20.
பாவம் பார்த்த என் பெரிய தாத்தா மறுபடியும் என் தாத்தாவை இந்த வீட்டுக்கே கூட்டிட்டு வந்து அவரோட வச்சிகிட்டாரு…
இங்கேயும் என்னோட சின்ன தாத்தா பயங்கரமான அட்டகாசம் தான் பண்ணுவாராம்…
ஆனா என் பெரிய தாத்தா எல்லாத்தையுமே ரொம்ப பொறுமையா ஹாண்டில் பண்ணுவாரு போல இருக்கு…
கல்யாணம் பண்ணினா அடங்குவாருன்னு நினைச்ச பெரிய தாத்தா என் தாத்தாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு எங்களோட டீ எஸ்டேட்ல இருக்கிற ஃபார்ம் ஹவுஸ்ல தங்க வச்சி இருக்காங்க அங்க தான் என்னோட அம்மாவும் ரெண்டு மாமாவும் பிறந்து இருக்காங்க...
அங்கேயும் என் தாத்தா எல்லாரையும் பயங்கரமா அதிகாரம் பண்ணுவாராம்... லாபம் எதுக்குமே கணக்கு காட்டாம கண்டபடி செலவு செஞ்சுட்டு இருந்திருக்காங்க …
என் பாட்டி ரொம்ப பொறுமைசாலி அதனால எல்லாத்தையும் சகிச்சிகிட்டு தாத்தா கூட இருந்திருக்காங்க…
இந்த சொத்துக்கள் எல்லாமே ஏற்கனவே என் பெரிய தாத்தா பேர்ல இருந்ததால என் தாத்தாவால ஒரு கட்டத்துக்கு மேல செலவு பண்ண முடியாம இருந்திருக்கு…
அதனால என்னோட கொள்ளுத் தாத்தா கிட்ட வந்து நச்சரிக்க ஆரம்பிச்சிருக்காங்க மறுபடியும் மொத்த சொத்துல இருந்து பாதி சொத்து பிரிச்சு கொடுங்கன்னு….
ஆனா அதுக்கு துளிகூட என் கொள்ளுத் தாத்தா ஒத்துக்கவே இல்ல…ஏற்கனவே மொத்த சொத்தை இரண்டா பாகம் பிரிச்சு பெரிய தாத்தாவுக்கும் என் தாத்தாவுக்கும் கொடுத்தாச்சு…
என் தாத்தா எல்லாத்தையும் விட்டுட்டாரு….இப்போ இருக்கிறது எல்லாமே பெரிய தாத்தாவோட சொத்துக்கள் தான்…
மறுபடியும் அதிலிருந்து பாதி கேட்டா எப்படி என் கொள்ளு தாத்தா கொடுப்பார்.
பொதுவாவே அவர் தெரியாமகூட ஒத்த ரூபாயை இழக்க மாட்டாராம்... அழியும்னு தெரிஞ்சு என் தாத்தா கையில மறுபடியும் சொத்தை குடுப்பாரா... அதனால பிடிவாதமாக கொடுக்க மாட்டேன்னு மறுத்துட்டார்…
அதனால என் தாத்தா ஊர்ல இருந்து பெரிய மனுஷங்க எல்லாம் வரவச்சி பேசியிருக்காங்க... எனக்கும் மூணு குழந்தைகள் இருக்காங்க...அதிலேயும் ஒரு பெண் குழந்தை வேற இருக்கு... இன்னும் எத்தனை நாளைக்கு என்னோட செலவிற்கு அண்ணன் கையையும் அப்பா கையையும் எதிர்பார்த்து இருக்க முடியும் பேரு தான் ஜமீன் பரம்பரை ஆனா நான் இன்னும் பிச்சைக்காரன் போல தான் வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கேன்னு சபை முன்னாடி ரொம்ப கண்கலங்கி பேசிருக்காரு…
வந்து இருக்கிறவங்க எல்லாருமே பெரியதாத்தாகிட்டயும் கொள்ளுத் தாத்தா கிட்டேயும்... உங்க குடும்பத்துக்கு புத்தி சொல்ற அளவுக்கு நாங்க எல்லாம் பெரிய மனுஷங்க கிடையாது ஆனாலும் வீட்டு பிரச்சினையை உங்களோட வெச்சுக்கோங்க நீங்களே உங்க சின்ன பையனுக்கு என்ன செய்யணுமோ பார்த்து செய்யுங்கனு பொறுப்பை ரெண்டுபேர்கிட்டயும் ஒப்படைச்சிட்டு போயிட்டாங்க…
என் கொள்ளுத் தாத்தாவிற்கு ஒரு யோசனை காலங்காலமாக காப்பாத்திட்டு வந்த ஜமீன் சொத்தையும் குடும்ப மானத்தையும் தன்னோட சின்ன பையன் ஒண்ணும் இல்லாம பண்ணிட்டா என்ன செய்யறது…?
வருங்கால சந்ததிகளுக்கு எதுமே இல்லாம போயிடுமேன்னு யோசித்து ஒரு முக்கியமான முடிவை எடுக்கறாங்க…
லாபம் கொழிக்கற டீ எஸ்டேட் அது சம்மந்த பட்ட ஃபேக்டரி...இன்னும் லாபம் தர்ற தொழில்கள் எல்லாத்தையும் தன்னுடைய பேர பசங்களோட வாரிசுகளுக்குன்னு எழுதி வைச்சிட்டாரு...நிர்வகிக்கற பொறுப்பை என் தாத்தா பெரிய தாத்தா ரெண்டு பேருக்கும் கொடுத்துட்டாரு...ஆனா முக்கிய முடிவு எது எடுக்கிறதா இருந்தாலும் என் பெரிய தாத்தா அப்படிங்கிற மாதிரியும் பண்ணி வைச்சுட்டாங்க...
