கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வருவான் 10

Chithu

Moderator
Staff member
வருவான் 10
நீரில் இருவரும் விளையாடி நனைந்து வெளியே வந்தனர். அவர்களைக் கண்ட பாட்டியோ சிரித்து தலையில் அடித்து கொண்டார்..

" என்ன பிள்ளைங்கப்பா நீங்க, இப்படியா தண்ணீல விளையாடுவிங்க, வாங்க நான் மாத்து துணி தரேன் போட்டுக்கோங்க " என்றார்.

" இல்ல பாட்டி, எப்படியும் காட்டுக்குள்ள இருந்து கிராமத்துக்குப் போறதுக்குள்ள காய்ந்திடும். நாங்க கிளம்புறோம் பாட்டி. அங்க எங்களைத் தேட ஆரம்பிச்சுருப்பாங்க, சீக்கிரமா போகணும் " என்றான்.

" சரிப்பா பார்த்து பத்திரமா போயிட்டுவாங்க " என்றவர் அவர்களை வழியனுப்பி வைத்தார்.

எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு விடைப்பெற்றனர், மனமின்றி தான் அங்கிருந்துச் சென்றனர். மலைவாசி உதவியோடு, அந்தக் காட்டை விட்டுக் கிராமத்திற்கு வந்தனர்.

ஊர்தலைவர் அவர்களைத் தேட ஆட்களை அனுப்பிவைத்திருந்தார். கீர்த்தியின் தாயும் பாட்டியும் அழுதுக் கொண்டே இருந்தனர்.. சமாதானம் செய்தாலும் அவர்களின் அழுகை ஓய்ந்த பாடில்லை. குடும்பமே அவர்களைக் காணவில்லை என்றதும் பயந்து தான் போயிருந்தனர். தன் நண்பனை நினைத்து ப்ரதீப், கணேஷ், சுரேஷ் வருத்தம் கொண்டிருந்தனர்.

கீர்த்தியும் கார்த்திக்கும் வீட்டிற்கு வந்தனர்.

" அம்மா அம்மா... " கீர்த்தி உள்ளே நுழைய தேவி அவளை அணைத்துக்கொண்டு அழுதார்.


" எங்கடி போன? உனக்கு எதாவது ஆயிருச்சோ பயந்துடேன். எனக்கு உயிரே போச்சு டி... " என அழுதார்.

" அம்மா நாங்க காட்டுக்குள்ள மாட்டிக்கிட்டோம். அங்க, இருந்த மலைவாசிகள் தான் எங்களுக்குச் சாப்பாடும் இருக்க இடமும் தந்து நல்ல பார்த்துக்கிட்டாங்கம்மா! கிராமத்துக்கு வர அவங்க உதவிச் செய்தாங்க... எனக்கு ஒண்ணுமில்லை, நான் நல்லாதான் இருக்கேன். " என்றவள் அனைவரின் முகத்தைக் காண, கவலையில் சோர்வாய் இருந்தது.

" ஹேய் ஏன் எல்லாரும் சோகமா இருக்கீங்க? அதான் நான் வந்துடேனே இன்னும் ஏன் உம்முன்னே முகத்த வச்சுருக்கீங்க? ஹேய் பாட்டி என் மேல அவ்வளவு பாசமா உனக்கு எனக்காகவா அழுத?" அவர்களின் மன நிலையை மாற்ற எண்ணினாள்.

" போடி நீ காணாம போனதும், என் உசுரே நின்னு போச்சு , பொம்பலபிள்ளை காட்டுக்குள்ள மாட்டிகிட்டு என்ன என்ன அவசத்தை பாடுதோன்னு பயந்துபோயிடேன். உனக்கு ஒண்ணுன்னா இங்க இருக்க எல்லாராளையும் தாங்கிக்க முடியாது உனக்குத் தெரியாத ? பாசம் வைச்சிருக்காயன்னு கேக்குற,
போடி " என்றவர் தன் முந்தானை கண்ணில் ஒற்றி எடுத்தார்.

