19.
சற்று நேரத்தில் ராகா குளித்து விட்டு அறைக்கு வெளியே எட்டிப்பார்க்க... முத்துவும்,பாலனும் இவளுக்காக காத்திருப்பது போல அறையை விட்டு சற்று தள்ளி அமர்ந்திருந்தனர்...முத்துவையும் பாலனையும் பார்த்தாலே ஏனோ அடிவயிற்றில் பயம் தொன்றியது.
மீண்டும் அறைக்குள் சென்று கதவை தாழ் போட்டு கொண்டாள்.
இவள் லண்டனில் அணியும் அரைக்கால் சட்டையும் கையில்லாத பனியனும்தான் அணிந்திருந்தாள்...வரும் பொழுது பிரியா எடுத்துக் கொடுத்திருந்த குர்தி செட் அணிந்திருந்ததாள்…அதனால்
பெரிதாக வித்யாசம் தெரியவில்லை...
இங்கு வந்த பிறகு பெண்கள் அனைவருமே புடவை அணிந்து இருக்க இவள் மட்டும் வித்தியாசமாக உடை அணிவது போல் அவளுக்கே தோன்றியது.
பூபதி இன்னும் அவளுக்கான ஆடைகளை எடுத்து அனுப்பவில்லை ஆனால் பசி வேறு கொல்கிறது... யாரும் வந்து அழைத்துச் செல்வது போல தெரியவில்லை.
என்ன செய்வது என அறையிலேயே அமர்ந்திருந்தாள்...அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்கவும் தயங்கியபடியே கதவை திறந்தாள்.
வெளியில் பணிப்பெண் கைநிறைய பைகளுடன் நின்று கொண்டிருந்தார்.
அம்மா இதை சின்ன அய்யா குடுத்து விட்டாங்க...உங்களை சீக்கிரமா கீழ வரச்சொன்னாங்க... என்று கூறியபடி மேசையில் வைத்து விட்டு வெளியே சென்றார்.
அவர் சென்றதும் கதவை சாத்துவதற்காக வந்தவள் மீண்டும் அறையை விட்டு வெளியே எட்டிப்பார்த்தாள்.
இப்பொழுது பாலனும் முத்துவும் அந்த இடத்தில் இல்லை அப்பாடா என்று பெருத்த நிம்மதியும் வந்தது…
என்ன என்றே தெரியவில்லை இந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த நேரத்தில் இருந்து ராகாவின் மனம் படபடப்புடனே காணப்படுகிறது... ஏதோ ஒரு டென்ஷன் என்ன என்று தெரியவில்லை ஒருவேளை இடம் மாறி வந்ததாக இருக்குமோ என்று அவளுக்கு அவளுக்காகவே சமாதானம் கூறிக் கொள்ள முயல்கிறாள்.. ஆனால் முடியவில்லை.
என்னன்ன ஆடைகள் வந்திருக்கிறது…? கலர் என்ன... தனக்கு பொருந்துமா பொருந்தாதா..? என்று எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் மேலாக இருந்த ஒரு கவரை பிரித்து அதில் இருந்து குர்திசெட்டை எடுத்து அணிந்துகொண்டாள்.
கீழே சென்று வரலாம் என நினைத்தபடி அறையைத் திறந்தவள் வேகமாக காரிடாரில் நடக்க பின்பக்கமாக வினோத சத்தம் கேட்டது.
என்ன என்று திரும்பிப் பார்க்க நாக்கை அரையடி தொங்கவிட்டு... காதுகளைக் தூக்கியபடி ராஜபாளைய வேட்டை நாய் ஒன்று ராகாவை முறைத்துக்கொண்டு நின்றது.
அதன் நாக்கில் இருந்து வழியும் உமிழ்நீரை கீழேவிடாதவாறு நாக்கை சுழற்ற அதைக்ககண்டு பயந்த ராகா சுவற்றோடு ஒன்றினாள்…
காரிடாரில் மூலையில் தான் படிக்கட்டு ...சில அடிகள் நடந்து சென்றால் தான் கீழே செல்ல முடியும்...ஆனால் நாயைக்கண்டவளுக்கு பயம் தொற்றிக் கொண்டது.
லண்டனில் அவள் வளர்ப்புப் பிராணிகளை வளர்த்துமில்லை வளப்பவரின் வீடுகளுக்கு சென்றதும் இல்லை..
சொல்லப்போனால் அதிக அளவில் பிராணிகளை பார்த்தது கூட கிடையாது.
அதனால் வீட்டின் வளர்ப்புப் பிராணியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவளுக்கு தெரியவில்லை.
அப்படியே சுவரை தேய்த்தபடியே நடந்து சென்று கீழே இறங்கி விடலாம் என நினைத்துக் கொண்டு அதை பார்த்தபடியே சைடாக அடி எடுத்து வைக்க ..
நாய் இப்பொழுதும் உதடுகளை தூக்கி அனைத்து பற்களையும் காண்பித்தது ஊர்ர்ர்..
