வருவான் 14
மனதில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, சொல்ல முடியாத சந்தோஷத்தில் இருந்தாள் கீர்த்தி. ' யார் அந்த ஓவியத்தை வாங்கிருப்பா? ' அதே யோசனையில் தான் அந்த மூவரும் இருந்தனர்." எந்தப் பேக்குடி இந்த ஆர்ட்ட போய் வாங்குச்சு. அவனுக்குக் கண்ணு தெரியுமா? தெரியாதா? அவனுக்கு ரசனையே இல்ல இந்த ஆர்ட்டைப் போய் வாங்கிருக்கான்... " சக்தி கிண்டல் செய்ய,
" அடியே கொழுப்புடி உனக்கு, என் ஆர்ட்க்கு என்ன குறைச்சல் ?"
" இல்ல கீர்த்தி, இங்க எத்தனையோ ஓவியம் இருக்கச்ச, உன் ஓவியத்தை வாங்கின பேக் நான் பார்த்தே ஆகணும் யாரா இருக்கும் அந்த பேக்கு ?" யோசிப்பது போல் நின்றவளை முறைத்தாள் கீர்த்தி..
" அந்த பேக்கு நான் தான்மா " என்று குரல் வந்த திசையை நோக்கி நால்வரும் திரும்பினார்கள்.
அங்கே கோர்ட் சுட்டுப் அணிந்து பக்க பிஸ்னஸ்மேனாக, அந்தப் பெஸ்டிவலின் சிப் கெஸ்ட்டாக கார்த்திக்கின் தந்தைதான் அங்கே சீப் கெஸ்ட்டாக வந்திருந்தார்.
" அதை நான் தான் வாங்கினேன். அந்த ஆர்ட் எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது. அது மட்டுமில்ல அந்த ஓவியத்தை வரைந்த பொண்ணும் நல்ல பொண்ணு அந்தப் பொண்ணுக்காகவும் தான் வாங்கினேன். " என்றார்.
" என் ஆர்ட்டை, வாங்கினதுக்கு ரொம்ப நன்றி சார். எங்க என் ட்ராயிங் எல்லாம் யாரு வாங்குவான்னு கவலையா இருந்திச்சு? ஆனா, நீங்க வாங்கினது ரொம்ப பெருமையா இருக்கு.. உங்கள அந்தக் காப்பகத்தில பார்க்கும் போது சாதாரண ஆள் மாதிரி தான் இருந்தது. ஆனால் இங்க உங்கள இப்படி பாப்பேன் நினைக்கவே இல்ல சார். எவ்வளவு பெரிய பிஸ்னஸ்மேன சாதாரண ஆள் மாதிரி நம்ப முடியல "
" கீர்த்திமா இடத்துக்கேற்றார் போல் நம்ம இருக்கணும் இது ஒரு ஃபங்சன்மா.இங்க நிறைய வி.ஐ.பிஸ் வருவாங்க நாம அவங்களுக்கு ஏற்றார் போல இருந்துக்கணும் .அங்க அந்தக் காப்பகத்துல குழந்தைகள் கூடச் சாதாரணமா தான் இருக்கணும். அங்க இங்க இருக்கிற மாதிரி இருந்தா குழந்தைகள் நம்மல பாத்து பயப்பட தான் செய்வாங்க என்னோட ப்ர்சனல் விசயங்கள எப்பையும் சாதாரணமா தான் இருப்பேன் ஆபிஸ்லா இப்படி தான் இருப்பேன். "
" எப்படி சார் என் பெயரு உங்களுக்கு தெரியும்? "
" அதுவாமா நான் தமிழ்நாடுல இருந்து வந்து கலந்துகிட்டவங்க டீடெய்ல்ஸ் பார்த்தேன். அப்போ உன்னைப் பத்தி தெரிஞ்சுகிட்டேன்... நம்மூர் பொண்ணு அது மட்டுமில்ல காப்பகத்தில நீ சொன்னது எனக்கு ரொம்ப பிடுச்சுருந்ததுமா. உன்னுடைய ஆர்ட்டும் பிடிச்சுருந்தது நானே வாங்கிடேன்... "
" நன்றி சார் நீங்களும் மதுரை தான? "
" ஆமா நானு மதுரை தான்மா "
மதுரையில இருந்துட்டு இவ்வளவு பெரிய பிஸ்னஸ்மேன வளர்ந்துருக்கிங்கன்னா ரொம்ப பெருமையா இருக்கு சார் "
" சாரி சார் உங்கல தெரியாம பேக்குனு சொல்லிட்டேன் " என்றாள் சக்தி தயக்கத்தோடு
" அதான் தெரியாமன்னு, நீயே சொல்லிட்டியேமா பராவாயில்லைமா, நாளைக்குப் பாக்கலாம், நான் வரேன்ம்மா " அங்கிருந்து நகர்ந்துவிட்டார்..
