வருவான் 6
யார் யாரெல்லாம் எந்தெந்த வாத்தியங்களை வாசிக்க, என்று முடிவு செய்து, அதையெல்லாம் தயார் செய்து வைத்திருந்தனர். கணேஷ் தான் முதலில் பாடுவதாக இருந்தது, அவனும் மைக்கைச் சரி பார்த்துக் கொண்டிருந்தான்.
இங்கே, மணமகன் அறையில் ராஜ்ஜூவின் தம்பிகளும், அவனது உடன் வேலைப் பார்க்கும் தோழர்களும் அவனைக் கலாய்த்தனர்... அதனை எல்லாம், சமாளித்து விட்டுத் தயாராகினான். இங்கு மணப்பெண்ணிற்கும் அதே நிலமை தான்...
கார்த்திக்கின் கண்களும் எண்ணங்களும் கீர்த்தியைத் தான் தேடிக்கொண்டிருந்தது, அவள் எப்பொழுது வருவாள்?எப்படி வருவாள்? என்று காத்துக் கொண்டே இருந்தான்...
" டேய் கார்த்திக், என்ன பாட்டுடா பாட போற? " ப்ரதீப் கேட்டு நிற்க, " மச்சி,
தெரியலடா" என்றான்.
" டேய் என்னாடா சொல்லற நீ ?எந்தப் பாட்டுன்னு முடிவு பண்ணலையாடா ? " பதறினான் சுரேஷ்..
" டேய் அவள பார்த்தால் தான்டா, எனக்கு பாட்டு வரும்"
என்றான் பாவமாக,
" டேய் கார்த்திக் என்னடா இப்படி சொல்லற? "
"ப்ரதீப், நான் தான்டா பாடப்போறேன் அவனோட, ஆள் வந்தும் அவனுக்கு எந்தப் பாட்டு தோணுதோ அவன் பாட்டும் டா " என்றான் கணேஷ்..
" இவன் வாரணம் ஆயிரம் சூர்யாக்கு சித்தப்பா பையன் மாதிரி ரயில் தான் லவ்வையே சொன்னான். அதே போல அவளைப் பார்த்ததும் தான் பாட்டு பாடுவான் போலடா. "
"என்ன பாட்டா இருந்தா என்னடா, பாடட்டுமே நீ ஏன் இப்படி சலித்துகிற? " சுரேஷ்
" இல்லாடா, நம்ம வாசிக்க தான் செய்யப் போறோம். அவனுங்க தான் பாட போறாங்க வாசிக்கிறவனுங்கல விட பாடுறவனுங்கல தானே பொண்ணுங்க பார்ப்பாங்க..," என்றான் ப்ரதீப்.
" டேய் நம்ம நல்ல வாசிச்ச நம்மலையும் பார்ப்பாங்கடா"
" டேய் சுரேஷ், உன்னை ஏன்டா பார்க்கணும் ? உனக்கு தான் ஆள் இருக்கே,.. சோ என்னை மட்டும் பார்த்தா போதும் நீ கொஞ்சம் அடக்கி வாசி என்ன.. " என்றவனை முறைத்துக் கொண்டே கையில் உள்ள ஸ்டிக்கைக் தூக்கிக் காட்டுனான்.
இந்தப் பேச்சையை எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல், கார்த்திக்கின் விழிகள் வாசலைத் தான் நோக்கியது.
அங்க அமர்ந்திருந்து கச்சேரி மேடையைச் சந்தேகமாக பார்த்த தாத்தா, " ஏன்பா தம்பி, அப்ப இருந்து பார்த்துட்டுடே இருக்கேன் பாட்டுபாட வந்த மாதிரி தெரியல வேற எதுக்கோ வந்த மாதிரி தெரியுது. எப்ப தான் கச்சேரியை ஆரம்பிப்பீங்க ? " என்றார்.
" டேய் கிளவனுக்கு சந்தேகம் வந்திருச்சு, எதுக்கு வந்திருக்கோமுனு கண்டுபிடிக்கிறது முன்னாடி, பாட ஆரம்பிங்கடா " கணேஷ் காதில் கடித்தான் ப்ரதீப்..
" இந்த ஆரம்பிச்சுட்டோம் தாத்தா" என்றவர்கள்,
பாட்டுக் கச்சேரியை ஆரம்பித்தனர்..
