அத்தியாயம் 22
மெடிகல் என்று குறியிடப்பட்டிருந்த அறையிலிருந்து வந்த டாக்டர். ரஞ்சித்தைப் பார்த்த ஜீவாவிற்கு வியப்பு.
"ஹேய் ரஞ்சித். நீ எங்கே இங்கே. இதுவரை இங்கே உன்னைப் பார்த்ததில்லையே?..", என்று வியப்பாய்க் கேட்டவனைப் பார்த்து சிரித்த ரஞ்சித்,
"ஆமாம் ஜீவா. நானே தான். உனக்கு எங்கே என்னையெல்லாம் இங்கே தெரியப் போகுது அதான் உன் திருஷ்டியெல்லாம் கர்நாடகாப் பக்கம் இருக்கே..”, என்று காவேரியை ஜாடையாகக் குறிப்பிட்டான்.
"எனக்கு தமிழ்தேசத்தின் சோழவளநாடு தான் ரொம்பப் பிடிக்கும் ரஞ்சித். போகட்டும் விடு.. நீ என்ன செய்யறே இங்கே? உன் அப்பா இந்த ஜாயிண்ட் வென்சரில் இருக்கார். நீயும் இதில் சேர்ந்துட்டியா?"
"ஏன் கூடாதா? நல்ல ப்ரொஜெக்ட். இப்போ பெரிய லெவல்ல விரிவடைஞ்சிருக்கு. இங்கே ஒரு சின்ன சுகாதார நிலையம் வைக்கணும். ஒரு பத்துப் படுக்கைகள் கொண்ட மருத்துவ மையம் சின்ன அளவில் ஆரம்பிச்சிருக்கார் ஈஸ்வர். நிறைய வெளிநாட்டுக்காரங்கள்ளாம் வந்து தங்கறாங்க இல்லையா? கொஞ்சம் நட்சத்திர அந்தஸ்துடைய மருத்துவமனையை நிறுவணும்னு திட்டம். இங்கேயே ஃபிசியோ, யோகா, மத்த மனநல கவுன்சலிங், என்று நிறைய துறைகளை கவர் செய்யறமாதிரி, ஒரு பன்முக மருத்துவமனைதான் எங்க அடுத்த இலக்கு..”
“இப்பவும் கூட, எங்க பேனல்ல இருக்கிற சில மருத்துவர்கள் இங்கே தங்களோட பணியைச் செய்யறாங்க. நானும் அப்படித் தான். எதாவது எமர்ஜென்சி கேஸ் வந்தா அந்த சமயத்தில் நான் இருந்தால் பார்ப்பேன். இங்கே வரும்போது தான். மத்தபடி மொத்த மருத்துவ நிர்வாகமும் என் கையில் இருக்கு இங்கே..”, என்று சொல்லிவிட்டு,
"சரிப்பா, நான் கிளம்பறேன். இன்னிக்கு ஒரு அர்ஜெண்ட் மீட்டிங்க் இருக்கு எங்க ஹாஸ்பிடலில்..", என்றவன், கையை அசைத்துவிட்டுச் சென்றுவிட்டான்.
தமிழகத்தின் மிகப்பெரிய பங்கு சந்தை மற்றும் பெரிய அளவு திட்டங்களுக்கான முதலீட்டாளரின் மகன், மற்றும் அவன் தந்தையின் நண்பரின் மகன் என்கிற அளவில் தான் ரஞ்சித்தைத் தெரியும் ஜீவாவிற்கு. மேலும் ரஞ்சித் அமெரிக்காவிலேயே வெகுநாட்கள் தங்கிப் படித்து வந்ததில் அந்த அளவுக்குப் பரிச்சயம் இல்லாவிட்டாலும் கூட ஓரளவுக்குத் தெரிந்தவன் தான். மேலும் வடிவேலவனுக்கு நெருங்கிய நண்பர் தான் ரஞ்சித்தின் தந்தை. நிறைய புராஜெக்டுகளுக்கு, ஆரம்ப நாட்களில் முதலீடு செய்திருக்கிறார் ரஞ்சித்தின் தந்தை கனகராஜின் பரிந்துரையின் பேரில். ஆனால் பின்னர் ஏனோ அவருக்கு கனகராஜின் கொள்கைகளில் பெரிய சம்மதம் இருக்கவில்லை. அதனாலே ஒதுங்கிவிட்டார்.
