27.
அதே நேரம் லண்டனில்...என்ன பிரியா சொல்லற...ராகா இங்க இல்லையா...ராம்மிற்கு தெரியாம இந்தியா அனுப்பி வச்சியா..?
****
எவ்வளவு பெரிய காரியம் செஞ்சுட்டு சின்ன விஷயம் பண்ணின மாதிரி என் முன்னாடி வந்து நிற்கற.
இந்த விஷயம் ராம்மிற்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியும் இல்ல உன்னை கொலையே பண்ணிடுவான்…
அதாங்க எனக்கும் பயமாக இருக்கு கோபத்தில என்னை நாலு அடி அடிச்சா கூட பரவாயில்லை ஆனா என்னோட பேசாம போயிடுவாரோன்னு பயமா இருக்கு ஏதாவது பண்ணுங்க ப்ளீஸ் …
சரி பிரியா இப்போ என்ன பண்ணலாம்னு முடிவு எடுத்திருக்க அதையாவது சொல்லு…
இல்லங்க ஏதாவது பொய் சொல்லி அவரை ஒரு ரெண்டு மூணு நாள் எங்காவது அழைச்சிட்டு போயிடுங்க அப்படி இல்லன்னா ராகா ரெண்டு மூணு நாள் ரூர் போயிருக்காங்கற மாதிரி நான் பொய் சொல்றேன் நீங்களும் அவரை சமாதானப்படுத்தற மாதிரி ஏதாவது சொல்லுங்க ரெண்டுல ஏதாவது ஒன்னு பண்ணினா எப்படியாவது பூபதி கிட்ட போன் பண்ணி இன்னும் ரெண்டு நாள்ல ராகாவை இங்க வர வச்சிடுவேன்…
இல்லல்ல பிரியா அது சரிவராது நீ பொய் சொல்லி பிரச்சினையை மேலும் மேலும் வளர்த்தறதுக்கு பதிலா ராம் முன்னாடி நீ உண்மையை சொல்லிடு அதுக்கப்புறம் நடக்கிறதை பார்க்கலாம் என்ன கொஞ்சம் கோபப்படுவான்... கத்துவான்.. ஆனாலும் நீ அவன் பொண்ணோட நல்லதுக்காக தான் பண்ணினனு புரிஞ்சுப்பான் பயப்படாத நான் இருக்கேன்
…
இல்லங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு…
நான் இருக்கேன்னு சொல்றேன்ல்ல வா என்றபடி ராமின் முன்பாக அழைத்துச் சென்றார்.
அவர் என்ன ஆச்சு பிரியா ராகா கூப்பிட்டாளா….என்னோடதை அட்டெர்ன் பண்ணவே மாட்டேங்கறா…என்று சொல்லவும்...
தயங்கிய பிரியா ராகாவின் போனை எடுத்து அவரின் முன்பு வைத்தார்.
என்ன இது ராகா ஃபோன் மாதிரி இருக்கு... மறந்துட்டு போய்ட்டாளா…
இல்லண்ணா...குடுத்துட்டு போனா…
புரியற மாதிரி சொல்லு பிரியா என்றவரின் குரலில் கோபம் எட்டிப்பார்த்தது.
அண்ணா என்னை மன்னிச்சிடுங்க... நான் ஒரு தப்பு செஞ்சுட்டேன் ...நீங்க இங்கிருந்து போனதும் ராகா ரொம்ப அழுதா... அந்த பையனை மறக்க முடியாம ரொம்ப கஷ்டப்பட்டா... அந்த பையனும் பிடிவாதமாக கூட வந்தா மட்டும் தான் கல்யாணம் பண்ணிப்பேன்ங்கற மாதிரி சொல்லிட்டான்... அதனால என்ன பண்றதுன்னு தெரியாம உங்க பேச்சை மீறி அவளை அந்த பையனோட இந்தியா அனுப்பி வச்சிட்டேன்... என்று கூறி முடிக்கும் முன்பு பிரியாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டிருந்தார் ராம்.
எவ்ளோ பெரிய காரியம் செஞ்சிருக்க தெரியுமா அங்க என் பொண்ணுக்கு காலன் வலையை விரிச்சி வச்சி காத்திட்டு இருக்கான்...இது தெரியாம அனுப்பி வச்சிட்டியே….
அங்க அவ உயிருக்கு ஆபத்துங்கறதால தானே இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்தது... அனுப்பிறதுக்கு முன்னாடி நீ என் கிட்ட ஒரு வார்த்தை கேக்க மாட்டியா…? நீ இருக்கிற தைரியத்துல தான் அவளை இங்க விட்டுட்டு போனேன் என்று அவரிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அவரின் அலைபேசிக்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது…
பிரியாவை முறைத்தபடியே ஃகாலை அட்டெர்ன் செய்ய….
ப்பா...என்று எதிர்முனையில் ராகாவின் குரல் கேட்கவும் ராம்மின் இதயம் பதறியது…
அம்மாடி...என்னடா ஆச்சி...ஏன் உன் குரல் இப்படி இருக்கு…
ப்பா... நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்... உங்க பேச்சை நான் கேட்கல…. என்னை மன்னிச்சிடுங்கப்பா…
என்னம்மா இது ஏதேதோ பேசற... உனக்கென்ன ஆச்சி முதல்ல அதைச் சொல்லு…
நான் சாகப்போறேன்பா...என்னை யாரோ கொல்லபோறாங்க அதுக்கு முன்னாடி உங்க முகத்தை ஒருமுறை பாக்கனும்னு ஆசைபடறேன்...விடியோ ஃகால் வாங்கப்பா...என்ற அடுத்த வினாடியே வந்தார்.
முகம் முழுவதும் பீதியுடன் மகளை பார்த்தவரின் நெஞ்சம் துடிப்பதை நிறுத்தவா எனக்கேட்டது…
முத்தில் வழிந்தோடும் ரத்தத்தோடு ஒரு மரத்தில் சாய்ந்திருந்தாள்...அவள் அமர்ந்திருந்த விதமே சொன்னது...அவளால் நடக்க முடியாது என…
எங்க ராகா நீ இருக்க...இந்த கொடுமையை நான் பாக்க கூடாதுன்னு தானே இத்தனை நாள் போராடினது...இப்போ நீயே போய் மாட்டிகிட்டியே...ஏன்மா என்று கண்ணீர் விட ஆரம்பித்தார்.
மன்னிச்சிடுங்கப்பா...எனக்கு இப்படியெல்லாம் ஆகும்னு தெரியாது... இப்படி உங்களை விட்டுட்டு பாதிலேயே போவேன்னு நான் நினைக்கலப்பா…
அப்படி சொல்லாத ராகா...இந்த அப்பா இருக்கற வரை உனக்கு அப்படி ஒரு நிலமை வராது...எது வந்தாலும் என்னை தாண்டித்தான் வரும்...நீ எந்த இடத்தில இருக்க...அதை சொல்லு…
தெரிலப்பா...ஃபுல்லா தேயிலை தோட்டம்...மாஞ்சொலைன்னு பூபதி சொன்னான்...ஆனா சரியா எந்த இடம்னு தெரியல…
நீ பயப்படாத ராகா தைரியத்தை இழக்காத...அப்பா நான் இருக்கேன்…. என்று சொல்லவும் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
ப்பா….சாகறதுக்கு முன்னாடி ஒரு விஷயம் உங்ககிட்ட கேக்கனும்னு நினைக்கறேன்...உண்மையை சொல்லுங்கப்பா...இங்க ஒருத்தர் என்னை அவர் பொண்ணுன்னு சொல்லறாரு...உண்மையாப்பா…
எனக்கும் அவரை பாத்தா...ஏதோ ஒரு பாதுகாப்பு உணர்வு தோணுது... என்று சொல்லவும்... அதிர்ச்சி அடைந்தவர்...ராகா...என்றார்.
