கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வருவான் 16

Chithu

Moderator
Staff member

வருவான் 16
கல்யாணம் முடிந்து மூணு மாதம் ஆன நிலையில் கவிதாவிற்கு தாலிப் பெருக்கிப் போடும் நிகழ்வை வைத்தனர்,. அங்கே மொத்த குடும்பம் கூடியது... கீர்த்தியும் அவள் அன்னையும் அங்கே சென்றனர்.

ராஜ் கண்டிப்பாக தனது நண்பர்களை அழைத்திருப்பான் என்றெண்ணியவள், கார்த்திக்கைப் பார்த்து பேச வேண்டும் என்று ஆவலாய் கிளம்பினாள்... அங்கே கீர்த்தியின் முழுகுடும்பமும் கூடியிருக்க, கீர்த்திக்கு ஏதோ தனித்து விடப்பட்டது போல இருந்தது.

" ராஜ் உன் ப்ரண்ட்ஸ் வந்திருக்காங்க பாரு.. " குரல் கேட்டதும் வேகமாக வாசலை நோக்கியவளுக்கு ஏமாற்றமே. வந்ததும் ப்ரதீப், கணேஷ்ஷூம் தான்... அவளைக் கண்டதும் ப்ரதீப், கணேஷ் சினேகமாய் சிரிக்க, கீர்த்தியும் கஷ்டபட்டுச் சிரிப்பை வரவழைத்தாள்... அவர்கள் மட்டும் வர அவர்களை தாண்டித் கண்களை அலசினாள்...

" யார தேடுர கீர்த்தி? "

" யாரையும் இல்ல ப்ரதீப் அண்ணா நீங்க இரண்டு பேறும் எப்படி இருக்கிங்க?"

" நாங்க நல்லா இருக்கோமா நீ எப்படிமா இருக்க?"

" இருக்கேன் அண்ணா " என்றவளின் பதிலில் உயிர்ப்பு இல்லை.... எதையோ கேட்க எண்ணியவள், தயங்கி உள்ளே சென்றாள்... அவளின் செய்கை ப்ரதீப்பிற்குப் புரிய வில்லை.

கவிதாவை அமர்த்தி, தாலியில் காசு குண்டு என கோர்த்து பெரியவர்கள் சேர்ந்து சடங்களைச் செய்தனர்.. அங்கே சிரிப்பு கேலியுமாக இருக்க, கீர்த்தி தனித்தே இருந்தாள்... அதன் பின் அனைவரும் சாப்பிட்டனர்,. ப்ரதீப் கிளம்பிடும் போது அவனிடம் வந்தாள் கீர்த்தி..." அண்ணா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்றாள்.

" சொல்லுமா என்ன பேசணும்? "

" அண்ணா அது வந்து கார்த்திக் எங்கண்ணா போனா? எப்ப அவனுக்கு போன் பண்ணாலும் ஸ்விட்ச் ஆப்ன்னு வருது , அவனை இப்பெல்லாம் பார்க்கவே முடியல எங்க தான் அண்ணா போனான்,. அவன் எங்க போயிருக்கான்னு உங்களுக்குத் தெரியுமா தெரிஞ்சா சொல்லுங்க.அவன் இப்ப எங்க இருக்கான் அண்ணா......."

" கார்த்திக் எங்க இருக்கான்னு தெரியலமா
நாங்க அவனைப் பார்த்தே ஒன்றை மாசம் ஆயிருச்சுமா, அவன் எங்ககிட்ட இப்படி நடந்து கிட்டேதே இல்ல, எங்ககிட்ட பேசாமா இருந்ததும் இல்ல. எங்கள பார்த்து பேசிட்டு தான்மா வீட்டுக்கே போவான் . இல்லைன்னா, போன் பண்ணி விசாரிக்காம இருக்க மாட்டான்ம்மா,

