கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வாய்ப்பிருந்தால் வந்து போ -26

Akila vaikundam

Moderator
Staff member
26.

யாரது இப்படி அறிவில்லாம மலைல வண்டி ஒட்டறது...என்று முதலில் எழுந்த பூபதி கோபமாக வாகனத்தின் பின்புறமாக சென்றான்.


ராஜா மகளின் அருகில் வந்து அவரை தூக்கி விட்டு உனக்கு எதுவும் அடிப்படலையே என்று கூறியபடி அவளது கை கால்களை ஆராய்ந்தார்….

பாவம் நேற்றுதான் மகளுக்கு அவ்வளவு பெரிய விபத்து அதற்குள் இப்படி ஆகிவிட்டதே என்ற கலக்கம் அவரது முகத்தில் நன்றாகத் தெரிந்தது.


அவரிடத்தில் கையை உருவிக் கொண்டவள்... ஒன்னும் இல்ல அங்கிள் நான் மேனேஜ் பண்ணிப்பேன் என்று தாங்கிய படியே அவளும் சற்று ஒதுங்கி நிற்க ஆரம்பித்தாள்.


என்ன ராகா அங்கிள்னு கூப்பிடற
அப்பான்னு கூப்பிட மாட்டியா என்று ஏக்கமாக அவரைப் பார்த்து கேட்க நான் ரொம்ப குழப்பத்தில் இருக்கேன் அங்கிள்...ப்ளீஸ் இப்போ நாம பேசவேண்டாம் என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே...அவர்களை நோக்கி மீண்டும் அந்த கன்டெய்னர் வேகமாக வந்தது...தடுக்க முயன்ற பூபதியை இடிப்பது போல் வாகனம் அருகில் வரவும் வேறு வழியில்லாமல் ஒதுக்கியவன் சத்தமாக கத்தினான்...மாமா,ராகா ஓதிங்கிக்கோங்க…


இருவருமே ஒதிங்கிக்கொள்ள இப்பொழுது வாகனம் இவர்களை குறிவைத்து பின்னோக்கி வந்தது அப்பொழுதுதான் மூன்று பேருக்குமே புரிந்தது இது தற்செயலாக நடக்கும் விபத்தல்ல திட்டமிட்டு இவர்கள் மேல் நடத்தப்படும் தாக்குதல் என தெரிந்ததுமே பூபதி வேகமாக ஓடி வந்து காரை ஆன் செய்து கத்தினான்…

சீக்கிரமா வந்து கார்ல ஏறிக்கோங்க என்றபடியே கதவை திறந்து விட்டான்.

இருவரும் ஒடிவந்து ஏறவும் வேகமாக காரை இயக்கினான்…

பின்னால் கண்டெய்னர் லாரியுடன் ஸ்கார்ப்பியோ காரும் துரத்த ஆரம்பித்தது…


யார் பூபதி இது...நம்மளை ஏன் கொலை பண்ண தூரத்தறாங்க...என்று பயந்தபடி ராகா கேட்டாள்.


தெரியல ராகா...ஒருவேளை பக்கத்து எஸ்டேட் காரங்களோ என்னவோ…


அவங்க ஏன் நம்மளை துரத்தனும்…


ஒருவேளை புதுசா நான் படிச்சிட்டு வந்ததால அவங்க பிஸினஸ் பாதிக்கலாம்னு பண்ணறாங்க போல...என்று சொல்லவும்...ராஜா வேகமாக மறுத்தார்..


இருக்காது பூபதி...எனக்கு வேற ஒரு சந்தேகம்...


என்ன மாமா அது…


ராகா என் பொண்ணுனு வேற யாருக்கோ தெரிஞ்சிடுச்சி... அதான் அவளை கொலை செய்யறதுக்காக துறத்தறாங்க…நாம எஸ்டேட் போக வேணாம்….உடனே வக்கீல் வீட்டுக்கு போகலாம்... வண்டியை திருப்பு...