சொல்லுங்கப்பா...இனி உங்களை என்னால பாக்க கூட முடியாது...
கடைசியா இதை உங்ககிட்ட கேக்கனும்னு தோணிச்சி தப்பா எடுத்துக்காதீங்க..
இல்லம்மா உனக்கு நான் தான் அப்பா... நான் மட்டும் தான் அப்பா வேற யார் சொல்றதையும் நம்பாதே...நீ கவலை படாதம்மா...அப்பா உன்னை விட்டிட மாட்டேன் நீ ஃபோன் வை...என்று கூறவும்…
லவ் யூ பா...மிஸ் யூ…. அடுத்த ஒரு ஜென்மம் இருந்தா அப்போவும் உங்களோட மகளா பிறக்க அந்த கடவுள் எனக்கு வாய்ப்பு கொடுக்கனும்...என்று கூறும் பொழுதே ஒருவன் கையில் கட்டையுடன் ராகாவின் பின்புறம் தெரிந்தான்…
ராகா பின்னாடி யாரோ இருக்காங்க பாரு என்று கூறவும் அதிர்ச்சி அடைந்து பின்புறம் திரும்பிப் பார்ப்பதற்குள் கட்டையை கொண்டு அவன் தாக்கவும் ...ப்பா...என்றபடி பள்ளத்தில் உருள ஆரம்பித்தாள். ஃபோன் எங்கோ சென்று விழுந்தது.
நோஓஓஓஓ…. என்று கத்திய ராம்... என் பொண்ணை நான் சாக விடமாட்டேன் என் உயிரைக் கொடுத்தாவது என் பொண்ணை காப்பாற்றுவேன் அவளுக்கு ஒன்னும் ஆகாது ஆகவும் விடமாட்டேன் என்று பைத்தியம் போல் கத்த ஆரம்பித்தார்...பிறகு வேகமாக திருநெல்வேலியில் அவரது மருத்துவமனையை கவனித்துக்கொள்ளும் ஹரிக்கு போன் செய்தார்.
ஹரி அங்கே என் பொண்ணு ஆபத்துல மாட்டி கிட்டா... எப்படியாவது அவளை காப்பாத்து என்று கெஞ்சினார்.
என்ன ஏது என்று அவர் கேட்க ...டேய் விவரமா சொல்றதுக்கு என்கிட்ட நேரமும் இல்லை பொறுமையும் இல்லை...நீ முதல்ல கமிஷனர் ஆபீஸ் போ...மேல மாஞ்சோலை கிராமத்தில கஷ்டப்படற என் பொண்ணை காப்பாத்து... அவ மேல அடுத்த அடி விழறதுக்கு முன்னாடி நீ அங்க இருக்கணும் ப்ளீஸ்டா நீ பேரு வச்சு குடுத்த குழந்தைடா அவ...இப்போ யார்கிட்டயோ அடி வாங்கிட்டு இருக்கா என்று கெஞ்சினார்.
பிறகு நேராக மனைவிக்கு புகைப்படத்தை முன் நின்று கை கூப்பி மண்டியிட்டு கதற ஆரம்பித்தார்.
காவ்யா நம்ம பொண்ணு அங்க கஷ்டப்பட்டுகிட்டு இருக்கா அவளை நான் எப்படி காப்பாத்த போறேன்னு தெரியல... நான் இன்னைக்கு இந்த உலகத்தில் உயிரோட இருக்கேன்னா அதுக்கு அவ மட்டும் தான் காரணம்...இன்னைக்கு அவளே போகப்போறா... அதுக்கப்புறம் நான் இருந்து என்ன செய்ய போறேன்…ஏதாவது பண்ணி நம்ம பொண்ணை காப்பாத்தி குடு காவ்யா...என்று கண்ணீர் விடவும் வாசலில் இருந்த வாஸ்து மணி ஒலித்தது.
இதற்கு முன் ஒருமுறை இதுபோல ஒலித்திருக்கிறது... அப்பொழுது கலை…. அங்கு நின்றாள்... இப்பொழுதும் ஓலிக்கிறது…. அப்படி என்றால் கலை வந்திருக்கிறாளா... எப்படி முடியும் அவளை தான் அடைத்து வைத்தாயிற்றே… என்று நினைத்தவருக்கு...பூஜைசெய்த பெரியவர் கூறியது நினைவு வந்தது…
எக்காரணம் கொண்டும் இந்த எந்திரத்தை வெளிய எடுக்க கூடாது... அப்படி எடுத்தா ஆன்மா ரொம்ப உக்கிரமா வெளியே வரும்... என்பது நினைவு வரவுமே
உடனே ராம்மின் முகம் பிரகாசமானது...
தேங்க்ஸ் காவ்யா...என்றவர் மண்வெட்டியை எடுத்துக்கொண்டு பின்பக்க தோட்டத்தை நோக்கி ஓடினார்.
அதுவரை அங்கு நடப்பவற்றை எல்லாம் அழுதபடியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிரியாவும் கேசவ்வும் கூட இப்பொழுது அவரின் பின்னே ஓட ஆரம்பித்தார்கள்....
மரத்தின் அருகே வந்தவர் புதைத்த இடம் பார்த்து வேகமாக தோண்ட ஆரம்பித்தார்..
பொறுமை இழந்த கேசவ் டேய் என்ன பண்ணற...அங்க நம்ம ராகா கஷ்டப்பட்டுகிட்டு இருக்கா இங்க நீ மண்ணை தோண்டற…
இப்போ ராகாவை அவ அம்மாவத்தவிர வேற யாராலுமே காப்பாத்த முடியாது... அதான் கலையை வெளியே கொண்டு வர்றேன் .
புரிற மாதிரி சொல்லு ராம்... ராகா வோட அம்மா இந்தக் குழிக்குள்ள இருக்கறான்னா அப்போ காவ்யா
என்று கேட்கவும்... .
ராகா என்னோட சொந்த பெண் கிடையாது வளர்ப்பு மகள் என்றவர்...இருபது வருடங்களுக்கு முன்னால் ராகா பிறந்ததை பற்றியும் சில நாட்களுக்கு முன்னால் வீட்டில் செய்த பூஜையை பற்றியும் ரத்தின சுருக்கமாக குழியை தோண்டிக்கொண்டே வேகவேகமாகக் கூறினார் ராம்.
திடீரென ராமின் கை பிடித்து தடுத்த கேசவ்... நீ சொல்ற ஆன்மா பத்தி சொன்ன கதைகள் எதுவும் நம்புற மாதிரி இல்லை ஆனாலும் ஆன்மா... இருக்கிறது உண்மைங்கற பட்சத்தில் அது வெளியே வரும் போது ரொம்ப உக்கிரமா இருக்கும்...உன் உயிருக்கே ஆபத்துன்னு பெரியவர் சொல்லிருக்காருடா... தெரிஞ்சே ஆன்மாவை வெளியே கொண்டுவர்ற... என்னால நீ செய்யறதை ஏத்துக்க முடியாது...நாம வேற வழியை தேடலாம் என்றார்.
கோபமாக கேசவ்வின் கைகளைத் தட்டி விட்ட ராம்... அங்க கஷ்டப்பட்டு இருக்கிறது என்னோட பொண்ணு அவளை விட எனக்கு என் உயிர் முக்கியமாப் போச்சா ...நல்லா கேட்டுக்கோ முடிஞ்சா எனக்கு உதவி பண்ணு அப்படி இல்ல இங்கிருந்து கிளம்பி போய்கிட்டே இரு …
என் உயிரைக் கொடுத்தாவது என் பொண்ணை நான் காப்பாற்றுவேன் நீங்க ரெண்டு பேரும் முதல்ல தள்ளிப்போங்க என்றவர் பாதி குழியைத் தோண்டி முடிக்கும் பொழுது அந்த இடத்தில் வானிலை மாற்றம் ஏற்பட்டது.
