வருவான் 17
கார்த்திக் யாரிடமும் சொல்லாமல் அமெரிக்கா சென்றது வருத்தமாக தான் இருந்தது, எதற்காக யாரிடமும் சொல்லாமல் செல்லவேண்டும்.... அன்று அவள் பேசியதால் அவன் விலகி சென்றானா ? ஏன் தன் நண்பர்களிடம் கூட கூறாது அமெரிக்கா செல்ல வேண்டும்... என்ன பிரச்சினை என்று யோசித்தவாறே வீட்டிற்கு வந்தாள்.. அங்கே அனைவரும் கூடியிருக்க, ஜீவாவும் கீர்த்தியும் வருவதைக் கண்டனர்.. கீர்த்தி அவர்களைக் கண்டும் தன் வீட்டுக்குள் செல்ல எத்தனித்தாள்
" குட்டிமா நாங்க எல்லோரும் இங்க உட்கார்ந்து இருக்கோம், நீ பார்த்து பார்க்காம போறீயே மா " என்றார் கிருஷ்ணன்.
" அப்பா அது வந்து..... "
" நீ வாமா வந்து உட்காரு " அவர் பக்கத்தில், அவளை அமர்த்திக் கொண்டார்...
" எங்கமா போயிட்டு வர, ஏன்மா இப்படி இருக்க? உன்னை இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு.., நீ சந்தோசமா இருந்து எங்களையும் சந்தோசபடுத்துவ, இப்ப நீயும் சந்தோசமா இல்ல உன்னால நாங்களும் சந்தோசமா இல்ல... எப்படி கலகலன்னு இருந்த வீடுமா இது. எப்படி கலையிலந்து போயிருக்கு பாரு. நீ ஒழுங்கா பேசி எவ்வளவு நாள் ஆச்சு , இப்படி இருக்காத, அப்பாகிட்ட உன்னுடைய பிரச்சினை சொல்லாம இருந்ததே இல்லையேமா இப்பெல்லாம் அப்பாகிட்டேயே பேசுறதே இல்ல,கஷ்டமா இருக்குமா....." வருத்தம் நிறைந்து பேசினார்.
" என்ன மன்னிச்சுருங்கப்பா என்னால முடியல, நான் கார்த்திக்கை லவ் பண்றேன், அவன் கிட்ட என் காதலைச் சொல்ல முடியாம தவிச்சுகிட்டு இருக்கேன்.... அவன பார்க்காம என்னால இருக்க முடியல. அவன் என்னை விட்டு ரொம்ப தூரம் போயிட்டான்.... எங்கிட்ட சொல்லாம அவன் அமெரிக்கா போயிட்டான். அவன் அமெரிக்காவுக்கு போறேன்னு எங்கிட்ட போன் பண்ணிக்கூட சொல்லலப்பா. அவன் ப்ரண்ஸ்கிட்ட கூட சொல்ல,, அவன்கூட வாழணும் ஆசைப்படுறேன். ஆனால் அவ எனனை விட்டு விலகிப்போறான்னு தோணுதுப்பா. என்னால சரியா சாப்பிட , முடியல தூங்க முடியல எதையோ இழந்த மாதிரி பீல் பண்றேன் என்ன இப்படி புலம்ப விட்டுட்டு போயிட்டான்ப்பா." அவள் மனதில் உள்ளதை கொட்டி தீர்த்தாள்.
" அவன் அமெரிக்கா போனது உனக்கு எப்படிடா தெரியும்? "
" அப்பா நாங்க கார்த்திக் வீட்டுக்குப் போனோம்.,. அங்க அவன் அப்பா தான்பா சொன்னார்,.. அவர் வேற யாரும் இல்ல ஃபெஸ்டிவல்ல பார்த்தேன் சொன்னேல ரகுநாத் பிஸ்னஸ்மேன் அவர்தான் கார்த்திக்கோட அப்பா.. " என்றவள் அனைத்தையும் கூறினாள்..
