[B][SIZE=6]9.[/SIZE][/B][/SIZE][/B]
[SIZE=6][B][SIZE=6][B]
நேராக கல்லூரி வளாகத்திற்குள்
வந்து வாகனத்தை பார்க் செய்த ராகா உள்ளே செல்லாமல் மாணவர்கள் பயன்பாட்டிற்க்காக விட்டிருந்த புல்தரையில் வந்து அமர்ந்தாள்.
கண்களை எத்தனை முறை அழுத்தி துடைத்தாலும் கண்ணீர் மட்டும் நின்றபாடில்லை காலையிலிருந்து ஒரே விஷயம் மட்டும் மீண்டும் மீண்டும் அவளின் மனதிற்குள் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறது.
உன்னுடைய தந்தையும் தாயும் ராம்பிரசாத்,காவ்யா இல்லையென்றால் உண்மையான பெற்றோர்கள் யார்…? நீ வளர்ப்பு மகளா...என்று மனதிற்குள் பல குழப்பங்கள்... கண்மூடி எவ்வளவு நேரம் அமர்திருந்தாள் என தெரியாது... தீடிரென யாரோ அவளின் அருகில் அமர்வது போல் தோன்ற பட்டென்று கண் திறந்தாள்.
எதிரில் ராகாவை பார்த்தபடி பூபதி அமர்ந்திருந்தான்... திருநெல்வேலி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவன்..ஆறு அடி உயரம்...இருபத்தி நான்கு வயது... கட்டுமஸ்தான உடல்வாகு...வட்ட முகம்,சுருள் முடி,கரும்பும் அல்லாது சிவப்பும் அல்லாது புது நிறமாக காட்சி அளித்தான்...கூர்நாசி...துறுதுறு கண்கள்...சிவந்த உதடுகள் லண்டன் குளிரில் மேலும் சிவந்து காணபட்டது...
எப்பொழுதுமே இதழோரத்தில் சிறு புன்னகை ஓட்டியிருக்கும்...நன்கு சிரித்தால் ஒரு பக்க கன்ன குழியும்,சைடாக துக்கியிருக்கும் தெற்றுப்பல்லும் அவனை பேரழகனாக காட்டும்... மற்றவர்களுக்கு மட்டும் தான் அவன் அழகன்.
ராகாவின் கண்களுக்கு அவன் என்றுமே அழகாக காட்சியளித்தது கிடையாது…நண்பர்களுடன் தனியொரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருப்பவன்… அவனது ஒவ்வொரு செயலிலும் பணத்தின் சாயல் கொட்டிக்கிடக்கும்...
என்று அவன் கல்லுரிக்குள் காலடி எடுத்து வைத்தானோ அன்று முதல் இருவருமே புனையும்,எலியும் தான்...இருவரின் கல்லுரி கட்டிடங்களுமே வேறு வேறு...ஆனாலும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும் போதெல்லாம் அனல் அடிக்கும்...அவன் முதுகலை பயில்பவன்...இவள் இளநிலை... வயதில் இவள் ஜூனியர் என்றாள்...கல்லூரிக்கு பூபதி ஜூனியர்...அதுவே ராகாவிற்கு எரிச்சல் ஊட்டும்...அவளை பொறுத்தவரை சொந்த நாட்டில் இருந்து படிப்பதற்காக வந்து இங்கேயே வாழும் அவளை அவன் மட்டம் தட்டுவதா...இவளிடம் இருக்கும் பணத்தைதில் ஒரு பங்கு வேண்டுமானால் அவனிடம் இருக்கலாம் அதற்காக இவ்வளவு அலப்பறையா என்று இவளும் அவனை காணும் போதேல்லாம் ஏளன பார்வையை பார்த்து வைப்பாள்…
அவனும் இந்தியாவில் இருந்து பிழைப்பிற்காக இங்கே வந்ததும் இல்லாமல் தாய்நாட்டு பற்று கொஞ்சமும் இல்லாமல் சொந்த நாட்டுக்காரன்... அதுவும் ஒரே மொழியை பேசுபவர்கள் அந்த பாசம் கொஞ்சமும் இல்லாமல் வெள்ளைக்காரனை போல ஏளனப் படுத்துகிறாளே என்று அவனும் திருப்பி கொடுப்பான்.
