அத்தியாயம் 23
அன்று காலையில் இருந்தே ஈஸ்வரின் ஆஸ்ரமம் பரபரப்பாய் இருந்தது. வழக்கம் போல வாழ்வியல் கலையை போதித்த ஈஸ்வரை, ஆஸ்ரமத்தைச் சுற்றிப் பார்க்க வந்த ஒரு பெரிய மனிதர் சில கேள்விகளைக் கேட்டுத் திணறடித்துக் கொண்டிருந்தார். ஈஸ்வரும் சலிக்காமல் அவருக்கு பதிலளித்துக் கொண்டிருந்தான்.
“ஈஸ்வர் குருஜி, அப்போ நீங்க என்னதான் சொல்ல வரீங்க? பகவானை நமஸ்கரிப்பதை விட, இங்கே வாழ்வியலை முறைப்படி பேணுதலே சிறந்தது என்று சொல்லுகிறீர்களா? பகவானின் நாமத்தை உச்சரிப்பதைவிட, நம் வாழ்க்கை முறை முக்கியமா என்ன?..”
சமீப காலமாக ஆஸ்ரமத்தில் அவனை ஈஸ்வர் சுவாமிகள், ஈஸ்வர்ஜி, குருஜி என்று அனைவரும் அழைக்கத் தொடங்கி இருந்தனர். ஈஸ்வருமே அதனை மறுத்தளிக்காமல் மௌனித்திருந்தான். ஈஸ்வரைப் போல அல்லாது, காவேரியோ காவேரி மாதா என்றழைப்பதில் உடன்பாடு இல்லாததில் அவனிடம் முறையிட,
"ஒருவரைப் பெயர் சொல்லி அழைப்பதோ, அல்லது மரியாதையுடன் அவர்களை உயர்ந்த இடத்தில் வைத்து அதற்கேற்ப அழைப்பதோ அவரவர் விருப்பம்" என்று, அவனைக் கேள்வி கேட்ட காவேரிக்கு ஒரு முறை பதிலளித்திருந்தான்.
அதன் பின்னர் காவேரியுமே தன்னை யார் எப்படி அழைத்தாலும் அதைப் பெரிதுபடுத்தாமல் இருந்தாள்.
சமீப காலமாய் ஈஸ்வரின் பல நடவடிக்கைகள் மாறுபட்டிருக்க, ஈஸ்வரின் இதற்கான பதில் என்னவாயிருக்கும் என்று ஆவலாக அங்கே நின்று கொண்டிருந்தவர்கள் போல், காவேரியும் அதை அறிவதற்காக உன்னிப்பாக அவனைக் கவனித்தாள்.
ஈஸ்வர் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான். பின்னர், கணீரென்று தன் கனத்த குரலில் பேசத் தொடங்கினான்.
“நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் பதிலளிக்கிறேன்..”, என்றவன்,
“ஒரு முறை, பரமாச்சாரியாரைத் தரிசிக்க வந்த ஒரு வைணவர், கோரிக்கை ஒன்றை வைத்தாராம்”, என்று சொல்லத் தொடங்கினான்.
‘‘சுவாமி.. தினமும் ஆழ்வார்களின் ‘திவ்யப் பிரபந்த’ பாடல்களைப் பாராயணம் செய்ய விரும்புகிறேன். ஆனால், நேரமின்மையால் தவிக்கிறேன். 4,000 பாசுரங்களை பிழிந்தெடுத்த மாதிரி, ஏதாவது ஒரு பாடல் இருக்கிறதா.. அதைச் சொன்னால் நன்றாக இருக்குமே..”, என்றாராம்.
அதற்கு, கலகலவென சிரித்த சுவாமிகள், ''பார்வதிதேவி ஒரு முறை சிவனிடம், எந்த ஒரு நாமத்தை சொன்னால் விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களையும் சொன்ன பலன் கிடைக்கும் எனக் கேட்டாள். 'ராம' நாமத்தை சொன்னாலே போதும்” என பரமசிவனும் பதிலளித்தார்.
'ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சகஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே' என்ற சகஸ்ரநாம ஸ்தோத்திரம் தான் சிவன் சொன்ன பதில். நீ கேட்ட கேள்வியும் அது மாதிரி இருக்கு' என்றாராம்..”
அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம், இதை எதற்கு இப்பொழுது ஈஸ்வர் சுவாமிகள் சொல்ல வருகிறார் எனக் குழம்பி அந்த பெரிய மனிதர் கை கட்டி வாய் மூடி மற்றவர்களுடன் காத்திருக்க, ஈஸ்வர் அடுத்து என்ன சொல்ல போகிறான் என காவேரியும் கூட காத்திருந்தாள்.
