அத்தியாயம் 18
“இதை இப்படியே விட முடியாது. விட்டால் இன்னும் எத்தனை அறியாப் பெண்களின் வாழ்வு வீணாகுமோ?..”, என்ற ஜீவா பெற்றவர்கள் பேச்சைக்கூட கேட்க அங்கே நிற்கவில்லை.
தங்களுக்கான நியாயம் கிடைக்கவேண்டும் என்று காவேரின் வீட்டினரிடம் வாதிட்டுக் கொண்டிருந்தான்.
விஷயம் இதுதான்.
இரண்டு நாட்களுக்கு முன்னால் அவனுடைய தங்கை தரணி மாடிப்படியில் இருந்து உருண்டு விழுந்தாள். விழுந்தவள் வயிற்றில் இடித்துக்கொண்டு ரத்தப்போக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, “வயிற்றில் இருந்த கரு கலைந்து விட்டது..”, என அனாசியமாய் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் அந்தப் பெண் மருத்துவர்.
அதிர்ந்து நின்ற குடும்பத்தினருக்கு, “ஆமாம் கருவே தான், இரண்டு மாதங்கள் முடிந்த நிலை.. உங்களுக்குத் தெரியாதா?..”, என்று வாதிட்டார் அவரோ.
எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்தவர்கள் தரணியின் கருவின் காரணம் புரியாமல் குழம்பி நின்றனர்.
அலைபாயும் கண்களில் குறும்புத்தனம் மின்ன எதையோ செய்தபடி துறுதுறுவென ஓடிக்கொண்டிருக்கும் தங்கள் மகள் சிறிது நாட்களாகவே சோர்ந்திருப்பது இதனால் தானா என்று புலம்பித் தீர்த்துவிட்டார் சாந்தா, ஜீவாவின் அன்னை.
வடிவேலனுக்கும் ஒன்றும் புரியவில்லை.
"என் தம்பியின் குடும்பம் மறைந்து, அவர்களின் பெயர் சொல்ல இருக்கும் ஒற்றை மகளுக்கும் ஏன் இந்த கதி?..", என்று நினைத்து மனம் வருந்தினார்.
"உங்க தம்பி குடும்பம் மட்டுமாங்க? என் தங்கச்சி குடும்பமும் தானே? என் தங்கையோட நினைவா மிச்சம் இருக்கற ஒரே அம்சம் தரணி மட்டும் தானே?..", என்று சாந்தாவும் தன் பங்குக்குப் புலம்பித் தள்ளினார். சாந்தாவின் தங்கையைத் தான் வடிவேலனின் தம்பி மணமுடித்தார். அவர்கள் இருவருக்குமே ஒரே வாரிசு தரணி தான்.
“என்னங்க இது? இதை நான் நிச்சயம் எதிர்பார்க்கலைங்க. உலக விவரம் தெரியாத பொண்ணு. இப்பத் தான் கொஞ்சம் நாளா சந்தோஷமா எதோ வரைஞ்சிட்டு அது பாட்டுக்கு இருந்திச்சு. எல்லாம் இனிமே சரியாகிடும்னு நினைச்சேங்க. கண்ணுக்குள்ள பொத்திப் பொத்தி வச்சிப் பார்த்திட்டேங்க. எங்க போனாலும் ராணியம்மா துணையில்லாமல் அனுப்பியது இல்லையே? யாருங்க இந்த மாதிரி பொண்ணுக்குப் போய் துரோகம் பண்ண நினைச்சிருக்காங்க..”, தலையில் அடித்துக்கொண்டு அழுதார் சாந்தாவோ.
வேரோடு பிடிங்கிப்போட்ட பச்சைக்கொடியாய் அளவுக்கதிகமான ரத்தம் விரயமான அசதியில், அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த தரணியைப் பார்க்கப் பார்க்க அவர் மனம் ஆறவில்லை.
“இதை நானும் எதிர்பார்க்கலமா. யார்மேல தப்புன்னு தெரியல. இது தப்புங்கிறதைப் புரிஞ்சிக்கிற அளவு கூட நம்ம பொண்ணுக்கு அறிவு வளரலையேமா? எப்படி இந்தப் பொண்ணை தப்பாப் பார்க்கத் தோணுச்சு? மனுஷ மிருகமா அவன்?..”
