கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வருவான் 3

Chithu

Moderator
Staff member
வருவான் 3
சக்தி வீட்டில அனைவரும் ஆஜராகினர். சக்தி, ஜீவா, சனா மூவரின் விசாரணை ஆரம்பித்தது. கீர்த்தியை அமரவைத்து அவளைப் பார்த்தவாறே அந்த மூவரும் அமர்ந்து இருக்க, அவள் தலைகுனிந்தவாறு அமர்ந்திருந்தாள்.

"எல்லாரும் எப்ப வந்தீங்க ? படம் எப்படி இருந்துச்சு? " எனக் கேட்டுகொண்டே சக்தியின் அன்னையும் தந்தையும் வந்து அருகில் அமர்ந்தனர்.

சக்தி, " நல்லத்தான் இருந்துச்சு " பல்லைக் கடித்துக்கொண்டு சொன்னாள். " என்னாச்சு ஏன் இவ்வளவு கோபம் உனக்கு? "

" எல்லா உன் பொண்ணால தான்ம்மா, அவ கிட்டயே கேளு " என்றாள் சக்தி.

" என்னாச்சு, என் கீர்த்தி குட்டி, ரொம்ப டல்லா இருக்காளே? " அவளைப் பார்த்து கேட்டார் கிருஷ்ணன்.

கிருஷ்ணன் , மாலதி இருவரும், சக்தியின் தாய்தந்தை. சக்திக்கு ஒரு தங்கை வர்ஷா பொறியியல் படிக்கிறாள். ஒரு தம்பி அஜய் பத்தாம் வகுப்புப் படிக்கிறான். வருணுடைய ஆருயிர் நண்பன்.

சக்தி, அவர்களின் பொண்ணாக இருந்தாலும். கீர்த்தியின் மேல தான் பாசம் அதிகம்.கிருஷ்ணனிலிருந்து அஜய் வரைக்கும் அவளிடம் பாசத்தைக் கொட்டி தீர்த்திடுவார்கள்.

கீர்த்தியோடு சேர்ந்து சக்தியையும் ஓட்டுவது தான் கிருஷ்ணனுடைய வேலை. கீர்த்திக்கு, கஷ்டமாக இருந்தாலும் சந்தோஷமாக இருந்தாலும் அனைத்தையும் கிருஷ்ணனிடமும் தோழமைகளிடமும் கூறிடுவாள். எதையும் மறைத்ததே இல்லை மறைக்கவும் மாட்டாள் , கிருஷ்ணன் தான் அவளுக்கு ரோல்மாடலே. அவர் சொல்வதை எல்லாம் கேட்பாள். அவள் அம்மாக்கு அடுத்து இவர்தான்.

சனா ஒரே பெண். அப்பா ரவி, காவல் அதிகாரி.. அம்மா ராதா வீட்டரசி. இவர்களும் கீர்த்தி ,ஜீவா ,சக்தி தன்னுடைய பிள்ளைகளைப் போலவே பார்ப்பார்கள்.

ஜீவாவின் தந்தை ஆனந்தன், இன்ஜீனியர், தாய் பவானி வீட்டரசி ஜீவாவிற்கு ஒரே அண்ணன், சிவா பெரிய ஹோட்டலில் சீப் குக்காக இருக்கிறான்.

இந்த மூன்று குடும்பமும் வருசமாகப் பக்கத்துப் பக்கத்து வீட்டுல ஒன்றாகத்தான் வசிக்கிறார்கள்..

" அப்பா நான் சொல்றேன் " சனா நடந்த எல்லாத்தையும் கூறினாள்.,


" இவ்வளவு தானே! இதுக்குப் போயா அவ மேல கோபப்படுவீங்க? " என்றார் கிருஷ்ணன்.


"என்னப்பா சொல்லுறீங்க, அவ எல்லாதையும் எங்க கிட்டஇருந்து மறச்சிருக்கா. கோபப்படாம என்ன பண்ண சொல்லுறீங்க? " சக்தி கத்தினாள்.

" சக்தி, இதை நான் பெரிய விசயமாவே எடுத்துக்கல, அவனை மறுபடியும் பாப்பேன் நான் நினைக்கவே இல்ல அதுனால தான் உங்க கிட்ட இதைச் சொல்லலடி,
மறைக்கனும் இல்ல சாரி டி " அவளைச் சமாதானம் செய்தாள்..