" கோச்சுக்காத பாட்டி சும்மா உங்கிட்ட விளையாட்டுக் சொன்னேன்... என் மேல நீங்கலாம் எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்க எனக்குத் தெரியும் பாட்டி போதும் யாரும் அழாதீங்க அதான் நான் வந்துடேன்ல அப்புறம் ஏன் இன்னும் சோக கீதம் வாசிக்கிறீங்க? கல்யாணம் வீடு கலகலன்னு இருக்கவேணாமா " என்றாள்.
ராஜ், பவித்ரா, கார்த்தி, விஷ்ணு என அவளைக் கட்டிக்கொண்டனர்.

" ஹேய் அதான் நான் வந்துடேன்ல எனக்கு ஒண்ணுமில்லை. ப்ளீஸ் பீல் பண்ணாதீங்க. டேய் கார்த்தி அழுகாதடா, ராஜ் நீயுமா சின்னபுள்ள மாதிரி, அழாதீங்க. " என்றாள்,

" உன்னை நாங்க மிஸ் பண்ணிருவோமோன்னு பயந்துட்டோம். அது மட்டும்ல காட்டுல மிருகங்கள் இருக்குன்னு சொன்னாங்க அதுனால உனக்கு எதாவது பிரச்சினை வந்திருச்சோ நினைச்சோம். நீ இல்லாம் எங்களா இருக்க முடியாது டி , உனக்கு ஒண்ணு எங்களால தாங்கிக்க முடியாதுடி " என்றனர்.

" இனிமேல் எங்களை விட்டுத் தனியா போன உன்னைக் கொன்னுடுவேன் " சக்தி.

" போக மாட்டேன்டி " என அவளையும் அணைத்துகொள்ள சனாவும் கட்டிக்கொண்டாள்.

" காட்டுல ரொம்ப பயமா இருந்துச்சாடி, மிருகம் எதுவும் வந்துசா? நீ அத பார்த்தியா, உன்னால
மிருகங்களுக்கு எதுவும் ஆகலையே ? " பவித்ரா கேட்க,

" எந்த மிருகமும் வரல சத்தம் தான் கேட்டிச்சு. நமக்கு தான் காடு,நாடு எல்லாம் ஒண்ணுதானே, சும்மா ஊர் சுத்திப் பார்க்கற மாதிரி இருந்துச்சு பயமே இல்ல எனக்கு.. " என்று அமர்த்தலாகக் கூற

" ம்கும்...., ம்ம்கும்.... " கார்த்திக் அவளைக் கண்டு இறும்பினான்.

" இல்ல... இல்ல... காடு கொஞ்சம் பயமா தான் இருந்துச்சு. நான் ரொம்ப பயந்துடேன். " உண்மையைச் சொல்ல எல்லாரும் வாய்விட்டுச் சிரித்தனர்

கீர்த்தியைக் காண கார்த்திற்க்கு பொறாமையாகத் தான் இருந்தது. இதுவரைத் தன் தந்தை , தோழர்களே என உலகமாய் வாழ்ந்து உறவுகளைப் பற்றி அறியாதவனுக்கு, கீர்த்தியையும், அவர்களின் உறவு, அன்பு , பாசத்தைக் காண அவர்களோடு ஒன்ற ஆசையாக இருந்தது.

" ரொம்ப நன்றி தம்பி, நீங்க இல்லேன்னா, கீர்த்தி எங்களுக்கு முழுசா கிடைச்சிருப்பாளான்னு தெரியாது. அவளைப் பத்திரமா கூட்டிட்டு வந்திருக்கீங்க மறுபடியும் நன்றிப்பா " என்றார் கீர்த்தியின் அம்மா.

" இது என்னோட கடமை அத்தை, என் ப்ரண்டோட குடும்பம் என்னோடு குடும்பம் மாதிரி. அந்தக் குடும்பத்துல யாருக்காவது ஒண்ணுன்னா என்னால தாங்கிக்க முடியாது. நீங்க நன்றி சொல்லி என்னை பிரிச்சிடாதீங்க " என்றான்.


" நன்றி மச்சி.. " என கலங்கியவன், அவனைக் கட்டிக்கொண்டான்.

" உனக்கு வேற தனியா சொல்லணுமாடா, நமக்குள்ள என்ன நன்றி எல்லாம்...." என்றான்.

