கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ராஜலட்சுமி நாராயணசாமி

siteadmin

Administrator
Staff member
வணக்கம்,

நான் ராஜலட்சுமி விருதுநகர் மாவட்டம் அப்பையநாயக்கன்பட்டி சொந்த ஊர். கணவர் சுரேஷ் மற்றும் குழந்தைகளுடன் கோவில்பட்டியில் வசிக்கிறேன். என் தந்தை நாராயணசாமி அவர்களின் தூண்டுதலே எனக்கு வாசிப்பை அறிமுகப்படுத்தியது. சிறு வயதிலேயே முதன்முதலில் படிக்கக் கற்றுக் கொண்டது நக்கீரன், சங்கொலி போன்ற அரசியல் பத்திரிக்கைகளை தான். அதன் பின்பே சிறு கதைகள், நாவல்கள் என பலதரப்பட்ட எழுத்துகள் அறிமுகமாகின. பள்ளிக் காலங்களிலேயே சிறு கவிதைகள் எழுதுவேன். அந்த ஆர்வமே இப்போது நாவல் வரை என்னை செலுத்தியுள்ளது. என் முதல் கதை வாகை மாளிகை.. அமானுஷ்யம் கலந்த பக்திக் கதை என்று சொல்லலாம். என் இரண்டாவது நாவலான புயலின் புன்னகை என்ற பெயரில் எழுதி பின் பெயர் மாற்றம் அடைந்த 'கரிசக்காட்டு காரிகையே' எனும் நாவல் என் மனதிற்கு நெருக்கமானது. என் சொந்த ஊர் மக்களின், வாழ்வியலை, வலியை சிறிதளவேனும் பதிவு செய்த திருப்தி கிடைத்த நாவல்.



அது தவிர அவனவள் என்ற குறுநாவல், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் கிண்டிலில் மின்னூலாக பதிக்கப்பட்டுள்ளது.



சில சிறார் கதைகள் எழுதியுள்ளேன். என் மனதைப் பாதிக்கும், எனக்குள் முகிழ்த்தெழும் கேள்விகளுக்கான விடைகளையே கற்பனையான புனைவுகளாக விரிக்க விழைகிறேன்.



என் எழுத்தின் தாக்கம் ஒருவரையாவது நல்வழியில் செலுத்துமானால் அதுவே என் கதைகளுக்கு கிடைத்த வெற்றி.



நன்றி
 
Top