அவன நினைச்சா எங்களுக்கு கொஞ்சம் பயமாதான் இருக்கு, அவன் வீட்டுக்குப் போயிக்கூட பார்த்துட்டோம், அவன் வீட்டுல யாருமே இல்ல அவன் அப்பாகூட வேலை விசயமா வெளியூர் போயிட்டாருன்னு வாட்ச்மேன் சொன்னார்... ஆனால் அவன் எங்க போயிருக்கான்னு அவருக்கே தெரியல. அவன் மட்டும் கையில கிடைச்சான் அவ்வளவு தான் நாலு மிதிமிதிச்சு எங்கள விட்டு எங்கடா போன கேட்டாதான் எங்களுக்கு எங்க கோபம் அடங்கும். அவன் மேல அவ்வளவு கோபமா இருக்கோம்மா. ஆமா நீ ஏன் அவன பத்தி விசாரிக்கிற அவங்கிட்ட எதாவது சொல்லணுமா? " எனவும்

" இல்லண்ணா சும்மா தான் கேட்டேன் " சொன்னவளால் அழுகையைக் கட்டுப் படுத்தவே முடியாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றுவிட்டாள்....

' இவ கார்த்திக்கைப், பத்தி கேட்கும் போது இருந்த ஆர்வம் நான் சொல்லி முடிக்கும் போது இல்லையே, ஒரு வேளை கீர்த்தி கார்த்தக்கை லவ் பண்றாளோ கார்த்திக் தான் தப்பா புருஞ்சுகிட்டான்னோ! இவ கிட்ட போய், நீ அர்ஜூனை லவ் பண்றியா இல்ல கார்த்திக்கை லவ் பண்றியான்னு கேட்டவும் முடியாது. இத பத்தி பேசக்கூடாது அந்த லூசு பையன் சத்தியம் வேற வாங்கிட்டான். கீர்த்தி மட்டும் கார்த்திக்கை லவ் பண்றது உண்மையா இருந்தா என்னப் பண்றது. கார்த்திக்கிட்ட இத பத்தி சொல்லவும் முடியாது அவன்தான் போன எடுக்க மாட்டிகிறானே! இறைவா இவங்க இரண்டு பேறும் லவ் பண்றது உண்மையா இருந்தா நீ தான் இவங்க சேர்த்து வைக்கணும்.....' மனசார இறைவனிடம் பிராத்தனைச் செய்தான் ப்ரதீப்....

கீர்த்தி இதைக் கேட்டதிலிருந்து உடைந்து போனவளால் அங்கிருக்க முடியவில்லை, கார்த்திக் அவளை விட்டு வெகு தூரம் சென்றது போலவே தோன்றியது, தன்னுடையக் காதலை சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.. இனி கார்த்திக்கை பார்க்கவே முடியாதோ என்ற எண்ணம் எழவே, அவன் தன்னை விட்டுப் போனதற்கு காரணம் அறியாமல் பித்து பிடித்தாற் போலிருந்தவள், அவளால அங்கு வாய்விட்டு அழ முடியாத நிலையில், அனைவரிடமும் தலைவலி என்று பொய் சொல்லிக்கொண்டு யார் பேச்சையும் கேட்காமல், வீட்டிற்க்கு தன் ஸ்கூட்டியை எடுத்து சென்றாள்,,. தன் ஸ்கூட்டியை கூட நிறுத்தாமல், அத அப்படியே போட்டுவிட்டு வேகமா வீட்டுக்குள்ளே ஓடியவள், தன்னால முந்தளவு கத்தி அழுதாள்.. அவள் அவ்வாறு ஓடியதைக் கண்டு பயந்த ஜீவா ..,. கீர்த்தியின் வீட்டிற்குள் சென்றான்... அவள் அறையில் அவள் அழுவதைக் கண்டவனுக்குப் பதறியது... முதன்முதலாக தந்தை இறப்பில் அழுதவள் , இன்று இரண்டாம் முறையாக அழுதாள்.... அவள் அருகில் சென்று அவளை அணைத்தான்..