மாமா...இன்னுமே என்னால நம்ப முடியல...ராகா உங்க பொண்ணுன்னு எதை வச்சி சொல்லறீங்க...அவ உங்க பொண்ணுங்கற பட்சத்துல எப்படி லண்டன்ல வளர்வா…

அவளை நல்லா பாரு...என் ஜாடையும் கலை ஜாடையும் கலந்து இருக்கா...அடுத்து டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட்...அதை தாண்டினா அவ அப்பான்னு நம்பற மிஸ்டர் ராம் பிரசாத்... அவரோட ஃபேமிலியை எனக்கு ரொம்ப நல்லா தெரியும்...அவரோட அம்மாவும் அப்பாவும் இறந்த ஒரே வருஷத்துல அவரோட மனைவியும் இறந்துட்டாங்க... அப்போ அவங்க நிறைமாத கர்ப்பிணி உதவிக்கு யாரும் வராததால் அவங்க குழந்தையும் அங்கேமே இறந்திடுச்சு.. இந்த விஷயம் அந்த டைம்ல பேப்பர்ல கூட வந்தது...


அப்படி இருக்கும்போது ஹாஸ்பிடல் போறதுக்கு முன்னாடி ராம் தான் அப்பான்னு ராகா சொன்னா... ஹாஸ்பிடல்ல ராகாவோட டீடெயில்ஸ் தரும் போது டேட் ஆஃப் பர்த் பாத்தேன்...என் குழந்தை பிறந்த கொஞ்ச நாள் முன்ன தான் ராகா பிறந்ததா இருக்கு...அப்போ ராம் மனைவி,குழந்தை இறந்த சமயம்... எப்படி அந்த சமயத்துல ராகா அவருக்கு பிறக்க முடியும்... அடுத்த சந்தேகம்...ராகாவோட அம்மாவை அங்கதான் பிரசவத்துக்கு சேர்த்து இருந்தேன்... அவளுக்கு பிரசவம் ஆயிருக்கு...ஆனா குழந்தை அங்க இல்ல...சுதா சிஸ்டம் யார் கிட்டயோ குடுத்ததா சொன்னாங்க...யோசிச்சி எல்லாத்தையும் ஒரே நேர்கோட்ல கொண்டு வந்தேன்...இவ தான் என் மகன்னு புரிஞ்சது... இருந்தாலும் சட்டம் நம்மளோட யூகத்தை ஏத்துக்காது...அதனால தான் டிஎன்ஏ டெஸ்ட்...ராகாக்கு தெரியாம இதை எடுக்கறது மிகப்பெரிய தப்புன்னு தெரியும்...ஆனாலும் எனக்கு வேற வழி தெரியல..என்னை மன்னிச்சிடு ராகா நீ என்னை அப்பாவா ஏத்துக்கலனாலும் நீ தான் என் பொண்ணு…


வக்கீல் ஆஃபிஸ் வா... அவர்ட்ட எல்லா ஆதாரத்தையும் காமிச்சதும்...நீ உடனே லண்டன் கிளம்பிடு...உன் அம்மா ஆசைபடி இங்க எல்லாத்தையும் செஞ்சதும் நானே உன்னை தேடி வர்றேன்... என்றார் என்று கூறும் பொழுது பூபதியின் ஃபோன் அடித்தது...



யார்னு பாரு என்று ஃமொபைலை ராகாவின் கையில் கொடுத்தவன்...மாமா...வண்டி திருப்பனும்னா...கஷ்டம் வழியில்லை...என்ன செய்யறது…



நான் சொல்லற மாதிரி போ...மலையோட இடது பக்கம் கீழ இறங்கலாம்...
யாருக்கும் அதிகமா தெரியாத மண் ரோடு அது... என்று சொன்னார்.


மொபைல் போனை பார்த்த ராகா பூபதி உன்னோட அப்பா கூப்பிடுறாங்க என்றாள்.


உடனே ஸ்பீக்கரில் போடு என்று கூறியவன் என்னப்பா என்று கேட்டான் .


என்னடா அந்த பொண்ணை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன்னு போன இன்னும் ஆளையே காணோம் எங்க இருக்க என்று கேட்டார்.