“அப்பா மனுஷ மிருகமா இல்லை மிருகங்களான்னு தெரியல? நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவங்கதான். நான் இதை இப்படியே விடப்போறதில்லை. இதுக்குக் காரணமானவங்களை என் கையால வெட்டிக் கண்ட துண்டமா போட்டாத்தான் என் தங்கச்சிக்கான நியாயம் செய்ததா நான் நம்பறேன்..”
தங்கையின் கைகளைப் பிடித்தபடி கண்ணீர் சொரிந்த ஜீவானந்தன் திடீரென்று ஆவேசமாக எழுந்து கொண்டான்.
“ஏன்னடா சொல்ல வரே ஜீவா? ஒருத்தனில்லையா? அப்படின்னா? அய்யோ நினைக்கவே பயமா இருக்கு?..”, அலறினார் சாந்தா.
அவரின் அலறலில் உடல் தூக்கிவாரிப் போட்டு தரணி அசைய, அவள் கைகளைப் பிடித்து அமைதிப்படுத்தியவன், தரணியின் கேர்டேக்கர் ராணியம்மாளை அவளருகே அமரச் சொல்லிவிட்டு வெளியேற, அவனைத் தொடர்ந்தனர் பெரியவர்களும்.
“தம்பி, நிச்சயம் நான் நம்ம பாப்பாவை நல்லாத்தான் பார்த்துக்கிட்டேன். சின்னக் குழந்தையா இருக்கிறப்பலிருந்து இவளை நான் பார்த்துக்கறேன்பா. எங்க தவறு நடந்துச்சுன்னு எனக்கும் தெரியலப்பா. என் கவனக்குறைவால தானே இதெல்லாம். என்னை மன்னிச்சிடுங்க..”
கூப்பிய ராணியின் கைகளை விடுவித்தவனோ, “ராணிமா. உங்க மேல எந்தத் தப்பும் இல்ல. என் அம்மாவுக்கு அடுத்து உங்களை நான் முழுமனசா நம்பறேன். எப்படியோ தப்பு நடந்து போச்சு. இனிமேல்தான் இவளை இன்னும் ஜாக்கிரதையாப் பார்த்துக்கணும். திரும்பவும் எதையாவது செய்யத் துணிவாங்க. நாம் கொஞ்சம் கவனமாவே இருக்கணும். இனி நீங்க அவ கூடவே இருங்க. வெளிய விஷயம் பரவாமல் மட்டும் பார்த்துப்போம்..”, என்று சொல்லிவிட்டு தரணியின் அறையிலிருந்து வெளியேறினான் ஜீவா.
அவனைத் தொடர்ந்தனர் வடிவேலனும், சாந்தாவும்.
அமைதியாய் அவன் அறைக்குள் நுழைந்த ஜீவானந்த், கனத்த இதயத்தோடு கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கண்களை இறுக மூடிக் கொண்டான். அவனைப் பின் தொடர்ந்து அவன் அறைக்குள் சென்று அமர்ந்தனர் பெரியவர்களும்..
சற்று நேரம் அங்கே அமைதியாய்ப் பொழுது கழிந்தது.
“தம்பி எனக்குத் தெரியும், நீ உங்க தாத்தா மாதிரி. என் மாமனாரைத் தான் சொல்லறேன். அவரும் இப்படித் தான் இருப்பாரு. மனசில் இருக்கிறதை வெளியே சட்டுன்னு சொல்லிட மாட்டார். எதாவது கேட்டா, என் கவலை, என்னோடு போகட்டும் என்று சொல்லி விடுவார். அழுத்தம் ஜாஸ்தி. ஆனா, செயல்ன்னு வந்துட்டா முடிக்காமல் விட மாட்டார். ரொம்ப வைராக்கியமானவர். நீயும் அப்படித் தான் கண்ணா. ஆனா, அதுக்காக எப்பவும் அவரை மாதிரி இருக்க முடியாதே. என்ன செய்யலாம் சொல்லுப்பா. இதை இப்படியே தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு விட்டுடுவோமா, இல்லை இதற்குக் காரணமானவங்களைத் தேடி. நம்ம பொண்ணு வாழ்க்கைக்கு ஏதாவது..”
சாந்திமதி அடுத்துப் பேசத் தயங்க. ஜீவாவே தொடர்ந்தான்.
