கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வருவான் 8

Chithu

Moderator
Staff member
வருவான் 8
நாட்கள் தன் கடமையைச் செவ்வனே என்று கடந்தது. ராஜுவின் திருமண நாளும் நெருங்கியது. பெண்வீட்டார் விருப்பப்படி தனது கிராமத்தில் தான் திருமணம் என்று முடிவு செய்தனர். மாப்பிள்ளை வீட்டாரும் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டனர். அதே நேரம் பொங்கல் திருநாளும் வர கீர்த்தியின் கல்லூரியில் ஒருவாரம் விடுமுறை கிடைத்தது. பொங்கல் திருநாளைக் கொண்டாடி விட்டுக் குடும்பமாய் அங்கே செல்லத் தயாராகினர்.

தருணுக்கும் அஜய்க்கும் வகுப்புகள் இருந்ததனால், கிருஷ்ணன் மாலதியோடு இருந்துவிட்டனர். ஜீவாவும் தனக்கு ப்ராஜட் இருப்பதால் கல்யாணத்தன்று வருவதாகக் கூறிவிட்டான்..

ராஜுவின் குடும்பம், அவனது சித்தப்பா, இரண்டு அத்தைகளின் குடும்பம் மூன்றுநாள் முன்னமே சென்றது. பெண்வீட்டார் மூன்று நாட்கள் முன்பே வருமாறு அழைக்க, இவர்களும் கிளம்பினார்கள்.

அதே போல் ராஜுவின் தோழர்கள், ப்ரதீப்,கணேஷ் ,கார்த்திக் , சுரேஷ் அவனுடன் கிளம்பினார்கள்.

பெரியவர்கள் எல்லாம் ஒரு வேணிலும் சிரியவர்கள் எல்லாரும் ஒரு வேணிலும் ஏறினார்கள்.

கீர்த்தி ஜன்னலோரம் அமரவே, அவளுக்கெதிராய் கார்த்திக் அமர்ந்துகொண்டான்.வண்டி கிளம்பியது


" டேய் விஷ்ணு, உன்னோட ஆள எப்போ காட்ட போற? அவங்க அவ்வளவு அழகா என்ன காட்டாவே மாட்டிகிற? " என்று பேச்சை ஆரம்பித்தாள் கீர்த்தி.

" ஆமா, தேவதை மாதிரி இருப்பா செம அழகு டி. அவள பார்த்த நீ எல்லாம் பொறாமை படுவ " என்றான் விஷ்ணு.

" இவ்வளவு ப்லடப், கொடுக்கிற, அப்ப உன்னுடைய அப்பிளிகேசன் ரிஜட்டட்.."

" ஹேய் அப்படி எல்லாம் சொல்லாத டி உன்னை நம்பி தான் அவகிட்ட பெருமையா பேசிருகேன் ,நம்ம குடும்பம் லவ்க்கு சப்போர்ட் பண்ற குடும்பம்ன்னு சொல்லிருக்கேன்...

எங்க அண்ணன் கல்யாணம் முடிஞ்சதும் உடனே நம்ம லவ் மேட்டரைச் சொல்லி, உங்க வீட்டுல வந்து பொண்ணு கேட்கிறேன் சொல்லிருக்கேன். அதுல மண்ணள்ளிப் போட்டுறாத தெய்வமே.... உன்னை விட அழகுல கம்மிதான் உன் அளவுக்கு யாரும் அழகு இல்லை " என்றான் கும்பிட்டுகொண்டே.

" ரொம்ப ஐஸ் வைக்காத, எனக்கு சளிப் பிடிச்சிட போகுது, இதை உன்னுடைய கல்யாணத்துக்கு அப்புறம் சொல்லுவியான்னு பார்க்கிறேன்" என்றதும் அசடு வழிய சிரித்தான்.

" ஆமா மாமா கல்யாணத்துக்கு ஒத்துக்கலைன்னா என்ன பண்ணுவ விஷ்ணு? "

" எனக்கு நீ சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்க. அதேல்லாம் தெரியாது நீ எங்கள சேர்த்துக் வைக்கிற அவ்வளவு தான் .... " என்றான்.

