அத்தியாயம் 9
"காவேரி, இன்னும் கொஞ்சம் சாப்பிட்டுப் போ. இல்லைன்னா பசி எடுக்கும். வரவர நீ சரியாச் சாப்பிடுவதில்லையாம். கல்யாணி மா புகார் படிக்கிறாங்க..”
கல்யாணி அம்மாள் அவர்கள் வீட்டில் சமையல் செய்பவர். சமையலோடு வீட்டில் அனைத்து பணிகளையும் மேற்பார்வை இடுபவர்.
"மா. என்னம்மா இன்னிக்கு அதிசயமா இருக்கு? பொண்ணு சாப்பிடறது எல்லாம் கவனிக்கிறீங்க? இன்னிக்கு லேடீஸ் கிளப்க்கு லீவா?.."
ஹரீஷின் கேள்வியில் காவேரிக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.
ஆனால் வெளிப்படையாக சிரித்தால் அவள் அன்னைக்குக் கோபம் வந்து விடுமே!
"டேய் நீங்க இரண்டு பேரும் தனிச்சையா செயல்படத் தொடங்கியாச்சு. இனி சின்னச் சின்ன விஷயமெல்லாம் கூட நாங்க கவனிக்க வேண்டிய அவசியமில்லையே. அதுக்காக பசங்க ஹெல்த் இஷ்யூ வரும்னா கவனிக்காம இருக்க முடியுமா என்ன?.."
"மா அவன் கிடக்கிறான் பொறாமை பிடிச்சவன். அவனை நீங்க கேக்கல இல்லையா?..", என காவேரி தாயைச் சமாதானப்படுத்தியவள்,
"ரொம்பச் சாப்பிட்டா தூக்கம் வரும்மா. இன்னிக்கு மூணு செஷன் கிளாஸ் எடுக்கணும்மா..”
"எப்படியும் உன் ஸ்பீச்சைக் கேட்டு அதுக தூங்கத்தான் போகுதுங்க..”
"மா, இந்த ஹரீஷைக் கொஞ்சம் அடக்கி வைங்க மா. வரவர என்னை ரொம்பவுமே வம்புக்கு இழுக்கறான்.."
அமிர்தா எதோ சொல்ல வர, கமல்நாத் தன் ஒற்றைப் பார்வையால் மனைவியை அடக்கியவர்,
"ஹரீஷ்" என மெல்ல அழைக்க, பெட்டிப்பாம்பாய் ஹரீஷோ, உண்பதே தன் வேலை, தலையாயக்கடமை என்று கருத்தாய்ச் சாப்பாட்டுத் தட்டில் மூழ்கினான்.
"பாப்பா..”, எனப் பாசமாய் மகளை விளித்தார்.
தந்தை தன்னை அன்பொழுக பாப்பா என்று அழைத்தாலே ஏதோ பெரியதாய் வரப் போகிறது என்று அர்த்தம். அப்படியெல்லாம் அவர் செல்லமாக அழைப்பவர் இல்லை. எப்பொழுதும் அவளைப் பெயர் சொல்லித் தான் அழைப்பார்.
'என்னவாக இருக்கும்?'
அவள் யோசிக்கத் தொடங்க, அதற்கு அவசியமில்லாதது போல் தனது சிற்றுண்டியை முடித்துக் கொண்டு, காப்பியையும் பருகி முடித்த கமல்நாத், தன் தொண்டையைச் செருமித் தன்னை நிதானப்படுத்திக் கொண்டார்.
"ஒரு மாதம்ன்னு சொன்னதா ஞாபகம். இன்னும் அந்த ஒரு மாதம் முடியலையா?..”
காவேரியோ சங்கடத்துடன் அவர் பார்வையை எதிர் கொண்டாள்.
"இல்லப்பா, அது வந்துப்பா, ஜீவா சார் இன்னும் கொஞ்சம் நாள் வர முடியுமா கேட்டாங்க. உங்க கிட்ட பெர்மிஷன் கேட்பதாய்ச் சொன்னாங்க. எப்படியும் இன்னும் இரண்டு மூணு நாள் போகணும்..”