அதனால் சந்தித்த நாள் முதல் இதுவரை அவர்களுக்குள் சண்டை மட்டுமே...இன்றும் அவளின் வாடிய முகத்தை கண்டதும் மனம் கேளாமல் அவளின் முன்பு அமர்ந்திருக்கிறான்.புன்னகை சிந்தும் இதழ்கள் இருக்க முடியிருந்தது.
அவனைக் கண்டதுமே வேகமாக எழுந்தவள் நடக்க ஆரம்பித்தாள்.
ஹேய் ராகா நில்லு என்னை பாத்து ஏன் பயந்து ஓடற…
****
ராகா...என்றவன் அவளை மறித்த படி நின்றான்.
என்ன பூபதி உன் பிரச்சனை...இப்போ ஏன் என்னை டிஸ்டர்ப் பண்ணற…
வழக்கம்போல ஏன் தமிழை தப்புத்தப்பாக உச்சரிக்கிற... ஒரு தமிழ் பொண்ணா இருந்துகிட்டு இப்படி அவுட் போஃகஸ்ஸா டிரஸ் பண்றேன்னு அட்வைஸ் பண்ண போறியா... இன்னைக்கு கேக்கற மூட்ல நான் இல்ல என்றபடி அவனை விட்டு தள்ளி நடந்தாள்.
இல்ல...உன் பர்த்டேக்கு விஷ் பண்ண வந்தேன்...அது மட்டும் இல்ல...நிறையா சாரி ஒரு தேங்க்ஸ் சொல்லனும்…
என்ன தீடிர்னு சாத்தான் வேதம் ஓதுது…
சாத்தானுக்குள்ளும் மனசு இருக்குன்னு அர்த்தம்…
உன்னோட மேற்கொண்டு பேசற மூடுல நான் இல்ல...அதனால உன் சாரியும் எனக்கு வேணாம் உன்னோட தேங்க்ஸ்ஸூம் வேணாம் அப்புறம் உன்னோட பர்த்டே விஷூம் வேணாம்...
எல்லாத்தையும் தப்பா தான் பாப்பியா ராகா...
எதை நீ சரியா செஞ்சிருக்கேன்னு சொல்லு பூபதி...எப்போ பாத்தாலும் அட்வைஸ்... இப்படி உட்காராத…
அப்படி நடக்காத...அவனோட போகாத...இவளோட பிரண்ட்ஸ்ஷிப்பை கட்பண்ணு...போதும்...நீ எப்பவுமே எனக்கு வெரி இரிடேட்டிங் பர்ஸன்... என்னைக்கும் உனக்கும் எனக்கும் செட் ஆவாது...தெரிஞ்சோ தெரியாமலோ உன்னை சந்திட்டேன்...இந்த ரெண்டு வருஷமா நீ என்னை பாத்த கேவலமான பார்வையும் மட்டம் தட்டற பேச்சையும் கேட்டு...கேட்டு...உன்னோட முகத்தை பாக்க கூட பிடிக்கல...என்ற படி வேகமாக நடந்தாள்.
அதுக்காக தான் சாரி கேக்க வந்தேன்…
அதான் வேணாங்கறேனே...கிளம்பு இன்னைக்கு ரொம்ப மூட் ஆஃப்ல இருக்கேன்...ஏதாவது உன்னை காயபடுத்தறது போல சொல்லிட போறேன் கிளம்பு…
பாத்தியா உன்னை எவ்ளோ ஹர்ட் பண்ணிருக்கேன் அப்படி இருந்தும் என் மனசு காயப்பட கூடாதுன்னு பேசறல்ல அந்த நல்ல மனசுக்கு தேங்க்ஸ்…
ஓ காட்... இன்னைக்கு உனக்கு என்னாச்சி...எப்பவும் போல என் முன்னாடி வந்து என்னை ஹர்ட் பண்ணறது போல ஏதாவது சொல்லிட்டு போவல்ல...அப்படி சொல்லிட்டு கிளம்பு…
ஏன் இப்படி பேசறேன்னு புரியலையா ராகா…
நல்லாவே புரியுது... எப்பவுமே அளவுக்கு அதிகமா மட்டம் தட்டி பேசுவ அதுக்கெல்லாம் ட நான் ஹர்ட் ஆனதில்ல...