" நீ நினைச்சது கரெட்டு தான். ஆனால் எப்படி கார்த்திக்கிட்ட உன்னுடைய லவ்வ சொல்லுவ..., "
" அவன் வந்ததும் தான் சொல்லணுப்பா ஆனால் எனக்கு பயமா இருக்கு, எங்க கார்த்திகோட அப்பா, எங்க லவ்வைப் பிரிச்சுட்டாருனா என்னப்பா பண்றது? அவங்களுக்கு நமக்கும் ஏணி வச்சா கூட எட்டாது. அதுமட்டுமில்ல இத்தனை நாள் லவ்வ சொல்லாத நீ, நான் இவ்வளவு பெரிய பிஸ்னஸ்மேனோட பையன் தெரிஞ்சதும் என்கிட்ட லவ் சொல்லிறீயா அவன் கேட்டா என்னப்பா பண்றது அதேல்லாம் கேட்டா அந்த நிமிசமே என் உயிர விட்டுருவேன்ப்பா..... "
" ச்சே,ச்சே..... அப்படியேல்லாம் பேசாதமா, கார்த்திக் அப்படி பேசுறவன் கிடையாது... அவன் உன்ன உயிருக்கு உயிரா காதலிக்கிறாமா.... "
" அப்ப ஏன்பா என்கிட்ட சொல்லாமா கூட அமெரிக்கா போகணும்.... "
" உன் கிட்ட எதுக்குடி சொல்லணும் நீ அவங்கிட்ட உன்னை லவ் பண்றேன்னு சொன்னீயா ? இல்லேல, அப்ப எதுக்கடி அவன் உங்கிட்ட சொல்லிட்டு போகணும் எவ்வளவு டிசென்டா உங்கிட்ட பிகேவ் பண்ணான். உன் பின்னாடி சுத்தி உன்னை லவ் பண்றேன் டாரசர் பண்ணல, உங்கிட்ட தன்னோட காதலையும் உன்னால அவனுக்குக் கிடைக்க போறா சந்தோசத்தையும் அழகாக எடுத்து சொன்னான், அப்ப கூட நீ அவன் கிட்ட லவ் சொல்லிருக்கலாம். இப்ப பாரு நீ கஷ்ட பட்டு அவனையும் கஷ்ட படுத்தி எங்களையும் கஷ்ட படுத்தி தேவையா உனக்கு.
ஆரம்பத்திலே இருந்து கார்த்திக் விசயத்தை எங்கிட்ட இருந்து மறைச்சுகிட்டு தான் இருக்க, நான் இப்ப கூட காலேஜ்ல கேட்டேன் அப்ப கூட இல்லேனு தானே சொன்ன. இப்ப வந்து அவன லவ் பண்றேனு சொல்லுற ஏன்டி இப்படி எங்க உயிர வாங்குற?" கடு கடுகத்தாள் சக்தி.
" சக்திமா இப்படி எல்லாம் பேசாத அவளே கஷ்டத்துல இருக்கும் போது இன்னும் கஷ்டபடுத்துற மாதிரி பேசாதா..... "
" விடுங்கப்பா அவ சொல்லுறதும் சரி தான் நான் அவங்கிட்ட லவ் சொல்லாததும், என்னுடைய லவ் உங்ககிட்ட இருந்து மறைச்சது எல்லாமே தப்புதான்ப்பா. அது மட்டுமில்ல இப்ப கூட என்னையும் கஷ்டபடுத்திகிட்டு எல்லாத்தையும் கஷ்டபடுத்திட்டு இருக்கேன்ப்பா "
" நீ கார்த்திய லவ் பண்றேலமா,அப்பா உன்னை கார்த்திக்கூட சேர்த்துவைப்பேன்... இந்த அப்பாவை நீ நம்புறல ." என்றதும் அவர் தோளில் சாய்ந்துகொண்டாள்..
" அப்பா கஷ்டப்பட்டாவது உங்க இரண்டுபேரையும் சேர்த்து வைக்கிறேன் கார்த்திக் வந்தோனே அவன்கிட்டையும், அவன் அப்பாகிட்டையும் பேசி சம்மதம் வாங்கிறது என்னுடைய பொறுப்பு.
