கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வருவான் 9

Chithu

Moderator
Staff member

வருவான் 9
பட்டத்தைப் பிடிக்க வந்தவர்கள், வழித் தவறி காட்டிற்குள் வந்து மாட்டிக்கொண்டனர். அங்கே மிருகங்கள் சத்தம் கேட்கவே, வந்த இடத்தை உணர்ந்து கொண்டனர். பயத்தில் அவள் அவனை அணைத்திருந்தாள்.

" மேடம், தைரியமானவங்கன்னு நினைச்சேன். சத்தம் கேட்டத்துக்கே இப்படி பயப்படுறீங்க? " என்றவனின் அணைப்பில் இருந்தவாறே,

" அதேல்லாம் நாட்டுக்குள்ள தான், காட்டுக்குள்ள இல்ல, ஏன் உனக்கு பயம் இல்லையா ? " என்றவள் கேட்க,

" ஹாஹா.. ஹாஹா..... இப்படி ஒரு அழகான பொண்ணோட் அணைப்பில் இருந்தால் எவ்வளவு பெரிய மிருகம் வந்தாலும் அடிச்சு தூக்கிப்போட்டு போயிட்டே இருக்கலாம்" என்றதும் தான் அவனை அணைத்திருப்பதை உணர்ந்தவள், சட்டென விலகி நின்றாள்.

" சாரி.... கார்த்திக், இப்ப நம்ம எப்படி வீட்டுக்குப் போறது? "

" தெரியலையே எந்தப் பக்கத்திலிருந்து வந்தோம் கூட மறந்து போச்சு. சுத்தி வேற மரமா இருக்கே" என்றவனும் முழித்துக் கொண்டிருந்தான்..

" யாரு நீங்க, இங்க என்ன பண்றீங்க?" என்று ஒருவர் கேட்க இருவரும் திரும்பிப் பார்த்தனர்...

அங்கே அந்தக் காட்டுக்குள் வசிக்கும் மலைவாசி ஒருவர் கேட்டு நின்றார்.


" ஐயா ! நாங்க இங்க பக்கத்துல இருக்க கிராமத்துக்கு ஒரு கல்யாணத்துக்காக வந்தோம். தெரியாமா வழி தவறிக் காட்டுகுள்ள வந்துடோம். எப்படி கிரமத்துக்குப் போறதுன்னு வழி தெரியல?" என்றான் கார்த்திக்...

" ஓ... வழித் தவறி வந்துட்டீங்களா? இருட்டிருச்சு , இனிமேல் கிராமத்துக்கு போறது கஷ்டம் அதுனால என்கூட வாங்க இரவ கழிச்சுட்டு காலையில உங்களுக்கு கிராமத்துக்குப் போற வழியைக் காட்டுறேன். என் பின்னாடியே வாங்க " என்றார்.. அவர் கூற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்...

" சரி வா நாம அவர்கூட போவோம்..."என்றவனின் கைப்பற்றினாள்.

" எனக்கு பயமா இருக்கு கார்த்திக்..."

" நான் இருக்கேன் பயப்படாத... " என்றவன் அவர் பின்னே அழைத்துச் சென்றான். வெகு தூரம் இருவரும் நடந்து வந்தனர்.

மரங்களான வீடுகளே அங்கே இருந்தது. அங்கே தீப்பந்தம் விளக்காய் எறிந்து ஒளியைத் தந்தது. தன் முன்னே நடந்தவர் அங்கே வசிக்கும் ஒரு பாட்டியிடம் வந்தார்.

" அம்மத்தா இவங்க இரண்டுபேரும் கிராமத்துக்குப் போக வேண்டியவங்க, வழித் தவறி காட்டுக்குள்ள வந்துட்டாங்க
போறதுக்கு வழித்தெரியலையாம் நின்னுட்டு இருந்தாங்க. இந்நேரம் எப்படி போறதுன்னு நான் தான் தங்கிட்டு காலையில போங்கன்னு கூட்டி வந்தேன்..."

" சரிடா முனி, அவங்க இங்கயே தங்கட்டும். நான் பார்த்துகிறேன்டா.. " என்றவர் அவர்களைக் காண, அவளோ அவனது கையைக் கெட்டியாகப் பற்றி அவனை ஒன்றிருந்தாள்..

" நீங்க இரண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா?"

" ஆமா பாட்டி " என்றான் கார்த்திக். அவனது கை அழுத்தி முறைக்க, அவனோ அமைதியா இரு என்பதுபோல சைகைச் செய்தான்.

கீர்த்தியும் கார்த்திக்கும் பார்த்த, மலைவாசிகள் அங்கே கூடினார்கள்.