சரியாக அந்த சமயத்தில் கமல்நாத்தின் செல்ஃபோன் அழைத்துத் தன் இருப்பைக் காட்டியது.
"வணக்கம், சொல்லுங்க தம்பி.."
அழைப்பை ஏற்று அவர் பேசப் பேச அந்த பக்கம் யார் என்று அங்கு அமர்ந்திருந்தோருக்குப் புரிந்து போயிற்று.
‘திங்க் ஆஃப் த டெவிலா?’ பாவம் பிழைத்துப் போகட்டும். ‘நூறு ஆண்டுகள் வாழட்டும்’
"ஆகட்டும் தம்பி, அப்படியே. நீங்க இவ்வளவு தூரம் இறங்கி வந்து கேட்பதால அனுப்பறேன். அதுக்கப்புறம் முடியாது. ஆனாலும் இதில் என் மகளின் விருப்பமும் முக்கியம் தம்பி..", என்று அழைப்பைத் துண்டித்து விட்டு காவேரியை நிமிர்ந்து பார்த்தார்.
அவள் முகத்தில் வந்து போன தயக்கம், பயம், யோசனை, குற்றவுணர்வு எனப் பலவித உணர்வுகளையும் இவர் அவதானித்துக்கொண்டார்.
அவன் ஃபோன் அழைப்பில் மகளின் முகத்தில் எல்லாவற்றையும் மீறித் தெரிந்த வெட்க உணர்வு இவருக்கு என்னவோ உணர்த்தி எதையோ சிந்திக்கத் தூண்டியது.
இது நல்லதா, கெட்டதா, இவரால் வகுத்தறிய முடியவில்லை. முடியவில்லை என்பதை விட, முயலப் பிடிக்கவில்லை. மகளின் மகிழ்ச்சி முக்கியம் என வழக்கம் போல் தனக்குள் சொல்லிக் கொண்டவர்,
"என்னம்மா அந்த ஜீவாத் தம்பி இன்னும் கொஞ்சம் நாட்கள் அவகாசம் கேட்கிறாரே. எதோ அரைகுறையாக டிரெய்னிங் நீ முடிச்சி இருக்கியாம். கம்பனிக்கு வரச் சொல்கிறார்.."
"அரைகுறையாகவா? இல்லையே? எல்லாம் முடிச்சிட்டேனே?.."
தனக்குள் சொல்வதாக எண்ணிக் கத்திச் சொல்லி விட்டாளா?
"அப்ப உனக்கு போக விருப்பமில்லையா?..", கொக்கிப்பிடி போட்டார்.
"ஹாங்க். இல்ல, ஆமாம் இன்னும் நிறைய பெண்டிங் இருக்குப்பா. அதான் உங்க கிட்ட பெர்மிஷன் கேக்கச் சொன்னேன்.. முடிச்சிக் கொடுக்கணும்.. அதான்பா முறை.."
"இதெல்லாம் சரியில்ல அண்ணா..", ஹேமா கோபமாகத் தொடங்கினாள்.
மகளின் சமாளிப்பில் லேசாகச் சிரித்த கமல்நாத்தோ, "எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ முடிச்சிட்டு விலகி வந்துடு. தேவையில்லாப் பிரச்சனை வேண்டாம். சீக்கிரமே உனக்கும் ஈஸ்வருக்கும் மேரேஜ் வைக்கணும்.."
அவரது பேச்சில் காவேரியின் முகம் லேசாக வெளிறியது.
அப்படியென்றால் உன் மனம் போல் தான் மாங்கல்யம் என்று அன்று சொன்னது?
"சரியாகச் சொன்னே அண்ணா. இப்பத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு.."
சரியாக அந்த சமயத்தில் ஈஸ்வர் பட்டு வேட்டியும், பளபளக்கும் சட்டையுமாய் வந்து சேர்ந்தான்.