ஆனால் நீ எப்பையும் போல சந்தோஷ்மா இருக்கனும்மா, அஜய்யும் தருணும் நீ இப்படி இருக்குறத பார்த்து பயந்துடாங்க, உன்னை நினைச்சு. அவங்க டென்த்துல மார்க்கெடுத்ததுக்கு கூட நீ சரியா விஷ் பண்லேன்னு எவ்வளவு வருத்தப்பட்டாங்க தெரியும்மா, பழைய படி சந்தோஷ்மா எங்ககிட்ட நீ பேசுமா "
" ஆமா அக்கா நீ ஏன் இப்படி இருக்க ? நான் உன்ன இப்படி பார்த்ததே இல்ல நீ. எங்கிட்ட நல்லா பேசி எவ்வளவு நாள் ஆச்சு தெரியுமா? நம்ம இரண்டு பெறும் சேர்ந்து எவ்வளவு சேட்டை பண்ணுவோம். ஆனால் நீ இப்பா பேசவே மாட்டிக்கிறீயே, நீ பழையமாதிரி பேசணும்க்கா நம்ம இரண்டு பேரும் சேர்ந்து சக்தி கலாய்க்கணும்க்கா....."
" சாரிடா அஜய், அக்காவ மன்னிச்சுருடா, நான் ஏன் இப்படி ஆனேன் எனக்கே தெரியலடா? நான் இனிமேல் இப்படி இருக்க மாட்டேன்டா. உங்க சந்தோஷ்ம் தான் என்னுடைய சந்தோஷ்ம்" என்றாள்.
" ஆமா நீ அப்படி தான் சொல்லுற. ஆனால் நேத்து வந்த கார்த்திக்காக எங்கள மறந்துடா. அவரு தானே முக்கியமா போயிட்டாரு உனக்கு எங்கள பத்தி கவலையே படல நீ போக்கா..... " பொய் கோபம் கொண்டான் தருண்.
" சாரிடா தருண், உங்கள பத்தி யோசிக்காமா இருந்தது தப்புத்தான். கார்த்திய பத்தி நினைச்சுட்டே உங்க சந்தோஷ்த்த கெடுத்துடேன்டா இனி நான் இப்படி இருக்க மாட்டேன்டா " என கெஞ்சினாள்.
வர்ஷா,அஜய்,தருண் மூவரும் கீர்த்தியை அணைத்துக்கொள்ள, அவர்களைத் தொடர்ந்து ஜீவா, சனா , சக்தி அணைத்துக்கொண்டனர்... " எங்களுக்கு பழைய கீர்த்தி வேணும் நாங்க அவள ரொம்ப மிஸ் பண்றோம் we want keerthi back " சனா சொல்ல எல்லாரும் அதையே ஆமோத்தினர்.
" இனிமேல் நாம எல்லோரும் சந்தோஷ்மா இருப்போம். ஒ.கே வா நோ அழுகை, ஒன்லி ஹாப்பினேஸ் மட்டும் தான் ஒ.கே வா....."
" அப்ப இத செலபிரேட் பண்ண நம்ம எல்லோரும் மாலுக்கு போவோம் ஒ.கேவா "என்றான்.
" ஹேய் இன்னக்கு என் ட்ரீட் ஒ.கேவா...." என்றான் அர்ஜூன். வீட்டிலே இருந்தவாறு கொண்டாடினார்கள்.
" தருண், அஜய் கேக் ஒன்றை வாங்கிவந்தனர்.
" என்னாச்சு, ஏன் எல்லாரும் அப்படி பார்க்ககுறீங்க...."
" நாங்க சொன்னதை வாங்கமா கேக் வாங்கிட்டு வந்திருக்கீங்க...."
" அதுவா சனாக்கா, அத அப்புறம் சாப்பிடலாம் முதல்ல கீர்த்தி அக்கா, கம் பேக் ஆனாதுக்கு இந்த கேக்கு, ப்ளீஸ் கீர்த்தி அக்கா இந்த கேக்க வெட்டுங்க...."என்றான்
" டேய் அஜய் இதுல ஏதோ வில்லங்கம் இருக்க மாதிரி இருக்கே.,..."