''ஆழ்வார்களில் நிறைய பாடல்கள் பாடியவர் திருமங்கையாழ்வார். அவர் பாடாத விஷ்ணு கோயில் என்றாலே, அது சமீபத்தில் கட்டப்பட்டதாக இருக்கும். அவருடைய பாசுரம் ஒன்றில் 'நாராயணா' என்ற திருநாமத்தின் பெருமையை சொல்கிறது.
''குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும்
அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.''
'நாராயணா என்ற ஒரு சொல்லைக் கண்டு கொண்டால் போதும். அதன் மூலம் எல்லா நலன்களும் வாழ்வில் உண்டாகும்' என்கிறார் ஆழ்வார். நேரமில்லாத போது இந்த ஒரு பாசுரம் போதும். நேரமிருந்தால் மற்ற பாசுரங்களையும் பாராயணம் செய். ஆனால், ஒருபோதும் 'நாராயண' மந்திரத்தை மறக்காதே என்று கூறி ஆசியளித்தார்..”
“கோவிந்தா ஹரி கோவிந்தா!”
“அவ்வளவுதான், அந்த நாராயணன் நாமத்தை நாம் சொல்வது மட்டும் போதாது, அவர் நாமத்தைச் சொல்வதோடு உன் வாழ்க்கையையும் சேர்ந்து அந்த பகவானோடு ஒன்றி வாழ்ந்து பார் என்று இங்கே நான் சேர்த்து போதிக்கிறேன். எவன் ஒருவன் தன் வாழ்வைச் சரியானபடி வாழ்கிறானோ அவன் அந்த நாரயணன் நாமத்தை சொல்வதைவிட அதிகப் பேறு பெற்றவன் என்று சொல்கிறேன்.. அன்பு செய்வோம். நம் வாழக்கையை மகிழ்ச்சியோடு வாழ்வோம்..”, என ஈஸ்வர் கைகளைக் கூப்ப, அங்கே குழுமியிருந்த பெருமனிதர்கள் கூட்டம் எதுவோ புரிந்தது போல கைகளைத் தட்டி ஆராவரித்தது,
“ஈஸ்வரானந்த சுவாமிகள் சரணம்..”, எனக் கைகூப்பித் தொழுதனர்.
கூட்டம் கலையத் தொடங்க, காவேரிக்கோ அவன் கருத்தில் ஏனோ உடன்பாடில்லை போல் நின்றாள்.
“ஈஸ்வர், அப்படியென்றால் பகவான் கோவிந்தனின் நாமத்தை சொல்வதை விட நம் வாழ்வியல் முறை சிறப்பானதா?.. இது சரியில்லையே!..”, எனக் கேள்வி எழுப்பினாள்.
“காவேரி, நான் அப்படிச் சொல்ல வரவில்லை. அந்த கோவிந்தனின் நாமத்தைச் சொல்ல மறந்தாலும், உங்கள் வாழ்க்கையை சரியானபடி வாழ்ந்தாலே அந்த பகவானின் அருள் கிட்டும் என்று சொல்ல வந்தேன். அந்தப் பெரிய மனிதருக்கு என் பேச்சு புரிந்தது. அவ்வளவு தான். செய்வன திருந்தச் செய். அது அந்த தெய்வத்தைத் தொழுவதை விட சாலச் சிறந்தது..”, என முடித்து விட்டான்.
சரியாக அந்த சமயத்தில் ஜீவா உள்ளே வந்தவன், “எல்லாம் சரிதான் ஈஸ்வர் சுவாமிகளே!, எல்லாவற்றையும் சரியாகச் செய்யும் நீங்கள் எங்களுக்கான நீதியை சரியாக வழங்கவில்லையை? வாழ்க்கையை வாழுங்கள் என்று சொல்வது சரி. ஆனால், வாழவே தொடங்காமல் வாழ்க்கையை இழந்து நிற்கும் என் தங்கைக்கு உங்கள் பதிலென்ன சொல்வீர்களா?”
ஜீவாவின் கேள்விக்குப் பின்னால் தொக்கி நின்ற கிண்டலை ஈஸ்வரும் கண்டு கொண்டான். ஆனாலும், தயங்காமல் பதிலளித்தான்.