" நீங்க ஊர் சுத்திப் பார்க்க வந்திங்களா?"

" இல்லங்க நாங்க இரண்டு பெரும் ஒரு கல்யாணத்திற்க்காக வந்தோம்... வழித் தவறி காட்டுக்குள்ள மாட்டிக்கிட்டோம்.." என்றான்.

" புள்ளக்குட்டி எல்லாம் கூட்டிட்டு வரலையா தம்பி." என்றொருவர் கேட்க, கீர்த்தி இல்லையென்று தலையாட்டினாள். அவளைக் கண்ட கார்த்திக்கோ சிரித்தான்.

" இல்லம்மா, கூட்டிட்டு வரல, அவங்க இவ அம்மாகூட இருக்காங்க" என்றான்.

" எத்தனை புள்ளைங்க தம்பி உங்களுக்கு...." என்றவர்கள் கேட்க. கீர்த்திக்கு தலையே சுற்றியது..

" ஒரு பொண்ணுங்க... " என்றான். இவர்கள் பேசுவதைக் கேட்க முடியாமல் பேச்சை மாத்த எண்ணியவள்,

" பாட்டி உங்க கிட்ட மருந்து இருக்குமா இவன் கையில அடிப்பட்டிருக்கு " என்று கேட்டதும் தான் கையில் கிழித்திருந்தது ஞாபகத்திற்கு வந்தது.

அந்தப் பாட்டி மஞ்சளைக் கொண்டு வந்து கீர்த்தியின் கையில் கொடுத்து, " இத தடவுமா சரியாயிடும். " என்றார்... " நன்றி பாட்டி " என்றவள். அவன் கையில் கட்டிருந்த ஷாலை எடுத்தவள், அந்த மஞ்சளைப் பூசினாள்....


" ஸ்ஸ்ஆஆஆ......" வலியில் கத்த,... " சாரி கார்த்திக், ரொம்ப வலிக்குதா? "

" ஆமா... " என்றான்.. மெதுவாகப் பூசியவள், மெல்லமாய் காயத்தில், ஊதினாள்... அவள் முகத்தை அந்த ஒளியில் காண காயத்தின் வலியறியாது அவளை ரசித்தான். அவள் மெதுமெதுவாகவே, மருந்திட்டாள்.

" ஆமா ஏன் நமக்கு கல்யாணம் ஆயிருச்சு குழந்தை இருக்குன்னு பொய் சொன்ன? "

" இப்படி இரண்டு பேரா வந்திருக்கோம், நமக்கு கல்யாணம் ஆகலைன்னு சொன்னா தப்பாத்தானே நினைப்பாங்க. இவங்க கிராமத்தாளுங்க, ஒரு பொண்ணு பையனும் சேர்ந்திருந்தால் அவங்க புருசன் பொண்டாட்டின்னு தான் நினைப்பாங்க. நாம இல்லைன்னு சொன்னா. தப்பா நினைச்சு, இடம் கொடுக்காம இருந்தா என்ன செய்ய? அதான் சொன்னேன்..." என்றதும் அவள் அமைதியாக யோசித்தாள்.

" சரி, புருசன் பொண்டாட்டியோட நிறுத்திருக்க வேண்டியது தானே. ஏன் பிள்ளை இருக்குன்னு சொன்ன? "

" பொய் எப்படி தனியா, வரும் சேர்ந்து தானே வரும். அதான் அந்தப் பொய்யையும் சேர்த்து சொல்லுற மாதிரி ஆச்சு. அப்புறம் நான் ஒண்ணும் பொய் எல்லாம் சொல்லலையே" என்றான்.

" அப்ப இதேல்லாம் உண்மையா, பொய்யில்லையா? "


" ஆமா, இனி நடக்கப் போறத முன்னாடியே சொன்னே அதேப்படி
பொய்யாகும்" என்றவளை முறைத்தவள்


" எது இனிமேல் நடக்கும்?" என்றவள் கேட்க சிரித்துக்கொண்டே பதில் அளித்தான்...

" நாம இரண்டு பேரும் புருசன் பொண்டாட்டி ஆகிறது, நமக்கு ஒரு பெண் குழந்தைப் பிறக்கிறது இதெல்லாம் கண்டிப்பா நடக்கும். அதை தான் நான் முன்னாடியே சொன்னேன்... இது பொய்யில்ல.." என்றான். அவனை முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்...

அவள் செல்வதைக் கண்டு சிரித்தவன், தன் காயத்தைப் பார்த்து அமர்ந்திருந்தான்.. அருகில் வந்த பாட்டி இவனிடம்..