என உறுமியது…
நாயைப் பொருத்தவரை நாம் பயப்படாமல் இருந்தால் மட்டும்தான் புது ஆட்களை தாக்காது... நாம் பயந்துவிட்டோம் என்பதை அது உணர்ந்தாலே நம்மை மிரட்டி பார்க்க ஆரம்பித்து விடும்…
அதன் உருமல் சத்தத்தை கேட்டதும் ராகாவின் இதயம் எக்குத்தப்பாக துடிக்க ஆரம்பித்து விட்டது... சுவற்றோடு ஒன்றியிருப்பவளை பார்த்த நாய் சிறு உறுமலுடன் அவள் அருகில் வரவும் பயந்தவள் அதை பார்த்து ச்சூ...போ என் கைகளைத் தூக்கியபடி விரட்ட
ராகா தாக்க வருகிறாள் என நினைத்த நாய் குரைத்த படியே அவளின் மேல் பாய சட்டென விலகியவள் கத்தியபடி படிக்கட்டை நோக்கி ஓடிவந்தாள்.
நாயும் அவளுக்கு இணையாக குரைத்த படியே துரத்த கீழே சாப்பிடுவதற்காக அமர்ந்திருந்த அனைவரும் நாயின் சத்தமும் ராகாவின் சத்தமும் கேட்க என்ன என்று மேலே எட்டிப்பார்த்தனர்.
அதற்குள்ளே நாய் ராகவின் மேல் பாய்ந்து அதன் கூரிய நகங்களைக் கொண்டு பிராண்ட அதனிடம் இருந்து தப்பிப்பதற்காக நாயை தள்ளிவிட்டபடி படிக்கட்டில் எக்குத்தப்பாக கால்களை வைக்க பாதம் பிசங்கி அங்கிருந்து வேகமாக உருள ஆரம்பித்தாள்.
நாயும் அவள் பின்னாலே கடிப்பதற்காக இறங்கியது... அதற்குள் வீட்டில் இருக்கும் அனைவருமே அந்த இடத்திற்கு வர அதற்குள் ராகா பலத்த காயங்களுடன் கீழே வந்து சேர்ந்திருந்தாள்...பின்னாலே வந்த நாய் அவளை கடிந்து குதறுவதற்கு ஏதுவாக அவளின் மேலே வந்து விழுந்தது…
மேலும் பயந்தவள் உயிர் பயத்தில் பயங்கரமாக கத்த ஆரம்பித்தாள்.
அறையிலிருந்த பூபதிக்கு ராகாவின் அலறல் கேட்கவும் வேகமாக வெளியே ஓடி வர அவன் கண்ட காட்சியில் வினாடி நேரம் இதயம் துடிக்க மறந்து நின்றது.
ராகாவின் முகத்தை நோக்கி நாய் அதனின் கூறிய பற்களைக் கொண்டு செல்ல சுற்றி இருப்பவர்கள் அனைவருமே செய்வதறியாது நிற்கின்றனர்…
டாமி...கொயட்...என்று பூபதியின் குரல் உத்தரவாக கேட்கவும் நாய் அவனைப் பார்த்து வாலை ஆட்ட தொடங்கியது ஆனாலும் அதன் காலுக்கடியில் கிடந்த ராகாவை விடுவிக்கவில்லை…
வேகமாக அருகில் வந்தவன் நாயை நகர்த்தி விட்டு கீழே கிடந்த ராகாவை கைபிடித்து தூக்கினான்.
பயந்து நடுங்கியவளின் உடலெங்கிலும் நகக் கீறல்... நெற்றியில் ,உதட்டில் சிறு காயம்...காலிலும்,இடுப்பிலும் நல்ல அடி...நிற்க முடியாமல் தொய்ந்து கீழே விழுந்தாள்.
தாங்கிப்பிடித்தவன் கோபமாக டாமியை யாரு அவித்து விட்டது என கத்தினான்...ஒன்று போல யாருக்கும் தெரியாது என கூறினர்... பணிப்பெண் மட்டும் பயந்தபடி அங்கிருந்து மெதுவாக நழுவினார்...அதை கவனிக்காதவன் தாயாரிடம்...ம்மா உங்களை தான் கேக்கறேன் என்று கத்தினான்…
டேய் எனக்கு எப்படிடா தெரியும்... உங்களுக்காக உள்ள சமையல் வேலையை பார்த்துகிட்டு இருந்தேன்...சத்தம் கேட்டு தான் நானே வெளியே வந்திருக்கேன்…
நீ வந்ததால யாராவது அவுத்து விட்டிருக்கலாம்…
அது எப்படிமா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கடைக்கு போயிட்டு வரும் பொழுது தான் நான் டாமியை கொஞ்சிட்டு அதை கட்டிவிட்டுட்டு வந்தேன்…
நான் குளிச்சிட்டு வர்றதுக்குள்ள யார் அவுத்து விட்டது... அதுவும் வீட்டுக்குள்ள மாடி வரைக்கும் போய் இருக்கு எப்படி மா…யார் இந்த வேலை செஞ்சது ஒழுங்கா சொல்லிடுங்க நான் கண்டுபிடிச்சேன் நடக்குறதே வேற என்று பொதுவாக அத்தைகளை பார்த்துக் கூறினான் அவர்களுக்கு பின்புறமாக நின்று பாலனும் முத்துவும் வாய்க்குள்ளாகவே சிரித்துக் கொண்டிருந்தனர்...