அதனால கொஞ்சம் சாஃப்ட்டா பேசி ஹர்ட் பண்ண முயற்சி பண்ற..
உன்னை பத்தி எனக்கு தெரியாதா…?
சரி விடு நீ என்னை புரிஞ்சுக்கிட்டது அவ்வளவுதான் வேற என்ன சொல்றது…
தெரிஞ்சிருச்சு இல்ல இடத்தை காலி பண்ணு என்றபடி மற்றொரு இடம் சென்று அமர்ந்தாள்.
தலை வலிப்பது போல் இருந்தது வீட்டுக்குச் செல்ல பிடிக்கவில்லை... மறுபடியும் தந்தை முகத்தை எப்படி பார்ப்பது அவர் மீண்டும் அவருடைய மகள் இல்லை என்பது போல் பேசி வைத்து விட்டால் அவள் எங்கே செல்வாள் அந்த பயம் வேறு…
கால்நீட்டி அமர்ந்தவள் தலையைப் பிடித்தபடி அப்படியே பின்பக்கமாக சாய்ந்தாள்.
யாரோ அவளைத் தாங்குவது போல் இருக்க யாரென திரும்பி பார்க்க அவளின் தலை அந்தரத்தில் இருந்தது .
மீண்டும் தலையை கீழே வைப்பதற்காக அழுத்த இப்போது ராகவின் தாய்மடியை நன்றாகவே உணர்ந்தாள்.
அது மட்டுமின்றி அவளின் தலையை யாரோ மிக மென்மையாக பிடித்து விடுவது போல் தோன்ற... இப்பொழுது அவளின் மனம் தாயின் மடியில் தலை வைத்திருப்பதாகவே எண்ணியது….
ஆறுதலுக்கு மடி கிடைக்கவும் கால் மடித்து அமர்ந்திருந்த கலையின் கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கதறி கதறி அழ ஆரம்பித்தாள்…
சின்ன வயசிலிருந்து அம்மா மட்டும்தான் இல்லனு நினைச்சுகிட்டு இருந்தேன் ஆனா இப்போ எனக்கு அப்பாவும் இல்லை.
அப்போ நான் அநாதையா என்று மனதிற்குள் கேள்வி கேட்க…
மகளை மடியில் படுக்க வைத்திருந்த கலையின் கண்களிலிருந்து தானாக கண்ணீர் வர ஆரம்பித்தது .
அவரால் இப்பொழுது மகளின் முன்பு வரமுடியாது...கலை ஏதாவது ஆறுதல் கூறினாலும் ராகாவால் கேட்கவும் முடியாது... கலையை உணர்ந்து கொள்ள மட்டுமே முடியும் தொட்டுப் பேசவோ மனம் விட்டு பேசிக்கொள்ளவே முடியாது….
அழும் மகளை தூக்கி ஆரத்தழுவி...
உனக்கு அப்பா இருக்கிறார்...பாட்டி தாத்தா என மிகப் பெரிய குடும்பமே இருக்கிறது நீ அனாதை இல்லை என்று கத்தி கூறவேண்டும் போல இருந்தது...ஆனால் அவரின் ஆன்மாவால் அதை செய்ய முடியாது...ராமிற்கு நன்றி கடன் பட்டுள்ளார்... அவர் மட்டும் அன்று கலைவாணிக்கு பிரசவம் பார்க்காமல் இருந்திருந்தால் இன்று ராகா இருந்திருக்க மாட்டாள்...