ரஞ்சித்தின் சற்றே தாராளக் கொள்கைகளெல்லாம் ஜீவாவிற்கு ஒத்து வராததால் எப்போதும் ஒதுங்கிவிடுவான். ஒரே கிளப், சுற்றுவட்டம் என்று மிகவும் பரிச்சயமானவர்களாம். அதிலும் அவன் தாயும் ரஞ்சித்தின் தாயும் ஒரே ஊர்க்காரர்கள் என்று கொஞ்சம் அதிகமாகவே நெருக்கம் காட்டுவார்கள். ரஞ்சித்தின் சகோதரி ரஞ்சனாவை ஜீவாவிற்குப் பார்க்கலாம் என்று கூடப் பேச்சு இருந்தது ஒரு காலத்தில். ஆனால் ஜீவாவின் மனம் வேறு பக்கம் திரும்பியதில் ரஞ்சித் குடும்பத்தவர்களுக்கு வருத்தமே. பணம் பணத்துடன் சேர வேண்டும் என்கிற கொள்கை ரஞ்சித்திற்கு எப்போதும் உண்டு. அதனாலேயே ஜீவா மேல் கொஞ்சம் பொறாமையும், போகுமிடத்திலெல்லாம் அவன் செல்வாக்கைக் கண்டு காழ்ப்புணர்ச்சியும் கொஞ்சம் அதிகமாகவே உண்டு என்றாலும் கூட வெளியில் காட்டியதில்லை.
வெகு சிலருக்கு மட்டுமே அவன் ஆழ்மனதின் அழுக்குகள் கொஞ்சம் போலத் தெரியும்.
மேலும், முக்கியமாக ரஞ்சித்தின் அப்பாவும் சற்றே பணத்தாசை பிடித்தவர் என்பதினாலேயே அவர் இருக்கும் எந்தத் தொழிலிலும் முதலீடு செய்வது வடிவேலவனுக்கு சற்றும் பிடிக்காது. அதனால் தான் முதலிலேயே ஈஸ்வரின் இந்த திட்டத்தில் பங்கேற்க அவர்கள் விரும்பவில்லை.
உல்லாசமாய் நடந்து கடந்து போன ரஞ்சித்தை ஏற இறங்கப் பார்த்தபடி நின்றவனைக் கலைத்தது காவேரியின் குரல்.
"ஹலோ, என்னவோ விவரம் வேணும், உண்மை தெரிஞ்சாகணும்னு சொல்லிக்கிட்டு இருந்தா மட்டும் போதாது சார். போங்க போய் உங்களுக்கு என்ன தேவைங்கிறதை, ஆசிரமத்து செகியூரிடி டிபார்ட்மெண்டுக்குப் போய் கேட்டுக்கோங்க. நான் அவங்க கிட்ட நீங்க கேட்கிற எல்லா டீடெயில்சும் கொடுக்கச் சொல்லியிருக்கேன். இப்போ நான் கொஞ்சம் போகணும்?..", என்று சொல்லிவிட்டு அவன் முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தாள் பதிலுக்காக.
ஒரு வித விசித்திரக் கசப்பான முறுவலுடன் அவள் பக்கம் திரும்பியவன்,
"இதைத்தான் எருதின் வலி காக்கைக்குத் தெரியுமான்னு சொல்வாங்க போல? எனக்கென்னன்னு நீ இருக்க. அதுவும் சரிதான் உனக்கெங்கே புரியப் போகுது.. நான் பாத்துக்கறேன்..", என்றவன், அலுவலகத்தினுள் சென்றான். அதற்குமேல் தாமதிக்காமல் அங்கிருந்த அலுவலர்களிடம், ஏதோ கேட்க அவர்களும் தயங்காமல் அவன் கேட்டதையெல்லாம் முடிந்தவரை எடுத்துக் கொடுத்தனர்.
ஒரு மணிநேரம், வருவோர் போவோர் பட்டியல், சந்தேகத்தின் பேரில் வீடியோ க்ளிப்பிங்க்ஸ். சி.சி.டி.வி ஃபுடேஜ் என்று அனைத்தையும் பட்டியலிட்டு வாங்கிக் கொண்டவனுக்கு, அதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்று குழப்பமாக இருந்தது.
அலுவலக அறையிலிருந்து வெளியே வந்த சங்கர், “காவி, உன் ஃப்ரெண்டுக்கு என்னென்ன வேண்டுமோ எடுத்துக் கொடுத்தாகி விட்டது. இனி அவர் பாடு. இந்த நிறுவனத்தின் பெயர் கெடுவதற்கு ஒருபோதும் ஒத்துக்கொள்ள முடியாது என்பதைத் தெளிவாக சொல்லிவிடு அவரிடம்..”, என்று காவேரியிடம் எரிச்சலாகப் பேசிய சங்கர், அங்கே ஜீவா இருக்கிறான் என்பதைக் கண்டுகொள்ளாமல் வெளியேறினான்.
