வருவான் 5
"அம்மா..... அம்மா.... " தேவியை அழைத்துக் கொண்டு, சக்தி கீர்த்தியின் வீட்டுக்குள் நுழைந்தாள்.
" என்னாம சக்தி எங்கயாவது வெளியே போறீங்களா இரண்டு பேரும்? "
" ஆமாம்மா....
நானும் கீர்த்தியும் புத்தகக் கண்காட்சிக்கு போறோம்மா, எங்க அவள காணோம்?" எனக் கேட்டாள்.
" புத்தககண்காட்சிக்கா ? அவ காலேஜ் புத்தகத்தை, தவர வேற எந்த புத்தக்கமும் அவளுக்கு புடிக்காதே, எப்படி அவ வர ஒத்துகிட்டா? "
" அவ எங்கம்மா, ஒத்துகிட்டா! முதல்ல நான் சனாவ தான் கூப்பிட்டேன். அவ அவங்க அம்மாகூட அத்த வீட்டுக்கு போறேன் சொல்லிட்டா. ஜீவா கிட்ட கேட்டா, போடி, அங்க யாராவது போவாங்களான்னு திட்டிட்டுப் போயிட்டான். கடைசியா, கீர்த்தி கால்ல விழுந்து ஒத்துக்க வச்சுடேன்மா. "
" சரிமா, சாப்பிடுறீயா சக்தி?" என்றார்.
" இல்லமா சாப்பிட்டுதான் வந்தேன் "
" சரி பார்த்துப் போயிட்டு வாங்க இரண்டு பேரும் " என்றார். அவளோ சரியென்று கீர்த்தியின் அறைக்குச் சென்றாள்.
அங்கே அவள், வொய்ட் டீசர்ட், ப்ளாக் ஸ்கேர்ட் கழுத்துல பிளாக் ஷாலை சுத்தி போட்டுக் கொண்டு தயாரானாள்.
" கீர்த்தி போலாமா டி " வந்தவளைப் பரிதாபமாக பார்த்தாள் கீர்த்தி.
" ஏன்டி கண்டிப்பா போகனுமா, வேற எங்கயாவது போலாம் டி. எனக்கு அதெல்லாம் ஆகாது உனக்கு தெரியும்ல அப்புறம் அங்கயே கூப்பிடுற?"
" உன்னை, கொன்னுடுவேன். நேத்துலருந்து இதை தான் சொல்லிட்டே இருக்க நீ, ஒழுங்கா வந்திரு... " என்று மிரட்டினாள்.
சக்திக்கு, புத்தகம் வாசிக்கிறது. என்றால் இஷ்டம். ஆனா, கீர்த்திக்கு அப்படி அல்ல. படிக்க வேண்டிய புத்தகத்தை, தவிர வேற எதையும் தொட மாட்டாள். அவளை வம்படியாக சக்தி அங்கே அழைத்து போகிறாள், என்ன நேருமோ ?
தமுக்கம் மைதானத்தில், புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.. அங்கு தான் இருவரும் சென்றனர்.
" சக்தி நீ உள்ள போ, நான் வண்டிய பார்க் பண்ணிட்டு வந்திடுறேன். " என்றவள் வண்டியைப் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தச் சென்றாள் .
அங்கே டூவிலர் எல்லாம் ஓர் பக்கமும், காரெல்லாம் இன்னொரு பக்கம் நிருத்த வேண்டும்....
கீர்த்தி, வண்டியைப் பார்க் பண்ணியவள், சக்தியுடன், உள்ளே சென்றாள். அங்க ஜூஸ் கடையைப் பார்த்தவள் நின்றுவிட்டாள்.
" ஏன்டி இங்க நிக்கிற? வா உள்ள போலாம் "
" நீ போடி நான் நான் இங்கயே நிக்கிறேன்"
" ஏன்டி உன்கூட இதுவரைக்கும் வந்ததே பெரிய விசயம். இதுல உள்ள வேற வரனுமா? உள்ள வந்த இந்த புக்கோட எஸ்டி தெரியுமா?, அது தெரியுமா? இது தெரியுமான்னு டார்சர் பண்ணுவ. அதான் நான் வரல நீ போ..." என்றாள் கீர்த்தி.