மகளை இந்த பூமிக்கு வர வைத்ததோடு இல்லாமல் இந்த நிமிடம்வரை பெற்ற மகளைப் போல கண்களுக்குள் வைத்து பாதுகாத்து கொண்டிருக்கிறார் .
அவரின் வார்த்தையை மீறி கலையால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது இயற்கையாகவே அவரின் மனம் மாற வேண்டும் அவராகவே ராகாவையை தந்தையிடம் அனுப்பி வைக்க வேண்டும் அதற்காக தான் காத்துக் கொண்டிருக்கிறார் கூடிய விரைவிலேயே நடக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்.
இப்பொழுதும் ராகா அழுதபடியே இருக்க நடந்து செல்லும் மாணவர்கள் ஒவ்வொருவராக அவளை வேடிக்கை பார்த்தபடி செல்கிறார்கள்.
பார்த்தவர்களுக்கு எல்லாம் ராகா அவளது புத்தகப்பையை தலைக்கு வைத்தது போல் தோன்றும்…
ஆனாலும் அவர்களின் பார்வையில் சற்று ஏளனம் எட்டிப்பார்த்தது... பிளடி இண்டியன்ஸ் எப்போ பார்த்தாலும் சென்டிமென்ட் என்கிற பேர்ல அழுது ஒப்பாரி வைக்கறதையே வேலையா வச்சிட்டு இருக்காங்க...என்ற படி ஒரு சில வெள்ளைக்கார மாணாக்கர்கள் வாய்விட்டே கூறி விட்டுச் சென்றார்கள்.
மற்றவர்களின் முன்பு மகள் கேலிப்பொருளாக்கி விடக்கூடாது என்று நினைத்த கலை மகளை விட்டு நகர்ந்தார்.
அவர் அங்கிருந்து நகரும் பொழுது மகளின் தலையை மடியில் இருந்து கீழே இறக்கி வேறெதிலோ வைத்து விட்டுச் செல்வதை ராகா நன்கு உணரவும் பட்டென்று எழுந்து அமர்ந்தாள்.
அவளை வேடிக்கை பார்த்தபடி சிலபேர் அங்கு நிற்க அதில் பூபதியும் ஒருவன். என்னவாயிற்று இன்று அவளுக்கு என்றபடி யோசனையாக நின்று கொண்டிருந்தான்.
ராகா யாரைப் பற்றியும் கவலைபடாமல் அவள் தலைவைத்திருந்த இடத்தை தொட்டு பார்க்க அங்கு அவளின் பேக் மட்டுமே இருந்தது...ஒருமுறை பையின் மீது கை வைத்து அழுத்திப்பார்த்தள் மீண்டும் அவள் படுத்தது போல் தலையை வைத்துப்பார்த்தாள்.
அதில் கடின தன்மை இருக்கவும் எழுந்து பார்த்தவள் மீண்டும் புல்தரையில் தலை வைத்து பார்த்தாள்...பிறது அந்தரத்தில் தலை வைத்து பார்த்தாள்...ஏமாற்றத்துடன் கண்கலங்க ஆரம்பித்தாள்.
அருகில் வந்த பூபதி ராகா ஆர் யூ ஓகே…
****
ராகா என்னாச்சி...ஏன் வித்யாசமா நடந்துக்கற...பாரு எல்லாரும் உன்னையே வேடிக்கை பாக்கறாங்க…
பார்க்கட்டும்...அதனால உனக்கென்ன பிரச்சனை என்று முகத்தில் அடித்தது போல பேசினாள்.
எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது ஆனா உனக்கு மிகப்பெரிய பிரச்சனை இங்க இருக்கறவங்க யாராவது ஆபீஷியலா உன்மேல கம்ப்ளைன்ட் செஞ்சா உன்னைக் யோசிக்காமல் இங்க இருந்து வெளிய அனுப்பறதோட இல்லாமல் மனநல மருத்துவமனையிலும் சேர்த்திடுவாங்க…
அப்புறம் கனவுல கூட உன்னால இந்த காலேஜ்ல படிக்க முடியாது என்று பற்களை கடித்த படி கூறவும் எதுவும் பேசாமல் எழுந்தவள் வேகமாக காரை நோக்கி நடந்தாள்.