பயங்கரமான புயல் காற்றுடன் அடைமழை அடிக்கத் தொடங்கியது ராம்மிருக்கு புரிந்துவிட்டது கலையின் ஆன்மா வேலை செய்ய ஆரம்பித்து விட்டது என... அதனால் ப்ரியாவையும் கேசவ்வையும் பார்த்து நீங்க எல்லாரும் உடனே போய் பூஜை ரூம்ல இருந்துக்கோங்க நான் சொல்ற வரைக்கும் வெளியே வரகூடாது என்று கூறவும் பிரியாவும் கேசவ்வும் அந்த இடத்தை விட்டு இம்மி கூட நகராமல் நின்று கொண்டிருந்தனர்.
என்னாச்சு உங்க கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன்...காதுல விழல என்று கேட்க கேசவ்வும் வந்து கைகளால் மணலை அள்ளி போட ஆரம்பித்தார்…
டேய் என்ன செய்யற நீ…என்று ராம் கோபத்தில் கத்தினார்.
நல்லா இருக்குடா உன் நியாயம்... வளர்ப்பு மகளுக்காக உன் உயிரை வேணாலும் கொடுக்க நீ துணிவ…. ஆனா நண்பனோட உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சும் நான் ஒடிப்போய் ஓளிச்சிக்கனுமா...எப்படி ராம் உன்னால இப்படி எல்லாம் பேச முடியுது நீயும் நானும் அப்படியா பழகிருக்கோம்... என்ன ஆனாலும் சரி டா இந்த பிரச்சினையை நீயும் நானும் சேர்ந்தே சரிசெய்யலாம்…. எப்பவும் நான் உன்கிட்ட சொல்லறது தான்…உனக்காகறது எனக்கும் ஆகட்டும் என்றார்.
உடனே ராம் பிரியாவை பார்த்து அவன்தான் பைத்தியக்காரன் மாதிரி பேசிக்கிட்டிருக்கிறான் நீயும் பேசாம நிக்கறீயே...அவனை அழைச்சுக்கிட்டு உள்ள போ என்றார்.
அதற்கு பிரியா கண்கலங்கியபடி என்னால தான் ராகா இவ்வளவு பெரிய பிரச்சினையில மாட்டியிருக்கிறா... அப்படி இருக்கும் போது அவளுக்கு ஒரு பிரச்சினைனு தெரிஞ்சு என்னால எப்படி நீங்க சொல்லறது போல நடந்துக்க முடியும்…?
என் கணவர் சொல்ற மாதிரிதான் எதுவானாலும் நம்ம எல்லாரும் சேர்ந்து நடக்கட்டும் எல்லாரும் சேர்ந்து அவளை காப்பாற்றலாம் இல்லையா நாமளும் சேர்ந்து அவளோடவே போகலாம்..
அவ இல்லாத உலகத்திலே என்னால வாழ முடியாது அண்ணா என்றபடி அங்கேயே கடவுளை வேண்டியபடி நின்றார்.
குழி முழுவதும் தோண்டி முடிக்க...மழையில் நனைந்தபடி. தகடு குழிக்குள் ஆட ஆரம்பித்தது...அதை வெளியே எடுப்பதற்காக ராம் கையை உள்ளே விட...எந்திரதகடு தானாகவே மேல் நோக்கி எழும்பியது…
பிரியா தள்ளிப்போ...என்று கத்தியவர் கேசவ்வை பிடித்து எதிர்புறமாக தள்ளிவிட்டார்…
தகடு வெளியே வந்து விழும்பொழுது பயங்கர இடிச்சத்தமும் மின்னலும் உண்டாயிற்று…
வெளியே வந்த உடனே..ஹேஏஏஏஏ...என்ற பெருத்தச்சத்ததோட கலையின் ஆன்மா தலைவிரிகோலமாக மிகப்பெரிய உருவத்துடன்.. ஆக்ரோஷமாக ராமின் முன்பு நின்றது….அந்த சத்தத்தில் பத்தடி தூரம் பறந்து ஒரு மரத்தில் மோதி கீழே விழுந்தார் ராம்... இப்பொழுது அணைவருக்குமே கலை காட்சியளித்தார்... என்னை அடைச்சி வச்ச உங்க யாரையும் நான் உயிரோட விடப்போறதில்லை என்று கத்த ஆரம்பித்தார்.
கேசவ்வோ அவருக்கு உதவ எழுந்து ஒடி வர..கலை அவரை பார்த்து முறைக்க யாரோ அவரை பின்னிருந்து இழுத்துச் சென்றனர்.
ஆங்காரமாக கலை ராம்மின் முன்பு வந்து நிற்க எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டாமல் கால்களை விரித்தபடி அமர்ந்திருந்தார்…கலை அவரை பார்த்து கையை நீட்டி மேல தூக்க ராம் அந்தரத்தில் அவரின் கழுத்தை பிடித்தபடி தொங்கினார்...மூச்சிவிட சிரமப்பட்டு கால்களை ஆட்டி போராட அதை பார்த்த பிரியா கால்களை மடித்து கலையின் முன்பாக கையெடுத்துக் கும்பிட்டு கெஞ்சினார்.
இங்க பாருங்க...நாங்க உங்களை அடைச்சி வச்சது மிகப்பெரிய தப்புதான்...ஆனா அதுக்காக எங்களை தண்டிக்கறதுக்கான நேரம் இது இல்ல...அங்க நம்ம பொண்ணு உயிருக்கு போராடறா...அவளை இப்போ உங்களால மட்டும் தான் காப்பாத்த முடியும்...முதல்ல அங்க போய் ராகாவை காப்பாத்துங்க...நாங்க எங்கேயும் போகமாட்டோம்… உங்க கோபத்தை எங்ககிட்ட காமிச்சு நேரத்தை வீணடிக்காதீங்க... இப்போ நீங்க உங்க கோபத்தைக் காட்ட வேண்டிய இடம் இது இல்ல... எப்படியாவது என் பொண்ணை காப்பாத்தி என் கைல கொடுங்க என்று கெஞ்சிக் கொண்டிருக்கும் பொழுதே தலை தூக்கி வினாடி நேரம் வானத்தை பார்த்த கலை அங்கிருந்து மின்னலாக மறைந்தார்.
அவர் செல்லவும் தொப்பென ராம் கீழே விழுந்தார்...தவழ்ந்த படி கேசவ்வும் அவரிடத்தில் ஒடி வந்தார்…
ராம் உனக்கு ஒன்னுமில்லல்ல…
சற்று இருமியவர் நான் நல்லாத்தான் இருக்கேன் ...ஆனா நான் இங்கிருந்து நேரத்தை வேஸ்ட் பண்ண கூடாது உடனே நான் இந்தியா போகனும் என்றபடி எழுந்தார்…
உடனே பிரியாவும் கேசவ்வும் நாங்களும் கூட வர்றோம்...என்றனர்.
நீங்க எதுக்கு...இங்க குழந்தைங்க இருக்காங்க...அவங்களை யார் பாத்துப்பா…என்று கவலையாக ராம் கேட்டார்.