“ஜீவா, நிச்சயம் இதற்கான பதில் இங்கே இல்லை. என்னாலான அனைத்தையும் செய்தாயிற்று. என் தம்பி சங்கரிடம் உனக்கு உதவச் சொல்லியிருந்தேனே!. இன்னுமா உன்னால் அறியமுடியவில்லை?..”
“சாட்சியங்கள் எல்லாம் மறைக்கப்பட்டிருக்கின்றன..”
“இங்கே பாரு ஜீவா, உனக்கும் எனக்கும் நடுவில் எந்த பகையுமில்லையே! காவேரியை நீ விரும்பினாய். ஆனால் அவளோ எனக்கு நிச்சியக்கப்பட்டு திருமணம் வரை இப்பொழுது வந்தாயிற்று.. அவ்வளவுதான், நம் இருவருக்கும் நடுவில் அவள் ஒருத்தி மட்டுமே! அதற்காகவெல்லாம் நான் உன்னைப் பகையாய் நினைக்கவில்லை. நீ புரிந்து கொள். சாட்சியங்களை இங்கே தேடுவதை விட, நீ ஏன் தொலைத்த இடத்திலே சென்று தேடக் கூடாது?”
“ஈஸ்வர், அதைத் தானே இங்கே வந்து தேடுகிறேன். எனக்கான பதிலை உங்கள் ஆஸ்ரமம் தந்துவிட்டால் நான் ஏன் திரும்பத் திரும்ப இங்கே வரப் போகிறேன்? இந்த திசைப் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டேனே..”, என்றவன்.
“நம் இருவருக்கும் நடுவில் காவேரி இல்லை, அதை நீ நினைவில் வை. காவேரியின் விருப்பம் அவள் யாரை மணப்பதென்பது. அந்தப் பேச்சு இனி வேண்டாம்..”, காழ்ப்புடன் பேசிய ஜீவா, அங்கே நின்றிருந்த காவேரியைக் கண் எடுத்தும் பார்க்கவில்லை.
அவன் வார்த்தைகளில் முகம் சுருங்கிய காவேரியையும் அவன் கண்டுகொள்ளவில்லை.
“நல்லது ஜீவா, காவேரியை இனி விடுவோம். நிச்சயம், உனக்கான பதில் இங்கே கிடைக்கப் போவதில்லை. திரும்பவும் சொல்லறேன், தொலைத்த இடத்தில் உன் பதிலைத் தேடு. அது ஏன் இங்கே என்று நீ நினைக்கறே, ஏன் உன் வீடாகவே இருக்கலாமே!”, என்றவன்,
“சாரி, எனக்கு நேரமாச்சு. ஆஸ்ரமக் கணக்கு வழக்குகளைப் பார்க்க வருவதாக சொல்லி இருக்கிறேன். நான் கிளம்பணும். காவேரி போகலாமா?..”, என்றபடி ஜீவாவிடம் தலையாட்டிவிட்டு அங்கிருந்து நகர, காவேரியும் அவனைத் தொடர்ந்து நடந்தாள்.
தன்னை வெறிக்கும் கண்களுக்கு சமாதானம் சொல்லும் நிலையில் அவளுமே இல்லை. ஜீவாவுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்று அந்த நாராயணனின் நாமத்தைத் தனக்குள் மறக்காமல் பிரார்த்திக்கொண்டாள் பேதை காவேரி.
************
காவேரியின் வீட்டில்.
பெண் என்பவள் சமையலறையோடு நிற்கக் கூடாது என்பதில் ஹரிநாத் உறுதியாய் இருந்தார். அதனாலேயே அவ்வீட்டுப் பெண்கள் சுதந்திரமாய் இருந்தனர். தங்களை எதோ ஒரு வகையில் புகுத்தி, தங்கள் குடும்பத் தொழிலில் பொறுப்பெடுத்துக்கொண்டனர்.
அவ்வீட்டு இளைய தலைமுறையினரோ தாங்கள் தலையெடுத்தவுடன் தனியாக எதோ ஒரு தொழிலை எடுத்துக் கொண்டு வெற்றிகரமாய் நடத்தத் தொடங்கியதில் கடந்த சில வருடங்களாக மகிழ்ந்திருந்தவர், இப்பொழுதோ தன் பேரன் பேத்திகளின் நடவடிக்கைகளில் வெறுத்துப் போயிருந்தார்.
தன் பேரன், பேத்திக்குத் திருமணம் முடிவாகி இருந்தது. எல்லாம் சரிதான். ஆனால் அதற்கு மேல் எவ்வித முன்னேற்றமும் இல்லையே!