" கீர்த்தி,
அவள விடுமா நீ சொல்லு, பையன் எப்படி இருந்தான்?அழகா இருந்தானா ? நீ அவன லவ் பண்றியா ? " மாலதி தன் பங்கிற்கு கேட்டு வைத்தார்.

" அம்மா.... " என இருவரும் பல்லைக் கடித்தனர்.


" இல்லடி எப்பொமே யாராவது கீர்த்தியைப் ப்ரோபோஸ் பண்ணா, அவங்கள ஒரு வழி பண்ணாம விட மாட்டாளே! இன்னைக்கு அமைதியா வந்திருக்கா, அதான் கேட்டேன்.." என்றார்... மீண்டும் கீர்த்தியிடம் முறைப்பைப் பெற்றார்.


" ஆமா கீர்த்தி, மாலதி சொல்லுறதிலும் ஒரு பாய்ன்ட் இருக்கு. நீ ஏன் அமைதியா வந்த? ஒரு வேல லவ் பண்றியா அவன? "

" அப்பா நீங்களுமா ? "

" இல்ல, கீர்த்தீ, உனக்கு அவன்மேல இன்டரஸ்ட் இருந்தா சொல்லு அப்பா ஒன்னும் சொல்ல மாட்டேன்மா . "


" அப்பா இன்டர்ஸ்ட் இருக்கான்னு தெரியலப்பா. ஆனா, அவனைப் பார்த்ததும் என்னையே மறக்கிற அளவு ஒரு பீல் வருதுப்பா, அவன் சொன்ன மாதிரி ஏதோ பீல் இருக்குப்பா" என்றாள்.


சக்தி, " ஏதோ பீல் இல்ல லவ் தான், " என்றவளை முறைத்தவள், " அப்பா, நான் அவன லவ் பண்ணல. எனக்கு நிறைய பொறுப்புகள் இருக்கு. காதல்னாலே கஷ்டம் தான் அதிகமாக இருக்கும். ஏற்கனவே நிறைய கஷ்டத்த அனுபவிச்சுடேன். இதுக்குமேல என்னால முடியாது " என்றவள் எழுந்துச் சென்று விட்டாள்..

அவங்களும் அடுத்து அதைப்பற்றிப் பேசவே இல்ல, " சக்தி, அந்தப் பையன பார்த்தா. நம்ம வீட்டுக்கு வரச் சொல்லுமா " என்றார்.


இங்கோ கார்த்திக், ராஜ்ஜூவிடம் கீர்த்தியைப் பற்றி கேட்டுக்கொண்டிருந்தான்.


" டேய் கீர்த்தியைப் பத்தி சொல்லன்னும்ன்னா, அவ, நல்லவனுக்கு நல்லவ, கெட்டவனுக்கு ரொம்ப கெட்டவ டா" என்றான் ராஜ்,,

" என்னடா, இப்படி சொல்லற அப்ப கார்த்திக் நீ நல்லவனா ? கெட்டவனா? " கார்த்திக்கைப் பார்த்து கேட்டான், ப்ரதீப்.

" தெரியலேப்பா " கணேஷ் கூறி தன் வாயால் பேக்கிரௌண்ட் மியூசிக்கையும் வாசித்தான்.

" டேய் சும்மா இருங்கடா, நீ சொல்றா ராஜ்," என்றான், கார்த்திக்.

" டேய் அவ ஆறுவயசில என் மண்டைய ஒடச்சவ, அது மட்டும் இல்ல கிரிக்கெட்ல சேர்த்துகலன்னு , என்னை அடிச்சுட்டா மச்சி. அதே மாதிரி இன்னொரு தடவையும் கிரிக்கெட் விளையாடினோம். அப்ப அவளும் வரேன் அடம் பண்ணா, சேர்த்துகலன்னா கண்டிப்பா, மண்டை ஒடசாலும் ஒடபான்னு சேர்த்துகிறது மாதிரி பந்து பொறுக்கவிட்டோம், இரண்டு மூணுவாட்டி எடுத்து வந்துக் கொடுத்தா.