பின்னாடியே சென்றவன் அவள் காரில் ஏறும் வரை வேடிக்கை பார்த்தான்...பிறகு அவள் காரை இயக்குவதற்காக சாவியை தேடவும் அவள் அருகில் சென்று அவளின் முன் சாவியை நீட்ட கோபமாக அவனின் கையில் இருந்து சாவியை பிடுங்கிக் கொள்ள கையை நீட்டினாள்.
சாவியை அவளிடம் கொடுக்காமல் அவனின் பக்கமாக இழுத்தான்.
சாவியைக் குடு என்று கோபமாக கேட்டாள்.
நீ இருக்கற நிலமைல காரை ஓட்டுனா வீட்டுக்கு போக மாட்ட... ஹாஸ்பிடல் தான் போவ…
அப்படி போனா உனக்கு சந்தோஷம் தானே...என்று பட்டென்று கூறவும் வலியில் அவனின் முகம் சுருங்கியது…
ஏன் ராகா எல்லாம் மறந்து உன்னோட பேச வந்தா இந்த அளவுக்கு காயப்படுத்துவியா…. இன்னைக்கு உன்னோட பிறந்த நாள் இன்னைக்கு மட்டுமாவது கொஞ்சம் தன்மையா பேசலாமே…
இன்னைக்கு மட்டும் கிடையாது எந்த பிறந்தநாளுக்குமே உன்கிட்ட மட்டும் என்னால தன்மையா பேசவே முடியாது நீ என்னை அந்த அளவுக்கு காயப்படுத்தி இருக்க…
நீ மத்த நாள் வந்து என்கிட்ட பேசி இருந்தா கூட நான் உன்கிட்ட பேசி இருப்பேனோ என்னவோ இன்னிக்கு வந்து பேசி என்னை ரொம்பவும் கோவப் படுத்துற …
ஏற்கனவே நான் ரொம்ப மன வருத்தத்தோட இருக்கேன் உன் பங்குக்கு நீயும் பேசி என்னோட மனவருத்தத்தை அதிகமாக்காத…
லண்டன் ஸ்டைல்ல வளந்த பொண்ணு அவ பிறந்தநாளுக்கு மனவருத்தத்தில் இருக்கிற விஷயம் ஆச்சரியமா இருக்கு.
சாதாரணமா இந்த நாள்ல இங்க இருக்கற பொண்ணுக...பார்ட்டி, பிரண்ட்ஸோட அவுட்டிங், டேட்டிங், இதானே பண்ணுவாங்க…
நீ என்னன்னா வழக்கத்துக்கு மாறா வருத்தமா இருக்கற…. அதுமட்டுமில்லாம மனநோய் பிடிச்ச மாதிரி முதல்ல பேக்கை கட்டிப்பிடித்து அழுத...அப்புறம் எந்திரிச்சு மறுபடியும் பேக்கை தொட்டு பாத்துட்டு மறுபடியும் தலை வைத்துப் பார்த்த.
