வருவான் 18
கார்த்திக்கின் காதலைப் பற்றி தெரியவந்ததும் இல்லாமல், கீர்த்தியின் புகைப்படத்தைக் கண்டதும், ரகுநாத்திற்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும்... இருவருக்குள்ளும் ஏதோ பிரச்சினை இருப்பதாக அவருக்கு எண்ணியது. ' எவ்வாறு அந்தப் பிரச்சினையைத் தெரிந்துக் கொள்ள' என்ற யோசனையில் இருந்தவருக்குப் ப்ரதீப்பின் ஞாபகம் வர அவனை அழைத்தார்." ஹலோ ப்ரதீப் , நான் கார்த்திக்கோட அப்பா பேசுறேன் எப்படி இருக்கப்பா? "
" அப்பா, நான் நல்ல இருக்கேன்பா நீங்க? "
" நான் நல்லா இருக்கேன், நீ ப்ரீன்னா வீட்டுக்கு வர முடியுமா? "
" எதாவது பிரச்சினையா ப்பா?"
" பிரச்சினை இல்ல. கார்த்திக்கைப் பத்தித்தான், உன் கிட்ட பேசணும் நீ வர்றீயா ?" என்றதும்,
அவன், " நான் இன்னும் பத்து நிமிசத்துல வந்திருரேன்ப்பா... " என்றான். அவரும் போனை வைத்தார். ப்ரதீப்பும் அங்கு வந்தான்.
" வா ப்ரதீப், வந்து உட்காரு காபி சாப்பிட்டுறீயா? "
"இருக்கட்டும் பா, ஆமா, கார்த்திக் எங்கப்பா போனான் ?அவன் போன் ஸ்விட்ச் ஆப்னு வருது .அவன் இப்படி இருந்ததே இல்லபா. எங்ககிட்ட பேசாமா இருந்ததே இல்ல எதாவது பிரச்சினையாப்பா?"
" அதை நீ தான்டா சொல்லணும். அவனுக்கு என்ன பிரச்சினை? "
" நான்னா, அவன் எங்க இருக்கானே எனக்கு தெரியாது. அவன பார்த்து நாலுமாசம் ஆயிருச்சுப்பா."
" அவன் அமெரிக்கா போயிருக்கான்டா...."
" என்னது அமெரிக்காவா, எங்ககிட்ட சொல்லாமா எப்ப போனான்?"
" ஏப்ரல் 2 , தான், அவன் அமெரிக்கா போனான்டா "
" ஏப்ரல் 1 தான் அவன் எங்கள கடைசியா பார்த்துட்டுப் போனான். அப்பகூட எங்ககிட்ட சொல்லலேயே..... "
" அதான் அன்னைக்கு உங்கள பார்த்துட்டு வந்த அப்ப தான் அவன் சோகம இருந்தான். நான் நம்ம பிராஜட்க்காக யார அமெரிக்காக்கு அனுப்பப் போறேன்னு கேட்டேன்,அதுக்கு அவனே போறேன்னு கிளம்பிப் போயிட்டான். இதுவரைக்கும் அவன், எனக்கிட்ட கூடபோன் பண்ணவே இல்ல. அவன் அமெரிக்கா பிரண்ட் ஜான் தான் எனக்கு போன் பண்ணி விசாரிப்பான் நானும் அவன்கிட்ட கார்த்திக்கைப் பத்தி கேட்டுப்பேன். இப்ப சொல்லு ஏப்ரல் 1 என்ன நடந்துச்சு..... "
" அப்பா அவன் கீர்த்தின்னு ஒரு பொண்ண லவ் பண்றான்... " என்று அன்று நடந்த அனைத்தையும் அவரிடம் ஒன்றுவிடாமல் கூறிமுடித்தான் ப்ரதீப்.
" கீர்த்தி, அர்ஜூன லவ் பண்றான்னு நினைக்கிறீயா...."
" தெரியலப்பா, ஆனால் அவ எங்கிட்ட கார்த்திக்கைப் பத்திக் கேட்கும் போது அவ கிட்ட மாற்றம் இருந்துச்சு. அவனைப் பத்தி எனக்குத் தெரியாதுனு சொன்னப்ப, அவ, முகம் சோகமாச்சு.. அவ கார்த்திக்கை லவ் பண்றாலோன்னு தோணுது. ஆனா எனக்கு சரியா தெரியலப்பா...."
