வருவான் 2
கீர்த்தீ, 22வயதுடையவள், M. sc maths
படிக்கும் அ(டி)ப்பாவி பொண்ணு, கல்லூரியில் சேர்ந்து ஒருமாதம் ஆகிறது.
அம்மா தேவி, அப்பா தனசேகர். தந்தை இல்லை, அவளது பதின்ம வயதிலே இறந்து விட்டார். தம்பி தருண் பத்தாம் வகுப்பு படிக்கிறான்.
கல்லூரியில் பேராசிரியர் ஆக வேண்டும் என்பதே குறிக்கோள், தன்னுடைய குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளணும் அவ்வளவுதான்
அவளுடைய ஆசை. இதற்கிடையே இன்டிரீயர் டிசைனிங் கோர்ஸ் வேற படித்திருக்கிறாள், அவளுக்கு அவையென்றால் கொள்ள பிரியம், ஓவியம் அழகாக வரைவாள்.
சக்தி, சனா, ஜீவா மூவரும் தான் அவளுடைய சிறு வயது
நண்பர்கள்...
சக்தியும் சனாவும் ஒரே கல்லூரியில் அவளோடு தான் படிக்கின்றனர். ஜீவா பள்ளி வரைக்கும் உடன் படித்தவன், இப்பொழுது பொறியியல் கடைசி வருடம் படிக்கிறான்.
UG ல படித்த ஒரு தோழிக்கு சென்னையில் கல்யாணம் அங்கு சென்று விட்டு, அவளுடைய சொந்தம் ஒன்றைப் பார்த்து விட்டு வர கீர்த்திக்கு தாமதமானது. அதனால தான் ரயில் கிளம்பும் போது ஓடி வந்தாள். வரும் போது தான் அவனை அவள் பார்த்தாள்
காலை7.30 மதுரை ஜங்சன்..
" கீர்த்தி, ஏன்டி இவ்வளவு அவசரமா கிளம்புற? லக்கேஜ் எடுத்துட்டு மெதுவா போலாம் டி " என்றாள் மீனா கீர்த்தியின் கல்லூரித் தோழி.
" ஆமா டி, நிறைய லக்ஜேஜ் நீங்க கொண்டு வந்திருக்கீங்க மெதுவா எடுத்திட்டுப் போகலாம். ஆள பாரு ஆள இரண்டு செட் டிரஸ் தானடி கொண்டு வந்திருக்க, அதை பெருசா லக்கேஜ்ன்னு வேற சொல்லிக்கிற, சீக்கிரமா மூட்டை முடிச்செல்லாம் கட்டி கிளம்புங்க டி, "
" என்னாச்சு கீர்த்தி? காலையிலே ஏன் இவ்வளவு கோவம்? " கீதா
" ம்ச்.... நானே, அவன் திரும்ப வந்திருவனோன்னு டென்சன்ல இருக்கேன். இவ வேற மெதுவா போகணுமாம்,
வீட்டுக்குப் போனாதான் எனக்கு நிம்மதி "
" ஓ... இதுதான் உன்னோட
பிரச்சினையா நான் வேற ஏதோ நினைச்சேன் டி " என்றாள், மீனா.
" நீ என்ன நினைச்ச மீனா? " கீதா கேட்க...." நான்னா சீக்கிரமா கிளம்பி அவன பார்க்க போறாளோன்னு நினைச்சேன் " என்றவளைக் கண்டு கீர்த்தி முறைக்க,
" சாரி சாரி... அவன் வரத்துக்குள்ள சீக்கரமா போயிடலாம்.... " என்றவர்கள் அவசர அவசரமாய் அந்த ப்ளாட்பார்மை விட்டு வெளியே வந்தனர். அனைவரும் அவரவர் வழியைப் பார்த்துக் கிளம்பிட, ஏதோ நிம்மதி பரவியது, கீர்த்திக்கு. ஆட்டோவில் வீட்டுக்குச் சென்றாள்.
மீண்டும் ஒரு முறை அவளைப் பார்க்க வேண்டும் எண்ணமிருந்தாலும் தொந்தரவு செய்யாமல் வீட்டுக்குச் சென்றான் கார்த்திக்.
வீடு வந்து சேர்ந்தவள், தன் வீட்டுக் கதவை தட்டிக்கொண்டே நின்றாள்..., " அம்மா... அம்மா,,.. " இன்றைக்கு கதவு திறக்கப்படுவது கஷ்டம் தான், இன்று சண்டே என்பதால் வெகு விரைவில் கதவு திறக்கப்படாது. ஓங்கி ஒரு உதைவிட்டாள் கதவை... ' ஐயோ கால் போச்சே...' சோர்ந்தவள், வாசலிலே அமர்ந்துவிட்டாள். சத்தத்தைக் கேட்டு தேவியும் வந்து திறந்தார்.
