கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ரவா உப்புமா மிக்ஸ்: தேவை

Rajasree Murali

Moderator
Staff member
ரவா உப்புமா மிக்ஸ்:

தேவையான பொருட்கள்
ரவை ஒரு கப்
கடுகு சிறிதளவு
கடலைப்பருப்பு 1சிறிய டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1சிறிய டீஸ்பூன்
பச்சை மிளகாய் 2
பெருங்காயத்தூள் சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 2சிறிய டீஸ்பூன்
கொத்தமல்லி கரிவேப்பிலை
மஞ்சள்தூள் சிறிதளவு (விருப்பபடி)
முந்திரி பருப்பு 4

மிக்ஸ் செய்முறை:

வாணலியில் எண்ணெய் விடாமல் முதலில் ரவையை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு பருப்பு வகைகளை சேர்த்து சிவக்க வறுத்து நறுக்கிய பச்சை மிளகாய். கொத்தமல்லி, கரிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து ஆறு வைத்துக் டப்பாவில் ஃப்ரிட்ஜில் வைத்து கொண்டால் தேவைப்படும் போது 5நிமிடங்களில் சுலபமான, சுவையான ரவா உப்புமா செய்து கொள்ளலாம்.

உப்புமா செய்முறை
ஒரு கப் ரவா உப்புமா மிக்ஸ் எடுத்துக் கொண்டால் அதற்கு 21/2கப் அளவு தண்ணீர் வாணலியில் தண்ணீரை நன்கு கொதிக்க விடவும் அதில் உப்புமா மிக்ஸ்ஸை சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கிளறவும். 5நிமிடங்களில் சுவையான உப்புமா ரெடி(விருப்பம் உள்ளவர்கள் வெங்காயம், கேரட், பீன்ஸ் இவைகளை நன்கு வதக்கி சேர்த்து கொள்ளலாம்).
 

Attachments

  • IMG_20211212_194816-min.jpg
    IMG_20211212_194816-min.jpg
    475.7 KB · Views: 0

Latha S

Administrator
Staff member
உபயோகமான ஒன்று. அவசரமாய் வேலைக்கு செல்வோர் எளிதில் செய்து விடலாம்.
 
Top