கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வருவான் 20

Chithu

Moderator
Staff member
வருவான் 20
சூரியன் தன் அதிக்கத்தைத் தொடர, அந்தக் காலைப் பொழுதில் அந்த மண்டபம் முழுவதும் பரப்பாக இருந்தது. மணமக்களை ஆசிர்வதிக்க,கல்யாணத்திற்கு அழைத்த அனைவரும் வரத் தொடங்கினார்..

மணமக்கள் இருவரும் தயாராகிக் கொண்டிருந்தனர். பெரியோர்கள் தங்கள் விருந்தாளிகளை வரவேற்றனர்..


ஜயர், மணமகனை மேடைக்கு அழைத்தார்.மணமகனாகிய கார்த்திக் மேடையில் தன்னிடத்தில் வந்தமர்ந்து ஐயர் சொல்லுவதைச் செய்து கொண்டுடிருந்தாலும், அவன் எண்ணம் முழுவதும் கீர்த்தியின் வரவை எதிர்ப்பார்த்து தான்.


ஐயர் தன் பொன்னான வாயால் எப்போது மணப்பெண்ணை அழைப்பார் என்று இருந்தது கார்த்திற்கு. அவன் எண்ணம் நிறைவேற்றும் வகையில் ஐயர் மணமகளை அழைத்து வரச் சொல்ல கார்த்தியின் முகம் பளிச்சிட்டது...

தன் முகத்தைக் கீர்த்தி வரும் திசையை நோக்கித் திருப்பினான்.

இதுவரை ஓவியங்கள் வரைந்தவள் இன்று
இன்று ஓவியமாய் இருக்கிறாள்.
ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டி
அழுகு சேர்த்தவள் இன்று
வண்ணங்கள் சேர்ந்து அவளை
அழகாக்கின..


கருப்பு அவள் விழியில் சேர்ந்து
மையாகிச் சிலிர்த்ததுக் கொண்டது
சிகப்பு அவள் உதட்டில் சேர்த்து
கன்னங்களிலும் படர்ந்தது
நாணத்தால்.
மருதாணி இட்டு கைகளிலும் தவழ்ந்தது..

மஞ்சள் அவளை ஆசிர்வதிக்கும் அர்ச்சதை ஆகியது
பூக்கள் அவளின் கருங்கூந்தலை
அலங்கரித்து அழகு சேர்ந்தது.


ஆபரணங்கள் தான் பங்கிற்கு அவளை
அழகாக்கியது.இவள் நான் வரைந்த ஓவியமேன்று பிரம்மனும்
கர்வம் கொண்டான்..


அழகு ஓவியமாய் வந்த கீர்த்தியைக் கண்டு அனைவரின் கண்கள் விரிந்தது ஆச்சிரியத்தில். அவளைக் கண்ட கார்த்திக்கின் நிலைமை ஐய்யோ பரிதாபம் கண் இமைக்காமல் அவளே பார்க்க...

" டேய் நீ வடிக்கிற ஜொல்ல, ஊரே பார்க்குது. அதுமட்டும் இல்ல நீ வடிக்கிற ஜொல்லால் அக்னி அனைஞ்சுற போகுது. வாய் முடிட்டு அவர் சொல்லறத செய்டா... "
ஹிஹிஹி... "அசடு வழிய சிரித்தான்.

அவன் பக்கத்துல வந்து கீர்த்தி அமர, அங்கு அவன் பாடு திண்டாட்டம் தான் அவள், அவன் தோளை இடிக்க, அவன் அவளைப் பார்த்தான்.

" யாரோ கல்யாணம் வேண்டாம் சொன்ன மாதிரி இருந்தது. பார்த்தா முதல் ஆள உட்கார்ந்து இருக்காங்க " என்று கேலிச் செய்ய,

" அது நேத்து சொன்னது, நேத்து சொன்னது நோத்தோட போச்சு ,இது இன்னகி " அவளிடம் கூறி சமாளித்தான்..

