அத்தியாயம் 3
ஜீவாவின் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தவளுக்கு அப்போதும் கூட படபடப்பும் கோபமும் அடங்கியபாடில்லை.
‘சே என்ன மாதிரி மனிதன் இவன்! இவனிடம் உதவி என்று கேட்டுக் கொண்டு வந்து விட்டால் இப்படித்தான் கல்யாணத்துக்குக் கேட்பானா? இவனெல்லாம் இந்த சமுதாயத்தில் பெரிய ஆள் என்று போற்றப்படுகிறான்! கேடு தான் இந்த நாட்டுக்கு..’,
என்று மனதில் நினைத்ததை வாய்விட்டே சொல்லிக் கொண்டிருந்தவளுக்கு அப்போது தான் உறைத்தது, தான் ஒன்றும் தன்னுடைய வீட்டில், அம்மாவின் உணவை சுவைத்துக் கொண்டு, காரசாரமாய் டைனிங்கில் விவாதித்துக் கொண்டிருக்கவில்லை என்று..
நட்ட நடு வீதியில் அவனின் அந்த பிரம்மாண்டமான அலுவலகத்தின் வாயிலில், செக்கியூரிட்டிகள் வினோதமாய் அவளைப் பார்த்தபடி நின்றிருக்க, அப்போது தான் உறைத்தது.
பார்த்துக்கொண்டிருந்த செக்யூரிட்டியைப் பார்த்து, “என்ன?” என்று வெடுக்கென்று கேட்டவளைப் பார்க்கவே பயந்து முகத்தைத் திருப்பிக் கொண்டான் அவன். மனதில், 'கீழ்பாக்கம் கேஸ் போல, அதான் தொரத்தி விட்டுட்டாங்க போல' என்று நினைத்துக் கொண்டு வாய் மூடி மௌனியானான்.
அவளைப் பிக்கப் செய்வதாக சொல்லியிருந்த ஈஸ்வர் சரியாக அந்தச் சமயத்தில் வந்து சேர, கார் கதவைத் திறந்து முன்னே அமர்ந்தவள், அவள் முகத்தையே ஆவலாய்ப் பார்த்தபடி காரோட்டிக் கொண்டிருந்தவனை துளியும் லட்சியம் செய்யவில்லை.
பின்னர் அவனாகவே தான் கேட்டான்,
“காவுக் குட்டி..”, என்றவனைத் திருப்பிப் பார்த்து முறைத்தவள்,
“ஈஸ்வர், உனக்கு எத்தனை முறை சொல்வது? இப்படி காவுக்குட்டி கழுதக்குட்டின்னு எல்லாம் சொல்லாதேன்னு. எனக்கு இப்படிப் பேரை ஷார்ட்டாக் கூப்பிட்டா பிடிக்காதுன்னு தெரிஞ்சும் ஏன் இப்படி இம்சைப் படுத்தற?..”
"அதில்லைடா காவுக் குட்டி, சாரி சாரி. நீ போன இடத்தில் ஏதாவது கொஞ்சம் பிராப்ளமோன்னு தோணிச்சு, அதான் உன்னைக் கொஞ்சம் மலை இறக்கலாம்னு கூப்பிட்டேன்..”, என்றவன்,
“பெயர் என்பது ஒரு அடையாளம் மட்டுமே. உன்னுடைய உண்மையான சொரூபம் உன் ஆழ்மனதில் தான் இருக்கிறது, பெயரில் இல்லை. இதில் உன் பெயரைச் சுருக்கியோ, நீட்டியோ எப்படி அழைத்தால் என்ன? உன் நற்செயல்கள் தான் உன்னை அடையாளப்படுத்துமே அன்றி, உன் பெயரல்ல..”, என்று சாந்தமாய் மொழிந்தான்.
ஏனோ மீண்டும் அவளுக்கும் அந்த உணர்வு. ‘அவனுடைய உணர்வுகள் மறைக்கப்பட்ட அந்த முகமும், சடாரென்று தன்னை மாற்றிக் கொள்ளும் விதமும், வித்தியாசமான சாந்தசொரூபமும், அவனின் நிஜம் முகமல்ல’ என்று அவளுக்கு மனதில் முணுமுணு என்றது.