அப்பா நம்ம எஸ்டேட் போய்ட்டு இப்போ இறங்கிட்டு இருக்கோம் என்று கூறவும்.


எஸ்டேட் போனியா யாருமே சொல்லலையே…
சரி சரி சீக்கிரம் வீட்டுக்கு வாங்க என்று கூறியவர்...இணைப்பை தூண்டித்தார்..


அவர் வைக்கவும் பிரியாவின் அழைப்பு பூபதியின் ஃபோனுக்கு அடுத்தடுத்து வந்தது.



உடனே யோசனையாக பூபதியை பார்த்து...மம்மி கூப்பிடறாங்க...என்றாள் ‌


எடுத்து பேசு என்று கூறவும் …



இல்ல பூபதி இங்கே நிலைமை சரியில்லை சரியானதுக்கு அப்புறம் நான் பேசிக்கிறேன் என்று கூற சரி அப்போ ஃமொபைலை நீயே வச்சுக்கோ என்றான்.


உடனே ராகா அவளின் பேன்ட் பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக்கொண்டாள்.


இப்பொழுது ராஜா சொன்ன வழியில் காரை செலுத்தினான்…


பின்னால் வந்த இரு வாகனங்களும் நேராகச் செல்ல குறுக்குப் பாதையில் வந்தவன் சற்று தூரம் சென்றதும் வாகனத்தை அணைத்து வைத்தான்.



மாமா...நீங்க சொல்லறது போலவே வச்சிகலாம்...நம்ம ராகா சாகறதால யாருக்கு லாபம்…



தெரியலை பூபதி...ஆனா யாருக்கோ அவ இங்க வந்தது பிடிக்கல... கண்டிப்பாக வெளி ஆள் இல்ல... அதுமட்டும் நீஜம்..



வெளி ஆள் இல்லன்னா வேற யாரா இருக்கும்... ஒருவேளை எஸ்டேட்டை கவனிக்கற என் பெரியப்பாவை சந்திக்க படறீங்களா... என்று கோபமாக கேட்டான்.


*****

ராஜா இடத்திலிருந்து பதில் வராததும்...இருக்காது மாமா ராகா என்னை தான் கல்யாணம் செஞ்சிக்க போறா... அவ உங்க மகளாக இருந்தா சொத்து வெளியே போக வாய்ப்பே இல்லை அப்புறம் எதற்காக அவளை கொலை பண்ண போறாங்க…



நான் அவங்கன்னு சொல்லலையே பூபதி...இந்த சொத்தால பயன் படற ஓருத்தர்...


யாருன்னு வெளிப்படையா சொன்னாதானே மாமா தெரியும் நீங்க பொடி வச்சி பேசுறத பாத்தா அவளை கொலை பண்ண முயற்சி செய்யறது என் குடும்பம்னு சொல்லறது போல எனக்கு தோணுது ‌..



ஏன் இப்படி பேசுற பூபதி நாமெல்லாம் ஒரே குடும்பம் அதை முதல்ல தெரிஞ்சுக்கோ …
என்று ராஜா கூறவும்…



ரெண்டுபேரும் உங்களோட ஆர்க்யூமெண்ட்டை நிறுத்துங்க….முதல்ல போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளைன்ட் பண்ணலாம்... யாருன்னு கண்டுபிடிச்சி அவங்க சொல்லுவாங்க... அப்போ உங்க சண்டையை போட்டுக்கோங்க என்ற ராகா பூபதியிடம் நீ அவர்கிட்ட இப்படி பேசறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல நான் நேராவே உனக்கிட்ட ஒரு கேள்வி கேக்கறேன்…