இன்று அதற்கு ஒரு முடிவெடுக்க வேண்டும் என்று கமல்நாத்திடம் வாதாடிக் கொண்டிருந்தார்.
கமல்நாத்திற்குமே தந்தையின் கருத்தில் உடன்பாடே. பிள்ளைகளின் வாழ்வில் ஏற்றம் கண்டு பெருமை கொண்டவர், தன் மகளின் வாழ்க்கை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது கவலையை வரவழைத்தது. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் மகளையோ தன் மருமகனையோ வற்புறுத்த முடியாமல் திணறிக் கொண்டிறுந்தார்.
தன் தந்தை எடுத்துக் கொடுத்ததும் அவரும் பிடித்துக் கொண்டார்.
சில நாட்களாக ஈஸ்வர் செய்யும் செயல்கள் எல்லாம் அவருக்குப் புதிராகவே விளங்கின.
அவன் நல்ல சாமர்த்தியசாலி என்பதை அவர் அறிவார். கூடவே பொறுப்பாய்த் தன் மகளுக்கு நல்லதொரு ஆசானாகவும் இருப்பவன், சமீப காலமாய் ஒதுங்கிப் போவதாய் அவருக்குப் பட்டதில் அவர்கள் இருவருக்குள்ளும் எதோ சரியில்லை என்பதை உணர்ந்தவர், அவர்களைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார். தன் மகள் மனதில் ஏனோ இத்திருமணத்தில் ஒதுக்கம் தெரிவதில் அவள் ஜீவாவைக் காதலிக்கிறாளோ என ஐயம் கொண்டவர், விரைந்து அவள் திருமணத்தை ஈஸ்வருடன் முடித்து விட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.
சரியாக அந்த சமயத்தில் காவேரியும், ஈஸ்வரும் வீட்டுக்கு வர, ஈஸ்வரிடம், தன் தந்தையைத் தொடர்ந்து பேச்சை வளர்த்தார்.
“ஈஸ்வர் உன் ஆசைப்படி ஆஸ்ரமம் ஓரளவுக்கு இப்ப நல்லாவே நடக்குது. சந்தோஷம் தான். ஆனா, அத்தோடு தேங்கி நிக்கக் கூடாதில்ல. வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்குப் போகணும்ப்பா..”
"மாமா நீங்க சொல்ல வர்றது புரியாமலில்ல. எனக்கும் காவேரிக்கும் எங்க கல்யாணம் நடக்கறதுல விருப்பம் தான். ஆனா, காவிக்கு இன்னும் இதில் தெளிவு வந்தா மாதிரித் தெரியல"
ஈஸ்வரின் பதிலில் தன் மகளைப் பற்றி ஐயம் கொண்டது உண்மையாகி விட்டதோ என்று மனதுள் பயந்தவர்,
"என்ன மாப்பிள்ளை இப்படிச் சொன்னா எப்படி? திருமண நாள் குறிக்கல, சரிதான் ஆனா அடுத்த மாசத்துக்குள்ள உங்க இரண்டு பேர் கல்யாணத்தை முடிச்சிடலாம்னு இருக்கோம். இப்பப் போய் அவளுக்குத் தெளிவு இல்லைன்னு சொன்னா? பாப்பா என்னமோ ஈஸ்வர் சொல்ல வராப்பல. எதுக்கு இப்படிப் பேசறான்? நீ எதையாவது சொன்னியா?..”
மகளை நேரடியாகவே முறைத்தார்.
காவேரியோ வார்த்தைகள் வர மறுக்கத் தலை குனிந்தாள்.
"மாமா, காவேரி கிட்ட பதிலை தேடினாப் பிரயோஜனமில்ல. என் மேல குற்றச்சாட்டு வைச்சிருக்கு. அதுக்கு நான் சரியா பதிலளிக்காமல் உங்க பொண்ணு கையைப் பிடிச்சா சரி வராது..”
"டேய் என்னடா நீ? அப்ப அந்த ஜீவாவுக்கு காவேரியைக் கல்யாணம் பண்ணித் தரச் சொல்லப் போறியா?..", ஈஸ்வரின் அன்னை ஹேமா எகிறினார்.
"அம்மா இந்த ஈஸ்வர் குற்றமற்றவன்னு நிரூபிக்கப்படணும். அப்புறம்தான் எங்கள் கல்யாணமெல்லாம்.."