சற்று நேரத்தில் அங்கே ஒரு நாற்காலியில் அமர்ந்தவண்ணம் எதையோ படித்துக் கொண்டிருந்த ஜீவாவை, ஒரு குரல் அழைத்தது. பார்த்தால் ஈஸ்வரின் பர்சனல் செகரட்டரி, நின்றிருந்தாள்.
“என்ன?”
“குருஜி உங்கிட்ட என்னவோ தனியாப் பேசணும்னு சொல்லறார்..”, என்றாள்.
“சரி. எங்கே போகணும்?..”
“நேரே லெஃப்ட் திரும்பினா, லாஸ்ட் காட்டேஜ்”, என்று வழி சொல்லியவள் அங்கிருந்து அகல, ஜீவாவும் ஈஸ்வரைத் தேடிச் சென்றான்.
அதே சமயம் ஏதோ ஃபோன் கால் வர, அதற்கு பதிலளிக்கச் சென்றிருந்தாள் காவேரி.
ஜீவாவைக் காணாமல் திகைப்புற்று சுற்றும் முற்றும் நோக்கியவளை வெறுப்புடன் பார்த்தன சங்கரின் விழிகள்.
“என்ன சங்கி. முறைக்கிறே!”
“போ காவேரி. கொஞ்சமாவது அண்ணா பேரில் பாசம் நேசம் இருந்திருந்தா இப்படி இந்த ஜீவாவை இங்கே கூட்டி வந்திருப்பாயா? அவ்வளவு பெரிய நேசம் இல்லை. அதிலும் உனக்கும் அண்ணனுக்கும் நிச்சயம் வேறு செய்திருக்கிறது..”
சாட்டையாய் வார்த்தைகளை சொடுக்கிய சங்கரை முறைத்த காவேரி..
“இதெல்லாம் நீ பேசாதே. எப்படி வேணுமானாலும் வாழலாம்கிற கொள்கை அவருக்கில்லை. இப்படித்தான் வாழணும்னு ஒரு கோடு மாதிரி கொள்கையைப் பிடித்துக் கொண்டு முன்னேறுகிற அவரைப் பற்றிப் பேச உனக்குத் தகுதியில்லை. அதிலும் உன் சேர்க்கை சுத்தமாக யாருக்கும் வீட்டில் பிடிக்கவில்லை என்று தெரிந்தும் கூட ஒரு சிலருக்கு நீ சொம்பு தூக்குகிறாய் என்பது எல்லாருக்கும் தெரியும் சங்கர். அதனால் நீ பேசாதே..”, என்றவள் திரும்பியும் பாராமல் அங்கிருந்து அகன்று சென்றாள்.
அவள் அங்கிருந்து சென்றவுடன் தன் செல்லை எடுத்து யாரையோ அழைத்த சங்கர், “இதோ பார். விஷயம் வெளியே கசியத் தொடங்கியாகிவிட்டது. நீ தான் இனி உஷாராக இருக்கணும். இதில் இந்த ஆசிரமத்தின் பெயர் துளி கெட்டால் கூட நான் அவ்வளவுதான் தெரிஞ்சிக்கோ. என் மாமனே என்னை வெட்டி வீசிவிடுவார். ஏதோ நீ திட்டம் போடுகிறாய் என்று தெரிந்தும் அதை நான் அவர்களிடம் ஏன் சொல்லவில்லை என்று கொன்றே போட்டுவிடுவார் என் மாமா. பெயர் வெளியே துளியும் கெடக்கூடாது என்பதில் அனைவருமே ஒரு கட்சி என் வீட்டில். ஏன் நானுமே கூட அப்படித்தான். நீ இந்த மாதிரியெல்லாம் திட்டமிடுவாய் என்பது தெரியாமல் உன்னை இங்கே நுழைய விட்டதும் தவறுதான்..”, என்று அடிக்குரலில் புலம்பிக் கொண்டிருந்தான் சங்கர்.
