வருவான் 14
எத்தனை கதைகளும் இலக்கியங்களில் தலைவனின் பிரிவில் வாடும் தலைவியைக் கண்டிருப்போம். இங்கும் கீர்த்தியின் நிலை அதுவானது. கார்த்திக்கின் பிரிவை கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்தாள் கீர்த்தி... காதல் கொண்ட மனதானது தலைவனை எண்ணி வருந்திக்கொண்டிருந்தது.
மறுநாள் விடிந்தது, அர்ஜூன் அவர்களைப் பீச்சிற்கு அழைத்து வந்திருந்தான். சக்தியும் அர்ஜூனும் கடலில் விளையாட பார்வையாளராகப் பார்த்திருந்தனர் கீர்த்தியும் ஜீவாவும்.
" கீர்த்தி நேத்து வரைக்கும் அவங்க எவ்வளவு டிஸ்டன்ஸ்ல இருந்தாங்க. இப்ப எவ்வளவு டிஸ்டனஸ்ல இருக்காங்க பார்த்தியா. நம்ம சக்தியா இது ஆச்சரியமா இருக்கு "
" நம்ம சக்திதான் ஜீவா. ஏன் அவ லவ் பண்ண கூடாதா ? "
" அப்படி இல்ல சக்தி பசங்ககிட்ட பேசுறதே அபூர்வம், அதுவும் அர்ஜூன்கிட்ட அவ பேசினதே எனக்கு சாக், இதுல லவ் பண்றானா நம்பவே முடியல அவ மாறிட்டா " என்றான்.
" ஏன்டா , அதுக்காக நாங்க பசங்க கிட்ட பேச கூடாதா "
" ஏய் லூசு நான் அப்படி சொல்ல வரல, அவ எப்பையுமே எல்லா பசங்கிட்ட பேசுவான்ன ஒண்ணுமில்ல. ஆனால் இப்ப கொஞ்ச நாள தான் கார்த்திக் கூட பேசறா, அதுவும் அர்ஜூன் கூட நேத்து தான் பேச ஆரம்பிச்சா அதான் அப்படி சொன்னேன் "
" அவள் கொஞ்சம் சைய் டைப்னு உனக்கு தெரியாதா. விடு இப்படியாவது கொஞ்சம் அவ கூச்சத்தைக் குறைக்கட்டும் "
" ஹேய் இரண்டு பெரும் அப்படி என்ன டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கீங்க ?" சக்தி வந்தாள்..
" அதுவா நேத்து நைட்டு வந்த ஒரு நியூஸ் பத்தி பேசிட்டு இருந்தோம் "
" அப்படி என்ன நியூஸ் அது? "
" சக்தி என்ற பெண் நேற்று இரவு அர்ஜூனின் காதலை ஏற்றுக்கொண்டாள், அவள் ஏற்றுக் கொள்ள காரணம் என்ன குற்றமும் பின்னனியும் என்ன? அந்த நியூஸ் பத்திதான் பேசிட்டு இருக்கோம் "
" டேய் உங்கள..... சரி அப்படி என்ன தான் பேசினீங்க ?"
" இல்ல காதல்னாலே காயிச்சல்வரும் சக்திக்கு இன்று காதலன்னுடன் கடற்கரையில் விளையாடுவது எப்படி ? "
" எனக்கு அர்ஜூன் பிடிச்சிருக்கு, அவன நான் விரும்பிறேன். அவ மேல நம்பிக்கையிருக்கு அவன் மேல எனக்கு பயமே இல்ல. அதுனால அவன் லவ்வ சொல்லும்போது காயிச்சல் வரலை காதல் தான் வந்தது" என்றாள்.
" ஆஹா, அருமை அருமை என்ன ஒரு பதில் பின்னிட்ட போ சக்தி. நம்ம குரூப்பல காதல் புறான்னு நான் கீர்த்தினு தான் நினைச்சேன். ஆனால் அவளையே நீ மிஞ்சிட போ...."
" நன்றி, நன்றி.... சரி வா ஐஸ்கிரிம் சாப்பிடலாம் " சக்தியும் ஜீவாவை அழைத்துச் சென்றாள்... கீர்த்தியும் அர்ஜூனும் அங்கே அமர்ந்திருந்தனர்.