அவங்களையும் நம்மோடவே அழைச்சிட்டு போகலாம் அண்ணா…
எதுக்கு பிரியா... உங்களுக்கு சிரமம்…
உங்கள அங்க அனுப்பி வைச்சிட்டு உங்களுக்கும் ராகாவுக்கும் என்ன ஆச்சோ ஏது ஆச்சோனு இங்கே இருந்து நான் பரிதவிக்கிறதுக்கு பதிலா உங்களோடவே வந்து என்னன்னு பார்த்துட்டா என் மனசு கொஞ்சம் ஆறுதல் அடையும் அண்ணா ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க இப்ப நா ராகாவோட அம்மாவா உங்ககிட்ட கேட்கிறேன் என்று கேட்க சரி என்று தலையசைத்தார் ராம்...
அதன்பிறகு அடுத்த சில மணி நேரங்களிலேயே அனைவரும் லண்டனை விட்டு இந்தியா செல்ல ஆயத்தமானார்கள்.
இங்கே தேயிலை தோட்டத்தில் போனில் பேசிக்கொண்டு இருக்க இருக்கவே ராகாவை பின் இருந்து தாக்கவும் பிடிமானம் இல்லாமல்...தேயிலை தோட்டத்தில் கீழ் நோக்கி உருண்டாள்….
அடித்தவனோ அவளை எட்டிப்பார்த்தபடி பொறுமையாக இறங்கி வர ராகா வேகமாக உருண்டு வந்து ஓரு சிற்றோடையில் வந்து விழுந்தாள்…
உடல் முழுவதும் காயம்...வலி வேறு கண்விழிக்க முடியாமல் சிறிது நேரம் கிடந்தாள்…பிறகு கடினப்பட்டு எழ முயற்சித்தாள்.
அவள் காதுகளில் தேடிவருபவனின் காலடிச் சத்தம் தனியாக கேட்டது…
அவள் கண்களில் இருந்து வழியும் கண்ணீர் நெற்றியிலிருந்து வழிந்த குருதியோடு கலந்து காணாமல் போனது... ஏற்கனவே காலில் அடிபட்டு இருக்கிறது இப்பொழுது உருண்டதில் இடுப்பில் வேறு நன்கு அடிபட்டு இருந்ததால் அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க இயலவில்லை...சிற்றோடையில் வயிற்றை கொண்டு தவழ்ந்த படியே ஒரு மரத்தின் அருகில் சென்று மறைந்தாள்...மீண்டும் எழுந்து அமர முயற்சித்தாள் பலனில்லை...தலையை தரையில் மோதியபடி தப்பு பண்ணிட்டேன்பா...உங்க பேச்சை நான் கேட்டிருக்கும் என்று அழ ஆரம்பித்தாள்... இப்பொழுது ஒடையில் நடந்து வரும் சத்தம் கேட்கவும் மூச்சை இழுத்துப் பிடித்து கால்களை மடித்து அமர்ந்தாள்…
அப்பொழுது சத்தம் கேட்டு அந்த பக்கம் வந்தவன் ராகாவை பார்த்து விட்டான்.
கோணல் சிரிப்பு சிரித்தபடி வந்தவன்...உன்னை இனி எப்படிதான் அடிக்கறது...நீ சாகவே மாட்டியா…?
உன்னை அடிச்சி நான் டயர்ட் ஆயிட்டேன் என்றபடி அருகில் வந்தவன் இம்முறை கட்டையால் அடிக்காமல் அவளின் மூடியை பிடித்து தூக்கியவன் கன்னத்தில் மாறிமாறி அடைந்தாள்.
வலி தாங்காமல் அவள் தொய்ந்து விழ... மூக்கின் அருகில் கை வைத்து பார்த்தவன்…
ச்சே...பொண்ணா இல்ல பேயா என்று கேட்டபடி ஷூ கால்களால் கழுத்தை இறுக்கினான்.
கைகளை கொண்டு அவனின் கால்களை பிடித்து போராட ஆரம்பித்தாள் ராகா...ஒரு கட்டத்தில் மூச்சுவிட திணறியவளின் ஒட்டு மொத்த உடலும் தொய்ந்தது….அப்பொழுது தீடிரென அந்த இடத்தில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட பயந்தவன் ராகாவை விட்டுவிட்டு அங்கிருந்த படியே ரோட்டை பார்த்தான்...ஆங்காங்கே பாறைகள் உருளவும் பயந்தவன் ராகாவை ஒருமுறை பார்த்து விட்டு அங்கிருந்து செல்லலாம் என நினைத்து வந்து பார்க்க அவள் அங்கில்லை…
எங்க போனா...என்றபடி சுற்றிலும் தேட ஆரம்பித்தான்...அப்பொழுது அவனின் பின் இருந்து ராகவின் குரல் கேட்டது என்னையா தேடற என்றபடி.
பயந்து திரும்ப…. இப்போது கம்பீரமாக அவனையே பார்த்தபடி ராகா நின்று கொண்டிருந்தாள்.
அவளை கண்டதும் பயந்து ஓரடி பின்னால் நகர்ந்தவன்... எப்படி எழுந்து நிக்கற….என்று கேட்க.
நீ அடிச்சதுக்கு என் பொண்ணால எழுந்து நிக்க முடியாது...ஆனா நான் அவளுக்குள்ள போனதால ...நிக்கறது மட்டும் இல்ல உன்னை கொலையும் செய்வா…என்ற பொழுது ராகா முற்றிலும் கலையாக மாறி இருந்தாள்.
ஏய் பைத்தியம்...என்னையே கொலை செய்வியா என்றபடி முன்னால் வர...சிரித்த கலை...அவனின் தலையை பிடித்து மரத்தில் வேகமாக முட்டினாள்... அப்பொழுதே அவனின் தலை பிளந்து உடனடி மரணத்தை தழுவ சிரித்தபடியே கீழே விட்டவள் அவன் முகத்தின் மீது காலை வைத்து ஏறி மிதித்தபடி ராஜாவைத் தேடிச்சென்றாள்.
மற்றொரு இறக்கத்தில் மயங்கி கிடந்தவரை எடுத்து தோளில் போட்டபடி மேல் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
வழியெங்கிலும்
மண் சரிவு ஏற்பட்டிருக்க அசால்டாக அதில் ஏறி பூபதியை தேடிச் சென்றாள்…
பூபதி ஒர் இடத்தில் மயங்கிக்கிடக்க அவனின் பக்கத்தில் ராஜாவை கிடத்தினாள்...இப்பொழுது வானில் ஹெலிகாப்டர் வட்டமிட்டது...மேல் நோக்கி ராகா பார்க்க... ஹரியின் குரல் கேட்டது ராகா நாங்க வந்துகிட்டு இருக்கோம் பயப்படாத...இனி உனக்கு ஆபத்தில்ல...எங்களை பாத்து பயப்படாத உன் அப்பா ராம்மோட ஃப்ரண்ட் தான் நான்...உங்க ஹாஸ்பிடலை பாத்துக்கறவன்...என்று சொல்லவும் சிரித்துக் கொண்டவள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
நேராக சண்டையிட்ட இடத்திற்கு வர சிறியவர் குண்டடி பட்டு கீழே கிடந்தார்.
அவருக்கும் வடிவிற்கும் ஏற்பட்ட சண்டையில் வடிவு ஜெயித்துவிட்டார் போல….இத்தனை ஆண்டுகால வன்மத்தை இன்று தீர்த்துக் கொண்டார்.
பெரியவரைத் தேட அவரும் அடிபட்டு மயங்கி கிடந்தார்…
சின்னரிடம் வந்தவள்...நீங்க சாகவேண்டியவங்க தான்... உங்களோட அளவுக்கதிகமான பெண் ஆசையால எத்தனை குடும்பங்கள் அழிந்து இருக்கு நீங்க மட்டும் சரியா இருந்திருந்தா இன்னைக்கு இதுபோல் அசம்பாவிதம் எதுவுமே நடந்திருக்காது என்று கூறிய கலை விழிமூடி சில வினாடிகள் அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொண்டார்.