' ஏன் கார்த்தி அப்படி சொன்னான் ஒரு குட்டி flash back அதுவரைக்கும் ஐயர் மந்திரத்தச் சொல்லட்டும்... '

" அப்பா இப்ப கல்யாணம் வேணாம்ப்பா...." அவன் கூற அவனைப் புரியாமல் பார்த்தனர்...

" அப்பா, இவளோட ஆசையே ப்ரோபஸ்ர் ஆகுனும் தான். அவ படிச்சதும் கல்யாணத்தை வைச்சிக்கலாம். கல்யாணத்துக்கும் அப்புறம் அவ படிச்சாலும், எதாவது ஒரு சில சூழ்நிலையால,ஏன்டா கல்யாணம் பண்ணினோம் அவ. வறுத்தப்பட கூடாது அதுனால, படிச்சு முடித்ததும் வைத்துகொள்ளலாம் ப்பா..

" டேய் உனக்குகே, இது ஓவரா தெரியல, கீர்த்தியே இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டா, உனக்கு என்னடா? "

" இல்லடா ப்ரதீப், கல்யாணத்துனால அவ ஆசைப் பாத்திக்க கூடாதுன்னு தான் சொல்லுறேன்..."

" என்ன மாப்பிள்ளை நீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் பெண்கள் படிக்கிறது இல்லையா? "

" இல்ல, அத்தைப் படிக்கிறாங்க தான்... இருந்தாலும் நம்ம கிட்ட சொல்லாம அவங்க எவ்வளவு கஷ்ட படுவாங்களோ, நமக்குத் தெரியாதுல அத்தை. என் கீர்த்தி, அப்படி கஷ்டபடக் கூடாதுனு தான் அப்படி சொல்றேன் " என்றான்.

" டேய் எனக்கு அதெல்லாம் தெரியாது கீர்த்தி, சீக்கிரமா, நம்ம, வீட்டுக்கு மருமகளா வந்தே ஆகுனும். அவளுக்கு எந்தக் கஷ்டமும் வராம நான் பார்த்துக்கிறேன். அவள, படிக்க வைக்க வேண்டிய எல்லா வசதியும் நான் செய்றேன். கீர்த்தி, நீ என்னமா சொல்லற... "

" மாமா எனக்கு இவன் வேணாம், வேற நல்ல மாப்பிள்ளைப் பாருங்க. ரொம்ப நல்லவன இருக்கான்,
ரொம்ப ஒவரா பேசுறான்.இவனை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்...."

" அடிப்பாவி, உனக்காகத் தானடி பேசுறேன்.உன்னுடைய ஆசைக்கு, எந்தத் தடையும் இல்லாம நிறைவேறனும் தானே இப்படி சொல்றேன் "

" அதெல்லாம் நான் பார்த்துகிறேன். படிக்கப்போறது நான், நீ ஏன் இவ்வளவு கவலைப்படுற? நானே கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன் உனக்கு என்னடா. ஏன் கல்யாணத்துக்கு அப்புறம் என்னைப் படிக்க விட மாட்டியா என்ன? " குறும்பாய் அவனுக்கு மட்டும் கேட்கும் படி கேட்க,

அவனும் அவளைப் போலவே " நான் உன்னைப் படிக்க விட மாட்டேன் " என்றான் கண்ணடித்து, பாவமாக முகத்த வைத்தாள்.., " லூசு, உன்னுடைய ஆசை நிறைவேற்ற நான் இருக்கேன். உன் சந்தோஷ்ம் தான் என் சந்தோஷ்ம். கல்யாணம் பண்ணிட்டு படி, நான் உனக்கு எந்த விதத்திலும் தடையா இருக்கமாட்டேன் அவங்களுக்குள்ளயே பேச...

" டேய் நாங்களாம் இருக்கோம் மறைந்திடாதே,ரொமான்ஸ் பண்ணினது போதும்...."