" கீர்த்தி வெறும் கையோட திரும்பிருவோமோன்னு பயந்துட்டே இருந்தேன். பரவாயில்லை இவ்வளவு பெரிய அமௌண்ட்டோட போறோம் சூப்பர் கீர்த்தி கண்டிப்பா டீரிட் வேணும்..... "
" கண்டிப்பா ஜீவா ட்ரீட் உண்டு. பட் இங்க இல்ல நம்ம வீடுல ஓ.கேவா..."
அர்ஜூன், ' இதுதான்டா சரியான நேரம் சக்திக்குப் பொஸ்ஸிவ் தட்டி எழுப்பிவிடுவோம்..' என்று எண்ணியவன்.
" ஹேய் வாழ்த்துக்கள் கீர்த்தி" அவளை அணைத்தவாறே வாழ்த்துக் கூறினான். அர்ஜூன்.
" டேய் என்னடா பண்ற தள்ளிபோடா " என அணைத்தவனின் காதினுள் கிசுகிசுத்தாள்.
" ஹேய் சக்திய, பொறாமை பட வைக்கத்தான் இப்படி பண்றேன்..." என்றான் அவளைப் போலவே
" அதுக்கு, நீ கட்டிபிடிக்க நான் தான் கிடைச்சேனா? "
" வேற பொண்ணுன்னா, என்னைச் செருப்பால அடிப்பாங்கா. அதான் உன்னை கட்டிப்பிடிக்கிறேன் " என்றான்.
" நான் மட்டும் உன்னை அடிக்கமாட்டேன் நினைக்கிறியா ? "
" நீ செருப்பால அடிக்க மாட்ட கீர்த்தி அதான்... " என்றவன் அவனிடமிருந்து விலகினான்.
சக்திக்கும், அவன் எண்ணியது போலவே கோபம் வர அந்த இடத்தை விட்டு சென்றாள்.. ஜீவா அர்ஜூனை முறைத்தவாறே நின்றான்.
" இவன் ஏன் என்மேல இவ்வளவு கோபமா இருக்கான் கீர்த்தி? "
" அவன் ப்ரண்ட கட்டிபிடிச்சா அவனுக்கு கோபம் வராதா? "
" என் ப்ரண்ட் கட்டிபிடுச்சா அவனுக்கு என்ன ? "
" நல்ல தான் எங்கிட்ட பேசுற அவன்கிட்ட சொல்லிப்பாரு அப்ப தெரியும், சரிவா போய் பார்க்கலாம் எங்க போயிருக்கான்னு "
அவளைத் தேடி அலைய, அவளோ கார்
பார்க்கிங் வந்து நின்றுகொண்டாள். தேடி அலைந்தவர்களுக்கு அவளைக் கண்டதும் தான், நிம்மதி வந்தது அவளருகே சென்றனர்.
" எங்கடி போனா உன்னை எங்க எல்லாம் தேடுறது ? "
" எனக்குத் தலை வலிச்சுது கீர்த்தி, அதான் கிளம்பி இங்க வந்துட்டேன் வா வீட்டுக்குப் போலாம் "
" சரி டி வா கிளம்பலாம் " என நால்வரும் வீட்டிற்குச் சென்றனர்... வரும் வழி எல்லாம் அமைதியாக வந்தனர்... வீட்டிற்கு வந்ததும் ரெப்பிரஸ்ஸாகி சாப்பிட அமர,. சக்தி, தனக்கு சாப்பாடு வேண்டாம் என்று மறுத்து தோட்டத்திற்குச் சென்று விட்டாள்..அவள் செல்ல அர்ஜூன் கீர்த்தியைக் கண்டான்.
" ஹேய் என்னை ஏன் பார்க்கிற? இதுக்கெல்லாம் நீ தானே காரணம் அப்ப நீ தான் போய் சமாதானம் பண்ணனும்" அவனை மாட்டிவிட,
" நான்னா! இன்னும் அதிகமா என் மேல கோபப்பட்டா என்ன பண்றது ?"