" கீர்த்தி, கார்த்திக்கைத் தான் லவ் பண்றான்னு நினைக்கிறேன். அவ கார்த்திக் அமெரிக்கா போயிட்டான்னு கேட்க்கும் போதும் அவ முகம் வாடுனதையும் நானும் பார்த்தேன். அவ கார்த்திக்கோட போட்டோவ ஆழமா பார்க்கும் போது , அவ கண்ணுல காதல் இருந்ததையும் பார்த்தேன்..."
" இப்ப என்ன பண்றதுப்பா? "
" நம்ம கீர்த்தி, வீட்டுக்குப் போய், அவ கிட்ட கேட்டாதான் உண்டு வா, நம்ம அவ வீட்டுக்குப் போவோம்...."
" அப்பா அது வந்து....." ப்ரதீப் தயங்கினான்..
" இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும் வா போகலாம் " இருவரும் அங்கே செல்ல, அங்கு கீர்த்தி இல்லை வேலைக்குச் சென்றிருந்தாள். யாரும் அங்கில்லை கிருஷ்ணன் மட்டும் இருந்தார்.
" இது சக்தியோட அப்பா...." என்று ப்ரதீப் ரகுநாத்திற்குக் கிருஷ்ணனை அறிமுகம் செய்துவைத்தான்...
" வா ப்ரதீப் உள்ள வா இவரு? " என்றி முழிக்க,
" நான் ரகுநாத் கார்த்திக்கோட அப்பா...." என்றார்.
" உள்ள வாங்க சார்.. " இருவரும் உள்ளே வந்து அமர்ந்தனர்.. "
காபி இல்ல டீ என்ன சாப்பிடுறீங்க சார்? "
" அதேல்லாம் எதுவும் வேணா சார்... "
" சார், நான் நல்ல காபி போடுவேன், நீங்க பயப்படாதீங்க " என்றவர் இருவருக்கும் காபி கலந்து எடுத்துட்டு வந்து கொடுக்க குடித்தனர்.
" கீர்த்தி இல்லையா அப்பா? "
" அவ வெளிய போயிருக்கா ப்ரதீப். எதாவது முக்கியாமான விசயம் பேசணுமா ? "
" அப்பா அது வந்து..., " ப்ரதீப் இழுக்க ரகுநாத் பேச ஆரம்பித்தார்.
" நீங்க...."
" சார், நான் கிருஷ்ணன் சக்திக்கு மட்டும் அப்பா இல்ல கீர்த்திக்கும் நான் அப்பா மாதிரி தான். அவ என்ன அப்படி தான் நினைக்கிறா. அவளோட கார்டியனும் நான் தான். நீங்க கீர்த்தியைப் பத்தி என்ன விசயமா இருந்தாலும் தாராளமாக சொல்லலாம், என்னை நம்பலாம்,...."
" இல்ல சார், எனக்கு கார்த்திக் தான் எல்லாமே, அவனுக்காக தான் இன்னும் உயிர் வாழ்ந்துட்டு இருக்கேன். அவன் வாழ்க்கையில எப்போமே சந்தோஷ்மா இருக்கணும் அதுக்காக நான் என்ன வேணா செய்வேன் சார். கார்த்திக் அமெரிக்கா போனது எனக்கு சுத்தமா இஷ்டமில்ல. அவன் அங்க போகணும் அவசியம் இல்ல, ஆனால் அவன் இப்படி முடிவு எடுத்தற்கு காராணம் கீர்த்தி தான்,
. கார்த்திக் கீர்த்தயை தான் லவ் பண்றான்னு எனக்கு இன்னைக்கு தான் தெரியும். எனக்கு கார்த்திக்கோட சந்தோசம் தான் முக்கியம். அவன் சந்தோசம் கீர்த்தி தான். ஆனால் கீர்த்தி கார்த்திக்கை தான் லவ் பண்றாளா? இல்ல அர்ஜூன லவ் பண்றாளா? எனக்கு பதில் தெரியணும். அதற்கு தான் நான் கீர்த்தியைத் தேடி வந்தேன்...," என்றார்.