" ம்.... " சக்தி முறைத்துக் கொண்டே உள்ள போனாள்.
" அங்கே கீர்த்தி ஜூஸ் ஒன்றை வாங்கி வேடிக்கைப் பார்த்தவாறே பருகினாள். அப்பொழுதுதான் அங்கே கருப்பு கலர் உள்ளே வந்தது. கருப்பு கலரைப் பார்த்ததும் அந்தக் காரை பார்த்துக்கொண்டிருந்தாள்.
" வாட்சு மேன், கண்ணாடி வழியே ஓர் இடத்தை காமிக்க, அங்கே அந்தக் கார் சென்று நின்றது... அதிலிருந்து இறங்கிய ஆடவன் காரை லாக் செய்துவிட்டு திருப்பினான்.
கீர்த்திக்கு அவனைக் கண்டதும் கோபம் வந்தது. அவன் வேறுயாரும் இல்ல அர்ஜுன் தான். அவன் உள்ளே செல்வதை உறுதிபடுத்திக் கொண்டு, அவனைப் பழிவாங்கவே, அந்தக் காரின் அருகினில் சென்றாள். சுற்றி முற்றி பார்த்தவள், ' டெடி மிதிச்சு அழுக்காக்குனேல, இப்ப உன் காரை என்ன பண்றேன் பாரு... " என்றவள் அதன் மேல் ஜூஸைக் கொட்டினாள்.
பாவம் அவள் கெட்ட நேரம் அவனிடம் மாட்டிக்கொண்டாள். தனது வேலட்டை மறந்து காரில் வைத்தவன். அதை எடுக்க திரும்பி வரும் போது, அங்கே அவள் செய்வதைப் பார்த்து விட்டான்..
அவனும் இதை ஒரு சாக்காக கொண்டு அவள் அருகினில் சென்றான். அவளோ திரு திரு வென முழித்து நின்றாள்...
" ஏன்டி இப்படி செஞ்ச? " என்றான்..
" என்னது " டி " யா, மரியாதைய பேசு." என்றாள்.
" அன்னைக்கு நீ, மட்டும் எனக்கு மரியாதை கொடுத்தீயா? நான் எதுக்கு உனக்கு மரியாதைய கொடுக்கணும், ஏன் இப்படி பண்ண சொல்லு? " பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான்.
" நீ என் டெடிய அழுகாக்குனேல. அதான், நானும் உன் காரை இப்படி பண்ணேன்.." என்றாள்.
" எவ்வளவு திமிரு உனக்கு காரும் டெடியும் ஒண்ணா? என் கார் எவ்வளவு காஸ்ட்லி தெரியுமா உனக்கு? "
" உனக்கு உன்னுடைய கார் காஸ்ட்லின்னா எனக்கு என் டெடி எனக்கு காஸ்ட்லி தான்..." என்றாள் முகத்தை சுருக்கிக் கொண்டு.
அதைக் கேட்டு, அவன் சிரிப்பு வர அடக்கிக் கொண்டவன், " ஹேய் நீ தான் இத க்ளீன் பண்ற...."
"நானா, என்னால க்ளின் பண்ண முடியாது "
" நீ தான் பண்ற, இல்லைன்னா, நான் எல்லாரையும் கூப்பிட்டு, இதை சொல்லி நியாயம் கேட்டுப்பேன். ஆக்ச்சுவளா, இப்படி பண்ணதுக்கு நான், உன்கிட்ட காசுதான் கேட்கணும்... ஆனா எனக்கு காசு முக்கியம் இல்ல, இப்படியே நான் கார் ஓட்டிட்டுப் போனா என்னை என்ன நினைப்பாங்க? அதுனால நீ தான் க்ளீன் பண்ணனும்.. " என்றான்.