அவனின் கோபத்தில் ராகாவின் கைகால்கள் மேலும் பயங்கரமாக நடுங்கியது... பயத்தில் கண்களை திறக்கவேயில்லை...பூபதியின் நெஞ்சோடு ஒன்றினாள்.
பயப்படாத ராகா...வா ஹாஸ்பிடல் போகலாம் என எழுந்து அவளையும் தூக்கிவிட்டான்.
ஆஆஆ...எனக்கத்தியவள் நிற்க முடியாமல் மீண்டும் கீழே விழுந்தான்... அப்பொழுது தான் கவனித்தான்...ராகாவின் கால் பிசங்கியிருப்பதை…
ஷீட்...என கோபப்பட்டவன்… இத்தனை பேர் வீட்ல இருக்கீங்க.. ஒருத்தருக்கு கூட அவளுக்கு துணையா இருக்கணும்னு தோணுலல்ல...உங்க எல்லாரையும் நம்பி தானே அவளை இங்க கூட்டிட்டு வந்தேன்...இப்படி விட்டுட்டீங்களே…பாவம் கால் பிசகி உடம்பெல்லாம் நாய் கீறல் போட்டு எப்படி இருக்கான்னு பாருங்க...இவ அப்பாக்கு நான் என்ன பதில் சொல்லட்டும் என்று கோபமாக கத்தினான்..
பிறகு...இரு ராகா உன்னை நான் தூக்கிட்டு போறேன்... என்றவன் அவளை கைகளில் ஏந்தியபடி நடந்துகொண்டே கத்தினான்... யாராவது ஒருத்தர் காரை எடுங்க
என்று…
விழி திறந்த ராகா அவன் கைகளில் இருந்த படியே பூபதியின் சட்டையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு..
இல்ல பூபதி நான் எங்கேயும் வரலை டாக்டர் கிட்ட எல்லாம் என்னை கூப்பிட்டு போகாதே ப்ளீஸ் நான் எங்கேயும் வரலை என்று அழ ஆரம்பித்தாள்…
அழாத ராகா... ஒன்னும் இல்ல...கால்ல சின்ன சுளுக்கு இருக்கு...டாக்டர்ட காமிச்சா உடனே சரியாயிடும்...அப்படியே,
காயத்துக்கும் நகக்கீறலுக்கும்,மருந்து வாங்கிக்கலாம்…
இல்ல பூபதி நான் எங்கேயும் வரமாட்டேன்...என்னை கூட்டிட்டு போகாதே.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு... நான் என் அப்பா கிட்ட போகணும்... என்னை அப்பா கிட்ட கூட்டிட்டு போ….அப்பாவை விட்டுட்டு தெரியாம வந்துட்டேன்... அதனால தான் எனக்கு இப்படி எல்லாம் ஆச்சு என சுயபச்சாதாபம் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
ஓகே நான் இப்போ உன்ன கூட்டிட்டு போகல...முதல்ல ரூம் போகலாம் என்றவன் ம்மா...ராகாவுக்கு மேல ரூம் வேணாம் ...உங்க ரூம்க்கு பக்கத்து ரூமை எடுத்துக்கறேன் என்றபடி அந்த அறைக்குள் தூக்கிச்சென்றவன் படுக்கையில் சாய்வாக அமரவைக்க...அதற்கு ஒத்துழைக்காமல்
அவனது நெஞ்சிலேயே மேலும் ஒன்றியவள் அவனை விட்டு இறங்க மறுத்தாள்…
வாசலைச் சுற்றி நான்கு அத்தைகளும் முகச்சுளிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்... அவர்களின் குடும்பத்தில் ஆண் ஒரு பெண் கட்டிப் பிடிப்பது என்பது தவறான விஷயம்... கணவனாகவே இருந்தாலும் கூட எல்லாம் அறைக்குள் தான் வைத்துக்கொள்ள வேண்டும் வெளியில் வந்துவிட்டால் கணவரை விட்டு ஒரு அடி தள்ளி தான் இருப்பார்கள்…
அந்த அளவிற்கு கட்டுப்பெட்டியான குடும்பம் அது... அதுபோன்ற வீட்டில் ராகா மிக உரிமையாக பூபதியோடு ஒன்றுவதும்...அவனும் அவளை தூக்குவதும் அவர்களுக்கு விருப்பமில்லை என்பதை முகத்தில் அப்பட்டமாக காண்பித்தனர்.
திரும்பிப் பார்த்த பூபதிக்கு மிகவும் தர்மசங்கடமாக இருக்கிறது ராகாவும் புரிந்துகொள்ளாமல் படுக்கையில் அமர்ந்திருப்தபடி அவனது சட்டைகளை கெட்டியாகப் பிடித்து அவனை நகர விடாதவாறு இருக்கிறாள்.