" ஏன்டா நீங்கலாம் பிரண்ஸ்டா பேசக் கூட, விட மாட்டிங்களாடா "

" டேய் கார்த்திக், உனக்கு இவங்க பிரண்ஸா கிடைக்க, கொடுத்து வைச்சிருக்கனும். முக்கியமா பிரதீப் இவன் இல்லைன்னா கஷ்டம், பிரதீப் தான் எனக்கு துணையா இருந்தான்...." என்றார் ரகுநாத்.

" தாங்கஸ்டா எல்லாருக்கும்,, டேய் பிரதீப் ரொம்ப தாங்கஸ்டா உன்னால தான்டா நாங்க சேர்ந்துருக்கோம்..."

" டேய் விடறா மச்சி, நாளைக்கு எனக்கு லவ்ல பிரச்சினைனா வந்த நீ எனக்கு உதவி செய்ய மாட்டியா " என்று சனாவைப் பார்த்துக கார்த்திக்கிடம் சொல்லவதைக் கண்ட கார்த்திக்

" டேய் இத எப்ப? "

" அதுவா ராஜ் கல்யாணத்துலே இருந்துதே அவளைப் பிடிச்சிருந்தது. அவகிட்ட சொல்லல, இந்த கல்யாண வேலையா கீர்த்தி வீட்டுக்கு போகும் பார்த்து பேசி...." இழுத்தான்.

" சொல்லிட்டியா...."

" லவ் பண்ண ஆரம்பிச்சுடோம்டா...."

" அடாப்பாவி போலீஸ்கார் பொண்ணுடா டின் கட்டிருவாரு... "

" ஏன்டா போலீஸ்கார பொண்ணுன்னா லவ் பண்ணக்கூடாதா ? அவங்கள யாரு தான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிப்பா? எங்க வீட்டுல எல்லாதுக்கும் தெரியும். அவங்க வீட்டுல அவ அப்பாக்கு மட்டும் தான் தெரியாது. நான் கீர்த்திக்கிட்ட அப்பிளிகேசன் போட்டுருக்கேன். கல்யாணம் முடியட்டும் பார்க்கலாம் சொல்லிருக்காடா.. "

" நீயுமாடா..."

" காதலைச் சேர்த்து வைச்ச புண்ணியம் அவளுக்குக் கிடைக்கட்டுமே! உனக்கு ஏன்டா வலிக்குது, இரண்டு பெரும் சேர்ந்து தான் எங்கள சேர்த்து வைக்கிறீங்க...." என்றான்.

" கண்டிப்பாடா உன்னோட லவ் சக்ஸஸ் ஆக என்னோட வாழ்த்துகள்... "

" தாங்கஸ்டா...."

அங்கிருந்து அனைவரும் சாப்பிட்டு முடித்து விட்டு, கொஞ்சம் நேரம் பேசி கலாய்த்து சந்தோசமாக இருந்தனர்.

" கீர்த்தி நாளைக்கு காலையில சீக்கிரமா எந்திரிக்கணும் போய் தூங்குமா..." தேவி கூற.


கீர்த்தி, கார்த்திக்கைப் பார்த்தவாறே எழுந்தாள்... கார்த்திக்கோ பரிதாபமா அவளையே பார்க்க, கீர்த்திக்குச் சிரிப்பு தான் வந்தது... " இன்னும் கொஞ்சம் நேரம் இருடி " என கெஞ்ச, அவளோ அவனுக்குப் பழிப்புக் காட்டினாள்... அவன் முறைக்க, அவளுக்கு இன்னும் சிரிப்பு வந்தது...

" அத்தை, ஒரு அறைமணி நேரம் கீர்த்தி கிட்ட பேசிக்கிறேன்"
தேவி கீர்த்தியைப் பார்க்க,அவளும் தான்..


" கொஞ்சநேரம் ப்ளீஸ் அத்தை..." மீண்டும் கேட்க,

" சரிதம்பி, கீர்த்தீ நீ போமா.. சக்தி நீ துணைக்குப் போமா. " என்றார்...