"அப்படின்னா நாம தான் தப்பு செஞ்சா மாதிரி ஆகுது அண்ணா. அந்த ஜீவா இன்னிக்குக் கூட நம்ம ஆஸ்ரமத்துக்கு வந்து கொடஞ்சிட்டு இருந்தான். என்னமோ அவன் வீட்டுப் பெண்ணை நாம தான் எதோ செஞ்சதா சொல்லிட்டுத் திரியறான். இனிமேல் அவனை ஆஸ்ரம் பக்கம் சேர்க்காதிங்க. பிரச்சனையாப் போயிடப் போகுது. விட்டா நானே அந்த காரியத்தை செஞ்சேன்னும் சொன்னாலும் சொல்லுவான்..", என்று திடீரென்று உளறினான் சங்கர்.
சங்கரின் திடீர்த் தலையீட்டில் ஒரு நிமிடம் மெளனமாய் நின்ற ஈஸ்வர் அவனை நிதானமாக அளவிட, சங்கரோ தன் வாயால் தவளையும் கேடும் என்ற நிலையை எண்ணி தானே வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டதில் தன்னையே நொந்து கொண்டான்.
“என்ன பேச்சு சங்கர், ஜீவா அப்படிப்பட்டவரில்ல. இன்று என்னிடமும் தான் அவர் பேசினார். பாதிக்கப்பட்டது அவர் தங்கை. அதுவும் மனநிலை சரியில்லாப் பொண்ணு. அவர் கோபமும் நியாயமே.. குற்றவாளியை கண்டு பிடிப்பதில் நம்மால் ஆன உதவியை நிச்சயம் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு, உன்னையே கீழே இறக்கிப் பேசி ஜீவாவையுமில்ல அசிங்கமா பேசறே. தப்பு சங்கர். அவருக்கான நியாயத்தை நாமும் தேட உதவணும்.. அதுதான் நம் ஆஸ்ரமத்திற்கு நல்லது..”
சங்கர் மௌனமாய்த் தலை குனிய, ஈஸ்வரோ.
“சங்கர் இனி ஜீவா என்ன உதவி கேட்டாலும் மறுக்காமல் செய்யப் பாரு. அவரை ஆஸ்ரமத்துக்குள்ள வர வேண்டாம்னு சொன்னா, குற்றத்தை நாம் மறைக்கப் பார்க்கிற மாதிரி ஆயிடும். மடியில கனமிருந்தாத் தான் பயப்படணும். நம்ம மேல தப்பில்லைங்கிற போது, எதுக்கு நமக்கு பயம்..”,
“ஆனாலும், உன்னோட ஃப்ரெண்ட்ஸ் சர்கிள் மேல நிறைய கம்ப்ளெயிண்ட்ஸ் இப்பல்லாம் வருது. அவர்கள் ஆஸ்ரமத்துக்குள்ள வந்தா அந்த வேலையை மட்டும் பார்க்கச் சொல். தேவையில்லாமல் ஸ்கூல் பக்கமெல்லாம் போக வேண்டாம். அவர்களுக்கு அங்கே என்ன வேலை?..”, எனத் தம்பியையும் கண்டித்தான்.
“அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், இப்ப எங்களுக்கு என்ன பதில் மாப்பிள்ளை? கல்யாணத் தேதியை குறிச்சிடலாமா?..”, கமல்நாத் தன் காரியத்தில் குறியாய் வினவ..,
“மாமா, நாள் குறிச்சிடுங்க. நிச்சயம் ஜீவாவுக்கு அதற்குள் பதில் கிடைச்சிடும்னு நான் நம்பறேன். காவேரியும் என்னைப் புரிஞ்சிட்டு முழுமனசோடு கல்யாணம் செய்யணும். அப்பொழுதான் எங்கள் வாழக்கை சிறக்கும். யார் மனசையும் வருத்தி நான் காவேரியைக் கல்யாணம் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை..”
“என்ன காவி, நான் சொல்லறது உனக்கும் சரிதானே?..”, என்று தனக்கானவளிடம் சம்மதம் கேட்டவன் மனதிலோ ஏனோ எகப்பட்ட குழப்பங்கள்.
ஆமாம் என்பது போல காவேரி தலையசைக்க, மகளின் சம்மதத்தில் கமல்நாத் இனி திருமண நாள் குறிக்கச் சொல்ல வேண்டும் என்று தன் பெற்றவர்களோடு திட்டம் போடத் தொடங்கினார்.
போட்டு வைத்த திட்டங்கள் எல்லாம் ஓ.கே ஆகுமா என்ன?