பிறகு இந்த பக்கம் திரும்ப...ராகாவின் பெரியப்பாக்கள் மயங்கி கிடந்தனர்…சுற்றிலும் ஏராளமான ஆட்கள் அடிபட்டு கிடந்தனர்...சிலர் உயிரை விட்டிருந்தனர்….
சற்று தொலைவில் வடிவும் அவரின் தம்பிகளும் காவல் துறை அந்த இடத்திற்கு வந்ததை தெரிந்து கொண்டு காரில் ஏறி தப்பித்து செல்ல முயன்றனர்…பாலனும் முத்துவும் ஒருகாரில் ஏறி தப்பிச்செல்ல மற்றொரு காரில் வடிவும் சிதம்பரமும் இருந்தனர்.
சிரித்தவள் வேகமாக அவர்களின் முன்பு சென்று நின்றாள்.
அவளைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சிதம்பரம் காரை விட்டு இறங்கி ஏய் நீ இன்னும் சாகல உனக்கு சாவே கிடையாதா என்று கேட்டபடி அவளை நோக்கி முன்வந்தார்…
எத்தனை முறை சாவடிப்பீங்க...என்று திருப்பிக்கேட்க….கோபம் கொண்டவர் வேகமாக முன் வந்தார்.
தடுத்த வடிவு டேய் போலீஸ் வந்துருச்சு இப்போ நீயும் நானும் இங்கிருந்து தப்பிக்கலன்னா காலத்துக்கும் களிதான் திங்கனும் காரை அவ மேல ஏத்திட்டு கிளம்புடா என்று கூறவும்…
இத்தனை உயிர் உன் கண்ணு முன்னாடி செத்ததை பார்த்தும் கூட நீ திருந்தலல்ல... உனக்கு உயிரோட அருமையே தெரியல... இன்னும் கொஞ்ச நேரத்துல புரிய வைக்கறேன் என்ற கலை அவர்களையே பார்த்து முறைக்க இப்பொழுது கார் அதுவாகவே இயங்க ஆரம்பித்தது…
அத்தோடு இல்லாமல் மிக வேகமாக சென்றது.
உள்ளிருந்த வடிவும் சிதம்பரமும் பயங்கரமாக கத்த ஆரம்பித்தார்கள்…
வேகமாக சென்ற கார் பாலனும் முத்துவும் சென்ற காரின் மீது பயங்கரமாக மோதி நின்றது.
தம்பிகள் சென்ற கார் வேகமாக இடிபடவும் கட்டுப்பாட்டை இழந்து மலையிலிருந்து உருள ஆரம்பித்தது….ஒரு கட்டத்தில் வெடித்து சிதறியது...
தன் கண் முன்னே இரண்டு தம்பிகளும் தீப்பற்றி எரிவதைக் கண்டு படுபயங்கரமாக கத்தி அழத் தொடங்கினார் .
சிதம்பரமோ காரை விட்டு இறங்க கதவை திறக்க அது லாக் ஆகி இருந்தது... அதை திறக்க போராடிக் கொண்டிருக்க வடிவு தலையில் அடித்தபடி ...ஐய்யோ...ஐய்யோ...என பயங்கரமாக அழுது கொண்டிருந்தார்.
இப்பொழுது காரின் வெளியே இருந்த கலை வடிவைப் பார்த்து உயிரோட அருமை என்னன்னு இப்போ புரியுதா இப்படித்தானே நீ கொலை பண்ணின ஒவ்வொருத்தருக்கும் ஒரு குடும்பம் இருந்திருக்கும்... உன்ன மாதிரி தானே அவங்களும் துடிச்சிருப்பாங்க... ஆனாலும் நீ துடிக்கிறதை பார்க்கும்போது எனக்கும் கொஞ்சம் பாவமாத்தான் இருக்கு அதனால தம்பியையும் அக்காவையும் பிரிச்ச பாவம் எனக்கு வேண்டாம் நீயும் அவங்களோடவே போ என்று கூறி முடிக்கும் பொழுது மீண்டும் கார் தானாகவே வேகம் பிடித்தது... சிதம்பரம் அதை கட்டுப்படுத்துவதற்கு போராடி தோற்ற ஒரு மரத்தில் மோதி அதுவும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
அடுத்த நொடி ராஜா பூபதி இருவர் கிடந்த இடத்திற்கு வந்திருந்த கலை கணவரின் தலைகேசத்தை கோதிவிட்டாள் பிறகு நெற்றியில் மென்முத்தம் இட்டார்…இதோட என்னோட கடமை முடிந்தது... உங்க பொண்ணை உங்ககிட்ட ஓப்படைச்சிட்டேன்... இனிமே எது நல்லதுன்னு நீங்கதான் பார்த்து செய்யணும்... உங்களைப் பார்த்து உங்க கிட்ட சொல்லிட்டு போகணும்னு தான் ஆசை ஆனா உங்க மக உங்க கையை எப்போ பிடிக்கறாளோ அத்தோட என் கடமை முடியுது என்னோட ஆன்மாவுக்கு விடுதலை கொடுங்க... ஒருவேளை உங்களோட இருக்கிறதுக்காண வாய்ப்பு எனக்குக் கிடைச்சா கண்டிப்பா அதைப் பயன்படுத்திக்கிட்டு உங்க எல்லார்கிட்டயும் நான் மறுபடியும் வந்துடுவேங்க இப்போ நான் போறேன் என்னை மன்னிச்சிடுங்க...என்று கூறியவர் அங்கிருந்து கிளம்பினார்.
அவர் கிளம்பவும் ராகா சுயநினைவின்றி அவர்களின் அருகே விழுந்தாள்.
சற்று நேரத்திற்கெல்லாம் பூபதியின் குரல் எங்கோ கேட்பது போலிருந்தது…
ராகா...எழுந்திரி...ராகா...ராகா…
கூடவே தந்தையின் குரல் கதறலாக அம்மாடி...கண்ணை திற... இந்த அப்பாவை இப்படி ஏமாற்றத்தான் இவ்வளவு தூரம் வந்தியா எழுந்திரிம்மா...அப்பாவால இந்த வலியை தாங்க முடியல... என்றபடி…
ஆங்காங்கே ஆம்புலன்ஸ் சத்தம் கேட்கிறது அவளைச் சுற்றிலும் எங்கெங்கோ காலடித்தடங்கள் கேட்கிறது கடைசியில் அப்படி ஒரு அமைதி…
அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி இப்பொழுது ஒரு இனிமையான குரல்...அக்கா...அக்கா...என...அட இது நேத்ரா,நேகாவின் குரலாயிற்றே... அப்படி என்றால் நான் லண்டனிலா இருக்கிறேன் இவ்வளவு நேரம் கண்டது கனவா என்ன…? என்று குழம்பியபடியே விழி திறக்க கனவில்லை எல்லாம் நீஜம் தான் என்று சொல்லும்படியாக ராம், பிரியா கேசவ் தலை மற்றும் கையில் கட்டுக்களுடன் ராஜா பூபதி என அனைவருமே நின்றிருந்தார்கள்.
குழப்பமாக எழுந்தவள் அனைவரையும் பார்த்து சந்தோஷத்தோடு...எனக்கு ஒன்னும் ஆகல...என்றாள்...பிறகு அறையை சுற்றி பார்த்து நான் எங்க இருக்கேன் என்றாள்.
நம்ம வீட்ல இருக்கற ராகா என்றபடி பாட்டி வந்தார்.