" இருங்க இருங்க... இதுல அர்ஜூன் எங்க வந்தான்? கீர்த்திக்கும் கார்த்திக்கும் தானே பிரச்சினை "
" இல்லப்பா அர்ஜன், கீர்த்திக்கு ப்ரோபோஸ் பண்ணான். அவளும் அதை ஏத்துகிட்டதா கார்த்திக் தான் எங்கிட்ட வந்து சொன்னான். அன்னைக்கு அதைக் கேட்டதுல இருந்து கார்த்திக் ஒடஞ்சு போயிட்டான். அதுனால எங்க யார்கிட்டையும் சொல்லாம பிராஜட்னு அமெரிக்கா போயிருக்கான்ப்பா..."
" அர்ஜூன் சக்தி தான் லவ் பண்றான். கீர்த்தியும் அர்ஜூன் ரொம்ப நல்ல பிரண்ட்ஸ் . அன்னைக்கு அர்ஜூன் கீர்த்திகிட்ட லவ் சொன்னது அவளை ஏப்ரல் ஃபூல் பண்ணத் தான், இரண்டுபேரும் மாத்தி ஏமாத்துறதுக்குகாக அப்படிச் சொல்லிக்கிட்டாங்களே தவிர அவங்களுக்குள்ள காதல் இல்ல நல்ல நட்பு தான் இருக்கு.
' அடப்பாவிகளா லவ் சொல்லியா ஏப்ரல் ஃபூல் பண்ணுவாங்க. உங்களால அங்க ஒருத்தன் ஊர விட்டே போயிட்டானேடா... ' ப்ரதீப் நினைத்துகொண்டான்
..
" அப்பா நான் அப்பவே கார்த்திக்கிட்ட சொன்னேப்பா. கீர்த்திக்கிட்ட ஒருவாட்டி கேளுடான்னு. ஆனால், அவன் தான்ப்பா கீர்த்தி சந்தோசம் தான் முக்கியம் அவ அர்ஜூன்கூட சந்தோஷ்மா இருக்கட்டும் சொல்லி, நான் எதுவும் அவகிட்ட கேட்க போறது இல்லன்னு சொல்லிட்டான்ப்பா.
அவன்,அவ கிட்ட கேட்டிருந்தால் இந்தப் பிரச்சினை வந்துருக்காது. இப்ப அவன் அங்க தனியா இருக்க வேண்டியது இருக்காது. "
" இதான் விதிங்கிறது. எல்லா விசயத்துலயும் கரேட்டா இருக்கிறவன்.இதுல மட்டும் யோசிக்காம முட்டாள் மாதிரி நடந்துகிட்டான்...."
" அது என்ன முட்டாள் மாதிரி, முட்டாளே தான் நாங்க அவ்வளவு சொன்னோம் எங்க பேச்ச கேட்டானா? பெரிய இவன் மாதிரி கீர்த்தி சந்தோஷ்ம் தான் முக்கியம் சொல்ல, அவன் சந்தோஷ்த்தையும் கெடுத்துட்டு கீர்த்தியோட சந்தோஷ்த்தையும் கெடுத்து. இப்ப அங்க போய் உட்கார்ந்து என்னத்த பண்ணிட்டுதான் இருக்கானோ?"
" சரி விடுடா, சார் அப்ப கீர்த்தி கார்த்திக்கைத் தானே லவ் பண்றா?"