" போடி நான் எது பண்ணாலும் உனக்கு வில்லங்கமா தான் தெரியும்..."
" சரி சரி விடு சக்தி. நான் கேக் வெட்டுறேன் போதுமா " கீர்த்தி கூற அஜய்யும்,தருணும் விசமமாய் சிரித்தனர்.... இருவரையும் பார்த்தவாறே கேக் வெட்டி அவர்களுக்கு ஊட்டும் முன் கேக் கீர்த்தியின் முகத்தில் இருக்க, அதிர்ந்தாள்.
" அக்கா மறந்துட்டிய நம்ம கேக்கு வெட்டி என்னைக்காவது சாப்பிட்டுருக்கோமா,இப்படி தானே விளையாடுவோம் .... கேக் வெட்டி விளையாடுறதை நாங்க ரொம்ப மிஸ் பண்ணோம்.. அதுக்கு தான் பிளான் பண்ணி கேக் வாங்கிட்டு வந்தோம்.... " அஜய் கூற கீர்த்தி அவன் மேல கேக்கை தடவ, அது சக்தி மேலையும் பட்டது..., சக்தி கொஞ்சம் கேக்கை எடுத்து கீர்த்தி மேல் விச, அது ஆர்த்தி மேல பட, ஆர்த்தியைப் பார்த்து அர்ஜூன் சிரிக்க, அர்ஜூன் மேல ஆர்த்தி கேக்கை ஏறிந்தாள்.. இப்படி ஒருத்தர்மேல ஒருத்தர் கேக் விசி விளையாட ஆரம்பித்தனர்.., அனைவரின் முகத்திலும் கேக் இருக்க அவ்விடத்தையே அலங்கோலமாக்கினர்.
" நாம இப்பிடி விளையாண்டு எவ்வளவு நாள் ஆச்சு இல்லக்கா...."
" ஆமா வர்ஷா, " என்றவள் அவள் முகத்தில் உள்ள கேக்கை துடைக்க, அனைவரும் மாத்தி முகத்திலிருந்த கேக்கை துடைத்தனர்...
" மாமா, நீங்களும் இவங்ககூட சின்ன பிள்ளை மாதிரி விளையாடிறீங்களே"
" குழந்தைகள் கூட இருக்கிறத, விட, வேற என்ன சந்தோசம் இருக்க போது.. இவங்க கூட பேசுறதும், விளையாடுறதும், கார்ட்டூன் பார்க்கிறதும் ரொம்ப ஜாலியா இருக்கும், மனசு லேசா மாறும், சீரியல பார்க்குறத விட இது பெட்டர் " என்றார்.
" இப்படி சொல்லிறீங்க, ஆனால் உங்க பொண்ணு சீரியல பார்க்கிறத தடுக்காம விட்டுட்டீங்களே மாமா.... " என்றதும் அனைவரும் அதிர்ந்தனர்..
" அர்ஜூன் மாமா நீங்க மாட்டுனீங்க " எல்லாரும் சேர்ந்து அர்ஜூனைப் பரிதாபமாக பார்க்க, அவர்களின் பார்வையைப் புரியாதவன் சக்தியைப் பார்க்க அவளோ முறைத்தவாறே நின்றிருந்தாள்..
" சீரியல் பார்க்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா ஒரு நாள் பார்க்கலேனாலும் அதுல எவ்வளவு கன்பூஸ் வரும் தெரியுமா, அந்த சீரியல சீரியஸ்ஸா போகும்போது கட் பண்ணி தொடரும் போடும் போது அடுத்த நாள் என்ன நடக்க போகபோது இன்னைக்கே யோசித்து அடுத்த நாள் அந்த டைம் வரைக்கும் காத்துட்டு இருக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா " இப்படி சீரியல பார்க்குறத நம்ம சக்தி புகழ்ந்து கூற அர்ஜூனுக்கோ சிரிப்பு தான் வந்தது... அவன் சிரிப்பதை கண்டவளுக்குக் கோபம் வர, " இனி நீயும் சீரியல் பார்க்கிறா அர்ஜூன்...." என்றாள்..