நம்ம வீடா என்றபடி ராமை பார்த்தவள்..ப்பா நீங்களாம் எப்படி இங்க ..என கேட்டாள்.
நீ அப்பாக்கு அந்த கோலத்துல ஃபோன் செஞ்சா அப்பாவால எப்படி அங்க இருக்க முடியும் அதான் உடனே கிளம்பிட்டேன்...கூடவே பிரியா,கேசவ் வர்றேன்னாங்க... கூட்டிட்டு வந்துட்டேன்...என்றார்.
இப்பொழுது பூபதியை பார்த்து...உங்க அப்பா, பாட்டி எல்லாரும் எங்க..அவங்களுக்கு ஒன்னும் ஆகலல்ல என்று கேட்கவும் பதில் சொல்ல கூச்சப்பட்டு பூபதி தரையை பார்த்தான்…
என்னாச்சு பூபதி...ஏன் சொல்ல மாட்டேங்கற...அவங்க தப்பு செஞ்சதுக்காக உன்னை நான் வெறுத்திட மாட்டேன்...பதில் சொல்லு..
நான் சொல்லறேன் ராகா என்றபடி ராஜா அருகில் வந்தார்.
அன்னைக்கு நடந்த பிரச்சனைல...நிறையா உயிரிழப்புமா...
நம்மள காப்பாத்த வந்த என்னோட அப்பாவும் சித்தப்பாவும் அங்க இருந்தவங்களோட சண்டை போட்டதுல...என் அப்பா அடிபட்டு மயக்கம் ஆயிட்டாங்க...இதை பாத்து கோபம் கொண்ட சித்தப்பா சித்தியை குறி பாக்க...சித்தி தைரியமா முன்ன வந்து துப்பாக்கியை பிடுங்க பாத்திருக்காங்க...அதுல ஏற்பட்ட பிரச்சனைல சித்தப்பாவை சித்தி சுட்டு கொன்னுட்டாங்க…
அதை பாத்து என் அண்ணனுக சண்டைக்கு போக அவங்களுக்கும் பயங்கர அடி…
நல்ல வேலை நீ மிஸ்டர் ராம்மிக்கு ஃகால் செஞ்சிருக்க ...அவர் உடனே இங்கிருக்கிற அவர் நண்பர் மூலமா கமிஷனர் ஆபீஸ் போய் அங்கிருந்து போலீஸ்காரர்களை வர வெச்சிருக்காங்க…மலைக்கு வர லேட் ஆகும்னு உடனே ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து கூட்டிட்டு வந்திருக்காரு…
அதை பார்த்து பயந்து என் சித்தியும் அவங்க தம்பிகளும் அங்கிருந்து தப்பிக்கும் போது எதிர்பாராத விதமா ரெண்டு பேரோட வாகனமும் விபத்துக்குள்ளானதில அவங்க எல்லாருமே செத்துட்டாங்க…
அப்புறமா நம்மையெல்லாம் காப்பாத்தி இங்க கூட்டிட்டு வந்து ட்ரீட்மென்ட் குடுத்திருக்காங்க…இது எல்லாத்தையும் உன் தாத்தாவும் பெரியப்பாவும் தான் எங்க கிட்ட சொன்னாங்க அதை நான் இப்போ உன்கிட்ட சொன்னேன்...என்றவர் மேலும் இதுல என்ன ஆச்சரியம்னா வெவ்வேறு இடத்தில் அடிபட்டு விழுந்த நாம மூணு பேருமே ஒரே இடத்துல இருந்திருக்கோம் என்று கூறவும் ராம்மிற்கு உடனே புரிந்தது அது யாருடைய வேலை என்று...எதையும் சொல்லி மேலும் அவர்களை குழப்ப வேண்டாம் என நினைத்தார்.
ஆனா எங்களுக்கெல்லாம் உடனே மயக்கம் தெரிஞ்சிருச்சு ஆனால் நீ ஆஸ்பத்திரியில் இரண்டு நாள் மயக்கத்தில இருந்த அதுக்கு அப்புறம் அப்படியே கோமாக்கு போய் எங்களை எல்லாம் ரொம்ப பயமுறுத்திட்ட... மிஸ்டர் ராம் வந்து உன்னைப் பார்த்துட்டு வீட்டிலேயே உன்னை குணப்படுத்தலாம்னு சொல்லி நேத்துதான் இங்க உன்னை மாத்தனாங்க... கடவுள் புண்ணியத்துல இன்னைக்கு நீ கண்முழிச்சிட்ட என்று கூறினார்.
அப்பொழுது அங்கு வந்த பணிப்பெண் அனைவரையுமே தாத்தா அழைத்ததாக கூறினாரர்.
உடனே அனைவரும் தாத்தாவை பார்க்க போக அவரின் முன்பு வக்கீல் அமர்ந்திருக்க முன்னால் கட்டுகட்டாக பத்திரங்கள் இருந்தது…
என்ன என்று அனைவருமே ஆராய்ச்சியோடு பார்க்க இத்தனை நாள் ஜமீன் சொத்து பிரியக்கூடாது... ஜமீன் வம்சம்னு ரொம்ப திமிரா வாழ்ந்தோம்... இனிமே இந்த ஜமீன்வீடும் ஜமீன்பேரும் , யாருக்குமே கிடையாது உயில்ல இருக்கிற சொத்துக்களை தவிர மீதி எல்லாத்தையும் சரிசமமா ஆறு பேருக்கும் பிரிச்சி எழுதியிருக்கேன் இனி அவங்க அவங்களோட வாழ்க்கையே அவங்கவங்க பார்த்துக்கோங்க என்றார்..
உடல் முழுவதும் கட்டுக்களுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த காமாட்சி பூபதி இங்க வா என அழைத்தார் .
உடனே அவனும் அவரருகில் செல்ல பூபதி எனக்கு ஒரு உதவி செய்வியா…?
என்னம்மா சொல்லுங்க..?
இந்த சொத்துல ஒரு ரூபா கூட நமக்கு வேணாம்... இந்த சொத்துக்காக தான் உன் பாட்டியும் அப்பாவும் அந்த நிலை நின்னாங்க... இன்னைக்கு அவங்களும் இல்ல... உன் அப்பாவுக்கு இன்னொரு குடும்பம் சென்னையில் இருக்கிறதா சொன்னாங்க அவங்களை தேடி இந்த சொத்துக்களை அவங்க கிட்ட கொடுத்திடு…உன் அப்பாவோட கடைசி ஆசை அவரோட அந்த குடும்பம் என்னைக்குமே சுகபோகத்தை இழந்திட கூடாதுன்னு அதை மட்டுமாவது நாம நிறைவேற்றலாம்…இனிமே நமக்கு உரிமை இல்லாத இந்த இடத்தில இருக்கிறதும் தப்புப்பா...
நீ நல்லா படிச்சிருக்க... சீக்கிரமா ஒரு வேலை தேடிக்கோ இந்த அம்மாவை நல்லா பார்த்துக்கோடா என்று கூறவும் சரிம்மா என்றான்.
அடுத்தடுத்த நாட்களில் சொத்துக்கள் அனைவருக்கும் சரி பங்காக கொடுக்க... பூபதியின் சொத்துக்களை வக்கீலிடமே கொடுத்து தந்தையின் இன்னொரு குடும்பத்தை தேடி கொடுக்க வேண்டிய பொறுப்பை அவரிடத்தில் ஒப்படைத்தான்.இப்பொழுது காமாட்சிக்கு காயங்கள் ஓரளவுக்கு சரியாக சக்கர நாற்காலி இல்லாமலே நடக்க ஆரம்பித்தார்.