மிகவும் கடினப்பட்டு அவளது கைகளை எடுத்து விட்டவன் படுக்கையை விட்டு கீழே இறங்கி குனிந்தபடி அவளின் தலையை வருடி விட்ட வாறு பயப்படாத ஒன்னுமில்ல..
டாக்டருக்கு மட்டும் ஃகால் பண்ணிட்டு வர்றேன் என்று நகரவும்
அவனது கைகளைப் பிடித்து தடுத்தவள் ப்ளீஸ் பூபதி என்னை விட்டுட்டு போகாதா... இங்கே என்னோடவே இருந்துக்கோ என்னை தனியா விட்டுட்டு போகாதே...நீயும் என்னோடவே ஸ்டே பண்ணு...டாக்டர்லாம் வேணாம் என்று மீண்டும் நடுக்கத்துடன் அழ ஆரம்பித்தாள்.
இப்பொழுது வாசல் பக்கம் பார்க்க அத்தைகள் அனைவருமே அந்த இடத்தை காலி செய்து இருந்தார்கள்…ஆழ இழுத்து மூச்சை விட்டுக் கொண்டவன் அவளருகில் அமர்ந்தவாறு...சரி டாக்டர் இங்க வர்றதுல என்ன பிரச்சினை உனக்கு…
இல்ல பூபதி... நான் படில இருந்து கீழ விழுந்தேன்ல அப்போ என் உடம்பெல்லாம் அடிபட்டிருக்கு…
ஆமா ராகா அதுக்காக தான் டாக்டரை வரச்சொல்லறது…
முழுசா கேளு பூபதி... நான் சின்ன வயசுல இருந்து என் மம்மி முன்னாடி கூட டிரஸ் சேஞ்ச் பண்ணினது இல்லை அப்படி இருக்கும்போது டாக்டர் வந்தா என்னோட காயத்தை எல்லாம் பாப்பாரு எப்படி நான் காட்டறவது எனக்கு ஒரு மாதிரி இருக்கு அதான் வேணாம்னு சொன்னேன் என்று கூறவும் லண்டனில் வளர்ந்த பெண்ணா இவள் என்று தான் தோன்றியது... அதுமட்டுமின்றி அவள் பூபதி மேல் எந்த அளவு நம்பிக்கை வைத்திருக்கிறாள் என்பதும் புரிந்தது ஒரு மருத்துவர் கூட தன்னுடைய உடலை காணக்கூடாது என்று நினைக்கும் பெண் தன்னை எந்த அளவிற்கு நம்பியிருந்தாள் அவளுடனே இருக்கும்படி கூறுவாள் என உணர்ந்ததும் கண்களில் நீருடன் அவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்திருந்தான்…
அதன் பிறகு நீ ஒரு டாக்டரோட பொண்ணா இருந்துகிட்டு நீ இப்படி எல்லாம் யோசிக்கலாமா... சின்னபுள்ளதனமா இருக்கு...உன்னோட பேச்சி...என்றவன் அவளை இயல்புக்கு கொண்டு வரும் பொருட்டு...ஏய் உண்மையைச் சொல்லு டாக்டர் வந்தா காயத்தை பார்ப்பாங்கன்னு பயந்தியா இல்ல ஊசி போடுவாங்கங்கன்னு பயப்படுறியா என்று கூறவும் சிரித்தபடியே ரெண்டும் தான் என்றபடி அவனது நெஞ்சினில் மீண்டும் சாய்ந்தாள்.
இங்கே அறைக்கு வெளியே காமாட்சி பணிப்பெண்ணை அழைத்து விசாரித்துக் கொண்டிருந்தார்…
நீதானே பூபதி கொடுத்த பை எல்லாம் எடுத்துட்டு மேல போன... நீ கீழ வரும் போது நாய் உள்ள வந்ததை பாத்தியா என்று கேட்கவும்…
இல்லம்மா நான் பாக்கல …
பொய் சொன்னா கன்னம் பழுத்திடும் பாத்துக்கோ இனிமே நீங்க வேலை செய்ய வேண்டாம் கிளம்பு... என்கிட்டயே பொய் சொல்லறல்ல... என்று மிரட்டவும் அம்மா என்ன மன்னிச்சிடுங்க என்றபடி அந்தப் பெண் காமாட்சியின் காலில் விழுந்தாள்…
அப்போ நீ தான் நாயை அவுத்துவிட்டிருக்க... மாடி வரைக்கும் கூட்டிட்டு போய் அந்த பொண்ணு ரூம் வாசல்ல விட்டிட்டு வந்திருக்க...ஏன் அப்படி செஞ்ச...யார் உன்னை அப்படி செய்யசொன்னது... என்று கேட்கவும்…
ம்மா...அது வந்து...வந்து...என்று சுற்றி முற்றும் பார்த்தவர் வாய் திறக்கவும்…
ம்கூக்கூம்...என்று முத்துவின் தொண்டை செருமல் சத்தம் கேட்கவும் திரும்பிப் பார்த்த அந்தப் பெண்மணி... இல்லம்மா டாமிக்கு சாப்பாடு வைக்கப் போனேன்…. கயிறு சரியா கட்டாம இருந்தது ...அவுத்து கட்டலாம்னு கழட்டிவிட்டேன்... அந்த சமயத்துல சின்னைய்யாவோட சத்தம் கேட்கவும் பதட்டத்துல நாயை கட்டாமலே வந்துட்டேன் போல…
அதுவும் வீட்டுக்குள்ள புது ஆள் வந்திருக்கறதை மோப்பம் பிடிச்சிகிட்டு மேல போயிருச்சி போல... நான் சத்தியமா கவனிக்கலம்மா...என்னை மன்னிச்சிடுங்க தெரியாம பண்ணிட்டேன் அதுக்காக என்னை வேலையை விட்டு நிறுத்திடாதீங்க…