அதுக்கப்புறம் என் பெரியதாத்தா எங்க தாத்தாவை இங்கேயே வரவச்சிட்டாங்க...ஆறு குழந்தைகளும் உடன்பிறப்பு போல ஒத்துமையா வளர ஆரம்பிச்சாங்க…
இந்த சமயத்துல தேயிலை தோட்டத்துக்கு வேலைகளுக்கு வந்திருந்த என்னோட சின்ன பாட்டியை தாத்தா கரெக்ட் பண்ணிட்டாரு... தாத்தா கரெக்ட் பண்ணினார்னு சொல்லறதை விட என் சின்ன பார்ட்டி ஸ்கெட்ச் போட்டு என் தாத்தாவை தூக்கிட்டாங்கன்னு சொல்லலாம்…
ஆனா என்பாட்டி போல பொறுமைசாலி கிடையாது அந்த பாட்டி...என் தாத்தாவோட கொட்டத்தை ஃபுல்லா அடக்கி அவங்க கன்ட்ரோலுக்குள்ள கொண்டு வந்துட்டாங்க…
ஜமீன் வம்சத்துல இல்லீகல் அஃப்பேர் இருக்கறது காமன் தான்...ஆனாலும் என் தாத்தா சின்ன பாட்டிடோட செட்டில் ஆகவும் என்னோட பாட்டி ரொம்ப தவிச்சு போயிட்டாங்க ...மூன்று குழந்தைகளையும் வெச்சுக்கிட்டு புருஷன் இல்லாத வீட்டில் எப்படி இருக்கிறதுன்னு குழந்தைகளை கூப்பிட்டு கிட்டு அவங்களோட பிறந்த வீட்டுக்கு போக தயாராகியிட்டாங்க…
அப்படி என் பாட்டி பிறந்த வீட்டுக்கு போய்ட்டா இந்த ஜமீன் மானம் போய்டும்னு…என் பெரிய தாத்தா கொள்ளுத் தாத்தா எல்லாருமே போய் என் தாத்தாவை கண்டித்து இருக்காங்க என்னோட பாட்டியோட வந்து இருக்க சொல்லி புத்தி சொல்லி இருக்காங்க ஆனா என்னோட தாத்தா வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க... சின்ன பாட்டியும் என் தாத்தாவை விட்டு போக மாட்டேன்னு சொல்லிட்டாங்க வேற வழியே இல்லாம என் அம்மாவுக்காகவும்,மாமாங்களுக்காகவும் சின்ன பாட்டியையும் தாத்தாவையும் இங்க கூட்டிட்டு வந்திருக்காங்க…
சின்ன பாட்டிக்கு அப்பா,அம்மா கிடையாது...
மூன்று தம்பிகள் மட்டும் தான்... அவங்க இங்க வரும்போது ஆதரவில்லாத தம்பிகளும் என்னோடுதான் இருப்பாங்கன்னு இங்கே கூட்டிட்டு வந்துட்டாங்க அதுக்கு அப்புறமா என்னோட அம்மா வளரவும் அவங்க கடைசி தம்பிக்கு என் அம்மாவை கல்யாணம் செஞ்சி வச்சி இங்கேயே என் அப்பாவோட தங்க வச்சிகிட்டாங்க...அப்புறமா நான் பிறந்திருக்கேன்…
இந்தப்பக்கம் சொல்லிவைத்தது போல என்னோட பெரிய தாத்தாவோட ரெண்டு மாமாங்களுக்குமே படிப்புங்கறது சுத்தமா வரல….குழந்தைகளும் இல்ல...அதனால தாத்தாவுக்கும் பாட்டிக்கும் நிறைய கவலை... படித்திருந்தாலாவது கணக்கு வழக்குகளை பார்த்து சொத்துக்களை காப்பாத்துவாங்க... அதுதான் இல்லாம போயிடுச்சு... அட்லீஸ்ட் வாரிசுகளாவது வந்து சொத்துக்களை பராமரிப்பாங்கன்னு பாத்தாங்க அதுவும் இல்லை...அந்த சமயத்துல அவங்களோட மூனாவது பையன் அதாவது எங்க ராஜா மாமாவை நிறையவே எதிர்பார்த்து இருக்காங்க….அவர், படிப்பு,
விளையாட்டுன்னு எல்லாத்துலேயும் டாப்…
வெளியூர்,வெளிநாடுன்னு போய் படிச்சிட்டு வந்திருக்காங்க…
இங்கே என் சின்ன பாட்டிகளோட தம்பிக பயங்கரமான அட்டகாசம்... என் அப்பாவையும் சேர்த்துதான் சொல்றேன் ….என்னோட மாமாங்க எங்க ரெண்டு பேருக்கும் பெரிய அளவில் அறிவு இல்லை சொல்றதை செஞ்சுட்டு இருக்கற டைப்... இந்த சமயத்துல என்னோட தாத்தாவோட மனசும் கூட மாற ஆரம்பிச்சிருச்சு…
ஒரு கொள்ளுதாத்தாவும் பாட்டியும் போய் சேர்ந்துட்டாங்க …
இப்ப இரண்டு தாத்தாங்களும் இருக்காங்க ...அவங்களால முதல்ல போல தொழில்களை கவனிச்சிக்க முடில... பெத்த பசங்க நாளுபேருக்குமே சொல்லி வச்சது போல பெருசா சுய அறிவு இல்ல...
என் அம்மா புத்திசாலி… ஆனாலும் வேற வீட்டுக்கு போன பொண்ணு... அதனால அவங்களை எதிர்பார்க்க முடியாது .
ராஜா மாமா வந்து எல்லாம் சரி பண்ணுவாங்கன்னு எதிர்பார்த்தார்த்தாங்க... அவரும் ரெண்டு தாத்தாங்க எதிர்பார்த்ததை கொஞ்சம் கூட பொய்யாகவே இல்லை…
முடிச்சுட்டு வந்து கொஞ்ச நாளிலே இங்க இருக்கிற அத்தனை பிரச்சனைகளையும் சரி பண்ண ஆரம்பிச்சிட்டாரு….
