக்கிறவங்களுக்கு என்ன கேரண்டி? அவங்களை நல்லபடியா உங்களால ஒப்படைக்க முடியுமா? நாளைக்கு எந்தத் தப்பும் இங்கே நடக்கக் கூடாது இல்லையா? நான் சொல்ல வரது புரியுது தானே?..”
இத்தனை நாட்களாகத் தனக்கு இது ஏன் தோன்றவில்லை என முதன்முறையாக காவேரிக்குத் தோன்றியது. நிச்சயம் இது பற்றி ஈஸ்வரிடம் பேச வேண்டும் என்று மனதுள் முடிவெடுத்தாள்.
“நிச்சயம் பாக்கறேன் ஜீவா. நல்ல பாயிண்ட் தான். இங்க நாங்க யாரையும் தடை சொல்லறதில்லை. எந்த மதமா இருந்தாலும் எங்களுக்கு சம்மதம் தான். பர்டிகுலர் தெய்வ வழிபாடெல்லாம் இங்க இல்ல. இது ஒரு வாழ்வியல் சென்டர். அவ்வளவு தான். மதம், இனமெல்லாம் தாண்டி நிம்மதியா வாழ்க்கையை வாழ்வது எப்படின்னு போதிக்கிற ஒருங்கிணைப்புக்கான இடம். அவ்வளவு தான். அவங்க விருப்பப்படி வந்து மெடிடேஷன் செய்யலாம். வாழ்வியல் கலையைக் கற்கலாம் என்று தான் சொல்லி இருக்கோம். ரிலாக்ஸ்டா இருக்கச் சொல்லித் தரோம். அதுக்கான காசையும் வசூலிக்கிறோம். அவ்வளவு தான். ஆனா, அதுக்காகத் தப்பைத் தூண்டி விடறா மாதிரி நாங்களே இடம் கொடுக்கக் கூடாது தான். இதுபத்தி நான் ஈஸ்வர் கிட்ட பேசறேன். நிச்சயம் இதுக்கு மாற்றுவழியை நான் பாக்கறேன்..”
“பரவாயில்ல, நான் என்ன சொல்ல வரேன்னு கப்புன்னு கற்பூரமா பிடிச்சிக்கிட்ட..”
அடுத்து என்ன பேசுவது என இருவரும் தடுமாறி அமைதியாய்ச் சிறிது நேரம் நின்றிருக்க, காவேரியே,
“அப்ப நான் கிளம்பவா? அந்த டொனேஷன்?..”, என மெல்ல இழுக்க.
“இது டொனேஷன் மாதிரி நான் யோசிக்கல. சில லட்சங்கள் ஸ்பெண்ட் செய்ய நினைக்கிறேன்னு சொன்னதை, அந்த நிர்வாகி அம்மாள் கொஞ்சம் மிஸ் அண்டர்ஸ்டான்ட் பண்ணிட்டு என்னைப் புகழ ஆரம்பிச்சிட்டாங்க. எங்க எம்ப்ளாயீஸ் இங்க மனசை ரிலாக்ஸ் பண்ண நீங்க கேக்கற சார்ஜஸ்னு அதை வைச்சுக்கச் சொன்னேன். நீங்க மெயில் அனுப்பிடுங்க. நான் டீடெய்ல்ஸ் வந்ததும் நிச்சயம் ப்ரொசீட் செய்யறேன். இந்த புரோகிராம்ல நாங்களும் இருக்கோம்..”, என்றவன்.
“அப்புறம் வேறு என்ன காவேரி, நீ ஏன் என்னைக் கண்டு ஒதுங்கியே போற? கல்யாணம் பண்ண என் விருப்பத்தைச் சொன்னேந்தான். அதுக்கான அவகாசமும் கேட்டேன். பட் உன் மனசுல நான் இருக்கேனா, இன்னுமே எனக்குப் புரியாத புதிராத் தான் இருக்கு. ஆனாலும், உன் அத்தான் ஈஸ்வரையும் நீ கல்யாணம் பண்ணிக்கப் போறதாவும் தெரியல. சரி அதை விடு, நீயே நல்லா யோசிச்சு முடிவெடு. அது வரை நாம் நண்பர்களா இருப்போமே. விலகி எல்லாம் போக வேண்டாம். அடிக்கடி நானும் இங்க வர வேண்டியிருக்கே..
ஹேய், வேறு மாதிரி யோசிக்காதே. என் தங்கச்சிக்கோசரம், இன்னும் கொஞ்ச நாட்கள் இங்கே வருவேன். உன்னைத் தேவையில்லாமல் எல்லாம் நான் தொந்தரவு பண்ண மாட்டேன். ஏற்கனவே நான் சொல்லி இருக்கேன், உனக்காக நான் காத்திட்டு இருப்பேன், அது நீ உன் முடிவு இதுதான்னு தெரியறவரைக்கும். சோ ரிலாக்ஸ் மா. எப்படி இதுக்கு முன்னாடி ஆபீஸ்ல நாம பிரெண்ட்லியா பழகினோமோ அப்படியே இப்பவும் பழகுவோம். சரியா..”