“மேலே சொல்லுங்கம்மா. இதுக்கு காரணமானவங்களைத் தேடி நம்ம தரணிக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறமா? இதுவா உங்க கேள்வி? அதெப்படிம்மா உடனே இப்படி யோசிக்க முடியுது? காலம் காலமா, கெடுத்தவனை அந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிற நியாயம் எந்தவிதத்தில் சரி, சொல்லுங்க..”
சாந்திமதி அமைதியாய் மகனைப் பார்த்தார். அவன் கேட்பதில் இருந்த நியாயம் புரிந்தாலும், ஒரு தாயாய் அதற்கு மேல் அவரால் யோசிக்க முடியவில்லை.
ஜீவாவோ தாய்க்கும் மேல் யோசித்தான். தன் கருத்தை முன் வைத்தான். பெற்றவர்களுக்குப் புரிய வைத்தான்.
“இல்லம்மா, இது நியாயமாகாது. ஒரு பெண்ணோட சம்மந்தம் இல்லாமல் அவளை அடையறவன், நிச்சயம் நீச்சகுணம் கொண்ட அரக்கன் தான். அவனுக்கு நம் வீட்டுப் பெண்ணை கல்யாணம் செய்து வைப்பது அல்ல அவனுக்கான தீர்ப்பு. அதெல்லாம் பழங்காலப் பஞ்சாயத்துத் தீர்ப்பு. இப்போ இங்கே அது சரி வராது. கூடவும் கூடாது. அதுக்காக அவனை அப்படியே விட நினைக்கல நான். சுலபமாத் தப்பிக்க முடியாதுப்பா.. இன்னொரு பெண்ணை அவன் மனசால கூட நினைக்கக் கூடாது, அதுக்கு என்ன வழின்னு பார்க்கணும்?..”
“என்னப்பா பண்ணப் போறோம்?..”, வடிவேலன் மகனைக் கேள்வியுடன் பார்த்தார். அடுத்து என்ன செய்யலாம் என்று அவருக்குமே குழப்பமாய் இருந்தது. மகன் என்ன செய்தாலும், அதற்கு உதவியாய் இருப்போம் என்று தீர்மானித்தார்.
“பண்ணத்தான் போறேன். அவளுக்கு எங்கு இந்த அநியாயம் நடந்ததோ அங்கே போய் குற்றவாளியைத் தேடப்போறேன்..”
“தேடிக் கண்டுபிடிச்சி போலீஸ்ல ஒப்படைக்கப் போறியா?..”
அப்பாவியாய்க் கேட்கும் தன் அன்னையை எண்ணி இவனுக்கு பரிதாபம் தான் ஏற்பட்டது. போலீசுக்குப் போனால் என்ன நடக்கும் என்று தெரியாதா என்ன?
“போலீஸ் எல்லாம் சரி வராதுமா.. இனி அவனோ, இல்லை அவர்களோ எந்த பெண்ணையும் நினைக்க மாட்டாங்க மா. விடுங்க, நான் இதைப் பார்த்துக்கறேன். நீங்க, தங்கச்சியை நல்லாப் பார்த்துக்கங்க. அது போதும். அவளுக்குக் கிடைக்க வேண்டிய நியாயத்தை நான் பார்த்துக்கறேன்..”, என்றவன் தான் வெளியே செல்வதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டான். பெற்றவர்களுக்கும் வேறு எதுவும் சொல்ல விழையவில்லை.
தரணியே ஒரு குழந்தை. அவளுக்கு ஒரு குழந்தை வந்திருக்கிறது என்று நினைக்கும் போது அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இதற்குக் காரணமான அந்த ஈஸ்வரை வெட்டிச் சாய்க்க முடிவெடுத்தான். ஆம், இதற்கு காரணமானவன் ஈஸ்வர் தான் என்று முழுதாய் நம்பினான். நிச்சயம் ஈஸ்வருக்குத் தெரியாமல் இந்த நிகழ்வு நடந்திருக்க முடியாது என்று எண்ணினான்.
தன் தங்கை தரணி தங்கள் வீட்டைத் தவிர எங்கும் செல்வதில்லையே. எங்கு சென்றாலும் ராணியம்மாளோ, அவன் தாய் சாந்திமதியோ கூடவே செல்வார்கள் தானே! அப்படியிருக்க, கடந்த சில மாதங்களாக அவள் தனியாகச் சென்ற இடம் ஈஸ்வரின் ஆஸ்ரமம் தான். அங்கே கூட ராணியம்மா வெளியே காருடன் காத்திருப்பார்கள்.