' வேர வழியே க்ளீன், பண்ணித்தான் ஆகுனும் கீர்த்தி, இல்ல இவன் சத்தம் போட்டு மானத்த வாங்கிருவான் இப்படி மாட்டிக்கிட்டியே கீர்த்துமா ' தனக்குள்ளே முணுமுணுத்தாள்,
" என்ன யோசிக்குற சீக்கிரமா துடை, எனக்கு லேட் ஆகுது.... "
" ம்,.. எதாவது துணி கொடு துடைக்க "
" ஆங்.... நானா ஜூஸ் கொடுத்து என் காருல ஊத்தும்மான்னு சொன்னேன். நீயாதானே ஊத்துன்ன, இப்ப நீயா தான் எதையாவது வைச்சு துடைக்கணும், " என்றான்.
" எத வச்சு நான் துடைக்க?" என தனதிரு கைகளை விரித்து கேட்டாள்...
" உன்னுடைய ஷாலை வைத்து துடை. " என்றான்..
" வாட் ! என்னோட பேவரைட் ஷால் இது... "
" சோ வாட் ! இது என்னோட பேவரைட் கார்,எனக்கு அதெல்லாம் தெரியாது உன்னுடைய ஷாலை வைத்து தான் துடைக்கணும்... " என்றான்.
" என்னுடைய கார்ல வாட்டர் பாட்டில் இருக்கு. தண்ணீய ஊத்தி துடை.... " என்றான்.
அவளும் அவனை திட்டிக்கொண்டே தன்னுடைய ஷாலை வைத்து துடைத்தாள்... அவள் முனங்கிகொண்டே துடைப்பதை பார்த்து சிரித்துகொண்டே நின்றான்..
" பரவாயில்லை, கீர்த்தும்மா, நல்லாவே துடைச்சிருக்க, thanq for your free service " என கூறிவிட்டுச் சென்றான்..
அவளோ கோபத்தில் ஷாலைத் தூக்கி எரிந்தாள்..
" ஹேய் என்னடி இப்படி ஹோட்டல்ல டேபிள் துடைக்கிறவங்க மாதிரி நிக்கிற, "
" மாதிரி, இல்ல அதைதான் டி இவ்வளவு நேரம் பண்ணிட்டு இருந்தேன். " என்றாள்.
" என்னடி சொல்லற ? " சக்தி கேட்கவே
கீர்த்தி நடந்ததை எல்லாம் கூறினாள்..,
அதை கேட்டதும் சக்தி அவளைக் கண்டு சிரிப்பதா கோபப்படுவதா தெரியாமல் அவளை வீட்டுக்கு அழைத்து வந்தாள்..
அடுத்து வந்த நாட்கள் வேகமெடுக்க,
கீர்த்தி பகுதி நேர வேலைக்குச் செல்லவே முடிவு செய்திருந்தாள்.
ஜீவாவின் தந்தை வேலைப்பார்க்கும் கம்பெனியில் வேலை இருப்பதாகக் கூற அவளும் அங்கு சென்றாள் இன்டர்வியூக்காக..
AA construction என்று வளர்ந்த கட்டிடத்தில் பெரும் பலகையில் அப்பெயர் ஆச்சிட பட்டிருந்தது. அந்தக் கட்டிடத்தின் உள்ள சென்றவள், அங்க வரவேற்பாளரிடம் விசயத்தை கூற அவரும் கேட்டு, அவளை உள்ளே போக அனுமதித்தார்...
மேனேஜிங் டேரக்டர் என்று பலகை மாட்டிருந்த கதவைத் தட்டி , " மே ஜ கம் இன் சார். " என்று கேட்டாள்.
" எஸ் கம் இன்.... " என்று கூறியவனை கண்டு திகைத்து நின்றாள்..
" நீயா ? " என்றவள், அவனிடம் எதுவும் சொல்லாமல் வெளியே செல்ல எத்தனித்தாள்..
" ஹேய் எங்க போற, இன்டர்வியூ இருக்கு. அட்டன்ட் பண்ணாம போற? "என்றான்.