அதிகமா ஆட்டம் போட்ட வேலையாட்கள்... என்னோட பெரியவோட கொட்டங்கள்னு அத்தனை பேரோட ஆட்டத்தையும் அடக்கிருக்காரு…
அந்த சமயத்துலதான் எஸ்டேட்டை சுத்தி பாக்க போகும்போது அங்க தேயிலை பொறிச்சிட்டு இருந்த என்னோட அத்தையை பாத்துக்கங்க...அவங்களை காதலிச்சு கல்யாணமும் பண்ணிக்கிட்டாங்க …
மொதல்ல எங்க குடும்பம் அவங்க காதலையும்,கல்யாணத்தையும் ஏத்துக்கவே இல்ல... எப்படியோ போராடி கல்யாணம் செஞ்சுக்கிட்டு எஸ்டேட்லேயே இருந்திருக்காங்க…
சொத்துபத்து எதுவுமே வேணாம்னு சொல்லிட்டு என் அத்தை கூட ரொம்ப சந்தோஷமாக குடும்பம் நடத்திருக்கிறாரு...அவங்களோட சந்தோஷத்துக்கு அடையாளமா கொஞ்ச நாள்லயே என்னோட அத்தை கன்சீவ் ஆயிட்டாங்க...
அது தெரிஞ்சதுமே... பாட்டி தாத்தாவோட கோபம் எல்லாமே காணாமப் போயிடுச்சு….
ஜமீனோட வாரிசு ஒரு சாதாரண எஸ்டேட்ல பிறக்க கூடாதுன்னு அங்கிருந்து இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க …. எப்படியோ வாரிசே இல்லாமல் இருக்கிற குடும்பத்துக்கு வாரிசு வந்தாச்சு ராஜா மிகப் பெரிய புத்திசாலி ராஜாக்கு பிறக்கப் போற குழந்தையும் அவனைப்போல புத்திசாலியா தான் இருக்கும்னு மொத்த குடும்பமும் என் அத்தையை தலையில வச்சு கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க...
ஆனா என் அத்தைக்கு ஏனோ இங்க இருக்க பிடிக்கல…. ஏதோ ஒரு அசௌகரியத்தை உணர்றாங்க... அது என்னன்னு அவங்களுக்கு வெளிப்படையா சொல்ல தெரியல…
என் மாமா கிட்ட இங்க இருக்க பிடிக்கலன்னு சொல்லி இருக்காங்க …
மாமா வேலை விஷயமா அடிக்கடி வெளியூர் ,வெளிநாடு,சுத்திட்டு இருந்ததால வேற வழி இல்லாம இங்கேயே இருன்னு கட்டாயப்படுத்திருக்காங்க…. அத்தை கேட்ட எல்லாத்தையும் செஞ்சு கொடுத்து இருக்காங்க ஆனாலும் அடிக்கடி டென்ஷனாகி கத்து வாங்கலாம்...பயந்து அத்தையோட அம்மாவை கூட இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க…
ஆனா டெலிவரி நாள் நெருங்க நெருங்க என்னோட அத்தை ரொம்பவே பயப்பட... ஆரம்பிச்சுட்டாங்க எனக்கும் என் குழந்தைக்கும் ஏதோ ஆகப்போகுது... இந்த குழந்தையை எப்படி நான் உங்களுக்கு பெற்றுக்கொடுக்க போறேன்னு தெரியலையே அப்படின்னு ரொம்ப கலக்கமா எல்லார்கிட்டயும் பேசுவாங்களாம்...
இந்த சமயத்துல மாமாவுக்கு தவிர்க்கமுடியாத ஒருவேலை வந்திருக்கு அதுக்காக அவங்க வெளிநாடு போக வேண்டிய சூழ்நிலை ...திரும்பி வர எப்படியும் பத்து, பதினைந்து நாள் ஆகும்னு சொல்லி இருக்காங்க ...ஆனா அத்தை அவங்களை விட்டுட்டு இருக்கவே மாட்டேன்னு பயங்கரமா சண்டை போட்டு இருக்காங்க...சாப்பிட மாட்டேன்னு அடம் பண்ணியிருக்காங்க
பயந்த மாமா டெலிவரிக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே இந்த ஊரில் இருந்த ஒரு பெரிய ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிட்டு போய் இருக்காங்க…
ஆனால் அவர் இங்கு திரும்பி வரும்போது அந்த ஆஸ்பத்திரி ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்தால அத்தை,வயிற்றில இருந்த அவங்க குழந்தை,அவங்க அம்மாவோட சிலபேரும் சேர்த்து இறந்துட்டாங்க...
மனைவியும் குழந்தையும் இறந்ததால
என்னோட சின்ன மாமாவுக்கு மிகப்பெரிய குற்ற உணர்ச்சி உண்டாயிற்று …
நாம மனைவியோட இருந்திருந்தா ஒரு வேளை அவளைக் காப்பாற்றி இருக்கலாமேங்கற மாதிரி... அதனால வெளியூர் வெளிநாடு போறதை எல்லாத்தையுமே குறைச்சிக்கிட்டார்…
பழையபடி என்னோட பெரியப்பாவோட ஆட்டம் தொடங்கிடுச்சி…. தட்டிக்கேட்க யாருமில்லை... அதனால பெண் வாரிசுக்கு பிறந்த என்னை படிக்க வச்சா எல்லாத்தையும் நான் பொறுப்பா பார்த்துப்பேன்னு நினைச்சாங்க…
எனக்கு ரொம்ப இம்பார்டென்ட் கொடுக்க ஆரம்பிச்சாங்க... நானும் படிச்சு முடிச்சுட்டேன் இனி என் சின்ன மாமா மாதிரி இங்க இருக்கிற எல்லா பிரச்சினையும் சரி செய்யனும்... இந்த கதையை அடிக்கடி என்னோட பாட்டி சின்ன வயசுல இருந்து என்கிட்ட சொல்லி சொல்லி வளர்த்ததால என் மைண்ட் ஃபுல்லா இந்த ஜமீனோட கௌரவம் சொத்து எல்லாத்தையும் காப்பாத்தனுங்கறது மட்டும்தான் இருந்தது…
எதிர்பார்க்காமல் நீயும் என் வாழ்க்கைகுள்ள வந்துட்ட...என் மாமா அத்தையை கவனிக்காம விட்டது மாதிரி நானும் உன்னை கவனிக்காம விட்டுடக்கூடாதுன்னு நீ கேட்டுகிட்டது போல உன்னை லண்டனிலேயே வெச்சு பாத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்...என்று அவன் பாட்டி மூலம் கேட்டு தெரிந்து கொண்ட கதையை கூறிமுடித்தான்…
நிஜமாவே உன் கடைசி மாமாவ பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு குழந்தை இல்லாம இருக்கிறது ஒரு வலின்னா... குழந்தையையும் மனைவியும் பறிகொடுக்கறது மிகப்பெரிய வலி.. அதைத் தாங்கிக்கிட்டு வாழறதே சாதனைதான்…ஆனாலும் அவருக்கு நீங்க எல்லாரும் சேர்ந்து
செகண்ட் மேரேஜ் பண்ணி வச்சிருக்கலாம்...என்று குறைபட்டாள்.