சக்தி ஜீவாவை அழைக்க.," அவனுக்கு வேலை இருக்காம். நான் வரேன் சக்தி.. " அர்ஜூனும் அவனோடு சேர்த்துகொண்டான்..


நால்வருமாக மாடிக்குச் சென்றனர்.. அவர்கள் ஓர் இடத்தில் நின்று கொண்டனர்.

இருவரும் மாடியில் இருந்த கதிரையில் அமர்ந்தனர்.. அவனை விட்டுத் தள்ளியே அமர்ந்தாள்.., அவளைக் காண, கலைந்து காற்றில் ஆடும் கேசம்.... மை கலைந்து காதல் கூடிய கண்கள், துடிக்கும் இதழ்களென, அவளின் அழகைமேலும் கூட்டியே காட்டியது.

" இன்னும் எவ்வளவு நேரம் தான் என்னையே பார்த்துட்டே இருக்கபோற கார்த்திக். "

" காலம் முழுக்க...."

" நீ பார்த்துட்டே இரு நான் கிளம்புறேன் " என்றவள் எழ. அவள் கை பிடித்தவன், " சரி சரி உட்காரு பேசலாம் " என்றதும் அவள் தள்ளி அமர, காண்டுடாயினான்,....

" என்னடி இது ..... " கார்த்திக் அவளுக்குமான இடைவெளியைக் காட்ட.

"எது...?

" இன்னும் கொஞ்சம் தள்ளி உட்காரு...."

" சரி " என்று நகர்ந்தவளை தனது கரத்தால் வளைத்து தன்னோடு நெருங்கி அமரவைத்தான்.. அவனது விரல் அழுத்தங்களைத் தர, உடலெங்கும் இரத்தபாய, முகமெல்லாம் சிவந்தது, வியர்வைத் துளிகள் பூக்க, அந்த இன்ப அவஸ்தைக் கொண்ட பெண்ணை ரசிக்கலானான்..


" என்னாச்சு கீர்த்தி, ஏன் உனக்கு வேர்க்குது முகமெல்லாம் சிவக்குது என்னாச்சு ...."

' தெரியாத மாதிரி கேட்கிறான் பாரு, ' என்றெண்ணியவள்,
" கார்த்திக் கைய எடு "

" எடுக்க முடியாது என்னடி பண்ணுவா? "

" எங்கம்மா கிட்ட பெர்மிஷன் கேட்டியாடா? "

" நான் எதுக்குடி அத்தைகிட்ட பெர்மிஷன் கேட்கணும். நீ எனக்கு சொந்தமானவ அதெல்லாம் கேட்க முடியாது..."

" அப்ப பேசுறதுக்கு மட்டும் பெர்மிஷன் கேட்ட ...."

" அது அவங்க அங்க இருந்தாங்க, அதனால கேட்டேன்.அவங்க மட்டும் இல்லைன்னா உன்னைத் தூக்கிட்டு வந்துருப்பேன்.."

" பார்ர எங்க அம்மா முன்னாடி அம்பி, இப்ப இங்க ரெமோவா ,சரியானஃபராடுடா நீ...."

" ஹாஹாஹா..... அவங்க முன்னாடி ரொமான்ஸ் பண்ண சொல்லிறீயா..."

" பண்ணாலும் பண்ணுவ நீ முதல்ல தள்ளி உட்காரு. எங்க அம்மா உன்னை நம்பி அனுப்பிச்சா நீ இப்படி பண்ற"

" அதுக்காக நான் காதலிக்கிற பொண்ணு என் பக்கத்துல வந்து உட்கார்ந்து இருக்கும் போது கையைக் கட்டிட்டு சும்மா இருக்க சொல்லிறீயா..."

" அடப்பாவி நீ முதல்ல தள்ளி உட்காரு உன்னை நம்ப முடியாது..."

" ஏன்டி இப்படி தூரத்துல உட்கார்ந்த பேசவா உன்னை கூப்பிட்டேன்..."

" கிட்ட தானேடா உட்கார்ந்து இருக்கேன்...."