" ம் உன்னுடைய மாமானார் எப்படிடா ?"

" அவர் ஒரு டம்மி பீஸ்தான் ஈசியா கரைட் பண்ணிடேன். அவங்க அம்மாதான் கொஞ்சம் ஒவர் சீனு...."

" ஹேய் கீர்த்தி எங்கள சேர்த்து வைக்கிறது இருக்கட்டும். நீ எப்ப கல்யாணம் பண்ணுவ எப்படி கல்யாணம் பண்ணுவ? " கார்த்தி கேட்டான்..

" உங்கள எல்லாம் கரையேத்திட்டுதான் என் கல்யாணம்"

" அதுசரி லவ்வா இல்லை ஆரேன்ஜ் மேரேஜ்ஜா? " என்றவன் கேட்க..

" நான் எங்க அம்மா பார்க்கிற பையன தான் கல்யாணம் பண்ணிப்பேன்" என்றாள்.

" ஹேய் கீர்த்தி அவ்வளவு நல்லவளா நீ.... இதெல்லாம் உனக்கு செட் ஆகல. ஒழுங்க மரியாதைய லவ் பண்ணி கல்யாணம் பண்ணி. நம்ம குடும்ப பெயரைக் காப்பாத்து...., " என்றான்.

" நான் ஒண்ணும் உங்க லவ்வுக்காக எல்லாம் உங்கள சேர்த்து வைக்கல, என் மாமா பசங்க கண்ணு கலங்கக் கூடாது அவங்க வாழ்க்கை நல்ல படிய அமையணும் நினைப்புல தான் உங்களைச் சேர்த்து வைக்கிறது புரியுதா... "

" ஹேய் கீர்த்தி நீ லவ் பண்றேன் வந்த நிக்கத்தான் போற அப்ப உன்ன பார்த்துக்கிறேன்டி " என்றான் விஷ்ணு.

" போடா.... " என்றாள்... இவையெல்லாம் பார்வையாளாராக கேட்டுக் கொண்டிருந்தான் கார்த்திக்.

அந்தக் கிராமம், மலை கிராமம் போலத்தான் இருந்தது. ஊருக்குள்ளும் ஊரைச்சுற்றிலும் பச்சைபசேரென்று இருந்தது. மலையும் காடுமாய், ஊரைச் சுற்றிருக்க, குளிரெங்கும் அவ்வூரை ஆக்கிரமித்திருந்தது....

" டேய் ராஜ் பேசாமா உன்னுடைய ஹனிமூனை இங்கையே கொண்டாடிடுடா.. செம ப்ளேஸ்டா " என்றான் ப்ரதீப்.


" ஏன்டா? "


" இந்த ஊரைப் பாரு, எவ்வளவு அழகா இருக்கு. சுத்தி மலைகள், மரங்கள் அப்படியே மினி ஊட்டி மாதிரி இருக்குடா ரொம்ப குளிர வேற செய்து, அதுனால உங்க மாமனார் வீட்டுல வீட்டோட மாப்பிள்ளை இருந்திரு. அப்புறம் உனக்கு எப்போமே ஹனிமூன் தான்டா. " என்று கலாய்த்தனர்.


" டேய் சும்மா இருடா இந்தக் கல்யாணம் நடக்கிறதே பெரிய விசயம். இதுல வீட்டோட மாப்பிள்ளைன்னு எங்க அப்பா காதில விழுந்திச்சு அவ்வளவு தான் சாமி ஆடிருவாரு...." என்றான்.

" டேய் உண்மை... பார்த்ததுமே மனசுல இந்த ஊர் பதிந்திருச்சுடா,நான் என் பொண்டாட்டிய கூட்டிட்டு இங்கதான் ஹன்மூன் வர போறேன்.. " என கீர்த்தியைப் பார்த்தவாறே கூற, அவளோ அடிக்கண்ணில் அவனை ஒருமுறை பார்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டாள்..