" உனக்கும் எனக்கும் செட்டாகாது, பார்த்த இரண்டு நாளும் சண்டை தான். எப்படியும் பழிவாங்க, இன்டர்வியூ பண்ணுறமாதிரி பண்ணி என்னை ரிஜக்ட் பண்ணுவ. அதுக்கு நானே வேற வேலைப் பார்த்துட்டு போய்கிறேன்... " என்றாள்.
" ஹலோ மிஸ் கீர்த்தி.. நான் பழிவாங்கறதா இருந்த கால் லெட்டரை அனுப்பிருக்க மாட்டேன். அது மட்டும் இல்லை பழிவாங்கற எண்ணம் எனக்கு இல்ல. " please take your seat" என்றான்..
அவளும் சந்தேகமாய் அவனைப் பார்த்துவிட்டு அமர்ந்தாள் அவன் முன்னே....
அங்க இருக்க பலகையில் அர்ஜூன் Managing director எழுதிருந்தது. அதைக் கண்டு அவன் பெயர் அர்ஜூன் என்றரிந்தாள்..
" உங்க பையோ டேட்டா..." என்றவனிடம் தனது ஃபைலைக் கொடுத்தாள்...
அவனும் அவளது ஃபைலைப் பார்த்தவன்
" மேத்ஸ்க்கும் இன்டீரீயர் டிசைனுக்கும் என்ன சம்மந்தம்?"
" லெக்சரர் ஆகறது என்னுடைய கனவு. எங்க அப்பா இன்டீரீயர் டிசைனர் தான். அவர் பண்ற டிசைன்ஸ் எனக்கு ரொம்ப புடிக்கும்... அதுனால ஆர்வம் அதிகமாக இருந்துச்சு.. எல்லாதையும் கத்துகணும் எங்க அப்பா சொல்லுவார் . எல்லாத்தையும் முடியானாலும், இரண்டு மூணாவது கத்துவச்சுக்கலாம் அதான் இந்த கோர்ஸ்ஸையும் படிச்சேன். " என்றாள்.
" ஒ.கே இன்டர்வியூ போலாமா.... " என்றவன் கேட்க தலையாட்டினாள்...
அவளிடம் நிறைய கேள்வி கேட்க, அதெற்கெல்லாம் பதிலை அளித்தாள்..
இன்டர்வியூ முடிந்தது. தனது தந்தையிடம் தான் தேர்வு முடிந்ததையும் ஆள், எடுத்ததாகவும், நீங்களும் ஒருமுறை அவளை இன்டர்வியூ எடுக்குமாறு கேட்க, அவரோ உனக்கு சரியென்றால், அப்பாய்ண்ட் செய்து என்றுவிட்டார். அவர் சொன்னது போல கீர்த்தியை அப்பாய்ண்ட் செய்தான்..
" மிஸ் . கீர்த்தீ "you are appointed"....
" என்றதும் ஆச்சரியமாக பார்த்தாள்.
" என்னாச்சு ஏன் அப்படி பார்க்குற நீ, உன்னை நான் ஸ்லேக்ட் பண்ணிடேன்.. " என்றான்.
" இல்ல இங்க நான் மட்டும் வந்திருக்கேனா, இவ்வளவு சிக்கிராம ஸ்லெக்ட் பண்ணிடீங்க. "
" இல்ல, நிறைய பேர் வந்தாங்க, அதில நாங்க இரண்டு பேரை தேர்வு செய்தோம், நீங்க இங்க பார்ட் டைம் வேலைக்கு வரதுனால, நாங்க இன்னொரு நபரையும் வேலைக்கு எடுத்திருக்கோம் " என்றான்.. அதன் பின் ஆபீஸ் டைமிங், செலரி பத்தி பேசிமுடித்தனர்..
" நாளையிலருந்து ஆபீஸ்க்கு வருவதாக கூறியவள், "
இன்னும் எதாவது பார்மாலீட்ஸ் இருக்கா.... " என்றாள்..
