கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ராஜி பிரேமாவின் வண்ணக்கனவுகள்

மையல்:

விட்டுச்செல்ல முடியாதப்படி இறுக்கக்கோர்த்திருக்கும் உன் கைகளுக்குள் சிறையிட்டு கொள்கிறது என் கைகளும், மனதும் உன் மேலான மையலில்...

ராஜிபிரேமா ❤️
 
அருகாமை:

காந்தமென ஈர்க்கும் உன் காதல் பார்வையில் என் மனம் தடுமாறி உன் விழியை நோக்கிக்கொண்டிருக்க...

உன் அருகாமையின் சுகந்தத்தை இன்னும் அதிகமாய் உணர்கிறேன் மருதாணியிட்ட உன் விரல்கள் தீண்டியமையால்...

ராஜிபிரேமா ❤️
 
பேரன்பு :

மனதில் ஆயிரமாயிரம் கனவுகள் சூழ என்னவனாய் உன்னை அங்கீகரிக்கும் இந்நாளுக்காய் தவம் கிடந்த மனது...

உன் பேரன்பில் மங்கல நாண் ஏறிய தருணம் விழி தடுமாறி முகம் சிவக்க நாணமென்னும் புன்னகையில் கரைந்து தொலைகிறேன் ❤️

ராஜிபிரேமா ❤️
 
Top