இந்த எஸ்டேட்ல நடக்கிற அநியாயங்களையும், அவங்களுக்கு என்னென்ன செஞ்சு தரணும்ங்கறதையும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன்னோட மாமா சொல்லிக்கிட்டு இருந்தாங்க நீ கேட்ட இல்ல இப்போ நீ படிச்சி முடிச்சு வந்துட்ட...இனிமே இங்க இருக்கற மக்களுக்கு நீ என்ன செய்ய போற உன்னோட அத்தை ஆசைப்பட்ட மாதிரி செஞ்சு கொடுக்க போறியா இல்ல இல்ல பணம் மட்டும் வந்தா போதும் வேலை செய்ற மக்கள் எப்படி போனா எனக்கென்னனு அப்படியே விடப் போறியா …?ஏன் கேக்கறேன்னா...பாவம் புண்ணியம் பாத்தா ஜாக்வார்ல சவாரி செய்யமுடியாதுன்னு சொன்னல்ல அதான் கேட்டேன்...


என்ன ராகா இப்படியெல்லாம் பேசிகிட்டு இருக்க என்னை பத்தி உனக்கு தெரியாதா.. கண்டிப்பா இந்த மக்களுக்கு எல்லா வசதிகளும் செஞ்சு கொடுப்பேன் நியாயமா அவங்களுக்கு சேரவேண்டிய எல்லா உரிமைகளையும் பெற்று தருவேன்... சரி மாமா சொல்ற மாதிரி நீ அவரோட பொண்ணு இருந்தா நீ என்ன செய்வ... என்று கேட்கவும் கொஞ்சம் கூட யோசிக்காமல் அப்படி நான் இவரோட பொண்ணா இருந்து இந்ந சொத்து எனக்கு வந்ததுன்னா மூன்று தலைமுறைக்கு முன்னாடி இங்க வேலை செய்ற மக்களுக்காக பிரிச்சி கொடுத்த அத்தனை இடங்களையும் அந்தந்த மக்கள்கிட்டயே ஒப்படைச்சிடுவேன்...இவ்ளோ நாள் அவங்க நம்ம குடும்பத்துக்காக உழைச்சது போதும்னு...


என்று சொல்லவும் ராஜா அருகில் வந்து... சத்தியமா நீ என் மக தான்...நீ பேசற ஒவ்வொரு வார்த்தையும் கலை பேசறது போலவே இருக்கு... நான் மிஸ்டர் ராம் கிட்ட பேசுறேன் அவர் வாயாலேயே நீ அவர் பொண்ணு இல்லன்னு சொல்ல வைக்கிறேன் அப்போ நம்புவ தானே என்று கேட்கும் பொழுது…



ப்ளீஸ் அங்கிள் அப்படி எதும் நீங்க அவர்கிட்ட பேச வேண்டாம்... நான் உங்க பொண்ணாவே இருந்தா கூட பரவால்ல... எனக்கு அவர் சந்தோஷம் முக்கியம்... எனக்காக மட்டுமே வாழறவர்...அவரை கஷ்டபடுத்தற எதையும் நான் செய்யப்போறதில்லை என்று உறுதியாக கூறினாள்.


அப்பொழுது எதிரில் சிதம்பரத்தின் வாகனம் வர பின்னாலே பூபதியின் பெரியப்பாவின் வாகனமும் வந்தது…



இவர்களை கடக்கவும் எதார்த்தமாக நிற்பதுபோல் நின்றது... சிதம்பரம் காரை விட்டு இறங்கியபடியே என்ன பூபதி கீழ இறங்கிட்டு இருக்கறோம்னு சொல்லிட்டு மண்ரோட்ல வந்திட்டு இருக்க...மெயின் ரோடு என்னாச்சி…



அப்பா அது ஒரு சின்ன பிரச்சனை நான் வீட்டுக்கு வந்ததும் விவரமா சொல்றேன் இப்போ நீங்க எப்படிப்பா இந்த ரோட்டுல…


இல்லப்பா அடிக்கடி இந்த பக்கத்தில திருட்டுதனமா மரம் வெட்டுவானுக...அதனால அப்பப்போ இந்த வழில வர்றது...பயம் இருக்கும்ல...என்றவர்... சரி நேரா வீட்டுக்கு தானே…



இல்லப்பா மாமா வக்கீல் ஆஃபிஸ் போகனும்னு சொன்னாங்க...போய்ட்டு அப்படியே வீட்டுக்கு போறோம்..