ஆனால், மொத்த உலகமும் அவன் பெரிய புத்தரின் அடுத்த அவதாரம் என்று தானே பேசுகிறார்கள்? இத்தனைக்கும் அவன் ஒன்றும் பெரிய வயதினன் இல்லை. அவளை விட ஏழு ஆண்டுகள் மூத்தவன். முப்பது வயதானவன். அவர்கள் வீட்டினரால், கோபமும், சட்டென்று உணர்ச்சிவசப்படும் சுபாவமும் உடையவளான காவேரிக்கு, அவளைப் பக்குவமாக வழிநடத்த என்று தேர்ந்தெடுக்கப்பட்டவன் தான் ஈஸ்வர்.
ஈஸ்வர் அவளின் சொந்த அத்தை மகன். அவர்களுடையது ஒரு பெரிய கூட்டுக் குடும்பம்.
காவேரியின் தந்தை கமல்நாத்துக்கும், அவர் மனைவி அம்ருதாவிற்கும் இரண்டு பிள்ளைகள், மூத்தவள் காவேரி இருபத்து மூன்று வயது காரிகை, இளையவன், ஹரீஷ். இருபத்தி இரண்டு வயது வாலிபன். தற்போது பிசினெஸ் மேனேஜ்மென்ட்டில் மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறான். இன்டர்ன்ஷிப் செய்வதற்காக அவர்கள் சொந்த கம்பனியைத் தவிர்த்து விட்டு மற்ற இடங்களுக்கு மனு போட்டுக் கொண்டிருக்கிறான்.
கமல்நாத்திற்கு இரண்டு சகோதரிகள். ஹேமா மற்றும் பாமா. இருவருக்கும் இரண்டு இரண்டு மகன்கள்.
மூத்த சகோதரி ஹேமாவின் மகன் தான் ஈஸ்வரும், ஷங்கரும். அவர்கள் தந்தை கோபால்.
மற்றொரு சகோதரி பாமாவின் மகன்கள் வருண் மற்றும் தருண். காவேரியை விட வயதில் சிறியவர்கள். ஹரீஷின் வயதை ஒத்தவர்கள். அவர் கணவர் ராஜேஷ். பாமாவுக்குத் தன் மகன்கள் இருவரில் ஒருவராவது காவேரிக்கு மூத்தவனாகப் பிறந்திருந்தால், காவேரிக்குப் பார்த்திருக்கலாமே என்ற மனக்குறை உண்டு.
அந்த வீட்டின் ஒரே பெண்குழந்தை தான் காவேரி. அதிலும் அவள் தாத்தா பாட்டிக்கு மிகுந்த பெருமை. அதனாலயோ என்னவோ பாட்டி ரத்னாவுக்கும் தாத்தா ஹரிச்சந்திரனுக்கும், ஈஸ்வருக்கும் காவேரிக்கும் அதாவது தங்கள் பேத்திக்கும் பேரனுக்கும் எப்படியாவது திருமணம் முடித்துவிட்டால் போதும் என்ற ஆசை. சொத்துக்குள் சொத்து, சொந்தத்துக்குச் சொந்தம்.
கோடிகோடியாய் சொத்துக்களைச் சம்பாதித்து வைத்திருந்தார் கமல்நாத். அவரின் தந்தை செய்த சிறுதொழிலை, தன் மச்சான்களோடு சேர்ந்து பெருந்தொழிலாய் மாற்றியவரும் அவரே. டெக்ஸ்டைல் மற்றும் ரெடிமேட் ஆடைகளுக்கு, அதாவது காவேரி கார்மென்ட்சுக்குப் பெரிய பெயர் இன்று தொழிலுலகத்தில் உண்டு.
அதைத் தவிர மகள் காவேரியின் பெயரிலேயே நிறையத் தொழில்கள் உண்டு அவர்கள் வீட்டில். ஆனாலும் கூட காவேரி தானும் எதையாவது செய்து தன் பெயரைத் தனியாய்ப் பரிமளிக்க வைக்க வேண்டும் என்ற பேராவல் படைத்தவளாயிருந்தாள்.