" கீர்த்தி ஏன்டி இப்படி அழுகிற என்ன நடத்துச்சுடி யாரும் உன்னை எதும் சொன்னாங்களா? பங்சனுக்கு தானே போன ஏன் இப்படி உட்கார்ந்து அழுகிற என்ன நடந்துச்சு சொல்லு"
அவளை தன் நெஞ்சில் சாய்த்தான், அவளோ, கத்தி அழுதாள்.., காரணம் அறியாமல் அவளின் அழகைக்கு ஆறுதல் கூற முடியாமல் , அதை தாங்கிக் கொள்ள முடியாமலும் என்ன பிரச்சினை என்று அறியாது அவளை அணைத்தவன், அவளிடமே என்ன நடந்து என்று விசாரித்தான்...

" கீர்த்தி, நீ சொன்னா தான்டி, உனக்கு என்ன பிரச்சினை எனக்கு தெரியும் அழாம சொல்லுடி. ஏன்டி இப்படி அழுது என்னை நோக அடிக்கிற சொல்லுடி நீ அழறது என்னால தாங்க முடியலடி சொல்லுடி"

" ஜீவா, நான் கார்த்திக்கை லவ் பண்றேன்டா அவன் இல்லாம என்னால வாழ முடியாது ,அவன் எனக்கு வேணும் I love him madly , அவன நான் பார்க்கணும் அவங்கிட்ட என்னுடைய லவ் சொல்லணும்... அவன் லவ் சொல்லும்போது நான் ஏத்துக்கல ஆனால் இப்ப அவன் இல்லாம என்னால இருக்க முடியால... அவன் கிட்ட லவ்வ என் சொல்லணும்," அவனிடம் மும்பையிலிருந்து ராஜ் பங்சன் அவள் நினைத்து வைத்திருந்த அனைத்தையும் ப்ரதீப் சொன்னதையும் அவனிடம் சொன்னாள்.

" அவன் எங்க இருக்கான்னு தெரியல அவன் போன் ஸ்விட்ச் ஆப் வருது. அவன பார்த்து மூணு மாசத்துக்குமேல ஆக போகுது... அவன ராஜ்வோட கல்யாணதுல பார்த்தது, " என்றவள் அன்று அவனோடு பேசியதைக் கூறினாள்..." நான் அப்படி சொன்னது நாளிலிருந்து என் கிட்ட அவன் பேசவே இல்லடா, அவன் என்ன விட்டு தூரமா போயிட்டான். என்னால இத தாங்கிக்கமுடியல இப்படியே இருந்தா நான் செத்துருவேன் போல இருக்கு ஜீவா.... " அவன் நெஞ்சில் புதைந்து கதறி அழுதாள்.....,

" சும்மா இருடி அப்படியேல்லாம் பேசாதடி தாங்க முடியல. நான் இருக்கேன்டி உன்னுடைய லவ்வ நான் சேர்த்து வைக்குறேன் ... அவன் எங்க இருந்தாலும் உன் கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்திறது என் பொறுப்பு. அவன் உன்னைவிட்டு எங்கையும் போக மாட்டான் டி, அவன் வேலை விசயமா கூட எங்காயாவது போயிருக்கலாம்... நீ அழறது முதல்ல நிறுத்து போய், முதல்ல முகத்த கழுவிட்டு வா நான் காபி போட்டு வரேன் .நம்ம என்ன பண்ணலான்னு யோசிப்போம்," என்றவளைக் குளியலறைக்குள் விட்டவன் இருவருக்கும் காபி கலந்தான்... அவள் முகத்தைத் துடைத்து வந்தமர அவள் கையில் ஒரு கப்பை கொடுத்தான்..

ஜீவாவிற்கு கீர்த்தியைக் காண கஷ்டமாக இருந்தது... அவளது நிலையை சரி செய்யவே மனது துடித்தது.... அவள் ஏதோ சொல்லவர தடுத்தவன், அவளை அணைத்துக் கொள்ள... அவளோ அவன் மடியில் தலை வைத்தாள்... ' எவ்வாறு கார்த்திக் பற்றி அறிய யாரிடம் வினவ... ' யோசித்தான்...