ஆரஞ்சு வண்ண ஜிப்பாவும், ஆரஞ்சு கரையிட்ட சரிகை வேஷ்டியும், வலக்கையில் அகன்ற தங்கக்காப்பும், இடக்கையில் விலை உயர்ந்த கைக்கடிகாரமும், இரு கை விரல்களிலும் பெரிய பெரிய வண்ணக்கற்கள் பதித்த மோதிரங்களும், கழுத்தை அலங்கரித்த தடிமனான தாம்புக்கயிறு செயினில் பதித்த கொட்டை ருத்ராக்ஷமும், நெற்றியில் பட்டை விபூதியும், அதன் நடுவில் சிவப்பாய் அலங்கரித்த திரிசூல திலகமும் என ஈஸ்வர் அவதார புருஷனாக காவேரியின் முன்னே வெளியே போகலாம் என்று நின்றிருந்தான்.
ஒவ்வொருவர் முகத்திலும் ஓவ்வொரு வித உணர்ச்சி.
முதலில் சுதாரித்துக்கொண்ட ஹேமா, "டேய் என்னடா இது வேஷம்? கூத்துல கோமாளி மாதிரி.."
அங்கே கொல்லென்ற சிரிப்பெழுந்து அடங்கியது.
ஈஸ்வரோ முகம் கடுகடுக்கத் தாயை முறைத்தான்.
ஆனால் முகத்தை அமைதியாக வைத்துக் கொண்டான்.
"அன்னையே ஈஸ்வரானந்தாவின் ஆசிகள் தங்களுக்கு..”, கைகளை உயர்த்தி ஆசிர்வதிக்க,
"என்னாது? ஈஸ்வரானந்தாவா? உங்க மாமா உனக்கு சம்பந்தம் பேசறாங்க? நீ என்னடான்னா சாமியார் கெட்டப்புல எனக்கே அருளாசி கொடுக்கிறியா? உன்னை..”
பற்களை நறநறத்தபடி சேரை வேகமாய்த் தள்ளிவிட்டு எழ, அவள் தங்கை பாமாவோ விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினாள்.
ஈஸ்வரின் சகோதரன் ஷங்கரும், பாமாவின் பிள்ளைகள் வருண், தருணும் சிரிப்பை அடக்க முடியாமல் வாயைப் பொத்திக் கொண்டார்கள்.
கமல்நாத் தொண்டையைக் கனைக்க, அவரது தந்தை ஹரிசந்திரநாத்தோ,
"டேய் ஈஸ்வர் எங்கடா கிளம்பிட்ட? ஆஸ்ரமத்துக்கு நிதி கலெக்ட் பண்ணப் போக சாமியார் கெட்டப்ல போகணும்னு சொன்னியே? அதுக்கா..”
‘சாமியார் என்றால் குற்றமா? சன்னியாசிகளில் நல்லவர்களும் இருக்கிறார்களே! சாமியாருக்கும், சன்னியாசிக்கும் வித்தியாசம் இருக்கிறதே!’
அவனை மேலே யோசிக்க விடாமல், பேரனுக்கு சமயோகிதமாய் எடுத்துக்கொடுத்தார் பெரியவர்.
ஏற்கனவே தனது மகன் கமல்நாத்திற்கு, தன் மகள் வயிற்றுப் பேரன் மீது சமீபகாலமாக நல்ல அபிப்பிராயம் இல்லை என்பது அவரது எண்ணம். அதனாலேயே அவர் புதுசாக ஒருவனைத் தங்கள் குடும்பத்திற்குள்ளே சேர்த்து இருப்பதாக அவருக்கு பலத்த சந்தேகம்.
போட்டு வைத்த தங்கள் திட்டமெல்லாம் தவிடு பொடியாகிடுமோ என்று ஐயுற, பேரனுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கினார். அவர் மனைவி ரத்னாவும் கணவரோடு பேரனுக்கு ஜால்ரா தட்டத் தொடங்கினார்.