இந்த வேலையை நம்பி தான் நானும் என் பிள்ளைகளும் வையிறார கஞ்சி குடிச்சுட்டு இருக்கறோம் என்று காலில் விழுந்து கெஞ்சவும்…
சரி... சரி... இனி இந்த மாதிரி நடக்காத மாதிரி பாத்துக்கோ என்கிட்ட சொன்ன மாதிரி பூபதிகிட்ட சொல்லிட்டு இருக்காத... நான் உன்னை மன்னிச்ச மாதிரி அவன் உன்னை மன்னிக்க மாட்டான்... என்றவர் போ...உள்ள போய் வேலையை பாரு என்று அனுப்பினார்…
பிறகு சந்தேகமாக முத்துவை திரும்பிப் பார்த்தவர்...என்ன மாமா காலைல இருந்து இங்கேயே சுத்திட்டு இருக்கீங்க வீட்டுக்கு போகலையா என்று கேட்டார்…
இதுவும் வீடு தானே என் அக்காவும் என் தம்பியும் வாக்கப்பட்ட வீடு ... இங்க நாங்க இருக்கறதுல உனக்கு என்ன பிரச்சினை என்று பாலன் பின்னால் இருந்து குரல் கொடுக்கவும்…
இல்ல மாமா…ஃபேக்டரி போகலையான்னு கேக்க வந்தேன்...வார்த்தை தவறி இப்படி கேட்டுட்டேன் என்று பற்களை கடித்தபடியே கூறியவர் உள்ளே சென்றார்.
அறைக்குள்ளாக இருந்த ராகா சற்று தெளிவடைந்து இருந்தாள்... அவளின் பொருட்கள் எல்லாம் மேலிருந்து கீழே மாற்றப்பட்டு விட்டது... டாமி பிராண்டியதில் ஆடைகளில் அங்கங்கே சிறு சிறு ஓடைகளில் இருக்க அவள் இலகுவாக அணிந்து கொள்ள ஆடைகளை எடுத்து வைத்தான்…
காயங்களை எல்லாம் ஆராய்ந்து... அதற்கு முதல் உதவியும் செய்திருந்தான்...காலில் கூட வலி நிவாரணி களிம்பை தேய்த்து விட்டிருந்தான்...
எதுக்கும் ஒரு முறை டாக்டர் வந்து பார்த்திடட்டும் ராகா நாயோட நகங்கள் ரொம்ப விஷமானது இன்பெக்ஷன் ஆயிடுச்சின்னா வம்பாயிடும்... லேடி டாக்டர் தான் வருவாங்க...டோன்ட் வொரி...என்றபடியே அவனது கண்களுக்கு தெரிந்த நகக்குழிகளை ஈரத்துணி கொண்டு துடைத்துவிட்டான்.
நிதானமான குரலில் நான் என் அப்பாவை விட்டு இவ்வளவு தூரம் வந்ததே மிகப் பெரிய தப்புன்னு எனக்கு இப்போதான் புரியுது பூபதி ...என்னதான் நீ என்ன நல்லா பார்த்துகிட்டாலும் இந்த இடத்துல நான் ஒரு உண்மையை சொல்லியே ஆகணும் நான் என் அப்பாவை ரொம்ப மிஸ் பண்றேன்…
அவர் பக்கத்துல இருந்து வரைக்கும் எனக்கு ஒரு சின்ன காயம் கூட ஆனதில்லை முதல்முறையா அவரை விட்டு தள்ளி வந்தேன்…
நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு ஒரு ஆக்சிடெண்ட் இப்போ நினைச்சாலும் எனக்கு உடம்பெல்லாம் நடுங்குது தெரியுமா... அந்த நாய் எப்படி என் மேல பாஞ்சது தெரியுமா... இந்த மாதிரி ஆக்ரோஷமான நாய்களை எப்படித்தான் வீட்ல வளர்த்தறீங்களோ எனக்கு தெரியல என்றவள்…
மௌனமாக சில வினாடிகள் அழுதாள்... அவள் கூறுவதில் இருந்த உண்மை பூபதிக்கு உரைத்ததால் எதுவும் பேசாமல் காயங்களை துடைத்தபடியே அமர்ந்திருந்தான்…
சற்று நேரம் கழித்து பூபதியின் முகத்தைப் பார்த்தவள்... என் அப்பா வேலை விஷயமா நிறையா நேரம் ஹாஸ்பிடல்ல தான் இருப்பாங்க ...நிறைய நாள் நான் தனியா தான் இருந்திருக்கேன் ஆனா அப்போல்லாம் நான் தனியா இருந்ததா பீல் பண்ணினதே இல்ல... ரொம்ப செக்யூர்டா பீல் ஆகும்…
ஆனா இந்த வீட்டுல இத்தனை பேர் இருந்தும்...என் பக்கத்தில நீ இருந்தும் கூட எனக்கு ஏன்னு தெரியலை ரொம்ப லோன்லியா பீல் பண்ணறேன்...இன்செக்யூர்டாவும் இருக்கு என்று கூறி முடிக்கும் பொழுது முற்றிலும் உடைந்திருந்தாள்...எவ்வளவு அழுத்தி துடைத்தாலும் கண்ணீர் நின்றபாடில்லை…
ஏன் இப்படி பேசற... வந்து இன்னும் முழுசா ஒரு நாள் கூட முடியல அதுக்குள்ள அப்பாவை தேடினா
எப்படி...?