" ஏன்மா இப்பதான் 8.30 ஆகுதாம்மா எவ்வளவு நேரமா தட்டிக்கிட்டிருக்கேன் யாருமே வந்து திறக்கல?"
" ஏன்டி காலங்கதால வந்தா யார்டி வந்து கதவை திறப்பா ?" என்றார்.
" நீ தான் திறக்கணும் "என்றவள், உள்ளே தனது பேக்கைத் தூக்கி ஏறிந்துவிட்டு சோபாவில் விழுந்தாள்.
" கீர்த்தி காஃபி போடவா இல்ல தூங்க போறீயா ? " என்றார்.
" காஃபி போடும்மா ப்ரஸ் பண்ணிட்டு வரேன்..." என்றவள்,
காலை கடன்கள் முடித்து விட்டு டிவி பார்த்துக்கொண்டே காஃபியைப் பருகினாள்.
" ஏன்மா கல்யாணம் நல்லபடியா முடிந்ததா???? ..." தேவி கேட்க
" ம்ம்.. நல்லார்ந்ததும்மா ரொம்ப கிராண்டா இருந்தது "
" உனக்கு எப்ப கல்யாணம் பண்ணலாம் கீர்த்தி ? "
கீர்த்திக்கு கல்யாணம் என்ற வார்த்தை கேட்டதும் கார்த்திக்கின் நினைவே வந்தது... ' நான் அவன கல்யாணத்துல பார்க்கவே இல்லையே அவன் மட்டும் எப்படி பார்த்தான்? ' என்று யோசித்துப் பார்த்தவள், ' ச்சீசீ... நான் ஏன் அவன பத்தி நினைச்சுட்டுருக்கேன்? ' என தலையில் அடித்துக் கொண்டாள்.
" என்னாச்சுமா என்ன யோசிக்கிற? நான் கேட்டுத்துக்குப் பதிலே காணோம் "
" அம்மா நான் இன்னும் படிக்கணுமா கல்யாணம் பேச்சே எடுக்காத " என்றாள். அதன்பின், தன் தம்பியை வம்பு பண்ணி, சண்டைப் போட்டுக்கொண்டும். நண்பர்களுடன், அரட்டை அடித்து அந்த நாளைக் கழித்தாள்..
அங்கோ, கார்த்திக் தன் அப்பாவிடம் கல்யாணத்தில் நடந்ததைப் பகிர்ந்து கொண்டான். அவளைப் பார்த்ததை மட்டும் கூறவே இல்லை. பின் ப்ரதீப் வீட்டிற்குச் சென்றான்.
" ஒரு நாள் கூட என்னை விட்டுப் பிரிஞ்சு இருக்குக முடியல போல " ப்ரதீப் ஆசையாய் கேட்க,
" அப்படியெல்லாம் இல்லையே, நான் கீர்த்தி அடுத்து, எப்படி பார்க்கன்னு, ஐடியா கேட்க வந்தேன்?" என்றான்.
" அதானே பார்த்தேன், நீயாவது என்னை பார்க்க வரதாவது, என்னை பார்க்காம கஷ்ட படுறதாவது "
" டேய், அவள அடுத்து எப்படி பார்க்கிறது தெரியலடா, அதான் ஏதாவது ஐடியா கொடு "
" இன்னிக்குத் தானேடா பார்த்த. அதுக்குள்ள ரொம்ப நாள் பிரிஞ்ச மாதிரி பீல் பண்ற ஓவரா தெரியல உனக்கு.. "
"ஆமாடா அப்படிதான் பீல் பண்றேன். ஓவரா தெரியல, நொய்நொய்ன்னு பேசாம ஐடியாவ சொல்லி தொலை, என்னை அவ, பார்த்தான் தான் எங்களுக்குள்ள ஏதோ இருக்குன்னு நம்புவா. அவ என்னைப் பார்க்க ஒரு வழி சொல்லு. "
" ம்ம்,..... வழி தானே, அவ நம்பர் தான் இருக்கே போன் பண்ணி உன்னுடைய பீல்ங்ஸ் சொல்லறத விட்டுட்டு. எங்கிட்ட சொல்லி என்னடா ஆக போகுது,...."
" போன் பண்ணி பேசினா அவளுக்கு கோவம் தான்டா வரும் பீல் பண்ணமாட்டா . எங்க இரண்டு பேருகுள்ள ஏதோ ஒன்னு இருக்குன்றத அவ பீல் பண்ணனும், போன் பண்ணுறது எல்லாம் வேஸ்ட். வேறு எதாவது சொல்லுடா.."