மீண்டும் அங்கே கல்யாணக் கலகலப்பு வந்தது. காலை உணவை முடித்தக் கொண்டு அனைவரும் கல்யாண வேலையைக் கவனிக்க, சிறியவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

" ஆமா கீர்த்தி நீயும் கார்த்திக்கும் பட்டம் தானே விட்டீங்க எப்படி காட்டுக்குள்ள போனீங்க?" ப்ரதீப் கேட்டிட,

" பட்டம் அறுந்து காத்துல, அந்தப் பக்கமா பறக்க ஆரம்பிச்சு. அது பின்னாடியே ஓடிப் போனதுல அந்த வழியா காட்டுக்குள்ள போயிட்டோம் "

" லூச டி நீ, பட்டம் போன போயிட்டு போகுது அதுக்காக அது பின்னாடியே போவியா? " சக்தி கடிந்து கொள்ள,

" இல்ல சக்தி, அது மாஞ்ச நூலு டி. அந்த நூல் கண்ணுக்கே தெரியாது ,வேற யாருக்கும் அதுனால ஆபத்து வந்திருச்சுன்னா, அதான் எடுக்கப் போனே " என்றாள்.

" உனக்கு எப்படிடா கையில அடிப்பட்டுச்சு? "

" அந்த பட்டம் மரத்துமேல மாட்டி சிக்கிருச்சு அதை எடுக்கும் போது கையை அறுத்திடுச்சுடா "


அன்றைய பொழுதை அவ்வாறே கழிந்தது. மறுநாள், விழாகோலம் கொண்டிருந்தது. அங்கே கிராமத்து மக்கள் கூடியிருக்க, கோவிலில் இதரச் சடங்குகள், முடிய, ராஜ் கவிதாவின் கழுத்தில் தாலிக்கட்டித் தன் மனைவியாக்கிக் கொண்டான். கறி விருந்தென அமர்த்தலாக இருந்தது.


" ஹேய் கீர்த்தி" என ராஜ் அவளைஅழைத்தான்.

" சொல்லு மாமா.. " என்றதும் ஆச்சரியப்பட்டவன்." என்னாது மாமாவா, இதென்ன புதுசா மாமான்னு கூப்பிடுற ? "

" அதுவா உனக்கு கல்யாணம் ஆயிருச்சுல நீ குடும்பஸ்தன் ஆயிட்டியாம். இனி உன்னை மாமான்னு தான் கூப்பிடுணும்மாம். உன்னை "டா" போட்டுக் கூப்பிட்டா உன்னோட பொண்டாட்டிக்கு கோபம் வருமாம்.. அதுனால மாமான்னு மரியாதைய தான் கூப்பிடணும் உன் அத்தை தான் சொல்லுச்சு.. " என்றாள் அப்பாவியாக முகத்தை வைத்து.

" ஹேய் லூசு கவிதா, உன்னை தப்பா நினைக்க மாட்டா! நீ எப்பையும் போல ராஜ்ன்னே கூப்பிடு " என்றான்.

" சரி எதுக்கு கூப்பிட்ட ?" என்றவளின் கைப்பற்றியவள், " தாங்கிஸ் கீர்த்தி" என்றான். " எதுக்கு ? "

" நீ இல்லைன்னா இந்த கல்யாணம் நடந்திருக்காது,. என்னோட காதலை, நம்ம வீட்டுல ஏத்துக்காமாட்டாங்கன்னு நினைச்சேன், ஆனால் கல்யாணம் வரைக்கும் வந்திருக்குனா அதுக்கு நீ மட்டும் தான் காரணம். அதான் தாங்க்ஸ் சொன்னேன்.

" போடா லூசு இதுக்குப் போயா தாங்க்ஸ் சொல்லுவாங்க, நம்ம எல்லாரும் ஒரே குடும்பம் , நீ என்னோட மாமா பையன், உன் வாழ்க்கை நல்லா இருக்கணும் நான் நினைக்க மாட்டேனா? இதுக்குப் போய் நன்றி சொல்லிட்டு. எனக்காக நீ ஒண்ணு மட்டும் செய்யணும் செய்வீயா ? "

" என்ன செய்யணும் சொல்லுடி?"

" நீயும் கவிதாவும் எப்பையும் சந்தோஷ்மா இருக்கணும். சண்டைப் போட்டா, நீயே போய் முதல்ல சமாதானம் பண்ணு, அவ தான் முதல்ல பேசணும் நினைக்காத. எனக்கு உன்னைப் பத்தி நல்லாவே தெரியும், தப்பான முடிவெடுத்துட்டோம் அவளை நினைக்க வைச்சிடாத .முடிந்த அளவுக்கு நீ அட்ஜஸ்ட் பண்ணிப்போ, எல்லாரையும் விட்டு உனக்காக வந்திருக்கா, அவள நல்லா பாத்துக்கோ " அவனுக்கு அறிவுரை வழங்கினாள்.