முதலில் கணேஷ் விநாயகர் பாட்டைப் பாடி மங்களகரமாக ஆரம்பித்தான்.
அங்கே மணமேடையில தாம்பூள தட்டும் , பூ, பழம் , பட்டுச்சேலை , மேடையே நிறைந்திருக்க, பெரியோர்கள் மேடையில் உட்கார்ந்திருந்தனர்.... நிச்சயப் பத்திரிகையை வாசித்துத் தட்டை மாற்றிக் கொண்டனர்.
மண்டபமே விழா கோலமாக இருந்தது.... ஆனால் கார்த்திக் மட்டும் தன் காதலியைக் காணாத ஏக்கத்துல இருந்தான்... பெரியோர்கள் நிச்சயம் செய்து தாம்பூள தட்டை மாத்தி மணமக்களை மேடைக்கு அழைத்தனர்.
மாப்பிள்ளை,கோர்ட் ஸ்யூட்டு அணிந்து மேடைக்கு வந்து எல்லாரையும் வணங்கினான்... இதையெல்லாம் சலித்துக் கொண்டே ஏக்கமாய் மண்டபம் முழுவதையும் தன் கண்களால் அலசினான் கார்த்திக். அவனது ஏக்கத்தைப் போக்கவே ஒரு குரல் கேட்டது " கீர்த்தி கவிதாவைக் கூட்டிட்டு வாமா " என்றான்.
மணப்பெண்ணின் அறையை நோக்க , சிவப்பு லெங்கங்காவில் தேவதையாய் கீர்த்தி மணப்பெண்ணை அழைத்து வந்தாள், மேடைக்கு ..,
ஆனால் இங்க கார்த்தியோ, தனது, உலகத்தைச் சற்று நேரம் நிறுத்திவைத்தது போலவே நின்றிருந்தான்.. .. அவனது தோழர்கள் அவனை நினைவுலகிற்கு கொண்டு வந்தனர்.... " டேய் பாட்டு பாடுறா " ப்ரதீப் கூற கார்த்திக் பாட ஆரம்பித்தான்.
கீர்த்தி, கார்த்தியைக் காண , அவனோ வெள்ளை நிற சட்டையும் சந்தன நிற பேண்ட் சகிதம் என ஹாண்ட்சமாய் இருந்தான். அவனை ஒருநிமிடம் ரசனையாய், பார்த்து மீண்டது அவளது கண்கள்.. அவன் ரசித்து பாட, அந்தப் பாட்டு, கார்த்திக்கு மட்டுமின்றி ராஜூவுக்கும் தான் , தன்னுடைய காதலியைப் பார்த்து மயங்கி தான் நின்றான்..... இருவரும் மோதிரம் அணிந்துக் கொண்டனர்... எல்லாரும் சந்தோஷ்மாக இருந்தார்கள். அதற்கெற்ப கணேஷ் ஒரு பாட்டைப் பாடினான்.
மணமக்களை, ஆசிர்வதிக்க பெரியோர்கள் அனைவரும் மேடைக்கு ஏறினார்கள்.
கார்த்திக் அடுத்தப் பாட்டைப் பாட தயாரானான்.. கீர்த்தீயும், சக்தியும் ஆர்வம் கொண்டனர். தனது ஆர்வத்தை முகத்தில் காட்டாமல் மறைத்தாள், ஆயினும் அவன் அறியாமல் இல்லை.
அவன் பாடி முடிக்க, கரகோசம் தான். எல்லோருக்கும் நன்றிக் கூறியவன், அடுத்தப் பாட்டை பாட தன் குழுவிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
ப்ரதீப், " டேய் நிச்சயத்திற்க்கு இந்த மாதிரி பாட்டெல்லாம் பாடுனா நம்ம எதுக்கு வந்தோம்னு கண்டுபிடுச்சிடு வாங்கடா கார்த்திக்"
" டேய், அதான் டவுட் வர கூடாதுன்னு, கணேஷ் தான் மேரேஜ் பாட்டு பாடுறான்ல, இப்பதான் டா கொஞ்சம் கொஞ்சமா என்னைப் பார்க்கிறா டா."