அவள் தாய் கூட, "நீ ஏன் இப்படி என்.ஜி.ஓ அதற்கு, இதற்காக நிதி என்று திரிகிறாய்?..", என்று திட்டிக் கொண்டே தான் இருப்பாள்.
ஆனாலும் காவேரிக்குத் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வர வேண்டும் என்பதில் ஆர்வம் அதிகம். இதில் ஈஸ்வரும் ஒரு தொண்டு நிறுவனத்தை தனிச்சையாய் நடத்த அதில் இணைத்துக் கொண்டாள். ஆர்வம் மிக்க, பிறருக்கு உதவ நினைக்கும் பணக்காரர்கள் பலரைச் சந்தித்து, நிதி திரட்டும் பணியை அவளுக்குக் கொடுத்தான் அவன். பல்வேறு வழிகளில், முயற்சித்து, நல்ல கணிசமான பெருந்தொகையை அவர்களிடம் பெற்று, பல்வேறு வழிகளில் உதவுவது தான் அவன் நோக்கம்.
நோக்கம் என்னவோ நல்லது தான். ஆனால். அதற்கு அவன் பின்பற்றும் கொள்கைகள் கொஞ்சம் முரணாக இருக்கும் அவ்வளவுதான். காவேரிக்குள் ஏனோ ஒரு சிறு சஞ்சலம், ‘இந்தத் தொண்டு நிறுவனமே அவனது கார்ப்பரேட் ஆஸ்ரம பின்னணிக்கான முதல்படி தான்' என்று.
‘சே சே, அப்படியெல்லாம் செய்ய மாட்டான் ஈஸ்வர். தப்பாக யோசிக்கக் கூடாது.’ தன்னையே குற்றம் சாற்றிக் கொண்டாள்.
“என்ன குட்டிம்மா. நான் பேசிட்டே இருக்கேன் நீ பதிலே சொல்ல மாட்டேங்கிற?..”
“என்னத்தைச் சொல்லணும் ஈஸ்வர் அத்தான். இந்த கான்டாக்ட் சரி வராது. அவன் ரொம்ப எதிர்பார்க்கிறான் நம்மிடம்..”, என்றாள் தன் லேசாய்ச் சிவந்த முகத்தைத் திருப்பி ஜன்னலின் அந்த ஓரத்தைப் பார்த்தபடி.
அவனும் அவளைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.
“அப்படி என்ன கேட்டுட்டான் அந்த ஜீவா?..”
“ம்ம். என்னைக் கல்யாணம் செஞ்சிக்கணுமாம். கட்டிக் கொடுக்கறயா? போடா நீயும் உன் காசும். அப்படீன்னு வந்துட்டேன்..”, என்றாள் அலட்சியம் போல் காட்டிக்கொண்டு.
லேசாய் அதிர்ந்தாலும், எப்பொழுதும் போல் முகத்தை சலனமில்லாமல் ஆக்கிக் கொண்டு ”ஏண்டா. இதில் என்ன தப்பு? பிடிச்சாச் சொல்லு, நான் மாமா கிட்ட பேசறேன். உன்னை மாதிரி அழகான, புத்திசாலிப் பொண்ணைப் பார்த்தா எல்லாத்துக்கும் தான் பிடிக்கும். இதுக்காக, கோவிச்சிக்கிட்டு வந்துடறதா? சாரி. எனக்கு இஷ்டம் இல்லை என் விருப்பம் வேறன்னு நாசூக்காய்ச் சொல்லிட்டு, டீலை க்ளோஸ் செய்யவேண்டியது தானே?..”
‘இவன் என்ன சொல்ல வருகிறான்? விட்டால் இவனே எனக்கு திருமணம் முடித்து விடுவான் போல..’
அதிசயமாய் அவன் முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
‘சில நொடிகளுக்கு முன்னால் தான் யோசித்ததில் தப்பில்லை போல..’
அவளுக்குள் மீண்டும் ஒரு சலனம்.