அது என்னவோ, ஒரு வீட்டில் மகனும், மகளும் குடும்பத்தோடு ஒரே இருந்தால், பெற்றவர்கள் அவர்கள் பெண்ணை கடைசி வரை தாங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். மகள் திருமணமாகி வெளியே சென்றுவிட்டாலும், அந்த மகள் குடும்பம் தன் மகன் குடும்பத்துக்குச் சமமாக இருக்க எல்லா வகையிலும் பிரயத்தனிப்பார்கள். ஏன் சில குடும்பங்களில் பெற்றவர்கள், மகன் குடும்பத்தைவிட, மகள் குடும்பத்துப் பிள்ளைகள் மீது அதீத பாசத்தைக் காண்பிப்பார்கள். நம் உலக வழக்கம் இது..
இங்கேயும் அப்படித் தான். என்னதான் ஹரிசந்திரநாத் தான் பெற்ற மூன்று பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வசித்தாலும், மகள் வயிற்று மூத்த பேரன் மீது ஒரு தனிப் பாசத்தை வைத்திருந்தார். அதனாலேயே மகன் வயிற்று ஒரே பேத்தியாய் நின்றுவிட்ட காவேரியை எப்படியாவது தன் மகள் வயிற்றுப் பேரன் ஈஸ்வருக்குக் கட்டி வைத்து உறவை பலப்படுத்த எல்லாவித ஆயுத்தங்களையும் செய்து கொண்டிருந்தார்.
சொத்துக்குச் சொத்து, உறவுக்கு உறவாயிற்றே!
"எங்க கிளம்பிட்ட ஈஸ்வர்?.."
"மாமா, உங்களுக்கே தெரியும் நானும், காவியும் ஒரு ஆஸ்ரமம் பெரிய அளவில் கட்டி அதன் மூலமாக சமுதாயத்துக்குத் தொண்டு செய்ய நினைச்சி இருக்கிறது..”
மேலே சொல்லு என்பது போல அவர் தலையாட்ட.
காவேரியோ 'நான் எப்ப சொன்னேன் ஆஸ்ரமம் எல்லாம் கட்டணும்னு. தொண்டு செய்யப் பணம் ரைஸ் பண்ணலாம்னு தானே சொன்னான். நீதானே ஆஸ்ரமம் ஆரம்பிக்கப் போறதா சொல்லிட்டு இருக்கே. ஏன் அதையும் கூட இன்னும் எங்கிட்ட சரியாப் பகிர்ந்துக்கல'
ஈஸ்வரை முறைத்துப் பார்த்தாள்.
காவேரியின் பார்வை புரிந்தாலும், ஈஸ்வர் அவளைக் கண்டுகொள்ளாமல் தன் மாமனிடம் விலாவாரியாகப் பேசத் தொடங்கினான்.
"மாமா, இன்னிக்கு சில நிறுவனங்களிலிருந்து அதை பார்க்க வரப் போறாங்க.. எல்லோரும் பிக் ஷாட். அவங்க நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல தங்கி எல்லாம் சரியா இருக்கான்னு பார்ப்பாங்க. அவங்களுக்கு மட்டும் பிடிச்சிப் போகட்டும் பாருங்க ஃபாரின் கரென்சியா வந்து கொட்டும்.. அதுக்குத் தான் முதல்ல நம்ம கார்ப்பரேட் ஆடிடோரியத்தில் ஒரு ஸ்பீச் ஏற்பாடாயிருக்கு..”
"பார்த்துப்பா. வரவர ஆசிரமம்ன்னா மக்களுக்கு ஒரு தப்பான எண்ணம் தான் வருது. ஏதாவது எக்குதப்பா செஞ்சி வைச்சி நம்ம குடும்ப மானத்தை வாங்கிடாதே.."
"அய்யோ மாமா, அப்படியெல்லாம் இங்கே இல்ல. நம்ம லெவலே வேற. நம் ஆஸ்ரமத் திறப்பு விழாக்கு சென்டிரல் மினிஸ்ட்டரை வரவழைக்க ஐடியா இருக்கு..”
"சரிசரி, எதையோ பண்ணு. சென்ட்ரல் ஜெயிலு பக்கம் போகாம இருந்தா சரி..”, என்றவர் வெளியே செல்ல கிளம்ப..