" இது பத்தலடி நீ எவ்வளவு கிட்ட உட்கார்ந்தாலும் தூரமா தான் இருக்கு.."

" இன்னும் கிட்ட வரனும்ன்னா உன்னுடைய மடில தான் உட்காரனுடா "

" தாராளமா உட்காருடி நான் உனக்கு மட்டும் தான்.சோ நோ அப்ஜக்சன்..."

" போடா...." என்றாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த்தவன் அவள் மடியில் தலைவைத்துப் படுத்துக்கொண்டான்..." டேய் இப்படி திடிருன்னு அதிர்ச்சியா கொடுக்குற..."

" அது அப்படி தான். நீ எனக்கு சொந்தம் இந்த மடியில, நான் மட்டும் தான் படுப்பேன் வேற யாருக்கும் இடமில்ல..."

" ம்ம்,.அப்படியா, அப்ப நம்ம குழந்தைகள் வந்த படுத்தா என்ன பண்ணுவ..."

" ம்.... அவங்கள என்னோட மடியில படுக்க வைச்சுப்பேன்.இந்த இடம் எனக்கு மட்டும் தான்.. " அவள் கைப்பற்றியவன்,


" கீர்த்தி, நான் அம்மா மடியில படுத்ததே இல்ல அவங்கள நான் போட்டோல தான் பார்த்திருகேன். அம்மா பாசம் எப்படிருக்கும் எனக்கு தெரியாது. சின்ன வயசுல அம்மாக்காக ஏங்கிருக்கேன்.நீ எனக்கு அம்மாவா இருப்பியா? அவங்கள மாதிரி பாசத்த காட்டுவியா?


நான் ஏதாவது தப்பு பண்ணா என்னை கண்டிச்சு என்ன மன்னிப்பீயா? என்னை, உன்னுடைய பிள்ளை மாதிரி பார்த்துப்பியா?நான் எந்த நிலைமையில வந்தாலும் நீ எந்த நிலைமையில இருந்தாலும் எனக்கு உன்னோட மடியை எப்போமே தருவியா.

சப்போஸ்நான் எதாவது தப்பு பண்ணா என்ன ஒதுக்கி வச்சிட மாட்டேல.என்ன விட்டுட்டு போயிற மாட்டேல நீ எப்பையும் என் கூட இருப்பேல......" சிறு பிள்ளையாய் தனது அன்னைக்காக ஏங்கி, தனித்து வாழ்ந்திருப்பவனைக் காண மனம் கலங்க, இனி அவன் சுக துக்கங்களில் உடன் இருப்பேன் என எண்ணியவள். அவனிடம்,

" கார்த்திக், நான் உனக்கு அம்மாவா, இருப்பேன், நான் உங்கிட்ட பாசமா இருப்பேன். நீ தப்பு பண்ணா, உன்னை கண்டிப்பேன் மன்னிக்கவும் செய்வேன், உன்னை, ஒதுக்கிட மாட்டேன்,உன்னை விட்டுப் போக மாட்டேன். உன்கூடயே இருப்பேன்.நீ எப்ப எந்த நிலைமையில வந்தாலும் உனக்கு இந்த மடிய தருவேன்,உனக்கு தாயா மட்டும் இல்லாம, காதலிக்கிற காதலிய,உன்னுடைய சுக,துக்கத்தில பங்கெடுக்கிற மனைவியா,உன்கூட செல்ல சண்டை போடுற தோழியா, நீ ஆசைய கொஞ்சுற உன்னுடைய செல்ல பொண்ணா நான் இருப்பேன்.உன்னுடைய எல்லாமுமா நான் இருப்பேன் போதுமா " என்றவள் நெற்றியில் இதழ் பதித்தாள்,..