அதன் பிறகு காமாட்சியும் பூபதியும் வீட்டை விட்டு கிளம்ப... அனைவருமே எவ்வளவோ தடுத்து பார்த்தார்கள் காமாட்சி யார் பேச்சையும் கேட்க வில்லை கடைசியாக ராகா அழைக்கவும்.
இருவருமே நின்றனர்.
பூபதி அந்த எஸ்டேட் மக்களுக்கு உன்னால் ஆனதை செய்வேன்னு எனக்கு வாக்கு கொடுத்துட்டு இப்படி பாதியில் போனா எப்படி என்று கேட்கவும்.
மிகவும் தயங்கியவன் அப்போ என்னோட அப்பா பத்தி எனக்கு தெரியாது ஆனா இப்போ என் அப்பா பத்தி அத்தனை பேருக்கும் தெரியும் என் நிலைமையும் புரியும் இனி எப்படி என்னால என்றான்.
நான் உன்கிட்ட ஏற்கனவே சொன்னதுதான் உன் அப்பாவை வெச்சி என்னைக்குமே நான் உன்னை வெறுக்க மாட்டேன் உன்னை நம்பி தானே இங்க வந்தேன் என்னை இப்படி கைவிட்டுட்டு போறது சரியா... நான் உன்னை காதலிக்கும் போது நீ பணக்காரனா ஏழையான்னு எதுவுமே எனக்கு தெரியாது ...உன்அப்பா நல்லவரா கெட்டவரான்னும் தெரியாது...இன்னைக்கு உன் அப்பா கெட்டவர்னோ...உன்கிட்ட பணம் இல்லனா விட்டுடுவேன்னு எப்படி நீ முடிவு செய்யலாம் நீ போனா என்னையும் அழைச்சிட்டு போ என்று கூறவும் காமாட்சி ஓடிவந்து ராகாவை கட்டிக்கொண்டார்…
அம்மாடி...உன் அம்மா குணம் அப்படியே உனக்கு...அது உன் ஒவ்வொரு வார்த்தையிலேயும் தெரியுது... எனக்குதான் வாழ்க்கைத்துணை அமையற விஷயத்துல அந்த கடவுள் கருணை காட்டல... ஆனா அதுக்கு எல்லாத்துக்கும் வட்டியும் முதலுமா சேர்த்து என் புள்ளைக்கு கடவுள் கொடுத்துட்டாரு அது போதும் என்றார்.
சின்ன பாட்டியும் அருகில் வந்து உன்னோட அப்பாவும் போயாச்சு உன் அண்ணன்களும் தனித் தனியாகப் போகப் போறாங்க இப்போ இந்த கிழவிக்கு இருக்கிற ஒரே ஆறுதல் நீ தாம்மா நீயே என்னை விட்டுட்டு போயிட்டா வயசான காலத்துல நான் எங்க போறது…
எத்தனை பேரு என்னை சுத்தி இருந்தாலும் நீ என்னை பாத்துக்கறது போல வருமா காமாட்சி என்று கேட்கவும்...
அம்மா என்ன மன்னிச்சிடுங்க நான் சுயநலமா முடிவெடுத்துவிட்டேன் உங்கள விட்டுட்டு இனி நான் எங்கேயும் போகமாட்டேன் என்று அங்கேயே தங்கிக் கொள்ள சம்மதித்தார்.
அதன்பிறகு அனைவருமே ஒருமுறை மாஞ்சோலை எஸ்டேட் பார்த்து வர புறப்பட்டார்கள்…
அங்கு செல்லும் வரை இங்கிருக்கும் சொத்துக்களை எல்லாம் ராஜாவிடம் ஒப்படைத்துவிட்டு லண்டன் செல்லலாம் என்ற முடிவில்தான் ராகா சென்றது…
ஆனால் எஸ்டேட் சென்று பார்த்த பிறகுதான் அங்கு மக்கள் படும் அவலங்கள் தெளிவாக புரிந்தது கண்டிப்பாக தாய் கண்ட கனவினை நனவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்…
அதற்கான அடுத்தடுத்த வேலைகளை முன்னெடுக்கவும் ஆரம்பித்தாள்.
இப்போது கேசவ்,ராம் இங்கு வந்து பல நாட்கள் ஆகிவிட்டது ஊர் செல்ல வேண்டும்...ராகாவின் முடிவிற்காக காத்திருந்தனர்.
ராகாவோ முதல் கட்டமாக எஸ்டேட்டில் பணிபுரிபவர்களுக்கு எல்லாம் அங்கிருக்கும் வீட்டிற்கான நிலங்களை அவர்களிடமே ஓப்படைத்தாள்…பிறகு புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க வேலைகளை ஆரம்பித்தாள்...
அடிக்கல் நாட்டப்பட்டிருந்த கட்டிடங்களுக்கு உயிர் கொடுக்க ஆரம்பித்தாள்…
அந்த மக்களோடு பழகப்பழக அவர்களின் வாழ்வியல் மிகவும் அவளை கவர்ந்தது அவளும் அங்கேயே தங்கிக் கொள்ள ஆசைப்பட்டாள் ஆனால் தந்தையை எப்படி இங்கே தங்க வைப்பது என்று நினைத்தவள் அவருக்காக லண்டன் செல்ல தீர்மானித்தாள்.
அங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மனநிலை ஆனால் ராஜாவிற்கும் ராம்மிற்கும் ஒரே மாதிரியான மனநிலை எங்கே மகள் தன்னை விட்டுவிட்டு சென்று விடுவாளோ என்று…
இருவரையும் காயப்படுத்தா வண்ணம் அவள் முடிவு எடுக்க வேண்டும் எந்த முடிவை எடுத்தாலும் கண்டிப்பாக ஒருவருக்கு காயம் நிச்சயம்...என்ன செய்வது என முதல் நாள் முழுவதுமே குழம்பித் தவித்தாள்.
ஆனால் ராம் ஒரு முக்கிய முடிவை எடுத்திருந்தார் அதை யாரிடமும் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் ராஜாவிடம் மட்டுமாவது கூறலாம் என நினைத்தார்.
ஆனால் ராஜா நேராகவே ராம்மை சந்திக்க வந்து எப்படி ராகா தங்களிடம் வந்தாள் அந்த ரகசியத்தை கூறுங்கள் என்று கேட்கவும் எதையும் மறைக்காமல் பிறந்தது முதல் இங்கு வருவதற்கு முன் கலையை வெளியில் எடுத்து விட்டது வரை ஒன்று விடாமல் கூறினார்.
அதை கேட்டதுமே ராஜாவுக்கு கோபம், வருத்தம்,ஆனந்தம் என் எல்லாம் கலந்து வந்தது…
மனைவியின் இறப்புக்காக வருத்தம் அடைந்தவர் இத்தனை ஆண்டுகாலம் ராகாவிற்காக கலை ராம்மின் வீட்டை சுற்றி வலம் வந்ததை தெரிந்து மிகவும் சந்தோஷம் கொண்டார்.
அன்று அவர்களை கொல்ல நடந்த சதியில் இருந்து கூட கலைதான் காப்பாற்றியிருக்கிறார் என்பதும் தெரிந்தது…
அதன் பிறகு அவரும் ஒரு முக்கிய முடிவை எடுத்தார்.
மறுநாள் இரு தந்தையும் மகளை நேரடியாக சந்தித்து அவரவர் வாதங்களை எடுத்து வைத்தனர்.
ராகா இத்தனை நாட்கள் கலை ஆசைப்பட்டது ஒன்றுதான் நீ தந்தையுடன் இருக்க வேண்டுமென்பதே கடைசியாக அவள் உன் உயிரை காப்பாற்றுவதற்காக உதவியதால் அதற்கு நன்றிக்கடனாக நீ உன் தந்தையிடமே இருந்து கொள் என்றார் ராம்.