" அப்புறம் கீர்த்தி ஏன் கார்த்திக் வரல? "
" தெரியல போன் பண்ணா ஸ்விடச் ஆப் வருது "
" கார்த்திக்கிட்ட லவ் எப்படி சொல்ல போற கீர்த்தி?"
" அவன் கிட்ட எப்படி சொல்ல போறேன் தெரில. எனக்கு முதல்ல அவனை பார்க்கனும். அட்டிலிஸ்ட் அவன் வாய்ஸ்யாவது போன்ல கேட்ணும். நான் அவனுக்குப் பன்ணது எனக்கே திரும்பிற மாதிரி இருக்கு. என்னை விட்டு ரொம்ப தூரம் அவன் போன மாதிரி இருக்கு. ரொம்ப பயமா இருக்குடா ,என் காதலைச் சொல்ல முடியாம போயிருமோன்னு "
" ஏய் அப்படி எல்லாம் ஏன் பேசுற? நாங்க இருக்கோம் எப்படியாவது உன் காதலைச் சேர்த்து வச்சுருவோம். எல்லாக் காதலையும் சேர்த்து வைக்கிற உனக்கு, உன் காதல் கண்டிப்பா சேரும் "
கடலை வெறித்தவள், " அப்புறம் அர்ஜூன் சக்தி ஒ.கே சொல்ல வச்சுட்ட போல திறமை சாலி தான்டா நீ..... "
" போடி ஏற்கனவே என்னை லவ் பண்ணிருக்கா ! நான் பயந்ததுக்கு மாறாக நடந்திருக்கு. ரொம்ப சந்தோஷ்மா இருக்கு. ஆனா அந்த அடியைத்தான் எதிர்பார்க்கல ரொம்ப வலிச்சது தெரியுமா... "
" எதுக்கு அடிச்ச என்னை கட்டிபிடிச்சதுக்கா?"
" ப்ச்...... அதுக்கு மட்டும் இல்ல உன்கிட்ட உதவி கேட்டதுக்கும் "
" பொறாமையாமா ? "
" ஆமா , நன்றி கீர்த்தி நீ இல்லேன்னா,எனக்கு இந்த சந்தோஷ்ம் கிடைச்சிருக்காது. அது மட்டும் இல்ல நீ எனக்கு ப்ரண்டா கிடைச்சத்துக்கும்"
" போடா, இதுக்கு போய் , நீ நல்லவன் தான் உன்னை மாதிரி ஒருத்தன் கிடைக்க சக்தி ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும், அவ குழந்தை மாதிரி கோவம் வரும், ஆனால் அது நல்ல விசயத்துக்குக்காகதான் இருக்கும் மனசுகுள்ள வைச்சுக்க மாட்ட அவள நீ நல்லபடியா பார்த்துக்கணும் "
" நான் பாத்துகிறேன்டி....."
" ஹேய் ஹேய்.... இந்த ஐஸ்கீரிம் " நால்வரும் சந்தோஷ்மாகவே அந்நேரத்தை கழித்தனர்.
மாலை மீண்டும் அங்கே ஃபங்சனுக்குச் சென்றனர். இன்றும் அங்கே கலை நிகழ்ச்சி நடக்க, வந்தவர்கள் யாரெனும் பாட்டு பாடலாம் ஆடலாம் என்றழைத்தனர், சக்திக்காக, அர்ஜூன் மேடையெறி பாட்டு பாடினான் அதுவும் ஹிந்தியில்....
hmm hmmm hmm mmm
daheleez pe mere dil ki
jo rakhe tune kadam
tere naam pe mere zindaghi
liki te mere humdum
haan seeka maine jeena jeena kaise
jeena
haan seeka maine jeena mere humdum
na seekha kabhi jeena jeena kaise jeena
na seekha jeena tere bina humdum
sacchi se hain yeh tareefen
dil se jo maine kari hain
jo tu mila to saji hain
duniya meri humdum
o asama mila zameen ko meri
aadhe aadhe poori hain hum
tere naam pe mere zindagi
liki te mere humdum
haan seeka maine jeena jeena kaise
jeena
haan seeka maine jeena mere humdum
na seeka kabhi jeena jeena kaise jeena
na seeka jeena tere bina humdum
hmmm hmm hmmm............