தேவியை வீட்டுல இறக்கிவிட ராஜ் வந்தான், தேவி ஜீவாவைக் கண்டதும் நிம்மதி அடைந்தார்...." ஜீவா தலைவலி சொன்னா, இங்க இருந்து தனியா என்ன பண்போறான்னு நினைச்சேன் நல்லவேள நீ வந்து பார்த்துகிட்ட இப்ப எப்படி இருக்கா ? "

" இல்லாம்மா இப்ப பரவாயில்லை மாத்திரைப் போட்டு நல்லா தூங்குறா....."

" இவளுக்குக்கா தலைவி இவளால தானே எல்லாதுக்கும் தலைவி...., " என்றான் ராஜ்,

" டேய் சும்மா இருடா, இரு காபி போட்டு எடுத்துட்டு வரேன்....."

" சரி அத்தை.,.."

அவர் சென்றதை பார்த்த ஜீவா " அண்ணா உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.."

" சொல்லு ஜீவா....."

" இங்க வேணா வெளியா போகலாம்... " என்றவன். கீர்த்தியைச் சோப்பாவில் படுக்க வைத்தவன், வெளிய அவனை அழைத்து வந்தான்...ஜீவா, கீர்த்தி சொன்ன, அனைத்தையும் சொல்ல ராஜுவிற்க்கு அதிர்ச்சி அதையும் தாண்டி அவனுக்கு கவலையாகவும் இருந்தது " கார்த்திக், அவ கிட்ட, லவ் சொல்லும் போது இவ ஒத்துக்கல. இவ லவ் சொல்லும் போது அவன் எங்க போனான்னு தெரியல இது தான் விதியா? இப்ப என்ன பண்ணலாம் ஜீவா? "

" அண்ணா கார்த்தி எங்க போயிருக்கான்னு அவங்க அப்பாக்கு மட்டும் தான் தெரியும், அவர்கிட்ட கேட்டுப் பாப்போம்ண்ணா., "

" அவர் இப்ப ஊருல இல்லாடா, அவர் வந்ததும்... நான் சொல்லுறேன் நம்ம போயி அவர்கிட்ட பேசலாம் ஜீவா.."

" சரிண்ணா நீங்க சொன்னது போல நாம கீர்த்திய கூட்டிட்டுப் போய் கூட பேசலாம்...."

" சரிடா " என்றவன் காபியை குடித்துவிட்டு செல்ல,கார்த்திக்கின் தந்தை வந்த பின்னே அவனைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும் என்றெண்ணியவன் அவர் வரும் வரை காத்திருந்தனர்...

கார்த்திக்கின் பிரிவை தாங்கிக்க முடியாது கீர்த்தி, சிரிப்பை இழந்து தவித்தாள்... தன் குடும்பத்தை கலகலகவென வைத்திருப்பவள், இன்று கலையிழந்து போனாள்... கிருஷ்ணனும் அவளின் தோழிகளும் நிலமையை எவ்வாறு சரி செய்ய வழியறியாது போயினர்...

இதற்கிடையில் ராஜ், ஒருநாள், ஜீவாவையும் கீர்த்தியையும் அழைத்துக்கொண்டு கார்த்திக் வீட்டிற்கு சென்றான்.. கார்த்திக் வீட்டை, கண்டவளுக்குப் பிரமிப்பாகவும் அதே சமயம் கலக்கமும் வந்தது. அவர்கள் உள்ளே வர, அங்கிருப்பவரைக் காண மேலும் அதிர்ந்தாள்... மும்பையில் ஆசிரமத்தில், ஆர்ட் கெலரியில் கண்ட அந்த மனிதரே கார்த்திக்கின் தந்தையாக இருந்தார். அவரே அவர்களை வரவேற்க... கீர்த்திக்குப் பெரும் அதிர்ச்சியாகிப் போனது...

" வாம்மா கீர்த்தி எப்படி இருக்க? "

" அங்கிள் உங்களுக்குக் கீர்த்திய தெரியுமா? "

" தெரியும் ராஜ்.. அவள நான் ஆர்ட் பெஸ்டிவல்ல பார்த்தேன்ப்பா ரொம்ப நல்ல பொண்ணுப்பா..., "

" கீர்த்தி, இவர் தான் கார்த்தியோட அப்பா.... "

ஜீவாவுக்கும் கீர்த்திக்கும் இது அதிர்ச்சிதான் ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை..