" போன் பண்ணமாட்ட, அப்புறம் எப்படி அவள பார்ப்பா? அவ பெயர தவிற எதாவது தெரியுமா உனக்கு, அவ சொன்னது போல உங்களுங்குள்ள எதாவது ஒன்னு இருக்கிறது உண்மைன்னா, விதியே உங்களை மீட், பண்ணவைக்கும்..."
" எங்களுக்குள்ள ஏதோ ஒரு பீல் இருக்குடா, அது கண்டிப்பா எங்களைச் சேர்க்கும். அவளை நான் மறுபடியும் பார்ப்பேன் டா.. " என்றவன்,
பேசியே அந்த நாளையும் கழித்தான், நாட்கள் நகர,
கீர்த்தி, கல்லூரிக்குச் செல்வது, தனது வழக்கமான வேலை எல்லாம் செய்து கொண்டும் தன் தம்பியுடன் சண்டை போட்டுக் கொண்டும் அம்மாவிடம் வம்பு இழுக்கிறதும், நண்பர்களுடன் அரட்டை என எல்லாம் இருந்தாலும் கார்த்திக்கின், நினைப்பும் வந்து தான் இருந்தது.
கார்த்திக் தன்னுடைய வேலைகளை எல்லாம் செய்தாலும், நண்பர்களுடன், ஊர் சுத்தினாலும் கீர்த்தி நினைத்துக் கனவில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறான்.
மூன்று மாதத்திற்குப் பிறகு. அன்று ஞாயிறாக இருந்தது.
" கீர்த்தி, நீ, நான், சக்தி, சனா, எல்லாரும் போய் மூவி பார்த்துட்டு வரலாம் " என்றழைத்தான் ஜீவா.
ஜீவாவிற்குக் கடைசி ஆண்டு என்பதால் பிராஜ்க்ட்டில் பிசியாக இருந்தான். ஜீவாவைத் தவிர்த்துப் போக முடியாது என்பதால் சினிமாவைத் தவிர்த்தனர் அவர்கள்.
ரொம்ப நாள் கழித்து ஜீவாவே வந்த கேட்டதனால், கீர்த்தி, சக்தி, சனா அனைவரும் சந்தோசமாக கிளம்பினார்கள்.
அங்ககே கீர்த்திக்கு அதிர்ச்சியோ ஆச்சரியமோ தெரியவில்லை, இரண்டில் ஏதோ ஒன்று அவளுக்காகக் காத்திருந்தது..
பெரிய மால் என்பதால் சண்டே வேறு கூட்டமாக அதிகமாக இருந்தது. முன்னதாகவே டிக்கெட் புக் செய்திருந்தால், உள்ளே அவர்கள் தன் சீட்டை தேடிக் கண்டுப்பிடித்து அமர்ந்து படம் பார்க்க ஆரம்பித்தனர்... அந்த படத்தில வரும் ரயில் காட்சிகளைக் கண்டதும், அவள் மனம் கார்த்திக்கை நினைக்க ஆரம்பித்தது.
படம் முடிந்து அனைவரும் வெளியே வந்தனர்.. கீழே இறங்கும் வழியில் பொக்கே சாப் இருந்தது, வண்ண வண்ண மலர்கள் அங்கே இருக்க, அதை பார்த்தவாறே கீர்த்தியும் அவள் தோழர்களும் நின்றிருந்தனர். அவர்களின் பின்னே வந்த யாரோ கீர்த்தியை அழைத்திட,அவளும் திரும்பிப் பார்த்தாள்.
" ஹேய் ராஜ் எப்படி இருக்கு? "
" நான் நல்ல இருக்குகேன். கீர்த்தி, நீ அத்தை எப்படி இருக்கீங்க ? "
" நல்லாருக்கோம் ராஜ், அங்க மாமா, அத்தை எல்லாரும் எப்படி இருக்காங்க?"
" நல்லாருக்காங்க, கீர்த்தி. ஆமா, நீ படம் பார்க்க வந்தியா? "
" இல்ல, இங்க இருக்க போஸ்டரைப் பார்க்க வந்தேன் " என்றதும் அவன் முறைக்கவே,
" ஒ.கே ஒ.கே... படம் பார்க்க வந்தேன் போதுமா ...நீ? "
" நானும் தான். ப்ரண்ட்ஷ் கூட வந்திருக்கேன்.... " என்றவன்,
தன் நண்பர்களை, அவளுக்குக் அறிமுகம் செய்துவைத்தான்...
" இது ஆகாஷ் , சரத், சன்தீப்,ப்ரதீப், கணேஷ் , சுரேஷ் அப்புறம் இது கார்த்திக்"
அவன் சொல்லி முடிக்க, கார்த்திக்கும் அவள் முன்னே வந்து நின்றான்.. கீர்த்தி, அவனைக் கண்டதும் மீண்டும் அதே " பேக்க,,. பேக்க... " ரியாக்சன். அவளைக் கண்டதும்
ஒரே சந்தோசம், கத்தாத குறைதான் அவனுக்கு. இருவரும் பார்த்துக்கொண்டே நின்றிருந்தனர்...