" ஆமா சார் கீர்த்தி கார்த்திக்கை தான் லவ் பண்றா,. கீர்த்தி மேலயும் தப்பு இருக்கு சார். கார்த்திக் கேட்கும் போதே லவ் பண்றேன்னு சொல்லிருந்தால். இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது. அவ குடும்பத்த நினைச்சுக்கிட்டு அவ காதல சொல்லாமல் விட்டுட்டு, இப்ப அவன் இல்லமா என்னால வாழ முடியாதுப்பானு ஒரே புலம்பல். கொஞ்ச நாளாவே அவ சரியே இல்ல கார்த்திக், அவள விட்டுப் போயிட்டான் விலகிப் போயிட்டான்னு தூரமா போயிட்டான்னு.அவன் போனதுக்கு நான் தான் காரணம் சொல்லிப் புலம்பாத நாளே இல்ல அவ இப்ப தான் கொஞ்சமா மாறி இருக்கா, கார்த்திக்கை அவ்வளவு லவ் பண்றா.... "
" இது போதும் சார், கீர்த்தி, கார்த்திக்கை தான், லவ் பண்றானு தெரிஞ்சுருச்சு. இனிமேல் அவங்க இரண்டு பேரையும் சேர்த்து வைக்கிறது என் வேலை நான் பாத்துகிறேன்... "
" அப்பா எப்படிப்பா அவங்கள சேர்த்து வைப்பீங்க.. அவன் தான் நம்ம கிட்ட பேச மாட்டிகிறானே? போன் பண்ணாலும் எடுக்க மாட்டிகிறானே? எப்படி அவன இந்தியாவுக்கு வர வைக்கபோறிங்க?"
" டேய் கார்த்திக், போன் பண்ணா எடுக்க மாட்டான். அவனுக்குப் பெர்சனல் மெயில் பண்ணாலும் அவன் பார்க்க மாட்டான்.அவன் பிரண்டுகிட்ட தான் போன் பண்ண சொல்லி என்ன பத்தி விசாரிக்கிறான். எங்க, என் கிட்ட போன் பண்ணி பேசின்னா, அவன இங்க வர சொல்லிருவேன். அவன் எங்கிட்ட பேசின்னா அவனால என்னைப் பார்க்க இருக்க முடியாது. அவன் உடனே கிளம்பி வந்துருவான். இத இரண்டையும் அவாய்ட் பண்ணத்தான் எங்கிட்ட பேசுறது இல்ல. எங்க ஆபிஸ்ல வேலைப்பாக்கிற மேனேஜர் கிட்ட அப்பப என்னைப் பத்தி விசாரிக்கிறான். அது எனக்கு வேற தெரியக்கூடாதுனு சொல்லி வச்சுருக்கான். ஆனால் நான் கண்டுபிடிச்சுட்டேன், அந்த மேனேஜர் எங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டார். எனக்கு எல்லாம் தெரியும் அவனுக்குத் தெரியாது, அதுனால அவர வச்சு தான் நாம கார்த்திக்கை, இந்தியாவுக்கு வர வைக்கணும், அவன் பிராஜட் முடிய இன்னும் இரண்டு மாசம் இருக்கு... அது வரைக்கும் அவன் இருக்கட்டும்,இன்னும் ஏக்சடாரா இரண்டுமாசம் கூட அவன் அங்க இருக்கட்டும்,நான் கீர்த்தி கிட்ட பேசி கல்யாணதுக்குச் சம்மதம் வாங்கிட்டு எல்லா அரேஞ்மென்ட் பண்ணிட்டு அவன வர வைச்சு அவனுக்குச் சர்பிரைஸ் பண்ணுவோம்டா. அதுனால கீர்த்தி கார்த்திக்கைத் தான் லவ் பண்றானு, கார்த்திக்கிட்ட சொல்லாமா அவனவர வச்சு அப்புறமா சொல்லி அவன சப்ரைஸ் பண்ணலாம். அவன் வர நாள் அவங்க இரண்டு பெருக்கும் நிச்சயம் பண்ற நாளா இருக்கணும்.
அதனால கீர்த்தி கிட்ட பேசி அவளுக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்கிறதுல சம்மதமான்னு கேட்டகணும். அவங்க வீட்டுல பேசி அவங்க என்ன முடிவு சொல்றாங்களோ அது அப்புறம் நம்ம கார்த்திக்கைப் பத்தி யோசிக்கலாம். ஆனால் எனக்கு சீக்கிரமாவே கார்த்திக்கும் கீர்த்திக்கும் கல்யாணம் பண்ணி கீர்த்தியை எங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போகணும். அதான் என்னுடைய ஆசை அது மட்டும் நிறைவேறுச்சுன்னா இந்த உலகத்திலே ரொம்ப சந்தோச படுற ஆள் நானா தான் இருப்பேன்.... "
" நீங்க சொல்லுறது கரேட் தான். ஆனால் கார்த்திக், மால்ல அர்ஜூனும் கீர்த்தியும் பேசுனத, கேட்டதையும்,அதுனால தான் கார்த்திக் அமெரிக்கா போன விஷயத்தையும் கீர்த்திக்கிட்ட சொல்லவேணா சார்...."