ம்ம்... அதுக்கான முயற்சியும் நடந்திருக்கு ராகா...
கொஞ்ச நாள் கழித்து மாமாவை ரெண்டாவது திருமணம் செஞ்சுக்க சொல்லி எல்லாருமே வற்புறுத்தி இருக்காங்க ஆனா மாமா அத்தையோட ஞாபகமா இந்த நிமிஷம் வரைக்கும் அதை பத்தி யோசிக்க கூட இல்லை…
இன்னுமே அவர் குழந்தை உயிரோட இருக்கறதா நம்பறாரு... அடிக்கடி குழந்தையை தேடிப்போறேன்னு கிளம்பிடுவாரு... அத்தையும் குழந்தைகளும் இறந்த அதிர்ச்சியில மனநிலை சரியில்லாம போயிடுச்சின்னு டாக்டர் சொன்னாங்களாம்... ட்ரீட்மென்ட்க்கு மாமா கொஞ்சம் கூட ஒத்துழைப்பு கொடுக்கல... அதனால அவர் போக்கிலேயே விட்டுடலாம்னு அவரை யாரும் கண்டுக்கறதில்ல…
ஆனால் என் மாமாவை நேர்ல பார்த்தாலோ பேசினாலோ அவர் மனநிலை சரியில்லாதவர்னு சொல்லவே முடியாது எனக்கெல்லாம் படிப்புக்கு எவ்ளோ அட்வைஸ் பண்ணி இருக்காங்க ...இதைச் செய்.. அதைச் செய்னு…லண்டன் போ...அங்க மேனேஜ்மென்ட் படின்னு அவரோட கைடுல தான் நான் படிச்சதே...இவ்ளோ தெளிவா இருக்கறவரை
எதை வச்சி டாக்டர்ஸ் மனநிலை சரி இல்லைன்னு சொல்றாங்கன்னு புரியல.
இப்போகூட எங்க போறதுன்னாலும் மாமா தனியாகவே போய்ட்டு வருவாங்க... செமையா கார் ஓட்டுவாங்க...மனநிலை சரியில்லாதவங்களால இப்படியெல்லாம் கூட போக முடியுமான்னு எனக்கு ரொம்ப ஆச்சரியம் தெரியுமா...
இந்த வீட்டுக்குள் இருக்கிற ஆடம்பரமான பொருட்கள் கலைநயம் மிக்க பொருட்கள், வாசலில் நிற்கற இம்போர்ட்டட் கார்ஸ் எல்லாமே என் மாமா வர வழைச்சதுதான்...இப்போ கூட திடீர்னு கணக்கு வழக்கெல்லாம் எடுத்து பாப்பார்பாராம்... அவர் பார்க்க ஆரம்பிச்சா அத்தனை பேரும் தெருச்சிடுவாங்களாம் அவ்ளோ பக்காவா பாப்பாராம்...என்றவன் சலிப்பான குரலில்…பாவம் என் பெரிய தாத்தாவும் பாட்டியும் இந்த கவலையில்லை ரூமுக்குள்ளேயே அடங்கிட்டாங்க... வீட்டுக்குள்ள நடக்கிறது எதுவும் சரியில்லாததால் என்னோட தாத்தாவும் பாட்டியும் கூட அடங்கிட்டாங்க... இப்போ எங்க வீட்டுல இருக்கிற எல்லா முடிவுகளையும் என்னோட சின்ன பாட்டி தான் எடுப்பாங்க அதை செயல்முறை படுத்தறது என்னோட ரெண்டு பெரியப்பாங்க... மத்தபடி என் அம்மா அப்பா இங்க இருக்குற எல்லாருமே எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதவங்களுக்கு சமம்..என்றவன்...சரி ராகா...நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு... நான் அம்மாவை பாத்துட்டு வரேன் என்றான்.
கைபிடித்து தடுத்தவள் இல்ல பூபதி நீ இங்கயே இரு...எங்கயும் போகாத…
இல்ல ராகா...யாராவது டாக்டருக்கு ஃபோன் செஞ்சாங்களான்னு பாக்கனும்...இல்லனா நான் ஃபோன் செய்யனும்…. உடம்பெல்லாம் அடிபட்டதால கண்டிப்பா நைட் பெயின் அதிகமாகும்...உன்னால தூங்க முடியாது…
பரவால்ல பூபதி நீ பக்கத்துல இரு...வலி இருந்தாலும் தாங்கிப்பேன்...தனியா இருக்க பயமாயிருக்கு…
பயம் எதுக்கு ராகா... தெரியாம நாய் உள்ள வந்திடுச்சு….இனி எதுவுமே என் அனுமதியில்லாம உன்கிட்ட வராது...நைட் கூட உன்ரூம் முன்னாடியே என் பெட்டை போட்டுகறேன்...பயமில்லாம இரு இப்போ வர்றேன் என்றபடி வெளியே சென்றான்.
அவன் கண்விட்டு மறையும் வரை பார்த்தவள் பெருமூச்சை விட்டபடி கண்மூடினாள்.. பிரியாவிடம் பேசனால் பரவாயில்லை எனத்தோன்றியது...பூபதி வந்ததும் அவனது ஃபோனை வாங்கி பேசவேண்டும் என்றும் நினைத்தாள்.