ஏதோ தெரியாம ஒரு ஆக்சிடெண்ட் நடந்துருச்சு..
யாருமே எதிர்பார்க்காத ஒன்னு...அதுக்காக இன்செக்யூர்டா ஃபீல் பண்றேன்னு சொல்றதெல்லாம் பெரிய வார்த்தை இல்லையா …
கொஞ்சம் பேசறதுக்கு முன்னாடி யோசிச்சி பேசு... உனக்கு பிராமிஸ் பண்றேன்... உனக்கு இனி அதுபோல ஒரு பீல் வராத அளவுக்கு நான் நடத்துகிறேன்…என்றவனிடம்..
நான் அப்பாவ தேடறதுக்கு காரணம் இருக்கு... என்னோடு இத்தனை வருஷத்துல நான் என்னைக்குமே ஒரு வார்த்தை மட்டும் யார்கிட்டயுமே யூஸ் பண்ணினது இல்லை ...என் அப்பா பண்ணவிட்டதும் இல்ல...ஆனா இப்போ...என்றவள் குலுங்கி அழ ஆரம்பித்தாள்…
என்ன அந்த வார்த்தை என்று கேள்வியாக நோக்கியவனை பார்த்து அவளின் வயிற்றின் மீது கைகளை வைத்து எனக்கு ரொம்ப பசிக்குது பூபதி...யாரை கேட்டா எனக்கு சாப்பாடு தருவாங்கன்னு சொல்லு...இல்லனா நீயாவது எனக்கு சாப்பிட ஏதாவது வாங்கித்தாயேன்...என்று கேட்கவும்…
வினாடியில் அவனது இதயம் துடிப்பதை நிறுத்துத்தியது... சுவாசக்குழாய் தீடிரென வேலைநிறுத்தம் செய்தது…
மூச்சு விட சிரமப் பட்டவன் எழுந்து நின்று கை கொண்டு நெற்றியை அழுத்திப் பிடித்தபடி வாயின் மூலமாக வேக வேகமாக மூச்சை இழுத்து வெளியே விட்டான்... கண்களில் நொடியில் குளம் கட்டியது…
சாரி ...சாரி ராகா...நான் கொஞ்சம் கூட யோசிக்கவே இல்ல ...நீ என்னை நம்பி வந்த ஒரு நாளிலேயே உன்னை பசியில வாடவிட்டுட்டேன்னு நினைக்கும் போது என்னாலயே என்னை மன்னிக்க முடியல... என்னை மன்னிச்சிடு என்றவன் வேகமாக டைனிங் டேபிளுக்கு சென்று மூடி வைத்த பாத்திரங்களை திறந்து பார்க்க எல்லாமே காலி... அனைவருமே சாப்பிட்டுவிட்டு சென்றதற்கான அடையாளம் அங்கு காணப்பட்டது.
அவனுக்கு குடும்பத்தாரின் மீது அப்படி ஒரு கோபம் வந்தது...ஒருவர் கூட ராகாவைப் பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை புதிதாக ஒருத்தி வீட்டிற்குள் வந்திருக்கிறாள் அவள் இன்னும் சாப்பிடவில்லை...அவளை கூப்பிட வேண்டும் என்றோ….இல்லை அவளுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்று கூட யாருக்கும் தோண்றவில்லையே...என நினைத்தவன் சமையலறைக்குள் சென்று அங்கு மீதம் இருந்ததை ராகாவிற்காக எடுத்து வந்தான்.
உணவு தட்டை எடுத்தபடி ராகாவின் அறைக்குள் வர ஆடை மாற்றியிருந்தவள் காலைத் தாங்கியபடி கட்டிலில் ஏற முயற்சித்துக் கொண்டிருந்தாள்…முகம் நன்கு தெளிவு பெற்றிருந்தது...அழுததற்கான அடையாளம் துளிகூட இல்லை...