" ஏன் சார்...."
" அது வந்து... கார்த்திக் அமெரிக்கா போனதையே அவளால தாங்க முடியல இதுனால தான் கார்த்திக் போனான்னு தெரிஞ்சா கீர்த்தி உடைஞ்சு போயிருவா. அவள கஷ்ட படுறத எங்களால பார்க்க முடியாது.கார்த்திக் அவளை லவ் பண்றான்,வேலை விசயமாத்தான் அமெரிக்காவுக்கு போயிருக்கானு நினைச்சுட்டு இருக்கா.இதுல இத சொல்லி அவ மனச நோக அடிக்க வேணா சார்..."
" முதல் நீங்க சாருன்னு கூப்பிடுறத நிப்பாட்டுங்க. நாம தான் சம்பந்திங்களாயிட்டோமே, அப்புறம் என்ன சாருமோருனு,....."
" சரிங்க சம்பந்தி.... "
" நான் கீர்த்திகிட்ட இத பத்தி பேசல, ஆனால் நீங்க கீர்த்திக்கிட்டையும் அவ அம்மாகிட்டையும் பேசுங்க,கீர்த்திக்கு இப்ப கல்யாணம் பண்ண சம்மதமான்னு கேளுங்க,அவள எப்படியாவது சீக்கிரமா எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகனும்... ஒரு நல்ல நாள் பார்த்துக் நான் வந்து கீர்த்தி அம்மாகிட்ட பேசி, கல்யாணம் தேதி குறிச்சிட வேண்டியது தான்...."
" ஒ.கே சம்பந்தி அவங்க இரண்டு பெரும் சேர்ந்தா அதுவே போதும்.... "
கிருஷ்ணன் கீர்த்தி யின் அன்னையிடம் கார்த்திக்கைப் பத்தியும் ரகுநாத் பத்தியும் சொல்லிக் கார்த்தியும் கீர்த்தியும் ஒருத்தர்கொருத்தர் காதலிப்பதையும், கார்த்திக்கின் தந்தை, அவர்கள் இருவருக்கும் கல்யாணம் செய்து வைக்க தயாராக இருப்பதையும் அவர் பேசினதையும் கிருஷ்ணர் கூற, முதலில் பெரிய இடமென்று பயந்தார்.தன்அண்ணன்களிடம் கலந்து பேசியவர் கல்யாணத்திற்குச் சம்மதம் தெரிவித்தார்..,
முதலில் தன் படிப்பைக் காட்டி மறுத்தாள் கீர்த்தி... நான் லெக்சரரர் ஆன பின்னே கல்யாணம் என்றிட, ரகுநாத்திற்கு கண்ணை கட்டியது,' இவ எப்ப ப்ரபசராகி.. எப்ப கல்யாணம் செய்ய...,,' என எண்ணியவர்... கிருஷ்ணன் மூலம் தன் உடல்நலத்தைப் பற்றி கூறி அவளைச் சம்மதிக்க வைத்தனர்..
அவளுக்கும் இரண்டாம் ஆண்டு முதல் செம் முடிந்தது.., இன்னும் ஆறுமாதம் காலமிருந்தது படிப்பும் இருந்தது, நாட்கள் நகர நிச்சயதார்த்த வேலைகள் தொடர்ந்தது.. இதையறியாத கார்த்திக்கோ.... கீர்த்தியின் நினைப்பிலே, இன்னும் அவன் அர்ஜூனை தான் நேசிக்கிறாள் என்றே நினைத்துக்கொண்டு ப்ராஜட் முடிந்தாலும் அங்கே இருக்க முடிவு செய்தான்..