" டேய் அவ மட்டுமா பார்க்கிறா. எல்லாருமே நம்மல சந்தேகமா பார்க்கிற மாதிரி இருக்குடா, கொஞ்சம் ஃபங்சனுக்கு ஏத்த மாதிரியும் பாடு ராசா... இங்க வேற எல்லாரும் பல்க்கா இருக்கானுங்கடா மாட்னோம் மவானே டின்னு கட்டிடுவானுங்கடா,...." என ப்ரதீப் புலம்ப,
" நீ ஏன்டா பயப்பிடுற, அப்படிலாம் ஒண்ணும் ஆகாது, அதுமட்டுமில்ல நம்மல காப்பாத்த, ராஜ் இருக்கான்ல அப்புறம் என்னடா ப்ர்தீப்... "
" டேய் சுரேஷ், அவனுக்கும் சேர்த்து தான் கிடைக்கும்... நம்மளுக்காவது கொஞ்சம் தான். அவனுக்கு நிறைய கிடைக்கும், அவதானே நம்மல கூட்டுட்டு வந்ததே...."
" டேய், ப்ரதீப், வாய் முடிட்டு அமைதியா இருடா, நீயே எல்லாத்தையும் காட்டிக் கொடுத்திடுவ போல , வந்த வேலை மட்டும் பாருடா," கார்த்திக் கூறிவிட்டு, அடுத்தப் பாடலை இருவரும் சேர்த்து பாடினார்கள். மீண்டும் அங்கே கரகோசம்..
வந்தவர்கள் அனைவரும் சாப்பிட செல்ல, மாப்பிள்ளை வீட்டார்கள் மட்டும் தான் அங்க இருந்தனர்.. பாடுவதை நிறுத்திவிட்டு ராஜ்ஜூவைக் காண மேடை ஏறினார்கள்...
அங்கே , கீர்த்தி மணப்பெண்ணிற்கு துணையாகப் பக்கத்தில தான் நின்றாள். காரத்திக் ராஜ்ஜூவுடன் நின்று நால்வருமாகச் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கொண்டனர்.
" ஏன்டா, கணேஷ் பொண்ணும் மாப்பிள்ளையும் விட துணைப் பொண்ணும் துணை மாப்பிள்ளை தான் சூர்யா ஜோதிகா மாதிரில்ல" என ப்ரதீப் சொல்லிமுடிக்க. ராஜ் அவனை முறைத்தான். அருகில் கவிதாவும் கார்த்திக்யும் சிரித்தனர்.
" ஹலோ, இப்படி சொல்லச் சொல்லி உங்க ப்ரண்டு எவ்வளவு காசு கொடுத்தார்? " என்றாள் கீர்த்தி..
" என் நண்பனுக்காகன்னா, எல்லாமே இயற்கையாவே அடி மனசுல இருந்து வரும். காசெல்லாம் தேவையில்லை... " என்றான் ப்ரதீப், இருவரும் கைகொடுத்துக்கொண்டனர்.
மேடையில் கார்த்தியும் கீர்த்தீயும் நிற்பதைப் பார்த்த, சனாவும் சக்தியும் அங்கு வந்தனர்.. சக்தி, கீர்த்தயைப் பார்த்து, அதே துணைப் பொண்ணு டையலாக்கை கூற, இந்த முறை கார்த்திக்கும், ப்ரதீப்பும் ஹைபை போட்டுக்கொண்டனர். கடுப்பானவள் மேடையை விட்டுக் கீழ இறங்கிவிட்டாள்.
அனைவரும் சாப்பிட சென்றனர். மணமக்களும் தான்.. அதன்பின் பெண்வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும், பாட்டு கச்சேரி முன் அமர்ந்துவிட்டனர்.
" ஹேய் எங்கப்பா நம்ம ஸ்ரேயா கோசல், வந்து பாடா சொல்லுங்க? " என்றான் ராஜ்,
" யாருடா அது ஸ்ரெயா கோசல்? " கார்த்திக் கேட்க,
" வேற யாரு நம்ம கீர்த்தி தான்.... " தான் " என்றான்.
" டேய் அவ, நல்ல பாடுவாளாடா?"
" செமைய பாடுவா பாரு "
எல்லாரும் கோரஸ்ஸாக கத்த, கீர்த்தியும் சக்தியும் பாட ஆரம்பித்தனர். அவர்கள் பாடி முடிக்க, கார்த்திக் ஆச்சரியம் கொண்டான்.