அர்ஜூன் பாட்டுப்பாடி முடிக்க, பெரிய கரகோசம் தான்.
" எப்படி நம்ம பாட்டு காலரை, தூக்கி விட்டு கேட்க.,.."
" பாட்டு சூப்பர். பட் என்ன மொழில பாடுனா எனக்கு ஒண்ணும் புரியலையே? " என்றதும்
தலையில் கைவைத்தவன்' இவளுக்கு போய் பீல் பண்ணி பாடுனே பாரு , எந்த மொழில பாடுனேன்னு கேட்டு வைக்கிறாளே இவள ச்ச.. என்னை தான் சொல்லன்னு ஹிந்தில பாட்டு பாடுனே பாரு, அர்ஜூன் உனக்கு இது தேவ " என்று புலம்பினான்.
" அர்ஜூன் நீ பாடுனது ஹிந்தியா, எனக்கு ஹிந்தி தெரியாது அர்ஜூன்?"
" எனக்கும் தான் தெரியாம போச்சு உனக்கு ஹிந்தி தெரியாதுனு, தமிழிலே பாடிருப்பேன் சக்தி... "
" நீ ஏன் பீல் பண்ற அர்ஜூன்? வசனமா முக்கியம் நான் படத்தல பார்த்தேன்." என்றாள் நக்காலாக,
" புரியலடி "
" நீ பாடின பாட்ட நான் ரசிக்கல, ஆனா, நீ பீல் பண்ணி பாடுனத ரசிச்சேன்.
உன்னை மட்டுமே ரசிச்சிட்டு இருந்தேன் அர்ஜூன் "
அர்ஜூனின் முகம் மலர., " அடி அழகே! என்னாயடி ரசிச்ச " என அவள் அருகே நெருங்க
" ஓய்.... என்ன கிட்ட வர "
" என்னை ரசிச்ச, இந்த ரசிகைக்கு எதாவது தர வேணாம் அதான் இன்னு கிட்ட வந்து ஒரு..... " என சொல்ல,
சக்தி, " ஜீவா என்னை கூப்பிட்டுறான் அர்ஜூன்..," சொல்லி அங்கிருந்து ஜகாவாகினாள்..' எங்கிட்ட மாட்டாமையா போயிருவா அப்ப வச்சுக்கிறேன்டி உன்னை ' அடுத்து ஜீவா, சக்தி இருவரும் கீர்த்தியை மேடைக்கு அனுப்பிட காணாமல் போன குழந்தை போல் நின்றாள்... எல்லோரும் பாடச் சொல்லி கத்த, கார்த்திக்கின் பிம்பம்... வந்துது நின்றது மனக்கண்ணில். அதை கண்டவள் பாட ஆரம்பித்தாள்..
வான் வருவான் வருவான் வருவான்
வான் வருவான் வான் வருவான் வருவான்
வான் வருவான் வான் வருவான்
வான் வருவான் வான் வருவான்
வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான் மரமாய் அரியவான் என்னுள் ஒழிவான் அருகில் நிமிர்வான் தொலைவில் பணிவான் கர்வம் கொண்டால் கல்லாய் உரைவான் கல்லாய் உரைவான் உரைவான் உரைவான்
காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்
காதல் வந்தால் கனியாய்
நெகிழ்வான்
என் கல்லக் கார்முகனே அவன் தான் வருவான்
என்னோடு இருந்தால் எவளோ நினைவான் அவளோடு இருந்தால் என்னையே நினைவான் என்னை துரவான் என் பெயரை மறவான் என்னை மறந்தால் தன்னுரியிர் விடுவான் கண்கவிழ்ந்தால் வெளிபோல் விரிவான் கண்கள் திறந்தால் கணத்தில் கரைவான்
வான் வருவான் தொடுவான் மழைப்போல் விழுவான் மரமாய் அரவான் என்னுள் ஒழிவான் அருகில் நிமிர்வான் தொலைவில் பணிவான் கல்லாய் உரைவான் கல்லாய் உரைவான் உரைவான்
காதல் வந்தா கனியாய் நெகிழ்வான் காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்.........