" கண்டிப்பா, நான் நல்ல பார்த்துப்பேன், கீர்த்தி "

" சரி சீரியஸ்ஸா இருக்காத, சிரி கொஞ்சம். மாப்பிள்ளை மாதிரி இரு, கல்யாணம் ஆன மாப்பிள்ளை மாதிரி தெரியலயே நீ,
கல்யாணமானா முகம் சோகமா ஆயிருமா என்ன ? "

" ஆமா இனி மேல் சைட் அடிக்க முடியாது, தண்ணீ அடிக்க முடியாது. ப்ரண்ட்ஸ் கிட்ட பேசி லேட்நைட்ல வீட்டுக்கு வரமுடியாது அப்படியும் இதேல்லாம் பண்ணா வீட்டுக்குள்ள கூட போக முடியாது , அம்மா சமையல் எவ்வளவு நல்லா இருந்தாலும் கிண்டல் பண்ணித்தான் சாப்பிடுவோம்,
. ஆனால் இப்ப அவ, சமையல் நல்லா இல்லைனாலும் சிரிச்சுகிட்டே சாப்பிடணும் எவ்வளவு கஷ்ட படணும் தெரியுமா ?" என்றான், முகத்தைப் பாவமாக வைத்துக்குக் கொண்டு.

" அடபாவி! இதேல்லாம் உனக்கு ஓவரா தெரியல. கல்யாணம் பண்ணிட்டு சைட் வேற அடிப்பீயா நீ , இவ்வளவு புலம்புற அப்ப எதுக்குடா லவ் பண்ணி, கஷ்டபட்டு கல்யாணம் பண்ண? "

" ஏய் சும்மா சொன்னேடி ... "

" இன்னைக்கே உன்
பொண்டாட்டி கிட்ட, உன்னை அடிவாங்க வைக்கிறேன் இருடி இரு, கவிதாகிட்ட சொல்லுறேன் கவிதா,கவிதா... "
- கீர்த்தி.

" ஹேய் ஹேய் இன்னைக்கு தான்டி எனக்கு கல்யாணம் ஆயிருக்கு அதுக்குள்ள அடிவாங்க வச்சிடாத. உன்னை கெஞ்சிக் கேட்டுகிறேன். நான் சொன்னத எதையும் அவ கிட்ட சொல்லிடாத ப்ளீஸ் " என அவன் கெஞ்ச, " அந்த பயம் இருக்கட்டும் " என்றாள்.

கவிதாவைக் கலாய்த்துகொண்டே அவளை முதலிரவுக்காக தயார் செய்தனர்.. இங்கே ராஜ்ஜையும் தான் கலாய்த்து ஒருவழி ஆக்கிவிட்டனர்.

கீர்த்தி அவளை அறையில் விட சென்றாள்.." கீர்த்தி, தாங்க்ஸ் , நீ இல்லேன்னா.. " என்றவள் ஆரம்பிக்க, " காலைல அவன் இப்ப, நீயாமா? இரண்டு பேரும் சந்தோசமா இருங்க அதுவே போதும். " உள்ளே அனுப்பிவைத்து விட்டு வந்தாள்.

கார்த்திக் தனியாக ஊஞ்சலில் உட்கார்ந்து வானத்தை வெறித்தான், அவனைக் கண்டதும் அருகில் சென்று அமர்ந்தாள்..

" என்ன சாரே, தூங்க போகல ?"

" தூக்கம் வர்றல, அதான் இங்க வந்து உட்கார்ந்து இருக்கேன் "

" ம்ம்... அப்புறம் உங்க ப்ர்ண்டோட கல்யாணம் முடிஞ்சிருச்சு. உங்களுக்கு எப்ப ? "

' எதுவும் தெரியாத மாதிரி கேட்கிறா. இவள....' அவளை ஒரக்கண்ணால பார்த்தவாறு அவளைத் திட்டினான்.