" உன் பொண்டாட்டி உன் மேல பாசமா தான்யா இருக்குது. ரொம்ப கொடுத்து வச்சவன் தான் நீ,.. நீங்க இரண்டும் பேரும் சந்தோசமா இன்னும் நிறைய பிள்ள குட்டிய பெத்து வாழணும்யா, " என அவன் தலையில் கைவைத்து ஆசிர்வதித்து விட்டுச் சென்றார். அவனுக்கு அது பெரும் மகிழ்ச்சியை தந்தது.
அந்தப் பாட்டிச் சென்றதும். அவன் அருகில் வந்த கீர்த்தி .
" என்ன பேசுனீங்க நீயும் பாட்டியும்? "

" நான் கொடுத்து வச்சவனா, நம்ம இரண்டு பெரும் சந்தோசமா இருக்கணுமா, நிறைய குழந்தைகள பெத்துக்கணுமா. ஆசிக் கொடுத்துட்டுப் போறாங்க" என்றான்..


" நீ அப்படி சொன்னதுனால தானே பாட்டி அப்படி சொல்லுறாங்க?"


" அதுனால என்ன, அவங்க பெரியவங்க அப்படிதான் சொல்லுவாங்க எடுத்துக்கிறதும் எடுத்துக்காததும் உன்னுடையது...." என்றவனைப் பார்த்து அமர்ந்திருந்தாள்,.,


பாட்டி, இருவருக்கும் உணவைக் கொண்டு வந்து கொடுத்தார். அதில் பழ வகைகளும்,தேனையும்கொடுத்தார்.,

" இதான்ப்பா, இப்பதைக்கு இருக்கு " என்று சொல்லிக் கொடுக்க போதுமென்றே அதனை வாங்கி சாப்பிட்டனர். இருவரும் ரசித்து ருசித்து சாப்பிட்டனர். தேனைப் பருகவே, அவள் உதட்டில் வடிந்தோடியது....


ஏனோ காணாத அதிசயத்தைக் கண்டவனை போல, அவளைப் பார்த்துகொண்டிருந்தான் கார்த்திக்...

அதனை கண்டவளோ, தன் புருவம் உயர்த்தி என்னவென்று கேட்டாள், " தேன் சிந்திருக்கு, துடை " என்றான்..

அவள் மாற்றித் துடைக்க, அவனோ, அதனைத் துடைத்துவிட்டான்... " ம்ம்.. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.. " என்றான்... அவன் விரலுக்குக் கிடைத்த, இதழ் அவனிதழுக்கு கிடைக்கவில்லை என்ற அர்த்தத்தில் கூறவே, அவள் புரியாமல்... " இப்ப எதுக்கு இத சொல்லுற ?" என்று கேட்டாள்.


' அதானே, என் காதலே இவளுக்குப் புரியல, இது மட்டும் புரிந்திடுமா?" எனத் தலையில் அடித்தவன்..." ஒண்ணுமில்லை ' என்றான்

இருவர் தூங்க அறையொன்றை தயார்செய்து கொடுத்தார் பாட்டி.

இருவரும் அந்த அறைக்குச் செல்ல. ஒரே கயிற்று கட்டில் போர்வைத் தலையணை இருக்க, இருவரும் பார்த்துநின்றனர்..

" கார்த்திக், நீ மேல படுத்துக்கோ நான் கீழ படுத்துகிறேன் " என்றாள்..

" இல்ல நானே கீழ படுத்துகிறேன், நீ மேல படுத்துகோ"

" உனக்கு கையில அடிப்பட்டிருக்கு , கீழ படுக்கிறது கஷ்டம், எனக்குப் பழக்கமானது தான் கீழே நான் படுத்துகிறேன் " என்றாள்.

" இல்ல, வேணாம்... நான் கீழே படுத்துகிறேன் " என்றவன், போர்வை விரித்துப் படுத்துகொண்டான். அவள் கட்டிலில் படுத்தவள் அவன் புறம் திரும்பிப் படுத்துகொண்டு, அவனையே பார்த்தாள்..
" என்ன ? " என்றவன் கேட்க.

" சாரி, கார்த்திக் என்னால தானே. நீ இப்படி கஷ்டபடுற... " என்றாள்.