அதன்பின் அனைவரும் அங்கே சந்தோசமாகப் பாட்டு கச்சேரியைக் கண்டு மகிழ்ந்தனர்...
" அம்மாடி, கீர்த்தி, உனக்கு எப்பதான் கல்யாணம், பண்ணிக்கிற எண்ணம் வரும்... ராஜ்க்கு பேசலாம் பார்த்தா, வேணான்னு சொல்லிட்ட, விஷ்ணு, இருக்கான், கார்த்தி இருக்கான், யாரா கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லு கல்யாணத்தைப் பண்ணி வைக்கிறோம், இப்படி அமைதியாவே இருந்தா எப்படி? "
" டேய் ராஜ், யாருடா, அந்த விஷ்ணு, கார்த்தி? இந்தப் பாட்டி ஏன்டா இப்ப கீர்த்தியோட கல்யாணத்தைப் பத்தி பேசுது ? " கார்த்திக், ராஜ்ஜிடம் பொறாமை கொண்டு கேட்டான்..
" எங்க சித்தப்பாக்கு இரண்டு பசங்க. அதுல விஷ்ணு மூத்தவன், இரண்டாவது தான் கார்த்தி, நான் கவிதாவ கல்யாணம் பண்ணிக்க போறதுனால, கீர்த்திய விஷ்ணுக்கோ கார்த்திக்கோ கல்யாணம் பண்ண சொல்லிக் கேட்கிறாங்க டா பாட்டி... "
" டேய் என்னடா, சொல்லுற, அப்ப கீர்த்தி, , இவங்க இரண்டு பேருல யாரையாவது கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்குவாளாடா? "
" டேய் நான் சொல்றத கேளு, விஷ்ணு காலேஜ் படிக்கும் போதே ஒரு பொண்ண காதலிச்சான். இப்பையும் தான், இரண்டுபேரும் ஒரே கம்பெனில வேலைப் பார்க்கிறாங்க. எங்கள சேர்த்து வச்சுது மாதிரி அவங்களையும் சேர்த்து வைக்கணும். அதான் கீர்த்திகிட்ட அப்பிளிகேசன் போட்டிருக்கான்.
அடுத்தது கார்த்தி தான், கார்த்தி எங்க பெரிய அத்தைப் பொண்ணு பவித்ராவை தான் லவ் பண்றான். கீர்த்திக்கும், பவித்ராவுக்கும் ஒரே வயசு தான். பவித்ராவும் அவன காதலிக்கிறா அங்க பாரு, பாட்டி கேட்டதும் அவன்கூட சண்டை போடுற பாரு அவ தான்... " என்றதும்
கார்த்திக் அங்கே பார்க்க, பவித்ரா கார்த்திக்கிடம், எதையும் சொல்ல , அவனோ சமாதானம் செய்துகொண்டிருந்தான்.
" கீர்த்தியோ, பாட்டி முன் அமர்ந்தவள் , அவரிடம் சமாதானம் செய்தாள்..
" உங்கவீட்டுல, அவங்க லவ் பண்றது. தெரியுமாடா ராஜ்.."
" தெரியாதுடா... ஆனால், கீர்த்தி மேல் இருவரும் நம்பிக்கை வச்சிருக்கானுங்க எப்படியும் சேர்த்து வச்சுருவான்னு தான்"
" எல்லாக்காதலையும் சேர்த்து வைக்கிறா, ஆனால் ஏன் என்னோட காதல மட்டும் அக்சப்ட் பண்ணமாட்டிகிறா?"
" உன்னை அவளுக்குப் பிடிக்கும் நினைக்கிறேன்டா.. ஆனால் உங்கிட்ட சொல்ல மாட்டிக்கிறா... " என்றான்.
" போடா... "
இங்கோ பாட்டியிடம் சமாதானம் பண்ணிக்கொண்டிருந்தாள்... " அம்மாச்சி, முதல்ல, நான் படிக்கனும், நான் படிச்சு முடிக்க, மூணு வருசமாகும், அதுவரைக்கும் உன் பேரன்களால பொறுமையா இருக்க முடியுமான்னு கேட்டுச் சொல்லு... " என்று அங்கிருந்து ஓடியே போய்விட்டாள்....
அவர் அங்கே கத்த, காதில்,வாங்காது நடையைக் கட்டிவிட்டாள்.