எதுக்குப்பா வக்கீல் ஆஃபிஸ்…



அச்சோ மறந்தே போய்ட்டேன்...ராகா இங்க வா என்று அழைத்தவன்..இவ யார் தெரியுமா... நம்ம ராஜா மாமா பொண்ணு... அதான் தாத்தாவோட உயிலை மறுபடியும் பாக்கறதுக்காக போறோம்….என்று கூறவும் அனைவரின் முகமும் நொடியில் மாறியது…


பூபதியின் பெரியப்பா மொபைல் போனை எடுத்து படி எதுவும் தெரியாதவாறு அவர்களை கடந்து செல்ல ராஜா அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.


இறந்ததா நினைச்ச ராஜா பொண்ணு இன்னைக்கு உயிரோட வந்து நிக்கறதை பாக்கும் போது
ரொம்ப சந்தோஷமா இருக்கு... நான் கூட ராஜா ஏதோ விளையாட்டா தான் பொண்ணு உயிரோடு இருக்குதுன்னு சொல்லிட்டு சுத்தறன்னு நினைச்சேன் ஆனா இப்போ உண்மையிலேயே நீஜத்துல வந்து நிற்கும் பொழுது ஆச்சரியமா இருக்கு எப்படியோ சொன்னதை சாதிச்சிட்ட ராஜா...அன்னைக்கு கருவிலேயே செத்திடுவன்னு எதிர்பார்த்தேன்...ஆனா உன் சாவு என் கைல போல என்ற சிதம்பரம் தீடிரென ராகாவின் கழுத்தை இறுக்கமாக பிடித்தார்...ராஜா சுதாரிப்பதற்குள் அவரின் பின்தலையை ஒருவர் தாக்கினர்...திரும்பிய ராஜா அவர்களோடு சண்டையிட ஆரம்பித்தார்.



பூபதிக்கு என்ன நடக்கிறது என்று புரியும் முன் இருபக்கமும் இருந்த ஆட்கள் அவனை கெட்டியாக பிடித்துக்கொண்டனர்.


ராகா கழுத்தை விடச்சொல்லி போராட...பூபதி அவனை பிடித்திருப்பர்களிடம் இருந்து திமிற ஆரம்பித்தான்…



அப்பொழுது பின் பக்கம் இவர்களை விரட்டிய வாகனங்கள் இரண்டும் அடுத்தடுத்து வந்து நிற்க...பூபதி தந்தையை பார்த்து கத்த ஆரம்பித்தான்.


ப்பா... என்ன இதெல்லாம் ஏன் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க...நீங்க தான் எங்களை கொலை பண்ண ஆள் அனுப்பினதா..முதல்ல ராகாவை விடுங்க என்று கத்தினான்.


உடனே வடிவு பூபதியை பார்த்து இங்க பாரு... ஒழுங்கா நாங்க சொல்ற படி கேட்டா உன்னை எதும் பண்ண மாட்டோம் இல்ல அப்புறமா நடக்கறதுக்கு நாங்க பொறுப்பில்ல…



ச்சீ...பேசாதீங்க... ஒரு பொண்ணா இருந்துக்கிட்டே ஒரு சின்ன பொண்ணு அடி வாங்கறதை பார்த்து ரசிச்சிகிட்டு இருக்கீங்களே... என்ன மாதிரியான பொம்பளை நீங்க…கண்ணு முன்னாடியே கழுத்தை பிடிக்கறீங்கன்னா…. ராகாவோட அம்மா இறந்ததும் விபத்தில்ல...அப்படிதான...பணத்துக்காக எத்தனை கொலைகளை செய்வீங்க...என்று கத்தினான்.