சூரியன் அவளின் அழகைக் கண்டு
வெட்கத்தில் தன்னை மறைத்து கொண்டது
அவள் தன் காதலனின் கரம் பற்றப்போகிறாள் என்று
தெறிந்து பொறாமையில் கறுமையை தந்தது..
தான் தான்அழகு என்று கர்வம் கொண்ட நிலா இன்று இவளின் அழகைக் கண்டு மேகத்தினுள் மறைந்து மறைந்து அவளை ரசித்தது
நட்சத்திரங்களோ அவள் அழகின் ஜொலிப்பில் கண்கள் கூசி கண்ணை சிமிட்டிபார்த்துக்கொண்டிருந்தது
இவை எல்லாம் ரசித்த என்னை,
தன் காதலன் ரசிப்பானா என்ற நினைப்பில் அவனுக்காக காத்துக்கொண்டு இருந்தாள் அவள்......
ரகுநாத்,கிருஷ்ணன், அனைவரும் எதிர்பார்த்த நாளும் வந்தது, ஏன் நாமும் எதிர்பார்த்த நாள் தான், கீர்த்தியின் நிச்சியதார்தம்.
ரகுநாத் தன்னுடைய ஒரே பையனான கார்த்திக்கின் கல்யாணதத்தை மிக விமர்சியாக செய்ய நினைத்தவர். தன்னுடைய பணபலத்தாலும் புகழாலும்,அந்த மண்டபத்தையே அழகு படுத்திருந்தார்...,
மாளிகையான அந்த மண்டபத்தை பூக்களால் வண்ண தோரணையாலும் அழகுபடுத்தப்பட்டது. தன்னுடைய நண்பர்கள்,சொந்தாகார்கள்,தன்னுடைய தொழிலாளிகள்,அத்தனை பேரையும் அழைந்த்திருந்தார் ரகுநாத்.. மண்டபமே விழாக்கோலம் போல இருந்தது.
அந்த மண்டபமே சொந்தங்களால் நிறைப்பிக்கொண்டிருந்தது மணபெண்ணை அலங்கரித்துக்கு கொண்டு இருந்தனர். சக்தி,சனா,ஆர்த்தி,வர்ஷா,பவித்ரா,கவிதாஎன அனைவரும் அவளைக் கிண்டல் செய்ய,விஷ்ணு,கார்த்திக்,அர்ஜூன்,ஜீவா தான் பங்குக்கு கிண்டலடிக்க, மணமகள் அறைக்குள் நுழைந்தனர்.. அங்கு கீர்த்தியைக் கண்டு மயங்கிதான் போயினர்..
" ஹேய் இது நம்மை கீர்த்தியாப்பா இது என்னால நம்பவே முடியல...."
" ஏன்டா விஷ்ணு வேற யாரு மாதிரி தெரியிது..."
" அதுவா ஜவுளி கடையில பட்டுசேலைக்கட்டிப் பொம்மை இருக்கும் பார்த்துருக்கியா அது மாதிரியே இருக்க நீ " என்றான்.
" ம்...... முறைத்தவள், அவனை அடித்துவிட்டு, நீ சொல்லு கார்த்திக் நான் எப்படி இருக்கேன்? "
" அவன் கிடக்கிறான் கீர்த்தி, நீ வந்து நகைக் கடையில வச்சுருப்பாங்களா அந்த பொம்மை மாதிரி இருக்க..." என்றான்.
" உன்ன..... அவன விட்டுட்டு அடுத்து அர்ஜூன் கிட்ட கேட்க, "நீ சொல்லு அர்ஜூன், நான் எப்படி இருக்கேன்...."
" நீயா ம்ம்..... அவள மேல இருந்து கீழ வரைக்கும் பார்த்துட்டு மாரியாத்த சில மாதிரி இருக்க....."
" போடா... நீ சொல்லு ஜீவா நான் எப்படி இருக்கேன்?" கேட்டவளுக்கு, ' ஐய்யோ இவன் என்ன சொல்லித் தொலைக்க போறானு' என்று அவனே பார்க்க
" கீர்த்தி, அப்படியே வானத்துல இருந்து இறங்கி வந்ததேவதை மாதிரி இருக்க.