" வாட், நான் சீரியல பார்க்கணுமா நான் ஒரு பிஸ்னஸ்மேன், அதுமட்டுமில்ல ஒரு கன்ஸடர்க்சன் எம்.டி எவ்வளவு பெரிய வி,ஐ.பி நான்.நான் சீரியல் பாரக்கணுமா.... " அர்ஜூன் தன் புகழ பாட
" ரொம்ப ஒவர் சீனாருக்கே. நீ காலைல தானே ஆபிஸ் போற ஈவினிங் வந்து பார்க்குற..நான் உன்கிட்ட சீரியல பத்தி கேட்பேன். நீ சரியா சொன்ன தான் நம்ம இரண்டு பேருக்கும் கல்யாணம் " என்றவள் பெரும் குண்டைத் தூக்கிப் போட்டுச் சென்றாள்..
' கல்யாணத்துக்கும் சீரியலுக்கும்என்ன டி சம்பந்தம்? இப்படி ஒரு குண்டத்துக்கி போட்டு போறாளே அர்ஜூன் ' என தனக்குள்ளே பேச,
" மாம்ஸ் இப்ப இருந்து பார்க்க ஆரம்பிச்சா தான் சிலபஸ்ஸ கம்பிளிட் பண்ணமுடியும் ஆல் தி பேஸ்ட் மாம்ஸ்..., "
தருணு,அஜய் சொல்லி நகர்ந்தனர்.
ஆர்த்தீ, " எங்கள எப்படி கிண்டல் பண்ணுவ, இப்ப அண்ணிகிட்ட மாட்டினீயா, நாளையில இருந்து எங்ககூட நீயும் உட்கார்ந்து பாரு. அப்படி பார்க்கல அண்ணிக்கிட்ட போட்டு கொடுத்துடுவேன்.
"
" போடி,உங்க அண்ணி பெரிய இவ, போட்டுக் கொடுப்பாளாம்..."
" மாம்ஸ் நீ எதுக்கும் கவலைப்படாதிங்க..," வர்ஷா வர,
" ஏம்மா எனக்கு இதல இருந்து தப்பிக்க ஐடியா தர போறீயா ? "
" ப்ச்.... இல்ல மாம்ஸ், இதுல இருந்து தப்பிக்கிறது கஷ்டம். நான் அத சொல்ல வரல இன்னிலையிருந்து பார்க்க ஆரம்பிங்க அப்படி உங்களுக்கு எதுவும் சந்தேகம்ன்னா யூடூப் பாருங்க ,அது மட்டுமில்ல மாமா எங்க அக்கா ஹிந்தி சீரியல் வேற பார்க்குறா..."
" ஆமா அப்பிடியே உங்க அக்காவுக்கு ஹிந்தி புரியிற மாதிரி தான்"
" மாமா இப்பேல்லாம் ஹிந்தி சீரியல தமிழ்ல டப் பண்ணி போடுறாங்க அதையும் பாருங்க இல்லேனா. அதுல இருந்து கேள்வி கேட்டுறபோறா அப்புறம் உங்கபாடு திண்டாடம் தான்"
' இது வேறயா.... அர்ஜூன் நீ காதலிச்சேல உனக்கு இது தேவைதான்..'
" தவளை தான் வாயால கெடுமா அது மாதிரி தான் நீ பண்ணிதும். அவ அரைஞ்சப்பயே நீ எஸ்கேப் ஆயிருக்கணும். இப்படி நீ அவ கிட்ட மாட்டுவ நான் நினைக்கவே இல்ல. அடுத்த அட்டாக் இப்படி ஆரம்பிப்பான்னு நான் நினைக்கல மச்சி அல் தி பெஸ்ட்..., "
" போடே டேய் போடா.. புடிச்சிருக்கான் பாரு ப்ரண்ட்ன்னு... "
அடுத்து கீர்த்தி வருவதை பார்த்தவன், " நீயுமா கீர்த்தி? "
" நானும் என் பங்குக்குச் சொல்ல வேணாமாடா...."
" சொல்லும் சொல்லித் தொலையும் ....."