" ராஜ் உனக்கு எப்படி கீர்த்தி தெரியும்? "

" அங்கிள் இவ என் கஸின்... " என்றான்.. அவர்கள் அடுத்து பேச வர ரகுநாத்திற்கு ஒரு போன்கால் வந்தது. அதனை அட்டன்ட் செய்து பேசிட சென்றார்... அவர் சென்றபின் கீர்த்தி இருவரிடமும்...." நான் கார்த்திக்க லவ் பண்ற விசயத்தை அவர்கிட்ட சொல்ல வேணாம், கார்த்திக் எங்க போயிருக்கான்னு தெரிஞ்சா போதும்..... "

" லூசு நீ அவர்கிட்ட ஏன் சொல்ல வேணாங்கற?"

" அவர் எவ்வளவு பெரிய பிஸ்னஸ்மேன் அவர்கிட்ட போய், நான் கார்த்திக்க லவ் பண்றேன்னு சொன்னா, அவரு என்பத்தி என்ன நினைப்பாரு அது மட்டுமில்ல இப்ப கார்த்தி வேறே இல்ல. கார்த்திக் இல்லாத நேரத்துல அவன காதலிக்குறேன்னு சொன்னா, அவர் கீழ்தரமா நினைக்க மாட்டாரா. இரண்டு நாள் தான் அவர பார்த்திருக்கேன் அதுக்குள்ள நான் இப்படி வந்து சொன்னா, பணத்துக்காக தான் இவ இப்படி சொல்லுறேன்னு சொல்லமாட்டாரா.. அதுமட்டுமில்ல கார்த்திக்கும், அவன் லவ் பத்தியும் என்னை பத்தியும் அவன் அப்பாகிட்ட சொல்லிருந்தா... இப்படி அவர் பேசிட்டு இருக்கா மாட்டார். தயவு செய்து கார்த்திக் எங்க இருக்கான்னு மட்டும் கேளு அது போதும் வேற எதுவும் கேட்க வேணாம். அவர் என் மேல நல்ல அபிப்பிராயம் வச்சுருக்கார் அத கெடுக்க விரும்பல ராஜ் " என்றாள்.

அதுவும் அவங்களுக்கு சரியென பட்டது, ரகுநாத்தும் பேசிட்டு வந்து அமர்ந்தார்..,
" அங்கிள் கார்த்திக் எங்க ஆளயே காணோம். போன் பண்ணா ஸ்விட்ச் ஆப் வருது எங்க போனா அங்கிள் அவன்?"

" அவன் அமேரிக்கா,போயிருக்கான்ப்பா உங்ககிட்ட சொல்லலயா ? அவன் போய் இரண்டு மாசமா ஆயிருச்சு. எங்க ஆஃபீஸ் ப்ராஜட் விசயமா போயிருக்கான் ஆறுமாசம் கழிச்சு தான் வருவான்...."

அவன் அமேரிக்க சென்றதைக் கேட்க அதிர்ச்சிதான் கீர்த்திக்கு.... அவளால் அதற்கு மேல் அங்கிருக்க முடியவில்லை.... எழுந்தவள், " நாங்க கிளம்புறோம்... " என்றவளைத் தொடர்ந்து ராஜ், ஜீவாவும் எழுந்தனர்..

" ஏன் எந்திருச்சிடிங்க இருங்க காபி சாப்பிட்டு போங்க என்ன விசயமா வந்திங்க சொல்லவே இல்லயே?"

" இல்ல அங்கிள் இந்தப் பக்கம்மா வந்தோம். அப்பிடியே உங்கள பார்த்துட்டு கார்த்திக் எங்க போனான்னு கேட்டுட்டு போலாம் வந்தேன்... .சரி வரேன் அங்கிள்......"

கீர்த்தி, விடைபெற்று கொள்ள, அங்கிருந்த கார்த்திக்கின் புகைப்படத்தை ஆழமாய் பார்த்து விட்டுச் செல்வதை, யோசனையாகப் பார்த்து நின்றார் ரகுநாத்....

வருவான்..
 
Top