அவன் எழுந்து அமர்ந்து அவளை நெருங்கி அமர்ந்து கொண்டான், அவள் தோளில் சாய்ந்தவள், " கார்த்திக் ஒரு பாட்டு பாடேன் எனக்காக... " அவள் முகம் பார்த்தே பாடினான்,

தொலைதூரம் சென்றாலும் தொடுவானம் என்றாலும் நீ விளியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்
இதயம்என்னும் மலர்கொண்டு கடிதங்கள் வரைந்தாய் பதில் நானும் தரும் முன்பே கனவாய் நீ கரைந்தாய்
பிடிவாதம் பிடி சினம் திரும் அடி
இழந்தோம் ஏழுகோலம் இனிமேல்
மழைகாலம்....

மறுவார்த்தை பேசாதே மடிமீது தூங்கிடு இமைபோல நான் காக்க கனவாய் நீ மாறிடு மயில் தோகை போல விரல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் விளிநீரும் வீணாக இமைதாண்ட கூடாதேன துளியாக நான் சேர்ந்தேன் கடல்லாக கண்ணாணதே மறுந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள்ளில்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒரு போதும் பொய்யில்லையே.....

பாடி முடித்தான்... " அவன் தோளில் சாய்ந்தவள் அவன் முகம் காண கசிந்தது காதல் இருவரதுகண்ணில். மெதுவாய் அவள் கன்னம் வருடியவன், அவளிதழை தன்கென ஆக்கிகொண்டான்... முதல்முறையாய் கொண்ட இதழ்முத்தம் உயிர்வரை தொட்டுசென்றது... அவனிடமிருந்து தன்னைப் பிரிக்க முயன்று பிரித்தாள்.

" போடா, உன்னை எல்லாரும் நல்லவனு நினைக்கிறாங்க. ஆனால் நீ ரொம்ப மோசம் நான் போறேன்..., " என்று எழுந்தவளைக் கை பிடித்து இழுக்க அவனைத் தள்ளி விட்டு ஓடினாள், கார்த்திக் பின்னே ஓடினான். கீர்த்தி ஓடிவந்தவள் சக்திமேல் மோதி நின்றாள், அதேசமயம் சக்தியும் அங்கிருந்து ஓடிதான் வந்தாள்,.. அர்ஜூன் பின்னே வந்தான்...

இருவரும் முழிக்க, கீர்த்திக்கு நடந்த இதழ்போராட்டம் தான் அங்க சக்திக்கு நடந்தது. அர்ஜூனைத் தள்ளிவிட்டு தப்பி வரும்பொழுது இருவரும் இடித்துகொண்டனர்..

கார்த்திக்கும் அர்ஜூனும் தன்னிதழைத் தடவிக்குகொண்டே வந்தனர்.

கார்த்திக் " நீயுமா " கேட்க பதிலுக்கு அர்ஜூன் " அங்கையுமா "கேட்டு இருவரும் ஆமா என்று ஹைபை போட்டுக்கொள்ள, இங்க கீர்த்தியும் சக்தியும் அவர்களைப் பார்த்து முறைக்க கார்த்திக்கும் அர்ஜூன் சிரித்தனர்.. சக்தி கீர்த்தியிடம் கண்ணைகாட்ட இருவரும் மாறி மாறி அடித்தனர்.

" ஹேய் சக்தி நான் கல்யாண மாப்பிள்ளை நாளைக்கு எல்லோரும் என்ன தான் பார்ப்பாங்க டேமேஜ் பண்ணிறாதடி . நான் உன்னோட பிரண்டு விடுடி " கார்த்திக் சக்திகிட்ட கெஞ்ச,அவளோ சரமாரிய அடித்தாள்.இங்க அர்ஜூனோ பாவம் கீர்த்தியிடம் அடிவாங்கிகொண்டே கெஞ்சினான்...

" ஹேய் கீர்த்தி, நான் துணை மாப்பிள்ளை டி கார்த்திக்கை விட கல்யாணத்து வர பிகரு எல்லாம் என்னைத் தான் பார்ப்பாங்க, அதனால விட்டுருடி.. " என்றவனை முறைத்த சக்தி...