அதிலும் சமீபமாக அவள் படித்த கோர்ஸ் முடிந்து அவள் இந்த இரண்டரை மாதங்களாக எங்கும் செல்வதில்லை. கடந்த சில நாட்களாக அவள் சோர்ந்து தான் இருந்தாள். அவளின் நோய் காரணமாக அவள் அப்படி இருப்பது வழமை தான் என்று வீட்டினரும் அவளை எப்பொழுதும் போல உற்சாகப்படுத்திக் கொண்டு தான் இருந்தனர். அவளை வேறு எதாவது படிக்க வைக்கலாம் என்று இவன் முன்னுரைந்தமைக்கும், அவனின் அன்னை சாந்தா, கொஞ்சம் நாள் போகட்டும், அவளுக்கு உடம்பு சோர்வாக இருப்பதாக சொல்லித் தடுத்திருந்தார். அதன் பின், இவனுமே தன் பணியில் பிசியாக இருந்ததில் அவளைச் சரியாக கவனிக்கவில்லை. எல்லாம் சரியாகிவிடும் என்று எப்பொழுதும் போல எண்ணியிருந்தான்.
ஆனால், திடீரென்று இப்படி ஒரு நிகழ்வு. அப்படியென்றால் அவளுக்கு அங்கேதான் இந்தக் கொடுமையான நிகழ்வு நடந்திருக்க வேண்டும். அங்கே தானே காவேரியும் இருக்கிறாள்?
'காவேரி.. காவேரி உனக்குக் கூடவா இது தெரியவில்லை? உன் ஆஸ்ரமத்தில் நடக்கும் இந்த அவலங்கள் எல்லாம்? என்ன நடக்கிறது அங்கே? எப்படி நாசம் செய்யத் துணிந்தார்கள் இப்படி ஒரு அப்பாவிப்பெண்ணை ?'
அதற்கு மேல் யோசிக்காமல் நேராக காவேரியின் வீட்டில் நியாயம் கேட்க நின்றிருந்தான். சாந்திமதி, "நம் வீட்டுப் பெண்ணும் இதில் பாதிக்கப் படுவாள், எதுவாக இருந்தாலும் பார்த்து செய்" என்று சொன்னதை இவன் காதில் போட்டுக் கொள்ளத் தயாராக இல்லை. வடிவேலன் மகனுக்கு ஆதரவாகத் தான் நின்றார்.
இங்கே, காவேரி வீட்டில், அவன் கூறிய குற்றச்சாட்டைக் கேட்டு எல்லோருமே அதிர்ச்சியில் பேச்சற்றுப் போக, ஈஸ்வர் தான் தன்னை முதலில் சுதாரித்துக் கொண்டான்.
“மிஸ்டர் ஜீவா, என்ன உளறல் இது? எங்க ஆஸ்ரமத்தைப் பத்தி என்ன தெரியும்னு நீங்க இப்படி அபாண்டமாப் பழியை போடறீங்க? இப்ப என்ன வேணும் உங்களுக்கு?”
“ம். பழியா? உண்மையைச் சொன்னா பழி போடுவது போலத் தான் இருக்கும் குருஜி. என்ன வேணுமா எனக்கு? என் தங்கச்சிக்கு நியாயம் வேணும்?”
“ஹலோ என்ன சுத்த முட்டாளா இருக்கீங்க? உங்க தங்கச்சிக்கு நியாயம் வேணும்னா போய் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெயிண்ட் கொடுங்க. எங்களை வந்து கேட்டா? இது என்ன நியாயம் விக்கிற கடையா என்ன? உன் தங்கச்சியே ஒரு பைத்தியம்? அந்தப் பைத்தியம் எவன் கிட்ட ஏமாந்து நின்னுச்சோ?..”, வாயை விட்ட ஈஸ்வரின் தம்பி சங்கர், ஜீவா விட்ட அறையில் வாயை மூடி பொத்திக்கொண்டு திகைத்து நின்றான்.