அப்புறம் அந்தரத்தில தலையை வைத்து பாக்குற...கொஞ்ச நேரம் நீ செஞ்ச சர்க்கஸை எல்லாம் பாத்ததும் தான் புரியுது…
உண்மையிலேயே நீ ரொம்ப வித்தியாசமான பொண்ணு தான் உன்கிட்ட வந்து பேசி நான் தான் என்னோட நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்…
இன்னும் ரெண்டு மாசத்துல எனக்கு படிப்பு முடியுது இந்தியா போக போறேன்... அங்கே எங்களோட பேமிலி பிசினஸை பாத்துப்பேன்... அதுக்கான படிப்பை படிக்க தான் இங்க வந்தது...வந்த இடத்துல உன்னை சந்திச்சேன்...ஏனோ பாத்ததுமே உன்னை பிடிக்கல...இப்போ இங்கிருந்து போகபோறேன்...இது வரைக்கும் யாரையும் காயப்படுத்தினதில்ல... உன்ன மட்டும் அளவுக்கு அதிகமா காயப்படுத்தி விட்டதா எனக்கு அப்பப்ப தோணுது அதான் உன்கிட்ட மட்டும் ஒரு சாரி சொல்லிட்டு போகலாம்னு நினைச்சிட்டு வந்தேன்…
அப்போதான் எதார்த்தமா உன்னோட பிறந்தநாள் இன்னைக்குன்னு தெரிஞ்சது அப்படியே பிறந்தநாளுக்கு விஷ் பண்ணிட்டு ஒரு சாரியும் கேட்டுட்டு போகலாம்னு பார்த்தா நீ ஓவர் சீன்….
****
நான் உன்னை திட்டும் போதெல்லாம் நீயும் திருப்பி சண்டை போட்டு இருந்தா நீ என்னை இந்த அளவுக்கு பாதிச்சிருக்க மாட்ட…
***"
என்ன பண்ணினாலும் திருப்பி எதுவும் பேசாம பெருசா ரியாக்ட் பண்ணாம அமைதியா போன இல்ல அட்லீஸ்ட் போறதுக்கு முன்னாடி அந்த குணத்தையாவது பாராட்டனும்னு தோனிச்சி….
****
என்னதான் நான் உன்னை காயப்படுத்தி இருந்தாலும் கூட நீ அமைதியா போன பாத்தியா… அந்த பிகேவியர் தான் என் மனசை மாற்றி இன்னைக்கு உன்கிட்ட சாரி கேட்க வச்சிருக்கு…
****
என்னோட இந்த மனமாற்றத்திற்கு காரணம் நீதானே அதுக்கு உனக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லணும் வந்தா...இன்னைக்கு நீ ரொம்ப விசித்திரமா நடந்துகிட்ட…
எதைப் பற்றியும் நினைக்காம அப்படியே நான் இந்தியா கிளம்பிப் போய் இருக்கணும் உன்னை சமாதானப்படுத்த வந்து தேவையில்லாம மறுபடியும் காயப்படுத்திட்டேன்னு நினைக்கிறேன் சாரி...எதையும் மனசில வச்சிக்காத..
எப்போவும் இதே போல இரு என்றவன் சாவியை அவரிடத்தில் கொடுத்தான்.
அவன் கூறியவற்றை எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல் இருந்தவள் யோசனையாக நான் கிரவுண்ட்ல பேக் புடிச்சி கிட்டு தான் படுத்து இருந்தேனா நீ நல்லா பார்த்தியா என்று சம்பந்தமே இல்லாமல் கேட்டு வைத்தாள் .
யோசனையாக அவளைப் பார்த்தவன்...ம்ம்...ஆமா..
என்கிட்ட சண்டை போட்டு நேரா கிரவுண்ட் போன... அப்படியே தலையை பிடிச்சிட்டு படுத்த..
பிறகு பேக் எடுத்து தலைக்கு வச்சுக்கிட்ட... திடீர்னு அதை அப்படியே கட்டி புடிச்சிட்டு அழ ஆரம்பிச்ச... அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு எந்திரிக்கிற... மறுபடியும் படுகிற…
என்னன்னமோ பண்ணிட்டு இருந்த என்று கூறவும் அவனை யோசனையாக பார்த்தவள்...
ஆனா நான் வேற மாதிரி பீல் பண்ண தெரியுமா என்றாள்.
எந்த மாதிரி…
யாரோ ஒருத்தரோட சாஃப்டான மடி அவங்க மடியில் படுத்து அழுத மாதிரி தோணிச்சி ..அப்படியே என் அம்மாவோட மடியில படுத்த பீல் இருந்தது... இத்தனை நாள் யாரோடு மடியில் படுத்து தூங்கணும்னு ஆசைப்பட்டேனோ... அந்த மடி இன்னைக்கு கிடைச்சது ஆனால் தூங்கறதுக்கு பதிலா எனக்கு அழுகை தான் வந்தது என்று கூறவும்…
ஏன் நீ உன் அம்மா மடியில படுத்து தூங்கினதே இல்லையா என்ன…?