வேகமாக வந்து அவளுக்கு உதவியவன்...சாப்பிடு என்றபடி தட்டை அவளது கையில் கொடுத்தான்.
வாங்க மறுத்தவள்...இல்ல வேணாம்...எப்போ என்னை லண்டன் கூட்டிட்டு போற...நீ வரலன்னா பரவால்ல நான் போறேன்... டிக்கெட் மட்டும் அரென்ஞ் பண்ணு... ஊருக்கு போனதும் நீ எனக்கு செலவு பண்ணின எல்லா பணத்தையும் போட்டு விடறேன்…
என்ன ராகா பேச்சி இது...இப்படி எதுமே சாப்பிடாம உன்னை திருப்பி அனுப்பவா இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்தேன்...அதும் பணம் போட்டு விடறேன்னு சொல்லற…இந்த வார்த்தை என்னை காயப்படுத்தும்னு தெரியலையா…என்றவன் சற்று கோபமாக குரலை உயர்த்தி
மன்னிச்சிக்கோ என் வீட்ல உன்னை சரியா கவனிக்காதது தப்பு தான்...உனக்கு சாப்பாடு குடுக்காம விட்டது மிகப்பெரிய தப்பு...ஒத்துக்கறேன்... ஒரே ஒரு வாய்ப்பு கொடு எல்லாத்தையும் சரி செய்றேன்... வாய்ப்பு கொடுக்காம எல்லாரையும் குற்றம் சாட்டிட்டு நீ லண்டன் போறதை என்னால ஓத்துக்க முடியாது உன்னை கெஞ்சி கேட்டுக்குறேன் ப்ளீஸ் இப்போ சாப்பிடு….என்று கெஞ்ச ஆரம்பித்தான்.
அவனின் கெஞ்சலை தாங்கிக்க முடியாதவள் உணவை எடுத்து வாயில் வைத்தாள்...பிறகு உனக்கு எனக்கேட்டாள்.
இல்ல நீ சாப்பிடு…. எனக்கு பசிக்கல.
எப்படி உனக்கு பசிக்காம இருக்கும்... எனக்கு பசிக்கும்போது உனக்கும் பசிக்கும் தானே நீயும் சாப்பிடு...நிறையா இருக்கு ஷேர் பண்ணிக்கலாம் என்று அவன் பக்கமாக ஸ்பூனை நீட்டினாள்.
இப்பொழுது அவன் வேண்டாம் என மறுத்தால் ராகாவும் சாப்பிட மறுத்து விடுவாளோ என பயந்தவள் தட்டையும் ஸ்பூனையும் அவள் கையிலிருந்து வாங்கி இவன் ஒரு ஸ்பூனும் அவளுக்கு ஒரு ஸ்பூனுமாக மாறி மாறி சாப்பிட ஆரம்பித்தார்கள்…
கனத்த மௌனம் அறைக்குள் நிலவியது.. ராகாவின் வயிறு நிறையவும் சூழ்நிலையின் தாக்கம் உரைத்தது... ராகாவிற்கு இப்போதைய நிலை பிடிக்கவில்லை... இவன்தான் வேண்டும் என்று பெற்ற தந்தையை மீறி வந்தாகிவிட்டது …
தெரியாமல் நடந்த ஒரு அசம்பாவிதத்தை காரணம் காட்டி இவனை காயப்படுத்தி விட்டு செல்வது தவறு என புரிய ஆரம்பித்தது...அவளே சூழ்நிலையை இயல்பாக்கும் விதமாக பேச்சை ஆரம்பித்தாள்.
பூபதி...பூபதி...என்னைப் பாரேன்…
அவள் ஊருக்கு செல்கிறேன் என்று கூறியதும்... பணத்தைத் திருப்பித் தருகிறேன் என்றதும் மனதளவில் மிகவும் காயப்படுத்திருந்தது அதனால் அந்த நேரத்தில் அவளிடம் பேசுவதை தவிர்த்தான்...கோபத்தில் அவனும் அவளை காயப்படுத்த விடக் கூடாது என்று நினைத்தான்.
பூபதி உன்னைத்தான் கூப்பிடறேன்...காது கேக்கலையா…?
ம்ம்...சொல்லு...என்று தரையைப்பார்த்தே கூறினான்.
என்னைப் பார்த்துப் பேசமாட்டியா…?
என்ன விஷயம் என்று அவளின் முகத்தைப் பார்த்து கேட்டான்.
ம்ம்... நான் வந்ததிலிருந்து ஒரு விஷயத்தை இந்த வீட்ல நோட் பண்றேன்... கேட்கவா…என்றவள் அவனின் முகத்தை பார்த்து
சரியான்னு தெரியல...தப்புன்னா மன்னிச்சிக்கோ…
பீடிகை போடாம விஷயத்தை சொல்லு…
இந்த வீட்ல அங்கிள் ஆன்டீஸாவே இருக்காங்க...ஏன் குட்டிஸ்க யாரும் இல்லையா…?