" இல்ல அர்ஜூன் சக்தி சீரியல எவ்வளவு பிடிக்குமோ அந்த அளவுக்கு புக் படிக்கவும் பிடிக்கும் நல்லவேல உன்னைப் புத்தகம் படிக்க சொல்ல இல்லேனா உன்னுடைய நிலைமை என்ன ஆயிருக்கும்.,"
" இப்ப மட்டும் நல்லா இருக்குறது மாதிறி தான் போடி..."
" மாப்பிள்ளை என் பொண்ணு கொஞ்சம் வித்தியாசமானவள் தான் ,நான் கல்லைத் தூக்க சொல்லுவா, காளை அடக்க சொல்லுவா நினைச்சேன். ஆனால் உன்னை, சீரியல் பார்க்க சொன்ன பாரு என் பொண்ணுக்கு ரொம்ப நல்லகுணம்ல மாப்பிள்ளை "
" ஆமா மாமா ரொம்ப நல்ல குணம். இப்படி ஒரு பொண்ண நீங்க பெத்ததுக்குக் கொடுத்து வச்சுருக்கனும் மாமா " பல்லைக் கடித்தவன்.. ' பிள்ளை பெக்க சொன்னா தொல்லைப் பெத்து வச்சுட்டு இதுல வித்தியாசமானவனு புகழ்ச்சி வேற போய யோவ்.....' என மனதில் அவரைத் திட்டிக்கொண்டான்..
எல்லாரும் சென்றிட, ' டேய் அர்ஜூன் இந்த குடும்பத்துல வாக்கப்படுறதுக்கு முன்னாடியே இவ்வளவு கஷ்ட படுத்துறாங்களே! வாக்கப்பட்டுபோனா உன் நிலைமை வாய்விட்டு அழுக கூட முடியாதே ராசா ' என புலம்பிய படியே சென்றான்.
அன்று ஞாயிறாக இருக்க ரகுநாத் வீட்டில் ரெஸ்ட் எடுத்து கொண்டிருந்தார். கார்த்திக் அறையும் தன் அறையும் சுத்தம் செய்ய சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தார்.. அங்கே தன்மகளின் கல்யாணத்திற்கு அழைத்து வந்திருந்தார், கோபால்...
" ஹாய் கோபால் எப்படி இருக்க பார்த்து ரொம்ப நாள் ஆச்சு பிஸ்னஸ் வேலையில பிசியா...,"
" அப்பிடி இல்ல ரகு, பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடுறதுல ரொம்ப பிஸிப்பா. இப்ப தான் என் பொண்ணுஒரு நல்ல வரன் அமைந்தது, அதான் பேசி முடிச்சுட்டு கல்யாணம் பிக்ஸ் பண்ணியாச்சு. இன்விடேசன் கொடுக்கலாம் தான் வந்தேன்..."
" வாவ் சூப்பர்டா எப்போ கல்யாணம்...."
" நேக்ஸ்ட் சண்டே மறைக்காம வந்துரு கார்த்திக்கையும் கூட்டிட்டு வா..."
" கார்த்திக் அமெரிக்கா போயிருக்காங்கடா. நான் கண்டிப்பா வந்துடுறேன் "
" அப்படியா. ஆமா நீ எப்ப உன்னுடைய மருமகளா காட்ட போற "
" அவன் அமெரிக்கால இருந்து வரதுக்குள்ள, நான் ஒரு பொண்ணு பார்த்து வைக்கணும்டா.அவன் வந்தோனே கல்யாணத்த முடிச்சிட வேண்டியது தான்..... "
" என்னது பொண்ணு பார்க்கப்போறீயா ? கார்த்திக் தான் ஒரு பொண்ண லவ் பண்றானே,அந்தப் பொண்ண தான் கல்யாணம் பண்ணிக்க போறதா சொன்னான். நீ என்னடா இப்படி சொல்லுற?"
" என்னது கார்த்திக் லவ் பண்றானா ? " தன் மகன் காதலிக்கும் விசயம் இன்னொருவர் கூற அதிர்ந்தார்.
