அத்தியாயம் 6
ஈஸ்வர் உணவு மேசையில் அமர்ந்து சின்னச் சின்னக் குழிகளோடு இருந்த பெரிய டிபன் தட்டில் இட்லி, வடை, பொங்கலை மூன்று வகை சட்னி, மற்றும் சாம்பாரைப் பொங்கல் தலையில் தாராளமாக ஊற்றி, உணவை ரசித்தபடி நாசூக்காய் உண்டு கொண்டிருந்தான்.
அவன் எதிரே அமர்ந்திருந்த ஹேமாவுக்குத் தான் அவன் செய்கையில் தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.
‘சரியான தீனிப்பண்டாரம். காரியத்தைக் கச்சிதமாக முடிக்காமல், சாப்பாட்டை ரசிச்சு மொக்கிட்டு இருக்கான்’, என மனதுள் வைதவள்,
“டேய் ஈசு, இந்த வீட்டில் என்ன நடக்குதுன்னு உனக்குக் கொஞ்சமாவது தெரியுமா? தெரியாதா? சாப்பாடு ஒண்ணு தான் பிரதானம்னு அந்த தட்டுக்குள்ள் மூழ்கியிருக்க?..”, கோபமாக மகனைத் திட்டத் தொடங்கினார்.
நிதானமாக அடுத்த கவள உணவை வாயில் நாசூக்காய் எடுத்துக் கொண்டவன், பக்கத்திலிருந்த நீரையும் பருகினான்.
ஈஸ்வர் அப்படித் தான், அவனைப் பொருத்தவரை அனைத்தையும் ரசித்து செய்ய வேண்டும். அது உணவோ, அல்லது தான் தேர்தெடுத்துச் செய்யும் செயலோ. வாழ்க்கை வாழ்வதற்கே! அந்த வாழ்க்கையை ஆனந்தம், பேரானந்தம். அனுபவி ராஜா அனுபவி! இதுதான் அவன் கொள்கை. கலாரசிகன்.
“அப்படி என்னம்மா அதிசயமா நடந்து போச்சு? ஓ, நீ நேத்தைக்கு காவி, அந்த லூ.. அந்த ஜீவாவோடு வந்ததைச் சொல்லறயா?..”
ஜீவாவை லூசு என்று சொல்ல வந்த ஈஸ்வரை முறைத்தான் ஹரீஷ்.
“கா..”, ‘காசா’ என்று சொல்ல வந்ததை அப்படியே மென்று முழுங்கியவன், “ஈஸ்வர் அத்தான், ஜீவா ஒண்ணும் லூசெல்லாம் இல்ல. அவர் கம்பனிக்கு ஒரு வாட்டி வந்து பாருங்க. அவர் நடந்தா நடை அழகு, அவர் சிரிச்சா சிரிப்பழகு. ஏன் அவர் கையசைச்சா ஓடிக் காலடியில் விழ ஒரு கூட்டம் காத்திட்டு இருக்கு. என்ன கம்பீரம் தெரியுமில்ல!..”
பக்கென்று சிரித்தான் ஈஸ்வரோ. அடக்க மாட்டாமல் சிரித்ததில் வாயிலிருந்து லேசாய் எகிறி விழுந்த எச்சில் உணவு துகள்கள் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. அதற்காக மன்னிப்பும் கேட்டான். அப்படியெல்லாம் அநாகரீமாய் நடப்பவன் அல்லவே அவன்.. அருகே வைக்கப்பட்டிருந்த பேப்பர் டிஷ்ஷூவால் வாயை நேர்த்தியாய் துடைத்துக்கொண்டான்.
“சாரி, இவன் பேச்சுக்குச் சிரிப்பு வந்துடுச்சு.. சாரி, சாரி அகையின்.. உணவுக்கு நடுவில் பேசுவதே தவறு. இதில் சிரிப்பது மகா தப்பு..”, மீண்டும் அனைவரிடமும் மன்னிப்பை வேண்டினான்.
“ஈஸ்வரத்தான், தேவையில்லாமல் யாரையும் நிந்தித்துப் பேச வேண்டாம். லூஸுன்னு சொன்ன அவர் கிட்ட தான் நீங்க நைச்சியமா பேசிப் பணம் கேளுன்னு சொன்னீங்க. அப்புறம் என்னை காவின்னு கூப்பிட வேண்டாம்..”
‘இவ ஒருத்தி, எப்ப எதைப் பேசணும்னு தெரியாத லூசு. காசைத் தேத்தட்டும். இந்த லூசை முதல்ல சரி கட்டணும். எதற்கெடுத்தாலும் எதையாவது ரூல்ஸ் சொல்லிக் கொண்டு..’