‘இவனால் எப்படி இப்படி இருக்க முடியுது. ஏதோ திரை போட்ட மாதிரி மூஞ்சியை வச்சிகிட்டு இருக்கான். இதெல்லாம் சரியாப் படலையே. அன்னிக்கு தம்பி ஹரீஷ் சொன்னது அப்போ நிஜம் தானே. இப்ப இவன் பேச்சும் அதுக்குத் தகுந்தா மாதிரி வேற இருக்கு. வரவர இவன் ஏதோ கார்பரேட் சாமியார் ரேஞ்சுக்கு யோசிச்சுக்கிட்டு இருக்கான். அங்கங்கே பெரிய இடங்களை வளைச்சுப் போட்டுகிட்டு ஏதோ ஆஷ்ரமம் கட்டப் போறான்னு நம்பத் தகுந்த வட்டத்திலிருந்து செய்தி வந்ததாச் சொன்னானே? இருக்குமோ? இதுக்கு என்னைப் பயன்படுத்திக்கிறானோ’
சட்டெனத் தலையைச் சிலுப்பிக் கொண்டவள்,
“விடு அத்தான். எனக்குத் தெரியாதா என்ன? நான் நல்லா அவன் மூக்கை உடைக்கிற மாதிரி சொல்லிட்டுத் தான் வந்திருக்கேன். இவன் இல்லாட்டிப் போனா வேற யாராவது கிடைப்பாங்க. நம்ம கிட்ட இல்லாத பணமா. வரிக்காக அப்பாவே எவ்வளவோ செய்யறாரு. ஏன் உங்கப்பாவும் தான். நாம் எதுக்கு மத்தவங்களை இவ்வளவு எதிர்பார்க்கணும் சொல்லு. நானே அப்பா கிட்ட பேசறேன்..”, என்றாள் வெளியே.
என்னதான் இருந்தாலும், அவளின் அத்தை மகனாயிற்றே! விட்டுக் கொடுக்கப் பிடிக்காமல் பேசினாள்.
அவளைப் பார்த்து உணர்ச்சிகள் துறந்த ஒரு சிரிப்பை வீசியவன், “உன் வயசு உன்னை இப்படிப் பேசச் சொல்கிறது. நம்முடைய ஒவ்வொரு நாளும், நேரமும் ஏற்கனவே தீர்மானம் செய்யப்பட்டுத் தான் நாம் இங்கே மானிடனாய்ப் பிறப்பெடுக்கிறோம். எதுவுமே நாம் செய்வதில்லை. எல்லாமே அவன் செயல்.
அவன் ஆட்டுவிக்கிறான். நாம் அதன்படி ஆடுகிறோம். நம் விருப்பம் என்று ஒன்று இங்கேயில்லை. இன்று இப்படி நடக்க வேண்டும் என்று இருக்கிறது, நீ நடந்து கொண்டாய். அவனும் அப்படிக் கேட்டு நடந்து கொண்டான். அவ்வளவுதான்.
இந்த உலகில் காரண காரியமன்றி ஒரு செயலும் நடப்பது கிடையாதுன்னு காவேரி உனக்குத் தெரியுமா? இன்னிக்கு நீ அங்கே போனதும் அந்த ஈஸ்வரன் செயல், அவன் அப்படிக் கேட்டதும் அவன் செயல்..”, என்று அனாயசமாய் அடுத்த தத்துவத்தைச் சொல்லிவிட்டு இயல்பாய் வண்டியைச் செலுத்தினான்.
“ஈஸ்வரனா, யாரு உன்னைச் சொல்லறியா? இல்லை அந்த பரமேஸ்வரனை சொல்லறியா? என்ன விட்டா ஏதோ அந்த பரமேஸ்வரனின் ஏஜென்ட் தான் இந்த அடியவன் ஈஸ்வர்னு சொல்லுவ போல? வரவர உன் போக்கு விசித்திரமா இருக்கு. அப்படி பார்த்தால் அவன் கேட்டது சரின்னு சொல்லுவே போல இருக்கே அத்தான்.. சித்தன் போக்கு சிவன் போக்கா இருக்கு.. ஏதோ தப்பா படுது..”