" கீர்த்தி, இன்னும் கொஞ்சம் அடி போடுடி அடிவாங்கும் போது கூட என்ன சொல்றான்னு பார்த்தியா.அவளுக பார்த்தாலும் நீ பார்த்து ஜொல்லு விட்ட மவனே நீ செத்தடா... " என்றாள் சக்தி..

இருவருக்கும் கைவலிக்கவே விட்டனர்... கார்த்திக்,அர்ஜூனின் நிலைமை தான் ஐய்யோ பாவம் கீர்த்தியும் சக்தியும் கிளம்பினர்.

" அர்ஜூன், கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி அடிக்கிறாளுங்களே கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம நிலமை,... "

அர்ஜூன், " வேண்டும் என்று வந்து மாட்டிக்கிட்டது.இது ஒரு வழிபாதை திரும்பிப் போக முடியாது கார்த்திக்.., " சீரியஸாக பேசியவனை முறைத்தான்...

" சரி விடு, நாம அடிவாங்கினதை யாரு பார்க்கலைல கார்த்திக் " அர்ஜூன் கேட்க,

" எங்கள தவிர யாரு பார்க்கலை கோரஸாக, கார்த்தியின் நண்பர்கள் கத்த, கார்த்தியும் அர்ஜூனும் அசடு வழிந்தனர்.

" சரி விடுங்க வாங்க அடிவாங்கினதுக்கு மருந்து சாப்பிடா வேணாம்.... " ப்ரதீப் அழைக்க,

" மருந்தா ? "

" ரொம்ப நல்லவன்மாதிரி நடிக்காத அர்ஜூன், பெச்சுலர் பார்ட்டி இருக்கு, வா சரக்கு போடுவோம் " என்றுஅனைவரும் சென்றனர்.


" கார்த்திக் ஐயரை முறைத்துகொண்டே உட்கார்ந்திருந்தான்... ( ஏன்னா அவரு மந்திரத்த சொல்லிக்கிட்டே தான் இருக்காரு தாலிய எடுத்துக் கொடுக்கவே மாட்டிகிறாரு... )

" டேய், விட்டா ஐயர் எரிச்சுருவ போல. இருடா தாலிய கொடுப்பாருடா பொறுமை "

" நானும் பார்த்துட்டே இருக்கேன் அந்தாள் மந்திரத்த சொல்லிட்டே தான் இருக்காரு. தாலியைத் தர மாட்டிக்கிறாரே டா எனக்கு வர கோவதுக்கு அவரை...."

" டேய் அமைதியா இருடா...."

ஐயர், "நாதனார் முடிச்சு போடனும் மாப்பிள்ளையோட, தங்கச்சியை பொண்ணு, பின்னாடி வந்து நிக்கச் சொல்லுங்கோ, " எனக் கூற " மாப்பிள்ளைக்குத் தங்கச்சி இல்லை " என்று யாரோ சொல்ல,

" நான், மாப்பிள்ளையோட தங்கச்சி " என்று, ஆர்த்தி, கீர்த்தி பின்னாள் வந்து, உட்கார்ந்து கொண்டாள்.. கார்த்திக் அவளையும் அர்ஜூனையம் அன்பாய் பார்க்க, அர்ஜூன் அவனைப் பார்க்க சிரித்தான்.. அங்க ஒரே பாசமலர் படம் தான்.


ஜயர் மந்திரத்தைச் சொல்லித் தாலியைக் கார்த்திக்கிடம் கொடுக்க கார்த்திக், கீர்த்தி கழுத்தில் கட்டினான்..

இருவருக்குள்ளும் நடந்தப் இப்போரட்டத்தில் பிரிவு, கஷ்டம் வலியனைத்தையும் சற்று அவனது கரங்களில் பெற்ற தாலியினாலும் அவனது மனைவி என்ற எண்ணத்திலும் அனைத்தும் மறைந்து மாயமாயின... இனிதே அவர்களின் திருமணம் முடிந்தது....

அடுத்து என்ன கல்யாண விருந்து தான்...

 
Top