அவள் பாடி மீண்டும் கார்த்திக்கைக்காண அப்பிம்பம் மறைந்திருந்தது. பாடும் போது,இருந்த சந்தோசம் இப்பொழுது முற்றிலுமாய் வடிந்தது. மூவருக்கும் அவளின் நிலை கண்டு கஷ்டமானது.
"கீர்த்தி சூப்பரா பாடினமா, எவ்வளவு திறமை வச்சிருக்க, ஓவியம் வரையற, நல்ல பாடுற.. இன்னு என்ன என்ன ஒளிச்சு வச்சுருக்குமா? " அவள் பாடினதைக் கேட்டு வந்தார் ரகுநாத்.
" அப்படி இல்ல சார், பாட்டு பிடிக்கும் சின்ன வயசுல கிளாஸ்க்கு போயிருக்கேன் அப்புறம் ஆர்ட் எங்க அப்பா கிட்ட இருந்து வந்தது. அப்பா கிட்ட சின்ன வயசுல வரைய கத்துக்கிட்டேன் , அவ்வளவு தான் சார்...... "
" சாரெல்லாம் வேணா அங்கிள்ன்னு கூப்பிடுமா . "
" சரி அங்கிள்"
" உங்கப்பா என்னவேலைப் பார்க்குறாருமா, நீ என்ன பண்ற? "
" அப்பா இல்ல அங்கிள். நான் அம்மா, தம்பி மட்டும் தான். நான் M.sc maths படிக்கிறேன் அப்புறம் interior designing course படிச்சதால பார்ட் டைம் ஜாப் போயிட்டு இருக்கேன். எனக்கு லெக்சரரார் ஆகனும் ஆசை "
" சாரிமா, உண்மையில கிரேட் தான் நீ தம்பி படிக்க வச்சு நீயும் படிக்குற. பரவாயில்லைம்மா அம்மா கஷ்ட படுத்தாமா நீயா உன் குடும்பத்த பார்த்துகறது எவ்வளவு பெரிய விசயம். இந்த வயசுல இவ்வளவு கஷ்படற உனக்கு உன்னுடைய ஆசை நிறைவேறும்மா. உனக்கு என்ன உதவி வேணும்னாலும் எங்கிட்ட கேளுமா உனக்கு உதவிப் பண்ண நான் தயாரா இருக்கேன். எப்பமா வீட்டுக்கு கிளம்பிறீங்க எங்க தங்கிருங்கிங்க யாரு கூட நீ வந்த. "
" அங்கிள் இது சக்தி ,ஜீவா ,அர்ஜூன் இவங்க எல்லாம் ப்ரண்ஸ் இவங்களோட தான் வந்துருக்கேன். அர்ஜூன் வீட்டல தங்கிருக்கேன். நாங்க நாளான்னைக்கி கிளம்பிருவோம்.., நீங்க எப்ப அங்கிள் கிளம்பிறீங்க,
? நீ கண்டிப்பா வீட்டுக்கு வரனும் .." என்று தனது அட்ரஸை கொடுத்தாள்.
" நான் இன்னும் மூனு வாரம் இங்க தான் இருப்பேன். உங்கள பார்த்ததுல ரொம்ப சந்தோஷ்ம் நீங்களும் கண்டிப்பா வீட்டுக்கு வரனும் இது என்னோட விஸ்டிங்கார்ட் " என்று அவரும் கொடுத்தவர் கிளம்பினார்...
அடுத்த நாள் நால்வரும் மும்பையைச் சுத்தி பார்த்துவிட்டு, தன் தங்கை தம்பிகளுக்குத் தேவையானதை வாங்கிவிட்டு.. மதுரைக்கு வந்தனர். மதுரை ஏர்போட்டில் நால்வரும் வர, அர்ஜூனும் சக்தியும் தவிப்பாய் இருவரும் வந்தனர்.. மூன்று நாள் இருந்த சந்தோசம் இன்று பிரிய கொஞ்சம் வருத்தமாய் வந்தனர்.. கிருஷ்ணனுக்கு அனைத்தும் புரிந்தது.