அவளை ஆழ்ந்து நோக்கியவனோ, “சரியா, தப்பா, பல கேள்விகளுக்கு பதில் இங்கே கிடைக்காது பெண்ணே! கிடைத்தாலும் பலன் இருக்காது. நாந்தான் சொன்னேனே, மனித வாழ்க்கை என்பது ஏற்கனவே தீர்மானமான ஒன்று. நம் வாழ்க்கையும் நம் கையில் இல்லை. விதிப்படி நாம் நடக்கிறோம். அவ்வளவுதான். அந்த விதியை நாம் நேர்ப்படுத்த வழியிருந்தால் மட்டுமே அதுவும் நம்மால் செய்ய முடியும்..”
“அய்யோ அத்தான். என்னை விடுங்க, என்னால் முடிஞ்சதைச் செய்யறேன். நான் ஹேப்பியா சந்தோஷமா இருக்கணும்னு ஆசைப்படறேன். மத்தபடி, இதுதான் என் லைஃப்னு என்னாலே ஒரு முடிவுக்கும் இன்னும் வரமுடியலைன்னு தோணுது..”, என்று அவனிடமே வெகுளியாய் சொன்னவளை ஒரு விசித்திர முறுவலோடு நோக்கினான். மனதிலோ,
‘ஆஹா. அப்படியே ஆகட்டும்னு விட்டுடுவேன்னு நினைக்கிறியா! விதி வலியது கண்ணே’, என்று நினைத்தவன் அதற்குள் வீடு நெருங்க,
“இதைப்பற்றி அப்புறம் பேசுவோம், மாமா, தாத்தா எதிரில் பேச வேண்டாம். காவேரி, என் ஒவ்வொரு செயலுக்கும் காரிய காரணங்கள் இருக்கு. இப்போதைக்கு இதை விடு. நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன், நீ எப்பவும் போல நான் சொல்கிறதைச் செய்..”, என்று சொல்லிவிட்டு பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு வந்தான்.
அவனுக்குத் தலையாட்டியவளோ, எதையோ யோசித்தபடி வாயில் பக்கம் இருந்த பெரிய லானுக்கு நேராய்ச் சென்றவள், அங்கே அருகில் டென்னிஸ் கோர்ட்டில் விளையாடிக் கொண்டிருந்த தம்பியைப் பார்த்துக் கையசைத்தாள்.
அவனும் பதிலுக்கு கையசைக்கவும், ஐந்து நிமிடம் என்று அவனுக்கு சைகை செய்து விட்டு, புல்தரையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு யோசிக்கத் தொடங்கினாள்.
‘அதெப்படி மொத்த குடும்பத்துக்கும் இவந்தான் தனக்கு ஏற்ற மணவாளன் என்று யோசிக்கத் தோன்றியது. அப்படியானால் எனக்கு சாய்ஸ் கிடையாதா? என் மனசு இவங்களுக்கெல்லாம் ஒரு பொருட்டு இல்லை போல. இவங்க சொன்னா நான் கழுத்தை நீட்டணுமா?’
“ஹாய் சிஸ்..”, என்றவன், “என்ன ஆச்சு, சோக ரசம் பிழியற? அங்கே அந்த காசா. அதான் கார்பரேட் சாமியார், ஏதோ உர்ருன்னு போறான். புட்டுக்கிச்சா.. நான் தான் சொல்லறேனே.. இந்த வீட்டில, அப்பா அம்மாக்கு இதெல்லாம் பார்க்க டைமில்லை, அம்மாவும் பிசி, அப்பாவும் பிசி, ரெண்டு அத்தைங்க சாம்ராஜ்யம்தான். கூடவே கூஜாவா ரெண்டு புருஷனுங்க. இவங்க போட்ட கணக்கு தப்புன்னு உனக்குச் சொல்லறேன். நீ கேட்டால் தானே?..”, என்று படபடத்தான்.
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “டேய் சும்மாயிருடா. யாராவது கேட்டா விபரீதம். இன்னிக்கு அந்த ஜீவானந்த் கம்பனிக்கு ஃபண்ட் ரெய்சிங்கிற்காக போனேனா..”, என்று தொடங்கியவள், மளமளவென்று மொத்தத்தையும் சொல்லிமுடித்தாள்.
இப்போது மலைத்துத் திகைப்பது ஹரீஷ் முறையாகிப் போனது.