விஷயம் விபரீதமாவதைக் கண்ட காவேரிக்கும் ஜீவானந்தனின் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவன் தங்கை தரணிக்கு நடந்த கொடுமையை கேட்டவளுக்கு உண்மையில் அதிர்ச்சியாய்த் தான் இருந்தது.
விபரமறியாப் பெண்ணுக்கு இப்படி ஒரு கொடுமையா எனப் பரிதவித்துப் போனாள். ஜீவாவிடம் ஆறுதலாய்ப் பேசலாம் என்று அவனை நெருங்கியவள், தேவையில்லாமல் ஆஸ்ரமத்தின் மீது பழியைப் போடும் ஜீவா, ஈஸ்வரின் நடத்தையையும் அசிங்கமாக விமர்சித்து சங்கரின் மேல் கை ஓங்கியதில் அவளுக்குமே கோபம் வந்தது.
அவன் ஈஸ்வர் மீதும், அவனின் ஆஸ்ரமத்து மீதும் பழியை சுமத்த, இவளுக்குமே இப்பொழுது கோபம் வந்தது. போதாக்குறையாய், சங்கர் மீது கை ஓங்கவும், ஜீவாவை முறைத்தாள்.
“வாயை மூடு சங்கர் நீ. இன்னொரு வாட்டி என் தங்கச்சியைத் தப்பாப் பேசின, இனி உனக்கு பேச வாய் இல்லாமல் பண்ணிடுவேன். ராஸ்கல், உங்க ஆஸ்ரமத்தில் என்ன நடக்குதுன்னு கூட தெரியாத அப்பாவியா நீ? நீயும் தானே அங்க போற? நல்லாவே போலி சாமியார் வேஷம் போடறான் உங்கண்ணன். குருஜீயாம், குருஜீ? இதுல அவளுக்கு சப்போர்ட்டாப் பேச மாதாஜி ஒண்ணு தான் பாக்கி. தப்பு செஞ்சவனை தட்டிக் கேட்காமல், என்னை முறைக்க வேறு செய்யறா அவ..”, என்று தன் முஷ்டியை மடக்கிக் காற்றில் குத்து விட்டான் ஜீவா.
அவன் கோபத்தைக் கண்டு பயந்து நின்றனர் அனைவரும்.
“ஜீவா, ப்ளீஸ் கொஞ்சம் நிதானாமா யோசிங்க. நிச்சயம் தரணிக்கு இப்படி ஆகிடுச்சுன்னு கேட்டு எனக்கு மனசெல்லாம் பதறுது. விவரம் தெரியாக் குழந்தைங்க அவ. அவளைப் போய் நாசம் பண்ணி இருக்காங்களே! யார் செஞ்சிருந்தாலும் அவங்களுக்குக் கடவுள் தண்டனை தருவாங்க. நாமும் கண்டுபிடிக்கலாம். நிச்சயம் எங்க ஆஸ்ரமத்துல தான் நடந்திருக்கும்னு எப்படி சொல்லறீங்க ஜீவா? வேறு எங்காவது, உங்க வீட்டுல இருக்கும் போது..”, மெல்ல அவனை சமாதானப்படுத்த முயன்றாள்.
“நானும் இதைத்தானே சொல்ல வந்தேன் காவேரி? இவர் வேணும்னே தகராறு பண்ண வந்திருக்கார். இவருக்கு நம்ம ஆஸ்ரமத்தை எப்பவும் பிடிக்காது. அதுக்காக இந்த வீண்பழி. நம் பெயர் கெட்டுப் போகுமில்லையா? அதோடு நீயும் இவரைக் கல்யாணம் பண்ண சம்மதிக்கல. எல்லாம் சேர்த்து வைச்சி இப்படிப் பழி போட நினைக்கிறார் போல. அந்த தரணி பொண்ணுக்கு நடந்ததுக்கு நாம் தான் காரணம் என்று உளருகிறார் பாரு. நீயாவது அவருக்குப் புரியும்படி சொல்லிப் பாரு.. கொஞ்சம் கூடப் பொறுமை இல்லாமல் பேசுகிறார்..”
காவேரி அப்படியும் இருக்குமோ என்று ஈஸ்வரையும், ஜீவாவையும், சங்கரையும் மாறி மாறிப் பார்க்க, ஜீவாவிற்கோ அவளின் நம்பாமையில் கோபம் இன்னும் கிளர்ந்தது.