ஆனால் ராஜாவோ கலை இத்தனை ஆண்டுகாலம் நீங்கள் ராகாவின் மீது வைத்த அன்பிற்கு கட்டுப்பட்டு தானே அவளை இங்கே கொண்டுவராமல் வைத்திருந்தாள்... அவளின் அந்த நன்றி கடனை நானும் மதிக்கிறேன் அதனால் நீங்களே அழைத்துச் செல்லுங்கள் என்றார்.
இப்பொழுது ராகாவிற்கு தான் இக்கட்டான சூழ்நிலை... இரண்டு பேருமே அவளின் மீது பாசம் வைத்திருக்கும் தந்தை... இருவருமே அவர்களின் உயிரை பணையம் வைத்து அவளைக் காப்பாற்றி இருக்கிறார்கள்
என்ன செய்வது என தெரியாமல் முழித்தாள் அவளின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இரு தந்தைமார்களும் ஒரு முடிவை இப்பொழுது எடுத்தார்கள்.
ராகா எங்கே இருக்க ஆசைப்படுகிறாளோ அந்த இடத்தில் மற்றொரு தந்தை இருப்பது என முடிவு செய்து அதை அவளிடம் கேட்க…
தாய் ஆசைப்பட்டது போல இந்த எளிய மக்களுக்கு நல்லது செய்து கொண்டு இங்கேயே இருப்பது என்றாள்... அப்பொழுதுதான் என் பிறப்பிற்காக உயிரைவிட்ட செவிலிய சகோதரிகளுக்கும் தன்னுடைய தாய் வழி பாட்டிக்கும் ,தாய்க்கும் நான் செய்யும் மரியாதை என்றாள்.
உடனே ராம் மறுப்பு ஏதும் சொல்லாமல் ஒத்துக் கொண்டார் மகளிடம் வந்தவர் லண்டன்ல நான் நிறைய சொத்து சேர்த்து வைத்திருக்கேன்... யாருக்காக சொல்லு எல்லாம் உனக்காக தான் நீயே இங்க இருக்க இருக்கும் போது அங்க போய் நான் என்ன செய்யப் போறேன் நானும் உனக்காக இங்கே இருக்கேன்.
இங்க இருக்கிற மக்களுக்கு இலவசமாக வைத்தியம் பார்க்கிறேன் சரிதானே என்றார் .
உடனே கேசவ்வும் பிரியாவும் அப்போ நாங்களும் இங்கேயே இருக்கிறோம் என்றனர் .
நீங்க எதுக்கு டா என்று கேட்கும் பொழுது... நீ லண்டன் வராத வரைக்கும் உன் அருமை தெரியாதுடா... உன் கூட இத்தனை வருஷம் பழகினதுக்கு அப்புறம் உன்னையும் ராகாவையும் எங்களால பிரிஞ்சு இருக்க முடியாது... நீ மலையில இருக்கிற மக்களுக்கு வைத்தியம் பாரு ...நான் கீழ இருக்கற மக்களுக்கு வைத்தியம் பாக்கறேன்…. எனக்கும் உங்களோட மலைல இருக்கணும்னு தான் ஆசை ஆனா என் குழந்தைகள படிக்கனும் இல்லையா அதனால தான் கீழ போறேன் தப்பா எடுத்துக்காத என்றார்…
தாத்தா, பாட்டிகள் இருவர்,காமாட்சி என நான்கு பெண்களுடன் பூபதி கீழே ஜமீன் வீட்டில் இருக்க ராகா ராஜா வாரம் ஒரு முறை பார்த்து சென்றனர்.
பூபதி ராகாவிற்கு பெரும் உதவியாக செயல்பட்டான்.. அவர்களின் ஃபேக்டரியிலேயே வேலைக்கு சேர்ந்தவன் இப்பொழுது மலையிலேயே தனியாக தங்கிக் கொண்டான்.
இருவரும் தனித்தனியாக இருப்பதை பார்த்த பெரியவர்கள்
சில நாட்களிலேயே ராகாவிற்கும் பூபதிக்கும் எஸ்டேட்டில் வைத்து எளிய முறையில் திருமணம் செய்து வைத்தார்கள்... ஃபேக்டரி நிர்வாகத்தை பூபதி பார்த்துக்கொள்ள...ராகா குழந்தைகளுக்கு ஆங்கில பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறாள்…ராஜா தமிழ் பாடம் எடுக்கிறார்.
அங்கேயே ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆரம்பித்து ராம் முதலுதவிகளை செய்கிறார்...கீழே அவரின் மருத்துவமனையில் கேசவ் மலையிலிருந்து வருபவர்களை ஸ்பெஷலாக கவனிக்கிறார்…
அவசர தேவைக்காக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கூட வாங்கிவிட்டார்கள்…
வார நாட்களில் பிரியா குழந்தைகளுடன் மலைக்கு வந்துவிடுவார்...அவரும் ராகாவின் சேவையில் அவ்வப்போது பங்கு கொள்வதுண்டு...
மலையில் இருக்கும் மக்களை பற்றி அரசாங்கத்திற்கு முழுவதுமா தெரிய... இப்பொழுது அரசாங்கமே அவர்களுக்காக ரேஷன் கடை பள்ளிக்கூடங்கள் மருத்துவமனைகள் என அடுத்தடுத்து சிலவற்றை கொண்டுவந்தனர்…
இருந்தாலும் எஸ்டேட் மக்களுக்காக தனிப்பட்ட முறையில் ராஜாவும் அவரின் சொந்தப் பணம் கொண்டு பலவற்றை கட்டிக் கொண்டிருக்கிறார் .
அங்கிருக்கும் குழந்தைகள் எல்லோரும் இப்பொழுது பாடசாலை செல்கிறார்கள் பெண்கள் யாருமே பிரசவ சாவு அடைவதில்லை..
வீட்டிற்கு ஒருவர் மட்டுமே வேலை என்ற கோட்பாடு நிலவுகிறது ...கை நிறைய சம்பளம் இருப்பதற்கு நல்ல வீடு என அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ்கின்றனர்…
ராகா மட்டும் தாய் வாழ்ந்த இடத்தருகே சென்றால் மட்டும்... ஒருமுறை வாய்ப்பிருந்தால் வந்து போ அம்மா என்று கூப்பிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தாள்... இவள் கூறியது கலைக்கு கேட்டதோ என்னவோ சிலநாட்களிலேயே ராகாவின் மணிவயிற்றில் கலையின் ஆன்மா சிசுவாக உருவானது…
அவள் கருவுற்றிருக்கும் விஷயம் குடும்பத்தாரின் மூலம் எஸ்டேட் முழுவதும் பரவ அனைவருமே அதை திருவிழாக் கோலமாக எடுத்துக் கொண்டாடினார்கள் …
சில மாதத்திலேயே ராகா அழகிய பெண் குழந்தையை சுகப்பிரசவத்தில் ஈன்றெடுக்க மூன்றாம் மாதத்தில் அக்குழந்தைக்கு கலைவாணி என பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்…குழந்தை வளரவளரவே அங்கிருப்பவர்களின் வாழ்வாதாரமும் வளர ஆரம்பித்தது…
ஆரம்பக் கல்வி வரை இருந்த அந்த மலையில் இப்பொழுது மேல்நிலைப்பள்ளி வரை வந்துவிட்டது... குட்டிக் கலைவாணியின் பிறந்தநாளை எஸ்டேட் மக்கள் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்...
அந்தக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியுடன் நாமும் அவர்கள் இடத்தில் இருந்து விடைபெறலாம்….
முற்றும்…
நன்றி.