ராகாவின் அறையை விட்டு வெளியே வந்த பூபதி நேராக தாயின் முன்பு சென்று நின்றான்.
அவனைக் கண்டதும் காமாட்சி என்ன பூபதி ஏதாவது வேணுமா எனக் கேட்டார்.
பதில் கூறாமல் அவரையே முறைத்துக் கொண்டிருந்தான்.
எதற்காக மகன் தன்னை இப்படி முறைக்கிறான் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே என்னாச்சு…? ஏன் இவ்வளவு கோவமா இருக்க…? ...அம்மா மேல ஏதாவது கோபமா என்க்கேட்டபடி அவனின் கன்னத்தை தொட வந்தார்.
கைகளை பட்டென்று தட்டிவிட்டவன்
... ஏன்மா ராகாவிற்கு சாப்பாடு கொடுக்கல என்று கேட்டான்.
என்னடா சொல்லற...நீ துணிகடைக்கு போகும் போது சொல்லிட்டு போனது போல கொஞ்ச நேரத்திலேயே அவ ரூம்க்கு சாப்பாடு குடுத்துவிட்டனே…
யார்கிட்ட குடுத்துவிட்டிங்க…நீங்க குடுத்து விட்டா அவ ஏன் சாப்பிட கீழ வரனும்…
அவ ரூமை விட்டு வெளிய வந்ததால தான் நாயை பாத்து பயந்து கீழ விழுந்திருக்கா...இப்போ உடனே ஊருக்கு கூட்டிட்டு போன்னு அடம்பண்ணறா... நான் உங்ககிட்ட சொல்லிட்டு போனது போல சரியா பண்ணியிருந்தீங்கன்னா... இந்தப் பிரச்சினை எதுவுமே வந்திருக்காது…
இல்ல பூபதி நீ சொல்லிட்டு போனது போல தான் நான் செஞ்சது... வேணும்னா உன் அத்தைகளை வேணும்னா கேட்டுப்பாரு... நான் குடுத்து விடும் போது எல்லாருமே பார்த்துகிட்டு தான் இருந்தாங்க...என்று கூறவும் நம்பிக்கை இல்லாதவன் அலட்சியமாக முகத்தை திருப்பினான்.
அதை பார்த்து தாங்கிக்கொள்ள முடியாத காமாட்சி உடனே உணவை எடுத்துச் சென்ற பணிப் பெண்ணை அழைத்தார் …
சிவகாமி கொஞ்சம் இப்படி வா என்று…
என்னம்மா என்று சற்று பயத்துடனே அந்த பெண் வந்து நின்றார்.
உன் கிட்ட சாப்பாடு குடுத்தேன்ல...அதை என்ன செஞ்ச என்று மிரட்டினார்.
பயந்தபடியே நீங்க சொன்னது போல தான்மா செஞ்சேன்…
பொய் சொல்லாத...நீ புதுசா வீட்டுக்கு வந்த பொண்ணுக்கு சாப்பாடே தரல...
நீங்க எப்போம்மா அந்த பொண்ணுக்கு சாப்பாடு தர சொன்னீங்க…
ஏய் விளையாடத… சாப்பாட்டை உன் கைல குடுத்து மாடியில் இருக்கிற பொண்ணு கிட்ட கொடுத்துட்டுவான்னு சொல்லல...
நீங்க அப்படி சொல்லலையே ம்மா….நாய்க்கு தானே சாப்பாட்டை வச்சிட்டு வர சொன்னீங்க...நானும் நீங்க சொன்னது போல நாய்க்கு சாப்பாடு வெச்சேன்...கயிறு லூசா கிடந்ததுன்னு இழுத்து கட்டலாம்னு நினைக்கும் போது சின்னையா வந்துட்டாரு...அப்புறம் அவர் கொடுத்த பையை எடுத்துட்டு மேலே போனேன்…
ஏய்...இரு...என்று இடைமறித்தவன்..
அப்போ நீ தான் நாயை அவுத்து விட்டியா என்று சிவகாமியை பார்த்து கேட்டான்.
உடனே சிவகாமி... காமாட்சியை பார்த்து அம்மா அதான் உங்களுக்கு எல்லாமே தெரியும்ல... இப்போ மறுபடியும் முதல்லயிருந்து கேட்டா நான் என்ன செய்யட்டும்...என அழ ஆரம்பித்தார்.
உடனே காமாட்சி சிவகாமியை பார்த்து சரி..சரி உள்ளே போய் ஏதாவது வேலை இருந்தா பாரு என்று கூறினார்.
உடனே கோபமடைந்த பூபதி என்னமா நான் பேசிகிட்டு இருக்கேன் நீங்க அவங்களை உள்ள போகச் சொன்னா என்ன அர்த்தம் என்றான்…
டேய் நான் ஏற்கனவே விசாரிச்சிட்டேன்.. கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுட்டா... ஒரு விஷயத்தை எத்தனை தடவை கேட்கிறது...சின்ன விஷயம் விட்டு தள்ளு...என்று சாதாரணமாக கூறவும்…
எதும்மா.. சாதாரண விஷயம் ராகா மாடியில் இருந்து கீழே விழுந்ததா... என்னம்மா நடந்துக்கிட்டு இருக்கு இந்த வீட்டுல ...அவ வந்து இன்னும் முழுசா ஒரு நாள் கூட முடியல அதுக்குள்ள அவளை இந்த அளவுக்கு கஷ்டபடுத்திட்டு இருக்கீங்க…
டேய் என்னடா இது...வாய்க்கு வந்த மாதிரி பேசிகிட்டு இருக்கற…
வேற எப்படிமா பேச சொல்றீங்க... அவளுக்கு சாப்பாடு கொடுக்க சொன்னா எல்லார் முன்னாடியும் ராகாக்கு குடுன்னு சொல்லிட்டு இந்தப்பக்கம் வந்து நாய்க்கு போட சொல்லி இருக்கீங்க..அதுமட்டுமில்லாம நாயை அவிழ்த்து விட்டிருக்கிறா... அது உங்களுக்கு தெரிஞ்சிருக்கு ஆனா என்கிட்ட நீங்க ஒரு வார்த்தை கூட சொல்லல ...நான் கேட்டபோது தெரியாதுன்னு சொல்லிட்டீங்க…
அவளை உங்களுக்கு பிடிக்கலைனா முதலிலேயே சொல்லி இருக்கலாம்ல்ல...இவ்ளோ தூரம் அவளை கூட்டிட்டு வந்திருக்க மாட்டேன்...இப்போ அவளே இங்கிருந்து கிளம்பனும்னு சொல்லற அளவிற்கு கொண்டுவந்து விட்டுட்டீங்க…
ஒரு ரெண்டு நாள் மட்டும் பொறுத்துக்கோங்க அதுக்கப்புறம் நானே அவளே கூட்டிட்டு போயிடறேன்...என்று கோபமாக அங்கிருந்து சென்றான்.