“இதப் பாரு காவேரி, நான் ஒண்ணும் சங்கர் சொன்னாப் போல உளறல. அபாண்டமாப் பழியும் சுமத்தல. ஆதாரத்தோடு தான் நான் இப்ப நியாயம் கேட்டு நிக்கறேன். என் தங்கை உங்க ஸ்கூலுக்கு மட்டும் தான் வந்து போனாள். வேறு வெளியுலகத் தொடர்பே இல்லை. நிச்சயம் என்னால அதை நிரூபிக்க முடியும். எங்க வீட்டு சீசீ டிவி காமிரா எல்லாமே அத்தாட்சியா சாட்சி சொல்லும். உங்க ஆஸ்ரமத்துல தான் ஏதோ நடந்திருக்கு. வீட்டைத் தவிர அவ அங்க வந்து போனா. எனக்கு இப்ப நியாயம் வேணும். இதுக்குக் காரணமானவன் யார்ன்னு தெரிஞ்சாகணும். கண்டுபிடிக்க ஒத்துழைக்கலைன்னா, நிச்சயம் நான் ஈஸ்வர் மீது போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்க வேண்டி வரும்..”, என மிரட்டினான்.
“தம்பி நீங்க சொல்லறது எல்லாமே சரியாத் தான் இருக்கு. ஆனா, போலீசெல்லாம் வந்தா தேவையில்லாப் பிரச்சனை தானே வரும். உங்க வீட்டுப் பெண்ணுக்கும் பாதிப்பு தானே. என்ன நடந்ததுன்னு முதல்ல சரியாத் தெரிஞ்சிப்போம். தப்பை சரி பண்ணப் பார்ப்போம்..”, கமல்நாத் தன் ஆதரவைக் கொடுத்தார்.
“மாமா, என்ன சொல்ல வர்ரீங்க, அப்ப நீங்க என்னையும், காவேரியையும் நம்பாத மாதிரி இல்ல இருக்கு. இவர் போலீசுக்கு போனா நாம உடனே பயப்படணுமா? நம்ம குடும்பப்பெயர் இல்லை அசிங்கமாகும்?..”
“அப்பா, கொஞ்சம் இருங்க, நான் ஜீவா கிட்டப் பேசறேன். ஈஸ்வரத்தான், நிச்சயம் நம்ம பக்கம் தப்பு இருக்காது. ஆனாலும், நீங்க மௌனமாவே இருந்தா உங்க மேல தான் தப்பாத் தெரியும்..”, என்றவள்..
“ஜீவா, ப்ளீஸ் நீங்களும் கொஞ்சம் கோபப்படாமல் நான் என்ன சொல்ல வர்ரேன்னு கேளுங்களேன்..”
“ஏய் காவேரி, என்னைக் கோபப்படுத்தாதே. நிஜம்மா உனக்குக் கொஞ்சமாவது மூளையிருக்கா? நேர்வழியில போகணும்னு சொல்லற அறிவு இப்ப எங்க போச்சு? அன்னிக்கே நான் உனக்குப் படிச்சிப் படிச்சி சொன்னேன் தானே? ஏதோ உங்க ஆஸ்ரமத்துல சரியில்லைன்னு. தேவையில்லாமல் கண்டவங்க நடமாட்டமெல்லாம் உன்னோட ஸ்கூல் பக்கமா இருக்குன்னுனு வார்ன் பண்ணினேன் தானே? பிறகு இது எப்படி நடக்கும் சொல்லு? உன் ஈஸ்வர் அத்தானின் மௌனமே சொல்லுது அத்தனையும் பொய் தான். இன்னுமா புரியல உனக்கு. உன்னை இந்த சாமியார் நல்லாப் பேசி பேசி மயக்கி வைச்சிருக்கான்..”, என்றவன்,
“காவேரி, முட்டாளா நீ? நீயும் ஒரு பொண்ணு தானே? ஒண்ணும் தெரியாத அப்பாவிப் பெண்ணை இப்படி நாசமாக்கி அவளுக்குக் குழந்தையை கொடுத்து. கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா? உன் மழுங்கிப் போன புத்தியை கொஞ்சம் யூஸ் பண்ணேன். உன்னைப் போய் எனக்கானவள்னு நினைச்சேனே?..”, உணர்ச்சிவசப்பட்டான் ஜீவாவோ.
