வருவான் 1
இருளெங்கிலும் ஜொலித்திடும் நட்சத்திரங்களைப் போல, ஆங்காங்கே விளக்குகள் அவ்விரவில் ஜொலித்தது..
சென்னை சென்ரல் ஸ்டேஷனில்
மதுரைக்குச் செல்ல வேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் கிளம்ப தயாராக இருந்தது.
" சரிடா பாய்! பார்த்துப் போங்கடா " கையை அசைத்து விட்டு வழியனுப்பி வைத்தான், தன் கல்யாணத்திற்காக வந்த, நண்பர்களை.
" ம்ம்... ஒகே டா கல்யாண மாப்பிள்ளை. லைஃப்பை என்ஜாய் பண்ணு, ஹாப்பி மேரீட் லைஃப் டா ! " தன் நண்பனுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக் கூறிவிட்டு, இரயிலில் ஏறினார்கள்.
" தாங்க்ஸ் மச்சிஸ். " என்று அவனும், அங்கிருந்து கிளம்பினான்.
" நீங்க எல்லாரும், உள்ள போங்கடா. நான் அப்பா கிட்ட பேசிட்டு வந்திடுறேன் " என்றான் அவன்.
" ஒ.கேடா. சீக்கிரமா வந்திடு, நாங்க உள்ள போய் உட்கார்ந்து இருக்குகோம் " தனது நண்பனின் லக்கேஜ்ஜையும் எடுத்து கொண்டு உள்ளே சென்றனர்.
இரயிலும் கிளம்ப ஆரம்பித்தது.
" என்னடி இன்னும் அவ வர்றல? வேற எங்கயாவது மாட்டிகிட்டாளா? பயமா இருக்கே "
" ஏய் நீ ஏன் பயப்பிடுற? அவ வந்திடுவா "
" ட்ரெயின் கிளம்பிருச்சே, என்னடி பண்ண? அவளுக்கு வேணா போன் பண்ணுவோம்மா ? "
" ம்.. பண்ணு " என்றாள். ரிங் போனது,அவள் எடுக்கவே இல்லை.
அவன், " ஓகேப்பா, ட்ரெயின் கிளம்பிருச்சு, அப்புறம் பேசுறேன்ப்பா " என்று போனை வைத்து விட்டு, இரயில் மெதுமெதுவாக நகர ஆரம்பித்ததைக் கண்டு வெளியே எட்டிப் பார்த்தான். அங்கே அவள், இரயிலைப் பிடிக்க ஓடி வந்துக் கொண்டிருந்தாள்.
"ஏய்!! என் கை பிடுச்சுக்கோ "
அவன், தன் கையை நீட்டினான்.
அவளும் அவன் கையைப் பிடித்துக் கொள்ள, உள்ளே அவன் உதவியால் ஏறியவள், மூச்சு வாங்க, அங்கே நின்றாள்.
அவனிடம் " ரொம்ப தாங்கஸ் சார் " என்று கூறி
உள்ளே செல்ல எத்தனித்தவளை, அழைத்தான்.
" ஹலோ ! அவ்வளவு தானா ? " அவன் கேட்க, திரும்பிப் பார்த்தவள்,
" என்ன, ஒரு கப் காஃபி, சும்மா நாலு வார்த்தையா? " என்று
ஜெனிலியாவைப் போலவே கேட்டாள், நக்கலோடு.
அதுக்கு அவனும் சிரித்துக்கொண்டே, "நாலு வார்த்தை இல்லைம்மா, மூணு வார்த்தை சொல்லணும்" என்றான். அவளோ அவனைப் புரியாமல் பார்த்து நின்றாள்.
" அதாம்மா I...... love..... u " என்றே அவன் சொல்ல, அதிர்ந்து அதிர்ச்சியாய் பார்த்தாள். அவனோ அவள் அருகினில் வந்து அவள் முகம் பார்த்து " ஐ லவ் யூ... " என்றான். பேய்யைக்
கண்டது போல வியர்த்துப் போன முகத்துடன், ' பேக்க பேக்க ' என முழித்து நின்றாள்.
" ஓய் ! " என்றே, அவள் முன் சொடக்கிட்டு அழைக்க, அவளோ அதிர்ச்சியிலிருந்து வெளியே வந்தாள்.
" ஹலோ மிஸ்டர் !
யார் நீங்க கை கொடுத்து உதவிப் பண்ணிங்க.. தாங்க்ஸ் சொல்லிட்டேன். தேவையில்லாம ஏன் ஐ லவ் யூ னு சொல்லிட்டுருகீங்க?"
" உதவிப் பண்ணதுக்கு நீ தாங்க்ஸ் சொல்லிட்ட அது வேற. இப்ப நான் சொல்றது வேற, நான் உன்னைக் காதலிக்கிறேன். ஐ லவ் யூ."
" என்ன பார்த்ததும் லவ்வா, இதெல்லாம் ஓவரா இல்ல, இது வெறும் அட்ராக்சன் தான்.