கடவுளே இதென்ன சோதனை...ஏன் இன்னைக்கு எல்லாமே இப்படி தப்புதப்பா நடக்குது என்று கலங்கினார்.
தாயிடம் கத்திவிட்டு வேகமாக வெளியே வருவும் மருத்துவர் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
அவரைக் கண்டதுமே புன்னகையுடன் வரவேற்றவன் ராகாவிடம் அழைத்துச் சென்றான்.
அங்கு அவளை பரிசோதித்த மருத்துவர் நகக்கீறலுக்கு ஊசி போட்டு விட்டவர்... கீழே விழும் போது ஏற்பட்ட காயங்களுக்கு மருந்திட்டார்.. அடிபட்ட காயங்களை ஆராய்ந்தவர் பெரியதாக எதுவும் இல்லை எனக் கூறி ஆயில்மெண்ட்டும்,பெயின்கீல்லரையும் கொடுத்து விட்டு சில அறிவுரைகளை வழங்கி விட்டு வெளியே சென்றார்…
மருத்துவர் சென்றதும் நெற்றியை தேய்த்த படி நிதானமாக பூபதி யோசிக்கத் தொடங்கினான்... தாய்க்கு ஏனோ ராகவை பிடிக்கவில்லை வந்த ஒரு நாட்களிலே இத்தனை பிரச்சினைகள்.. அதனால் இனியும் ராகாவை இங்கே வைத்துக்கொண்டு இருப்பது விஷப்பரீட்சை...பேசாமல் அவளை லண்டனே அனுப்பி விடலாம் என முடிவெடுத்தான்... ராகா எழுந்ததும் அவளிடம் ஒரு முறை கேட்டுவிட்டு டிக்கெட் புக் செய்யலாம் என்று நினைத்தவன் அவளுக்கு காவலாக அந்த அறையில் இருந்த கௌச்சில் சாய்ந்து கண்மூடினான்.
இங்கு காமாட்சிக்கு அழுகையே நிற்கவில்லை மகன் தன்னைப் எப்படியெல்லாம் பேசிவிட்டான்... என்னவோ நான் பல நாள் திட்டம் போட்டு வீட்டிற்கு வந்த பெண்ணிற்கு சாப்பிட கொடுக்காமல் வேண்டுமென்றே நாயை அவிழ்த்து விட்டது போல் அல்லவா பேசி விட்டான்...
மருமகள் வருகிறாள் என எவ்வளவு சந்தோஷமாக இருந்தார்... எல்லாம் இன்று நடந்த விஷயத்தில் கேள்விக்குறியாகி விட்டதே... இதற்கு மேலும் ராகாவை மகன் இங்கே தங்க வைக்க மாட்டான்... கண்டிப்பாக ஊருக்கு அனுப்பி விடுவான்... தன்னுடைய திருமணம் தான் மனதிற்கு நிறைவாக நடக்கவில்லை... மகனுடைய திருமணமாவது அவனுக்கு பிடித்தது போல் நடக்க வேண்டும் என எதிர்பார்த்தார்.
இன்று நடந்த விஷயங்களை எல்லாம் பார்த்தால் மகனுக்கு திருமணம் நடக்கும் ஆனால் அவரின் ஆசீர்வாதத்தோடு நடக்குமா என்பது மிகப்பெரிய சந்தேகம் தான்.
எப்படியாவது மகனுக்குப் புரிய வைக்க வேண்டும் தன் மீது எந்த தவறும் இல்லை நடந்ததற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று...ஆனால் எப்படி புரியவைப்பது... இவர் சொல்லி கேட்கும் இடத்தில் பூபதி இப்பொழுது இல்லையே என்ன செய்வது என யோசித்தவர் கடைசியாக ராஜாவை சந்திக்கலாம் என முடிவெடுத்தார்.
ராஜா இடத்தில் எப்பொழுதுமே பூபதிக்கு மரியாதையும் அன்பும் நிறைய உண்டு... அவர் காமாட்சியின் நிலையை பற்றி கூறினால் கண்டிப்பாக பூபதி நம்புவான் என நினைத்தவர் அண்ணனைத் தேடிச் சென்றார்.
ராஜபூபதி பெயருக்கு ஏற்றது போல ராஜ தோரணையில் தான் இருந்தார்…ஐம்பது வயதை நெருங்கிக்கொண்டிருப்பவர்…. ஆனால் அவரின் தோற்றத்தைப் பார்த்தால் நாற்பது வயது கூட சொல்ல முடியாது அப்படி ஒரு இளமை ...தினமும் அவர் செய்யும் உடற்பயிற்சியும், யோகாசனமும் ,ஆரோக்கியமான உணவும் தான் அதற்கு காரணம்….