ம்கூம் இல்ல...என்று அப்பாவியான முகத்தில் கூறினான்.
உன் அம்மா வொர்க்கிங் உமனா…?
***
அதான் அவங்களோட வேலைக்கு நடுவில நேரம் ஒதிக்கி உன்னை சரியா கவனிக்க முடியல... உன் அம்மாவோட நம்பர் கொடு நான் அவங்க கிட்ட பேசுறேன்... ஒழுங்கா ரெண்டு நாள் லீவு போட்டுட்டு உங்க பொண்ணோட டைம் ஸ்பென்ட் பண்றீங்கன்னு செல்லமா சண்டை போடறேன்... என்று கூறவும்.
நீ சொல்ற படி எல்லாம் நடந்தா ரொம்ப நல்லா தான் இருக்கும் ஆனால் சான்ஸ் இல்லை.
ஏன் இல்லை நீ நம்பர் கொடு பேசுறவங்க பேசினா எல்லாரோட மனசும் தானா மாறும்...நான் பேசின பிறகு ரெண்டு நாள் என்ன..! நாலு நாள் கூட லீவு போடுவாங்க ..
அப்புறம் என்ன மடியிலேயே படுத்து தூங்கு எங்கேயும் அவங்களை நகர விடாத…என்று சிரித்தபடியே கேலி பேசினான்.
தலையசைத்த படியே சிரித்தவள் தொண்டை கமற அம்மா இருந்தா தானே அவங்க நம்பரை நான் உனக்கு கொடுக்க முடியும்... நீயாம் அவங்களோட பேச முடியும் என்று பட்டென்று சிரிக்க.
இவனின் முகம் அப்படியே வாடியது என்ன சொல்றேன் உனக்கு அம்மா இல்லையா என்று கேட்கவும் இல்லை என்பது போல் தலையசைத்தாள்.
பிறகு கார் ஸ்டியரிங்கில் இரு கைகளையும் தாங்கியபடி வைத்து தலைவலிக்கு இதமாக நெற்றியை மசாஜ் செய்தாள்.
ஆச்சர்யமாக அவளையே சில நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன்…உனக்கு இந்தியாவுல யாராவது சொந்தக்காரங்க இருக்காங்களா.
ம்கூம்...யாருமே கிடையாது…
ஏன் கேக்கற...
இல்ல இப்போ தலையை தேய்க்கற இல்ல இதே போல வேற எங்கயோ பாத்திருக்கேன்…
இது காமன்... தலைவலி வந்தா எல்லாருமே இப்படித்தான் தலையை தேச்சி விட்டுபோம்…
சரிதான் ஆனா நீ செய்யறது ஒரு டிஃபரண்ட் ஸ்டைலா இருக்கு... வழக்கமா தலைவலி வந்தா ஆள்காட்டி விரல் இல்லனா கட்டைவிரலால மசாஜ் பண்ணுவாங்க... ஆனா நீ மோதிரவிரலில் ஒரு மாதிரி சர்க்கிள் பார்ம் பண்ணறது போல தேச்சி விடுற இது டிஃபரண்ட் இல்லையா...அதும்மில்லாம
இந்த பிஹேவியர் உன்னோட பேச்சு பாடி லாங்குவேஜ் உன்னோட முகம் இது எல்லாமே யாரையோ எனக்கு ஞாபகப்படுத்துது... ரொம்ப பழகின முகம் மாதிரி தெரியுது யாருன்னு சட்டுனு ஞாபகத்துக்கு வரலை…
[/B][/SIZE]
[B][SIZE=6][/SIZE][/B][/SIZE]
[B][SIZE=6]
[/B]
Last edited: