கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வருவான் 12

Chithu

Moderator
Staff member
வருவான் 12
" டேய் மச்சி நான் காதல தோத்துடேன்மச்சி, காதல மட்டுமில்ல வாழ்கையிலும் நான் தோத்துடேன் டா. மச்சி நான் செய்ற எல்லா வேலையும் எனக்கு வெற்றி தானே மச்சி, ஆனால் இந்த லவ் விசயத்தில மட்டும் நான் தோத்துடேன் டா. அவ என்னை லவ் பண்ணலடா.. முதல்முறைய ஒரு பெண்ணுகிட்ட தோத்துப் போயிடேன் மச்சி. என்னால இத தாங்க முடியல. என்னைய விட அவளுக்கு அவன தான் மச்சி பிடிச்சுருக்கு, அவ, அவனதான் மச்சி லவ் பண்ற, " அழுதுக் கொண்டே அவர்களிடம் பகிர்ந்தான்.


அவனுடையை நண்பர்களுக்கு ஒண்ணும் புரிந்திடவில்வை.. கார்த்திக், அழுவதை இப்பொழுதான் பார்க்கிறார்கள். எதாவது பிரச்சினையாக இருக்குமோ என்றெண்ணி அவனிடம் கேட்க ஆரம்பித்தனர்.

" டேய் மச்சி என்னாடா பிரச்சினை உனக்கு?லவ்ல வாழ்கையில தோத்துட்டேங்ற, என்ன நடந்துச்சு எங்கிருந்து வர்ற
யாரப்பார்த்த யார்கிட்ட பேசிட்டு வர்ற "

கார்த்திக், மாலில் நடந்ததைக் கூறினான். அதைக் கேட்ட அவன் நண்பர்கள் அதிர்ச்சியிலும் சந்தேகத்திலும் இருந்தனர்.

" டேய் கீர்த்தி, அர்ஜூன லவ் பண்றாளா? என்னால நம்பவே முடியலடா " என்றான் கணேஷ்.

" ஆமா, அதைக் கேட்டதலிருந்து என் இதயத்துல இருந்து யாரோ கத்திய இறக்குனது மாதிரி இருந்துச்சு டா "

" கார்த்திக், கீர்த்தி அப்படிலாம் கிடையாதுடா
அவ அர்ஜூன லவ் பண்ணிருக்க மாட்டாள். அவங்க பேசினத, நீ முழுசா கேட்காம பாதி மட்டும் கேட்டு தப்பா புரிஞ்சுருட்டு இருக்கன்னு நினைக்கிறேன் " என்றான் ப்ரதீப்

" டேய் நீ என்ன லூசாடா, அவ தான் அவன் காதல ஏத்துகிட்டால அப்புறம் என்னடா.... அவ அவன தான் லவ் பண்றா இதுல தப்பா புரிஞ்சுகிறதுல என்ன இருக்கு " சுரேஷ்..

" டேய் கார்த்திக், நீ வேணா கீர்த்தி கிட்ட பேசிப் பாறேன் அவ என்ன சொல்லுறான்னு கேளுடா " .

" எதுக்குடா கேட்கணும், நான் போய் கேட்க, அவா ஆமா நான் அர்ஜூன் தான் லவ் பண்றேன், நீ உன்னுடைய பெட்ல தோத்துட்டேன்னு சொல்லுவா. அதைக் கேக்க சொல்லுறியா? அதெல்லாம் கேட்டால், நான் அந்த இடத்தில செத்துருவேன்டா "

" டேய் ஏன்டா, இப்படி எல்லாம் பேசுற! கீர்த்தி அப்பிடி பேசுறவ கிடையாதுடா. அவ யாரையும் கஷ்ட படுத்தமாட்டாள்.நீ அவ கிட்ட, பேசுறது நல்லதுடா "

" டேய் ப்ரதீப், இங்க ஒருத்தன் அழுத்துட்டு இருக்கான். அவன் அழுறதுக்கு அவ தான் காரணம் அவளுக்குப் போய் சப்போர்ட் பண்ற... " சுரேஷ்.

" டேய் சுரேஷ். நான் அவளுக்கு சப்போர்ட் பண்ணலடா. இவன் தப்பா புரிஞ்சிருக்கக் கூடாதுன்னு தான் அப்படி பேசுறேன் "

" டேய் சும்மா சும்மா தப்பா புரிஞ்சிக்கிட்ட தப்பா புரிஞ்சிக்கிட்டன்னு சொல்லாத. இப்ப தான் அவள பத்தி தெரியுது, கார்த்திய வீட்டுக்குக் கூப்பிட்டிருக்கா, அவன் கூட ஒரு நாள் காட்டுல இருந்திருக்காள்.. ஆனால் லவ்வேவேணான்னு சொல்லுவாளாம். அப்றம் அவளே அர்ஜுன் கிட்ட லவ் பண்றேன்னு சொல்லுவாளாம். இவன் கிட்ட அவளுக்கு வேண்டியது எதுவும் கிடைக்கல, அவன் கிட்ட கிடைச்சனால, அவன்கூட போயிட்டாள். அவன லவ் பண்றேன்னு சொல்லிட்டாள். அதான் அவ கேரக்டர். இப்ப அர்ஜூன் அடுத்து யாரா இருக்குமோ? " என சொல்லி முடிப்பதற்குள் கார்த்திக்கின் கை சுரேஷ்ஷின் கன்னத்தில் இறங்கியது.. அவன் சட்டையைக் கொத்தாக பற்றியவன்.


" டேய் கீர்த்தியைப் பத்தி தப்பா பேசுன உன்னைக் கொன்னுடுவேன்டா அவள பத்தி உனக்கு என்னடா தெரியும், அவள தப்பா பேசுறதுக்கு உனக்கு என்னடா தகுதி இருக்கு. நீ சொல்லுற மாதிரி எல்லாம் அவ கிடையாது , அவ அசைப்பட்ட எல்லாம் அடைய பணக்காரனதேடி போறவ கிடையாது.. நான் அவள லவ் பண்றேன் தான், அவ என்ன லவ் பண்ணனும் நினைச்சது உண்மை தான். அதுக்காக அவ என்னை மட்டும் தான் லவ் பண்ணனும் இல்ல அவளுக்கு என்ன பிடிக்கல்ல. அர்ஜூனை தான் பிடிச்சுருக்கு அதுக்கு அவ தப்பான பொண்ணு சொல்லுவியா,கீர்த்தி பத்தி இன்னொரு தடவ எதாவது தப்பா சொன்ன அப்புறம் நான் மனுசனாவே இருக்க மாட்டேன். "

" டேய் இவ்வளவு கோவம் வரக் காரணம் , அவமேல வச்ச லவ்னால தானே அப்ப அவ கிட்ட போயி பேசுடா "

" இல்லடா ப்ரதீப்.. இனிமேல் கீர்த்தியை நான் பார்க்க போறது இல்ல.நான் பெட்ல தோத்துடேன் அவகிட்ட நான் சொன்னதுமாதிரி அவளைப் பார்க்க மாட்டேன் அவள டிஸ்டர்ப் பண்ணமாட்டேன் " என்றான் தீர்க்கமாக,

" டேய் நீ தப்பான முடிவெடுக்குறன்னு நினைக்கிறேன். இன்னோரு வாட்டி யோசிடா கார்த்திக் "

" இதுல யோசிக்கறதுல ஒண்ணுமே இல்லடா, அவ்வளவு தான் எல்லாம் முடிஞ்போச்சு எனக்கு நீங்க எல்லாரும் ஒண்ணு செய்யனுடா "

" என்னடா ? "

" எனக்கு சத்தியம் பண்ணுங்கடா " கார்த்தி

" எதுக்குடா "

" நீங்க கீர்த்தி பத்தி ஒருவார்த்த தப்பா பேச கூடாது, அவகிட்ட இத பத்தி எதுவும் பேசவே கூடாது.. என்னைக் காதலிக்கலேன்னு அவள திட்டவோ அவ மேல கோவபடவோ கூடாது , அவகிட்ட இதபத்தி எதையுமே சொல்லக் கூடாது அவள பார்த்தா கூட எப்பையும் பேசுற மாதிரி பேசுங்க. நான் சொன்ன மாதிரி செய்வேன்னு சொல்லி சத்தியம் பண்ணுங்கடா "

" சரிடா நாங்க, சத்தியம் பண்றோம் கீர்த்தி கிட்ட இத பத்தி பேசமாட்டோம் " என்றனர்.

" சாரிடா சுரேஷ், கீர்த்தியைப் பத்தி தப்பா பேசுனதுனால, கோபம் வந்துருச்சு அதான் அடிச்சுட்டேன் சாரிடா மச்சி "

" சாரிடா மச்சி நானும் அப்படி பேசிருக்க கூடாது " என்றான் சுரேஷ்..

" சரிடா நான் கிளம்புறேன்டா... "

" டேய் கார்த்திக், எங்கடா போற?"

" நான் வீட்டுக்குப் போரேன்டா..."

" டேய் இங்கயே இருடா கொஞ்சம் நேரம் கழிச்சுப் போடா "

" இல்லடா, நான் கிளம்புறேன்.. என்னால இங்க இதுக்கு மேல இருக்க முடியலடா... " என எழுந்தான்..


" கார்த்திக் நீ குடிச்சிருக்க, அதுனால நீ எங்கையும் போகாத நைட்டு ஆயிருச்சு இருந்து காலைல போடா.."

" இல்ல கணேஷ், நான் ஸ்டடீயா, தான் இருக்கேன்.... சோ நான் வீட்டுக்குப் போயிருவேன். நீ கவலைப் படாதிங்கடா.. " என்றவன் வீட்டிற்குச் சென்றான்.
அங்கே அவன் தந்தை ரகுநாத் அவனுக்காகக் காத்திருந்தார்.

" டேய் கார்த்திக். இன்னைக்கு செம்ம பார்ட்டியா?யாரு ட்ரீட் கொடுத்தா ?"

" அப்பா, பார்டியெல்லாம் இல்ல சும்மா ப்ரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து குடிச்சோம்... " என்றவனின் முகத்தில் சோர்வைக் கண்டார்..

" ஏன் கார்த்திக் டல்லா இருக்க,எதாவது பிரச்சினையா? "

" பிரச்சினையா ? எனக்கா அப்படியெல்லாம் இல்ல அப்பா "

" இல்லையே உன்னைப் பத்தி எனக்கு தெரியாதாடா உன் முகமே சொல்லுது உனக்கு ஏதோ பிரச்சனைன்னு.சொல்லு என்ன பிரச்சனை? "

" அப்பா, ட்ரீங்ஸ் பண்ணதால, தலை வலிக்குது. அதுனால முகம் கொஞ்சம் டல்லா இருக்கு, பிரச்சனை இல்ல, நான் போயி ரெப்பிரஷ் பண்ணிட்டு வந்துடுறேன்.." என்று சமாளித்தான்.

" ஒ.கேடா சீக்கிரம் வா பிஸ்னஸ் விசயமா பேசணும் " என்றார். " இதோ வரேன்ப்பா..." தன்னறைக்கு வந்து கதவை தாழிட்டவனால் அழுகையை அடக்க முடியவில்லை. குளியலறைக்குள் சென்று சவர் அடியில் தன்னை நனைத்தவன் முழுதாய் அழுது கரைந்தான். தன்னுடையை மாற்றி வெளியே வந்தவன், மறைத்து வைத்திருந்த அவளது போட்டோவை எடுத்துப் பார்த்தான்.. ராஜ் எங்கேஜ்மென்ட்டில் அவளைப் போட்டோ எடுத்தவன், அதை பெரியதாய் ப்ரேம் போட்டு வைத்திருந்தான்.. இரவு அந்தப் புகைப்படத்தோடு தான் நேரத்தைக் கழிப்பான். முத்தம் கொடுப்பதிலிருந்து, திட்டுவது வரைக்கும் அந்த புகைப்படத்துடன் தான்
இன்று அதைக் கண்டு அழுதான்...

" ஏன்டி உனக்கு என்னை பிடிக்கல? நான் நான் என்னடி பண்னேன். உன் பின்னாடி சுத்தல, உன்னைத் தொந்தரவு பண்ணல, என்னை லவ் பண்ண சொல்லி உன்னை கஷ்டபடுத்தல, நான் அப்படி இல்லாதனால தான் உனக்கு என்னை பிடிக்காம போச்சா? எல்லாரையும் போல நான் இல்லடி, உன் கஷ்டபடுத்தி வற்புறுத்தி வர காதல் எனக்கு வேணாம் நான் உன்னை நெருங்கல தான். ஆனால் அப்படி இருந்தது தப்பு உணர வச்சிட்ட. இனி காதல் ஒண்ணு என் வாழ்க்கையில இல்ல. எல்லாம்,உன்னோட போயிருச்சுடி," அழுது புலம்பினான்.

" கார்த்திக் " மீண்டும் அவர் அழைக்க... " இதோ வரேன்ப்பா " என்றவன் போட்டோவை மறைத்து வைத்துவிட்டு முகத்தைத் துடைத்துக்கொண்டு கீழே இறங்கி அவர் அருகில் அமர்ந்தான்.

" சொல்லுங்க அப்பா.. "



" இல்லப்பா அமேரிக்கா ப்ராஜட் இருக்கே.. அதுக்கு யார அனுப்பலான்னு உங்கிட்ட கேட்டு இருந்தேன் யாருன்னு முடிவு பண்ணிட்டியா கார்த்திக் ? "

" அந்த ப்ராஜட் நானே பண்றேன்ப்பா "

" டேய் ஆறு மாச ப்ராஜட் அமேரிக்காக்குப் போகணும் என்னால உன்னை விட்டு இருக்கு முடியாதுடா "

" அப்பா சின்ன பிள்ளைமாதிரி பேசாதீங்க , இது நம்ம ப்ராஜட் நாம தான் செய்யணும். அதுனால நானே போறேன் ப்ளைட் டிக்கெட் புக் பண்ணிருங்க "

" சரிடா நீயே போ உனக்கு ஒரு புது அனுபவம் கிடைச்ச மாதிரி இருக்கும் " என்றார்.

" நன்றிப்பா, உங்கள எந்த ஃபங்சன்ல கூப்பிட்டுருக்காங்க?"

" mumbai art festival நடக்க போகுது அங்க தான் கூப்பிட்டுருகாங்க உன்னைக் கூட்டிட்டுப் போலாம் நினைச்சேன். உனக்கு art பிடிக்குமே. ஆனா, நீ தான் அமேரிக்கா போறீயே " முகத்தில் வருத்தத்தைக் காட்டினார்.

" இட்ஸ் ஓ.கே அப்பா... இன்னொருவாட்டி பார்த்துக்கலாம்,, நான் தூங்குப்போறேன் குட் நைட் ப்பா... " அங்கிருந்து நகர்ந்தான்.

தன்னறைக்கு வந்தவன், அமேரிக்கா செல்ல, தேவையானதையும் தனது ஆடையை எல்லாம் எடுத்துவைத்தான். மறுபடியும் அந்தப் போட்டோவை எடுத்து பார்த்தான்.. " நான் இனிமேல் உன்னைப் பார்க்கவே போறதில்ல கீர்த்தி. நீ அர்ஜூன் கூட சந்தோஷ்மா இருக்கணும் உன்னுடைய வாழ்க்கையில இனி நான் இல்ல.. ஆனால் என் வாழ்க்கையில வந்த முதலும் கடைசி பெண்ணும் நீ தான். லவ் யூ கீர்த்தி " என முத்தமிட்டு அழுதான்.

மறுநாள் காலையில் கார்த்திக்கோடு ஏர்போட்டுக்கு ரகுநாத்தும் வந்திருந்தார். அவனை வழியனுப்ப வந்தார்.

" டேய் நீ தான் போகணும்ன்னு இல்லடா, இன்னும் டைம் இருக்கு. நம்ம ஸ்டாப் யாரையாவதி அனுப்ப சொல்லலாம். ப்ளீஸ் நீ போகாதடா " என்று சிறு பிள்ளை போல கெஞ்சினார்.

" அப்பா, சின்ன பிள்ளை மாதிரி பேசாதீங்க. ஆறுமாசம் தானே சீக்கிரமா போயிரும்ப்பா. நீங்க கவலைபடாம இருங்க " என்று ஆறுதல் அளித்தான்.

" சரிடா அப்ப அப்ப போன் பண்ணு ப்ராஜட் சீக்கிரமா முடிச்சிட்டேனா கூட சீக்கிரமா வந்திரு " என்றார்.


" நான் போயிட்டு வரேன்ப்பா, உடம்பு பார்த்துகோங்க., ட்பெல்ட் சரியா போடுங்க.. டேக் கேர் பா"

" கார்த்திக், பார்த்துப் போடா... உடம்பு பார்த்துக்கோ போன் பண்ணு.., டேக் கேர் மை சைல்ட்.. " என்றவனை அணைத்தார்.

" ஓ.கேப்பா...." என்றவன் உள்ளே செல்ல பார்மாலீட்டிஸ் எல்லாம் முடிந்து உள்ளே அமர்ந்தான்.. இன்னும் ஐந்து நிமிடத்தில் ப்ளைட் கிளம்ப இருந்தது.

" நான் இனிமே இந்தியா வரப் போறது இல்லப்பா.ப்ராஜட்க்காக மட்டும் நான் அமேரிக்காக்குப் போல, என் வாழ்க்கையில எல்லாம் முடிஞ்சு போச்சு நான் கஷ்டபடுறத்த உங்களால தாங்கிக்க முடியாது எனக்கு தெரியும்ப்பா, அதான் நான் அமெரிக்கா போலாம் முடிவு எடுத்துடேன்.. என்னை மன்னிசிருங்கப்பா ' என தனக்குள்ளே கூறிக்கொண்டான் ப்ளைட் கிளம்ப கணத்த இதயத்தோடு அமேரிக்காவிற்குச் சென்றான்.

வருவான்....
 
Top