அந்த ஊரிலே கவிதாவின் வீடுதான் பெரியளவில் இருந்தது... அவளது தந்தைதான் ஊர்தலைவர். அந்தக் கிராமத்தில பாதி நிலம் அவருடையது தான்...

மாப்பிள்ளை வீட்டாருக்காக, எல்லா ஏற்பாடுகளும் செய்ய பட்டிருந்தது அங்கே...

கல்யாணம் ஆகபோகும் பெண்கள், கல்யாணத்திற்காக, முந்தைய நாளிலே ஊர் கோவிலில் பொங்கல் வைப்பது அந்த ஊரின் வழக்கம். அன்று மாலையே, அந்தக் கோயிலில் பொங்கல் வைக்க தயாராகினர்..


" நாங்களும் பொங்கல் வைக்கலாமா பாட்டி.... " என்று சக்தி கேட்க,

" தாராளமா வைக்கலாம் கண்ணு, கல்யாணம் ஆகபோற பொண்ணு மட்டுமில்ல கல்யாணம் சீக்கிரமா ஆகணும் கூட வேண்டி பொங்கல் வைக்கலாம்..., " என்றார் அந்த ஊர்பாட்டி.

" ஏன்டி உனக்கு சீக்கிரமா கல்யாணம் ஆகணுமா?" என கீர்த்தி கேட்க.


" எனக்கு இல்லடி, உனக்குத் தான் சீக்கிரமா ஆகணும் வேண்டி வைக்க போறேன்.. "


" எனக்கா, எனக்காக ஏன்டி? "

" எனக்கு எப்படி கல்யாணம் நடக்கும்,நீ தான் கல்யாணம் வேணாம் சொல்லிட்டிருக்க. அதுனால
தான் உனக்குப் பதிலாக நான் சாமிகிட்ட வேண்டிக்க போறேன். " என்றாள்.


" பாப்போம் யாரு வேண்டுதல் நிறைவேறுதுன்னு .,.. " என்றவள் அவளோடு பொங்கல் வைக்கத் தயாரானாள்...


கவிதா, அவள் தோழியின் உதவியால் பொங்கல் வைத்தாள்.
பவித்ராவும் சனாவும் சேர்ந்தனர். கீர்த்தியும் சக்தியும் சேர்ந்து வைத்தனர். பெரியவர்கள் வேடிக்கைப் பார்த்தனர். அங்கே அனைவரும் கூடி இருந்தனர்..

யாருடைய, பொங்கல் முதலில் பொங்க போகிறது என, ராஜ், இரண்டு கார்த்திக்கும், பார்த்துக்கொண்டிருக்க, முதலில் பொங்கியது சக்தி, கீர்த்தியின் பொங்கல், அதன் பின் மற்ற பொங்கள் பொங்கியது, இருவரும் கட்டிப்பிடித்து கொண்டனர்..

கார்த்திக்கும் அவர்களது சந்தோசத்தைப் பகிர்ந்துக் கொண்டான் மனதளவில்...
அங்கிருந்த ஊர்பாட்டி ஒருவர் கீர்த்தியும் சக்தியும் பார்த்து, " உங்க இரண்டு பேருக்கும் மனசுக்குப், பிடிச்ச பையன் தான் உங்களுக்குப் புருஷனா வருவான். " என்றார்.. இருவரும் பார்த்து சிரித்துகொண்டனர்...
பின் கடவுள் முன் பொங்கலைப் படைத்து வழிபட்டு, அனைவருக்கும் பகிர்ந்தளித்தனர்..

பின், இளைஞர்கள் மட்டும் ஊரைச் சுற்றி பார்த்துக்கொண்டே நடந்தே வந்தனர்.. அங்கே சிறுவர்கள் எல்லோரும் பெரியவர்களின் உதவியால் பட்டம் செய்துகொண்டிருந்தனர்..

" ஹேய், கீர்த்தி அங்க பாரேன் பட்டம் செய்றாங்க, நாம பட்டம் விட்டு எவ்வளவு நாள் ஆச்சு?" என்றான் கார்த்தி..