" நான் எங்க கஷ்டபட்டேன்... "

" இல்ல உன் கையில அடிப்பட்டது, பழக்கமே இல்லாம கீழ படுத்திருக்கது என்னால தானே"

" நான் இந்த மாதிரி இடத்துக்கு வந்ததே இல்ல.
இந்த இடம் புது சூழ்நிலை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு, நம்ம மனசுக்கு பிடிச்சவங்களோட, எங்க இருந்தாலும் அது சந்தோசம், உனக்கு தான் நான் நன்றி சொல்லனும், உனக்கு இந்த இடம் பிடிக்கலையா? "

" ரொம்ப பிடிச்சிருக்கு, வீட்டுல இருக்க ஒரு சொந்தமா பார்க்கிறாங்க, அன்பு காட்டுறாங்க, இனிமேல் இந்த இடத்துக்கு வருவோமான்னு தெரியாது. ஆனால் ரொம்ப நல்லாருக்கு இந்த இடம். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, இங்க இருக்க மனுசங்களையும்" என்றவளுக்கு உறக்கம் தழுவ, "குட் நைட் கார்த்திக் " என்று உறங்க ஆரம்பித்தாள்... இருவரும் உறங்கினர்.

அதிகாலை ஆதவனோடு, அக்குளிரும் ஆக்கிரமித்தது அக்கிராமத்தை.
கதிர்கள், கார்த்திக்கின் முகத்தைத் தீண்ட துயில் கலைந்தான்...

மெல்ல எழுந்தவன், கீர்த்தியைக் காண குளிரில் தன்னை சுருக்கி படுத்திருக்க, அவள் மேல் போர்வை போர்த்தியவன், வெளியே வர சொர்க்கத்தைக் கண்டவனாய் விழியை விரித்தான்.. பனி சூழ பெரும் மலைகள் மறைந்திருக்க, மலையினுள், வெள்ளி திரவியமாய், தண்ணீர் கொட்ட, கீழே சலசலத்து அந்நீரும் ஓட, நீரோடு சேர்த்து ஆங்காங்கே பச்சை போர்வை விரித்த புள், பூத்து குலுங்கும் மலர்களென அவ்விடத்தைக் காண போதவே இல்லை கண்கள்...

மீண்டும் உள்ளே வந்தவன், கீர்த்தி அருகில் அமர்ந்து, அவளை எழுப்ப, தன் அன்னை எழுப்புவது போல் நினைத்தவள், " மா... இன்னும் கொஞ்ச நேரம் மா.. " என்றவள்.. அவன் மடியில் படுத்து. அவனது இடையைக் கட்டிகொண்டு உறங்கினாள்... அவளது இச்செயலை ரசித்தவன், அவள் அறியா வண்ணம் நெற்றியில் இதழை பதித்தான்.. மீண்டும் அவளை எழுப்பீனான்..

" கீர்த்தி எழுந்திரி, வீட்டுக்குப் போகணும். எழுந்திரி.. " என்றவன் எழுப்ப கண்விழித்தவள், அவன் முகம் கண்டு பதறி அடித்து எழுந்தாள். சுற்றி முற்றி பார்த்து, நினைவுக்கு வந்தவள், அவன் முகம் காண அவனோ மெல்லிய புன்னகையோடு முறுவலித்தான்..

" ஹேய், வா உனக்கு ஒண்ணு காட்டுறேன், " என அவளை வெளியே அழைத்து வர அங்கே பிரம்மாண்டமாக அவளுக்கு தெரிந்தது அவ்விடம்... வேகமாக சலசலக்கும் ஆற்றில் ஒடியவள் தன் காலை நனைத்தாள். குளிர்ச்சிஅவள் மேனியெங்கும் பாய்ந்தது.,.. தன் கைகளில் நீரை அள்ளித் தெளித்து விளையாடினாள்..

" ஹேய், கார்த்திக் நீயும் வா,..." என்றவள் அழைக்க, வர நினைத்தவன், அங்கு பெண்கள் குளிப்பதைக் கண்டு வர மறுத்தான்.

" வேணாம் கீர்த்தி, வா நேரமாச்சு, வீட்டுக்குப் போனும்...."

" ப்ளீஸ் கார்த்திக், இனி இங்க வருவோமான்னு தெரியல கொஞ்ச நேரம் " என்றவள் இறங்கி விளையாடினாள்.. அவர்களைக் கண்ட பெண்கள் எழுந்து செல்ல, கார்த்திக் அவளோடு இணைந்தான். கரையில் நின்று அவளைக் கண்டான்.

" வா, கீர்த்தி போலாம்... " என்றழைக்க, " நீ வா இங்க.. " என்றாள். " வேணாம் ட்ரஸ் நனைச்சிடும் நீ வா... "

' இவன... ' என நினைத்தவள், கரையில் ஏற கைநீட்ட அவனும் கையைக் கொடுத்தான். அவனது கையைப்பற்றி உள்ளே இழுத்தாள். பொத்தென்று நீருக்குள் விழுந்தான்.

அவள் மகிழ்ச்சியில் குதிக்க, இருவருமாக அங்கே தண்ணீர் தெளித்து விளையாடினர்..

இந்தச் சந்தோசம் நிலைக்காது என்று அறியாமல்...

வருவான்.

 
Top