தன்னைப் புரிந்து கொள்ள மறுக்கிறாளே என்று அவனுக்கு ஆயாசமாய் வந்தது.
அதற்கு மேல் வார்த்தைகள் வர மறுக்க ஜீவானந்தனின் குரல் கமறியது. கை முஷ்டிகள் இறுக, கண்களை இறுக மூடி தன்னை சமன்படுத்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தான்.
காவேரியால் அவன் வருத்தத்தைக் காண முடியவில்லை. உள்ளம் பதறியது. அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மையாய் தோன்றியது. விரைந்து அவனருகே ஓடி அவன் கைகளை பிடித்துக்கொண்டாள். மூடிய விரல்களை பிடித்து நீவிவிட்டாள்.
இரண்டு நாட்களாக தன்னுள் இறுகி இருந்தவனுக்கோ, தன்னவள் கை தொடுகையில் மயிலிறகாய் அவன் நெஞ்சத்தில் இருந்த இரணம் உறுகி கரைவதாய்த் தோன்ற, மெல்ல அவள் கைக்குள் தன் கையை பொருத்திக் கொண்டான்.
“காவேரி, நீ என்னை நம்பற தானே?..”, என்றான் மென்மையாய்.
‘ஆம்’ என்றவள், வார்த்தைகளில் சொல்லவில்லை என்றாலும், தலையாட்டி அவனை ஆறுதலாய்ப் பார்த்தாள்.
“ஸாரி ஜீவா. எனக்கு என்ன சொல்லறதுன்னு தெரியல. எங்கோ தப்பு நடந்துருக்குன்னு புரியுது. ஆனா, அது எங்க ஆஸ்ரமத்திலா? இல்லை என் பொறுப்பில் இருக்கும் என் ஸ்கூலிலா? தெரியல ஜீவா. நிச்சயம் இதுக்கு நியாயம் கிடைக்கணும். நான் உங்களுக்கு இதில் உறுதுணையாய் இருப்பேன்..”, அவன் கைகளை மேலும் இறுகப் பற்றிக் கொண்டாள்.
“இது என்ன கூத்து? அண்ணா, இந்தப் பொண்ணு அப்ப அவனை நம்புதா? அவன் கையைப் பிடிச்சி ஆறுதல் வேறு சொல்லி.. அப்ப என் ஈஸ்வர்? என்ன நடக்குது இங்க? கண்றாவி.. விட்டா இவன் சொல்லறது எல்லாம் சரின்னு இல்ல ஆகிடும்?..”, ஹேமா அலறினாள்.
“அய்யோ, இவர் என்ன வார்த்தை சொல்கிறார்? இந்த அபாண்டக் குற்றச்சாட்டை கேட்கவா கடவுள் என்னை உயிரோடு வைச்சிருக்காரு. இதுக்காகவா நான் இத்தனை வருஷம் பாடுபட்டேன்? என் ஆஸ்ரமத்தில் இப்படி ஒரு குற்றச்சாட்டா? நிச்சயம் இருக்க முடியாது? கடவுளின் சன்னிதானம் ஈஸ்வரின் ஆஸ்ரமம். வாழ்வியலை போதிப்பவன் மேல் பழியைச் சுமத்துகிறானே? காவேரி மாதா, தாங்களும் இதில் உடன்படுகிறீர்களா? தங்களுக்குத் தெரியாதா நம் ஆஸ்ரமத்தின் மதிப்பு? இந்த அப்பாவி தேவையில்லாமல் நம்மை அழிக்க நினைக்கிறான். அதற்கு தாங்களும் ஒப்புவது போல இருக்கிறதே! இவன் பொய்யன்..”
ஈஸ்வர் ஆத்திரத்துடன் இறைய, காவேரியோ இப்பொழுது குழம்பிப் போனாள். சட்டென ஜீவாவைப் பிடித்திருந்த கைகளை விட்டாள்.
“டேய் காசா, ஆரம்பிச்சிட்டியா உன் பொய் பித்தலாட்டத்தை. எங்கக்காவுக்கு இனி புத்தி வேலை செய்யாது. அவளே இப்பத்தான் புத்திக்கு வேலை கொடுத்திருக்கா..”, ஹரீஷ் வெளிப்படையாகவே சத்தமாக வார்த்தைகளை விட்டான்.