" ஆமாடா, சின்ன வயசுல விட்டது.... " என்றாள்..

" பேசாம நாம வாங்கி விடுவோமா.. " விஷ்ணு கேட்க. எல்லாரும் சரியென்றனர்.

ராஜ், சக்தியிடம் கீர்த்தியையும் கார்த்திக்கையும் காட்ட, அவளும் கண்ணசைத்தவள். " ஒ.கே ஒ.கே நானும் சனாவும் பட்டம் விட போறோம்... " என்றாள் சக்தி.. " நானும் கணேஷ்ஷூம் " விடப்போறோம் ப்ரதீப் கூறினான்... " நானும் பவியும் விட போறோம் " என்றான் கார்த்தி, நானும் விஷ்ணுவும் சேர்ந்து விடுறோம். " என்றான் சுரேஷ்... அனைவரும் ஜோடி சேர, கீர்த்தியும் கார்த்திக் தனித்து விடப்பட்டனர்..

கார்த்தியோ, கீர்த்தி தன்னை அழைப்பாளா, என்று ஆர்வமாக அவளையே பார்த்தான். ஆனால் அவளோ தயங்கியே நின்றாள்...

" வர்ஷா, நீ வா நாம விடலாம்..." என்று கீர்த்தி ராஜூவோடு அமர்ந்த வர்ஷாவை அழைத்தாள்.

" இல்ல கீர்த்தி, நானும் வர்ஷாவும் வேடிக்கைப் பார்க்க போறோம்.. என்ன வர்ஷூ " என்றான், அவளும் தலையாட்டினாள்..

மீண்டும் தயங்கி கார்த்திக்கைப் பார்க்க, அவனோ வேடிக்கைப் பார்த்தான்...

" டேய் கார்த்தி, நீயும் கார்த்திக்கும் பட்டம் விடுங்க, நான் பவிக்கூட விடுறேன்.." என்றாள்...

" போடி... நான் பவிக்கூட தான் விடுவேன், இந்த சான்ஸை நான் விட மாட்டேன் பா... " என்றவன் அவளோடு பட்டம் விட்டான்...

எல்லோரும் பட்டத்தைவிட இவர்கள் இருவரும் பார்த்துகொண்டே இருந்தனர்... " அவளுக்கு ஆசை பட்டம் விட. ஆனால் தனியாக விட முடியாதென்று நின்றாள்..

' வீம்புகாரி, கூப்பிடுறாளா பாரேன்?' என்று எண்ணி சோகமாய் முகத்தை வைத்து நகர போனவனை அழைத்தாள்.

" கார்த்திக்.." எனவும்
அவன் ஆர்வமாய் திரும்ப, " வா பட்டம் விடலாம் " என்றழைத்தாள்.. மனதில் மகிழ்ச்சி பூக்க, நாலெட்டில் அவளை நெருங்கி இருந்தான்..

" நிஜமாவ கீர்த்தி? நாம இரண்டு பேரும் பட்டம் விடலாமா ? " என்றவனின், கண்ணில் ஏதோ மின்னல் வெட்ட அவளுக்கோ ஏதோ போல் ஆனது...

" ஆமா வா விடலாம் " என்று பட்டத்தை அவனிடம் கொடுத்தாள்... " தாங்கிஸ் கீர்த்தி. " என்றவன் முகம் சந்தோசத்தில் இருக்க தன்னை மறந்து அவனை ரசிக்கலானாள்..

" நீ இந்த நூல்கண்டைப் பிடிச்சுக்கோ, நானே விடுறேன், இது மாஞ்சநூள் கொஞ்ச மிஸ்ஸானாலும் கை அறுத்திடும்.. " என்றவன் பட்டத்தைப் பறக்க விட்டான்.. அவனது அக்கறையில் மகிழ்ந்தவள் அவனையே பார்த்தவாறு நின்றாள்...


" அடியே மானகெட்டவளே, அப்பட்டமா ரசிக்கிறீயேடி.. பார்த்து கிண்டல் பண்ண போறான்... " என்று மனசாட்சி எச்சரிக்கை மணி அடித்தது. தன் நிலை வந்தவள் பட்டத்தைப் பார்த்தாள்.