" என்னாச்சு, ஏன் இந்த அமைதி? "

" இல்ல பையன் ரெடியாகி, ஆறுமாசம் ஆச்சு.. பட் பொண்ணு இன்னும் ஒ.கே சொல்லல.. "

" பொண்ணுக்குக் கல்யாணத்துல விருப்பம் இல்லாம இருந்திருக்கும் "

" கல்யாணத்துல விருப்பமில்லாம இருக்கலாம், அந்தப் பையன் மேல எதுவும் இல்லாமையா இருக்கும்" அவனும் பதிலுக்கு.

" அந்தப் பையன பிடிக்காம கூட இருந்திருக்கலாம் "

அவளை ஒரு பார்வைப் பார்த்தவன், " ஆனால் அந்தப் பையன பிடிக்கலைன்னு அந்தப் பொண்ணு சொல்லவே இல்லயே " என்றதும் தடுமாறித்தான் போனாள்.

" அந்தப் பொண்ணு மனசுல என்ன நினைக்கிறா? என்னைய நினைக்கிறாளான்னு தெரிஞ்சுக்கணும், கீர்த்தி எனக்கு ஒரு ஹேல்ப் பண்ணுவீயா? "

" என்ன ? "

" ஒரு பெண்ணோட மனசு ஒரு பெண்ணுக்குத் தான் புரியும் சொல்லுவாங்க, அவளோட மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு என் கிட்ட வந்து சொல்லுறீயா? " எவனும்

" அது...அது... " என முழித்தவள் " அவளை இவ்வளவு லவ் பண்றீயே அப்படி என்ன அவ உனக்கு பண்ணிட்டா?" என்றவள் கேட்க,

" ஏன் ஏதாவது பண்ணாதான் லவ் பண்ணனுமா என்ன?"

" அவளை ஏன் உனக்குப் பிடிச்சுருக்கு? "

" அவ துருதுருன்னு இருப்பா , எவ்வளவு பயம் இருந்தாலும் வெளிக் காட்டிக்க மாட்டா. எல்லாரையும் பேசியே, அவ பக்கம் இழுத்திடுவா. எல்லார்கிட்டையும் பாசமா இருப்பா. அவளோட குடும்பத்தைபார்க்கும் போது, அந்தக் குடும்பத்தில நானும் ஓரு ஆளா இருக்கணும் ஆசை இருக்கு.

அவ குடும்பம் அவ மேல வச்சிருக்க, பாசத்தைப் பார்த்து எனக்குப் பொறாமையாக இருக்கு. அவ மேல வச்சுருக்க நம்பிக்கை, இதெல்லாம் பார்க்கும் போது அந்தக் குடும்பத்தில, நானும் ஒரு ஆள இருக்கணும். அந்த ஆசை, நிறைவேற அவ சொல்லுற பதில் தான் இருக்கு.

அவளால மட்டும் தான் எனக்கு ஒரு நல்ல குடும்பத்தைக் கொடுக்க முடியும். அவளால தான் ஒரு குடும்பம் தரும் சந்தோஷ்த்தை நான் உணர்ந்தேன். தனிவே இருந்து தனியாவே சாப்பிட்டு, தனியா ஒவ்வொரு விழாவைக் கொண்டுடாடுற எனக்கு, ஒரு குடும்பதோட அன்பு எனக்குள் கிடைத்தது அவளால தான்.
அவள நான் எப்போதுமே பார்த்துட்டே இருக்கணும், அவ என் கிட்ட சந்தோஷ்மா பேசிட்டே, இருக்கணும் சண்டைப் போடணும், அப்புறம் சேர்ந்துக்கணும், அவமடியில நான் தூங்கணும், அவ கையல சாப்பிடணும் அவகிட்ட அடம்பிடிக்கணும், என் வீடு முழுக்க, அவளோட வாசம் தான் இருக்கணும், அவளோட பேச்சு சத்தம் இருக்கணும், எனக்குன்னு எல்லாமா அவ தான் இருக்கணும், அவ என்ன ஏதுக்குவாளா? என்னை லவ்பண்ணுவாளா? நீ அவ கிட்ட கேட்டு சொல்லுவியா? எல்லாரோட காதலையும் சேர்த்துவைக்கிற, என் காதலையும் சேர்த்து வைப்பீயா கீர்த்தி? " அவன் கேட்க,