அப்புறம் கோபம் வந்ததிருச்சு அவளுக்கு, அதே நேரம் பந்து வேற வீட்டுகுள்ள விழுந்திருச்சு. அவள போய் எடுக்க சொன்னோம். அவ போனா, ரொம்ப நேரமா வரல. அப்புறம் வந்தா, பந்த வேற கர்சிப்புக்குள்ள வச்சிருந்தா. ஏன் இப்படி வச்சுருக்க கேட்டேன்? தண்ணீல பந்து விழுந்திருச்சு அதான் இப்படி கொண்டுவந்தேன் சொன்னா. அந்தப் பந்த வாங்கி கர்ச்சிப்ப தான் உதறுனே. அதுல அவ மிளகாய் பொடி வச்சு என்ன பழி வாங்கிட்டா . அவ எங்க தாத்தா இறந்த அப்போ எங்க வீட்டுல தான் இருந்தா காலையில்ல இருந்து நைட்டு வரைக்கும் பாடாத படு படுதிட்டா.

ஆனாலும் எல்லாம் அவ அப்பா இறக்கிற வரைக்குதான். அப்புறம் ரொம்ப அமைதியாகிட்டா. அவ இருக்குற இடம் சந்தோஷ்ம கலகலன்னு இருக்கும் , வீட்டை ஒரு வழி பண்ணிருவா, துருதுருன்னு இருப்பா, பெரியவங்க சின்னவங்க எல்லார்கிட்டயும் பாசம பேசுவ ரொம்ப ஜாலியா இருக்கும் அவ இருந்தா ,

அவ, அப்பா அவ கண் முன்னாடியே, இறந்து போயிட்டார். அதிலிருந்தே அவ உடைஞ்சு போயிட்டா. அவளைப் பழைய மாதிரி மாத்த ரொம்ப கஷ்டபட்டோம். சக்தியோட அப்பா தான், அவளைத் தேத்தி பேசு வச்சார். அப்புறம் நார்மல் ஆயிட்டா. ஆனாலும் பழைய மாதிரி கலகலப்ப இல்ல அவகிட்ட,. ப்ரண்ட்ஸ் தான் அவளுக்கு எல்லாமே... எனக்கும் அவளுக்கும் கல்யாணம் பண்ணறதா வீட்டுல பேசிட்டு இருந்தாங்க. அவளுக்கு அது பிடிக்கல. நான் கவிதாவை லவ் பண்றேன். அவகிட்ட சொன்னே, அவ எல்லாருகிட்டையும் பேசி சம்மதம் வாங்கிட்டா. அவ ஒரு ஆர்ட்டிஸ்ட் நல்லா வரைவா.

ப்ரோபசர், ஆகனும் ஆசை வேற, அந்த ஆசையை யாருக்காகவும் விட்டுத் தர மாட்டாள். கல்யாணம் பத்தி பேசுனா போதும் காண்டாயிருவா. அதனால நாங்க யாரும் அதைப் பத்தி பேசமாடோம் . அவ முகம் சுளிக்க விடமாட்டோம்.. அவ்வளவு பாசம் அவ மேல. எங்க வீட்டுலையும் சரி எங்க இன்னொரு அத்தை வீட்டுலையும் சரி அவ்வளவு தான்டா அவள பத்தித் தெரியும்... " ராஜ் சொல்லி முடித்ததைக் கூட கவனிக்காமல், அவனது தேவதையோடு கற்பனைக்குச் சென்றுவிட்டான் கார்த்திக்..

நாட்கள் வாரங்களாயின...

கீர்த்தி, அவள் நினைத்தைப் போலவே கார்த்திக்கைப் பார்க்கவே இல்லை.

கார்த்திக்கோ, அவளை எப்படி பார்க்கிறது, எப்படி தன் காதலைப் புரிய வைக்கிறதென்று வழி தெரியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறான்.இருவரின் கண்ணாமூச்சி ஆட்டம் தொடங்கியது..

அன்று ஞாயிறு காலையாக இருந்தது.

" குட் மானிங் அப்பா " ஜாக்கிங்க்குச் சென்று ஓடிக் களைத்து வந்தான் கார்த்திக்.