" ரொம்ப நன்றிப்பா என்னோட பசங்கள நல்லபடிய பாத்துகிட்டதுக்கு, தங்க இடமும் சாப்பாடும் கொடுத்ததுக்கு எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி "
" ஐய்யோ சார் இதுக்கெல்லாம் நன்றியா, அவங்க என் ப்ரண்ஸ் இத கூட செய்ய மாட்டேனா..., "
" சாரெல்லாம் எதுக்குப்பா மாமான்னு கூப்பிடு.... " என்றதும்
சக்தியும் அர்ஜூனும் புரியாமல் பார்க்க கீர்த்தி ஜீவாவும் சிரித்தனர்,
" எனக்கு எல்லாம் தெரியும்மா. கீர்த்து என் கிட்ட எல்லாம் சொல்லிட்டா. உனக்கு ஒ.கே னா எனக்கு ஒ.கே சொல்லிட்டேன். நீ தான் மறைச்சுட்ட என் பொண்ணு எங்கிட்ட இருந்து மறைக்க மாட்டனு " கீர்த்தியைச் சொல்ல, இல்லாத காலரைத் தூக்கி விட்டாள்... சக்தி கிருஷ்ணனை அணைத்து அழுதாள்.
" தாங்கஸ் அப்பா , என்னைய மன்னிச்சிருங்க உன்கிட்ட சொல்லக்கூடாதுன்னு இல்ல. மதுரைக்கு வந்தோனே சொல்லாம் நினைச்சேன்ப்பா அதுக்குள்ள இந்த முந்திரிக்கொட்ட முந்திக்கிச்சு சாரிப்பா..."
"பாரவாயில்லமா நீ சொன்னாஎன்ன, அவ சொன்னா என்ன இரண்டும் பேரும் எனக்கு ஒண்ணுதான் .எனக்கு மாப்பிள்ளைய பிடிச்சிருக்கும்மா.. "
" தாங்ஸ் மாமா எங்க லவ் அக்சப்ட் பண்ணதுக்கு..."
" பரவாயில்லப்பா உங்க அப்பா அம்மாவ கூட்டிட்டு வீட்டுக்கு வாப்பா, நாங்க வரோம் "
" சரி மாமா... " என அங்கிருந்து விடைபெற்றனர்..
அடுத்த அடுத்து நாட்கள் கடந்து செல்ல . கீர்த்தியின் நிலமைதான் மிகவும் மோசமானது... கார்த்திக்கைக் காணாது வெளியே சிரிப்பது போல் நடித்தாலும் உள்ளுக்குள்ளே புலுங்கிகொண்டிருந்தாள்.....
அவளுடைய மன வேதனை அர்ஜூனுக்கும் சக்திக்கும் ஜீவாவிற்கும் கிருஷ்ணனுக்கும் புரியாமல் இல்லை, இருந்தும் தனக்குள்ளே வைத்து என்ன செய்வதறியாது இருந்தனர்... அவளாக சொல்வாள் என்று கிருஷ்ணன் காத்திருக்க.. இதற்கிடையில் ராஜ் கவிதாவிற்கு கல்யாணம் முடிந்து மூன்று மாதம் ஆனது. தாலிப் பெருக்கு போடும் சடங்கு வைத்தனர். கண்டிப்பாக கார்த்திக்கை அழைக்காமல் இருக்க மாட்டான் ராஜ்..., இன்றாவது அவனை பார்த்து அனைத்தையும் கூறி அழுத்து தீர்த்திட வேண்டும் என்று ஆர்வமாய் கிளம்பினாள்... அங்குச் சென்றவள், எதை எதிர்பார்த்தாளோ அதற்கு மாறாய் நடந்தது. அங்கிருந்து சொல்லாமல் வந்தவள் வீட்டிற்கு வந்ததும் அழுது கரைந்தாள்....
அங்கு என்ன நடந்ததோ ?
வருவான்...