" கார்த்திக், என்னை பொருத்தவரைக்கும் காதல் அது ஒரு வலி. அது எனக்கு வேணடாம் நினைக்கிறேன். கவிதாவும் ராஜ்வும் எவ்ளோ கஷ்டபட்டாங்கன்னு, எனக்கு தெரியும். அவங்க எவ்வளவு வலி அனுபவிச்சாங்க நான் நேர்லே பாத்திருக்கேன். ஏற்கெனவே அப்பா இறந்ததே எனக்கு ஒரு பெரிய வலியா இன்னும் இருக்கு, அதுல இருந்து மீளவே கஷ்டப்பட்டு இருக்கேன்... எல்லார் கிட்டையும் சிரிச்சு பேசினாலும், இன்னும் அந்த வலி, என்ன விட்டு போகல.

காதலிச்சு அதுனால வர வலி என்னால தாங்கிக்க, என் இதயத்துக்கு சக்தி இல்ல.
எனக்கு என் குடும்பம் மட்டும் தான் எனக்கு முக்கியம்.. அவங்களுக்குச் செய்ய வேண்டிய கடமை இருக்கு. இதுல காதல
பத்தி யோசிக்க எனக்கு நேரமில்ல .
நீ நினைக்குறது நடக்காது " என சொல்லியவள் அங்கிருந்து சென்றுவிட்டாள்.. அவனோ அவள் சென்ற திசையை வெறித்தான்.

மறுநாள் கீர்த்தியும் கார்த்திக்கும் பார்ப்பதோடு சரி எதுவும் பேசிக்கவில்லை. கவிதா, ராஜ்ஜூவுடன் அனைவரும் ஊர் வந்து சேர்ந்தனர்.


நாட்கள் மாதங்கள் ஆனது, ஆனால் கார்த்தியும் கீர்த்தியும் பார்த்துக் கொள்ளவில்லை...

அன்று சண்டே வழக்கம் போல அந்த மால் ரொம்ப கூட்டமாக இருந்தது.

கீர்த்தி அர்ஜூனுக்காக, காத்துக்கொண்டிருந்தாள். அங்கே தனது நண்பரைப் பார்க்க வந்த, கார்த்திக் கீர்த்தியைக் கண்டான்.
அவள் தனியா உட்கார்ந்திருந்தாள்.

' கீர்த்தி ஏன் இங்க இருக்கா? தனியா வேற இருக்கா யாருக்காக, காத்திட்டுருக்கா?' என யோசித்தவன் அவளிடம் பேச சென்றான்..
ஆனால் அதற்குள் அங்கே அர்ஜூன் வந்து அவள் எதிரே அமர்ந்தான்.

இருவர் அங்கிருக்க. அவர்கள் பேசுவதை அறிய கீர்த்தியின் பின் பக்கமாக. அர்ஜூனுக்கு முதுக்காட்டி அமர்ந்தான்.

" ஹேய், எவ்வளவு நேரம் டா, உனக்காக காத்திட்டுருக்கிறது, எதுக்கு வர சொன்ன, அதுவும் மாலுக்கு? "

" அது.. வந்து.., கீர்த்தி... " என தயங்கினான்.

" அடச்சீ... சொல்லுடா..,"
அவள் மூன்னே ஒற்றைப் பூவை கொடுத்தவன். ஐ லவ் யூ கீர்த்தி.., " என்றான்..

அதைக் கேட்டு கீர்த்தியை விட கார்த்திக்கே அதிர்ந்தான். அவனை அடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றினாலும் கீர்த்தி உடன் இருந்ததனால் அமைதியாக அமர்ந்திருந்தான்.

" தெரியல கீர்த்தி, உன் மேல எப்படி காதல் வந்ததுன்னு. ஆனா, வாழ்ந்தால் உன்கூட தான் வாழணும். உன் வார்த்தைக்காகக் காத்திருக்கேன்... " என்றான்.

அர்ஜூனும் கார்த்தியும் அவள் சொல்லுப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தனர்..
அவனது விழிகளைப் பார்த்தவள், அந்தப் பூவை வாங்கி, ஐ டூ லவ் யூ அர்ஜூன் என்றதும், அந்த நொடி கார்த்திக்கிற்கு இதயத்தை யாரோ கத்தியால் குத்தி கிழித்ததுப் போலவே இருந்தது.

வருவான்....

 
Top