" அது உன்னுடைய ப்ராபலம். நீ தான் சால்வ் பண்ணனும்.. இது தான் கரெட் டைம் போய் ப்ரோபோஸ் பண்ணு அர்ஜூன்.."
" முடியாது, உன் மேல எனக்கு அப்படி எண்ணமில்ல. அப்படி இப்படி ஏதாவது சொல்லிட்டான்னா என்ன பண்றது? "
" வேற பொண்ண பார்த்துகலாம் டா"
" ஓய் என்ன விளையாடுறீயா ? "
" லூசுடா நீ போய் கெஞ்சி கை, கால விழுந்தாவது அவள கரைட் பண்ணுவியா, உனக்கு எல்லாத்தையும் நானே சொல்லனுமாடா போடா "
" வெற்றியுடன் வருகிறேன் " தைரியமாக எழுந்தான்.
" எவ்வளவு அடிக் கொடுத்தாலும் வாங்கிக்கணும் ஒடிவந்திட கூடாது புரியுதா...." என்றாள்.
" ச்சீ போடி " என்றவன் தோட்டத்திற்கு விரைந்தான்...
" என்ன நடக்கிது கீர்த்தி, நீயேன் அர்ஜூனை, சக்திய சமாதானம் படுத்த அனுப்புற. ப்ரோபோஸ் வேற பண்ண சொல்லுற, அப்பாக்குத் தெரியாம பண்றது ரொம்ப தப்பு அவருக்குத் தெரிஞ்சா கஷ்ட படுவாரு கீர்த்தி. அர்ஜூன் சக்திய லவ் பண்றானா ? "
" அர்ஜூன் சக்திகிட்ட ப்ரோபோஸ் பண்ணதான் எங்கூட வந்தான். அதுமட்டுமில்ல இந்த விசயம் அப்பாவுக்கு தெரியும், சக்திக்கு ஒ.கேன்னா எனக்கு ஒ.கேமா அவர் சொல்லிட்டார். எனக்கு என்ன பயம்ன்னா அவ இத எப்படி எடுத்துக்க போறான்னு? எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தெரியல. உண்மையில அவளுக்குக் காய்ச்சல் வந்திருச்சுனா அதான் ரொம்ப பயமா இருக்கு "
" அவளுக்கா காய்ச்சல் வரும் நினைக்கிற. அவளால அர்ஜூனுக்கு வராம இருந்தா சரி தான் வா நாம சாப்பிடலாம் "
அவனும் தோட்டத்திற்கு செல்ல, தேகத்தை வருடிய தென்றல் அங்கே தவழ, வானிலவாய் அவ்விருளில் அவள் மட்டும் தனித்திருந்தாள். அவளைக் காண உள்ளுக்குள் காதல் ஊற்றெடுக்க, படபடக்கும் இதயத்தை தட்டிக்கொடுத்தவாறே அவளருகில் வந்தான்..
அவனைக் கண்டதும், மனம் கடிவாளமின்றி எகிற ஆரம்பித்தது. பட்டாம் பூச்சியாய் இமைகள் படபடக்க, இதழ்களைக் கடித்து அந்நிலையில் தன்னைக் கட்டுபடுத்த முயன்றாள் சக்தி..
" சக்தி ஏன் சாப்பாடு வேணா சொல்லிட்ட ?"
" எனக்குப் பசிக்கல அதான் வேணான்னு சொல்லிட்டேன். "
" ஏன் என்னாச்சு, ஏன் கோபமா இருக்க. யாருமேல இவ்வளவு கோபம்? "
" கோபமா, எனக்கா, யாரு மேல இருக்குன்னு நினைக்கிறீங்க ? "
" இல்ல இன்னிக்கு நான் கீர்த்திய கட்டிப்பிடிச்சதுனால என் மேல கோபமா இருக்கீயா? "
" நீங்க யாரவேணா கட்டிபிடிங்க, எனக்கு என்ன? நான் யாருங்க உங்க மேல கோபடுறதுக்கு உங்களுக்கும் எனக்கும் என்ன இருக்கு " என்றவள் அவனைத் தாண்டிச் செல்ல. அவள் கையைப் பற்றினான்..
" நம்ம இரண்டு பேர் குள்ளையும் ஒண்ணுமில்லியா சக்தி ? " கண்ணில் காதல் வழிய, கையை அழுத்திக் கேட்டவனைக் காணத் தடுமாறினாள்..
" என்ன இருக்கணும் நினைக்கிறிங்க மிஷ்டர் அர்ஜூன் "
" லவ் " என்றதும் அவனையே பார்த்து நின்றாள்..