நீங்க தான் ஏதோ தப்பா நினைச்சுட்டு இருக்கீங்க"
" ஹலோ பார்த்தோனே லவ் அதுல எனக்கும் நம்பிக்கை இல்ல. ஆனால் நான் உன்னை ஏற்கனவே கல்யாணத்துல பார்த்திருகேன். பார்த்ததும் உன்னை பிடிச்சிருச்சு,
உன் முகம் வேற, அப்ப அப்ப வந்து வந்து போச்சு, தூங்க விடாம இம்சை பண்ணுச்சு, சரி இன்னொருவாட்டி உன்னைப் பார்த்தால், உன்னைக் காதலிக்கலாம் கார்த்திக்ன்னு நினைச்சுகிட்டேன். அதே போல உன்னை திரும்பவும் பார்த்துட்டேன். உன் கிட்ட காதலையும் கூறிவிட்டேன்..
" கடவுளே நன்றிப்பா ! " அவன்கூற, அவனைக் கண்டு முறைத்தாள்.
" ஆமா, உன் பெயர் என்ன? "
" நீங்க யாருனே எனக்குத் தெரியாது. நான் ஏன் உங்க கிட்ட பெயர் சொல்லணும்? "
" அப்ப என்ன பத்தி நானே சொல்றேன்.
என் பெயர் கார்த்திக் நான் MBA முடிச்சுடேன். எனக்கு அப்பா மட்டும் தான். என் அப்பா பெயர் ரகுநாத். நானும் அப்பாவும் பிஸ்னஸ் பண்றோம்... தட்ஸ் ஆல் " அவன் அவனது வரலாறைக் கூற, அவள வகுப்பெடுக்கும் போதும் முழித்துக்கொண்டிருக்கும் மாணவியாய் நின்றிருந்தாள்.
அவன் மறுபடியும் சொடக்கிட்டு கூப்பிட்டான்.. அவள் அவனையே பார்க்க
" நான் என்ன பத்திச் சொல்லிடேன்... இப்ப உன் பெயர் சொல்லு "
' ஐயோ ! கீர்த்தி, இவன் உன்னை விடமாட்டான் போலயே ' என நினைத்தவள்.
" ஹலோ !! நான் என் பெயரெல்லாம் சொல்லமுடியாது. வழிய விடுங்க நான் போகணும். " அவள் போக முயல, அதை தடுத்து வழி மறித்து நின்றான்.
" ஹேய் எங்க போற ?. நீ இன்னும் உன் பெயர் சொல்லவே இல்ல" அதுலயே நின்றான்.
" ஹலோ!! கார்த்திக் உங்களை பார்த்துதோனே எனக்கு உங்களை மாதிரி எதுவும் தோணல. அது மட்டும் இல்ல, எங்க அம்மா பார்க்கிற பையனைத் தான் நான் கல்யாணம் பண்ணுவேன். ப்ளீஸ் வழிய விடுங்க " என்றாள்.
" எதுக்கு இதலெல்லாம் சொல்ற உன் பெயர் என்ன தானே கேட்டேன்?"
" அதலெல்லாம் சொல்ல முடியாது "
" அப்ப நானும் விட முடியாது " என்றான்.
அவனையே பார்த்து நின்றாள். அவளது போன் ஒலித்தது. அதை அவள்அட்டண்ட் செய்வதற்குள் அதைப் பறித்தான்.
" ஹேய்!! அது என்னோட போன் கொடுங்க " என்றவளைச் சட்டைச் செய்யாது.
அவளது போனைக் காதில் வைத்தான். அந்தப் பக்கத்தில் இருந்து " ஹேய் !! கீர்த்தி எங்க இருக்க ? "
"உன் பெயர் கீர்த்தியா?" அவளைப் பார்த்து அவன் கேட்க, தலையில் கை வைத்து நின்றாள்.
அவனோ போனில் பேசினான் " அவள், என்னோடு தான் ட்ரெயினில் இருக்கா பயப்பட வேண்டாம் " என்றான்.
" நீங்க யாரு ? " அவள் தோழி கேட்க.
" நானா, நான் அவளுடைய காதலன் " என்று சொல்லி கட் பண்ணினான். " என்ன காதலனா ? " அவன் ஆமாமென்று தலையசைக்க.." யாருக்கு யாரு காதலன்? தேவையில்லாம எதுக்கு நீங்க அவ கிட்ட அப்படி சொன்னிங்க?"
" அதானே உண்மை. நான் உன்னைய காதலிக்கிறேன். நீ என்னோட காதலி. நீ என்னை காதல் செய்தால், நான் உனக்கு காதலன் தானே "
" நான் உங்களை லவ் பண்ணல, நீங்க எனக்கு காதலன்னும் இல்லை " என்றாள்.
" இப்ப பண்ணல. ஆனா பின்னாடி... " அவனிழுக்க,
" அதெப்படி நான் லவ் பண்ணுவேன் சொல்லுறீங்க? "
" எல்லாம் ஒரு நம்பிக்கை தான், ஒன்னு பண்ணலாம், இதேபோல எதர்ச்சையாக நாம திரும்ப மீட் பண்ணா ஒத்துப்பீயா.."
" ஓஹோ!! நான் இன்னொரு தடவ உங்களைப் பாப்பேன்னு நம்பிக்கை வேற இருக்கா ?"