அனைவரும் மண்டபத்திலிருந்த கிளம்ப ஆரம்பித்தனர்.. கார்த்திக்கோடு பாட்டு குழுவினரும், தங்களது வாத்தியங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கே கிருஷ்ணன் கார்த்திக்கிடம் பேச வந்தார்..
" ஹாய் கார்த்திக், நான் கிருஷ்ணன் சக்தியோட அப்பா " என்றவர் தன்னை அறிமுகம் செய்தார்..
" வணக்கம் அங்கிள், எப்படி இருக்கிங்க ?"
" நல்ல இருக்கேன்ப்பா. உங்க பாட்டுக் கச்சேரி ரொம்ப நல்லா இருந்தது, நல்ல பாடினீங்க, " என்றார்,.
" தாங்க்ஸ் அங்கிள் " என்றான்.
" கீர்த்திய இம்பரஸ் பண்ணிட்ட போல " என்றவரை ஆச்சரியமாகப் பார்த்தான் கார்த்திக்.
" எனக்கு எல்லாம் தெரியும்ப்பா, கீர்த்தியும் எனக்குப் பொண்ணுதான். அவ என்கிட்ட எதையும் மறைக்க மாட்டா , நீ அவள எந்த அளவு லவ் பண்றன்னு, நீ பாடின பாட்டுலையும் பார்த்தேன், அவங்க பாட்டி கேட்டப்ப, நீ கோபப்பட்டதையும் பார்த்தேன்.. " என்றதும் அசடு வழிந்தான்.
" ஒரு நாள் வீட்டுக்கு வாப்பா, நம்ம பேசலாம், " என்றவர்," நான் கிளம்புறேன் கார்த்திக். " என்றார்..
" சரி அங்கிள், நான் கண்டிப்பா வர்றேன்" என்றான்..
கீர்த்தி , சக்தி குடும்பமும் காருக்காக காத்திருந்தனர் அங்கே.
கார்த்திக் உள்ள இருந்தான்,.. கணேஷ் மட்டும் ராஜ்ஜூவுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். கீர்த்தியின் கண்கள் யாரையோ தேட, அதைப் பார்த்த சக்தியோ,
" யாரா தேடுற கீர்த்தீ ? கார்த்திக்கையா ? " என்று கேட்வாறே அவள் அருகில் வந்தாள்.. " ம்ம்... ஆமா அவன தான்.. " என்றாள்.
" எதுக்கு லவ் சொல்லவா? " என அவளை வம்பிழுக்க, " அடியே ! அவன் நல்ல பாடுனான், பாராட்ட தான். நீ நினைக்கிறது போல இல்லை... " என்றாள்..
" இதோ கணேஷ் அண்ணாவும் நல்லா தான் பாடுனார். அவரையும் பாராட்டலாமே.. அதென்ன கார்த்திக்கை மட்டும் பாராட்டுறது? "
" நான் எப்படி அவன மட்டும் பாராட்டுவேன் சொன்னேன்? எல்லாரும் தான் நல்ல வாசிச்சாங்க, பாடுனாங்க எல்லாரையும் விஷ் பண்ண தான்டி தேடுனேன் " என்றவள், கணேஷ்ஷிடம் சென்றாள்..
" அண்ணா நீங்க ரொம்ப நல்ல பாடினீங்க, உங்க கச்சேரி ரொம்ப நல்லாருந்துச்சு அண்ணா " என்றாள்..
" தாங்க்ஸ் மா,.. " என்றான்.
" முக்கியமான ஒருத்தரைக் கண்டிப்பாக பாராட்டியே ஆகனும். அவர்கிட்ட நான் சொன்னேன் சொல்லுங்க அண்ணா" என்றாள். அவள், கார்த்திக்கைப் பத்தி தான் கூறுவாள் என்று ஆர்வாமாயினர், கணேஷ்ஷூம் சக்தியும்..." ப்ரதீப் அண்ணா, ப்யானோ செமையா வாசிச்சாங்க, அதுமட்டுமில்ல நான் அவங்களோட பேன் ஆயிட்டேன் சொல்லிருங்க. வர்றேன் அண்ணா " என்றவள் காரில் ஏறிச் சென்றாள். இருவருக்கும் ஏமாற்றம் தான்.
கணேஷ் வந்தவன், தன் நண்பர்களிடம் வந்த, கீர்த்தி கூறியதைக் கூறினான்.. அங்கே அனைவரும் சிரித்தனர். ப்ரதீப்போ பறக்காத குறைதான்.