ரொம்ப அழக இருக்க க நீ,கார்த்திக் உன்னை பார்த்தான் டோட்டலி பளாட் தான்...."
" எந்த ஊருல தேவதை பட்டுசேலை நகையெல்லாம் போட்டுருக்கு? " "எனவும்
" அதுவா நம்ம அர்ஜூனோட ஊர்ல.. இல்லடா..." என்றதும் அர்ஜூன அவளைப் பார்க்க, அவன் அசடு வழிய சிரிக்க,எல்லாரும் சிரித்தனர்.
" ஹேய் கீர்த்தி, நீ எவ்வளவு அழகா இருக்க பேசாம மாப்பிள்ளை மாத்திடலாம், அந்தக் கார்த்திக்குப் பதுல இந்த கார்த்திக்கை கல்யாணம் பண்ணிகோ...." என்றதும் பக்கத்த்தில் நின்ற பவித்ரா அவன் காதைப் பிடித்த திருகினாள். " மாப்பிள்ளை மாத்த சொல்லுறியா வா நான் உன்னை மாத்துறேன் " என்றவள் அவனை அடித்தாள்.
எல்லாரும் அவர்கள் கண்டு சிரித்து கொண்டே இருந்தனர். அந்த ரூமே கேலிக் கிண்டல்னு என சந்தோசமாக இருந்தது, அங்கு வந்த கிருஷ்ணனும் மாலதியும் கீர்த்தியின் முகத்தில் சந்தோசத்தைக் கண்டு பூரித்தனர்..
" கீர்த்தி இப்படியே, எப்பயும் சந்தோசமா இருக்கனும்ங்க " மாலதி கூற கிருஷ்ணனும் அதை அமோதிக்க இருவரின் கண்களில்லும் ஆனந்த கண்ணீர் தான்,பாவம் அடுத்து வருகிற பூகம்பத்தைப் பத்தி அறியாமல் இருந்தனர்.
" சம்பந்தி கார்த்திக் எப்ப வருவான், நிச்சியதார்த்துக்கு நேரமாகுதே, மாப்பிள்ளை இங்க இருக்கணுமே.... "
" இல்ல சம்பந்தி பிளைட் கொஞ்சம் டிலேயாருச்சு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான்.. ப்ரதீப் அவன கூப்பிட போயிருக்கான், சீக்கிரமா ரெண்டு பேரும் வந்துருவாங்க சம்பந்தி நீ பதட்டப்படாதீங்க..."
நல்ல நேரம் வந்ததால் நிச்சியதார்த்தம் பண்ணிடலாம் என பெண் வீட்டுப் பெரியவர்கள் கூற ரகுநாத்திற்க்கு ஒரே பதட்டம் இன்னும் கார்த்திக் வராது இருப்பதால்.. வேற வழியின்றி சரி என்றார்... பெரியவர்கள் நிச்சயம் செய்ய மேடையில் அமர்ந்திருந்தனர்..., நிச்சயதார்த்தப் பத்திரிக்கையை வாசித்து, பெண் வீட்டுசார்பா கீர்த்தியின் பெரியப்பாவும் மாப்பிள்ளையின் அப்பாவும் தட்டை மாற்றிக்கொண்டனர்...,ரகுநாத் கொண்டு வந்த பட்டுச்சேலையை கீர்த்தியிடம் கொடுத்து கட்டி அழைத்து வந்தனர்.
பட்டும், ஊதா வண்ணம்மும் கலந்து அவள் உடம்பில் துயிலாக மாறி அவள் காதலனுக்கு கிடைக்காத பாக்கியத்தைப் பெற்று
பெருமை கொண்டது...
கீர்த்தி, ஊதா நிறத்தில் பட்டுசேலை அணிந்து அதற்கேற்றார் போல் தங்க நகையேல்லாம் அணிந்து அழகு ஒவியமாய் மணமேடைக்கு வந்தாள், எல்லாரையும் கண்டு வணங்கி நின்றாள்.
அடுத்தது மாப்பிள்ளை அழைக்க, மாப்பிள்ளைய எதிர்ப்பார்த்து எல்லாரும் இருந்தனர், மாப்பிள்ளை வரவே இல்ல, வந்த சொந்தபந்தங்களிடையே ஒரே சலசலப்பு...