" ம்ம்... நான் உன்னைப் பாப்பேன் நம்பிக்கை இருந்தது, பார்த்துட்டேன். அதே போல நீயும் என்னைப் பார்ப்ப! நாம லவ் பண்ணுவோம் நம்பிக்கை இருக்கு. நம்பிக்கை, அதானே எல்லாம்."
" எப்படி என்ன பார்ப்பீங்க ? " எனக் கேட்டாள் உதட்டின் விளிம்பில் சிரிப்பை வைத்துக் கொண்டு.
" அப்ப நீ, உன்னைப் பத்தி சொல்லு, உன்னுடைய அட்ரஸ் கொடு, எங்க அப்பாகிட்ட சொல்லி, உன்னைப் பொண்ணு கேட்க வரச் சொல்லுறேன்"
" அட்ரஸ் எல்லாம் தர முடியாது " என்றாள். ' இவன்கிட்ட இருந்து எப்படியாவது தப்பிக்கணுமே கீர்த்தி ' என எண்ணியவள்.
" சரி நீங்க பார்த்த மாதிரி நானும்
உங்களை இரண்டாவது முறையாக பார்த்தால், அப்ப உங்க ஞாபகம் இருந்தால், பார்க்கலாம் " என்றாள்.
" ஒகே. இதுவும் நல்லா தான் இருக்கு. Wait and see "how is our destiny? " என்றான்.
அவளும்,"yeah! we will see . இப்ப நான் போகட்டுமா ? " என்றுக் கேட்டவளை மனமின்றி வழி விட்டு அனுப்பி வைத்தான். அவளது போனை, அவனிடமிருந்து வாங்கிச் சென்றாள்.
அவள் செல்லும் திசை பார்த்துக்கொண்டே இருக்க, அவனது போன் ஒலித்தது, எடுத்தவன்.
" என்னடா ? "
" எங்க டா இருக்க ? "
" ட்ரேயின்ல தான்டா இருக்கேன்... ஒரு ஹாப்பி நீயூஸ், வந்து சொல்லுறேன் போன வை " என்றான்.
அவனிருக்கைக்கு வந்தான் கார்த்திக். " டேய் எங்கடா போன, என்னடா நியூஸ்?"
" டேய் இருடா சொல்றேன். சதீஷ் கல்யாணத்துல பார்த்தேன்ல அந்தப் பொண்ணு, இப்ப ட்ரேயின்ல பார்த்தேன்டா "
" இந்த ட்ரெயின்லயாடா பார்த்த " அவனது தோழன் ப்ரதீப் கேட்க,
" ஆமாடா. அவ பெயர் கீர்த்தி. அதுமட்டுமில்ல அவகிட்ட லவ்வையும் சொல்லிடேன் "
" அடப்பாவி லவ்வ சொல்லிட்டியா?! அவ என்ன சொன்னா ? " கணேஷ்.
" அவ என்ன சொல்லிருப்பா! இடியட்ன்னு திட்டிருப்பா " என்றான், ப்ரதீப்.
கார்த்திக் அவனை அடித்தான்.
" மச்சி என்ன தான்டா சொன்னா ? " சுரேஷ் கேட்க,
" மச்சி !! இன்னொரு வாட்டிப் பார்த்தால் பார்க்கலாம்ன்னு சொல்லிட்டா டா" என்றான் கொஞ்சம் வருத்தம் கலந்த குரலில்.
" அவளை எப்படி பார்ப்ப? அவளோட நம்பர் , முகவரி எதாவது கேட்டு வாங்கினீயா ? " என்று கேட்டான், ப்ரதீப்.
" ம்ஹூம் வாங்கல, பட் போன் நம்பரை வாங்கிட்டேன். சாரி நானே எடுத்துகிட்டேன் " என்றான் அமர்த்தலாக.
" எப்படி டா போன் நம்பர எடுத்த? அப்ப அவ கொடுக்கலையா ?"
" பெயர் கேட்டதுக்கே அந்த முறை முறைச்சாடா, இதெல்லாம் கேட்டா, அவ்வளவு தான் ட்ரெயின்ல இருந்து தள்ளி விட்ருப்பா " என்றான். " அப்புறம் எப்படி டா எடுத்த ? "
" அதுவா, அவ போன் என்கிட்ட இருந்துச்சு, அதுல இருந்து என் நம்பருக்கு மிஸ்ட் கால் விட்டுட்டேன் " என்றவன், போனை எடுத்து " மை லைவ் " என சேவ் செய்தான்.
" எப்படி டா அடுத்து, அவளைப் பார்ப்ப? எப்படி கண்டுபிடிப்ப ?போன் மூலமாவா? "
" தெரியல மச்சி, எல்லாம் எழுத்தாளர் கையில் தான் இருக்கு " என சொல்லிக்கொண்டு உறங்கச் சென்றான்.
கீர்த்தியின், தோழிகள் அவளிடம்
யாரெனக் கேட்க,
" எனக்குத் தெரியாது. ஆனால், இனிமேல் அவனைப் பார்க்கவே கூடாது " என்றவள், உறங்கச் சென்றாள்.
வருவான்...