குழந்தைகள் பட்டத்தைக் கண்டு குதுகளிக்க, குழந்தைப் போல அங்கே அந்த இளைஞர்கள் மகிழ்ந்து பட்டத்தை விட ஆர்வமாகினர்..

" கார்த்திக் நானும் விடவா..." என்றவள் கேட்பது கூட குழந்தை போல் இருக்க, " சரி " என்றவன், அவளிடம் கொடுத்தான்," கீர்த்தி கவனம் பார்த்து விடு.. " என்றான்..

காற்று அதிகம் அடித்ததில். பட்டம் அங்குமிங்கு ஆட... " கீர்த்தி பார்த்து " என்றவன் அவளோடு சேர்த்து பட்டத்தின் நூலைப் பிடித்து தனது கன்டரோலுக்கு கொண்டுவந்தான், ஆனால் வந்தது பட்டம் இல்ல, கீர்த்தியும் தான் அவனுக்குள் இருந்தாள்....

பட்டத்தை அவன் விட்டாலும், அவள் மனதோ காத்தாடியை போல் அலைபாய ஆரம்பித்தது, தனது மனதை ஒரு நிலையில் வைக்காமல், விட்டாள். அவனது மூச்சுகாற்று செவிமடலைத் தீண்ட, சிவந்தே போனாள், அவளது நிலையை அறிந்திடாதவனோ பட்டத்தின் மேல் கண்ணை வைத்தான்..

" கார்த்திக்...." என்றவள் மெதுவாய் அழைக்கவே, தன் நிலையை உணர்ந்தவன், தள்ளி நின்றான்... இருவரும் தயங்கி நிற்க, காத்தாடி மீண்டும் ஆட்டம் கண்டது....

" டேய் கார்த்திக் காத்தாடிய பாரு... "என்று ராஜ் கத்த இருவரும் நூலை வேகமாக பற்ற இருவரது கையும் தீண்டியது, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தன்னிலை மறந்து நின்றனர்.

பட்டத்தின் நூலை இருவரும் விட அது காற்று அடித்து திசை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது..


" அடேய் அங்க, என்னடா ரொமான்ஸ் பண்றீங்க, நூலறுந்து காத்தாடி பறந்து போயிருச்சுடா... " என ராஜ் கத்த தன்னிலை வந்தவர்கள், பட்டத்தைப் பார்த்தனர்.

" ஹேய் பட்டம், " என கீர்த்தி பட்டத்தை நோக்கி ஓடவே, கார்த்திக் அவளைத் தொடர்ந்தான்.

பட்டம் மரத்தில் சிக்கிக் கொள்ள, அவள் பட்டத்தைத் தேடிவந்தாள்... இவனும் அவன் பின்னே சென்றான்..

பட்டத்தைக் கண்டவள், அங்கே மரத்தடியில் நின்றாள், அவனும் அங்கு வந்தான்..

"ஏன்ன் கீர்த்தி ஓடிவந்த,? பட்டம்தானே, போனா போகட்டும்... " என்றான் மூச்சுவாங்கியே..

" நீதானே சொன்ன மாஞ்சா நூல் அறுத்திடும், இதுனால யாருக்காவது பாதிப்பு வந்தா அதான் வந்தேன்.. " என்றாள்..


" சரி இரு நான் எடுக்கிறேன்... " என்றவன் ஏறி எடுக்க, அவனது கையே பதம் பார்த்தது.....

பட்டத்தோடு குதித்தவன் , கையில் வலியில் கத்தினான்... " ஐயோ கார்த்திக்...." என்றவள் தன்து ஷாலை கிழித்துக் கட்டிவிட்டாள்..

அப்பொழுதுதான் மிருகத்தின் சத்தம் கோரமாய் கேட்க.. பயத்தில் அவனை அணைத்தாள்... அவனும் அப்பொழுது தான் கவனித்தான்... இருவரும் காடுக்குள் வந்துவிட்டத்தை..

வருவான்..

 
Top