அவன் தானா, இல்ல அவனே தான், கண்ணைக் கசக்கிட்டுப் பார்த்தாலும் அவன் தான் தெரிந்தான் அவளுக்கு. அவன் சிரித்துகொண்டே நின்றான் அவள் முன்.. ' அப்ப இது கனவு இல்லையா கீர்த்தி ' மனதுக்குள்ள நினைத்துக்கொண்டு அவனைப் பார்த்தவாறே நின்றாள்.
" ஹாய், கீர்த்தீ, எப்படி இருக்க? என்னை தெரியுதா, பேபி?" மீண்டும் அவளைப் பார்த்த களிப்பில் நக்கல் கலந்து கேட்டான்.
" என்னாது பேபியா ? " நண்பர்கள் அனைவரும் கோரஸ்ஸாக கேட்டனர்.
" டேய் கார்த்திக், கீர்த்திய உனக்கு ஏற்கனவே தெரியுமாடா ? " ராஜ் ஆர்வமாக கேட்டான்.
" தெரியுமாவா, அவ என்னோட லவ்வர் டா, ஐ லவ் ஹர் டா... " என்றான் அமர்த்தலாக, அவன் பேச, கீர்த்தி தான் அங்கு சிலை போல நின்றிருந்தாள். சக்தி, சனா, ஜீவா, அவளைக் காண, அதை அறியாது கார்த்திக்கைப் பார்த்தவாறே நின்றாள்.
" அடியே கீர்த்தி, அவங்க சொல்லுறது உண்மையா? நீங்க இரண்டு பேரும் லவ் பண்றீங்களா ? " சக்தி அவளை உலுப்பிக் கேட்க..
" ஆங்.. ஆங்..." பதில் சொல்ல முடியாமல் முழித்தாள்.
" ஹேய், ரிலாக்ஸ். நான் தான் அவள லவ் பண்றேன். அவ, இன்னும் லவ் பண்ணல, இன் ஃபூசர் வாய்ப்பு இருக்கு... என்ன கீர்த்தி ? " என்றவன் கேட்க, அவனை முறைத்தாள்.
" என்னடா நடக்குது இங்க? நீ எப்படி டா கீர்த்திய பார்த்த? அதுவும் லவ் பண்றேன் வேற சொல்லற. எனக்கு ஒண்ணுமே புரியலடா. டேய் உங்களுக்கு ஏதாவது இத பத்தி தெரியுமாடா " ராஜ், தன் நண்பர்களையும் கார்த்திக்கையும் பார்த்து கேட்டான்.
"மூச்சு விடுறா கொஞ்சம், நானே சொல்றேன் " என்றவன்
அவளைப் பார்த்தலிருந்து எல்லாவற்றையும் கூறி முடித்தான் கார்த்திக்... அவன் சொல்லியதும் சனா, ஜீவா, சக்தி மூவரும் கீர்த்தியைக் கண்டு முறைந்தனர். இன்னைக்கு இருக்கு கீர்த்திக்கு...
கார்த்திக் கீர்த்தீயின் நண்பர்களிடம் தன்னை அறிமுகம் செய்துக்கொண்டான்.
கார்த்திக்கின் விழிகள் கீர்த்தியைக் காண, அவளோ தரையைப் பார்த்தவாறே நின்றிருந்தாள். அவள் அருகினில் வந்தவன்.
" நீ நம்புறியோ இல்லையோ கீர்த்தி, நான் நம்புறேன். நம்ம இரண்டு பேருக்குள்ளையும் ஒரு லவ் ஃபீல் இருக்கு. நான், உன்னை லவ் பண்ண சொல்லி டார்சர் பண்ணமாட்டேன். உன் பின்னால சுத்தமாட்டேன். ஆனால், இந்த ஜென்மத்தல நீ தான் என்னுடைய மனைவி. மனைவி மட்டுமில்ல எல்லாமே you are everthing in my life என்னோட வாழ்க்கையில, நான் நேசிச்ச ஒரே பொண்ணு, நீ மட்டும்தான். இனி எப்பையும் நீ மட்டும் நான். நீ, உன் லவ் சொல்லற வரைக்கும் காத்திருப்பேன்" என்றவன் அவளை நெருங்க, அவளும் பின்னே செல்ல, அங்கே அருகில் உள்ள வெள்ளை ரோஜாவை எடுத்து அதற்கான பணத்தையும் கொடுத்தவன். அவளிடம் கொடுத்து, " ஐ லவ் யூ கீர்த்தி... சீயூ யூ சூன்... " என்றவன் தன் நண்பர்களை அழைத்துச் சென்றுவிட்டான்.
வருவான்.