" ஐ லவ் யூ சக்தி , நான் உன்னை ஒரு வருசமா காதலிக்கிறேன் " என்றவன் அவளைப் பார்த்ததுலிருந்து இங்க வந்தது வரைக்கும் கூறிமுடிக்க... அவன் கன்னத்தில் ப்ளாரென்று அடித்தாள் சக்தி.
" நீ லவ் பண்ணா எங்கிட்ட வந்து சொல்ல வேண்டியது தானேடா.. அது ஏன் கீர்த்தி கிட்ட போன, நான் உன்னை முதல்முறையா உங்க வீட்டுல உன்னைய பார்த்ததுமே, எனக்கு உன்னைய பிடிச்சது , ஆனால் நீ கீர்த்திகிட்ட மட்டும் பேசுனீயா, அதான் கொஞ்சம் கோபம்... நீ கீர்த்திகிட்ட பேசும் போது எனக்குப் பொறாமை வந்தது. நீ மும்பைக்கு வரேன் கீர்த்தி சொன்னப்பா ரொம்ப சந்தோஷ்மா இருந்தேன்.. இன்னைக்குப் ப்ளைட் உன் கூட தான் உட்கார்ந்து வரணும் வேண்டிட்டே இருந்தேன். ஆனால் கீர்த்தியும் ஜீவாவும் சந்தேகபடுக்கூடாதுன்னு தான் அவங்க கிட்ட கேட்கிற மாதிரி கேட்டேன். குழந்தை காப்பத்துல நீ சொன்னப்பா உன் மேல இன்னும் காதல் அதிகமாச்சு. ஆனால் இன்னைக்கு எவ்வளவு தைரியம் இருந்தா கீர்த்தி என் முன்னாடி கட்டிபிடிப்ப அதான் அடிச்சேன் "
"அடிப்பாவி.... அதுக்கா அடிச்சா? என்னா அடி... வலிக்குதுடி " கன்னத்தைத் தடவியவாறே கூறினான்.
" சாரி அர்ஜூன் கோபத்தல அடிச்சுடேன்... " அவன் கன்னத்தை மெதுவாகத் தடவினாள்.. ஏனோ மயிலறகால் வருடியது போல இருந்தது.. அவளை அணைத்தவன், அவள் இதழை நோக்கினான்"
ஒய் என்னது இது? "
" அடிக்கிற கைதான் அணைக்கும் சொல்லுவாங்க அடிச்சேல இப்ப அணைக்கனும் அதான் இப்படி "
அவனுடைய நோக்கம் அவளுக்குப் புரிந்து அவளிணங்க இதழ் இரண்டும் சேரும் பொழுது இரவரது கூச்சலைக் கேட்டு தள்ளி நின்றனர்..
" நாங்க எதுவும் பார்க்கலப்பா, நாங்க எதுவும் கேட்கலப்பா " என்றனர்.
" இந்த கொசுகள் தொல்லை தாங்க முடியலயே "
" டேய் நாங்க தொல்லைன்னு இன்டேரெக்டா சொல்லிறீயா?"
" இத விட டேரட்டா சொல்ல முடியாது கீர்த்தி. இப்ப எதுக்கு இங்க வந்திங்க ?"
" டேய் நாங்க உன் நண்பர்கள்டா...பிகரைப் பார்த்ததும் ப்ரண்ட் கழட்டிவிட்டுறியே "
" கீர்த்தி, எரும பிகருன்னா கொன்னுடுவேன் "
" நான் உன்ன சொல்லலடி என் செல்லக்குட்டி. நான் பொதுவா சொன்னே " அவளை அணைத்தாள்..
" அந்த பயம் இருக்கட்டும் "
" ஹேய் சக்தி வாழ்த்துக்கள் நீயாவது லவ் சீக்கிரமா ஒ.கே பண்ணுட்டீயே, அது வரைக்கும் சந்தோஷ்ம். நீயும் எதையாவது பேசி இவன சுத்த விட்டுருவீயோ பயந்தேன்.. நல்லவேள அப்படி ஏதுவும் செய்யல. பட் நான் நினைச்சது ண்ணு நடந்துச்சு அதுனால ரொம்ப சந்தோஷ்மா இருந்துச்சு "
" என்னதுடா... "
" அவன அடிச்சது சக்தி... செம அடி " என்றதும் அர்ஜூன் அவனை முறைத்தான்.