வெள்ளை நிற குர்த்தியும் அதே நிறத்தில் பேண்ட்டும் அணிந்திருந்தார்... காலணி கூட வெள்ளை நிறத்தில் போட்டிருந்தார்...ஐந்தே முக்கால் அடி உயரமும் உயரத்திற்கு ஏற்றார் போல உடல்வாகும் கொண்டிருந்தார்…
மாநிறத்தில் இருந்தவர் கண்களுக்கு சிறியரக கண்ணாடியைப் போட்டுக் கொண்டிருந்தவரின் தலைமுடி சால்ட் அன்ட் பெப்பராக இருந்தது... முகம் முழுவதும் மூன்று நாள் தாடியுடன் இருக்க நிக்கோடின் படியாத உதடுகள் அதனுள்ளே எட்டிப்பார்த்தபடி இருந்தது...
அறை முழுவதும் அப்படி ஒரு தூய்மை... அறைக்குள் இருக்கும் அத்தனையுமே வெள்ளை நிறத்தில் இருந்தது... சுவர் முழுவதுமே வெளிர் நிறத்தில் பெயிண்ட் அடித்திருக்க ஒரு இடத்தில் மட்டும் சிவப்பு நிறத்தில் நீ ஜூவாலை வரைந்திருந்தது... கைகளை கட்டியபடி மௌனமாக அதையே பார்த்துக் கொண்டிருக்க...அண்ணா என்றபடி காமாட்சி உள்ளே வந்தார்.
காமாட்சிக்கு ஐந்து அண்ணன்களில் மிகவும் பிடித்தது ராஜா மட்டும்தான் அவர் மட்டும்தான் எந்த விஷயமாக இருந்தாலும் நிதானமாக யோசித்து செயல்படுபவர்... மற்றவர்கள் அனைவருமே எடுப்பார் கைப்பிள்ளை தான்... அதனால் அவருக்கு எப்பொழுது எந்த பிரச்சினை வந்தாலும் தீர்வு காண்பதற்கு ராஜாவைத்தான் தேர்ந்தெடுப்பார்... இப்பொழும் அண்ணனையே தேடிவந்திருக்கிறார்.
என்ன காமாட்சி... புதுசா வீட்டுக்கு மருமக வந்திருக்கா நீ மருமகளை பாக்காம இந்த அண்ணனை பாக்க வந்திருக்க…
நீ எங்கண்ணா போயிட்ட காலையிலிருந்து உன்னை பாக்கவே முடியல இப்போ தான் வெளியில உன் கார் பார்த்தேன் அதான் நீ ரூம்ல இருப்பேன்னு உன்னை தேடி வந்துவிட்டேன்…
காரணம் இல்லாம என்ன தேடி வர மாட்டியே என்ன பிரச்சினை சொல்லு…
எப்படி அண்ணா எனக்கு பிரச்சனைனு ஈஸிசா கண்டுபிடிக்கறீங்க…
நாற்பத்தைந்து வருஷமா என் தங்கச்சி கூடவே இருந்து பார்த்துட்டு இருக்கேன் அவளோட ஒவ்வொரு முக பாவத்திற்கும் எனக்கு அர்த்தம் தெரியும்… சொல்லு எதுக்காக இங்க வந்த என்று கேட்கவும்…
திடீரென அண்ணின் மார்பில் சாய்ந்த படி அழ ஆரம்பித்து விட்டார் காமாட்சி…
அம்மாடி என்ன இது சின்ன குழந்தை மாதிரி அழுதுகிட்டு இப்போ நம்ம வீட்டுக்கு மருமக வந்தாச்சு நீ இப்படி அழுறதை பார்த்தா அவ உன்னை பத்தி என்ன நினைப்பா முதல்ல கண்ணை தொடைச்சுக்கோ என்று அவரை நிமிர்த்தி கண்களை துடைத்துவிட்டார்...பிறகு அங்கிருந்த சோபாவில் அமரவைத்து என்ன ஆச்சிமா நீ இப்படி உடையற அளவிற்கு என கேள்வி கேட்டார்
ண்ணா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு என் பையன் என்னை விட்டு நிரந்தரமாக பிரிஞ்சு போயிடுவானோன்னு…
ஏன் உனக்கு அப்படியெல்லாம் தோணுது.. நம்ம பூபதி பத்தி உனக்கு தெரியாது... அவன் என்னைக்கும் உன்னை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டான்…
எனக்கும் தெரியும் ... ஆனா இன்னிக்கி காலையிலிருந்து நடந்த விஷயங்களை வைத்து பார்க்கும் பொழுது என் பையனை எங்கிட்ட இருந்து பிரிக்கிறதுக்கு யாரோ சதி செய்றாங்க அது மட்டும் தெரியுது என்றவர் காலையில் இருந்து சற்று முன்பு பூபதி பேசியது வரை ஒன்று விடாமல் கூறவும் யோசனையாக பார்த்துக் கொண்டிருந்தவர் நீ சிவகாமியை நல்லா விசாரிச்சியா... அவ கிட்டே ஏதோ தப்பு இருக்குற மாதிரி தெரியல …
இருக்கலாம் அண்ணா... ஆனா இப்போ அவ கிட்ட போய் கேட்டா உண்மைய சொல்ல மாட்டா.. மாத்தி மாத்தி தான் சொல்லுவா... அவகிட்ட விசாரிக்கிறது வேஸ்ட்..
சரி வீட்டுக்குள்ள ஏதோ தப்பா நடக்கறதை உன்னால புரிஞ்சுக்க முடியுது அப்போ அதுக்கேத்த மாதிரி நடந்துக்க வேண்டியது தானே…
சொல்றது சுலபம் அண்ணா நடக்குறது தான் ரொம்ப கஷ்டம் இருபது வருஷத்துக்கு முன்னாடி அண்ணியும் இதே மாதிரி ஒரு கஷ்டத்தை தான் அனுபவிச்சாங்க….
அவர்களுக்கு எதிரா இந்த வீட்ல எதோ நடக்குதுன்னு என்கிட்ட பலமுறை வந்து சொல்லிருக்காங்க….அப்போல்லாம் நான் நம்பல... கடைசில அண்ணி நிரந்தரமாக நம்மளை விட்டு போய்ட்டாங்க….