உன் அத்தை மாமாங்களை பத்தி சொன்ன ஆனா அவங்க பசங்க பத்தி எல்லாம் எதுவுமே சொல்லலையே…
இருந்தா தான சொல்ல முடியும்…
புரியல பூபதி…
யாருக்குமே குழந்தைக கிடையாது…
என்ன ஐஞ்சி மாமா இருக்காங்க...ஒருத்தருக்கு கூட குழந்தை இல்லையா ஆச்சர்யமா இருக்கே…எப்படி இது சாத்தியமாகும்…
ஆனா இங்க சாத்தியம் ஆயிடுச்சு அதுதான் நிஜம்... என்னோட அம்மா கூட பிறந்து ரெண்டு மாமாவும் சரி என் பெரிய தாத்தாவோட பிள்ளைகளான ரெண்டு மாமாவும் சரி போகாத கோயில்கள் கிடையாது வேண்டாத தெய்வங்கள் கிடையாது... மருத்துவமனையும் அப்படித்தான் ஆனால் ஏனோ அவங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை…
அதனால அத்தைக நாலு பேருமே எதையும் கண்டுகிட்டது இல்ல...எல்லா விஷயத்திலும் ஓதுங்கி நிப்பாங்க... என்னோட அம்மாவும் பலதடவை சொல்லிப் பார்த்தாச்சு ஆனா அவங்க கண்டுக்கறது இல்லை... இன்னைக்கு கூட அதனால தான் உன்னை சரியா கண்டுக்காம விட்டுட்டாங்க….
அப்போ நீ இந்த வீட்டோட செல்ல குட்டி இல்லையா என்றவள்...ஆமா உன் லீஸ்ட்ல ஒரு அத்தையை விட்டுட்ட... மறந்துட்டியா இல்ல அவங்க தனி பேமலியா இருக்காங்களா…?
ரெண்டுமே இல்ல ...அவங்க இப்போ இந்த உலகத்திலேயே இல்லை..
என்னோட கடைசி அத்தை மட்டும் தான் அதிசயமா கன்சிவ் ஆனாங்களாம்... டெலிவரிக்காக அட்மிட் ஆன ஹாஸ்பிடல்ல ஏற்பட்ட ஃபயர் ஆக்சிடெண்ட்ல குழந்தையோட அவங்களும் இறந்து போயிட்டாங்களாம்... அந்த குழந்தை இருந்திருந்தா அது தான் இன்னைக்கு இந்தப் வீட்டோட வாரிசா இருந்திருக்கும்... அந்த குழந்தை விட்டுக் கொடுத்ததால நான் இங்க முடிசூடா மன்னனா இந்த வீட்டுக்குள்ள சுத்திட்டு இருக்கேன்…
ம்ச்...பாவம்ல அந்த அத்தை என்று நீஜமாகவே வருந்தினாள்...பிறகு எல்லாம் சரி உன் பெரிய தாத்தாவும் உன் தாத்தாவும் சேர்ந்து இருக்காங்க இதுல இறந்து போன குழந்தை எப்படி உனக்கு விட்டுக் கொடுத்ததுன்னு சொல்லுவ ...இந்த சொத்துல உனக்கும் சம பங்கு இருக்கு தானே அதனால அப்படி சொல்லாதே என்று காதலனை தூக்கிபிடித்து பேசினாள்.
வாய் விட்டு சிரித்தவன்... காமெடி பண்ணாத ராகா என் குடும்ப கதை எல்லாம் கேட்டா உனக்கு ஒரு நாள் பத்தாது இருந்தாலும் சிம்பிளா சொல்றேன் கேட்டுக்கோ …
என்னோட பரம்பரையிலேயே யாருக்குமே ஒரு குழந்தைக்கு மேல் பொறந்ததே கிடையாதாம்... என் கொள்ளுத் தாத்தாவுக்கு மட்டும் தான் அதியமா ரெண்டு பசங்க பிறந்து இருக்காங்க….ஒன்னு என் தாத்தா...இன்னொன்னு பெரிய தாத்தா…
அதுல என்னோட தாத்தா ரொம்ப மோசம்... மது,மாதுன்னு எல்லாத்தையுமே விட்டிருக்கிறாரு ...இப்ப கூட பாத்தல்ல... ஒன்னுக்கு ரெண்டுன்னு ஒரே வீட்டில் வச்சி மெயின்டெய்ன் பண்ணிட்டு இருக்காரு…
அவரோட சின்ன வயசுலயே அளவுக்கு அதிகமான செலவு... அது மட்டும் கிடையாது சொத்து பிரிக்கச் சொல்லி பயங்கரமான சண்டை…
அதனால அவர் ஆசைப்பட்டபடி எல்லாத்தையும் கொடுத்து அனுப்பீட்டாங்க…. ஆனா அதையெல்லாம் பல பொண்ணுங்க கிட்ட போய் கொஞ்சம் வருஷத்திலேயே காலி பண்ணிட்டு ஒண்ணு இல்லாம மறுபடியும் இங்க வந்துட்டாரு….
கோபப்பட்ட என் கொள்ளுத் தாத்தா அவரை வீட்டை விட்டே அடித்து விரட்டிட்டாரு...