மீண்டும் வாயை துடைத்துக் கொண்டவன், லேசாய்ச் சிரித்தபடி,
“சரிங்க மேடம், உடன்பிறப்புகள் ஒண்ணாச் சேர்ந்தாச்சு. நான் அப்பீட்டு. நானும் அவனை லூசுண்ணு சொல்ல வரல. அவன் அதிபுத்திசாலி.. இல்லையென்றால் நம்மை எதுக்கு இப்படி கார்னர் செய்ய முடியும்? எப்படியும் இன்னும் பதினைஞ்சு நாள் தான் டைமிருக்கு. அதுக்குள்ள அந்த கம்பீரமானவன் ஒண்ணும் கழட்ட முடியாதுன்னு எனக்கும் தெரியும். காசை முதல்ல கறக்கிற வழியைப் பாரு. பின்னாடி எப்படி இதிலிருந்து கழட்டி விடறதுன்னு நான் சொல்லித் தரேன். இப்போதைக்கு எடுத்த பிராஜெக்டை முடிப்போம். இப்ப மொக்கியாச்சுன்னு சொல்லுங்க, உன்னை அவன் கம்பனியில டிராப் பண்ணிட்டு நான் ஆஸ்ரமம் வேலையை பார்க்கப் போறேன்..”
“வேணாம் அத்தான், எப்பவும் போல ஹரி பையனே என்னை விட்டுட்டு அவன் யூனிட்டுக்குப் போவான்..”, என்றபடி நாசூக்காய் எழுந்து கொண்டாள் காவேரி.
‘யார் யாரைக் கழட்டி விடுவது? முடியுமா?’ அவள் மனம் கேட்டது.
நேற்று மாலை வேலை முடிந்து அவன் கம்பனியிலிருந்து அவள் கிளம்பித் தன் காருக்காக அவள் காத்திருந்த போது சரியாக அவன் வந்து சேர்ந்தான்.
தன்னைக் கண்டு அவள் முகம் மலர்ந்ததைக் கண்டு கொண்டவன் போல்,
“வா காவேரி, வந்து கார்ல ஏறு. ஹரீஷ் இப்பத்தான் எனக்குச் சொன்னான், உன் கார் சர்வீசுக்கு போயிருக்காம். என்னை டிராப் செய்ய முடியுமான்னு கேட்டான்..”, புன்னகைத்தபடி கார்க் கதவை திறந்தான்.
கடந்த பத்து நாட்களுக்கு மேலாக அவளைச் சந்திப்பதைத் தவிர்த்திருந்தான் ஜீவானந்த். அன்று ஹரிஷுக்கும், அவளுக்கும் வேறு வேறு இடத்தில் பணி என்றிருந்தவன், கார்பரேட் ஆபீசுக்கு அவள் வந்தவுடன் அவளுக்கான பணிகளைப் பட்டியலிட்டுவிட்டு, ஒதுங்கித் தான் நின்றான். அலுவலகத்தில் அவளைத் தொந்தரவு செய்யவில்லை. அவளை ஒரு பணியாளாகத் தான் நடத்தினான். ஒதுங்கியும் நின்றான். அவளுக்கான இடைவெளியும் விட்டான்.
அவனைக் காணவில்லையே என்று இவள் எண்ண, அவனோ, ‘தேவையில்லாமல் உன்னை தொந்தரவு செய்து உன் மனதில் இடம் பிடிக்கக் கூடாது. டீல் மா.’, என்று பொக்கே அனுப்பி வைத்தவன், ‘என்னைத் தேடினாயா?’ என்றும் கேட்டு அவளைத் திணற அடித்தான். ஆனாலும், தினமும் அவளுக்காக ஏதோ ஒன்று பரிசாக அனுப்பத் தொடங்கினான்.
இன்றோ ஹரீஷ் சற்று முன்னர் ஃபோன் செய்து, அக்காவின் மொபைல் ஸ்விட்சுடு ஆஃப் என்று சொல்லி அவளை கேப் பிடித்துப் போகச் சொல்ல இவனைக் கூப்பிட்டு உதவி தான் கேட்டான். இவனோ அதைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டான்.
“என்ன பாக்கற? உன் மொபைல் அணைஞ்சிருக்காம். அதான் தகவல் சொல்லச் சொல்லி என்னை கொரியர் பாயாக்கிட்டான். வருங்கால மச்சினன் பேச்சைத் தட்ட முடியுமா? சொல்லு..”
அவன் அகன்ற புன்னகையில் எப்பொழுதும் போல விழுந்தவளோ, காருக்குள் ஏறிக் கொண்டாள்.
ஆனாலும், ஹரீஷைக் கண்டிக்கணும் என்று தீர்மானித்துக் கொண்டாள்.