" குட் மானிங்டா மகனே! "

" அப்பா, காஃபி குடிச்சிடீங்களா ? "

" இல்ல, மகனே உனக்காகத் தான் காத்திட்டிருக்கேன், சீக்கிரமா வா.." என்றார்.

" இதோ வரேன்ப்பா, நீங்க காஃபி, சொல்லுங்க, " என்றவன் பத்து நிமிடங்களில் வந்துச் சேர்ந்தான் இருவரும் காஃபியைக் குடித்தனர்.

" கார்த்திக், இன்னைக்கு உன் ப்ரண்ட்ஸ் கூட எங்காவது வெளியப் போறியா ? "

" இல்ல அப்பா, எங்கையும் போல ஏன் கேட்டுக்கிறீங்க ? "

" இல்ல கார்த்திக், என் ப்ரண்ட் கோகுல் இருக்கான்ல அவன் உன்னை பெர்சனேல்லா மீட் பண்ணனுமா அதான் கேட்டேன். "

" அப்பா, அவர் எதுக்கு என்னைப் பார்க்கனும் சொல்லுறாரு? அதுவும் பெர்சனேல் எதுவும் பிரச்சினையா அப்பா ? "

" பிரச்சினை எதுவும் இல்லடா, ஆனா எதுக்குன்னு தெரியல. நீ போய் பார்றேன் "

" நீங்களும் என் கூட வர்றீங்களா அப்பா? "

" இல்ல இன்னைக்குப் ப்ரண்டோட பொண்ணுக்குக் கல்யாணம் நான் போகணும், நீ மட்டும் போயிட்டுவா "

" அப்பா, எங்க மீட் பண்ணனும் சொன்னார் "

"உன்னை மாலுக்கு 10.30க்கு வரச் சொன்னார். "

" ஓ,கேப்பா நான் பார்த்துக்கிறேன். "

தன் தந்தைக் கூறியதுப் போல், கார்த்திக் அங்கே மாலுக்குச் சென்றான். அங்கே அவனுக்காகக் காத்திருந்தார் அவனது தந்தையின் நண்பர். " ஹாய்.. சார்.. " என்றான் அவரைப் பார்த்து.

" டோன் கால் மீ சார் கார்த்திக், கால் மீ அங்கிள் " என்றார்.

" ஒ.கே அங்கிள்.. "
இருவரும் பிஸ்னஸைப் பற்றி நிறைய பேசினார்கள்.., அதன் பின் அவரே, " கார்த்திக் நீ யாரையாவது லவ் பண்றீயா ? " எனக் கேட்டார். " ஏன் அங்கிள் கேட்கிறீங்க?.. "

" இல்லப்பா, என் பொண்ணுக்கு மேரேஜ் ஏஜ் வந்திருச்சு, அவளுக்கு மாப்பிள்ளைப் பார்க்க ஆரம்பிச்சிருக்கோம். எனக்கு சடர்ன்னா உன் ஞாபகம் வந்தது. அதான் உங்க அப்பாகிட்டப பேசினேன், எனக்கு என் புள்ளையோட விருப்பம் தான் முக்கியம். நீயே தனியா அவனோடு பேசுன்னு சொன்னான்... அதான் உன்கிட்ட கேட்கலாம் தான் இந்த மீட்டிங். " என்றார்.

அவன் அமைதியாக இருக்க, அவரும் அவன் பதிலை எதிர்பார்த்து இருந்தார். " உடனே சொல்லணும் இல்லப்பா, நீ வேணா என் பொண்ணு கிட்ட பேசேன். உங்களுக்குப் பிடிச்சுருந்தா கூட நாம மேற்கொண்டு பேசலாம்.. " என்றார்.

கார்த்திக் " சாரி அங்கிள், நான் ஒரு பொண்ண லவ் பண்றேன். அவளைத் தான் கல்யாணம் பண்ணனும் ஆசைப்படுறேன்.என்னால உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியாது அங்கிள். "

" இட்ஸ் ஒ.கே கார்த்திக். அந்தப் பொண்ணுகிட்ட லவ் சொல்லிட்டியா ? "

" ம்ம்.... சொல்லிட்டேன். ஆனா அந்தப் பொண்ணு இன்னும் என் லவ் அக்சப்ட் பண்ணல அங்கிள் . என்னை லவ் பண்ற வரைக்கும் நான் அவளுக்குகாக வெய்ட் பண்ணுவேன்" என்றான்.