" அவ்வளவு தான் வேற எதுவும் இல்ல... " என்றான், "
தாங்க்ஸ் நான் கிளம்பலாமா ? " என்றவள் கேட்க...
" ஒரு நிமிசம் கீர்த்தி, அன்னைக்கு டெடி மிதிச் சத்துக்கும், கார் க்ளீன் பண்ண சொன்னதுக்கும் சாரி.... ப்ர்ண்ட்ஸ் ? " என அவள் முன்னே கை நீட்டினான்...
" நானும் , உங்கள மரியாதையில்லாம பேசினதுக்கும் காருல ஜூஸை கொட்டுனதுக்கும் சாரி.... " என்றவள், ப்ர்ண்ட்ஸ் என்று கைகொடுத்தாள்.. இருவரும் நட்பு கரம் நீட்டினர்..
" ஒ.கே நான் கிளம்பிறேன் பாய் " என்றவள், கதவு அருகே சென்று, அவனை திரும்பிப் பார்த்தாள்..
அவனோ, என்ன என்பது போல் புருவத்ததை உயர்த்தி கேட்டான்..
" உனக்கு எப்படி என் பெயர் தெரியும்?"
" ரெஸ்யூம்ல பார்த்துதேன் "
" இல்ல, அன்னைக்கு கார் துடைக்கும் போது என் பெயர சொன்னேல, அப்போ உனக்கு எப்படி தெரியும்..... "
" அது சஸ்பன்ஸ், வெய்ட் பண்ணு நேரம் வரும் போது சொல்றேன் " என்றான்,.. சரி என்றவள் கிளம்பினாள்...
' கீர்த்தி, நேரம் வரம்போது எல்லாதையும் சொல்றேன்.... ' என்றான் தனக்குள்ளே.
வேலை கிடைத்த சந்தோசத்தில் அனைவருக்கும் டீரிட் தான் நண்பர்களோடு அதை கொண்டாடினாள்...
அங்கே வேலைக்கு செல்ல, அவளது வேலை அனைவருக்கும் பிடித்தது, அர்ஜூனும் அவரது தந்தை பாராட்டாமல் இல்லை, அவளது டிசைன்ஸை. மேலும் அர்ஜூனோடு நட்பு கரம் வலுமையானது. " டா " " டி " போடும் அளவிற்கு நட்பு அடுத்த கட்டம் சென்றது....
நாட்கள் செல்ல, ராஜ்ஜூவின், நிச்சயம் நாள் வந்தது, தனது நண்பர்களை அழைக்க வந்திருந்தான்.
" ஹாய்டா மச்சி....." ராஜ்
" வாடா மாப்பிள்ளை என்னடா ஆளையே காணோம்....."
" எங்கேஜ்மென்ட் வேலையில பிஸி ப்ர்தீப்,
அப்புறம் காரத்தி எப்படிடா இருக்கு உன்னுடைய லவ்....." ராஜ் கேட்க,
" நானே கடுப்புல இருக்கேன், நீங்களாம் ப்ரண்ட்ஸாடா என் லவ்க்கு எதாவாது ஹேல்ப் பண்ணுவீங்கன்னு பார்த்தா, உங்களுடைய வேலை மட்டும் தான் பார்க்குறீங்கடா.... " என்றான் கார்த்திக்..
" ஏன்டா அவ பின்னாடி சுத்த மாட்ட, போன், மெசேஜ் பண்ணமாட்ட, இப்படி இருந்த எப்படி டா அவ உன்னை லவ் பண்ணுவா? " ப்ரதீப் கேட்க அமைதியா இருந்தான்..
" அவள எப்ப மச்சி, கடைசியா பார்த்த?" கணேஷ் கேட்க
" போன மாசம் டா..... "
" அவள எத்தனை வாட்டிடா நேருல பார்த்துருக்க..... "
" நாலு வாட்டிடா ....." என்றான் கார்த்திக்..