“என்னக்கா சொல்லறே. சூப்பர். நீ எஸ்கேப்பாக வழியை அந்த ஈஸ்வரனே காமிச்சிருக்காரு. சேச்சே பரமேஸ்வரனே காமிச்சிருக்காரு. சூப்பர் சான்ஸ். டோன்ட் மிஸ் இட். நான் நேத்திக்குத் தான் அங்கே என்னோட இன்டர்னுக்காக போனேன். அவர் நோ ரெக்கமெண்டேஷன் பாலிசிகாரர் போல. நான் என் ஃப்ரெண்டோட அப்பா வழியா போனேன். ஆனால், பயோடேட்டா பார்த்ததுமே மாட்டிகிட்டேன். அவரை மீட் செய்யவே முடியலை. நிச்சயம் எனக்குக் கிடைச்சிடும்..”, என்று சொல்லிவிட்டு ஆர்வமாய் சகோதரியை நோக்க,
“டேய் இதெல்லாம் ஒரு விஷயமா. என் லைஃபே ஒரு கேள்வியா மாறி இருக்கு. அவன் வேணாம்னாலும் விடமாட்டேன்னு பிடிவாதமாப் பேசறான்டா. எனக்கு கொஞ்சம் ஒரு மாதிரியா இருந்தது. அப்போதைக்கு ஒண்ணும் சொல்லாமல் கிளம்பிட்டேன். இதை அப்பாகிட்ட சொல்லணுமா வேணாமா? ஈஸ்வர் அத்தான் வேணாம்னு சொல்லறார்..”, என்று அவள் முடிக்கவும்,
“அதானே பார்த்தேன். அவன் யாரு முதலில் உன் வாழ்க்கையை கையிலெடுக்க? யாராவது அந்த சாந்த சொரூபனை மீறி ஒரு முடிவெடுக்க முடியுமா என்ன.. அப்பா அம்மா, தாத்தா, பாட்டி, அத்தைகள்னு எல்லாத்தையும் கையில போட்டில்ல வச்சிருக்கான் அந்த காசா. அவனை..”, என்று கறுவினான் ஹரீஷ்.
“அக்கா நீ இப்போ எதுவும் சொல்ல வேணாம். ரெண்டொரு நாட்கள் போகட்டும். இதில் என்ன முன்னேற்றம்னு பார்த்துட்டுப் பேசலாம். ஆனால் நான் ஒண்ணு மட்டும் சொல்லறேன். நீ அந்த காசா கிட்ட மாட்டினே. சீக்கிரத்தில் ஈஸ்வரானந்தாவின் ஆசிரமத்தில், மாதா காவேரியின் அருளாசிகள்னு கொட்டை எழுத்தில் பேப்பரில் வந்துடுவே ஞாபகம் இருக்கட்டும். நோ பார்ட்டி, நோ ஹேப்பி.. உன்னை ஒரு சாமியாரிணி ஆக்கிடுவான் ஜாக்கிரத்தை..”, என்று நிஜமாகவே எச்சரித்தான் ஹரீஷ்.
“அக்கா, ‘நாம் நினைத்ததைச் செய்வோம், எவன் பேச்சையும் கேட்க மாட்டோம். பட்டுத் திருந்திக்குவோம். ஆனா, ஒதுங்கிப் போகமாட்டோம்.’ நம்ம மோட்டோ மறந்து போச்சா? எதுக்குக் கலக்கம் சகோதரி?.. தைரியமா இரு. எது வந்தாலும் பார்த்துப்போம்..”, என ஹைஃபை கொடுத்த தம்பிக்குத் தானும் முகம் மலர்ந்து சிரித்தபடி கை கொடுத்தாள் காவேரி.
பார்ப்போம். இரண்டொரு நாட்களில் அப்படி என்ன அவள் வாழ்க்கையைத் திருப்பும் நிகழ்வு வரப் போகிறதென்று.
இரண்டொரு நாள் எதற்கு விதிக்கு? ஒரு நொடி போதுமே தான் நினைத்தவர் வாழ்க்கையைப் புரட்டிப் போட.. சின்னவர்கள் தைரியமெல்லாம் பறந்து போக..