“தேவையில்லாமல் தொந்தரவு செய்ய மாட்டீங்கன்னு சொல்லியிருக்கீங்க?..”
“நான் எங்க உன்னைத் தொந்தரவு செஞ்சேன்? விலகித்தானே நின்னேன். ஆனாலும், என்னிக்காவது காரில் டிராப் செய்வது தொந்தரவா? எப்படியும் கார் அந்தப் பக்கமாப் போகுது. ஹாங்க் உடனே திரும்பவும் ஆரம்பிக்காதே, வேலை பாக்குற எல்லாரையும் எல்லாம் அழைச்சிட்டுப் போய்க் கொண்டு வந்து விட நம்மால் முடியாது. ஆனா, நீ எனக்கு ஸ்பெஷல், அதான் சந்தர்ப்பம் கிடைச்சதும் யூஸ் பண்ணிக்கிட்டேன்..”
இப்பொழுது புன்னகைப்பது இவள் செய்கையானது.
‘கள்ளன், எதையாவது சொல்லி சமாளிச்சிடுவான். ஹரீஷுக்கு இவனைப் பிடிச்சிருப்பது சரிதான். இல்லைன்னா, ஈஸ்வரை இல்லை பிக்கப் செய்யச் சொல்லியிருப்பான்.’
அவளை மேலே யோசிக்க விடாமல், அமைதியாக காரை ஓட்டியவன், அதன் பின் அவள் பக்கம் திரும்பிப் பார்த்தானில்லை.
இவளுக்குத் தான் ஏமாற்றமாக இருந்தது. எதையாவது பேச்சுக் கொடுப்பான், தன்னைச் சீண்டுவான் என்று நினைத்தாள். தன் காதலைச் சொல்லி மீண்டும் வலியுறுத்துவான் என்று எண்ணினாள்.
அவள் வீட்டு முன் காரை நிறுத்தியவன்,
“எதையும் பாதியில் நிறுத்தி விட்டு போகும் பழக்கமில்லை எனக்கு. நீயும் அப்படித் தான் நினைக்கிறேன். தேவையில்லாமல் உன் மனசை கலைக்கக் கூடாது இல்லையா? அதான் ஒதுங்கி நின்னேன். கண்ணுல காணாதது கருத்துல நிக்கும்னு நம்பறேன். நீ என்னைத் தேடறது எனக்கும் தெரியுது. தப்பில்ல, மனசுக்கு நெருக்கமானவங்க தங்களோடு இருக்கணும்னு நினைக்கிறது இயல்பு தான். ஐ யம் ப்ளஸ்டு மேடம். இன்னும் ஃபிஃப்டீன் டேஸ் மோர். நீயே அந்த. அவன் பேர் சொல்லக் கூட விருப்பமில்ல எனக்கு, வேணாம் சொல்லிட்டு வந்து நிப்ப. இல்லயில்ல, நீ நினைப்ப. அப்ப நான் உங்கப்பா கிட்ட வந்து திரும்பவும் உன்னைப் பொண்ணு கேட்டு வருவேன். இது நடக்கத் தான் போகுது..”
காரை விட்டு இறங்கியவள், அமைதியாக அவன் முகத்தைப் பார்த்தவள், மெல்லத் தலையாட்டினாள். அதில் நிச்சயம் அப்படி நடக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு தெரிந்ததோ.
“நிச்சயம் நடக்கும். நம்பும்மா. எனக்கு வேண்டியது நீ. அதற்காக என்ன வேணா செய்வேன், என் இறுதி மூச்சு இருக்கும் வரை. அதுவரைக்கும் நீ உன் வேலையை முடி. நாளையிலிருந்து உனக்குப் புது பேட்ச் வராங்க..”
தகவலைச் சொன்னவன், அவள் காரை விட்டு இறங்கியவுடன், அவள் பக்கம் கூடத் திரும்பாமல், வேகமாக காரை ஓட்டிச் சென்று விட்டான்.
‘அது எப்படி சாத்தியமாகும்? ஈஸ்வர், காசை வாங்கிக் கொண்டு அவனிடமிருந்து விலகிக்கொள் என்கிறான். ஜீவாவோ, ‘என் இறுதி மூச்சும் நீதான்’ என்று பேசுகிறான். இதில் யாரை நான் தேர்ந்தெடுப்பது?’
அன்று ஹரீஷுடன் கம்பனிக்குப் பயணித்தவளின் மனதில் இந்தக் கேள்வி தான் எழுந்தது.
‘என் இறுதி மூச்சே நீதான்’ என்றவன், அவளிடம் அதற்கு நேர்மாறாக அவளைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தான்.