" டேய் லவ் பண்றவனெல்லாம் ஒரு நாளைக்கு நாலு வாட்டிபாக்குறானுங்கடா, ஆனால் நீ வருசத்துகே நாலு வாட்டி தான் பார்த்திருக்க,
இப்படியே போனா அவ உன்னை மறந்திருவாட...." என்றான் ப்ரதீப்..
" அவ மறக்கிறவளா இருந்த அன்னைக்கு மால்ல பார்க்கும் போதே யார்னு கேட்டிருக்கனும்லடா , அவ மனசுல நான் இருக்கேன்டா ஆனால் அவ மறைக்கிறாடா .. என்னை அந்தப் பொண்ணு லவ் பண்ணுதுன்னு உறுதியா தெரிஞ்சா அவ பின்னாடி சுத்தலாம் மெசேஜ் பண்ணலாம்,
ஆனால் நம்மல மனசுகுள்ள நினைச்சுட்டு வெளியே லவ் பண்ணலைன்னு சொல்லற பொண்ணுங்க கிட்ட, இப்படி செஞ்சா இதான் சாக்கு கோவம் தான் படுவாங்க.
நான் அப்பப்ப பார்க்கனும் அப்ப அவ மனசுல நிக்குற மாதிரி பதியிற மாதிரி எதாவது செய்யனும் அப்ப தான் அவங்க நம்ம நினைச்சுட்டே இருப்பாங்க..... " என்றான் கார்த்திக்.
" டேய், ப்ரதீப், ஒரு ஐடியா டா..."
" என்னாடா, கணேஷ் சொல்லு " என்றான்..
" எப்படியும் ராஜ் நிச்சயதார்த்தக்கு கீர்த்தி வருவா, கார்த்திக், நீ அங்க எதாவது பண்ணி, அவள இம்ப்ரெஸ் பண்ணுடா.. "
" ஆமாடா, செம ஐடியா டா கார்த்திக் "
" டேய் அங்க எதாவது பண்ணி என் நிச்சயத்தை நிறுத்திடாதீங்க " ராஜ் பயந்திட,
" அப்படி எல்லாம் பண்ணமாட்டோம் டா.
டேய் உன்னுடைய எங்கேஜ்மென்ட்ல பாட்டுக்கச்சேரி வச்ச என்ன, நீ என்னடா சொல்லுற ராஜ்? "
" பாட்டு கச்சேரியா ? " ராஜ் வாயைப் பிளக்க
" டேய் நான் ப்யானோ நல்ல வாசிப்பேன், சுரேஷ் நல்ல டரம்ப்ஸ் அடிப்பான், கார்த்திக்கு எல்லா இன்ஸ்ட்ரூமெண்ட்டும் வாசிக்க தெரியும் நல்ல பாடுவான், கணேஷ்ஷூம் நல்ல பாடுவான்.
நம்ம எல்லாரும் சேர்ந்து காலேஜ் டேஸ் எவ்வளவு கல்சரல்ஸ்,, ம்யூசிக் சோ பண்ணிருக்கோமேடா, கச்சேரி பண்ணுவோம் இவனும் அவள இம்ப்ரெஸ் பண்ண மாதிரியும் இருக்கும், உன் நிச்சயத்தில நாங்க இலவச கச்சேரி பண்ணமாதிரி இருக்கும்.... " என்றான் ப்ரதீப்.. "
கண்டிப்பா மச்சி, இந்த முறை நான் கீர்த்தீ, இம்ப்ரஸ் பண்ணி லவ் பண்ண வைக்கிறேன்... " என்றான் கார்த்திக்.
" நீங்க என்னவேணா பண்ணுங்கடா, ஆனா என் நிச்சயத்தார்த்தை நிறுத்தாம இருந்தா சரித்தான். வந்து சேருங்கடா. " என்றவன், அழைத்துவிட்டு சென்றுவிட்டான்...
நிச்சயத்தில் என்ன நடக்க போகுதோ..
வாங்க பார்க்கலாம்...
வருவான்...
கதை எப்படி இருக்கு பிடிச்சிருக்கா. மொக்கையா இருக்கா. நல்லாருக்கா, கமெண்ட் சொல்லுங்க...