எல்லா சொத்துக்கும் நீ ஒருத்தன் தான் வாரிசா இருக்கனும்னு போராடினோம்ல இதும் பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ...என்ற வடிவு தம்பிகளை பார்த்து என்னடா வேடிக்கை பார்த்துட்டு இருக்குறீங்க சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு கிளம்பி போற வழிய பாருங்க என்றார்...உடனே சிதம்பரம் ராகாவின் கழுத்தை மேலும் இறுக்க... சுற்றி இருப்பவர்களை எல்லாம் தள்ளிவிட்ட பூபதி நேராக வந்து தந்தையையும் பாட்டியையும் ஒரு போல பின் பக்கமாக தள்ளி விட்டு ராகாவை அவர்களிடத்திலிருந்து பிரித்தெடுத்தான்…அதற்குள் தாத்தாக்கள் இருவரும் அந்த இடத்திற்கு வர வடிவு அவரின் தம்பிகள் என அணைவருமே உஷாரானார்கள்…


இரு தாத்தாக்களும் துப்பாக்கியை எடுத்து வடிவையும் தம்பிகளையும் குறிவைக்க...பூபதி ராகாவை பார்த்து கத்தினான்...அதற்குள் தாத்தாக்களை தாக்கி துப்பாக்கியை வடிவு பறிக்க...



ராகா இங்கிருந்து ஒடிப்போ…
இவங்களை நான் பாத்துக்கறேன்... என்றான்.



பிறகு அத்தனை பேரையும் மாறி மாறி அடித்துக்கொள்ள ஆரம்பித்தனர்…




சில அடிகள் ஒடியவள் திரும்பி பார்த்து பூபதி நீயும் வா…



ஐயோ ராகா இவங்க என்னை எதுவுமே செய்ய மாட்டாங்க நான் செத்துப் போயிட்டேன்னா அடுத்த நிமிஷமே இவங்களுக்கு சொத்து எதுவுமே கிடைக்காது... அதனால முதல்ல எஸ்டேட்டுக்கு போ அங்க யாராவது உனக்கு உதவலாம் என்று கத்தினான்…



என்ன செய்வது என தெரியாமல் எதிரில் வந்தவர்களை தள்ளிவிட்ட படி ஓட ஆரம்பித்தாள்.



ராஜாவை தாக்கிக் கொண்டிருந்ததில் ஒருவன் ராகாவின் பின்னால் ஓட இப்பொழுது சுற்றியிருப்பவர்களை சமாளித்த படி கீழே கிடந்த கட்டையை தூக்கியபடி அவளை காப்பாற்ற ராஜாவும் பின்னாலே ஓடினார்…



ராகாவை தொடப்போகிறவர்களை எல்லாம் கட்டை கொண்டு தாக்க ஒரு கட்டத்தில் அனைவருமே ஒன்று சேர்ந்து ராஜாவை தாக்க ஆரம்பித்தார்கள்…


சில தூரம் ஓடியவள் தார்சாலையை அடைந்திருந்தாள்...திரும்பிப் பார்க்க இப்போது யாருமே இல்லை எங்கு செல்வது என்று தெரியவில்லை...மேல் நோக்கி ஓட ஆரம்பிக்க தூரத்திலிருந்து ராஜாவின் கத்தல் கேட்டது.



பிரேக் போட்டது போல அங்கேயே நிற்க அதற்கு மேல் அவளால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை.


தன்னை காப்பாற்றுவதற்காக தானே அவர் பின்னால் ஓடி வந்தார் அப்போது அவரை விட்டுவிட்டு தான் மட்டும் தப்பிச் செல்வது எந்த வகையில் நியாயம் .


பூபதியை கண்டிப்பாக யாரும் எதுவும் செய்யப் போவதில்லை ஆனால் ராஜாவை கண்டிப்பாக ஏதாவது செய்வார்கள் ...என் உயிர் பிழைத்தால் போதும் என்று சுயநலமாக கூடாது என்று நினைத்தவள் ராஜாவின் சத்தம் கேட்ட இடத்தை நோக்கித் திரும்பி ஓடி வர ஆரம்பித்தாள்.



அதற்குள் பூபதி ராஜாவை தாக்குபவர்களையெல்லாம் திரும்பித் தாக்கிக் கொண்டிருந்தான்.



ராஜா பயங்கரமாக அடிபட்டிருக்க... முடியாமல் கீழே கிடந்தார்.