" சம்பந்தி என்னாச்சு ஏன் இன்னும் மாப்பிள்ளை வர்றல?இன்னும் பிளைட் வர்றலயா.போன் பண்ணி,கேட்டீங்களா ? "
" ப்ரதீப்க்கு போன் பண்ணா எடுக்க மாட்டிக்கிறான், இன்னும் பிளைட் வரலன்னு நினைக்கிறேன் சம்பந்தி..."
" அங்க எல்லாரும் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க சம்பந்தி இப்ப என்ன பண்றது "
கீர்த்திக்குமே, பயமாகத் தான் இருந்தது. ' ஏன் இன்னும் அவன்
வர்றல?ஒரு வேலை இந்த கல்யாணத்துல அவனுக்கு இஷ்டம் இல்லையா? இல்ல அவனுக்கு எதாவது ஆயிருக்குமோ ' பல சிந்தனைகளையோடும் பதட்டதோடும் அங்க நின்றாள்..
நேரம் போயிக் கொண்டு இருக்க சலசலப்பு அதிகமானது கீர்த்தியின் அன்னைக்கு தன் மகளின் கல்யாணம் என்ன ஆகுமோ என்று பயம் வர அவர் கீர்த்தியிடம் சென்றார்.
" மாப்பிள்ளைக்குப் போன் பண்ணி விசாரிச்சியா? அவர் எங்க இருக்கேன் சொன்னார் ? "
" இல்லமா, அவன் போன் ஸ்விட்சு ஆப் வருது. ப்ரதீப் அண்ணாக்குப் போன் பண்ணினேன், அவரும் எடுக்கலைமா..."
" மாப்பிள்ளைக்கு உன்னைப் பிடிக்கும் தானேமா சொன்ன, ஆனால் அவரு இன்னும் வர்றலையே. உங்களுக்கு உள்ள எதாவது பிரச்சினையாமா?"
கீர்த்தி, தன் அன்னையிடம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை, அவர்கள் முன், தன் அழுகையைக் கட்டுப்படுத்திகொண்டாள், அதைக் கண்ட, சக்தி கீர்த்தியின் அன்னையிடம் " அம்மா பிளைட் லேட்டாமா அதான் இன்னும் வர்றல, நீங்க எதுவும் தப்பா நினைக்காதிங்க.கார்த்திக், கீர்த்தியை அவ்வளவு லவ் பண்றான். அவ இல்லமா அவனால வாழ முடியாதுமா. அவன் சீக்கிரமா வந்திடுவான். ,நீங்க கவலைப் படாதீங்கமா போய் எல்லாத்தையும் கவனிங்க " என்று அவரைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள்..
கீர்த்தி அவளை அணைத்து அழுதாள்... கிருஷ்ணனுக்கும் ரகுநாத்திற்கும் கீர்த்தியை, அந்த நிலையைக் காண முடியவில்லை.. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தார், போன் எடுக்க படவே இல்லை. கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட அவருக்குப் பதட்டம் அதிகமாகனது. ரகுநாத் போனும் அலற, அங்கு என்ன சொல்ல பட்டதோ. நெஞ்சைப் பிடித்து கீழே விழுக, கிருஷ்ணன் அவரைத் தாங்கிக்கொண்டார்... அவரை எவ்வளவு அழைத்தும் வர மறுத்தார் ஹாஸ்பிட்டலுக்கு. கார்த்திக் வந்த தான் வருவேன் என்றவர் அடம்பிடித்தார்,. அதே நேரம் வலியில் துடிக்க, அங்கே அனைவருக்கும் என்ன செய்வதென்று புரியாமல் இருந்தனர், கீர்த்தியும் கூட கெஞ்சிவிட்டாள்.. அவர் மறுத்துவிட்டு வலியில் துடித்தார்...
அப்படி யாரு போன் பன்னிருப்பா ரகுநாத் பிழைப்பாரா,கார்த்தி வருவானா இந்த நிச்சியதார்தம் நடக்குமா தெரியல வாங்க பார்க்கலாம்......