" உனக்குத் தெரியாத அன்னைக்கு,என் பொண்ணுக்காக அவன்கிட்ட பேச போனேனே, அப்ப அவன் எங்கிட்ட ஒரு பொண்ண லவ் பண்றதாகவும்,அந்தப் பொண்ணு இன்னும் என் லவ் ஏத்துக்கலன்னும் அவ ஒத்துக்கிட்டதும் நான் அப்பாகிட்ட சொல்லணும் சொன்னான். அப்ப இன்னும் அந்தப் பொண்ணு அவனுக்கு ஒ,கே சொல்லல போல அவன் உன்கிட்ட எதுவும் சொல்லலையா? "
" அவன் லவ் பண்ற விசயம் நீ சொல்லித்தான் எனக்கே இப்பா தான் தெரியும்... ரொம்ப நன்றிடா கோபால் நான் பாத்துக்கிறேன்டா...."
" சரிடா சீக்கிரமா, கல்யாணச் சாப்பாடு போடு. மறக்காம என் பொண்ணு கல்யாணத்துக்கு வந்திடு ரகு " என்றவர் இன்விடேஸ்னைக் கொடுத்து விட்டு கிளம்பிட்டார்..
" யாரா இருக்கும் அந்தப் பொண்ணு என் அவன் நம்ம கிட்ட இருந்து மறைச்சான். அந்தப் பொண்ண லவ் பண்றேன்னு சொல்லிட்டு அமெரிக்காக்குப் போய் என்ன பண்றான்? ஒரு வேலை அந்தப் பொண்ணு அவன் லவ்வ ஏத்துக்கலையோ, யாருன்னு தெரிஞ்சா கூட நாம போய் பேசிச் சேர்த்து வைக்கலாம்ன்னா அது யாருன்னு தெரியலையே, அவன் பிரண்ட்ஸ் கிட்ட கேட்ட தெரியுமா ? அவங்கிட்ட தான் கேட்டகணும் " என்றவர் யோசனையில் மூழ்க, அதனைக் கலைக்கும் விதமாக வேலைக்கார பாட்டி வந்தார்..
" ஐயா, இந்தப் போட்டோ கார்த்திக் தம்பி ரூம்ல இருந்தது யா..... " என்று வந்தார்.
" போட்டோ தானே மா, அத மாட்ட வேண்டியது தானே! அதையேன் என்கிட்ட கேட்கிறீங்க? "
" இல்லங்கயா இது ஒரு பொண்ணோட போட்டோங்கயா.... " என்றதும்
" என்னது பொண்ணோட போட்டோவா கொடுங்க " என்றவர் அதை வாங்கி பார்க்க மேலும் அதிர்ச்சி, ஆச்சரியம், சந்தோஷ்ம் எல்லாம் ஒண்ணு சேர்ந்து அவர் முகத்துல அப்பட்டமாகத் தெரிந்தது , அந்தப் போட்டோவில் கீர்த்தி இருப்பத்தைப் பார்த்தவருக்கு அப்பிடி ஒரு சந்தோஷ்ம்.
" ஐயா, அந்த பொண்ணு யாருங்கயா.... "
" இந்த பொண்ணுதாம்மா இந்த வீட்டு மருமகள்... நீங்க போய் உங்க வேலையைப் பாருங்க.... " என்றார்.
" ரொம்ப சந்தோஷ்ங்கயா " அவர் சென்றிட,
' டேய் படவா ராஸ்கல் எங்கிட்ட மறைச்சுட்டேல.. நீ இங்க தானே வருவ, என் மருமகளை வச்சே உனக்கு விளையாட்டு காட்டேறேன்டா. அன்னைக்கு கீர்த்தி வந்து இதைச் சொல்ல தான் வந்தாளா? அப்ப ஏன் என்கிட்ட சொல்லல? இவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை இருக்கு, நம்ம தான் அதைச் சரி பண்ணி சேர்த்து வைக்கணும்.... ' எனறவர் ளண்ணிக்கொண்டார்.
நம்ம ரகுநாத் சார் இவங்க இரண்டு பெரையும் எப்படி சேர்த்து வைக்கபோறாரு தெரியல வாங்க பார்க்கலாம்......
வருவான்.