" டேய் எனக்கு இப்படி பட்ட பேன் கிடைக்க, பொறாமைடா உங்களுக்கு " என்றான்..
" எங்களுக்குப் பொறாமை,ம்ம்... ஆமாடா ரொம்பவே " என்றனர்.
" டேய், கார்த்திக், கீர்த்தி இம்பரஸ் ஆயிருப்பாளா டா?" சுரேஷ் கேட்க, " அவ இம்பரஸ்ஸாகிருந்தாலும் வெளிய காட்டிக்க மாட்டாடா.. அடுத்த அவள எப்படி எப்போ பார்ப்பேன் தெரியல? " என்றான் தோலைக் குலுக்கிக் கொண்டான்.
அன்றைய நாள் சந்தோசமாகவே இருந்தது
நாட்கள் கடந்தது...
" ஹாய் கீர்த்தீ அக்கா, சக்தி அக்கா , சனா அக்கா எப்படி இருக்கீங்க? " என கேட்டவாறே ஜூனியர் ஒருத்தி வந்தாள்.
" ஹேய் ஆர்த்தி, என்ன ஆளைய காணோம் ரொம்ப பிசியோ?" கீர்த்தி கேட்க,
" ஆமா அக்கா, செம் வந்ததுனால ரொம்ப பிசி, நீங்க எல்லாரும் எல்லாரும் எப்படி இருக்கிங்க? "
" நாங்க எல்லாரும் நல்லாருக்கோம். நீ எப்படி இருக்க ஆர்த்தி?"
" நான் நல்லாருக்கேன் சக்திக்கா,
கம்மிங் சண்டே என்னோட ப்ர்த்டே ,நீங்க மூணுபேரும், என்னோட ப்ர்த்டே பார்ட்டிக்கு கண்டிப்பா வரணும் " என்றாள்.
" ஓ.கே கண்டிப்பா வர்றோம். பார்ட்டி எப்போ எத்தனை மணிக்கு? "
" ஈவனிங் 5.30 க்கு, நான் உங்களுக்காக காத்திட்டு இருப்பேன். கண்டிப்பா நீங்க வரணும் " என்றாள்.
" ஆர்த்தி குட்டி கூப்பிட்டா, வராமா இருப்போமா கண்டிப்பா வர்றோம் " என்றனர். " ஒ.கே அக்கா கிளாஸ் இருக்கு வரேன்.. " என்று சென்றுவிட்டாள்.
ஆர்த்தியும் கீர்த்தி, படிக்கும் கல்லூரில் தான் முதலாம் ஆண்டு கணிதவியல் படிக்கிறாள். ஆர்த்திக்கு கீர்த்தி,சக்தி,சனா மூவரையும் ரொம்பப் பிடிக்கும்.
ஆர்த்தீ வந்த முதல் நாளே அவளை ராக் செய்ய, அதிலிருந்து கீர்த்தி தான் அவளைக் காப்பாத்தினாள்.. அன்றிலிருந்து அவளோடு நட்பாகினாள்
கீர்த்தியும் அவளுடன் நன்றாகப் பேசுவாள். அவளுக்கு பாடத்தில் எழும் சந்தேகத்தைப் போக்குவாள். ஆர்த்தியும் கீர்த்தி, கல்லூரியில் செய்யும் சேட்டையும் அனைத்துயும் வீட்டில் கதையாய் கூறுவாள், ஆர்த்தி வீட்டில் முழுக்க கீர்த்தி புராணம் தான்.
நம் மூப்பெரும் தேவிகளும், ஆர்த்தியின் பிறந்த நாள் விழாவிற்குச் சென்றனர்... வீட்டு முழுதும் தோரனையாக இருந்தது. நிறைய விருந்தினர் வந்திருந்தனர். மூவரும் முழித்துக்கொண்டே உள்ளே சென்றனர்... கீர்த்தி, ஆர்த்தியைத் தேட, இரு கரங்கள் அவளது கண்ணைப் பொத்தியது... கீர்த்திக்கு தன் கண்களைப் பொத்தியது யாரென்று தெரியாமல் தடுமாறி நின்றாள்..
வருவான்.
அதுயாரா இருக்கும் கெஸ் பண்ணுங்க..