சங்கருக்கு மனதெங்கும் திகில் அப்பிக் கிடந்தது. ஒரு சின்னச் சறுக்கல்தான். ஆனால் அவன் குடுமி இப்போது வேறொருத்தன் கையில். என்னதான் சொந்த சகோதரன் என்றாலும் கூட ஈஸ்வரின் ப்ரெயின் சைல்ட் எனப்படும் ஞானக் குழந்தையல்லவா அந்த ஆசிரமம்? அதில் இவன் பெருக்கலாம், துடைக்கலாம் ஆனால் சொந்தம் மட்டும் கொண்டாட முடியாதே? தன்னுடைய ஆன்மீக வாழ்வின் அடுத்த வாரிசு என்று இப்போதைக்கு ஈஸ்வர் யாரையும் வளர்த்துவிடும் வயதில் இல்லையே? இந்த நிலையில் இவன் எப்படிப் பெரிய கார்ப்பரேட் தொழிலதிபன் ஆவது? அதற்குத் தான் அந்தக் கேடுகெட்டவனிடம் உதவிக்குப் போனதே? ஆனால் திடீர்த் திருப்பமாய் பல்வேறு நிகழ்வுகள்!. இப்போது தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்துக் கொண்டு திரிகிறான் சங்கர்.
அந்தப் பக்கத்தில் இருந்தவன் காதில் இதெல்லாம் எங்கே விழுந்தது? அவன் தான் இவன் புலம்பத் தொடங்கியதுமே லைனைக் கட் செய்துவிட்டானே!
*********
லைனின் அந்தப்பக்கத்தில் இருந்தவன், ராவாக ஒரு பெக் ஸ்காட்சை அடித்தபடி, ஸ்னூக்கர் விளையாடிக் கொண்டிருந்தான். எதிர்முனையில் அவன் நண்பன் ஒருவன், ஏத்திவிட்டபடி நின்றிருந்தான்.
"என்னடா. சைலண்டாகிட்டே!. "
"செ எல்லாம் அந்த மெண்டல் பொண்ணைப் பத்தித் தான். எனக்கே தெரியலைடா. அன்னிக்கு எப்படியோ ஸ்லிப் ஆகிட்டேன். ஜீவாவைப் பிடிக்காது தான், அவனை என் காலடியில் விழவைக்கணும்னு தான் யோசிச்சேன். ஆனால். இப்படி பிள்ளையார் பிடிக்கக் குரங்காகிப் போனது.. போயும் போயும் அந்தப் பைத்தியத்தை அப்படிச் செய்யணும்னு நான் யோசிக்கலைடா..”
அவன் செல்வாக்கிற்காக அவன் பின்னால் சுற்றும் அந்த நரிக் கூட்டத்தின் நரி ஒன்று, "இதெல்லாம் ஒரு விஷயமா? அதான் எவிடென்சே இல்லாம எல்லாம் செஞ்சிட்டயே.. ஒரு கல்லில் ரெண்டு மாங்கா. ஜீவாவும் காலி, ஈஸ்வரும் காலின்னு செஞ்சிட்டியே. நீ கில்லாடிடா. பைத்தியம்னாலும் நல்ல வாளிப்புடா.. அன்னிக்கு ஜாலியாத் தானே இருந்தே.. ஃபிரஷ்ஷான சின்ன குட்டிடா..”, என்று கேலியாய் ஏற்றிக் கொடுத்தது.
"ம்ம்.. அதுவும் சரிதான். அப்படித்தான் நினைச்சேன். ஆனா அந்த ஈஸ்வர் நல்லவனா மாறுவான்னு நான் நினைக்கலை. எப்பவும் அவனுக்கு பணம் தான் குறின்னு நினைச்சேன். ஆனால். கொஞ்சம் கால்குலேஷன் எரர். ஆனால் எந்தக் கொம்பனாலும் கண்டுபிடிக்கமுடியாது நான் செஞ்சதை..”, என்றவன் சட்டென்று நரியின் பக்கம் திரும்பி,
“இந்த ரூமிலிருந்து வெளியே போனா நீ எப்படி இருக்கணும்ங்கிறது தெரியும்னு நினைக்கிறேன். ஒரு சின்னப் பிசகு கூட. ம்கூம். ஏதாவது வெளியே வந்தது, அடுத்த நொடி உன் உயிர் உனக்கில்லை..", என்று சொல்லிவிட்டு ஆட்டத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்த பார்ஸ்டூலில் அமர்ந்தபடி மீண்டும் தாகசாந்தி செய்து கொள்ளத் தொடங்கினான்.
அவன் கண்களில் தெரிந்த உக்கிரத்தையும் வெறியையும் பார்த்த நரியின் முதுகெலும்பில் லேசாய்க் குளிரெடுக்கத் தொடங்கியதோ?