" சரி விடு மச்சி நீயும் எங்க கேங்குல சேர்ந்துட்ட ,எப்ப டீரிட் வைக்க போற ? "
" டீரிட் நாளைக்கு தரேன்டா " என்றான்.
" எங்க போகப்போறோம் அர்ஜூன்..."
" சஸ்பன்ஸ் டார்லிங் நாளைக்கு போகும்போது உனக்கே தெரியும் " இவர்கள் பேசிட, கீர்த்தீயின் எண்ணம் ஜீவா கூறியதில் சுழன்றது.. சரியான நேரத்தில் அவளும் தன் காதலை சொல்லிருந்தால் இந்நேரம் இத்தனிமை அவளைச் சூழ்ந்திருக்காது.... அவனை நினைக்க ஆரம்பித்தாள்...
" சரி வாங்க எல்லாரும் உள்ள போலாம் எனக்கு பசிக்கதுப்பா வா சக்தி சாப்பிடாலாம் " அர்ஜுன் அழைக்க,
" இதோ வரேன் அர்ஜூன், கீர்த்திஎன்ன அமைதியாயிட்ட வா உள்ள போகலாம்? "
" நீங்க எல்லாரும் உள்ள போங்க நான் கொஞ்சம் நேரம் கழிச்சு வரேன் " என்றாள்.
" சரி கீர்த்தி சீக்கிரம் வந்திடு " என்றவள் இருவரையும் அழைத்து உள்ளே சென்றாள்... சக்திக்கு அவளின் நிலமைப் புரிந்து தனிமை கொடுத்தாலும் சக்திக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது..
கீர்த்தி, அங்கே கதிரையில் அமர்ந்தாள். அவள் எண்ணம் முழுவதும் கார்த்திக் தான் .
' எங்க போனடா, ஏன் போனை எடுக்க மாட்டிக்கிற? எப்படா நான் உன்ன பாப்பேன்? தனிமையே விரும்பாத என்னை, இப்படி தனியா உட்கார வச்சிட்டீயே .இல்ல என்னை நீ அவாயிட் பண்றீயா?
நீ காதல சொல்லும் போது நான்,
அத ஏத்துக்கல, நான் காதல சொல்ல நினைக்குபோது நீ இல்ல. இந்தக் காதல், இப்படித்தான் கஷ்ட படுத்துமா? '
தன் மனம் போன போக்கில் பல எண்ணங்களோடு தன் போனில் பாடலை ஒலிக்க விடவே அவளுக்கெற்றதாய் பாடியது..
கேக்கலியோ கேக்கலியோ கண்ணனதுகாணம்
புக்களியோ புக்களியோ பூக்கள் நெஞ்சில் நாளும்
என்னை விட்டு எங்கயே போனாலும் இந்த உள்ளம் மட்டும் உன்னை விட்டு எங்கும் போகாது
யமுனை கரையில் வந்து வந்து மோதும் அலை போல் நினைவு நெஞ்சில் வந்து போகும்
அலைகள் எழுந்தால் தாங்கும்காரை மானே
நதி நீர் பிரிந்தால் இல்லை இந்த மீனே
வெயிலால் உருகி வெள்ளை பனி ஓடும் நினைவால் உருகி உள்ளம் வழிந்தோடும்
உன்னைப்பார்க்காது கரம் சேர்காது தவிக்கும் தவிப்பை யாரைக்கண்டு நானும் சொல்வேன்
கேக்கலியோ கேக்கலியோ கண்ணனது காணம்
என்னை விட்டு எங்கேயே போனாலும் இந்த உள்ளம் மட்டும் எங்கும் போகாது
முள்ளில்லே மேல் மேத்தையிட்டு தூங்கும்படி சொன்னால் எவரால் முடியும் நீ யும் சொல்லு கண்ணா
கண்ணணின் கண்கள் விடும் பாணம் ஒரு போதும் காமனின் பாணம் போல் உன்னை வறுத்தாதே
கொல்லுதே தனிமை என்னை இந்த நாளில் கொட்டுதே நெருப்பை கோதை எந்தன் மேலே
மழை பெய்தாலும் குளிர் அடித்தாலும் அணல் போல் கொதிக்கும் அசை கொண்ட தேகம் ரெண்டும்
கேக்கலியோ கேக்கலியோ கண்ணனது காணம்
புக்களியோ புக்களியோ பூக்கள் நெஞ்சில் நாளும்
என்னை விட்டு எங்கேயே போனாலும் இந்த உள்ளம் மட்டும் உன்னை விட்டு எங்கும் போகாது.....