ராகா ஓடி வருவதைப் பார்த்த பூபதி ராகா இங்கே வராதே போ...திரும்பிப்போ என்று கத்தினான்.


இல்ல பூபதி என்னால இவரை விட்டுட்டு போக முடியல ...ஏனோ தெரியல இவர் கத்தற சத்தத்தை என்னால கேட்க முடியல... எதுவா இருந்தாலும் சரி இவரையும் நான் அழைச்சிட்டே போறேன் என்றபடி ராஜாவின் கை பிடித்து தூக்க ஆரம்பித்தாள்.


அவரோ தொய்ந்து கீழே விழ ராகா மடிகொண்டு தாங்கினாள்.


அந்த நேரத்திலும் அவர் வாய்விட்டு சிரிக்க ராகா அவளின் கைக்கொண்டு அவர் முகத்தில் வழியும் ரத்தத்தை எல்லாம் துடைத்து விட்டபடி உங்களுக்கு ஒன்னும் ஆகாது என்று அவரின் காயங்களை கண்களாலும் கைகளாலும் ஆராய்ந்தாள்.


காயம் என்னமோ அவருக்கு ஆனால் வலியை ராகா உணர்ந்தாள்…


இப்பவாவது என்னை அப்பானு சொல்லும்மா.. ஒருதடவை அதை கேட்டா சந்தோஷமா என் உயிர் பிரிஞ்சிடும் என்றார்.


இல்ல சொல்ல மாட்டேன்... நான் சொன்னா நீங்க என்னை விட்டுட்டு போய்டுவீங்க…


அப்போ அப்பான்னு நம்பறீயா…



தெரியல...ஆனா உங்களுக்கு ஒன்னுங்கும் போது அதை என்னால தாங்க முடியல...இந்த சமயத்துல கூட நீங்க என்னோட இருக்கீங்க எனக்கொன்னும் ஆகாதுன்னு தோணுது…


போதும்மா இது ஒரு வார்த்தை போதும்...இதுவே எனக்கு சக்தி கொடுக்கும்...என்றவர்...எழுந்து நிற்க முயற்சித்தார்…

அதற்குள் பூபதியை தாக்கியவன் குறி பார்த்து ராகாவைத்தாக்க...கால் முட்டியில் அடிக்க கத்தியபடி கீழே விழுந்தாள்... மீண்டும் தாக்க வரும் பொழுது ராஜா அவனை தடுத்தபடி தேயிலை தோட்டத்தில் உருண்டார்.

ப்பா...என்று கத்தியபடி ராகா திரும்பி பார்க்க அதற்குள் மற்றொருவன் அவளது பின் மண்டையில் கனமான பொருளால் அடிக்க அவளும் தோட்டத்திற்குள் உருள ஆரம்பித்தாள்.


பூபதி ராகாவிடம் வருவதற்குள் ஓருவன் அவனையும் தாக்க பின் மண்டையை பிடித்தபடி கீழே சரிந்தான்…


ராகா கண்விழிக்கும் போழுது துப்பாக்கி சத்தம் தூரத்தில் கேட்டது...எழுந்து அமரக்கூட முடியவில்லை... இன்றைய நாள் ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது என்று கூட அவளுக்கு தெரியவில்லை எப்படி இருந்தாலும் தன்னைச் சாகடிக்க போகிறார்கள்...அதற்கு முன் கடைசியாக ராம்மை காணவேண்டும் போல இருந்தது….ஒரு முறை அவரின் குரலையாவது கேட்டால் நன்று... ஆனால் எப்படி எனத்தெரியாமல் மரத்தில் சாய்ந்தபடி இருக்க பாக்கெட்டில் ஏதோ தட்டுபட்டது... என்ன என்று எடுக்க எடுக்கவே முகம்முழுதும் ...சந்தோஷத்தை பூசியது...பூபதி அவளிடம் கொடுத்து வைத்த அலைபேசி அது...வலியை மறந்தவள் பூபதியின் ஃமொபைல் போனை கையில் எடுத்தாள்….
 
Top