“ஏதுக்கு இந்த திடீர் ஞானோதயம்? உங்க வீட்டுக்கு வந்தப்ப மூஞ்சியைத் திருப்பிட்டுப் போனீங்க? இந்த ஃப்ரெண்ட்ஷிப்பை நானும் தானே அன்னிக்குக் கேட்டேன்..”
முகத்தில் அடித்தாற்போல் பேசுபவளின் பேச்சை ரசித்தவன்,
“இப்பத் தானே கொஞ்ச நாளா ஈஸ்வரானந்தாவின் ஆஸ்ரமத்துக்கு வந்துட்டுப் போறேன். அதான் ஞானமும் இப்பத் தான் மெதுவா வந்திருக்கு. உங்க ஆஸ்ரமத்து வாழ்வியலை நானும் பயின்று வாழ்ந்து பார்க்கலாம்னு தீர்மானிச்சிட்டேன் காவேரி மாதா..”, என அவன் முப்பத்திரெண்டு பல்லையும் காட்டி இளித்து விளக்கம் வைத்தான்.
எப்பொழுதும் போல அவன் மாயச் சிரிப்பில் தன்னைத் தொலைத்துத் திகைத்து நின்றாள் காவேரியோ.
அவனோ, விடாது.
“என்ன காவேரி ஜி திகைச்சி நிக்கிறீங்க? எனக்குச் சொந்தமில்லாதது கோடி ரூபாய் கொடுத்தாலும் தேவையில்லை. அதே சமயத்தில் எனக்கு சொந்தமான ஒரு ரூபாயைக் கூட நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன். ஏற்கனவே நான் திரும்பத் திரும்பச் சொல்லியாச்சு. ப்ளேக் அல்லது வௌயிட். எதாவது ஒண்ணு தான் என் குறி. இப்ப என்னோட ஒரே ஃபோகஸ் நீதான். உனக்காக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வெயிட் பண்ணப் போறேன். அதுக்காக உங்க வாழ்வியல் கலையும் கற்க நான் தயார் தான்..”
சட்டென, அவள் புறங்கையைப் பற்றித் தன் இதழ்களை பதித்தான். அந்தச் சின்ன முத்தத்தில் காவேரியின் உடல் சிலிர்த்தது.
அப்படியே அவன் அணைப்பில் கட்டுண்டு, தன்னுடைய வேண்டாக் கவலைகளை எல்லாம் கொட்டிவிடத் துடித்தாள்.
அதுவரை அவள் உறங்கிக் கொண்டிருந்த மனம் விழித்து அவளை இது தப்பு என எச்சரித்தது. சில வினாடிகள் முன்னர் தானே தொந்தரவு செய்ய மாட்டேன் என்று உறுதியிட்டவன், உடனே கையில் முத்தமிடுகிறான்.
‘நீ விலகி நில்’ அவள் மனம் கூக்குரலிட்டது.
தன்னையே குற்றம் சாட்டிக் கொண்டாள்.
'நீதான் எனக்காவன், உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு’ என அவள் மனமோ அடங்காமல் மீண்டும் கொக்கரித்தது.
அவனுக்கும் அந்த நிமிடத்தில் உடல் சிலிர்த்ததோ!, அவளின் அர்த்தமுள்ள பார்வையில்..
“இது தப்பு..”
“எதுவும் தப்பில்ல. இதான் சரி. ஜஸ்ட் என் அன்பை உன் கையைப் பிடிச்சி பரிமாறினேன், அவ்வளவு தான். கை குலுக்குவது, கட்டி அணைப்பது, கன்னத்தில் முத்தமிடுவது இதெல்லாம் கார்பரேட் கல்சரில் சகஜம் தானே? ரொம்ப யோசிக்காதே. நான் என்னிக்குமே உன்னோட நல்ல நண்பன் தான். உனக்கு என்ன உதவி வேணும்னாலும் எப்பவும் தயங்காமல் கேக்கலாம். இதை மட்டும் இப்போதைக்கு ஞாபகம் வைச்சிக்க. சரியா? இனி தினமும் என்னை நீ பார்க்கலாம்..”, அவனோ வாதிட்டான் கண்களைச் சிமிட்டி.
குழம்பி நின்றவளுக்கு அவன் வாதம் சரியாகவே பட்டது. அவனுக்குத் தலையாட்டி மகிழ்ச்சியோடு சம்மதம் சொன்னாள் காவேரியோ முகம் சிவக்க. ‘இவனும் என் நண்பன் தான்.’ எனத் தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
‘நண்பன் என்று சொல்லியவன், ஈஸ்வர் கார்பரேட் கல்ச்சர் என நட்பாய் என்னை முத்தமிட்டால் அனுமதிப்பாளா?.’ யோசிக்க மறந்தாள் தனக்கு சாதகமாக.
இருவரும் வேறுவேறு திசையில் நடக்க ஆரம்பித்தனர்.
மாறிய அவர்கள் பாதை மீண்டும் இணையுமா?