" she is so lucky கார்த்திக்... " என்றார் அவர். அதைக் கேட்டு முறுவலித்தான்.

" ஒகே கார்த்திக், All the best for your love", நான் கிளம்புறேன்பா..." என்றார்.

" தாங்க்ஸ் அங்கிள். ஆனா, நான் லவ் பண்றத அப்பாகிட்ட சொல்லிடாதீங்க அங்கிள். ப்ளீஸ் " என்றான்

" ஏன்பா சொல்ல வேண்டாம்
சொல்ற ? "

" இல்ல அங்கிள், அப்பாகிட்ட சொன்னா உடனே அந்தப் பொண்ணப் பார்க்கணும் அடம் பிடிப்பார். அப்புறம் அந்தப் பொண்ணுக்குத் தான் பிரச்சினை. அவ எங்கிட்ட அவ காதலைச் சொன்னதும், அப்பாகிட்ட கூட்டிட்டுப் போய் காட்டலாம் நினைச்சிருகேன். நீங்க எதுவும் சொல்லாதிங்க அங்கிள்." என்றான்.


" ஒ.கே கார்த்திக், நான் சொல்லல பாய்...." அங்கிருந்து கிளம்பினார்.

' கார்த்தி, உன்னுடைய லவ் இவருக்குக்கெல்லாம் புரியுது. ஆனா, கீர்த்திக்குப் புரிய மாட்டிங்குதே, எப்ப தான் அவளுக்குப் புரிய போகுதோ? இறைவா இப்படி என்னைத் தனியா புலம்ப வச்சுட்டியே நீ நல்ல இருப்பீயா? ' தனியாக, மேலே பார்த்தவாறு புலம்பினான்.


"ஹாய் கார்த்திக் என்ன தனியா பேசிட்டு இருக்கீங்க ? " சக்தி கேட்டுக்கொண்டே அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

" ஹாய் சக்தி, எல்லாம் உங்க தோழியால தான் இப்படி
புலம்புற அளவுக்கு வந்துட்டேன் " என்றான் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு.

" ஹஹ..... ஹஹா......." வாய்விட்டே சிரித்தாள் சக்தி.


" என்னைப் பார்க்க, உங்களுக்குக் காமெடியன் மாதிரி தெரியுதா சக்தி ? "

" இல்லங்க, சாரி கார்த்திக் " என்றாள்.

" பரவாயில்லை, அப்புறம் நீங்க, வங்க எல்லாம் வேண்டாம் உங்க ப்ரண்ட்கிட்ட பேசுற மாதிரி பேசுங்க... " என்றான் நட்பாக,


" என்னை சொல்லிட்டு, நீ அப்படி பேசுற கார்த்திக்?" என்றாள் சிறு சிரிப்போடு.


" சாரி சக்தி, நீ மட்டும் தான் வந்துருக்கியா? இல்ல கீர்த்தியும் உன் கூட வந்திருக்காளா ? " ஆர்வத்தோடு கேட்டான்.

" ஆமா, கீர்த்திக்கூடத்தான் வந்திருக்கேன். " என்பதற்குள் அவன் விழி அவளைத் தேட ஆரம்பித்தது

" ஹலோ ! அப்ப என்ன அவசரம்? சொல்லறதுக்குள்ள தேட ஆரம்பிச்சுட்ட, அவ இங்க இல்ல இரண்டாவது மாடில பொம்மை கடையில இருக்கா, டெடி வாங்க வந்தோம். என்னுடையக் கசினை பார்த்தேன். அவ கிட்ட பேசிட்டே கீழே வந்துடேன். " என்றாள்.

" ஓ... டெடி வாங்கவா வந்தீங்க?"

" கிப்ட் வாங்க வந்தோம். நீயும் வாயேன் மேல போலாம். " என்றவள் அழைக்க " சரி " என்று இருவரும் அங்கே சென்றனர். பொம்மைக்கடைக்குள் இருவரும் நுழைய, அங்கே அவர்கள் கண்ட காட்சி, அவர்களை அதிர்ச்சியடையச் செய்தது..


வருவான்

 
Top