"ஜோக்கடிக்காதீங்க மாமா. எல்லாம் நல்லபடியா நடக்கும். சரிங்க மாமா, இன்னிக்கு நான் நம்ம காவேரியை அழைச்சிட்டுப் போய் அங்கே எல்லாரையும் அறிமுகப்படுத்தப் போறேன்..”
'இது அவசியமா?' வெளியே கிளம்ப ஆயுத்தமானவர் தேங்கி நின்றார்.
அவர் மனம் புரிந்தாற்போல், "அவசியம் மாமா. நாலு பெரிய மனுஷங்களை காவேரியும் தெரிஞ்சுக்கணும். நாளைக்கே கல்யாணமான பிறகு நான் வரலைன்னாலும் காவேரி, அவசரத்துக்கு எல்லோரையும் தனியாச் சந்திக்க வேண்டி வரலாமே..”
'பணத்துக்காகக் கண்டவனையும் என் மகள் சந்திப்பதா?'
"எப்படியெல்லாம் என் புள்ள புத்திசாலியா யோசிக்கிறான் இல்லங்க அண்ணா.."
"ஏங்க எதுக்கு காவேரி போகணும். நம்ம கிட்ட இல்லாத பணமா? வரவர எனக்கிதெல்லாம் பிடிக்கல.."
"அமிர்தா அண்ணி நீங்க எதுக்குக் கவலைப்படறீங்க? நம்ம புள்ளைங்க விவரமானவங்க. இல்லைன்னா நம்ம காவேரி அந்த கம்பெனிக்குப் போயிருக்குமா என்ன? நாலு பேரைப் பார்த்துப் பழகிக்கட்டுமே! நம்மகிட்ட வேண்டிய பணமிருந்தாலும், ஆத்துல அளந்து தானே போடணும். இந்தப் பணக்காரப் பசங்க எல்லாம் பணத்தைச் செலவு பண்ணத் தெரியாமல் பைத்தியம் பிடிச்சி அலைவாங்க. நாமதான் அவங்களுக்கு நல்ல வழியில் செலவு பண்ணச் சொல்லித் தரணும். நல்லதுக்குப் பணத்தைச் செலவழிக்க நம்ம புள்ளைங்க வழிகாட்டுதுங்க.."
"என்னவோ செய்யுங்க. திரும்பவும் சொல்லறேன், நம்ம குடும்பப் பெயர் எனக்கு முக்கியம். எதுவா இருந்தாலும் பார்த்து நேர்வழியில் செய்யுங்க..”, என்ற கமல்நாத்,
"அப்பா எதுக்கும் நீங்களும் ஒரு கண்ணு வைச்சிக்கோங்க. எல்லாம் முறைப்படியா நடக்குதான்னு மேற்பார்வை செய்யுங்க. காவேரி நீயும் பார்த்துப் போயிட்டு வா.. தப்பா ஒரு பேச்சு உன்மீது வரக் கூடாது, எதிலும் கவனம் இருக்கட்டும். சொல்லிட்டேன்.."
தலையாட்டி விட்டுச் சென்று விட்டார். அமிர்தாவும் மகளுக்குப் பார்த்து போகச் சொல்லிவிட்டு அகல,
"காவி, போ போ கிளம்பு. ஹே ஒண்ணு பண்ணு, என் வேட்டி சட்டைக்குப் பொருத்தமா நீயும் புடவை கட்டி வாயேன். சிவப்போ அல்லது ஆரஞ்சு கலர் பொருத்தமாயிருக்கும்..”
"ஈஸ்வரத்தான், விட்டா எங்கக்காவை சாமியாரிணி ரேஞ்சுக்கு ஆக்காம விட மாட்டீங்க போல..”
காவேரி முறைக்க, ஹரீஷ் சிரிக்க, மதியத்துக்கு மேல் வருவதாக ஜீவாவுக்கு மெசேஸ் அனுப்பிவிட்டு, ஒருவழியாய் அவனோடு கிளம்பினாள் காவேரி.