இப்போ அதோ போல எனக்கு நடக்குது... யார்கிட்ட சொல்லறதுன்னு தெரியாம உங்ககிட்ட வந்து நிக்கறேன... இப்போ நீங்க எனக்கு உதவலன்னா.. உங்க தங்கச்சியும்... என்று குலுங்கி அழ ஆரம்பித்தார்.
சட்டென்று காமாட்சியின் வாயைப்பொத்தியவர் தயவு செஞ்சு இன்னொரு முறை இப்படி பேசிட்டு இருக்காத காமாட்சி... என்னால தாங்கிக்க முடியாது…
இந்த வீட்டில இவ்வளவு நாள் நான் இருக்கேனா அது உன் ஒருத்திக்காக மட்டும் தான் அதை ஞாபகத்துல வச்சிக்கோ …உனக்கு எந்த பிரச்சினைனாலும் இந்த அண்ணன் கிட்ட சொல்லு நான் செய்யறேன்...
இப்போ நான் என்ன செய்யனும் என்று கேட்டார்.
அண்ணா... ரொம்ப ஆசையா இருந்தேன் பூபதி மருமகளை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றான்…ஒரு வாரம் அவளை உள்ளங்கையில வெச்சு தாங்கனும்... எந்த ஊருக்கு போனாலும் இந்த ஒரு வாரம் நான் பார்த்துக்கிட்டதை நினைச்சி என்கிட்டயே ஓடிவரனும்னு கற்பனை பண்ணி வெச்சு இருந்தேன்...
ஆனா இன்னைக்கு நடந்த விஷயம் எதுவுமே சரியில்ல...பூபதி கோவிச்சி கிட்டான்…. எப்படியும் மருமகளை அழைச்சிகிட்டு இன்னும் ரெண்டு நாள்ல கிளம்பிடுவான்னு நினைக்கிறேன் …
இங்க வர்றதுக்கு முன்னாடி எப்படியும் ஒரு வாரமாவது இருப்பேன் இந்த ஊர் முழுக்க ராகாவிற்கு சுத்தி காட்டிட்டு தான் மறுபடியும் அவளை ஃப்ளைட்ல ஏத்துவேன்னு சொன்ன பையன் இன்னைக்கு முகம் செத்துப்போய் போறான் அதை பார்க்கும்போது என் மனசு ஆறவே இல்லை... அவன் முடிவெடுக்கறதுக்கு முன்னாடி எப்படியாவது தடுத்து நிறுத்து அண்ணா...நீ சொன்னா அவன் கண்டிப்பா கேப்பான்…என்றார்.
இவ்வளவுதானா இதுக்குதான் இவ்வளவு ஆர்ப்பாட்டமா...என்று புன்னகைத்தவர்...பூபதி விஷயத்தை விடு நான் பார்த்துக்கறேன் …என்று ஆறுதல் படுத்தியவர் காமாட்சியை இயல்பாக்கும் வண்ணமாக பேச்சை மாற்றினார்.
இப்போ உன் மருமகளை பத்தி பேசலாமா... என்றவர்....லண்டனில் இருந்து கூட்டிட்டு வந்திருக்கான் போல …என்ன சொல்லறா…
கொஞ்சமாவது நம்மூர் சாயல்ல இருக்காளா இல்ல வெள்ளைகாரி போல இருக்காளா என்று கேட்கவும்…
காமாட்சியின் முகம் நொடியில் பிரகாசமானது... அண்ணா சொல்ல மறந்துட்டேன் அவ நடை.. மூக்கு, நெற்றி,கண்ணு எல்லாம் அப்படியே உன்னோட ஜெராக்ஸ்...அதுமட்டுமில்ல... முகம் கூட இந்த வட்டாரத்து முகம்... போடற உடுப்பு தான் அவளை வெளியூர் புள்ள மாதிரி காமிச்சு கொடுக்குது... மற்றபடி இந்த ஊர் பொம்பளைகள் மாதிரி தலையை படியவாரி... புடவையை கட்டி விட்டா அப்படியே நம்ம குடும்பத்துப் பிள்ளைதான்...என்று கூறவும்…
துணுக்குற்ற ராஜா என்ன பாக்கறதுக்கு என்னை மாதிரியே இருக்களா...அவ அம்மா அப்பாவோட பூர்விகம் என்னன்னு கேட்டீயா…?
இல்லையே அண்ணா நம்ம பூபதிக்கே அந்த பிள்ளையை பத்தின விவரமெல்லாம் தெரியல அவ அப்பா ஒரு டாக்டர் அது மட்டும்தான் தெரியும் மத்தபடி எந்த விவரமும் எனக்கு தெரியாது இனிதான் மெதுவா அந்த புள்ள கிட்ட விசாரிக்கனும்...என்று கூறி முடிக்கும் முன்னே பதட்டத்துடன் எழுந்தவர்கள்…
அவளுக்கு வயசு என்ன இருக்கும்...இருபதுல இருந்து இருபத்தி ஒன்னு...இருக்குமா
காமாட்சி …
அவ்ளோ தான் வரும்... உடம்பு தான் கொஞ்சம் பெருத்த உடம்பு…
என்றார்.
ஒரு உதவி பண்றியா காமாட்சி ப்ளீஸ் எனக்காக…
சொல்லுங்க அண்ணா…
வரியா உடனே போய் உன் மருமகளை பார்த்துட்டு வரலாம்...
இப்பதான் டாக்டர் வந்துட்டு போயிருக்காங்க எப்படிம் அவ தூங்கிட்டு இருப்பான்னு நினைக்கிறேன் கொஞ்ச நேரம் கழிச்சு போலாமே…
இல்லல்ல உடனே உன் மருமகளை பாக்கணும் கீழ விழுந்து அடிபட்டு இருக்குன்னு சொல்ற எனக்கு மனசு பதறுது...இப்போ நீ வரியா இல்ல நானே போய் பார்த்துக்கவா என்றவர் வேகமாக அறையை விட்டு வெளியேற ஆரம்பித்தார்.
அண்ணா இருங்க நானே உங்களை கூட்டிட்டு போறேன் என்றபடி அவரின் நடைக்கு ஈடு கொடுத்தபடி காமாட்சியும் பின்தொடர்ந்தார்.